ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143456 topics in this forum
-
மணற்காடு சவுக்குகாட்டை சுற்றுலா இடமாக மாற்றுவதற்கு ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படும் என யாழ். மாவட்டச் செயலாளர் நா.வேதநாயகன் தெரிவித்தார். உலக பூமி தினத்தை முன்னிட்டு வடமராட்சி, மணற்காடு சவுக்குகாட்டை பாதுகாப்பதற்கு விசேட செயற்றிட்டம் ஒன்று 1,500 தொண்டர்களின் உதவியுடன் வெள்ளிக்கிழமை (22); முன்னெடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட வடமராட்சி கிழக்கிலுள்ள பொது அமைப்பின் பிரதிநிதி ஒருவர்; உரையாற்றும்போது, 'மணற்காட்டிலுள்ள சவுக்கு காடு வடமராட்சி கிழக்கு பிரதேசத்திற்கு பெரும் கொடையாகும். இந்தப் பிரதேசத்தை மண் அரிப்பில் இருந்து பாதுகாப்பதற்காக இந்தக் காடு உருவாக்கப்பட்டது. இதை தொடர்;ந்தும் பாதுகாக்கும் அதேவேளை, இதனை உல்லாசப் பயணிகள் பார்வையிடுவதற்கான சுற்றுலா ஏற்பாட…
-
- 0 replies
- 327 views
-
-
சுவீடன் வௌிவிவகார அமைச்சர் இலங்கை வருகிறார் சுவீடன் நாட்டின் வௌிவிவகார அமைச்சர் மாகஸ்ட் வொல்ஸ்டோம் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வரவுள்ளார். இந்த விஜயத்தின் போது அவர், இலங்கை வௌிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார். இந்த சந்திப்பு எதிர்வரும் திங்கட்கிழமை வௌிவிவகார அமைச்சில் இடம்பெறவுள்ளது. அத்துடன் மாகஸ்ட் வொல்ஸ்டோம் லக்ஷ்மன் கதிர்காமர் நிலையத்தில், "வௌிநாட்டு கொள்கைகளில் பெண்களின் பொறுப்பு" என்ற தலைப்பிலான உரை ஒன்றையும் நிகழ்த்தவுள்ளார். http://tamil.adaderana.lk/news.php?nid=79161
-
- 0 replies
- 376 views
-
-
யாழ். நகரின் மத்தியின் மூன்று பகுதிகளில் வீடுகளுக்குள் புகுந்த இளைஞர் குழு சொத்துக்களை அடித்து நொறுக்கி விட்டு தப்பிச் சென்றுள்ளது. இளைஞர் குழுவின் இந்தத் தாக்குதலுக்கு 3 வீடுகளும் ஹோட்டல் ஒன்றும் இலக்காகியிருக்கின்றன. அத்துடன் மோட்டார் சைக்கிள் ஒன்றும் தென்னிலங்கையிலிருந்து வந்த சொகுசு பஸ் ஒன்றும் சேதமடைந்துள்ளன. மேலும் வீடுகளின் யன்னல் கண்ணாடிகளும் அடித்து நொருக்கப்பட்டன. மாம்பழம் சந்தி, சோமசுந்தரம் வீதி, கந்தர்மடம் பகுதிகளிலேயே இந்தத் தாக்குதல்கள் நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளன. ஒரு மணி நேரத்துக்குள் இந்தத் தாக்குதல்களை நடத்திய குழுவினர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். தாக்குதல் குறித்துப் பொலிஸாருக்கு முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. …
-
- 1 reply
- 585 views
-
-
இந்தச் சந்தர்ப்பத்தை நழுவவிட்டால் நாடு சீரழிந்து போகும் – வடமாகாண முதல்வர் நாட்டைப் பிரிக்காது, நாம் தனித்து வாழும் அதே நேரம், சகல மக்களுடனும் சேர்ந்தே வாழ ஆசைப்படுகின்றோம். இந்தச்சந்தர்ப்பத்தை நழுவ விட்டால் நாடு சீரழிந்து போகும். சின்னாபின்னமாகி விடும். என்று தெரிவித்துள்ளார் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன். வடக்கு மாகாணசபையினால் தயாரிக்கப்பட்ட அரசியல் தீர்வுத் திட்டத்துக்கான முன்மொழிவுகளை உள்ளடக்கிய வரைவின் இறுதி வடிவத்தை நேற்று வட மாகாணசபையில் சமர்ப்பித்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். “பல நாட்களின் பிரயத்தனங்களின் பின்னர் இக்கொள்கை முன்மொழிவை உங்கள் முன் சமர்ப்பிக்கக்கூடியதாக இருப்பதையிட்டு மகிழ்வடைகின்றேன். குறைமாதக் குழந்தைபோல நாங…
