ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143496 topics in this forum
-
இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் இணைப்பாளராக இலங்கை செல்கிறார் இமானுவேல் அடிகளார்? 29 நவம்பர் 2015 உலகத் தமிழர் பேரவையின் தலைவர், அருட்தந்தை இமானுவேல் அடிகளார் அடுத்த வருட ஜனவரி மாத முற்பகுதியில் இலங்கை செல்லவுள்ளதாக இலங்கை அரச தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து தற்போது இலண்டனில் தங்கியிருக்கும் அருட்தந்தை இமானுவேல் அடிகளார், கடந்த மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தால் நாடு திரும்ப தடைவிதிக்கப்பட்டது. ஆனால் இப்போது இன்றைய அரசினால் அத்தடை நீக்கப்பட்ட காரணத்தினால் அவர் இலங்கை திரும்புவதற்குத் தயாராகி வருவதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. அத்துடன் அவரது வருகையை இலங்கை அரசாங்கமும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாகவும் …
-
- 37 replies
- 3.7k views
- 1 follower
-
-
'புலிகளின் காவல்துறை உறுப்பினர் எனது கணவரை காட்டிக்கொடுத்தார்' -எம்.றொசாந்த் வட்டுவாகலால் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வரும் போது, இராணுவத்தினருடன் இணைந்து நின்ற விடுதலைப் புலிகளின் காவல்துறையில் பணியாற்றிய சபேசன் என்கின்ற நபர் தனது கணவரைக் இராணுவத்தினருக்கு காட்டிக் கொடுத்ததாக காணாமற்போன விடுதலைப் புலிகளின் உள்ளகப் பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த வண்ணக்கிளி என்று அழைக்கப்படும் மூத்தம்பி விஜயகுமார் என்பவரின் மனைவி இளவெயினி சாட்சியமளித்தார். காணாமற்போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் உடுவில் மற்றும் தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவுகளுக்கான அமர்வு தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் புதன்கிழமை (16) நடைபெற்றபோதே,…
-
- 26 replies
- 1.8k views
-
-
சுமார் ஆயிரம் பட்டதாரிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், அவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கோஷங்களை எழுப்பி வருவதாகவும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார். தற்போது அரச தொழிலிலுள்ள பட்டதாரிகளுக்கு உரிய இடம் வழங்கப்பட வேண்டும் எனவும், அவர்களுக்கான ஓய்வூதியம் மற்றும் வரவு செலவுத்திட்டத்தில் தடை செய்யப்பட்ட மோட்டார் வாகன சலுகை ஆகியவற்றை மீண்டும் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் கோட்டை ரயில் நிலையத்திலிருந்து ஜனாதிபதி செயலகம் வரை சென்றுள்ளதுடன், அவர்களில் சுமார் 10 பேர் வரை ஜனாதிபதி செயலகத்திற்குள் அழைத்து செல்லப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். …
-
- 1 reply
- 919 views
-
-
பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் கைதான இராணுவ அதிகாரி விடுதலை -சொர்ணகுமார் சொரூபன் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ், தடுத்து வைக்கப்பட்ட இராணுவ அதிகாரியான அக்குறு கங்கணம்கே இந்திக சஞ்சீவ, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனால் இன்று வெள்ளிக்கிழமை (18) விடுதலை செய்யப்பட்டார். அவருக்கு எதிரான குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தில், சட்ட ரீதியான பல கேள்விகள் உள்ளன. இதனை நிரூபிக்க தவறியமையால், இந்த குற்ற ஒப்புமூல வாக்குமூலத்தை நிராகரித்து அவரை விடுதலை செய்வதாக நீதிபதி கூறினார். யாழ்ப்பாணத்துக்கு வந்து சென்ற போது, கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளைச் சந்தித்து, 50 ஆயிரம் ரூபாய் …
