ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142775 topics in this forum
-
வட மாகாண வெற்றிடங்களுக்கு வேறு மாகாணத்தை சேர்ந்தவர்களை நியமிக்க வேண்டிய நிலைமை. வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த மாணவர்கள் சில துறைகளை உயர்கல்விக்காக தேர்ந்தெடுக்காமையால் இங்குள்ள வெற்றிடங்களுக்கு வேறு மாகாணத்தைச் சேர்ந்தவர்களை நியமிக்கவேண்டிய நிலைமை காணப்படுகின்றது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். யாழ். கல்விக் கண்காட்சி – 2025 திறப்பு விழா இன்று சனிக்கிழமை யாழில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் பிரதம விருந்தினராகவும் , சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண பிரதம செயலர் இ.இளங்கோவனும், கௌரவ விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரனும் கலந்து கொண்டு கண்காட்சியை ஆரம்பித்து வைத்தனர். பிரதம விருந்தினராக…
-
- 1 reply
- 232 views
-
-
இலங்கையின் மத்திய அதிவேக வீதித்திட்டத்தின் மிகவும் தாமதமான பிரிவு 1க்கு பொறுப்பான சீன நிறுவனத்தின் ஒப்பந்தத்தை இரத்துச்செய்யுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது MCC என்ற மேட்ச்லலுர்ஜிக்கல் கோப்ரேஷன் ஒப் சீனா (Metallurgical Corporation of China (Ltd)) நிறுவனத்துடனேயே இந்த ஒப்பந்தம் செய்துக்கொள்ளப்பட்டுள்ளது. இந்தநிலையில் திறந்த, வெளிப்படையான ஏலச் செயல்முறையின் கீழ் புதிய கேள்விப்பத்திரங்களை கோருமாறு, இலங்கையின் மிகப்பெரிய ஐந்து கட்டுமான நிறுவனங்கள் ஜனாதிபதியிடம் கோரியுள்ளன. MCC உடனான ஒப்பந்தம் The Lanka Infrastructure Development Consortium (LIDC) PLC, Maga Engineering (Pvt) Ltd, International Construction Consortium (Pvt) Ltd (ICC), …
-
-
- 1 reply
- 357 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 7 06 JAN, 2025 | 07:06 PM (செ.சுபதர்ஷனி) கடந்த வருடம் பதுளை போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நோயாளர்களில் சுமார் 6,700 பேர் விசர்நாய் கடிக்கு ஆளானவர்கள் என அவசர சிகிச்சைப் பிரிவின் தலைவரும் அரச வைத்தியர் சங்கத்தின் உதவிச் செயலாளரும் ஊடக குழு உறுப்பினருமான வைத்தியர் பாலித்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த வைத்தியர் பாலித்த ராஜபக்ஷ மேலும் குறிப்பிடுகையில், கடந்த வருடம் பதுளை போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் மாத்திரம் 42,700 நோயாளர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்க…
-
-
- 22 replies
- 979 views
- 2 followers
-
-
யாழ் போதனாவின் என்புமுறிவு விடுதிகள் புதிய கட்டிடத்தொகுதிக்கு adminJanuary 12, 2025 யாழ் போதனா வைத்தியசாலை என்புமுறிவு விடுதிகள் (Ward 14 மற்றும் 17) புதிய கட்டிடத்தொகுதிக்கு இடமாற்றப்பட்டுள்ளன. யாழ் போதனா வைத்தியசாலையில் முன்னதாக மருத்துவ கட்டிடத்தொகுதியில் (நுழைவாயில் 6 முன்புறம்) செயல்பட்டு வந்த என்புமுறிவு சத்திரசிகிச்சை விடுதிகள், தற்போது நவீன வசதிகளுடன் விபத்து மற்றும் அவசர சிகிச்சை கட்டடத்தொகுதியின் 3ஆம் மாடிக்கு மாற்றப்பட்டுள்ளது. புதிய விடுதிகளில் நோயாளிகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் வழங்கப்பட்டுள்ளதால், அவர்கள் மிகவும் இலகுவாக சிகிச்சை பெற முடியும். மற்றும் என்புமுறிவு நோயாளிகளை பார்வையிட வருவோர், வைத்தியசாலையின் நுழைவாயில் இலக்கம் 2A என …
-
- 0 replies
