ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143496 topics in this forum
-
தமிழ் மக்கள் பேரவையின் இரண்டாம் கூட்டம் நாளை வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனின் இணைத்தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் பேரவையின் இரண்டாம் கட்ட அமர்வு நாளையதினம் நடைபெறவுள்ளது. இதன்போது, தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தீர்வுத் திட்டத்தை தயாரிப்பதற்கான நிபுணர்கள் குழு ஒன்று நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் பேரவையின் செய்திக் குறிப்பொன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், ஜெனீவா பிரேரணையின் அமுலாக்கம் மற்றும் தமிழ் மக்களின் கலை கலாசாரங்கள் குறித்த விடயங்கள் என்பவற்றை கண்காணிப்பதற்கான விசேட குழுக்களும் நியமிக்கப்படவுள்ளதாக த…
-
- 7 replies
- 748 views
-
-
பாதுகாப்பு அமைச்சின் நிகழ்வில் பிரதம அதிதியாக ஜனாதிபதியின் புதல்வி புதிய அரசாங்கம், ஜனாதிபதியின் புதல்வியான சத்துரிக்கா சிறிசேனவை மீண்டும் அரசியல் நடவடிக்கையில் இறக்கியுள்ளது. கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் எதிர்வரும் 28 ஆம் திகதி நடைபெறவுள்ள பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் நிகழ்ச்சி ஒன்றுக்கு சத்துரிக்கா சிறிசேன பிரதம அதிதியாக அழைக்கப்பட்டுள்ளார். சிவில் பாதுகாப்பு படையினருக்கான 202 வீடுகள் மற்றும் அவர்களில் அடையாளம் காணப்பட்டவர்களின் பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்களை வழங்குவதற்காக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிவில் பாதுகா…
-
- 0 replies
- 404 views
-
-
கைது செய்யப்பட்டுள்ள இராணுவப் புலனாய்வு பிரிவுனர்களுக்கு மஹிந்த தரப்பு சம்பளம் வழங்கத் தீர்மானம்:- 26 டிசம்பர் 2015 லங்கா ஈ நியூஸ் ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இராணுவப் புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்களுக்கு மஹிந்த தரப்பு சம்பளம் வழங்கத் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள இராணுவ உத்தியோகத்தர்களின் குடும்பங்களுக்கு, மஹிந்த தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளங்கள் வழங்கப்படவுள்ளன. கூட்டு எதிர்க்கட்சியின் ஒரு தொகுதி பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களது பாராளுமன்ற சம்பளத்தை இதற்காக ஒதுக்கியுள்ளனர். புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்களு…
-
- 1 reply
- 445 views
-
-
சம்பந்தன் விக்கி சந்திப்பு இணக்கம்- தமிழ் மக்களின் நலனுக்காக முடிவுகள் எடுக்கப்படும் என உறுதி வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரனுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தனுக்கும் இடையில் நடந்த இரகசியப் பேச்சு வார்த்தை இணக்கத்துடன் முடிவடைந்ததுள்ளதாக வட மாகாண முதலமைச்சர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். இதன்படி தமிழ் மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு முடிவுகள் எடுப்பது தொடர்பில் இருவரும் உறுதியளித்துள்ளதாகவும் எதிர்காலத்திலும் இது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுமென்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பு நடந்த…
-
- 3 replies
- 709 views
-
-
