ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142769 topics in this forum
-
இந்திய மீனவர்களின் எல்லை பிரச்சினைக்கு முக்கிய தீர்வு விரைவில் : அமைச்சர் டக்ளஸ் இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய சட்டவிரோத மீன்பிடியைத் தடுப்பது தொடர்பில் கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் மற்றும் புதுடில்லியிலுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சுடன் கலந்துரையாடி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இந்திய மீனவர்களின் சட்டவிரோத மீன்பிடி செயற்பாடு வடக்கு கிழக்கு மாத்திரமன்றி தென்பகுதியிலும் காணப்படுவதாகவும், இதனைத் தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டார். மேலும், இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய சட்டவிரோத மீன்பிடி விவகாரம் தொடர்பி…
-
- 2 replies
- 542 views
-
-
பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பினரின் அறப்போராட்டத்துக்கு ஆதரவுக்கரம் கொடுப்பீர்! தமிழகத்து மாணவர்கள் தோற்றுவித்த எழுச்சிப் பேரலையின் அதிர்வொலிகள் இன்னும் அடங்கமறுத்து எதிரொலித்துக்கொண்டிருக்கின்றன. தமிழகத்து மாணவர்களினதும்,மக்களினதும், ஒட்டுமொத்த உலகத்தமிழர்களின் உணர்வுகளைப்புரிந்துகொண்டு அதனைப் பிரதிபலிக்கும் வகையில் தனித்தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பு நடத்தக்கோரி, தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களால் முன்மொழிந்த வரலாற்று முக்கியத்துவம்வாய்ந்த தீர்மானம் தமிழக சட்டசபையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டிற்கு பின்னதான, ஈழவிடுதலைப்போராட்டத்தில், இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திருப்புமுனைக்கு தமிழக மாணவர்களின் பேரெழுச்சியே அடித்தளமாக அ…
-
- 0 replies
- 386 views
-
-
இந்த நல்லாட்சி அரசு தமிழ் மக்களின் விடயத்தில் அக்கறை கொண்டு தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வினை எட்டுவதாக இருந்தால், அதற்கு முன்னர் இனவாதிகள் சிலரை நாடுகடத்த வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஞா.கிருஸ்ணபிள்ளை தெரிவித்தார். களுவாஞ்சிகுடி கிராமக்கோட்டு வீதியின் புனரமைப்பு வேலையின் ஆரம்ப நிகழ்வு முன்னாள் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் வாமதேவன் தலையில் இன்று (04) நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில், மட்டக்களப்பு விகாராதிபதி, சம்பிக்கரணவக்க, விமல்வீரவங்ச, பொதுபலசேனா போன்ற இனவாதிகளை இந்த நாட்டிலே இருந்து நாடுகடத்த வேண்டும். …
-
- 0 replies
- 257 views
-
-
விடுதலைப் புலிகளிடம் மேலும் ஒரு இலகு ரக விமானம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் தற்கொலைப் படைத் தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட விமானத்தைப் போன்று மேலும் ஒரு விமானம் புலிகளிடம் உள்ளதாக இலங்கை இராணுவத்திற்கு தகவல் கிடைத்துள்ளதாக 'டெய்லி மிரர்' பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது. முல்லைத்தீவு பகுதியில் ஒரு குடிசைக்குள் மறைத்து வைக்கப்பட்டுள்ள இந்த விமானத்தை பொதுமக்கள் பலமுறை பார்த்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, விடுதலைப் புலிகள் மீண்டும் விமானத் தாக்குதல் நடத்தக்கூடிய வாய்ப்பு இருப்பதாக இலங்கை ராணுவம் கருதுகிறது. விடுதலைப் புலிகளின் அனைத்து விமான ஓடுதளங்களையும் கைப்பற்றிவிட்டதாக இலங்கை ராணுவம் தெரிவித்திர…