- 182 views
-
-
இனி அரிசி இறக்குமதி செய்யப்படமாட்டாது. அரிசி இறக்குமதி செய்வதற்கு இனி எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட மாட்டாது என்று வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஆர்.எம். ஜயவர்தன தெரிவித்துள்ளார். இன்று (11) லுனுகம்வெஹெர, பன்னேகமுவ பிரதேசத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பிரதி அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து வௌியிட்ட அவர், நாட்டிற்கு அரிசி இறக்குமதி செய்வது தொடர்பான சுற்றறிக்கை மேலும் நீட்டிக்கப்படாது என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார். அரிசி இறக்குமதி செய்வதற்காக வழங்கப்பட்ட காலம் நேற்று (10) நள்ளிரவுடன் முடிவடைந்தது. அதன்படி, நேற்று நள்ளிரவு நிலவரப்படி, இறக்குமதி செய்யப்பட்டு சுங்கம் மூலம் விடுவிக்க…
-
- 0 replies
- 303 views
-
-
தமிழ்ப் பொது வேட்பாளர் திரு.பா. அரியநேத்திரன் அவர்களைக் கட்சியிலிருந்து விலக்க முற்படுவது தொடர்பான – கண்டன அறிக்கை! Vhg ஜனவரி 11, 2025 தமிழ்ப் பொது வேட்பாளர் திரு. பா.அரியநேத்திரன் அவர்களைக் கட்சியிலிருந்து விலக்க முற்படுவது தொடர்பான – கண்டன அறிக்கை! தமிழ் தேசிய அரசியல் வரலாற்றில், பல தசாப்தப் பாரம்பரியம் கொண்ட மூத்த தமிழ் கட்சிகளில் ஒன்றான, தமிழரசுக் கட்சியின் சமகாலச் செயற்பாடுகள், கட்சியின் வரலாற்றில் என்றுமில்லாதவாறு மோசமடைந்துள்ளது. தமிழரசு கட்சி எந்தத் தனி நபர்களின் சொத்தும் கிடையாது. இது ஒட்டுமொத்த ஈழத் தமிழர்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்காக உருவாக்கப்பட்ட முதுபெருங்கட்சியாகும். கடந்த பல மாதங்களாக இந்தக் கட்சியில் உட…
-
-
- 9 replies
- 608 views
-
-
இந்தியா - இலங்கை நட்புறவு பற்றிய உயர்மட்ட வட்டமேசை கலந்துரையாடல் Published By: Digital Desk 2 11 Jan, 2025 | 11:54 AM “இந்தியா - இலங்கை நட்புறவு பற்றிய உயர்மட்ட வட்டமேசை” கலந்துரையாடல் கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தால் நேற்று வியாழக்கிழமை (10) ITC ரத்னதீபவில் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவின் வரவேற்பு உரையுடன் இந்த கலந்துரையாடல் ஆரம்பமானது. இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் இருதரப்பு உறவின் முக்கிய அம்சங்களைப் பற்றி விவாதிப்பதற்கும் இரு நாடுகளுக்கு இடையே மேம்பட்ட ஒத்துழைப்பிற்கான வழிகளை முன்மொழிவதற்கும் இந்த நிகழ்வு ஏற்பா…
-
- 1 reply
- 251 views
-
-
யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியில் இன்று காலை 8 மணி முதல் புத்துார் சோமஸ்கந்தா பாடசாலைக்கு முன்பாக போக்குவரத்துப் பொலிசார் மிகக் கேவலமான முறையில் வாகனச் சாரதிகளை அச்சுறுத்தி பணம் பறித்து வருகின்றதாக விசம் வெளியிடப்பட்டுள்ளது. புத்துார் சந்திக்கு அருகில் உள்ள வளைவுப் பகுதியில் உள்ள ஒற்றைக் கோட்டைத் தாண்டி வருவதாக கூறி நீதிமன்ற நடவடிக்கை என சாரதிகளை அச்சுறுத்தி ஆயிரம் முதல் 3 ஆயிரம் வரையாக பணப்பறிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். சட்டத்தரணிகளே 5 ஆயிரம் வாங்குவாங்கள் இந்நிலையில் கோட்டைத் தாண்டாமல் வந்த வாகனங்களைக் கூட வழி மறித்து ஒற்றைக் கோட்டை தாண்டி வருவதாகக் கூறி வழக்குப் பதியப் போவதாக அச்சுறுத்தி பணப்பறிப்பில் ஈடுபட்டு வருகின்றார்கள். அதோடு நீத…
-
-
- 3 replies
- 367 views
-
-