உயர் மனித அபிவிருத்தி வகுதியில் இலங்கைக்கு 73ஆவது இடம் உயர் மனித அபிவிருத்தி வகுதியில் இலங்கைக்கு சர்வதேச ரீதியில் 73ஆவது இடம் கிடைத்துள்ளது. 2015ஆம் ஆண்டின் மனித அபிவிருத்தி சுட்டெண்ணில் இந்த தரப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி 188 நாடுகளை மையப்படுத்திய தரப்படுத்தலில் இலங்கை படிப்படியாக முன்னேற்றம் கண்டுள்ளது. இந்த அறிக்கையின்படி இலங்கையில் பெரும்பாலான அரச பணியாளர்கள் 60 வயதில் ஓய்வுப்பெறுகின்றனர். எனினும் சுயதொழில் மற்றும் நாளாந்த பணியாளர்கள் பல வருடங்களுக்கு பணியாற்றுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் தொழில்வாய்ப்பின்மை அதிகரிப்பு வீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதன்…
-
- 0 replies
- 462 views
-
-
சுனாமி தாக்கத்தின் 11வது ஆண்டு நினைவுதினம் மட்டு. மாவட்டத்தில் உணர்வுபூர்வமாக அனுஸ்டிப்பு சுனாமி தாக்கம் ஏற்பட்டு இன்றுடன் 11வருடம் நிறைவடைகின்றது. இதனையொட்டி சுனாமி தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள் இன்று இடம்பெற்றன. மட்டக்களப்யுபு மாவட்டத்தில் மண்முனை வடக்கு, காத்தான்குடி, ஆரையம்பதி, களுவாஞ்சிக்குடி, வாகரை ஆகிய பிரதேச செயலக பிரிவுகள் சுனாமி தாக்னகத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டன. இம்மாவட்டத்தில் சுனாமியினால் 2800 பேர் பலியானதுடன் 600க்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளனர். நூவடி டச்பார் புதுமுகத்துவாரம் ஆகிய கிராமங்கள்முற்றாக அழிக்கப்பட்டன. இக்கிராமத்தில் மாத்திரம் 1800 பேர் பலியாகினர். நாவலடி …
-
- 4 replies
- 457 views
-
-
[ வியாழக்கிழமை, 24 டிசெம்பர் 2015, 01:50.57 AM GMT ] மாகாண சபையினர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பை உடனடியாக நடத்துமாறு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம், வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் நேரில் சென்று வலியுறுத்தியுள்ளனர். வடக்கு மாகாண சபையின் வரவு - செலவுத் திட்டம் மற்றும் வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனின் இணைத்தலைமையில் உருவாகியுள்ள தமிழ் மக்கள் பேரவை தொடர்பாகவும் கலந்துரையாடுவதற்கே இந்தச் சந்திப்பை உடனடியாக ஏற்பாடு செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். வடக்கு மாகாண சபையின் ஒரு தொகுதி உறுப்பினர்கள், நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை கொழும்புக்குச் சென்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இ…
-
- 4 replies
- 539 views
-
-
[ வெள்ளிக்கிழமை, 25 டிசெம்பர் 2015, 06:15.40 PM GMT ] வடக்கு மாகாணசபை முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரனோடு பேச வேண்டிய சகல விடையங்கள் தொடர்பாகவும் தாம் பேசிவிட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கையின் எதிர்க் கட்சித் தலைவருமான இராசவரோதயம் சம்பந்தன் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று பிப 4.30 மணி தொடக்கம் 7.30 மணிவரை வட மாகாண முதல்வர் விக்னேஸ்வரனுக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கும் இடையில் அவசர சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது. இது தொடர்பாக லங்காசிறி 24செய்திச் சேவை தொடர்பு கொண்டு கேட்டது. இதற்கு பதிலளிக்கும் முகமாக அவர் தெரிவித்தவை வருமாறு,
-
- 3 replies
- 739 views
-
-