-
- 0 replies
- 657 views
-
-
'கொழும்பிலிருந்து ஓநாய் ஒன்று ஊளையிடுகின்றது' - எஸ்.ஜெகநாதன் வடமாகாண சபையைப் பற்றி கொழும்பிலிருந்து ஓநாயொன்று நேற்று வியாழக்கிழமை (17) ஊளையிட்டுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் எஸ்.பசுபதிப்பிள்ளை தெரிவித்தார். வடமாகாண சபையின் 2016 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத்திட்டத்தின் சுகாதார அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான விவாதம் இன்று வெள்ளிக்கிழமை (18) கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் நடைபெற்றபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 'ஆடத்தெரியாதவனுக்கு மேடை சரியில்லை என்பது போல, ஒதுக்கப்பட்ட நிதியை செலவு செய்யாமல் அதிக நிதி கோரும் நடவடிக்கையில், வடமாகாண சபை செயற்படுகின்றது' என நாடாளுமன்ற உறுப்பினர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற…
-
- 0 replies
- 910 views
-
-
இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பில், ஐ.நா சபையால் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இன்னும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லையென ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் கிறிஸ்ரோப் ஹெய்ன்ஸ் குறிப்பிட்டுள்ளார். நல்லிணக்கம் தொடர்பில் இலங்கை முன்னெடுத்துவரும் செயற்பாடுகள் சிறந்த சமிக்ஞைகளாக தென்பட்டாலும், பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கை கொண்டுள்ள தாமதத்திற்கு தமது அதிருப்தியையும் வெளியிட்டுள்ளார். யுத்த காலத்தில் இடம்பெற்ற மனித படுகொலைகள், வன்முறைச் சம்பவங்கள் குறித்து இலங்கை முழுமையான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டுமென குறிப்பிட்ட அவர், பொறுப்புக்கூறல் விடயத்திலேயே எல்லா பிரச்சினைகளும் தங்கியுள்ளதால், முதலில் பொறுப்புக்கூறல் விடயம…
-
- 0 replies
- 540 views
-
-
நான் எப்போது இறப்பேன் என்று சிலர் என் ஜாதகத்துடன் அலைகின்றனர் அரசியல் ரீதியாக தோல்வியடைந்த சிலர் தற்போது தனது ஜாதகத்தை எடுத்து கொண்டு திரிவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பத்தரமுல்லை பெலவத்தையில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அரசியல் ரீதியாக தோல்வியடைந்தவர்கள் நான் எப்போது இறக்கப் போகிறேன் எப்படி இறக்கப்போகிறேன் என்பதை அறிய எனது ஜாதகத்துடன் அலைந்து திரிகின்றனர். அரசியல் ரீதியாக நான் அவர்களுக்காக அனுதாபப்படுகிறேன். நீண்டகாலமாக பழைய பெட்டகத்தில் இருந்து வெளியில் எடுத்த அரசாங்கத்தை போல், சிலர் புதிய அரசாங்கத்தை பற்றி பே…
-
- 0 replies
- 641 views
-
-
