ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143496 topics in this forum
-
மைத்திரியின் 'மகப்பேறு' சுகமாக அமையுமா? ப.தெய்வீகன் நல்லாட்சி அரசு பதவியேற்று எதிர்வரும் எட்டாம் திகதியோடு ஒருவருடமாகிறது. கடந்த ஒரு வருடத்தில் நாடு கடந்துவந்த பாதை எத்தகையது என்பதை நாட்டு மக்கள் நன்றாகவே அறிவர். சிங்கள ஆட்சி இயந்திர மாற்றம் எனப்படுவது, தமிழ் மக்களைப் பொறுத்தவரை 'கொழுக்கட்டை போய், மோதகம் வந்த கதை' போன்றதுதான் என்றாலும், மைத்திரியின் ஆட்சியை வழக்கமான சம்பிரதாய மாற்றமாக பாராது, மஹிந்த ஆட்சியுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் மாத்திரமே கடந்த ஒரு வருட காலத்தின் உண்மையான பரிமாணம் குறித்து ஆழமாக விளங்கிக்கொள்ள முடிகிறது. இந்த ஒருவருட முடிவில் நாடாளுமன்றத்தை அரசமைப்பு அதிகார அவையாக மாற்றுவதற்கான யோசனையை முன்வைப்பதற்கு, நாட்டின் ஜனாதி…
-
- 0 replies
- 680 views
-
-
பொங்கலுக்கு பின்னரே மாற்றம்; தொண்டா, டக்ளஸூக்கு அமைச்சுப் பதவிகள் பொங்கலுக்குப் பின்னர் அமைச்சரவையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படக்கூடும் என்று, தகவல்கள் கசிந்துள்ளன. அதன்போது, தற்போதிருக்கின்ற அமைச்சர்கள் பலரின் அமைச்சுப் பதவிகளில் மாற்றங்கள் ஏற்படும் என்று அறியமுடிகின்றது. அதற்கு அப்பால், நாடாளுமன்றத்தில் எதிரணியில் இருந்துகொண்டு, 2016ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியவற்றுக்கும் இரண்டு அமைச்சுகள் கிடைக்கவிருக்கின்றன என்றும், அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமானுக்கு கால்நடைகள் அபி…
-
- 0 replies
- 414 views
-
-
நியாயமான அரசியல் தீர்வு கிடைக்க வேண்டும் : எதிர்கட்சித் தலைவர் நியாயமானதும் ஏற்றுக் கொள்ளக்கூடியதும் நடைமுறை சாத்தியமானதுமான அரசியல் தீர்வொன்று எட்டப்பட வேண்டியதன் அவசியம் குறித்து, பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டோனி பிளேயருக்கு எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெளிவுபடுத்தியுள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள டோனி பிளேயரை நேற்று கொழும்பில் சந்தித்து கலந்துரையாடிய போது சம்பந்தன் இதனை தெரிவித்ததாக, எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், வடக்கில் அசாதாரணமான இராணுவ பிரசன்னம், காணிப்பிரச்சினை, காணாமல் போனோர் தொடர்பான விசாரணை மற்றும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை உள்ளிட்…
-
- 0 replies
- 408 views
-
-
இலங்கை- இந்தியா இடையே பாலம் அமைக்கும் திட்டம் நிராகரிப்பு! [Thursday 2015-12-31 07:00] இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையில் இராமர் பாலத்தை அமைப்பது தொடர்பில் இலங்கை அரசாங்கத்திடம் எதுவித கோரிக்கையும் விடுக்கப்படவில்லை. அவ்வாறானதொரு பாலத்தை அமைக்க வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு இல்லை என்று அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார். பத்தரமுல்லையிலுள்ள அமைச்சில் நேற்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைக் கூறினார். நேற்றுமுன்தினம் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்து வெளியிட்டிருந்த உதய கம்பன்பில, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் இராமர் பாலத்தை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவி…
-
- 19 replies
- 1.3k views
-
-