கனடாவின் முடிக்குரிய பூர்வீகக் குடிகள், வடக்கு விவகாரங்கள் மற்றும் வடக்கு பொருளாதார அபிவிருத்தி நிறுவனங்களுக்கான அலுவல்கள் அமைச்சர் ஹரி ஆனந்த சங்கரிக்கும் இலங்கைத் தமிழரசுக்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பு பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியொன்றில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இச்சந்திப்பில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், பத்மநாதன் சத்தியலிங்கம், சண்முகம் குகதாசன், ஞானமுத்து ஸ்ரீநேசன், இளையதம்பி ஸ்ரீநாத் ஆகியோர் இந்த சந்திப்பில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. கனேடிய அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரிக்கும் தமிழரசுக்கட்சிப் பாராளுமன்ற உற…
-
-
- 4 replies
- 354 views
-
-
கனிமொழியை சந்தித்த தமிழரசுக் கட்சி January 11, 2025 11:34 am தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான இரா. சாணக்கியன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இந்திய பாராளுமன்றின் திராவிட முன்னேற்றக் கழக சார்பான தலைவர் கனிமொழியை சந்தித்துள்ளனர். இந்தியா - தமிழ் நாட்டு அரசின் அழைப்பின் பேரில் இந்த சந்திப்பு சென்னையில் இடம்பெற்றுள்ளது. இதன்போது, ஈழத் தமிழ் மக்கள் எதிர் நோக்கியுள்ள பிரச்சினைகள் சம்பந்தமாகவும் மத்திய அரசில் தமிழ் நாட்டின் குரலை எமக்காக தொடர்ந்து எழுப்புவது சம்பந்தமாகவும் கலந்துரையாடியுள்ளனர்.. https://tamil.adaderana.lk/news.php?nid=198615
-
-
- 29 replies
- 1.4k views
-
-
காலவரையறையின்றி மூடப்படும் பிக்குகளின் பல்கலைக்கழகம்! அநுராதபுரம் பிக்கு பல்கலைக்கழகம் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது. பிக்கு மாணவர்கள் முன்னெடுத்துள்ள உணவுத்தவிர்ப்பு போராட்டம் காரணமாக பல்கலைக்கழக நிர்வாகம் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது. பகிடிவதைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 10 சிரேஸ்ட பிக்கு மாணவர்களுக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த வகுப்புத்தடையை நீக்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 7 ஆம் திகதி முதல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1416042
-
- 2 replies
- 327 views
-
-
படுகொலையாளிகளுக்கு கூட விடுதலை ! போராளிகளுக்கு கிடைக்காதா? கடந்த ஆட்சிக்காலத்தில் படுகொலையாளிகள் கூட பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலைசெய்யப்பட்டிருந்த நிலையில் தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடியவர்களை ஏன் விடுதலைசெய்யக்கூடாது என மட்டக்கப்பு மாவட்ட இலங்கை தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் கேள்வியெழுப்பியுள்ளார். தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்ககோரி வடகிழக்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் கையெழுத்துப்போராட்டம் இன்றைய தினம் கிழக்கு மாகாணத்தில் ஆரம்பித்துவைக்கப்பட்டது. போராளிகள் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் வடகிழக்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் இந்த போராட்டமானது கிழக்கின் மட்டக்களப்பில் ஆரம்பித்துவைக்கப்பட்டது. பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ்…
-
- 1 reply
- 234 views
-
-