ஈழத்து கலைஞர் விபத்தில் சாவு! வேகமாகச் செலுத்தி வந்த மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் இருந்த கிணற்றுக்கட்டுடன் மோதுண்டதில் இளைஞர் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்தார். இந்தச் சம்பவம் நேற்றிரவு யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள நாச்சிமார் கோவிலுக்கு முன்பாகவுள்ள கிணற்றடியில் இரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் பிரதான வீதியைச் சோந்த ஜாக்சன் (வயது 25) என்பவரே இந்த விபத்தில் உயிரிழந்தவராவார். மரண விசாரணை அதிகாரி நமசவாயம் பிறேம்குமார் இன்று சனிக்கிழமை மேற்கொண்ட மரண விசாரணையைத் தொடர்ந்து சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 739 views
-
-
இரா.சம்பந்தன், கவீந்திரனும் இணைத் தலைவர்களாக நியமனம் DEC 25, 2015 வடக்கு, கிழக்கின் எட்டு மாவட்டங்களினதும், ஒருங்கிணைப்புக் குழுக்களின் இணைத் தலைவர்களாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தகவல் வெளியிடுகையில், திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவராக இரா.சம்பந்தனும், அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவராக கவீந்திரன் கோடீஸ்வரனும் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, இந்த நியமனங்களை வழங்கியுள்ளார். முன்னதாக, மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவராக சிறீநேசன…
-
- 0 replies
- 469 views
-
-
நினைவு கூரல்... 2004 ஆம் ஆண்டு, இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாடுகள் சிலவற்றில், பாரிய உயிர் மற்றும் பொருட் சேதத்தை ஏற்படுத்திய சுனாமி அனர்த்தத்தம் ஏற்பட்டு இன்றுடன் 11ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அவ்வனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு, இன்று சனிக்கிழமை நாடெங்கும் நடைபெற்றது. அம்பாறை- வசந்த சந்திர பால, எஸ்.கார்த்திகேசு மட்டக்களப்பு- எம். எஸ். எம். நூர்தீன், வடிவேல் சக்திவேல் , கே.எல்.ரி.யுதாஜித், வா.கிருஸ்ணா, எஸ். பாக்கியநாதன், யோ.சேயோன், ஆர்.ஜெயஸ்ரீராம் வவுனியா- ரொமேஷ் மதுஷங்க, நவரத்தினம் கபில்நாத் …
-
- 0 replies
- 510 views
-
-
காட்டுப்பூனைக்கு சிவராத்திரி விரதமா- யாழ்ப்பாணத் தம்பி மகிந்த ராஜபக்ச வெள்ளைவான் கலாசாரத்தை கண்டு மனம் வெதும்பி அறிக்கை விட்டிருக்கிறார். எப்பிடி விளையாட்டுக் கண்டியளே? காட்டுப் பூணைக்கு சிவராத்திரி விரதமா எண்டு கேப்பியள்? பிறகென்ன வெள்ளைவான் கடத்தல் எண்டுற கலாசாரத்தை கொண்டுவந்து கொஞ்சப் பேரையே கடத்தினவர். அப்பாவியள், அரசியல்வாதிகள், அரசியல் செயற்பட்டாளர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் எண்டு எத்தினை பேரை கடத்தி கொலை செய்த, காணாமல் போகச் செய்த ஆட்சி நடத்தினவர் இப்ப கறுப்புவானுக்கு எதிராய் கலம் செய்யிறார். நடந்த கடத்தல் சம்பவம் பிழையானது. அதைப் பற…
-
- 0 replies
- 819 views
-
-
ஆழிப்பேரலையில் உயிர்நீத்தோருக்காக யாழில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி யாழ். மாவட்ட செயலகம், மற்றும் அனர்த்த முகாமைத்துவ அலுவலகத்தின் ஏற்பாட்டில் 2004 ஆம் ஆண்டு ஆழிப்பேரலையின் கோரத் தாண்டவத்தில் உயிர்நீத்தவர்களை நினைவு கூரும் நிகழ்வுகள் இன்று யாழ். மாவட்ட செயலகத்தில் யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அலுவகத்தின் உதவிப்பணிப்பாளர் சங்கரப்பிள்ளை ரவி தலைமையில் நடைபெற்றது.. தேசிய பாதுகாப்பு தின நிகழ்வுக்கு பிரதம அதிதியாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன், மற்றும் மேலதிக அரசாங்க அதிபர் பா.செந்தில்நந்தனன் ஆகியோர் கலந்து கொண்டு சுனாமியினால் உயிர்நீத்தவர்களை நினைவுகூரும் முகமாக தேசிய கொடியேற்றப்பட்டு இரண்டு நிமிட மௌன அஞ்சலியும…