-
- 6 replies
- 2k views
-
-
உங்கள் குழந்தைகளுக்கு தங்க மாலையா? சைனற் குப்பிகளா வேண்டும்? யாழில் விமல் ஜெனிவாவில் இருப்பவர்கள் தமிழ் பிள்ளைகளில் கழுத்துக்களில் மீண்டும் சைனற் குப்பிகளை அணிவிக்கவே விரும்புகின்றனர் என வீடமைப்பு மற்றும் பொறியல்துறை அமைச்சர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் குருநகர் தொடர்மாடி வீட்டுத்திட்டத்தின் புனர்நிர்மானப் பணிகளை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகைறும் போதே அவர் இவ்விதம் குறிப்பிட்டுள்ளார். விமல் வீரவன்ஸ மேலும் கருத்து தெரிவிக்கையில், உங்கள் குழந்தைகளின் கழுத்துக்களில் தங்க மாலை அணிவதையா அல்லது சைனற் குப்பிகளை அணிவதையா விரும்புகின்றீர்கள் என தமிழ் மக்களிடம் நான் கேட்க விரும்புகின்றேன். தென்னிந்தியாவில் இருப்பவர்கள் மீண்டும் யுத்ததை விரும்புகிறன…
-
- 8 replies
- 871 views
-
-
மரத்தடி வகுப்பு நேரம் மரக்கிளை முறிந்து வீழ்ந்ததில் ஆசிரியையும் மாணவியும் பலி மரத்தடி வகுப்பு நேரம் மரக்கிளை முறிந்து வீழ்ந்ததில் ஆசிரியையும் மாணவியும் பலியானார்கள். 15 மாணவர்கள் காயமடைந்தனர். வவுனியா மகாறம்பைக்குளம் சிறிராமபுரம் அரசினர் பாடசாலை மைதனாத்தில் மர நிழலில் மாணவர்களுக்கு வகுப்பு நடைபெற்றபோது அந்த மரத்தின் கிளையொன்று முறிந்து வீழ்ந்ததில் ஆசிரியை ஒருவரும் மாணவி ஒருவரும் உயிரிழந்துள்ளார்கள். இந்தச் சம்பவத்தில் 15 மாணவர்கள் காயமடைந்துள்ளார்கள். காயமடைந்த மாணவர்கள் உடனடியாக வவுனியா வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. இவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மேல் …
-
- 1 reply
- 871 views
-
-
மிஹின் லங்கா எனும் விமானப் போக்குவரத்து நிறுவனம் தமிழகத்திற்கான சேவைகளை ஜூன் முதலாம் திகதியிலிருந்து நிறுத்தவிருப்பதாக அறிவித்திருக்கிறது. கொழும்பிற்கும் திருச்சிக்குமிடையே வாரம் நான்கு முறை மிஹின் லங்கா விமானங்கள் வந்து போகின்றன. தமிழகத்தில் பிக்குமார் தாக்கப்பட்டதை அடுத்து இலங்கையில் இருந்து வருபவர்களின் எண்ணிக்கை குறைகிறது பயணிகள் போக்குவரத்து வீழ்ச்சியடைந்த நிலையிலேயே சேவைகளை நிறுத்த முடிவெடுக்கப்பட்டதாக மிஹின் லங்கா பயணச்சீட்டுகளை விற்பனை செய்யும் ட்ரான்ஸ்லங்கா கூறுகிறது. கடந்த செப்டம்பரில் வேளாங்கண்ணி வந்த இலங்கையர் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து பயணிகள் வருகை வீழ்ந்திருக்கிறது. ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கைக்கெதிரான தீர்மானம் தொடர்பாக தம…
-
- 8 replies
- 950 views
-
-
எனது தாயை நிங்கள் தீவிரவாதி எண்று அழைக்கும் எனது தம்பி அம்மா எண்று அழைத்தால் எனது தாயும் தீவிர வாதியா..? லண்டனில் நடந்து வரும் போராட்டத்தில் எமது தேசிய கொடியை பறிக்கும் நடவடிக்கையை இங்கிலாந்து காவல்த்துறை செய்து வருகிறது.. புலிச்சின்னம் பொறித்து இருப்பதால் அது தீவிர வாதிகளின் சின்னம் எண்றும் காவல்த்துறையினர் சொல்கின்றனர்.. பல தமிழர்கள் அவர்களுடன் வாக்கு வாத்தில் ஈடுபட்டும் வருகின்றனர்.. எனது கேள்விகள் இவைதான்... இங்கிலாந்தில் மற்றும் அனேக நாடுகளில் இருக்கும் கால்ப்பந்து கழகங்கள் முதல் பிரதேச சபை எல்லாம் கொடிகள் தாங்கி இருக்கும் போது நாங்கள் எங்களுக்காக ஒரு கொடியை வைத்து இருக்க கூடாதா...? இந்த கொடியை தடை செய்தமைக்கான... ( தேசிய கொடியை) எந்தவிதமான சட்ட பூ…
-
- 12 replies
- 2k views
-
-