சிவனேசதுரை சந்திரகாந்தன் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்! 10 Jan, 2025 | 12:23 PM முன்னாள் இராஜாங்க அமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் இன்று வெள்ளிக்கிழமை (10) களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜரானார். கடந்த 2021ஆம் ஆண்டு இராஜாங்க அமைச்சராகவும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவராகவும் பதவி வகித்த வேளையில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் நேசகுமார் விமல்ராஜுடன் காணி தொடர்பாக தொலைபேசி மூலமாக ஏற்படுத்திக்கொண்ட உரையாடலின்போது காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளருக்கு சிவனேசதுரை சந்திரகாந்தன் அச்சுறுத்தல் விடு…
-
- 2 replies
- 317 views
-
-
இந்தியா செல்லச் சென்ற போது விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட சிறிதரன் தமிழக முதலமைச்சரின் விசேட அழைப்பிற்கிணங்க அங்கு சனிக்கிழமை ஆரம்பமாகும் அயலகத் தமிழர் தின நிகழ்வில் பங்கேற்பதற்காக வெள்ளிக்கிழமை மாலை கட்டுநாயக்க விமான நிலையம் சென்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட எம்.பியான எஸ்.சிறீதரன் ‘பயணத் தடை’ உள்ளதாக தெரிவித்து விமான நிலைய அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டதால் இருதரப்புக்கும் இடையில் கடும் தர்க்கம் ஏற்பட்ட நிலையில் அவர் பயணத்தை தொடர அனுமதிக்கப்பட்டார். தமிழ்நாட்டு அரசின் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை நடத்தும் ‘அயலகத் தமிழர் தினம் 2025’ 11ஆம் திகதி சனி மற்றும் 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலி…
-
- 0 replies
- 253 views
-
-
இனி இரவு நேரங்களிலும் சிகிரியாவை பார்வையிடலாம் January 11, 2025 11:33 am தொல்பொருள் மதிப்புடைய பல இடங்களை இரவு நேரங்களிலும் சுற்றுலாப் பயணிகளுக்காக திறந்து வைப்பது தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள சீகிரியாவை அதற்காக முதலில் தெரிவு செய்துள்ளதாக புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதியமைச்சர் கமகெதர திஸாநாயக்க குறிப்பிட்டார். அதன்படி, சிகிரியா இரவு நேரங்களிலும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கப்பட்டுள்ளது. https://oruvan.com/sigiriya-can-now-be-visited-at-night-as-well/
-
- 0 replies
- 166 views
-
-
ஜேவிபி மனோரீதியாக வன்முறையைக் கைவிடவில்லை- விளக்கமளிக்கிறார் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன்! January 11, 2025 11:00 am ஜேவிபி தலைமையிலான அநுரகுமார திஸாநாயக்க அரசாங்கம் மனோரீதியாக வன்முறையைக் கைவிட்டுள்ளார்கள் என்பதை தான் நம்பவில்லை எனவும் செயல் ரீதியாக உடைமாற்றம் செய்துள்ளதாகவும் முன்னாள் இராஜாங்க அமைச்சரும், வடமாகாண முன்னாள் ஆளுநருமான கலாநிதி சுரேன் ராகவன் சுட்டிக்காட்டியுள்ளார். “ஒருவன்” செய்தி சேவைக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றின் போதே அவர் இவ்விடயத்தை வலியுறுத்தினார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியானது பெயர் மாற்றம் செய்து அதிகளவான மக்கள் ஆணையைப் பெற்றாலும் கூட அது ஒரு பெயர் மாற்றம் மாத்திரம் தானா என எழு…
-
- 0 replies
- 188 views
-
-