-
- 0 replies
- 476 views
-
-
முல்லைத்தீவில் கடற்கோள் நினைவஞ்சலி 2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதி இலங்கையைத் தாக்கிய கடற்கோளின்போது, இலங்கையின் கரையோர மாவட்டங்களில் 40,000 பேர் வரையில் உயிரிழந்தனர். முல்லை மாவட்டத்தில் 3000க்கும் அதிகமானோர் உயிர்துறந்தார்கள். அவர்களுக்கான நினைவஞ்சலி, கடற்கோள் நினைவுதினமான இன்று முல்லைத்தீவில் அமைக்கப்பட்டுள்ள கடற்கோள் நினைவாலயத்தில்; நடைபெற்றது. இந்து, இஸ்லாம், கிறீஸ்தவம் ஆகிய மூன்று மதமுறைகளிலும் இடம்பெற்ற நினைவஞ்சலிப் பிராத்தனைகளில் உயிரிழந்தவர்களின் உறவுகள், மதத்தலைவர்கள் என ஏராளமானோர் பங்கேற்றிருந்தார்கள். வடக்கு மாகாணசபையின் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், வடமாகாணசபை பிரதி அவைத் தலைவர் ம.அன்ர…
-
- 0 replies
- 449 views
-
-
கண்ணீரில் நனைந்த தாயகம் ஆழிப்பேரலை (சுனாமி) அனர்த்தத்தின் 11 ஆண்டு நினைவு தாயகம் எங்கும் உறவுகளினால் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் குறிப்பாக வடமராட்சி கிழக்கு உடுத்துறையில், திரண்டிருந்த, ஆழிப்பேரலையில் உயிரிழந்தவர்களின் பெருமளவான உறவினர்கள் கண்ணீருடன் சோகமே மையமான நிலையில் கல்லறைகளில் சுடரேற்றி உணவுப்பொருட்களை படைத்தும் நினைவு கூர்ந்தனர். இதன்போது அங்கு நினைவு கூட்டமும் இடம்பெற்றது. அதில் உடுத்துறையில் உள்ள குறித்த இடத்தினை புனித இடமாக அறிவிக்க வேண்டும் என்றும், அங்கு பொதுவாக ஆழிப்பேரலை நினைவுத் தூபி அமை…
-
- 0 replies
- 423 views
-
-
மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் முக்கிய அமைச்சர்களாக கடமையாற்றிய சிலருக்கு அடுத்த ஆறு மாதங்களுக்குள் மரண தண்டனை தீர்ப்புகள் வழங்கப்படும் நிலைமை காணப்படுவதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இவர்கள் பாரிய குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்டுள்ளமை குறித்த தகவல்கள் கிடைத்திருப்பதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். இந்த நபர்களுக்கு எதிரான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதுடன் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பிரபல விளையாட்டு வீரர் கொலை செய்யப்பட்டமை, கப்பம் பெற்றமை, ஆட்களை கடத்திச் சென்றமை ஆகியன தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்களும் அதில் அடங்குகின்றனர். இவர்களில் சிலருக்கு வெலிகடையில் தங்குமிடம் கிடைக…
-
- 2 replies
- 697 views
-
-
வெள்ளையர் உருவாக்கி வைத்துள்ள கல்வித்திட்டம் எந்தப் பயனும் அற்றது என்று தான் உயர்கல்வி பெறாமல் போனது குறித்து விமல் வீரவங்ச புது நியாயம் கற்பித்துள்ளார். தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார் என்பது அரசியல் வட்டாரத்தில் பகிரங்க ரகசியமாகும். எனினும் தான் கட்சியின் கொள்கைக்கு அமைவாகவே உயர்கல்வியைத் தொடராமல் இடைநிறுத்தியதாக தற்போது அவர் தெரிவித்துள்ளார். ஐரோப்பாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள விமல் வீரவங்சவிடம் அவரது கல்வித் தகைமை குறித்து ஆதரவாளர்கள் வினா எழுப்பியபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அதற்குப் பதிலளித்துள்ள விமல் வீரவங்ச, வெள்ளையரின் கல்வி முறையில் உருவான பட்டப்படிப்புகள் வெறும…
-
- 3 replies
- 800 views
-
-