கூடங்குளம் அணுமின்னுற்பத்தி நிலையத்தால் இலங்கைக்கு பாதிப்பு தமிழகத்தில் கூடங்குளம் அணுமின்னுற்பத்தி நிலையத்தில் வெடிப்புக்கள் ஏற்படும் ஆயின் அதன் கதிரியக்கம் இலங்கையிலும் பாதிப்பு ஏற்படுத்தும் என இலங்கை அணுசக்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்த விடையம் தொடர்பாக அவர்கள் மேலும் தெரிவிக்கையில்: 1986ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26ம் திகதி,அதாவது 30 வருடங்களுக்கு முன்னர் உக்ரேயினில் உள்ள சர்னோபில் பகுதியில் இருந்த அணுமின்சார உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட பாரிய வெடிப்பின் கதிரியக்க தாக்கங்கள் இலங்கையிலும் காணப்பட்டதாகவும்,குறித்த விபத்தினால் 31 பேர் இறந்ததாக முதலில் அறிவிக்கப்பட்ட போதும்,பின்னர் இந்த சம்பத்தில் நான்காயிரம் பேர் வரையில் பலியானதாக உறுதி செய்யப்பட்டது. இந்த அணுவெடிப்…
-
- 0 replies
- 577 views
-
-
மட்டக்களப்பில் சட்டவிரோதமான முறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெருமளவிலான வெடிமருந்துகளுடன் ஒருவர் கைது By Sayanolipavan (ரீ.எல்.ஜவ்பர்கான்) சட்டவிரோதமான முறையில் பாரிய அழிவினை ஏற்படுத்தக்கூடிய வெடிபொருட்களினை இன்று மாலை மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் வீடொன்றில் பதுக்கி வைத்திருந்த நிலையில் கைப்பற்றபபட்டுள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி ஐ.பி.பண்டார தெரிவித்தார். மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவிற்குக்கிடைத்த தகவலொன்றின் அடிப்படையில் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் பணிப்புரையில் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் நுவன் மென்டிசின் வழிகாட்டலில் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் எல்.ஆர்.குமாரசிறின் ஆலோசனையின் பேரில் மாவட்ட குற்ற விசா…
-
- 0 replies
- 446 views
-
-
வன்னியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்டு வரும் தமிழ் இனப் படுகொலைக்கு எதிராகவும் சிட்னி, மெல்பேண் இளையோர்கள் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் உண்ணாநிலைப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் அவுஸ்திரேலியாவின் தலைநகரான கன்பராவில் நாளை மறுநாள் அமைதிக்கான பேரணி நடைபெறவுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 310 views
-
-
அடுத்த வருடம் மார்ச் மாதம் மீள்குடியேற்றம் பூர்த்தி யுத்தம் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கில் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றும் நடவடிக்கைகளை அடுத்த வருடம் மார்ச் மாத காலப் பகுதிக்குள் நிறைவு செய்ய முடியும் என, அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். தற்போது வரை 4600 ஏக்கர் நிலப்பரப்புகளில் மக்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளதாக, அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், இலங்கையிலுள்ள 31 நலன்புரி முகாம்களில் தங்கியுள்ள சுமார் ஆயிரம் குடும்பங்கள் வரை இன்னும் மீள்குடியேற்றப்பட வேண்டியுள்ளதாக அமைச்சர் சுவாமிநாதன் குறிப்பிட்டுள்ளார். இவர்களை மீள்குடியேற்ற காணிகளை பெற்றுக் கொடுப்…
-
- 0 replies