-
- 1 reply
- 423 views
-
-
இது திருகோணமலை கன்னியா வெண்ணீர் கிணற்றுக்கு செல்லும் நுழைவு சீட்டாகும். இது சிவ பூமி எனவும் இலங்கையை ஆண்ட இராவணன் தனது தாயின் கிரியைகளுக்காக உருவாக்கிய ஏழு கிணறுகளும் தற்போது இவ் நுழைவு சீட்டில் அனுராதபுர கால பெளத்தர்களுக்கு சொந்தமானது என்று உள்ளது . எது உண்மை. தொல்லியல் தினைக்களத்தில் ஒரு தமிழர் கூடவா வேலை செய்யவில்லை. http://tamilleader.com/
-
- 22 replies
- 2.3k views
-
-
தமிழ் சமூகம் இழந்ததை எண்ணி வருந்தாமல் பெறவேண்டியதற்காக நடைபோடுங்கள்! தமிழ் சமூகம் இழந்ததை எண்ணிவருந்தாமல் பெறவேண்டியதற்காக நடைபோட வேண்டும். இந்த உலகில் நாம் எவருக்கு சலைத்தவர்கள் அல்ல. எங்கள் பூமியை வெற்றி பூமியாக உருவாக்க வேண்டும். நேற்று நடந்ததை விட்டு நாளை நடப்பதற்காக வாழ இந்த தமிழ் சமூகம் எதிர்காலத்தில் உருவாக வேண்டும் என இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணம் வருகை தந்த புகழ்பூத்த பட்டிமன்ற பேச்சாளர் ராஜா தெரிவித்தார். சுதந்திர இந்தியாவில் சட்டம் மற்றும் நீதித்துறைக்கான முதலாவது அமைச்சர் கலாநிதி பி.ஆர்.அம்பேத்கார் அவர்களது 125ஆவது பிறந்த தினத்தினையும், தமிழ் சித்திரைப்பிறப்பினை கொண்டாடும் முகமாகவும் யாழ். இந்திய துணைத்தூ…
-
- 4 replies
- 916 views
-
-
கிளிநொச்சியில் இரனைமடுவில் ஜந்து கைக்குண்டுகள் மீட்பு: கிளிநொச்சி இரனைமடு கனகாம்பிகைகுளத்திற்கு அருகிலிருந்து விடுதலைப்புலிகளின் தயாரிப்பு எனக் கூறப்படுகின்ற ஜந்து கைக்குண்டுகளை இன்று வெள்ளிக்கிழமை இரானDவத்தினர் மீட்டுள்ளனர். குறித்த பிரதேசத்திற்கு விறகு வெட்டச்சென்ற நபர் ஒருவரினால் கைக்குண்டுகள் அவதானிக்கப்பட்டு, இரானணுவத்தினருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து இரானணுவத்தின் குண்டு செயலிழக்கும் படைப்பிரிவினர் குறிப்பிட்ட இடத்திற்கு விரைந்து ஜந்து கைக்குண்டுகளையும் மீட்டுள்ளனர். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/131361/language/ta-IN/article.aspx
-
- 0 replies
- 251 views
-
-
மஹிந்த நாட்டைவிட்டு வெளியேறியமைக்கான காரணம் வெளியாகியது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தாய்லாந்தின் சில பௌத்த மதஸ்தானங்களில் இடம்பெறவுள்ள பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கும் நோக்கிலேயே தாய்லாந்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தாய்லாந்திற்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டு இன்று காலை தாய்லாந்துக்கு புறப்பட்டடு சென்றிருந்தார். அவர் இன்று காலை 7.30 மணியளவில் ஸ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான யு.எல் 890 என்ற விமானத்தில் தாய்லாந்தின் பாங்கொக்கிற்கு பயணமானார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸூம் தாய்லாந்து சென்றுள்ளமை குறிப்பிடத…
-
- 0 replies
- 369 views
-
-
மஹிந்தவிற்கே மீண்டும் புலிகளின் உதவி தேவைப்படுகின்றது புலிகளின் கதைகளை கூறியும் இனவாத கருத்துகளை முன்வைத்தும் மக்களின் சாதாரண வாழ்கையை அழித்துவிடக்கூடாது. அரசியல் சுயநலத்திற்காக பிரிவினைவாதத்தை கையிலெடுக்க வேண்டாம் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்தது. மஹிந்த ராஜபக்ஷவிற்கே மீண்டும் புலிகளின் உதவி தேவைப்படுகின்றது. அதனாலேயே கொல்லப்பட்ட புலிகளுக்கு மீண்டும் உயிர் கொடுக்க முயற்சிக்கின்றார் எனவும் ஜே.வி.பி குற்றம் சுமத்தியது. நாட்டில் பிரிவினைவாதம் தலைதூக்கி நாட்டை பிரிவினையின் பக்கம் கொண்டு செல்வதாக மஹிந்த தரப்பு குற்றம் சுமத்திவரும் நிலையில் அது தொடர்பில் மக்கள் விடுதலை முன்ன…