[ திங்கட்கிழமை, 04 சனவரி 2016, 01:02.08 PM GMT ] பிரித்தானிய முன்னாள் பிரதமர் டோனி பிளயர் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர் சம்பந்தனை சந்தித்து உரையாடினார். இந்த சந்திப்பு கொழும்பில் இடம்பெற்றது. இதன்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட யோசனை மீள்குடியேற்றம், பொறுப்புக்கூறல், அரசியல் தீர்வு மற்றும் காணாமல் போனோர் தொடர்பான பிரச்சினை என்பன தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக கூட்டமைப்பின் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொழும்பில் இடம்பெற்ற பொருளாதார அமர்வு ஒன்றில் பங்கேற்கும் நோக்கில் பிளயர் இலங்கை வந்துள்ளார் இந்தநிலையில் இலங்கை இனப்பிரச்சினை தொடர்பில் பிளயர் முக்கிய சமாதான ஏற்படுத்துனராக செயற்படுவார் என்ற தக…
-
- 8 replies
- 746 views
-
-
வாயில்களில் 'சிங்களே' நுகேகொடையிலுள்ள பல முஸ்லிம் நபர்களது வீடுகளின் சுவர்களிலும் பிரதான வாயில்களிலும் 'சிங்களே' என்று சிங்களத்தில் எழுதப்பட்டுள்ளது. இது இனந்தெரியாத நபர்களால் நேற்று சனிக்கிழமை (02) இரவு எழுதப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. - See more at: http://www.tamilmirror.lk/162918/%E0%AE%B5-%E0%AE%AF-%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%B2-%E0%AE%9A-%E0%AE%99-%E0%AE%95%E0%AE%B3-#sthash.fPQ15DJL.dpuf
-
- 5 replies
- 1.1k views
-
-
யாழில் 4 நாளில் 35 பேருக்கு டெங்கு யாழில் கடந்த நான்கு நாட்களில் டெங்கு நோய் தாக்கத்திற்கு உள்ளாகி 35 சிகிச்சை பெற்றுள்ளதாக யாழ்.போதனா வைத்திய சாலை வட்டார புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2015 ஆம் ஆண்டு 1309 பேர் இந்த நோயின் தாக்குத்துக்குள்ளாகியிருந்து, அவர்களில் இரண்டு பேர் உயிரிழந்திருந்தனர். 2014 ஆம் ஆண்டு 1339 பேர் நோயின் தாக்கத்துக்குள்ளாகியிருந்து ஒருவர் உயிரிழந்திருந்தார். 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அதிகமான நோயாளர்கள் (357 நோயாளர்கள்) இனங்காணப்பட்டுள்ளனர். 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அதிகளவான நோயாளர்கள் (348 நோயாளர்கள்) இனங்காணப்பட்டுள்ளனர் என அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. http://globaltamilnews.net/GTMNEditorial/tabid…
-
- 0 replies
- 437 views
-
-
வடக்கு முதல்வருக்கு துணையாக களம் இறங்கும் முன்னாள் சட்ட மா அதிபர்! [Saturday 2016-01-02 08:00] அரசியல் தீர்வு சம்பந்தமாக ஆராய்வதற்கான தமிழ் மக்கள் பேரவையின் உப குழுவில் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் சார்பாக இலங்கையின் முன்னாள் சட்ட மா அதிபரும் விடுதலைப்புலிகளின் அரசியல் விவகார குழுவின் உறுப்பினராக பணியாற்றியவருமான சிவா பசுபதி நியமிக்கப்படுவார் என்று நம்பகமாக அறியவருகிறது. தமிழ் மக்கள் பேரவையின் 2 ஆவது கூட்டம் கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றபோது அரசியல் தீர்வு சம்பந்தமாக ஆராயும்பொருட்டு அமைக்கப்பட்ட உபகுழுவில் 15 பேர் இடம்பெறுவர் என்றும் அதில் இருவர் வட மாகாண முதலமைச்சர் சார்பாக நியமிக்கப்படுவர் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. அரசியல் கட்சிகள் சார்பாக …
-
- 25 replies
- 1.5k views
-
-
