ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142782 topics in this forum
-
இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள மண்டபம் அகதிகள் முகாமில் தங்கியிருந்த ஒன்பது இலங்கையர்கள் நெடுந்தீவை வந்தடைந்தனர். திருகோணமலை, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சிறுவர்கள் உட்பட ஒன்பது பேரே நெடுந்தீவுக்கு நாட்டுப்படகில் வந்துள்ளனர். இவர்கள் தொடர்பில் தகவல் அறிந்த நெடுந்தீவு பொலிஸார், அந்த 9 பேரையும் தனியார் ஒருவரின் வீட்டில் தங்கவைத்துள்ளனர். பின்னர், இவர்களுக்கு நெடுந்தீவு வைத்தியசாலையில் முதலுதவி மற்றும் உடல் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/198316
-
- 0 replies
- 454 views
- 1 follower
-
-
சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க, ரக்பிவீரர் வாசிம் தாஜூதீன் படுகொலைகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வேன் என ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க உறுதியளித்துள்ளார். லசந்த விக்கிரமதுங்க, வாசிம் தாஜூதீன், பிரகீத் எக்னலிகொட விவகாரங்கள் குறித்து விசாரணை செய்து அதற்கு காரணமானவர்களை அரசாங்கம் நீதியின் முன் நிறுத்தும் என அவர் தெரிவித்துள்ளார். தம்புள்ளையில் தேர்தல் பேரணியில் உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ள அவர் அரசியல் அதிகாரம் படைத்தவர்களால் அப்பாவி மக்கள் கொல்லப்படும் யுகத்தை முடிவிற்கு கொண்டுவருவோம் என தெரிவித்துள்ளார். அனைவரினதும் உயிர்களும் பெறுமதியானவை என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/198303
-
- 0 replies
- 476 views
- 1 follower
-
-
(லியோ நிரோஷ தர்ஷன்) இலங்கையும் இந்தியாவும் வரலாற்று நாகரிகத்தின் இரட்டையர்களாகும். இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால பிணைப்புகள் இராஜதந்திர உறவுகளுக்கு அப்பாற்பட்டதுடன் ஆழமான கலாசார மற்றும் மூலோபாய இணைப்பிலும் கவனம் செலுத்துவதாக தெரிவித்த உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, இரு நாடுகளும் பரஸ்பர மரியாதை மற்றும் கலாசார பாரம்பரியத்தைப் பகிர்ந்துகொள்வதில் வேரூன்றிய தனித்துவமான சகோதரத்துவத்தை கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். தெற்காசிய சுற்றுலா தலைமைத்துவ மன்றத்தின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், 2023ஆம் ஆண்டில், இலங்கைக்…
-
- 0 replies
- 184 views
- 1 follower
-
-
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) இதனை மாவீரர் துயிலுமில்லமாக நினைக்காவிடினும் ஒரு சுடுகாடாக நினைத்து விடுவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பொன். சுதன் வேண்டுகோள் விடுத்துள்ளார். நேற்று (9.11.2024) மாலை கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார். இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “இங்குதான் ஆயிரக்கணக்கான மாவீரர்களுடைய வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது. அதில் எனது சகோதரரும் ஒருவர். எம்மை பொறுத்தவரை இது துயிலுமில்லம் ஒரு சிலரை பொறுத்தவரை இது சுடுகாடு. அஞ்சலிக்க முடியாத நிலை பிணங்கள் குவிக்கப்பட்ட இடத்தில் குடியிருப்ப…
-
- 0 replies
- 356 views
- 1 follower
-
-