ஜோசப் பரராஜசிங்கத்தின் 10வது நினைவு தினம் நத்தார் தின ஆராதனையின் போது படுகொலை செய்யப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் 10வது நினைவு தினம் இன்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு சாள்ஸ் மண்டபத்தில் நினைவு கூரப்பட்டது. இதன்போது பேராசிரியர் எஸ்.பத்மநாதன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் நினைவுப் பேருரையாற்றினார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணி தலைவர் கி.சேயோன் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் மட்டு அம்பாறை மறை மாவட்ட ஆயர் வண.பிதா ஜோசப் பொன்னையா, காயத்திரி பீட பிரதம குரு சிவயோகச் செல்வன் சாம்பசிவம் சிவாச்சாரியார…
-
- 6 replies
- 694 views
-
-
புதிய அரசாங்கம் சீனாவுடன் நெருக்கமான உறவுகளைப் பேணி வருவதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். சீனாவுடன் எமக்கு நெருக்கமான உறவு உள்ளது. மஹிந்த நிர்வாகம் சீனாவுடனான உறவுகளுக்கும் அப்பால் சென்று நிலைமைகளைக் குழப்பிக் கொண்டது என சி.என்.பி.சி தொலைக்காட்சிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் நிதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார். சீனாவுடன் இணக்கப்பாடுகள் காணப்படும் அதேவேளை கடந்த காலங்களில் இடம்பெற்ற பிழைகளை நிவர்த்தி செய்ய வேண்டியுள்ளது. அதனையே மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கமும் செய்கிறது. சிறந்த அரசாங்கம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை மக்களுக்கு உணர்த்த வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பொருளாதாரத்தில் சீனா முக்…
-
- 1 reply
- 221 views
-
-
அக்கரைப்பற்று சந்தையில் இனவாதம் பேசி முன்னாள் போராளி மீது தாக்குதல்! [Friday 2015-12-25 19:00] அக்கரைப்பற்று மாநகரசபை பொதுச் சந்தையில் பிளாஸ்ரிக் பொருட்களை விற்பனை செய்து வரும் விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளி ஒருவரை, சந்தையிலிருந்து வெளியேறுமாறு அச்சுறுத்திய சிலர், அவரது பொருட்களையும் எடுத்து வீசிவிட்டு அவரையும் தாக்கியுள்ளதாக பொலிஸில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. புதன்கிழமை இடம்பெற்றுள்ள இந்த சம்பவத்தில், விநாயகபுரத்தைச் சேர்ந்த 35 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தையே பாதிக்கப்பட்டவராவார். யுத்தத்தில் ஒரு காலை இழந்த இவர், புனர்வாழ்வு முகாமில் இருந்து 2010ஆம் ஆண்டில் விடுதலை பெற்று குடும்பத்துடன்…
-
- 0 replies
- 767 views
-
-
http://www.supeedsam.com/?p=24880 இன்றைய அரசாங்கத்திலும் புணர்வாழ்வாளிக்கப்பட்ட போராளிகள் விசாரிக்கப்படுகின்றார்கள்! கலையரசன் விடுதலை புலிகள் இயக்கத்தில் இருந்து புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர்கள் இலங்கை இராணுவ புலனாய்வாளர்களால் விசாரிக்கப்படுவதும், அச்சுறுத்தப்படுவதும் அன்றைய அரசாங்கத்திலும் இருந்தது, இன்றைய அரசாங்கத்திலும் இருந்து கொண்டுதான் இருக்கின்றது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார். கல்விக்காய் ஏங்கும் கனவிற்கு விழியாய் நாமும் இணைவோம் எனும் அமைப்பின் ஏற்பாட்டில் பின் தங்கிய பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களுக்கான புத்தகப்பை, மற்றும் கொப்பிகள், எழுது கருவிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு…
-
- 0 replies
- 432 views
-
-