'சந்திரிக்காவுக்கு தெரிந்த பனை மரம் எங்களுக்கு தெரியாமல் போய்விட்டது' பனையின் மூலம் கிடைக்கும் பயன், வருமானம் பற்றி நன்கு அறிந்த, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தனது ஆட்சிக்காலத்தில் காலி முகத்திடலில் பனை விதைகளை நாட்டி பனை மரம் வளர்த்தார். ஆனால், பனையுடன் வாழும் வடமாகாணத்தைச் சேர்ந்த நாங்கள் அதுபற்றி அறியாமல் இருகின்றோம் என வடமாகாண சபை உறுப்பினர் கே.சிவநேசன் தெரிவித்தார். வடமாகாண சபையின் 2016 ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்டத்தின் விவசாய, கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் கூட்டுறவு அமைச்சின் நிதி ஒதுக்கீடு தொடர்பான விவாதம் இன்று வியாழக்கிழமை வடமாகாண சபையில் நடைபெற்ற போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் கூறுக…
-
- 8 replies
- 835 views
-
-
வடமாகாணசபை அபிவிருத்திக்காக ஒரு சதத்தையேனும் செலவிடவில்லை : டக்ளஸ் எம்.பி வட மாகாணசபை அபிவிருத்திக்காக ஒரு சதத்தையேனும் செலவிடவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். மத்திய அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்ட பணத்தை மாகாணசபை உரிய முறையில் பயன்படுத்தவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். 2013 மற்றும் 2014ஆம் ஆண்டுகளிலும் இதே நிலைமையே நீடித்து வந்தது என அவர் தெரிவித்துள்ளார். பயன்படுத்தப்படாத பணத்தை மீளப்பெற்றுக்கொள்ள மத்திய அரசாங்கம் ஏதேனும் நடவடிக்கை எடுத்துள்ளதா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். வட மாகாணசபையில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் த…
-
- 0 replies
- 533 views
-
-
பிறந்து ஒருநாளான சிசுவை பொலித்தீன் பையில் கட்டி கொலை செய்த தாய் : கிளிநொச்சியில் பரபரப்பு பிறந்த குழந்தையை தாயொருவர் கொலை செய்த சம்பவம் கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி ஆனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த 23 வயதான பெண்ணொருவருக்கு நேற்று காலை குழந்தை பிறந்துள்ளது. பிறந்த குழந்தையை பொலித்தீன் பை ஒன்றில் வைத்து அலுமாரியினுள் வைத்து பூட்டி வைத்த வேளை, குழந்தை இறந்துள்ளது. இதனையடுத்து குறித்த தாய் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற சென்ற வேளையே மாட்டிக் கொண்டுள்ளார். குறித்த தாய் திருமணம் ஆகாதவர் எனவும் கிளிநொச்சி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கிளிநொச்சி வைத்தியசால…
-
- 0 replies
- 519 views
-
-
கணவன் தமிழ் அரசியல் கைதியாக சிறையில்..! கூலி வேலை செய்து பிள்ளையுடன் வாழப் போராடும் பெண் [ வெள்ளிக்கிழமை, 18 டிசெம்பர் 2015, 07:46.09 AM GMT ] வவுனியா, கோவில் புளியங்குளம் பகுதியில் வசிப்பவர் குணநாதன் நிர்மலாதேவி. யுத்தத்தின் பாதிப்புக்களை நேரடியாக சுமந்த நிர்மலாதேவியின் குடும்பம் இறுதி யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து, இராணுவத்திடம் தஞ்சம் அடைந்து செட்டிகுளம் ஆனந்தகுமாரசாமி முகாமில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு வைத்து 2009 செப்ரெம்பர் 24 ஆம் திகதி நிர்மலாதேவியின் கணவன் கந்தையா குணநாதன் கைது செய்யப்பட்டார். அதன் போது தனது 7 வயது மகளுடன் முகாமில் தனிமையில் இருந்து விடுதலையாகி தற்போது கோவில்புளியங்குளம் பகுதியில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளார். …
-
- 0 replies
- 509 views
-
-