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்குங்கள்; சுயேட்சை குழு 4 அறிவிப்பு! தேர்தல் தொகுதியில் சுயேட்சை குழு 4 இலாம்பு சின்னத்தில் போட்டியிடும் கட்சியின் முதன்மை வேட்பாளர் சிறிபாலன் ஜென்சி ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் வேட்பாளர் செல்வம் அடைக்கலநாதனுக்கு ஆதரவு தெரிவிப்பதாக தெரிவித்தார். மன்னாரில் இன்று (08) மதியம் ரெலோ அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த பாராளுமன்ற தேர்தலில் பல சுயேட்சை குழுக்கள் போட்டியிடுகின்றன. அந்த சுயேட்சை குழுக்களின் நோக்கம் தமிழ் மக்களின் வாக்குகளை பிரித்து தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை …
-
- 0 replies
- 100 views
-
-
ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸின் பல விமானங்கள் இரத்து! பல விமானங்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இலங்கையின் உள்நாட்டு தேசிய விமான நிறுவமான, ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸின் பல விமான சேவைகள் அண்மைய நாட்களில் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறெனினும் விமானத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்களை சீர் செய்வதற்கு தமது குழுக்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், வழக்கமான விமான பயண அட்டவணையை விரைந்து மீட்டெடுக்கும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் விமான நிறுவனம் கூறியுள்ளது. பயணிகளின் பாதுகாப்பினை கருத்திற் கொண்டு இவ்வாறு விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டன. இதனால், பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு உணவு மற்றும் ஹோட்டல் தங்குமிட வசதிகள் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டு…
-
- 1 reply
- 238 views
-
-
தேர்தல் தினத்தன்று இலங்கை வரும் நாணய நிதிய குழு (லியோ நிரோஷ தர்ஷன்) 17ஆவது பாராளுமன்றத்திற்கான வாக்கெடுப்பு வியாழக்கிழமை இடம்பெறவுள்ள நிலையில், அன்றைய தினம் சர்வதேச நாணய நிதியத்தின் உயரிய குழு இலங்கைக்கு விஜயம் செய்கிறது. இந்த விஜயத்தின் போது அடுத்த கட்ட கடன் வசதி குறித்து அரச தரப்பினருடன் கலந்துரையாடப்பட உள்ளது. குறிப்பாக நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தின் சமகால மற்றும் எதிர்கால இலக்குகள் தொடர்பில் அரசாங்கத்தின் ஈடுப்பாடுகளையும் கொழும்பு விஜயத்தின் போது நாணய நிதிய குழு அவதானத்திற்கு உட்படுத்த உள்ளது. அது மாத்திரமின்றி அரசாங்கத்தின் எதிர்கால பொருளாதார திட்ட வரைபை நாணய நிதியம் கோரியுள்ளது. வாஷிங்கடனில்…
-
- 0 replies
- 874 views
- 1 follower
-
-
அநுர குமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayaka) அதிகாரத்திற்கு வந்து ஒரு கிழமையில் இலங்கையில் வரலாற்றில் யாரும் பெற்றுக்கொள்ளாத கடன் தொகையை பெற்றுக்கொண்டுள்ளார் என்று கொழும்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் ரோசி சேனாநாயக்க (Rosy Senanayake) தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். வழங்கிய வாக்குறுதிகள் தொடர்ந்தும் தெரிவிக்கையில், ஜனாதிபதி தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க மக்களுக்கு வழங்கிய தேர்தல் வாக்குறுதிகளை நம்பியே மக்கள் அலை ஒன்று ஏற்பட்டு அநுர குமார திஸாநாயக்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்தனர். ஆனால் அரசாங்கம் அமைந்து ஒரு மாதம் கடந்துள்ள நிலையில், அரசாங்கத்தின் நடவடிக்கைகள் வேலை…
-
- 1 reply
- 442 views
- 1 follower
-
-
வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்வதாகத் தெரிவித்து பண மோசடியில் ஈடுபட்ட வவுனியாவைச் சேர்ந்த இசைக்கலைஞர்கள் மூவர் நிதிக் குற்றப் புலனாய்வுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இசைக்கலைஞர்களாகச் செயற்படும் 3 இளைஞர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும் சமயங்களில் பக்க வாத்தியக் கலைஞர் எனும் அடிப்படையில் வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்வதாகத் தெரிவித்தே தன்னிடம் பணத்தைப் பெற்றனர் என்று வவுனியாவைச் சேர்ந்த ஒருவர் முறைப்பாடு செய்திருந்தார். அந்த முறைப்பாட்டை மேற்கொண்டவர் தன்னை வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்வதாகத் தெரிவித்து அதற்காக ஒரு கோடியே 66 இலட்சம் ரூபா பணத்தை மேற்படி இசைக்கலைஞர்கள் பெற்றனர் என்றும், அந்தப் பணத்தை அந்தக் கலைஞர்களில் ஒருவரது வங்கிக்கணக்கில் தான் வைப்புச் செய்தா…
-
- 1 reply
- 792 views
- 1 follower
-
-
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா(Douglas Devananda) பொய் கூறி திரிவதாக தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் பிமல் ரத்னாயக்க(Bimal Ratnayaka) குறிப்பிட்டுள்ளார். மேலும், சுமந்திரனுக்கோ, சிறீதரனுக்கோ, டக்ளஸூக்கோ யாருக்கென்றாலும் எமது அரசாங்கத்தில் பதவிகள் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். பொய் கூறும் டக்ளஸ் தொடர்ந்தும் தெரிவிக்கையில், மக்களின் காணி மக்களுக்கே வழங்கப்பட வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு. உண்மையில் பாதுகாப்பு பிரச்சினை இல்லையென்றால் மக்களின் காணிகளை கையளிக்குமாறு நாங்கள் படைத் தளபதிகளுக்கு அறிவிக்கவுள்ளோம். அதற்காக மக்…
-
-
- 11 replies
- 547 views
- 1 follower
-
-
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 2024 பாராளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியிடப்பட்டது. கட்சியின் தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தினால் வெளியிடப்பட்ட தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டு நிகழ்வில் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன், பிரசார செயலாளர் நடராஜர் காண்டீபன், சிரேஸ்ட சட்டத்தரணி கட்சியின் உத்தியோகபூர்வ பேச்சாளர் கனகரட்ணம் சுகாஸ், சிரேஸ்ட சட்டத்தரணி மற்றும் கட்சியின் வேட்பாளர்களான திருமதி வாசுகி சுதாகர், திருமதி க.ஞானகுணேஸ்வரி, திருமதி ஜீன்சியா ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். …
-
-
- 7 replies
- 1k views
- 1 follower
-
-
பரீட்சையை முதன்மையாகக் கொண்ட கல்வித்திட்டத்திற்குப் பதில் சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்தக் கூடிய பிரஜைகளை உருவாக்கும் கல்வித்திட்டம் ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்தார். கண்டி தபால் நிலைய கேட்போர்கூடத்தில் இடம் பெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், கடந்த காலங்களில் எதுவித அடிப்படையும் அற்ற நிலையில் நண்பர்களுக்கும் னையவர்களுக்கும் அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டன. எதிர்கட்சியில் இருந்து யார் ஆதரவு தருகிறார்ளோ அவர்களுக்கு அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டன. அவ்வாறான அமைச்சுக்களுக்கு விஞ்ஞான ரீதியாக தொடர்புகள் இருக்க வில்லை. …
-
-
- 4 replies
- 372 views
- 1 follower
-
-
தமிழ் மக்கள் வீட்டு சின்னத்திற்கு வாக்களிப்பார்களாக இருந்தால் அதை விட வரலாற்று தவறு ஒன்றுமில்லை - கே.வி.தவராசா தமிழ் மக்கள் வீட்டு சின்னத்திற்கு வாக்களிப்பார்களாக இருந்தால் அதை விட வரலாற்று தவறு ஒன்றுமில்லை என ஐனாதிபதி சட்டத்தரணியும் சுயேட்சைக்குழு 14 இன் வேட்பாளருமான கே.வி.தவராசா தெரிவித்துள்ளார். யாழ் ஊடகம் ஒன்றின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “ 2009 வரை தமிழரசுக்கட்சி தந்தை செல்வாவினால் உருவாக்கப்பட்ட நோக்கத்தின் அடிப்படையிலே இருந்தது. அதன் பின்னரே இந்த மாற்றங்கள் வெளிவரத் தொடங்கின. கட்சிக்குள் எப்போதும், தன்னிச்சையாகவே முடிவெடுப்பா…