- 235 views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக பெய்துவரும் அடைமழை காரணமாக 10 ஆயிரத்து 561 குடும்பங்களைச் சேர்ந்த 34 ஆயிரத்து 415 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தெரிவித்துள்ளார். கடந்த 2 நாட்களாக பெய்த அடைமழை காரணமாக மாவட்டத்தின் 9 பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள மக்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர். இதனடிப்படையில் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் 3,576 குடும்பங்களைச் சேர்ந்த 12,304 நபர்களும், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 1,965 குடும்பங்களைச் சேர்ந்த 5,841 நபர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவில் 1,698 குடும்பங்களைச் சேர்ந்த 5,283 நபர்களும், பட்டிப்பள…
-
- 0 replies
- 293 views
-
-
ஐரோப்பிய ஒன்றியத்தால் தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்பட்டதை எதிர்த்தும் இந்த முடிவால் ஒவ்வொரு தமிழ்மகனும் பயங்கரவாதிகளாக தான் சித்தரிக்கப்படுவார்கள் எனக்கூறியும் அதனால் தான் டென்மார்க் காவல்துறையில் சரணடையப்போவதாக கூறி டென்மார்க் தொலைக்காட்சியையும் தன்னுடன் அழைத்துக்கொண்டு தனது பகுதி காவல்துறை பணிமனைக்கு சென்றார். காவல்துறைப் பணிமனையில் உள்ள காவல்துறை அதிகாரிகளிடம் சரணடையப் போவதாக கூறியுள்ளார். ஆனால் அவரை காவல்துறை அதிகாரிகள் கைது செய்யவில்லை. தொலைகாட்சியில் செவ்வி கொடுத்த மனோ என்ற பாடசாலை ஆசிரியரான குறிப்பிட்ட தமிழ் மகன் தனது இந்த முடிவானது டென்மார்க் அரசியல்வாதிகளை கவர்ந்திழுக்கும் ஒரு முடிவு எனவும் மற்றும் டென்மார்க் பயங்கரவாத சட்டத்துடன…
-
- 8 replies
- 2.1k views
-
-
சம்பந்தன் தலைமையில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கொழும்பில் இன்று கூடுகிறது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தை கொழும்பில் நடத்துவது தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிந்த நிலையில், கொழும்பில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் இக் கூட்டம் இன்று மாலை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மற்றும் உள்ளக விசாரணை பொறிமுறை போன்றன குறித்து இச் சந்திப்பின்போது ஆராயப்படுமென கூட்டமைப்பின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, தமிழ் மக்களின் கோரிக்கைகளை புதிய அரசியல் அமைப்பில் உள்வாங்குவது தொடர்பில் அரசாங்கம் முரண்படுமாயின் அரசமைப்பு தொடர்பான வழிநடத்த…
-
- 1 reply
- 205 views
-
-
புத்தூர் நிலாவரையில் கிணறு அமைந்துள்ள வளாகத்தில் இரகசியமான முறையில் தொல்லியல் திணைக்களத்தினர் அகழ்வு ஆராய்ச்சி எனக் கூறிக்கொண்டு மேற்கொள்ளப்பட்ட முயற்சி பிரதேச சபைத் தவிசாளர் தலைமையிலானவர்கள் சென்றமையை அடுத்து பிசுபிசுத்துள்ளது. நேற்று வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு பிரதேச சபையில் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, நிலாவரை கிணற்றுப் பகுதியில் சிங்கள இனத்தினைச் சேர்ந்தவர்கள் கட்டிட அத்திபாரம் வெட்டுவதைப் போன்று வெட்டி வருகின்றனர் என்ற தகவல் தவிசாளர் தியாகராஜா நிரோஷிற்குக் கிடைத்துள்ளது. இந்நிலையில் அவைக்கூட்டத்தினை தவிசாளர் சடுதியாக முடிவுறுத்திவிட்டு சபையினரையும் அழைத்துக்கொண்டு நிலாவரை கிணற்றுப் பகுதிக்குச் சென்றார். அச்சமயத்தில் நிலாவரை கிணற்று…
-
- 6 replies
- 1.2k views
-
-