இன்னும் அடங்காத ஈழத்தின் ஓலம்: விரக்தியின் விளிம்பில் தொப்புள் கொடி உறவுகள் இலங்கையில் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். (கோப்பு படங்கள்) இலங்கை இனப் போரின் இறுதிக்கட்ட மர்மங்கள் இன்னும் விலகாத நிலையில் போருக்குப் பிறகான ஈழத் தமிழர்களின் நிலைமை இன்னும் பரிதாபமாகிக் கொண்டிருப்பதாக தகவல்கள் வருகின்றன. போரில் பாதிக்கப்பட்ட தமிழர் களை மீள் குடியேற்றம் செய்யவும் அவர்களுக்கான புனரமைப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும் அரசாங்கம் அளித்த வாக்குறு திகள் முழுமையாக நிறைவேற்றப் படவில்லை. போர் முடிவில் 50-க்கும் மேற்பட்ட பேருந்துகளில் இளம் யுவதிகளை ராணுவம் அழைத்துச் சென்றது. அவர்களில் யாரும் இன்னமும் வீடு …
-
- 1 reply
- 611 views
-
-
வாகனங்கள் நிறுத்தத் தடை : யாழ்.பொலிஸாரால் அறிவித்தல் பலகை யாழ். நகரப் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக வீதிகளில் வாகனங்கள் நிறுத்தத் தடை என்ற அறிவித்தல் பலகைகளை யாழ்ப்பாணப் பொலிஸார் வைத்து வருகின்றனர். நகரப்பகுதியில் முறையற்ற விதத்தில் வாகனங்கள் தரித்து நிற்கப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், விபத்துக்களும் ஏற்படும் நிலை தோன்றுகின்றது. அதுமட்டுமல்ல வர்த்தக நிலையங்களுக்கு முன்னால் வாகனங்களை தரிப்பதால் வர்த்தகர்களும் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது. இதனைக்கருத்திற் கொண்டு, தெரிவு செய்யப்பட்ட நெருக்கமான இடங்களில் பொலிஸாரால் வாகனம் நிறுத்தத் தடை அறி…
-
- 0 replies
- 851 views
-
-
கரிசனை காட்டப்படாத குழந்தைகளை பெறுவதிலும் பார்க்க பெறாமல் இருப்பதே மேல் தமிழ் பேசும் மக்கள் என்ற முறையில் மக்கள் தொகையை அதிகரிக்க வேண்டும் என்ற கடப்பாடு எமக்கு இருந்தாலும் கவனிக்கப்படாத, கரிசனை காட்டப்படாத குழந்தைகளை பெறுவதிலும் பார்க்க பெறாமல் இருப்பதே மேல் என வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் தெரிவித்தார். நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தினால் உலக சிறுவர் தினம் இன்று யாழ். இலங்கை வேந்தன் கலைக்கல்லூரியில் கொண்டாடப்பட்டது. இதன்போது பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், …
-
- 0 replies
- 994 views
-
-
அரசியல் பிழைப்புக்காக இனவாதத்தை கையில் தூக்கிக்கொண்டதால் நாம் ஒவ்வொருவரும் விரும்பியோ. வி� இந் நாட்டில் சமத்துவம், சமவாய்ப்புகள் கிடைத்திருந்தால். இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ், சிகல உறுமைய என. இன வாரியான கட்சிகள் உருவாக வேண்டிய தேவை இருந்திருக்காது. ஒரே தேசியக்கட்சியிலேயே எல்லோரும் ஒன்று சேர்ந்து நாட்டைக் கட்டியெழுப்பி இருப்போம். துரதிஷ்டவசமாக அரசியல் லாபத்துக்காக, அரசியல் பிழைப்புக்காக இனவாதத்தை கையில் தூக்கிக்கொண்டதால் நாம் ஒவ்வொருவரும் விரும்பியோ. விரும்பாமலோ இவ்வினவாதத்திற்குள் சிக்கிக் கொண்டோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன்2016 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட குழுநிலை விவ…
-
- 0 replies
- 382 views
-
-