-
- 1 reply
- 472 views
-
-
அண்மையில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக சீன அரசாங்கம் 30 மில்லியன் ரூபாவை (USD 100,000) இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (22) பிற்பகல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்த இலங்கைக்கான சீனத் தூதுவர் சீ ஜென்ஹொங்( Qi Zhenhong) இந்த உதவித் தொகையை உத்தியோகபூர்வமாக ஜனாதிபதியிடம் கையளித்தார். அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசரகால நிவாரணம் வழங்குவதற்கும் வெள்ளத்தடுப்பு மற்றும் முகாமைத்துவம் தொடர்பாக எடுக்க வேண்டிய நீண்டகால உத்திகள் குறித்தும் இந்த சந்திப்பில் ஆராயப்பட்டது. மேலும், எதிர்கால வெள்ள நிலைமைகளைத் தடுப்பதற்கும், அவ்வாற…
-
-
- 19 replies
- 1.1k views
- 1 follower
-
-
இலங்கையில் பிரபலமான சுற்றுலா இடங்களை குறிவைத்து தாக்குதல்; அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை இலங்கையில் அருகம் வளைகுடா பகுதியில் உள்ள பிரபலமான சுற்றுலா இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும் என நம்பத்தகுந்த தகவல் கிடைத்துள்ளதாக அமெரிக்க பிரஜைகளுக்கு அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்; இலங்கையில் அருகம் வளைகுடா பகுதியில் உள்ள பிரபலமான சுற்றுலா இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும் என தூதரகத்திற்கு நம்பகமான தகவல் கிடைத்துள்ளது. இந்த அச்சுறுத்தலால் ஏற்பட்டுள்ள கடுமையான ஆபத்து காரணமாக, தூதரகம் உடனடியாக மற்றும் மறு அறிவித்தல் வரை அறுகம் பேக்கான பயணத் தடையை தூதரக பணியாளர்களுக்கு விதித்துள்ளது…
-
-
- 37 replies
- 2.9k views
- 1 follower
-
-
12 வீதமுள்ள முஸ்லீம்களுக்கு 2 ஆசனமா? தமிழ்மக்களே சிந்தியுங்கள் - க.சபேசன் கோரிக்கை வன்னியில் 8-12 வீதமுள்ள முஸ்லீம் மக்களுக்கு 2 பாராளுமன்ற ஆசனங்கள் கிடைக்கின்றது. 80 வீதமுள்ள தமிழ்மக்கள் காலம் காலமாக ஏமாற்றப்படும் ஒரு நிலையே காணப்படுவதாக தமிழர் விடுதலைக்கூட்டணியின் உபதலைவர் க.சபேசன் தெரிவித்தார். வவுனியாவில் இன்று சனிக்கிழமை (09) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், வன்னியில் தமிழ்மக்கள் இன்று பாரிய ஒரு பிரச்சனைக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. அது தொடர்பாக மக்களுக்காக செயற்படுகின்றோம் என்று தெரிவிக்கும் எந்த அரசியல்வாதிகளும் பேசமுன்வருவதில…
-
- 1 reply
- 155 views
- 1 follower
-
-
நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக வடக்கு மாகாணத்தை சேர்ந்த விரிவுரையாளர்கள் மற்றும் தொழில் வல்லுனர்களின் தெரிவித்துள்ளனர். யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தனர். இது தொடர்பாக கருத்து தெரிவித்த யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் செங்காரபிள்ளை அறிவழகன், இலங்கை சுதந்திரம் அடைந்த பின் தெற்காசியவில் வளமான நாடாக சுதந்திரத்தை பெற்றுக்கொண்டது. இலங்கை சுதந்திரம் அடைந்து 5 குடும்பங்கள் இலங்கையை மாறி மாறி ஆட்சி செய்து வந்துள்ளனர். அவர்கள் தங்கள் ஆட்சிக்கு வருவதற்கு இனவாதத்தை ஒரு ஆயுதமாக பயன்படுத்தி வந்துள்ளனர். நாங்கள் இலங்கையர்கள் என்ற அடையாளத்தை தொலைந்து விட்டு தமிழர்களாக, சிங்களவர்கள…
-
-