-
- 1 reply
- 368 views
-
-
சம்பந்தன், விக்கி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சிறிலங்கா காவல்துறையில் முறைப்பாடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி,சிங்கள அடிப்படைவாத அமைப்புகளான, பொது பலசேனாவும், சிஹல ராவயவும், நேற்று சிறிலங்கா காவல்துறை தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ளன. வடக்கு மாகாண முதலமைச்சரின் அண்மைய கருத்துக்கள், அரசியலமைப்பை மீறுவதாக உள்ளது என்று தெரிவித்து, சிஹல ராவயவின் பொதுச்செயலர் வண.மாகல்கண்டே சுதந்த தேரர், பொது பலசேனவின் நிறைவேற்று அதிகாரி டிலந்த விதானகே ஆகியோர் இந்த முறைப்பாட்டைச் செய்தனர். இதன் பின்னர் கருத்து வெளியிட்ட, வண.மாகல்கண்டே சுதந்த தேரர், ”வடக்கு, கி…
-
- 0 replies
- 323 views
-
-
காணாமற்போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை கிளிநொச்சியில் [ Saturday,23 April 2016, 02:52:12 ] காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் வட மாகாணத்திற்கான இறுதிக்கட்ட அமர்வு எதிர்வரும் 25 ஆம் திகதி கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெறவுள்ளது. வட மாகாணத்தின் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா ஆகிய நான்கு மாவட்டங்களிலும் ஆணைக்குழு தனது சாட்சி விசாரணை அமர்வுகளை நிறைவுசெய்துள்ளது. இதற்கமைய வடக்கிற்கான இறுதிக்கட்ட அமர்வு எதிர்வரும் 25 ஆம் திகதி தொடக்கம் 28 ஆம் திகதி வரை கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடத்தப்படவுள்ளதாக ஆணைக்குழு அறிவித்துள்ளது. இந்த சாட்சி விசாரணை அமர்வுகளில் சாட்சி…
-
- 0 replies
- 322 views
-
-
வடமாகாண சபையினால் தயாரிக்கப்பட்ட அரசியல் தீர்வுத்திட்டம் ஏகமனதாக நிறைவேற்றம் [ Saturday,23 April 2016, 03:13:52 ] வடமாகாண சபையினால் தயாரிக்கப்பட்ட அரசியல் தீர்வுத்திட்டம் மாகாண சபை உறுப்பினர்களால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. வடக்கு மாகாண சபையின் விசேட அமர்வு நேற்று வெள்ளிக்கிழமை கைதடியில் அமைந்துள்ள பேரவை செயலகத்தில் நடைபெற்றது. இதில் வடமாகாண சபையால் தயாரிக்கப்பட்ட அரசியல் தீர்வு மற்றும் அரசியல் யாப்புக்கான கொள்கை வரைபு மீதான விவாதம் நடைபெற்றது. இதன் போதே தீர்வுத்திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தீர்வுத்திட்டம் நிறைவேற்றப்பட்டபோது 2 எதிர்க்கட்சியினர் உட்பட 19 உறுப்பினர்களே சபையில் காணப்பட்டனர். புதிய அரசியலமைப்பு உர…
-
- 0 replies
- 343 views
-
-
அண்மையில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா சம்பந்தன் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்தார். இதன்போது நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ‘2016 தீர்வு உங்களின் வாக்குறுதி நிறைவேறுமா?’ என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார். இதன்போது அவர் பதிலளிக்கையில், தீர்வுத் திட்டம் கிடைக்கும் என்ற எனது கணிப்பை குழப்பும் விதத்தில் ஊடகங்கள் செயற்படுகின்றன எனத் தெரிவித்தார். தீர்வு ஒன்றை எட்டவேண்டுமாயின் அதற்கென சில ஒழுங்குகள் உள்ளன. சில கருமங்கள் நடைபெறவேண்டும். என்னுடைய கணிப்பின் பிரகாரம் ஆட்சி மாற்றம் நடைபெற்றிருக்கிறது. மகிந்த வீட்டுக்குப் போயிருக்கிறார். மைத்திரி பதவியேற்றிருக்கிறார். ஆட்சிக்கு வந்துள்ள மைத்திரிபால சி…
