ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142780 topics in this forum
-
(இராஜதுரை ஹஷான்) பாராளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த சிரேஷ்ட அரசியல்வாதிகளில் 60 இற்கும் அதிகமானோர் உத்தேச மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட கட்சி மட்டத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். உள்ளூராட்சிமன்றத் தேர்தலைத் தொடர்ந்து மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்து அரசாங்கத்துடன் கலந்துரையாடுமாறு கட்சிகளுக்கு வலியுறுத்தியுள்ளதாக அறிய முடிகிறது. ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் புதிய ஜனநாயக முன்னணி உள்ளிட்ட பிரதான அரசியல் கட்சிகளில் போட்டியிட்டு பொதுத்தேர்தலில் தோல்வியடைந்த சுமார் 60 இற்கும் மேற்பட்டோர் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட தீர்மானித்து கட்சி மட்டத்தில் ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர…
-
-
- 5 replies
- 425 views
-
-
“பாராளுமன்றத்தின் முதலாவது நாள் அமர்வின் பின்னர் நடத்தப்பட்ட தேநீர் விருந்தின் உண்மையான செலவு” என்ற தலைப்பில் 2024.12.29 ஆம் திகதி ஞாயிறு சிங்கள மொழிப் பத்திரிகையில் வெளியான செய்தி தொடர்பில் பாராளுமன்றம் விளக்கம் அளித்துள்ளது. பாராளுமன்ற செலவுத் தலைப்பின் கீழ் சம்பிரதாயமாக நடத்தப்படும் நிகழ்வுகள் மற்றும் தேநீர் விருந்துபசாரத்திற்காக ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது நாள் அமர்வில் 287,340 ரூபாவும், பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது நாள் அமர்வின் பின்னர் நடத்தப்பட்ட தேநீர் விருந்துபசராத்திற்கு 339,628.55 ரூபாவும் செலவு செய்யப்பட்டிருப்பதாக குறித்த ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடர் ஆரம்பம் 2020.08.20ஆம் த…
-
- 2 replies
- 222 views
-
-
புதிய கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்வதற்கான உத்தரவை அரசாங்கம் இதுவரை வழங்காத நிலையில், கடவுச்சீட்டு தட்டுப்பாடு தொடருமானால், இலங்கையர்கள் பணி நிமித்தம் நாட்டை விட்டு வெளியேறுவதில் சிக்கல்கள் ஏற்படலாம் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் எச்சரித்துள்ளது. எதிர்வரும் சில வாரங்களில் நடைபெறவுள்ள கொரிய மொழித் தேர்ச்சிப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள இலங்கையர்களிடமிருந்து அதிகளவான கடவுச்சீட்டுக்கான விண்ணப்பங்கள் குவியும் எனவும், கொரிய மொழித் தேர்ச்சிப் பரீட்சையில் தோற்றுவதற்கு கடவுச்சீட்டு இலக்கத்தை வழங்குவது கட்டாயம் எனவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு அடுத்த சில வாரங்களில் சுமார் 30,000 கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் க…
-
- 0 replies
- 211 views
-
-
ஈழத்தமிழர் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான ஒரு ஆக்கபூர்வமான அல்லது மனச்சுத்தியுடனான செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கான அறிகுறிகளை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வெளிப்படுத்தவேண்டும் என பேராசிரியர் ரகுராம் வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் ஞாயிற்றுக்கிழமை மாமனிதர் குமார் பொன்னம்பலம் நினைவுப்பேருரையை ஆற்றிய பேராசிரியர் ரகுராம் இதனை தெரிவித்துள்ளார். இன்றைக்கு எங்களின் மிக முக்கியமான பிரச்சினைகளாகயிருக்கின்ற வலிந்து காணாமலாக்கபட்டோர்,தொடர்பான நிலை, படைகளிடம் கையளிக்கப்பட்டோர் தொடர்பான நிலை,பற்றிய வெளிப்படையான பிரகடனம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினாலே வெளிப்படுத்தப்படவேண்டும். இன்றைக்கு மீதமாகவுள்ள அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவேண்டும்.பயங்கரவாத தடைச்சட்டம்…