கொழும்புத் துறைமுக அபிவிருத்தித் திட்டம் இடைநிறுத்தப்படாது! - அரசாங்கம் அறிவிப்பு [Friday 2015-12-18 07:00] கொழும்புத் துறைமுக அபிவிருத்தித் திட்டம் உட்பட சீனாவுடன் உடன்படிக்கை செய்து கொண்ட எந்தவொரு அபிவிருத்தித் திட்டமும் நிறுத்தப்படமாட்டாது. கொழும்புத் துறைமுகத் திட்டத்தை நிறுத்துவதாக நானோ பிரதமரோ ஒருபோதும் கூறவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன நேற்று தெரிவித்தார். கொழும்புத் துறைமுக அபிவிருத்தித் திட்டம் உட்பட சீனாவுடன் உடன்படிக்கை செய்து கொண்ட எந்தவொரு அபிவிருத்தித் திட்டமும் நிறுத்தப்படமாட்டாது. கொழும்புத் துறைமுகத் திட்டத்தை நிறுத்துவதாக நானோ பிரதமரோ ஒருபோதும் கூறவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன நேற்ற…
-
- 1 reply
- 402 views
-
-
இலங்கை விமானப்படை ரஸ்யாவிடமிருந்து தாக்குதல் விமானம் கொள்வனவு செய்ய உள்ளது: 18 டிசம்பர் 2015 இலங்கை விமானப்படை ரஸ்யாவிடமிருந்து தாக்குதல் விமானங்களை கொள்வனவு செய்ய உள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கைக்கு அதி சக்தி வாய்ந்த சுகோய் தாக்குதல் விமானங்களைப் பெற்றுத்தர ரஸ்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பாகிஸ்தான் அரசாங்கத்தினால் இலங்கைக்கு தாக்குதல் விமானம் வழங்கவிருந்த போதிலும் இந்திய எதிர்ப்பு காரணமாக அந்த திட்டம் கைவிடப்பட்டது. இலங்கையில் தற்போது சுமார் 12 தாக்குதல் விமானங்கள் பயன்படுத்தப்படாமையினால் பராமரிப்பற்ற நிலையில் காணப்படுவதாகவும், இவற்றை பழுது பார்த்ததன் பின்னரே மீளவும் பயன்படுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. …
-
- 0 replies
- 614 views
-
-
34 கைதிகளுக்கு ஜனாதிபதி மைத்திரி பொது மன்னிப்பு அளித்தார் [ Friday,18 December 2015, 04:47:24 ] மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறை வைக்கப்பட்டிருந்த 34 கைதிகளுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுமன்னிப்பு அளித்துள்ளார். அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட குழுவினால் வழங்கப்பட்ட பரிந்துரைகளுக்கு அமைய இந்த 34 கைதிகளுக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. குறித்த கைதிகளுக்கு பொது மன்னிப்பு அளிக்கப்பட்டுள்ள விடயம் தொடர்பில் நீதியமைச்சு அதற்கான அறிவித்தல் அறிக்கையை சிறைச்சாலைகள் தலைமையகத்திடம் அளித்துள்ளது. மரண தண்டனை விதிக்கப்பட்டு சுமார் 15 வருடங்கள் சிறையில் இருந்த கைதிகளுக்கே இவ்வாறு பொது மன்னிப்பு அளிக்கப்பட்டுள்ளது. http://…
-
- 0 replies
- 611 views
-
-
யாழ்ப்பாணத்தில் தொழில் மையம் அமைத்து தருவதாக கனடா வாக்குறுதி! [Friday 2015-12-18 07:00] யாழ். மாவட்டத்தில் தொழில் மையம் ஒன்ழற அமைத்து தருவதாக ககனேடிய உயர்ஸ்தானிகர் செல்லி விட்டிங் உறுதியளித்துள்ளார். நேற்று முன்தினம் யாழ்ப்பாண அரசாங்க அதிபரை சந்தித்த போதே இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகனை, கனேடிய உயர்ஸ்தானிகர் சந்தித்து பல்வேறு விடயங்கள் குறித்தும் கலந்துரையாடினார். யாழ். மாவட்டத்தில் தொழில் மையம் ஒன்ழற அமைத்து தருவதாக ககனேடிய உயர்ஸ்தானிகர் செல்லி விட்டிங் உறுதியளித்துள்ளார். நேற்று முன்தினம் யாழ்ப்பாண அரசாங்க அதிபரை சந்தித்த போதே இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகனை, …
-
- 0 replies
- 586 views
-
-