பேரவையின் உபகுழுவில் பங்கேற்க இன்று யாழ். வருகிறார் சிவா பசுபதி! [Sunday 2016-01-03 09:00] புதிய அரசியல் யாப்புக்கான யோசனைகளை முன்வைப்பதற்கான தமிழ் மக்கள் பேரவையின் உப குழுவில் முன்னாள் சட்டமா அதிபர் சிவா பசுபதி இடம்பெறவுள்ளார். இதற்கான அங்கீகாரத்தை பேரவை வழங்கியுள்ளது. பேரவையின் முதலாவது கன்னி அமர்வு நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றபோது சிவா பசுபதியை சேர்ப்பதற்கான அங்கீகாரம் பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய அரசியல் யாப்புக்கான யோசனைகளை முன்வைப்பதற்கான தமிழ் மக்கள் பேரவையின் உப குழுவில் முன்னாள் சட்டமா அதிபர் சிவா பசுபதி இடம்பெறவுள்ளார். இதற்கான அங்கீகாரத்தை பேரவை வழங்கியுள்ளது. பேரவையின் முதலாவது கன்னி அமர்வு நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றபோது …
-
- 1 reply
- 611 views
-
-
முல்லைத்தீவு மீனவரின் படகின் மீது இந்திய இழுவைப் படகு மோதியது' சம்பவத்தை அடுத்து அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இந்திய இழுவைப் படகு ஒன்றை அதில் இருந்த 8 இந்திய மீனவர்களுடன் உள்ளூர் மீனவர்கள் கூட்டிவந்தனர் முல்லைத்தீவு கடற்பரப்பில் கரையில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்த சேகர் ரஞ்சித் என்ற உள்ளுர் மீனவரின் படகை கூட்டமாக அந்தப் பகுதிக்குள் வந்த இந்திய மீனவர்களின் இழுவைப்படகுகளில் ஒன்று மோதியதில் படகு சேதமடைந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. படகு சேதமடைந்ததையடுத்து கடலில் வீழ்ந்த தன்னையும் தன்னுடன் இருந்த இன்னொரு மீனவ தொழிலாளியையும் அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த உள்ளுர் மீனவர்கள் காப்பாற்றி கரைக்கு கூட்டி வ…
-
- 0 replies
- 572 views
-
-
கூட்டமைப்பின் பிற்போக்கு நிலைப்பாட்டை மாற்றினால் இணைவேன் 'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொண்டுள்ள பிற்போக்கு நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டால், முஸ்லிம் கட்சிகளுடன் இணைந்து செயற்படும் கூட்டமைப்பின் அரசியல் பரப்பில் நமது தமிழ் முற்போக்குக் கூட்டணியும், பொது நிலைப்பாட்டை முன்வைத்து இணைந்து செயற்படலாம்' என, தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தனது பேஸ்புக் கணக்கில், இது தொடர்பில் கருத்தொன்றை பதிவேற்றம் செய்துள்ள அவர், அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, 'தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஒரு பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்தி, தமிழ் முற்போக்குக் கூட்டணி செயற்பட வேண்டும…
-
- 2 replies
- 562 views
-
-
மட்டக்களப்பு போராளிகளை உலகம் முளுக்க சென்று விமர்சனம் செய்ததின் விழைவுதான் பரராசசிங்கம் கொலை. முரளி விநா முகப்புத்தகத்திலிருந்து யோசப்பரராசசிங்கம் மட்டுமல்ல நாம் பிரிந்த பிற்பாடு இந்த கலாச்சாரத்தை தொடக்கியவர்வள் புலிகள் ராஜன் சத்தியமூர்தியை சாப்பிட்டு கொண்டிருக்கும் போது இரக்கம் இல்லாமல் சுட்டு கொண்டார்கள் அவரின் முகம் சாப்பாட்டு பிளேட்டில் சாய்ந்து கிடந்தது இதையபோல் எதுவித தவறும் செய்யாத அப்பாவி கிங்சிலிராசநாயகதை புலிகள் கொண்டார்கள் இதற்கெல்லாம் யார் அஞ்சலி செலுத்தப்போகின்றீர்கள் அன்று யோசப்பரராசசிங்கம் அமைதியாக இருந்திருந்தால் இன்று உயிர்வாழ்திருக்கலாம் புலிகள் உலகத்தையே வென்று விடுவார்கள் என்ற நம்பிக்கையில் பிரிந்த மட்டக்களப்பு போராளிகளை உலகம் முளுக்க சென்று விம…
-
- 9 replies
- 1.1k views
-
-
பாக். பிரதமர் வந்தடைந்தார்... பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபின், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக சற்றுமுன்னர் வந்தடைந்தார். அவரை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினர் வரவேற்றனர்.(படங்கள்: பிரதீப் பத்திரண) - See more at: http://www.tamilmirror.lk/163021/%E0%AE%AA-%E0%AE%95-%E0%AE%AA-%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%A8-%E0%AE%A4%E0%AE%9F-%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%B0-#sthash.fk39wJMI.dpuf