-
- 0 replies
- 90 views
-
-
அரிசி விவகாரம் தொடர்பில் வட மாகாணத்தில் 774 விசேட சுற்றி வளைப்புககள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகாரசபையின் வடமாகாண உதவிப்பணிப்பாளர் அப்துல் லத்தீவ் ஜக்வார் சாதிக் தெரிவித்துள்ளார். அரிசி விற்பனை தொடர்பில் கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், அரிசி விலை மற்றும் பதுக்கல் தொடர்பில் கவனம் செலுத்தி 2024 ஆம் ஆண்டு அரிசி விற்பனை தொடர்பான வட மாகாணத்தில் 774 விசேட சுற்றி வளைப்புக்கள் மேற்கொள்பட்டுள்ளது. அத்துடன் வவுனியா மாவட்டத்தில் அரிசி தொடர்பில் 126 விசேட சுற்றிவளைப்புக்களும் மேற்கொள்ளப்பட்டது. எனினும், வட மாகாணத்தில் பெரியளவிலான பதுக்கல்கள் எதுவும் இடம்பெறவில்லை எனவும் தெரிவித்தார். அரிசி விவகாரம் ; வட மா…
-
- 0 replies
- 135 views
-
-
ஆர்.ராம் ரஷ்யப்படையில் வடபகுதி இளைஞர்கள் வலிந்து இணைக்கப்பட்டுள்ளமை உட்பட இலங்கையர்கள் போரில் ஈடுபடுத்தப்படுகின்றமை தொடர்பில் ரஷ்ய வெளிவிவார அமைச்சருடன் அமைச்சர் விஜித ஹேரத் விரைவில் உத்தியோகபூர்வமான பேச்சுக்களை முன்னெடுப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா போராட்டக்காரர்களுடனான கலந்துரையாடலின்போது தெரிவித்துள்ளார். அத்துடன், குறித்த முகவர்கள் தொடர்பில் குற்றவியல் விசாரணையொன்றை முன்னெடுப்பதற்குரிய நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாகவும் பிரதியமைச்சர் தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கு முன்னாலுள்ள சுற்றுவட்டத்தில் ரஷ்யப்படையில் தமது உறவுகள் வலிந்து …
-
- 0 replies
- 76 views
-
-
ரோஹிங்கியாக்களை மியன்மாருக்கு திருப்பி அனுப்பினால், அது நாட்டின் நற்பெயருக்கு ‘களங்கம்’ January 6, 2025 10:37 am முல்லைத்தீவு கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தபோது, போரினால் பாதிக்கப்பட்ட மீனவர்களால் மீட்கப்பட்டு அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் தற்போது முல்லைத்தீவு விமானப்படை தளத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரோஹிங்கியா அகதிகள் குழுவை மீண்டும் மியன்மாருக்கு நாடு கடத்த வேண்டாம் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். விமானப்படை தளத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரோஹிங்கியா அகதிகளை மீண்டும் மியன்மாருக்கு நாடு கடத்த அரசாங்கம் எடுத்த தீர்மானம் தமக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி அனுர குமார…
-
-
- 5 replies
- 316 views
-
-
யாழ்.மாநகரில் உள்ள மதுபானசாலை ஒன்றுக்குள் முகத்தை மூடிய நிலையில் கறுப்பு ஆடை அணிந்த ஒரு குழுவினர் பலவந்தமாக நுழைந்து அங்கிருந்த பலரை தாக்கி இருவரை வாளால் வெட்டி காயப்படுத்தியுள்ள சம்பவம் தொடர்பில் விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று முந்தினம் (04) இடம்பெற்ற நிலையில், வாள்வெட்டு மற்றும் தாக்குதல் சம்பவங்களில் காயமடைந்த மூவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மூவர் வைத்தியசாலையில் அனுமதி இலங்கை பதில் பொலிஸ் மா அதிபர் யாழ்ப்பாணம் வந்து குற்றவாளிகள் மற்றும் பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடையவர்களை மிக விரைவில் கைது செய்வோம் என உறுதியளித்த பத்து மணித்தியாலங்களுக்குள் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. …