- 2 replies
- 463 views
- 1 follower
-
-
தமிழ்த் தேசியத்துக்கு மட்டுமே வாக்களியுங்கள்! தமிழ் சிவில் சமூக அமையம்! Tamil Civil Society Forum 07.11.2024 பாராளுமன்றத் தேர்தல் 2024: தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிப்பது? (14.11.2024 அன்று நடைபெறவுள்ள சிறீலங்காவுக்கான பாராளுமன்றத் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்ற முடிவை எடுப்பதில் தமிழ் மக்கள் கரிசனை கொள்ள வேண்டிய விடயங்கள் தொடர்பான தமிழ் சிவில் சமூக அமையத்தின் முன்வைப்பு) ஜனாதிபதித் தேர்தல் 2024ம் என்.பி.பி எனும் தேசிய மக்கள் சக்தியும் அதன் மூலாதாரமான ஜே.வி.பி எனும் மக்கள் விடுதலை முன்னணியும் கடந்த ஜனாதிபதி தேர்தல் வரை சிறீலங்காவுக்கான ஜனாதிபதித் தேர்தல்களில் சிங்கள மக்கள் சிங்களத் தேசியக் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியினதோ, சிறீலங்கா ச…
-
- 0 replies
- 252 views
-
-
தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு தெரிவித்துள்ள வடக்கு மாகாண விரிவுரையாளர்கள் மற்றும் தொழில் வல்லுனர்கள் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக வடக்கு மாகாணத்தை சேர்ந்த விரிவுரையாளர்கள் மற்றும் தொழில் வல்லுனர்களின் தெரிவித்துள்ளனர். யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தனர். இது தொடர்பாக கருத்து தெரிவித்த யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் செங்காரபிள்ளை அறிவழகன், இலங்கை சுதந்திரம் அடைந்த பின் தெற்காசியவில் வளமான நாடாக சுதந்திரத்தை பெற்றுக்கொண்டது. இலங்கை சுதந்திரம் அடைந்து 5 குடும்பங்கள் இலங்கையை மாறி மாறி ஆட்சி செய்து வந்துள்ளனர். …
-
- 0 replies
- 144 views
-
-
கொழும்பு மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவம் கேள்விக்குறி எதிர்வரும் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள 10 ஆவது பாராளுமன்றத்திற்கான தேர்தலில் கொழும்பு மாவட்டத்தின் தமிழ் பிரதிநிதித்துவம் கேள்விக்குறியாகியுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர் 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத்திற்கான தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் 19 ஆசனங்களுக்காக 16 அரசியல் கட்சிகள், 26 சுயேச்சைக் குழுக்களின் சார்பாக 924 வேட்பாளர்கள் போட்டி யிட்ட நிலையில் பொதுஜன பெரமுன 12 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சக்தி 6 ஆசனங்களையும் தேசிய மக்கள் சக்தி 1 ஆசனத்தையும் கைப்பற்றியிருந்தன. இதில் பொதுஜன பெரமுன ,தேசிய மக்கள் சக்தியில் எந்தவொரு தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகளும் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்ப…
-
- 1 reply
- 266 views
-
-
தமிழ் மக்கள் பேரம் பேசும் சக்தியாக மாற வேண்டும்- இரா.சாணக்கியன் தற்போது மாற்றத்திற்கான காலம் வந்திருக்கின்றது நாங்கள் மாற்றத்தை உருவாக்கக்கூடிய வாய்ப்பு ஒன்று வந்திருக்கிறது. ஏனெனில் நாட்டில் ஆட்சி மாற்றம் நடைபெற்று இருக்கின்றது. இனவாறான செயற்பாடுகளை முன்னெடுத்திருந்த ஜனாதிபதி அவர்கள் வீட்டுக்கு செல்ல வேண்டிய நிலைமை வந்திருக்கிறது. அவருடன் சேர்ந்து குழுவினராக செயல்பட்ட ராஜபக்ச குடும்பத்தினரும் வீட்டுக்கு செல்ல வேண்டி என் நிலைமை ஏற்பட்டுள்ளது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற வேட்பாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமன இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். களுதாவளையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெர…