தற்போதைய சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள் எத்தகைய குழப்பவாதியாக இருந்தார், தனக்கு எப்படி, எத்தகைய துரோகங்களைச் செய்தார் என்பதை, சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்கு அளித்துள்ள விரிவான செவ்வியில் விளக்கியுள்ளார். அந்தச் செவ்வியின் முக்கியமான பகுதிகளின் தொகுப்பின் நிறைவுப் பகுதி இது:- முதற்பகுதியினை படிக்க : “மகிந்தவின் துரோகங்கள்” – மனந்திறக்கிறார் சந்திரிகா கேள்வி – 2000ம் ஆண்டு தேர்தலுக்கு முன்னர், நீங்கள் உங்கள் தாயாரை பிரதமர் பதவியில் இருந்து எதற்காக நீக்கினீர்கள்? சந்திரிகா - உண்மையில், எனது தாயார் தன்னை பதவியில் இருந்து விடுவிக்குமாறு கேட்டுக்கொண்டார். இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக அ…
-
- 7 replies
- 770 views
-
-
எச்.எம்.எம்.பர்ஸான் தமிழர்களும் முஸ்லிம்களும் ஒன்று சேர்ந்து நின்றால் மாத்திரம்தான் பேரினவாதத்துக்கு எதிராக முகங்கொடுக்க முடியுமென பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். நாட்டில் சிறுபான்மை சமூகங்களுக்கு எதிராக இடம்பெறும் அடக்குமுறைகளை எதிர்த்து, இரண்டாவது நாளாகவும் இன்று (04) நடைபெற்ற பேரணியில், ஓட்டமாவடியில் வைத்து கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்தும் கருத்துரைக்கையில், “முஸ்லிம் மக்களுக்கு தற்போது ஏற்பட்டிருக்கின்ற பிரதான பிரச்சினை ஜனாஸா எரிப்பு விவகாரம். முஸ்லிம்களுடன் இணைந்து அதற்கு கடுமையான நாம் எதிர்ப்பை தெரிவித்து இருக்கிறோம். அதேபோல, தமிழ் மக்களுக்கு காலாகாலமாக நீண்ட பிரச்சினைகள் இருக்கின்றன. …
-
- 0 replies
- 446 views
-
-
Police have moved Tamil protesters off University Avenue after demonstrators took to the major thoroughfare for the fourth straight day early Thursday morning. With only about 100 protesters on site, police moved in to shrink the size of the demonstration around 8:30 a.m. All lanes of University Avenue are now open. Police Chief Bill Blair told reporters Thursday that the demonstrators were moving too close to Dundas St. He says police moved in to keep Dundas St. open to TTC traffic. The police activity appeared to be peaceful, compared to what happened a day earlier when nearly 1,000 people were protesting in front of the U.S. Consulate. Police arrest…
-
- 0 replies
- 793 views
-
-
அதி சொகுசு காரில் கொண்டு சென்ற 35 கிலோ கஞ்சா மீட்பு தலைமன்னாரில் இருந்து மன்னார் ஊடாக கொழும்பிற்கு அதி சொகுசு கார் ஒன்றில் மறைத்து வைத்து கொண்டு செல்லப்பட்ட ஒரு தொகுதி கேரள கஞ்சாவுடன் மூவர் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள் மூவரையும் நேற்று இரவு மன்னார் பொலிஸார் கைது செய்துள்ளனர். மன்னார் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மன்னார் - தலைமன்னார் பிரதான வீதி 2ஆம் கட்டை பகுதியில் வைத்து குறித்த கஞ்சாப் பொதிகள் மீட்கப்பட்டுள்ளது. இதன்போது, காரில் மறைத்து வைத்திருந்த நிலையில், சுமார் 35 கிலோ எடை கொண்ட கேரள கஞ்சாப் பொதிகளை மீட்டுள்ளதோடு சந்தேகநபர்கள் மூவரும…
-
- 1 reply
- 540 views
-
-
: இலங்கை அரசு பலமிக்க ஒரு அமைப்புடன் மோதுகின்றது - ரஷ்யா Wed May 06, 2009 1:24 pm இலங்கை அரசாங்கம் வலுவானதும், சவால்மிக்கதுமான ஓர் அமைப்புடன் போராட்டத்தை முன்னெடுத்து வருவதாக ரஸ்ய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இலங்கையில் நிலவும் மனிதாபிமான சூழ்நிலை குறித்து கவனம் செலுத்தி வருவதாகவும் ரஸ்யா அறிவித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் அப்பாவி பொதுமக்களை மனித கேடயாக பயன்படுத்தி வருகின்றமை பரகசியமான உண்மை என ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையின் புதிய தலைவரும், ரஸ்ய பிரதிநிதியுமான விட்டாலி சுருக்கின் தெரிவித்துள்ளார். http://www.paristamil.com/tamilnews/?p=7117