-
- 2 replies
- 378 views
-
-
குருணாகல் போதனா வைத்தியசாலைக்குள் ஸ்டெதஸ்கோப்புடன் நுழைய முற்பட்ட போலி வைத்தியர் ஒருவர் நேற்று (05) கைது செய்யப்பட்டதாக குருணாகல் பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர் குருணாகல், பொத்துஹெர, ஹந்துகல பிரதேசத்தை சேர்ந்த 43 வயதுடையவர் என கூறப்படுகின்றது. அதோடு சந்தேக நபரிடம் இருந்து களனி பல்கலைக்கழகத்தின் ராகம மருத்துவ பீடத்தின் வைத்திய அடையாள அட்டை மற்றும் ஸ்டெதஸ்கோப் உள்ளிட்ட பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குருநாகல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://jvpnews.com/article/fake-doctor-caught-in-a-kurunegala-hospital-1736143845
-
- 5 replies
- 500 views
-
-
கிளிநொச்சி பரந்தனில் , விபச்சார விடுதி ஒன்றை பொலிஸார் சுற்றிவளைத்து கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. இதன்போது விடுதியில் இருந்த இரு சிறுமிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. சம்பவத்தில் 15 வயதான சிறுமி உட்பட இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேவேளை யாழ்ப்பாணம், கிளிநொச்சி உள்ளிட்ட தமிழர் பகுதிகளின் கலாச்சார சீர்கேடுகளும் , குற்றச்செயல்களும் அதிகரித்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். https://jvpnews.com/article/a-brothel-in-kilinochchi-was-raided-1736141662
-
- 1 reply
- 275 views
-
-
நாட்டை தூய்மைப்படுத்தும் நோக்குடன் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இன்று (06) சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கீழ் இயங்கும் பொலிஸ் குழுவினரால், சுன்னாகம் நகரப் பகுதியில் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, தலைக்கவசம் இன்றி வாகனம் செலுத்துபவர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டது. அதுபோல வீதியோரங்களில் சட்டரீதியற்ற நடமாடும் வியாபாரிகள், வாகனங்களில் தேவையற்ற அலங்கரிப்புகள் செய்தவர்கள், வர்த்தக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை வீதியில் காட்சிப்படுத்துபவர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு அவற்றை சீர் செய்யுமாறு அறிவிப்பு விடுக்கப்பட்டது. https://jettamil.com/jaffna-police-launches…
-
- 1 reply
- 289 views
-
-
அரச கரும மொழிகள் ஆணைக்குழுவிற்கு புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம்! ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக நிமல் ஆர். ரணவக்க நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி அரச கரும மொழிகள் திணைக்களத்தின் ஏனைய உறுப்பினர்களாக பேராசிரியர் ஆர். எம். டபிள்யூ. ராஜபக்ச, பேராசிரியர் ஜோசப் யோகராஜா (Stanislaus Joseph Yogarajah)மற்றும் லரீனா அப்துல் ஹக் (Lareena Abdul Haq) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான நியமனக் கடிதங்கள் இன்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் வழங்கி வைக்கப்பட்டன. https://athavannews.com/2025/1415382
-
- 0 replies
- 144 views
-
-