-
- 0 replies
- 300 views
-
-
தமிழருக்கான சகல உரிமைகளும் இவ்வருடத்துக்குள் கிடைக்கப்பெறும் : பிரதமர் உறுதிபடத் தெரிவிப்பு போரில் பாதிக்கப்பட்ட அப்பாவி தமிழ் மக்களுக்கு இவ் வருடத்துக்குள் சகல உரிமைகளையும் வழங்குவதோடு இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் சகல காணிகளையும் விடுவித்து மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்துவோம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது விசேட உரையில் தெரிவித்துள்ளார். அலரிமாளிகையில் இன்று காலை விசேட உரை நிகழ்த்திய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவிக்கையில், இவ்வருட இறுதிக்குள் போரில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு சகல உரிமைகளும் வழங்கப்படும். ஏனைய சமூகத்துக்கு நிகரான வாழ்க்கையை ஏற்படுத்துவோம். இந…
-
- 0 replies
- 365 views
-
-
உயர்தரப் பரீ்ட்சையின் யாழ்.மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவர்கள் விபரம் கா.பொ.த உயர்தரப்பரீடசை பெறுபேறுகள் நேற்று நள்ளிரவு வெளியாகியுள்ள நிலையில் யாழ் மாவட்ட மட்டத்தில் முதல் இடம் பெற்றுள்ள மாணவர்களின் விவரம் வருமாறு. உயிரியல் பிரிவில் யாழ். இந்துக்கல்லூரி மாணவன் ஆனந்தராஜா ஹரிசங்கர் 3ஏ சித்தி பெற்று மாவட்ட மட்டத்தில் முதலிடத்தையும் தேசிய மட்டத்தில் 24ஆவது இடத்தையும் பெற்றுள்ளார். கணிதப்பிரிவில் நெல்லியடி மத்திய கல்லூரி மாணவன் கலாமணி மதனாகரன் 3ஏ சித்தி பெற்று மாவட்ட மட்டத்தில் முதல் இடத்தையும் தேசிய மட்டத்தில் 22ஆவது இடத்தையும் பெற்றுள்ளார். வர்த்தக பரிவில் கொக்குவில் இந்துக்கல்லூரி மாணவன் மாணிக்கவாசகர் லஜீபன் 3ஏ பெற…
-
- 10 replies
- 3.1k views
-
-
பெரும்பான்மை இனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பெரிய கட்சிகள் ஒன்றுபடுகின்றபோது சிறுபான்மையினரைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற சிறுபான்மை இனங்களின் கட்சிகள் பிளவுபடுவது ஆபத்தானது என முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலமுகா வின் தற்போதைய தவிசாளருமான பஷீர் சேகுதாவூத் தெரிவித்தார். முன்னாள் செனட்டர் மசூர் மௌலானாவின் நினைவுகூரல் நிகழ்வில் “சம கால அரசியல்” எனும் தலைப்பில் உரையாற்றும்போது அவர் இதனைத் தெரிவித்தார். ஏறாவூர் அஷ்ரப் நற்பணி மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு ஸ்ரீலமுகா கட்சியின் ஏறாவூர்க் கிளைக் கொள்கை பரப்புச் செயலாளர் யூ.எல். முஹைதீன்பாவா தலைமையில் ஏறாவூர் வாவிக்கரையோரப் பூங்காவில் நேற்று இரவு இடம்பெற்றது. அங்கு தொடர…
-
- 0 replies
- 346 views
-
-
இந்திய வெளிவிவகார செயலாளர் ஜெய்சங்கர் எதிர்வரும் 10 ஆம் திகதி உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வருகின்றார். இலங்கை - இந்திய கூட்டு ஆணைக்குழுவின் நடவடிக்கைகளை ஆராயும் நோக்கிலும் அதற்கான ஏற்பாடுகளை பார்வையிடும் வகையிலுமே இந்திய வெளிவிவகார செயலாளர் ஜெய்சங்கர் வார இறுதியில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். எதிர்வரும் பெப்ரவரி மாதம் இலங்கையில் இடம்பெறவுள்ள இலங்கை - இந்திய கூட்டு ஆணைக்குழுவின் சந்திப்பில் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட இந்திய உயர் மட்ட குழு கலந்துகொள்ளவுள்ள நிலையில் அது தொடர்பான ஏற்பாடுகளையும் இந்திய வெளியுறவு செயலர் தனது விஜயத்தின்போது ஆராயவுள்ளார். அந்தவகையில் 10 ஆம் திகதியளவில் இலங்கைக்கு விஜ…