-
- 8 replies
- 1.2k views
-
-
புலிகளின் பாடலைக் கேட்டதாக குருநகர் இளைஞர் கைது! - 14 நாட்கள் விளக்கமறியல் [Thursday 2016-04-21 19:00] தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் பாடல்களை கேட்டு ரசித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் யாழ்ப்பாணம், குருநகர் பகுதியில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்று சிவில் உடையில் சென்ற பொலிஸாரினாலேயே 25 வதுடைய குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட இளைஞன் இன்று மாலை யாழ் நீதவான் நீதிமன்ற நீதிபதியின் உத்தியோகப்பூர்வ வாசஸ்தலத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையிலேயே எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=155950&cat…
-
- 9 replies
- 947 views
-
-
150,000 இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலேயே இன்னமும் வாழ்கிறோம்: சி.வி 'எந்த ஒரு இனமும் தொடர்ந்து அடிமைப்பட்டிருக்க விரும்ப மாட்டாது. யார் இல்லை என்று கூறினாலும், நாங்கள் இன்று ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் இராணுவத்தினரின் மேலாண்மையின் கீழ்த்தான் வாழ்கின்றோம். இந்தியாவின் அனுசரணையால் வடமாகாண சபை என ஒன்று கிடைத்தாலும் எம்மால் எம்மைச் செவ்வனே ஆள சட்டம் இடங்கொடுக்கவில்லை என்பதே யதார்த்தம். எனவே, எமது மொழி, இடங்கள், மதங்கள், கலாசாரப் பின்னணி என்பன மற்றையோரால் சூறையாடப்படாமல் அவற்றைப் பாதுகாத்து சுமூகமாக எல்லோருடனும் சகஜ வாழ்வு வாழக்கூடிய விதத்திலேயே எமது வரைவை முன்வைத்துள்ளோம்' என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்…
-
- 2 replies
- 483 views
-
-
இலங்கையில் பிறந்த முன்னாள் கனேடிய நாடாளுமன்ற உறுப்பினரான, ராதிகா சிற்சபைஈசன், ஸ்காபரோ-ரூஜ் ரிவர் தொகுதிக்கான இடைத்தேர்தலில், ஒன்ராரியோ லிபரல் கட்சியின் வேட்பாளராக களமிறங்கவுள்ளார். தேசிய ஜனநாயக கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான, ராதிகா சிற்சபைஈசன், ஸ்காபரோ-ரூஜ் ரிவர் தொகுதிக்கான இடைத்தேர்தலில், போட்டியிடுவதற்காக, ஒன்ராரியோ லிபரல் கட்சியிடம் வேட்புமனுப் பத்திரங்களைக் கையளித்துள்ளார். ஸ்காபரோ-ரூஜ் ரிவர் தொகுதியின் நீண்டகால நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பால்க்கிசூன் கடந்த மாதம் திடீரென பதவி விலகியதை அடுத்து நடக்கவுள்ள இடைத் தேர்தலில், போட்டியிடவே, ராதிகா சிற்சபைஈசன் வேட்புமனுவைக் கையளித்துள்ளார். எனினும், ஒன்ராரியோ லிபரல் கட்…
-
- 3 replies
- 673 views
-
-