வனப்பகுதிக்கு விடுமுறையை கழிக்கச் சென்ற எட்டு பேரை நல்லதண்ணி வனத்துறை அதிகாரிகள் மற்றும் அதிரடி படையினர் கைது செய்துள்ளனர். வனப்பகுதியில் சிலர் விடுமுறைக்குச் சென்றிருப்பதாக கிடைக்க பெற்ற இரகசிய தகவல்களையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நல்லதண்ணி வனத் துறை அதிகாரிகள் மற்றும் அதிரடி படையினர் சந்தேகத்தின் பேரில் குறித்த பகுதியில் இருந்த எட்டு பேரை கைது செய்துள்ளனர். மேலதிக விசாரணை மஸ்கெலியா காட்மோர் பகுதியில் உள்ள வனப் பகுதியில் இருந்து கவரவில பகுதிக்கு செல்லும் சமவெளி வன பகுதியில் வைத்து இவர்கள் நேற்று(05) கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு பெண்களும் ஆறு ஆண்களும் அடங்குவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவ…
-
- 0 replies
- 232 views
-
-
பிரபல வர்த்தகர் அர்ஜுன் அலோசியஸுக்கு(Arjun Aloysius) சொந்தமான பெர்பச்சுவல் ட்ரசரீஸ்(Perpetual Treasuries) நிறுவனத்திற்கு எதிரான தடை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் வங்கியல்லாத நிதி நிறுவன கண்காணிப்பு திணைக்களம் நேற்று(05.01.2024) பிற்பகல் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பெர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் வர்த்தக நடவடிக்கைகளை இடைநிறுத்துவதற்கான தீர்மானம், 2025 ஜனவரி 05ஆம் திகதி பிற்பகல் 4.30 முதல் நடைமுறைக்கு வரும் வகையில், மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்க இலங்கை மத்திய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தடை நீடிப்பு மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி சம்பவ…
-
- 0 replies
- 124 views
-
-
சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர்கள் மற்றும் மாணவர்கள், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்திருந்த சொற்பொழிவு இரத்து செய்யப்பட்டதில் பிரதமருக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று பிரதமர் ஹரிணி அமரசூரியவின்(Harini Amarasuriya) அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில், கல்வி நிறுவனங்களில் விமர்சன ரீதியான சொற்பொழிவை வளர்ப்பதற்கு அடிப்படைகளான கல்வி, சுதந்திரம் மற்றும் ஜனநாயக ஈடுபாட்டை ஹரிணி அமரசூரிய தொடர்ந்தும் ஆதரித்து வருவதாக பிரதமர் அலுவலகம் அறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டியுள்ளது. அரசாங்கக் கொள்கைகள் அத்துடன், இந்த நிகழ்வு தொடர்பாக பிரதமர் அலுவலகத்திலிருந்து எந்த உத்தரவும் அல்லது அறிவுறுத்தலும் வெளியிடப்படவில்லை என்றும், கல்வி நிறுவனங்களின் சுயா…
-
- 0 replies
- 173 views
-
-
யாழ்ப்பாண மக்கள் பயப்படத் தேவையில்லை! யாழ்ப்பாண மக்கள் பயப்படத் தேவையில்லை, பொதுமக்கள் அச்சமின்றி செயல்படவும் சட்டம் ஒழுங்கை நிறைவேற்றவும் பொலிஸார் தயாராக இருக்கின்றார்கள் என யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காளிங்க ஜெயசிங்க தெரிவித்தார். யாழ். நகரில் புத்தாண்டிக்கு முன்னிரவு இளைஞர் ஒருவர் மீது நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதல் தொடர்பாக கேள்வியெழுப்பிய போது மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் இதனை தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த வாரத்தில் யாழ். நகரில் நடைபெற்ற வன்முறைச் சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் நான்கு குற்றவாளிகளை கைது செய்து நீதிமன்றத்தில் முற்ப…
-
-
- 10 replies
- 675 views
- 1 follower
-
-