-
-
- 7 replies
- 671 views
-
-
வவுனியா, வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலய விவகாரம் தொடர்பில் குறித்த ஆலயத்தின் முன்னாள் உறுப்பினர்கள் இருவரை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் (TID) விசாரணைக்கு அழைத்துள்ளனர். வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் முன்னாள் தலைவர் சசிகுமார் மற்றும் முன்னாள் செயலாளர் தமிழ்ச்செல்வன் ஆகியோரை 2024 நவம்பர் 9 ஆம் திகதி சனிக்கிழமை வவுனியாவில் உள்ள பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது, முன்னாள் போராளியான சசிகுமாரின் அனைத்து புனர்வாழ்வு ஆவணங்களையும் விசாரணைக்கு கொண்டு வருமாறு பயங்கரவாத தடுப்பு புலனாய்வு திணைக்களத்தினால் தொலைபேசி அழைப்பு மூலம் அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். https://thi…
-
- 0 replies
- 116 views
- 1 follower
-
-
08 OCT, 2024 | 11:08 AM இவ்வருடத்தின் ஆகஸ்ட் மாதம் 1 ஆம் திகதியிலிருந்து செப்டெம்பர் மாதம் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் இணையவழி குற்றங்கள் தொடர்பில் 9 ஆயிரம் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு தெரிவித்துள்ளது. இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழுவின் பொறியியலாளர் சாருக தமுனுபொல இது தொடர்பில் தெரிவிக்கையில், 80 சதவீதமான முறைப்பாடுகள் சமூக ஊடகங்களுடன் தொடர்புடையவவை ஆகும். அதன்படி, இணையவழி மோசடி தொடர்பில் 1,400 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், 85 முறைப்பாடுகள் சிறுவர்கள் மீதான இணைய அச்சுறுத்தல்களுடன் தொடர்புடையவை என்பதுடன், 40 முறைப்பாடுகள் பாலியல் துஷ்பிரயோகங…
-
-
- 12 replies
- 444 views
- 1 follower
-
-
கிழக்கை மண்ணை காப்பாற்றுவதற்காக மக்களுடன் இனைந்து கடந்த 15 வருடமாக போராடிவருகின்றோம். எனவே கிழக்கு மாகாணத்தை காப்பாற்ற வேண்டுமாக இருந்தால் வடக்கில் இருக்கின்ற தமிழ் மக்கள் சைக்கிளுக்கு வாக்களிக்க வேண்டும். அப்போது தான் கிழக்கை காப்பாற்ற முடியும் என இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் கட்சியின் தேசிய அமைப்பாள் தர்மலிங்கம் சுரேஸ் கிழக்கு மண்ணிலிருந்து அறைகூவல் விடுத்துள்ளார். மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை சந்தியில் புதன்கிழமை(06) மாலை சைக்கிள் சின்னதில் தேர்தல் பிரச்சாரத்துக்கான கட்சி காரியாலயம் திறந்துவைத்து உரையாற்றுகையில் அவர் இவ்வாறு அறைகூவல் விடுத்தார். இந்த தேர்தலை…
-
-
- 14 replies
- 935 views
- 1 follower
-
-
கொழும்பு உட்பட தீவின் பல நகரங்களில் காற்றின் தரக் குறியீடு "சற்று ஆரோக்கியமற்ற நிலையை" எட்டியுள்ளது. இதன் விளைவாக, சுவாசிப்பதில் சிலர் சிரமங்களை சந்தித்தால் அவர்கள் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும் என்று தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் கூறியது. காற்றின் தரமானது இன்று வியாழக்கிழமை (7) கொழும்பு மற்றும் கண்டி நகரங்களின் காற்றின் தரச் சுட்டெண் 122 முதல் 130 வரையிலும், குருநாகலில் 118 முதல் 126 வரையிலும் இருந்தது. மேலும், கண்டி, கேகாலை, இரத்தினபுரி, எம்பிலிப்பிட்டிய, பதுளை, மட்டக்களப்பு, களுத்துறை, அம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை ஆகிய நகரங்களில் நிலைமை சுட்டெண் சற்று சாதகமற்ற மட்டத்திற்கு உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.v…
-
-
- 11 replies
- 662 views
- 1 follower
-