-
- 0 replies
- 464 views
-
-
இலங்கையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு பிரித்தானியாவின் பொதுநலவாயத்துக்கான வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ஹிகோ ஸ்வயர் வார இறுதியில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளார். இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் பிரித்தானிய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ஆளும் மற்றும் எதிர்கட்சியை சந்திக்க உள்ளதுடன் வடக்கிற்கும் விஜயம் செய்ய உள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தின் ஓராண்டு பூர்த்தியாகின்ற நிலையில் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் விவகாரங்களில் இலங்கை கண்டுள்ள முன்னேற்றங்கள் குறித்தும் இதன்போது ஆராயப்படவுள்ளது. அத்துடன் கடந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உறுதி மொழ…
-
- 0 replies
- 333 views
-
-
சிங்கள பௌத்தர்களுக்குள்ள ஒரே நாடு இலங்கைதான் என்று குரல் கொடுப்பவர்கள் இந்த நாட்டில் நிரந்தர அமைதியும் சுதந்திரமும் நிலைப்பதற்குச் செயற்பட வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.நேற்றைய தினம் கொழும்பில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த ஜனாதிபதி புதிய அரசாங்கத்தின் வெற்றிகரமான ஒரு வருட நிறைவு தொடர்பாக கருத்துக்களைத் தெரிவித்ததுடன் அரசாங்கம் மேற்கொண்டு வரும் செயற்பாடுகள் தொடர்பிலும் ஊடகவியலாளர்களுக்கு விளக்கினார். நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்காமல் நாடு சுதந்திரமாகவும் ஜனநாயக ரீதியிலும் பாதுகாக்கப்பட வேண்டுமானால் சிறுபான்மையினரின் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு அவர்களது உரிமைகளும் பாதுகாக்கப்படுவது முக்கியம் என்றும் ஜனாதிபதி தெரிவித…
-
- 0 replies
- 362 views
-
-
இணைய மோசடி காரணமாக இலங்கையின் பல வர்த்தகபிரமுகர்கள் பல பில்லியன் ரூபாய்களை இழந்துள்ளனர் இணையத்தை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட மோசடி காரணமாக ஏற்றுமதி இறக்குமதியில் ஈடுபட்டுள்ள இலங்கையின் முக்கிய வர்த்தகபிரமுகர்கள் பலர் பல பில்லியன் ரூபாய்களை இழந்துள்ளனர் என பொலிஸார் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர இனந்தெரியாத குழுவொன்று 12 பிரபலவர்த்தகர்களிடமிருந்து சுமார் 140 மில்லியனிற்கு மேல் மோசடிசெய்துள்ளது,இந்த குழுவினர் குறிப்பிட்ட வர்த்தகர்களின் நிதிமற்றும் வர்த்தக நடவடிக்கைகள் குறித்த விபரங்களை அறிவதற்காக அவர்களின் மின்னஞ்சல்கள்,மற்றும் கணணிகளிற்குள் ஊருடுவியுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறான நிதி மோசடி தொடர்பில் எங்களிற்கு 12 முறைப்பாடுக…
-
- 0 replies
- 366 views
-
-
இஸ்லாம் விதித்துள்ள தடையையும் மீறி நவாஸ் செரீப் தலதா மாளிகைக்கு செல்லவுள்ளார் இஸ்லாம் விதித்துள்ள தடையையும் மீறி பாக்கிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப் தனது இலங்கை பயணத்தின் போது கண்டி தலதா மாளிகைக்கு செல்லவுள்ளார். இது குறித்து இந்திய ஆங்கில நாளிதழ் மேலும் தெரிவித்துள்ளதாவது. காலமாற்றத்திற்கு ஏற்ப இஸ்லாமிய பாக்கிஸ்தானிற்கு புதிய வடிவத்தை கொடுக்கும் வகையில் பாக்கிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப் தனது இலங்கை விஜயத்தின்போது கண்டி தலதா மாளிகைக்கும் விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இஸ்லாம் விதித்துள்ள தடையையும் மீறி பாக்கிஸ்தான் பிரதமர் தனது இலங்கை விஜயத்தின்போது கண்டி தலதா மாளிகைக்கு செல்ல உள்ளமை குறிப்பிடத்தக்கது. 2010 ம் டிசம்பர் மாதத்திலேயே இவ்வாறான முயற்சிக…