2015 முதல் வழங்கப்பட்ட காணிகள் தொடர்பில் விசாரணை January 6, 2025 09:49 am 2015ஆம் ஆண்டு முதல் பல்வேறு தேவைகளுக்காக வழங்கப்பட்ட காணி தொடர்பில் விசேட விசாரணைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார். விசாரணையின் பின்னர் தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிரதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அநுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் கலாநிதி சுசில் ரணசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். “எல்ஆர்சி மூலம் தொழிற்சாலைகள் மற்றும் விவசாயத்திற்காக நிலங்கள் விடுவிக்கப்படுகின்றன. ஆனால் சமீப …
-
- 1 reply
- 238 views
-
-
நுண்நிதிக் கடன் வலையில் சிக்கி 200 பெண்கள் மரணம்! adminJanuary 6, 2025 இலங்கையில் கடந்த சில வருடங்களில் நுண்நிதிக் கடன் வலையில் சிக்கிய சுமார் 200 பெண்கள் தங்களது உயிர்களை மாய்த்துக் கொண்டுள்ளதாகத் தேசிய மகளிர் ஒன்றியத்தின் தலைவி ஹாஷினி சில்வா தெரிவித்துள்ளார். இந்நாட்டில் 28 இலட்சம் பேர் நுண்நிதிக் கடன் பெறுகின்றனர், அதில் 24 இலட்சம் பேர் பெண்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இலங்கையிலுள்ள நுண் நிதி நிறுவனங்கள் 38 தொடக்கம் 40 சதவீதம் வரை அதிக வட்டிக்கு கடன் வசதிகளை வழங்குவதாகவும், கடனை செலுத்த முடியாத சில பெண்களும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் சில பிரதிநிதிகளினால் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாவதாகவும் ஹாஷினி சில்வா தெரிவித்துள்ளார். இந…
-
- 1 reply
- 318 views
-
-
கம்பளை – குருந்துவத்தை நகரில் உள்ள பெட்ரோல் நிரப்பு நிலையத்தில் ஒரு வேனொன்று பிரேக் இல்லாமல் அங்கு இருந்த ஊழியரை மோதிய சம்பவம் CCTV கமெராவில் பதிவாகியுள்ளது. இந்த விபத்தில் காயமடைந்த ஊழியர் கம்பளை ஆதார வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் வேனின் சாரதி கைது செய்யப்பட்டு, விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குருந்துவத்தை பொலிஸார் கூறினர். https://jettamil.com/the-tragedy-at-the-petrol-filling-station-cctv-footage
-
- 0 replies
- 258 views
-
-
வடக்கு – கிழக்குப் பகுதிகளில், அதிகளவு தமிழ்ப் பொலிஸாரை நியமிப்பதற்கு சிறப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இங்குள்ள பொலிஸ் வெற்றிடங்கள் தமிழ்ப் பொலிஸாரை வைத்து மிக விரைவாக நிரப்பப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்தார். இது தொடர்பில் யாழ்ப்பாணத்தில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது; இலங்கையின் அனைத்துப் பகுதிகளைப் போலவே வடக்கிலும் எந்தவொரு அரசியல் தலையீடும் இல்லாமல் பொலிஸாரால் பணியாற்ற முடியும். கடந்த காலங்களைப் போல் அல்லாமல், பொலிஸாரின் சுதந்திரமான செயற்பாட்டை நாம் உறுதிப்படுத்தியுள்ளோம். சட்டத்தின் அடிப்படையில் செயற்படுவதற்குப் பொலிஸாருக்கு முழுமையான சுதந்திரம் உண்டு. சட்டத்தின் அடிப்படையில் செயற்படும்போது பொ…
-
- 6 replies
- 541 views
- 1 follower
-
-
சிறுபான்மை இனமா, சகோதர இனமா? - மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் விளக்கம் கோரிய சர்வமத அமைப்பு 05 Jan, 2025 | 02:48 PM 'சிறுபான்மை இனம்' என்ற சொல்லுக்குப் பதிலாக “சகோதர இனம்” அல்லது வேறு ஏதும் ஒரு பொருத்தமான சொல்லைப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்டி மாவட்ட சர்வமத அமைப்பு மனித உரிமைகள் ஆணையாளர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவாவிடம் இன்று ஞாயிற்றுக்கிழமை (05) வேண்டுகோள் விடுத்துள்ளது. கண்டி மாவட்ட சர்வமத அமைப்பின் செயலாளர் காமினி ஜயவீர எழுத்து மூலம் விடுத்துள்ள நீண்ட வேண்டுகோளில் மேலும் தெரிவித்திருப்பதாவது, தமது அமைப்பு நீண்டகாலமாக இனங்களுக்கிடையே சகோதரத்துவம் மற்றும் சகவாழ்வு என்பவற்றை ஏற்படுத்த…
