ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142782 topics in this forum
-
Paye tax இல் ஏற்படவுள்ள மாற்றம் December 18, 2024 12:32 pm பாராளுமன்றில் ஜனாதிபதி ஆற்றிய உரையின் போது Paye tax தொடர்பில் அவர் வௌியிட்ட விடயம் கீழே தரப்பட்டுள்ளது. "நாங்கள் மூன்றாவது மதிப்பாய்வைத் தொடங்கியபோது, எங்கள் முன்மொழிவுகள் தொழில் வல்லுநர்களுக்கு விதிக்கப்பட்ட வருமான வரி பற்றியது. மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்கினோம். வரி வரம்பு ஒரு இலட்சத்திற்கு மேல் காணப்பட்டது. எங்களால் அதை 150,000 ஆக உயர்த்த முடிந்தது. மேலும், தனிநபர் வருமான வரியின் 1ஆவது வகையின் திருத்தத்தை 500,000 முதல் 10 இலட்சம் ரூபா வரையில் 6% வரிக்கு உட்பட்டதாக மாற்ற முடிந்தது. அதன்படி, மாதம் 150,000 ரூபா சம்பளம் பெறுபவர் 100% வரி விலக்கு. 200,000 சம்பாதிக்கும் நப…
-
- 4 replies
- 483 views
- 1 follower
-
-
ஜனாதிபதி மாளிகையை இடமாற்றும் திட்டம் ஒத்திவைப்பு ஜனாதிபதி மாளிகை, அலரிமாளிகை, பிரதமர் அலுவலகம் மற்றும் ஜனாதிபதி செயலகம் ஆகியவற்றை ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டைக்கு மாற்றும் திட்டத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான புதிய அரசாங்கம் கிடப்பில் போட்டுள்ளதாக தெரிய வருகிறது. கடந்த அரசாங்கம் இந்த அலுவலகங்களை இடமாற்றம் செய்ய திட்டமிட்டதுடன், இதன் மூலம் அவற்றின் தற்போதைய கட்டிடங்கள் கொழும்பு பாரம்பரிய கட்டிடங்களாக சுற்றுலாத்துறைக்காக அபிவிருத்தி செய்யப்படுவதற்காக எத்தனிக்கப்பட்டது. கடந்த அரசாங்கம் 2025 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்ய திட்டமிட்டிருந்தது. எவ்வாறாயினும், இந்த திட்டம் தற்போதைய அரசாங்கத்தால் கிடப்பில் போடப்பட்ட…
-
- 1 reply
- 241 views
-
-
யாழ்ப்பாணம் ஏ-9 வீதியில் விபத்து - ஐவர் படுகாயம்! கொழும்பிலிருந்து பயணிகளை ஏற்றி வந்த அதிசொகுசு பேருந்து ஒன்று, சிறிய ரக உழவு இயந்திரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஐவர் காயமடைந்துள்ளனர். இன்று அதிகாலை 4மணியளவில் ஏ-9 வீதி, மிருசுவில் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர்கள் சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் அவர்களில் மூவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்; கொழும்பிலிருந்து பயணித்த அதிநவீன சொகுசு பேருந்தும், அதே திசையில் பயணித்த மரப் பலகைகளை ஏற்றிய சென்ற சிறிய ரக உழவு இயந்திரமும் மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்று…
-
- 2 replies
- 329 views
-
-
யாழில். தனியார் கல்வி நிலைய வாசலில் கூடி நிற்கும் பெற்றோரால் வாகன நெரிசல்! adminDecember 18, 2024 யாழ்ப்பாணத்தில் தனியார் கல்வி நிலைய வாசலில் பெற்றோர்கள் காத்திருப்பதனால் பாரிய போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதால் , அதற்கு தீர்வு காணப்பட வேண்டும் என தனியார் கல்வி நிறுவன நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் இயங்கும் தனியார் கல்வி நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பாக, மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை கலந்துரையாடல் ஒன்று யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அதன் போது, மாவட்டச் செயலகத்தில் கடந்த11 ஆம் திகதி நடைபெற்ற மாவட்ட சிறுவர் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில், எடுக்கப்பட்ட தீர்மான…
-
-
- 8 replies
- 564 views
-
-
கோப் குழு தலைவராக ஹர்ஷ டி சில்வா நியமனம்! adminDecember 18, 2024 பொது நிதி தொடர்பான குழுவின் (COPF) தலைவராக SJB நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்று அறிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹர்ஷன சூரியப்பெரும, ரவி கருணாநாயக்க, ஹர்ஷன ராஜகருணா, நிமல் பலிஹேன, விஜேசிறி பஸ்நாயக்க, திலின சமரகோன் மற்றும் லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோர் குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். https://globaltamilnews.net/2024/209401/
-
- 2 replies
- 411 views
- 1 follower
-
-