-
- 0 replies
- 388 views
-
-
போர்க்குற்ற விசாரணைக்கான சிறப்பு நீதிமன்றம் அவசரமாக அமைக்கப்படாது! - மைத்திரிபால சிறிசேன [Monday 2016-01-04 07:00] மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைக்கான சிறப்பு நீதிமன்றத்தை அமைக்கும் விடயத்தில் அரசாங்கம் அவசரமான நடவடிக்கைகளில் ஈடுபடாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். த ஹிந்துவுக்கு நேற்று வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைக்கான சிறப்பு நீதிமன்றத்தை அமைக்கும் விடயத்தில் அரசாங்கம் அவசரமான நடவடிக்கைகளில் ஈடுபடாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். த ஹிந்துவுக்கு நேற்று வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். முதலில் போரில் என்ன ந…
-
- 1 reply
- 442 views
- 1 follower
-
-
அரசியலமைப்புத் திருத்தம்: மக்கள் கைகளில் முடிவு சந்துன் ஏ. ஜயசேகர புதிய அரசியலமைப்பொன்று வேண்டுமா அல்லது நிறைவேற்று அதிகாரமுள்ள பிரதமர் பதவி, நியமன ரீதியான நாட்டுத் தலைவர் பதவி கொண்ட அரசியலமைப்புத் திருத்தங்கள் வேண்டுமா என்பதைத் தீர்மானிப்பதற்கான வாய்ப்பு, பொதுமக்களுக்கு வழங்கப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். அவரது வாசஸ்தலத்தில் ஊடகவியலாளர்களை நேற்று சந்தித்து உரையாற்றிய ஜனாதிபதி, 'எதிர்வரும் 9ஆம் திகதி நாடாளுமன்றம் அரசியலமைப்பு பேரவையாக கூடிய பின்னர், இந்த வாய்ப்பு மக்களிடமே வழங்கப்படும்' என்றும் குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி, இலங்கையைச் சிங்கள தேசமாகப் பாதுகாப்பதற்கு, சிறுபான்மையினரி…
-
- 1 reply
- 497 views
- 1 follower
-
-
Published on January 2, 2016-10:48 pm · வடமாகாண முதலமைச்சரும் நீதியரசருமான சி.வி.விக்னேஸ்ரவன் அவர்களை இணைத்தலைவராக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் பேரவையின் பணிகளில் முக்கியமான ஒன்று கடந்த காலத்தில் தமிழ் மக்களை படுகொலை செய்தவர்களை சர்வதேச நீதியாளர்களின் முன் நிறுத்துவது என அறிவிக்கப்பட்டுள்ளது. இறுதிக்கட்ட போரில் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட படுகொலைகள் மட்டுமன்றி அதற்கு முற்பட்ட காலத்தில் கல்விமான்கள், பிரஜைகள் குழுக்களின் தலைவர்கள் என பலரை சிறிலங்கா இராணுவம் மற்றும் இந்திய இராணுவத்துடன் இணைந்து தமிழ் இயக்கங்கள் படுகொலை செய்தன. இதில் தமிழ் மக்கள் பேரவைக்கு முக்கிய பொறுப்பு இருக்கிறது. அதுவும் நீதியரசர் விக்னேஸ்வரன் அவர்கள் துணிச்சலுடனும் நேர்மை…
-
- 7 replies
- 904 views
- 1 follower
-
-
பாகிஸ்தான் பிரதமர் இன்று வருகிறார்: ஜனாதிபதி செயலகத்தில் வரவேற்பு! பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் மூன்றுநாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று திங்கட்கிழமை இலங்கை வருகிறார். இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் பேகம் கல்ஸும் ஷெரீப் அம்மையார் ஆகியோரை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வரவேற்கவுள்ளார். இலங்கை விஜயத்தின் போது பாகிஸ்தான் பிரதமர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதுடன் இலங்கைக்கும் - பாகிஸ்தானுக…
-
- 0 replies
- 314 views
-