தர்மேந்திரா என்னும் ஒரு போராளிக் கலைஞனின் வீரமரணத்தை தொடர்ந்து விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் சிந்தனையில் உருவாக்கப்பட்டது தர்மேந்திரா கலையகம். இக்கலையகம் பல்வேறு மூத்தகலைஞர்கள் மென்மேலும் வளர்ச்சியடைய ஒரு களமாக இருந்ததுடன், இலைமறைகாயாக இருந்ந பல தமிழீழக் கலைஞர்களை வெளிக்கொண்டு வந்துள்ளது. இந்தக்கலையகத்தில் பல்வேறுபட்ட விடுதலை எழுச்சிப்பாடல்கள், தத்துவப்பாடல்கள், பக்திப்பாடல்கள் மற்றும் திரைப்படங்கள், குறும்படங்கள், தொடர் நாடகங்கள் என அனைத்திற்கும் பின்னணி இசையையும் வழங்கியிருந்தது. அந்தவகையில் 2004ம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப்பேரலையினால் மக்கள் மீளாத்துயரடைந்து இருந்தபொழுது, அவர்களை ஆற்றும் நோக்கில் சுனாமிப் பாடல்களையும் வெளியீடு செய்திர…
-
- 1 reply
- 689 views
-
-
வடமராட்சி கிழக்கில் மேற்கொள்ளவுள்ள கடல் நீரை நன்னீராக்கும் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று வடமராட்சி கிழக்கு மக்கள் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை நடத்தினர். வடமராட்சி கிழக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நெய்தல் அலுவலகத்திற்கு முன்பாக இன்று காலை பத்து மணி முதல் நண்பகல் 12 வரை அடையாள எதிர்ப்பு உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது. வடமராட்சி கிழக்கு அபிவிருத்தி அமைப்பின் ஏற்பாட்டில் வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர்கள் மற்றும் பொது மக்கள் ஆகியோர் இணைந்தே மேற்படி திட்டத்திற்கு தங்களின் கடும் எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர். தங்களுடைய கோரிக்கைகளை ஏற்று இத்திட்டத்தை வடக்கு மாகாண சபை நிறுத்த வேண்டும் எனவும் தவறின் தாங்கள் எதிர்வரும் காலங்க…
-
- 10 replies
- 1.2k views
- 2 followers
-
-
மருத்துவ சான்றிதழை பெற வீதியில் உறங்கும் அவலம் மட்டக்களப்பிலுள்ள தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவகத்தில் மோட்டார் சாரதி அனுமதிப் பத்திரத்துக்காக வைத்தியச் சான்றிதழ் பெற்றுக்கொள்வதற்கு வருகை தரும் இளைஞர் யுவதிகள் இரவு வேளையில் தங்கியிருந்தே பெறவேண்டியுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். மோட்டார் சாரதி அனுமதிப் பத்திரத்துக்காக தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவகத்தில் வைத்தியச் சான்றிதழ் பெறுவது அவசியமாகவுள்ளது. இதனைப் பெறுவதற்காக முதல் இரவு மட்டக்களப்பு, கல்லடியிலுள்ள குறித்த நிறுவகத்துக்கு வந்து வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலையுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர். இன்று நாட்டில் எந்த தொழில் ஒன்றை பெற்றுக்கொள்வதா…
-
- 1 reply
- 427 views
-
-
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப் எதிர்வரும் ஜனவரி 4ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்யும் பாகிஸ்தான் பிரதமர் பத்து புரிந்துணர்வு உடன்படிக்கைகளில் கைச்சாத்திடவுள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் பதில் வெளிவிவகார அமைச்சர் ஹர்ஸ டி சில்வா ஆகியோரினால் இந்த உடன்படிக்கைகள் அண்மையில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இளைஞர் அபிவிருத்தி புள்ளி விபரத் தகவல்கள் பரிமாற்றம் தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க ஒத்துழைப்பு, தொழில்நுட்ப விஞ்ஞான ஒத்துழைப்பு, சுகாதாரம், கலாச்சாரம், பயங்கரவாத நிதிக் கொடுக்கல் வாங்கல்கள் குறித்த தகவல் பரிமாற்றம் புலனாய்வுத் தகவல் பரிமாற்றம் உள்ளிட்ட சில துறைகளில் …
-
- 0 replies
- 436 views
-