சிகரெட் மற்றும் மதுபானம் விலை அதிகரிப்பு January 10, 2025 11:11 pm நாளை (11) முதல் அமுலுக்கு வரும் வகையில் சிகரெட் விலையை அதிகரிக்க இலங்கை புகையிலை நிறுவனம் தீர்மானித்துள்ளது. கலால் வரி அதிகரிப்புடன் சிகரெட் விலைகளை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, நான்கு வகையான சிகரெட்டுக்களின் விலை 5 மற்றும் 10 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக இலங்கை புகையிலை நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, CAPSTAN மற்றும் John Player சிகரெட்டுகளின் விலை 5 ரூபாவாலும் மற்றும் dunhill மற்றும் Gold Leaf சிகரெட்டுகளின் விலை 10 ரூபாவாலும் அதிகரிக்கப்படவுள்ளது. இதேவேளை, நாளை (11) முதல் அமுலுக்கு வரும் வகையில் மதுபானங்களின் வில…
-
- 2 replies
- 261 views
-
-
10 JAN, 2025 | 06:25 PM இலங்கைக்கான சீனத் தூதுவர் சி சென்ஹொங் மற்றும் பாத்ஃபைன்டர் பவுன்டேஷனின் ஸ்தாபகர் மிலிந்த மொரகொட ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு கொழும்பிலுள்ள சீனத் தூதரகத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பின்போது இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவு குறித்தும், கடந்த 2015ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சீன - இலங்கை ஒத்துழைப்பு கற்கைகள் நிலையத்தின் செயற்பாடுகளை மையப்படுத்திய விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக, கொவிட் - 19 வைரஸ் பெருந்தொற்றுக்கு முன்னரான காலகட்டத்தைப் போன்று சீன - இலங்கை ஒத்துழைப்பு கற்கைகள் நிலையத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவை மையப்படுத்திய கலந்துரையாடல்களுக்கு சீன புத்திஜீவிகள் மற்றும் த…
-
- 1 reply
- 220 views
- 1 follower
-
-
நாடளாவிய பொருளாதார மையங்களில், பச்சை மிளகாயின் விலை ஒரு கிலோக்கு 750 ரூபாய் முதல் 850 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இந்த நிலையில், நாரஹேன்பிட்டி சிறப்பு பொருளாதார நிலையத்தில் நேற்று, ஒரு கிலோ பச்சை மிளகாயின் சில்லறை விலை 1000 ரூபாயாக பதிவாகியுள்ளது. மேலும், நாடு முழுவதும் பல சில்லறை விற்பனைக் கடைகளில், 100 கிராம் பச்சை மிளகாயின் விலை 120 ரூபாயிலிருந்து 150 ரூபாயினால் விற்கப்படுகிறது. https://jettamil.com/the-price-of-green-chilies-has-reached-its-peak
-
-
- 14 replies
- 706 views
-
-
அனைத்துலக தமிழாராட்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 51ஆவது நினைவு தினம்! நான்காவது அனைத்துலக தமிழாராட்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 51ஆவது நினைவு தினம் நாளைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள நான்காவது அனைத்துலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவு தூபிக்கு முன்பாக காலை 10 மணிக்கு அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. யாழ்ப்பாணத்தில் 1974ஆம் ஆண்டு நடைபெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி தினமான ஜனவரி 10ஆம் திகதி, பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில், பதினொரு பேர் படுகொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது https://athavannews.com/2025/1415826
-
- 9 replies
- 420 views
- 1 follower
-
-
கிளிநொச்சியில் ஊடகவியலாளரை தாக்கி கடத்த முயற்சி ! கிளிநொச்சி ஏ- 9 வீதியில் வைத்து ஊடகவியலாளர் தமிழ்ச்செல்வன் மீது தாக்குதலை மேற்கொண்ட இனந்தெரியாத நபர்கள் அவரை கடத்த முயற்சி செய்துள்ளனர். அலுவலகத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீடு நோக்கி புறப்பட்டுக்கொண்டிருக்கையில், கறுப்பு வேனில் வந்த இனந்தெரியாதவர்கள் தன்னை தாக்கி வேனுக்குள் ஏற்றி கடத்த முயன்றதாகவும் தான் அங்கிருந்து தப்பியுள்ளதாகவும் தாக்குதலுக்குள்ளான ஊடகவியலாளர் தமிழ்ச்செல்வன் தெரிவித்தார். கடும் தாக்குதலுக்குள்ளான ஊடகவியலாளர் தற்போது கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றார். சம்பவம் தொடர்பில் ஊடகவியலாளர் தமிழ்ச் செல்வன்…