-
- 3 replies
- 1.7k views
-
-
போராளிகள் பெருமளவில் நாட்டைவிட்டு வெளியேற இராணுவத்தினரின் கெடுபிடிகளே காரணம் - விநாயகமூர்த்தி 'கடந்த 45 நாட்களில் மட்டும் வடக்கிலிருந்து 200 இற்கும் மேற்பட்ட முன்னாள் போராளிகள் இராணுவத்தினரின் கெடுபிடிகள் காரணமாக புகலிடம் கோரி வெளிநாடு சென்றுள்ளனர்.' இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான அப்பாத்துரை விநாயகமூர்த்தி தெரிவித்தார். போருக்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்திருந்த போராளிகளில் பலர் இராணுவத்தினரின் தொல்லைகள் காரணமாக புகலிடம் கோரி வெளிநாட்டுத் தூதரகங்களை நாடுவது கடந்த சில மாதங்களாக அதிகரித்துள்ளது எனச் செய்திகள் வெளியாகியுள்ளன. இது குறித்து தமிழ்க் கூட்டமைப்பின் நாடாளுமன்ற…
-
- 13 replies
- 1.5k views
-
-
கிளிநொச்சி பாடசாலை ஒன்றில் சூறாவளியுடன் கூடிய மழையினால் வகுப்பறைகள் சேதம் கிளிநொச்சி தற்போது பெய்து வரும் காற்றுடன் கூடிய மழை காரணமாக பாடசாலை ஒன்றில் வகுப்பறைகள் சேதமடைந்துள்ளன. நேற்று வியாழக்கிழமை இரவு வேளை பெய்த காற்றுடன் கூடிய அடை மழை காரணமாக கிளிநொச்சி புளியம்பொக்கணை கலவெட்டிதிடல் நாகேந்திரா வித்தியாலய பாடசாலை தற்காலிக வகுப்பறை கட்டடமே சேதம் அடைந்துள்ளதுடன் இதனால் பாடசாலை கற்றல் நடவடிக்கைகளும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது தரம் ஒன்று தொடக்கம் பதினொன்றுவரை வகுப்புக்களை கொண்டு இயங்கி வருகின்ற இப்பாடசாலையில் நான்கு வகுப்புக்கள் மட்டுமே நிரந்தரக்கட்டிடத்தில் இயங்கிவருகின்றன. குறித்த கிராமப்புற ப…
-
- 0 replies
- 258 views
-
-
காணாமல் போன மகனைத் தேடிய மற்றொரு தாயாரும் உயிரிழப்பு (சி.எல்.சிசில்) காணாமல்போன தனது மகனைத் தேடியலைந்து போராடி நீதி கோரி வந்த தாயொருவர் சுகவீனம் காரணமாக மரணமடைந்துள்ளார். வவுனியா மறவன்குளம் பகுதியைச் சேர்ந்த தாமோதரம்பிள்ளை பேரின்பநாயகி (வயது-61) என்ற தாயாரே நேற்று செவ்வாய்க்கிழமை மரணமானார். இவரது மகன் தருமகுலநாதன் (வயது 39) கடந்த 2000ஆம் ஆண்டு வவுனியாவில் வைத்து காணாமலாக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவரைத்தேடி வவுனியாவில் ஆயிரத்து 465 நாட்களாக முன்னெடுக்கப்பட்டுவரும் சுழற்சிமுறைப் போராட்டத்திலும் இந்தத் தாய் கலந்துகொண்டு தனது மகனை கண்டுபிடித்துத் தருமாறு போராடினார். இந்நிலையில், மகனைக் காணாமலேயே அவர் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக…
-
- 0 replies
- 297 views
-
-
'மக்கள் பாதுகாப்பு வலயம்' அமைந்துள்ள பகுதிகள் மீது முழுமையான உச்ச ஆயுத வலுவைப் பயன்படுத்தி சிறிலங்கா படையினர் பொதுமக்களை படுகொலை செய்வதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு நேற்று சனிக்கிழமை இராசையா இளந்திரையன் வழங்கிய சிறப்பு நேர்காணலின் விபரம் வருமாறு: உங்களைப் பற்றி வெளிவந்த வதந்திகள் குறித்து முதலில் தெளிவுபடுத்த முடியுமா? நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்த போர்க்காலத்தில் மிகவும் முக்கியமான பணிகளில் நான் ஈடுபட வேண்டியிருந்தது. தற்போது மீண்டும் உங்களுடன் உரையாடுவதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. தற்போதைய களநிலவரம் குறித்து கூற முடியுமா? களத்தில…
-
- 1 reply
- 645 views
-