-
- 3 replies
- 298 views
-
-
வெளிநாடு செல்வதற்காக போதை பொருள் விற்ற பட்டதாரி பெண் கைது ! போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்ட ஒரு 20 வயதுடைய பட்டதாரி யுவதியை ஹன்வெல்ல பொலிஸார் கைது செய்துள்ளனர். யுவதி, துபாயில் தலைமறைவாகிய கடத்தல்காரருடன் தொடர்புடையவராகும் என்று பொலிஸார் தெரிவித்தனர். மேலும் பொலிஸாரின் விசாரணைகளில், இந்த யுவதி இரண்டு தனியார் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றதாகவும், வெளிநாடு செல்ல தேவையான பணத்தை சம்பாதிக்க போதைப்பொருள் விற்பனைக்கு ஈடுபட்டுள்ளதாகவும் தெரியவந்தது. இந் நிலையில் அவரது சந்தேகத்தை உறுதி செய்த பிறகு, ஹன்வெல்ல பொலிஸ் நிலைய அதிகாரிகள் அவரை கைது செய்தனர். மேலும், துபாயிலிருந்து இந்த யுவதியின் உறவினரின் மூலம் போதைப்பொருள் விநியோகமாகி இருக்குமெனவும் விசாரணை…
-
-
- 10 replies
- 932 views
-
-
குமார் பொன்னம்பலத்தின் 25 ஆவது நினைவு தினம் January 5, 2025 02:53 pm தமிழர்களின் இனப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்வினை வழங்குவதற்கு இந்தியா துணைநிற்குமானால் வடகிழக்கு தமிழர்கள் இந்தியாவுக்கான ஆதரவினை நூறு வீதம் வழங்குவார்கள் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார். மக்கள் மிகத் தெளிவாக நிற்க வேண்டும். தமிழ் தேசியம் தோற்குமாக இருந்தால் இந்த இலங்கை தீவில் தமிழர்கள் அடிமைகள் அல்லது தமிழர்கள் துடைத்து எறியப்படுவார்கள் எனவும் தெரிவித்தார். இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 25 ஆவது நினைவு தினம் இன்று (05) அனுஸ்டிக்கப்பட்டது. தமிழ்…
-
-
- 5 replies
- 358 views
-
-
ஜெனிவா பொறுப்புக்கூறல் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்க விசேட இராஜதந்திர குழுவை நியமிக்க அரசாங்கம் நடவடிக்கை 05 Jan, 2025 | 12:32 PM (லியோ நிரோஷ தர்ஷன்) ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் பொறுப்புக்கூறல் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கும் வகையில், விசேட இராஜதந்திர குழு ஊடாக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதுடன், 58ஆவது அமர்வுக்கு முன்னர் சிறப்பறிக்கையை வெளியிடவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது. மேலும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 24ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், மனித உரிமை பேரவையின் அமர்வில் சமர்ப்…
-
- 2 replies
- 200 views
-
-
அதானியின் எரிசக்தி திட்டம் அமைச்சரவைக்கு செல்கிறது! adminJanuary 5, 2025 இலங்கையில் அதானியின் எரிசக்தி திட்டங்களை பரிசீலிக்க குழுவொன்றை நியமிப்பதற்கான யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. நாளை (6.01.24) நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த யோசனை முன்வைக்கப்படும் என எரிசக்தி அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். மன்னார் மற்றும் பூநகரி பிரதேசங்களில் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள காற்றாலை மின் திட்டங்கள் தொடர்பிலேயே இந்த பிரேரணை சமர்ப்பிக்கப்பட உள்ளது. மன்னார் மற்றும் பூநகரி பிரதேசங்களில் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள காற்றாலை மின் திட்டங்களின் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின் அலகு ஒன்றுக்கு 8.26 சதம் டொலர் வீதம் செலுத்துவதற்கு…
-
- 1 reply
- 204 views
-