-
-
- 8 replies
- 881 views
- 1 follower
-
-
இலங்கையில் பிறப்பு விகிதம் வீழ்ச்சி! இலங்கையில் வருடாந்த பிறப்பு வீதம் கணிசமான வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதாக சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். அதன்படி, இலங்கையின் வருடாந்த பிறப்பு வீதம் 350,000 இலிருந்து 250,000 ஆக குறைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். அது மாத்திரமின்றி புற்றுநோய், சர்க்கரை நோய் போன்ற நோய்களாலும் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். எனவே தற்போதைய சூழ்நிலையில் குழந்தைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் விசேட வைத்தியர் தீபால் பெரேரா வலியுறுத்தினார். https://athavannews.com/2025/1414791
-
-
- 11 replies
- 711 views
- 2 followers
-
-
பாராளுமன்ற ஒன்றியத்தின் இணைத் தலைவராக சாணக்கியன் தெரிவு திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் இணைத் தலைவர்களாக பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன மற்றும் சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம் ஆகியோர் தெரிவு ஒன்றியத்தின் அமைப்பாளராக பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண தெரிவு பிரதி இணைத் தலைவர்கள் நால்வர். பத்தாவது பாராளுமன்றத்தில் மீண்டும் ஸ்தாபிக்கப்பட்ட திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் முதலாவது கூட்டம் 08 ஆம் திகதி பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இந்த ஒன்றியத்தின் இணைத் தலைவர்களாக அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன மற்றும் பாராளுமன்ற உ…
-
-
- 4 replies
- 275 views
-
-
மிகப்பெரிய மனித புதைகுழியிலிருந்து எடுக்கப்பட்ட எலும்புகள் அடங்க 80 பெட்டிகள் குறித்து ஆய்வு January 10, 2025 11:36 am பதினொரு வருடங்களுக்கு முன்னர் மன்னாரில் தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியில் இருந்து அகழ்ந்து எடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள் தொடர்பான அறிக்கையை சட்ட வைத்திய அதிகாரி நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதுடன், இலங்கையில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புக்கூட்டுத் தொகுதிகள் பரிசோதனைக்காக சட்ட வைத்திய அதிகாரியிடம் கையளிக்கப்பட்டுள்ளன. 2025 ஜனவரி 09 ஆம் திகதி மன்னார் திருக்கேதீஸ்வரம் மற்றும் சதொச ஆகிய இரண்டு மனித புதைகுழிகள் தொடர்பான வழக்கு விசாரணையின் பின்னர், வலிந்து காணாமல் ஆக்கப்பட…
-
- 1 reply
- 206 views
- 1 follower
-
-
இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் வடக்கு, வட மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் மழை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் 75 மில்லி மீற்றருக்கும் அதிகளவான ஓரளவு பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேற்கு, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மாவட்டத்திலும் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். வடக்கு, கிழ…
-
- 0 replies
- 175 views
- 1 follower
-