கிளிநொச்சியின் பல்வேறு பகுதிகளிலும் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி விற்பனைகள் அதிகரித்துக் காணப்படுவதுடன் சிறுவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு உள்ளாகி வருகின்ற நிலையும் காணப்படுகின்றன. கிளிநொச்சி மாவட்டத்தின் மிகவும் பின் தங்கிய கிராமங்களில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி விற்பனைகள் அதிகரித்துக் காணப்படுகின்றன. அதாவது கிளிநொச்சி மாவட்டத்தின் ஆனைவிழுந்தான், வன்னேரிக்குளம், கல்மடுநகர், வட்டக்கச்சி, தர்மபுரம் கல்லாறு, புன்னைநீராவி, திருவையாறு, ஆகிய பகுதிகளிலும் ஊரியான், கோரக்கன்கட்டு, ஆகிய பகுதிகளிலும் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி விற்பனைகள் அதிகரித்துக் காணப்படுகின்றன. இவ்வாறு கசிப்பு உற்பத்தி விற்பனைகள் அதிகரித்துக் காணப்படுவதனால் மேற்குறித்த கிராமங்களில் பல்வேறு வகையான …
-
- 0 replies
- 299 views
-
-
வாடகைக்கு அமர்த்திய அமைப்பின் பதில் என்ன? குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- சென் ஜோன்ஸ் கல்லூரி அதிபர் இளைஞர் பெருநாள் (YOUTH FEAST-2016) நிகழ்வுகளுக்காக 5 நாட்கள் பாடசாலை வளாகத்தினை நாள் ஒன்றுக்கு முப்பதாயிரம் ரூபா வீதம் வழங்கியுள்ளதாக கல்லூரி நலன்விரும்பிகள் குற்றம் சாட்டுகின்றார்கள் அது தொடர்பில் தெரியவருவதாவது , அவ்வாறு நிகழ்வுக்காக மைதானத்தை வாடகைக்கு வழங்கியதனால் கல்லூரி வளாகத்தின் புனித தன்மை பாதிகப்பட்டுள்ளது. வகுப்பறைகளுக்கு பின்னால் தற்காலிக மலசல கூடங்கள் அமைகப்படுள்ளது. இதானல் பெரும் சுகாதார சீர்கேடுகள் ஏற்பட கூடிய அபாயம் என தெரிவிக்கின்றார்கள். கல்லூரியின் பிரதான விளையாட்டாக காணப்படும் கிரிகெட் மைதானம் இதானல் சேதமடைந்துள்ளத…
-
- 1 reply
- 331 views
-
-
'இனப்பிரச்சனைக்கு தீர்வு அறிவு பூர்வமாக இருக்க வேண்டும்':விக்னேஸ்வரன் இலங்கை இனப்பிரச்சனைக்கானத் தீர்வு அறிவு பூர்வமாக அணுகப்பட வேண்டுமேயன்றி, உணர்ச்சி பூர்வமாக அணுகப்படக் கூடாது என வட மாகாண முதலமைச்சர் இன்று தெரிவித்துள்ளார். வடமாகாண சபை முதல்வர் விக்னேஸ்வரன் உணர்ச்சி பூர்வமாக ஒரு விஷயத்தை அணுகும்போது அது பிரச்சனைகளை மேலும் அதிகரிக்கும் என விக்னேஸ்வரன் இன்று வட மாகாண சபையில் கூறினார். இலங்கையில் புதிய அரசியல் சாசனத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரமடைந்துவரும் வேளையில், பல கலந்துரையாடல்களுக்கு பிறகு தமது கருத்துக்களை வடமாகாண சபை இன்று வெளியிட்டுள்ளது. மிகவும் கடுமையான உள்நாட்டுப் போரிலிருந்து தமிழ் சமூகம் மீண்டுவ…
-
- 5 replies
- 553 views
-
-
பூசாவில் தமிழ் இளைஞருக்கு சித்திரவதை! [Friday 2016-04-22 09:00] சந்தேகத்தின் பேரில் கிளிநொச்சியில் கைது செய்யப்பட்டு பூசா தடுப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள விஜயகுமார் கேதீஸ்வரன் என்ற இளைஞரின் பெற்றோர் கொழும்பில் உள்ள மனித உரிமை ஆணைக்குழுவில் இன்று முறைப்பாடு ஒன்றை பதிவு செய்யவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி – திருவையாறை சேர்ந்த குறித்த இளைஞர் கடந்த 2014 ஆம் ஆண்டு மே மாதம் பயங்கரவாத விசாரணைப்பிரிவினரால் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டு கொழும்பு – மகசின் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்தார். கடந்த 2015 ஆண்டு நவம்பர் மாதம் 13 ஆம் திகதி விஜயகுமார் கேதீஸ்வரனுக்கு பிணை வழங்கப்பட்டது. கேதீஸ்வ…
-
- 4 replies
- 680 views
-
-