2025ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்து பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 25,000 மாணவர்களுக்கு 6,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கடந்த காலங்களில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் போது பாடசாலை மாணவர்களில் 55 வீதத்திற்கும் அதிகமானோர் அதிக பொருளாதார பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்தனர். கிராமிய மற்றும் பெருந்தோட்டப் பாடசாலைகளை அண்மித்த பகுதிகளில் இந்த நிலைமை மேலும் மோசமடைந்துள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய சுட்டிக்காட்டினார். https://thinakkural.lk/article/313867
-
- 1 reply
- 301 views
- 1 follower
-
-
இலங்கை தமிழரசுக்கட்சி ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 75 ஆண்டுகள் பூர்த்தி! இலங்கை தமிழரசுக்கட்சி ஆரம்பிக்கப்பட்டு இன்று 75 ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு இலங்கை தமிழரசு கட்சியின் ஸ்தாபக தலைவர் தந்தை செல்வாவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தந்தை செல்வா நினைவு சதுக்கத்தில் அமைந்த்துள்ள தந்தை செல்வா சிலைக்கு இலங்கை தமிழரசு கட்சியின் முக்கியஸ்தர்களால் மலர் மாலை அணிவித்தும் மலர் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது. இன் நிகழ்வில் இலங்கை தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தர்களான மாவை சேனாதிராஜா,சி.வி.கே. சிவஞானம்,ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர் …
-
-
- 12 replies
- 912 views
-
-
2024 மூன்றாம் காலாண்டில் இலங்கை பொருளாதாரம் 5.5% வளர்ச்சி! 2024 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் நேர்மறை வளர்ச்சி விகிதத்தில் 5.5 சதவீதமாக பதிவாகியுள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, நிலையான விலையில் (2015) 2023 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 2,987,544 மில்லியன் ரூபாவாக பதிவு செய்யப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 2024 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 3,151,941 மில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது. இதன்படி, 2024 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியானது 5.5 சதவீத நேர்மறையான வளர்ச்சியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டின் மூன்றா…
-
- 0 replies
- 436 views
-
-
நாடு திரும்பினார் ஜனாதிபதி! இந்தியாவுக்கான மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை முடித்துக் கொண்ட ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் அவரது குழுவினர் நாடு திரும்பியுள்ளனர். அதன்படி, இவர்கள் நேற்றிரவு (17) 10.00 மணியளவில் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-196 மூலமாக அவர்கள் இந்தியாவின் புதுடெல்லியிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கடந்த 15 ஆம் திகதி இந்தியாவுக்கு உத்தியோகப்பூர்வ பயணத்தை மேற்கொண்டார். இந்தச் சுற்றுப் பயணத்தின் போது இந்திய பிரதமர் நர…
-
- 2 replies
- 397 views
-
-
நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் மீண்டும் மோசமான நிலையில்! கொழும்பு, கண்டி, காலி மற்றும் வடமாகாணத்தில் காற்றின் தரம் மீண்டும் மோசமான நிலையை எட்டியுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஊடகப் பேச்சாளர் அஜித் குணவர்தன தெரிவித்துள்ளார். அண்மைய மோசமான வானிலை காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் சாதகமற்ற நிலையில் உள்ளது. இதேவேளை, யாழ்ப்பாண மாவட்டத்தின் காற்றின் தரம் தொடர்பில் ஒரு மாத காலத்திற்கு தொடர்ச்சியான பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறும், பாதகமான காரணிகள் இருப்பின் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் மேன்முறையீட்டு நீதிமன்றம் மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கு நேற்று உத்தரவிட்டுள்ளது. அத்துடன், பரிசோதனைகளின் போது யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தீங்கு…
-
- 0 replies
- 191 views
-
-
சவதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தை திருத்த சந்தர்ப்பம் கிடைத்தும் அரசாங்கம் ஒரு வசனத்தையேனும் திருத்தவில்லை - ஹர்ஷடி சில்வா Published By: Vishnu 18 Dec, 2024 | (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) சவதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தில் திருத்தம் மேற்கொள்ள சந்தர்ப்பம் கிடைத்தும் அரசாங்கம் ஒரு வசனத்தையேனும் திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என எதிர்க்கட்சி உறுப்பினர் ஹர்ஷடி சில்வா தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (17) சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை வழிமொழிந்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், இந்தியாவுக்கு விஜயம்…
-
- 0 replies
- 260 views
-
-
பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருப்போர் எத்தனை பேர்? - தகவல் கோரிக்கைக்கு அமைய தரவுகளை வெளியிட்டது சட்டமா அதிபர் திணைக்களம் Published By: Vishnu 18 Dec, 2024 | (நா.தனுஜா) சட்டமா அதிபர் திணைக்களத்தின் தரவுகளின்படி கடந்த ஏப்ரல் மாதம் வரையான காலப்பகுதியில் விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் தொடர்புடைய குற்றங்களுக்காக 6 பேரும், உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல்களுடன் தொடர்புடைய குற்றங்களுக்காக 24 பேரும் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்டங்களுக்குப் புறம்பான பயங்கரவாதத்தடைச…
-
- 0 replies
- 142 views
-
-
இமாலயப் பிரகடனத்தினை முன்னெடுக்கும் பணிக்காக மக்கள் இயக்கமொன்றை உருவாக்குங்கள்; பலதரப்பட்ட பங்கேற்பாளர்களும் வலியுறுத்தல் Published By: Vishnu 18 Dec, 2024 | இமாலயப் பிரகடனத்தினை தொடர்ந்தும் தேசிய உரையாடலாக முன்னெடுத்துச் செல்வதற்கான பணியை மக்கள் இயக்கமொன்றை உடனடியாக உருவாக்கி ஒப்படையுங்கள் என்று யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் நடைபெற்ற மாவட்ட மட்டத்திலான உரையாடல்களில் ஆணித்தனமாக வலியுறுத்தப்பட்டுள்ளது. நாட்டில் சமாதானம் மற்றும் நல்லிணகத்தை நோக்கிய இமாலயப்பிரகடனம் பற்றிய உரையால் கடந்த 16ஆம் மற்றும் 17ஆம் திகதிகளில் கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றிருந்த…
-
- 1 reply
- 204 views
-
-
17 DEC, 2024 | 06:58 PM (எம்.மனோசித்ரா) இந்து - லங்கா ஒத்துழைப்பினை மேலும் ஸ்திரப்படுத்தி வலுப்படுத்துவதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் கூட்டு அறிவிப்பை வரவேற்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார். அதேபோன்று எட்கா ஒப்பந்தத்துடன் முன்னோக்கி செல்வதற்கான தீர்மானம் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அவர் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார். செவ்வாய்கிழமை (17) அறிக்கையொன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ள அவர் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது : இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆகியோரால் திங்…
-
- 0 replies
- 142 views
- 1 follower
-
-
17 DEC, 2024 | 09:02 PM முள்ளிவாய்க்கால் நினைவுமுற்றத்தில் பேரவலத்தின் சாட்சியாக, நினைவாலயம் ஒன்று அமைக்கப்படவேண்டுமென வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். பாராளுமன்றில் செவ்வாய்க்கிழமை (17) சர்வதேச இறையாண்மை பிணைமுறி மறுசீரமைப்புதொடர்பான விவாதத்தில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், 2024 நவம்பர் 27நாளில் எமது மக்கள் தங்களின் உறவுகளுக்கு எதுவித இடர்பாடுமின்றி, அமைதியாக தமது அஞ்சலிகளைச்செலுத்தி தமது உணர்வலைகளை வெளிப்படுத்தி ஆறுதலடைந்தனர். அந்தவகையில் ஜனாதிபதியின் இந்த நிலைப்பாட்டிற்கு எனது ந…
-
- 0 replies
- 203 views
- 1 follower
-
-
தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கையைச் சேர்ந்த அகதிகள் மீளவும் நாட்டுக்கு வரவேண்டும் என்பதே எங்களின் விருப்பமாகவும் இருக்கின்றது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். யு.என்.எச்.சி.ஆர். அமைப்பின் தேசிய அலுவலகத் தலைவராகப் பணியாற்றிய சஞ்சிதா சத்தியமூர்த்தி, வடக்கு மாகாண ஆளுநரை, ஆளுநர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடிய நிலையில் அவர் இதனை தெரிவித்தார். கடந்த காலங்களில் வடக்கு மக்களுக்கு பல்வேறு வகையான உதவிகளை யு.என்.எச்.சி.ஆர். அமைப்பு வழங்கியதை நினைவுகூர்ந்த ஆளுநர், அதற்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார். குறிப்பாக இந்தியாவின் தமிழக மாநிலத்தில் தங்கியிருந்த இலங்கை அகதிகள் நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகள் மற்றும் அவர்களுக்கான வாழ்வாதார உதவிகளை மேற…
-
- 3 replies
- 344 views
- 1 follower
-
-
17 DEC, 2024 | 07:39 PM யாழ்ப்பாணம் மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் நோய் காரணமாக இதுவரை 99 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 23 பேரும் யாழ் போதனா வைத்தியசாலையில் 6 பேரும் சிகிச்சைபெற்று வருகின்றனர் என யாழ்ப்பாண மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இன்றையதினம் அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த 24 மணிநேரத்தில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 9 நோயாளர்களும் யாழ் போதனா வைத்தியசாலையில் 5 நோயாளர்களும் எலிக்காய்ச்சலுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில்…
-
-
- 4 replies
- 425 views
- 1 follower
-
-
இலங்கையில் கைது செய்யப்பட்ட பிரித்தானிய தமிழ் பிரஜை விடுதலை. பிரித்தானியாவிலிருந்து தீவிரவாத அமைப்புக்கு பணம் வசூலித்ததாக குற்றம் சுமத்தப்பட்டு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட பிரித்தானிய தமிழ் பிரஜையை விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. குறித்த வழக்கு இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பயணத்தடை உலகத்தமிழ் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் மற்றும் உலகத்தமிழர் பேரவையின் நிர்வாகிகளுடன் இணைந்து குறித்த பிரித்தானிய பிரஜை பயங்கரவாத அமைப்பின் மீளுருவாக்கத்திற்கு நிதி திரட்டி இலங்கைக்கு அனுப்பியதாக 2012 ஆம் ஆண்டு குற்றப்புலனாய்வு பிரிவினரால் நீதிமன்ற…
-
-
- 9 replies
- 460 views
-
-
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித்த ராஜபக்சவை விசாரணையொன்றுக்காக முன்னிலையாகுமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அழைப்பு விடுத்துள்ளது. மகிந்த ராஜபக்வின் இரண்டாம் புதல்வரும், கடற்படை அதிகாரியுமான யோஷித்த , மகிந்தவின் மெய்ப்பாதுகாவலரான ஓய்வுபெற்ற இராணுவ கேணல் நெவில் வன்னியாரச்சி ஆகியோருக்கு எதிராக பணச்சலவை குற்றச்சாட்டின் கீழ் , குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இதனடிப்படையில் நேற்றைய தினம் (16.12.2024) வாக்குமூலம் பெறுவதற்காக யோஷித்த மற்றும் நெவில் வன்னியாரச்சி ஆகியோருக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அறிவுறுத்தியிருந்தது. https://tamilwin.com/article/cid-summons-yoshitha-rajapaksa-1734426959#google_vignette
-
-
- 7 replies
- 438 views
-
-
மக்களின் பணத்தை கொள்ளையடித்தோரின் தகவல் வெளியானது – 300 இலட்சம் பெற்று முதலிடத்தில் முன்னாள் பிரதமர். வறுமைக் கோட்டுக்கு உட்பட்டவர்கள் தங்களுக்கான மருத்துவ சிகிச்சைக்காகவும், மாணவர்கள் தங்களின் கல்வியறியை வளர்த்தெடுக்கவும் நிதியுதவிகள் தேவைப்பட்டால் நாடும் முதல் இடமாக ஜனாதிபதி நம்பிக்கை நிதியம் காணப்படுகிறது. ஆனால், இப்படியான இந்த நிதியத்திலிருந்து கடந்த 2005 ஆம் ஆண்டு முதல், 2024 ஆம் ஆண்டுவரை இலட்சக்கணக்கிலும், கோடிக் கணக்கிலும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக நிதி வழங்கப்பட்டுள்ளது என்றால் ஏற்றுக் கொள்ள முடியுமா? ஆம். அவ்வாறு பாரிய நிதிகளைப் பெற்றுக் கொண்டவர்களின் பெயர் பட்டியல் இன்று சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவினால் நாடாளுமன்றத்தில் வெளியிடப்ப…
-
- 3 replies
- 323 views
- 1 follower
-
-
முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு செலவினங்கள் வெளியீடு! முன்னாள் ஜனாதிபதிகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை அண்மையில் மீளாய்வு செய்ததைத் தொடர்ந்து அரசாங்கம் 1,200 மில்லியன் ரூபா பணத்தை சேமிக்க எதிர்பார்ப்பதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் இந்த தீர்மானம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர், இந்த நடவடிக்கையை எதிர்ப்பவர்களை விமர்சித்தார். அவர்கள் முதன்மையாக பொது நிதியை தனிப்பட்ட இலாபத்திற்காக பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டுவதாகவும் கூறினார். நிதிப் பொறுப்பைப் பேணுவதன் மூலம் செயல்திறனை உறுதி செய்வதற்காக ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்ந்து மீளாய்வு செய்யப்படும். செலவுக் குறைப்…
-
- 1 reply
- 176 views
-
-
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா(Ramanathan Archchuna), யாழ். போதனா வைத்தியசாலைக்குள் நோயாளர் என்ற ரீதியில் மாத்திரமே உள்நுழைய அனுமதிக்கப்படுவார் என்று யாழ். போதனா வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது. வைத்திசாலைக்குள் உள்நுழைந்து கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தினார் என தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு எதிராக யாழ். போதனா வைத்தியசாலையினரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. வைத்தியசாலை நிர்வாகத்திடம் முன் அனுமதி இந்தநிலையில், குறித்த வழக்கு நேற்றையதினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மற்றும் சட்டத்தரணி என். கௌசல்யா ஆகியோரை தலா ஒரு இலட்ச ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையில் செல்ல யாழ்.நீதவான…
-
- 0 replies
- 183 views
- 1 follower
-
-
யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு எதிர்வரும் ஜனவரி மாதம் 15ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்கத் தகுதியற்றவர் என தெரிவித்து புதிய சுதந்திர முன்னணியின் தலைவர் ஓஷல ஹேரத்தினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. தேர்தல்கள் சட்ட விதிகளுக்கு முரணானது இந்தநிலையில், இந்த மனுவை ஜனவரி 15ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொண்டு உண்மைகளை உறுதிப்படுத்துமாறு நீதியரசர்கள் இன்று உத்தரவிட்டனர். நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கடந்த பொதுத் தேர்தலின் போது அரச வைத்தியராகக் கடமையாற்றிய நிலையில், வேட்பு மனுவை சமர்ப்பித்…
-
- 6 replies
- 489 views
- 2 followers
-
-
நாட்டில் அதிகரித்து வரும் இனவெறி மற்றும் மத வெறி குறித்து தாம் சேகரித்துள்ள முக்கியமான தகவல்களைப் பெற்று விவாதிக்க ஒரு முறையான நிறுவனத்தை நிறுவுமாறு பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர்(Galagoda Aththe Gnanasara Thero), ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஊடகங்கள் மத்தியில் நேற்று உரையாற்றிய ஞானசார தேரர், குற்றப் புலனாய்வுத் துறையிடம் இல்லாத தகவல்கள்கூட தன்னிடம் இருப்பதாகக் கூறியுள்ளார். அநுரவின் மதிப்புமிக்க கருத்துக்கள் எனினும், இந்தத் தகவல்களை தாம் வைத்திருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. தாம் இந்த அரசாங்கத்தை நம்புவதால், அவற்றை அரசாங்கத்தால் நிறுவப்பட்ட ஒரு உண்மையான நிறுவனத்திடம் ஒப்படைக்க விரும்புவதாக தேரர் குறிப்பிட்டுள்ளார். …
-
- 1 reply
- 187 views
-
-
முன்னாள் ஜனாதிபதிகளுக்கான பொலிஸாரின் பாதுகாப்பு தவிர்ந்த அனைத்து ஆயுதப்படைகளின் பாதுகாப்பும் எதிர்வரும் வாரத்தில் இருந்து நீக்கப்படவுள்ளதாக பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் தெரிவித்துள்ளார். பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால(Ananda Wijepala) இன்று (17.12.2024) நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும்போதே இதனை கூறியுள்ளார். ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு மதிப்பீட்டின் பின்னர் உரிய பாதுகாப்பு வழங்கப்படும் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். 1200 மில்லியன் ரூபா மேலும், முன்னாள் ஜனாதிபதிகளுக்கென ஏனைய கடமைகளில் ஈடுபட்டுள்ள சில அதிகாரிகளும் நீக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார். இது நடைமுறைப்படுத…
-
- 2 replies
- 320 views
-