கிளிநொச்சி இரனைமடு கனகாம்பிகைகுளத்திற்கு அருகிலிருந்து விடுதலைப்புலிகளின் தயாரிப்பு எனக் கூறப்படுகின்ற ஜந்து கைக்குண்டுகளை இன்று வெள்ளிக்கிழமை இரானDவத்தினர் மீட்டுள்ளனர்.குறித்த பிரதேசத்திற்கு விறகு வெட்டச்சென்ற நபர் ஒருவரினால் கைக்குண்டுகள் அவதானிக்கப்பட்டு, இரானணுவத்தினருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து இரானணுவத்தின் குண்டு செயலிழக்கும் படைப்பிரிவினர் குறிப்பிட்ட இடத்திற்கு விரைந்து ஜந்து கைக்குண்டுகளையும் மீட்டுள்ளனர். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/131361/language/ta-IN/article.aspx
-
- 0 replies
- 260 views
-
-
தாஜுதீனின் படுகொலை : முக்கிய நபர்கள் கைதாவர் : புதிய பொலிஸ் மா அதிபர் தகவல் பிரபல றக்பி வீரர் வஸீம் தாஜுதீனின் படுகொலை விவகாரத்தில் மேலும் முக்கிய நபர்கள் கைது செய்யப்படுவர் என புதிய பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர இன்று தெரிவித்தார். புதிதாக கடமையேற்ற பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவை வரவேற்கும் நிகழ்வு பொலிஸ் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், அனைத்து பொலிஸ் அதிகாரிகளும் கப்பம் பெறுதலை நிறுத்தல், போதை பொருள் சோதனை நடவடிக்கைகளின் போது முறையாக நடந்து கொள்ளல், நற்பண்புடன் இருத்தல் ஆகிய மூன்று விடயங்களை கட்டாயம் பின்பற்றி பொலிஸின்…
-
- 0 replies
- 278 views
-
-
வடக்கு, கிழக்குக்கு சமஷ்டி கோரும் யோசனை வடமாகாண சபையில் நிறைவேற்றம் -ரொமேஸ் மதுசங்க வடக்கும் கிழக்கும் இணைந்த மாகாணத்துக்கு சமஷ்டி ஆட்சி முறைமை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை உள்ளிட்ட பல கோரிக்கைகளை அரசியலமைப்புத் திருத்தத்தில் உள்ளடக்க வேண்டும் என வட மாகாண சபையில் முன்வைக்கப்பட்ட யோசனை, இன்று வெள்ளிக்கிழமை (22) ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் இந்த யோசனை, சபையில் முன்வைக்கப்பட்டது. இந்த யோசனையைத் தயாரிப்பதற்காக, வட மாகாணசபையினால் விசேட குழுவொன்றும் நியமிக்கப்பட்டிருந்தது. இக்குழு, வடக்கின் பல பிரதேசங்களுக்கும் செய்து பொதுமக்களின் கருத்துக்களைக் கேட்டறிந்தே, மேற்படி யோசனையைத் தயாரித்திருந்தது. …
-
- 0 replies
- 331 views
-
-
சுற்றுலா பஸ் மீது தாக்குதல் -சொர்ணகுமார் சொரூபன் அரியாலை கனகலிங்கம் வீதியில் வீடு ஒன்றை வாடகைக்கு பெற்று தங்கியிருந்த தென்னிலங்கை சுற்றுலா பயணிகளின் வருகைதந்த பஸ் மீது வியாழக்கிழமை (21) இரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது என யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர். வீட்டின் வெளிப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் மீது இனந்தெரியாதோர் இத்தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். - See more at: http://www.tamilmirror.lk/170486#sthash.b5itoZu6.dpuf
-
- 9 replies
- 871 views
-
-
32 கிலோ கேரள கஞ்சா மன்னாரில் சிக்கியது! [Friday 2016-04-22 09:00] தலைமன்னார்- மேற்கு சிலுவை நகர் பகுதியில் 32 கிலோ கிராம் கேரளா கஞ்சா பொதியுடன் நேற்று ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தலைமன்னார் பொலிஸார் தெரிவித்தனர். இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்ட கேரளா கஞ்சாப்பொதிகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இவை மீட்கப்பட்டன. மீட்கப்பட்ட கேரளா கஞ்சாவின் பெறுமதி 32 இலட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=155969&category=TamilNews&language=tamil
-
- 1 reply
- 1.5k views
-