தொழில் செய்வதற்கான சிறந்த நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு 91ஆவது இடம்: போர்ப்ஸ் பட்டியல் வெளியீடு தொழில் செய்வதற்கான சிறந்த நாடுகளை அமெரிக்க வணிக இதழான போர்ப்ஸ் பட்டியலிட்டு வருகிறது. இதன்படி 2015ஆம் ஆண்டுக்கான பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது. மொத்தம் 144 நாடுகள் கொண்ட இந்தப் பட்டியலில் இலங்கை 91 ஆவது இடத்தில் உள்ளது. வர்த்தகம், நிதி சுதந்திரம் மற்றும் ஊழல், வன்முறை போன்ற சவால்களை எதிர்கொள்வதில் மோசமான நிலையில் இருப்பதாக போர்ப்ஸ் தெரிவித்துள்ளது. இந்த பட்டியலில் டென்மார்க் முதலிடத்தைப் பிடித்துள்ளது. உலகின் நிதி தலைநகராக விளங்கும் அமெரிக்கா கடந்த ஆண்டைவிட 4 இடங்கள் பின்தங்கி தற்போது 22ஆவது இடத்தில் உள்ளது. …
-
- 2 replies
- 683 views
-
-
கோவண ஆர்ப்பாட்டம்... வரவு - செலவுத்திட்டத்தில் தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக கூறியும் அத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான விவசாயிகள், கோவணங்களை அணிந்தவாறு, கொழும்பில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். (படப்பிடிப்பு: நிஷால் பதுகே) - See more at: http://www.tamilmirror.lk/161818/%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%A3-%E0%AE%86%E0%AE%B0-%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%9F-%E0%AE%9F%E0%AE%AE-#sthash.2UTzgOuP.dpuf
-
- 4 replies
- 1.9k views
-
-
பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கை தாமதம்; ஐ.நா அதிருப்தி இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பில், ஐ.நா சபையால் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இன்னும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லையென ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் கிறிஸ்ரோப் ஹெய்ன் தெரிவித்துள்ளார். நல்லிணக்கம் தொடர்பில் இலங்கை முன்னெடுத்துவரும் செயற்பாடுகள் சிறந்த சமிக்ஞைகளாக தென்பட்டாலும், பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கை கொண்டுள்ள தாமதத்திற்கு தமது அதிருப்தியையும் வெளியிட்டுள்ளார். யுத்த காலத்தில் இடம்பெற்ற மனிதப் படுகொலைகள், வன்முறைச் சம்பவங்கள் குறித்து இலங்கை முழுமையான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டுமென குறிப்பிட்ட அவர், பொறுப்புக்கூறல் விடயத்திலேயே எல்லா ப…
-
- 4 replies
- 557 views
-
-
இலங்கை அமெரிக்காவின் காலனியாக மாற்றமடைந்துள்ளது: திஸ்ஸ விதாரண [ புதன்கிழமை, 16 டிசெம்பர் 2015, 02:45.40 AM GMT ] இலங்கை அமெரிக்காவின் காலனியாக மாற்றமடைந்துள்ளது என பேராசிரியர் திஸ்ஸ விதாரண குற்றம் சுமத்தியுள்ளார். லங்கா சமசமாஜ கட்சியின் 80ம் ஆண்டு நிறைவு நிகழ்வுகள் தொடர்பில் தெளிவூட்டும் நோக்கில் கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். புதிய அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்று ஒரு வருட காலத்திற்குள் நாட்டின் பொருளாதாரம் வங்குரோத்து நிலையை அடைந்துள்ளது. பொய்யான வாக்குறுதிகள் அளிக்கப்பட்டு சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டத்தில் மக்களின் வரிச் சுமை மேலும் உயர்த்தப்பட்டு…
-
- 4 replies
- 489 views
-
-
வட மாகாணமுதலமைச்சரின் அமைச்சின் 2016ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 16 டிசம்பர் 2015 முதலமைச்சரின் அமைச்சானது வீடமைப்பு நிர்மாணம் மற்றும் சுற்றுலாத்துறையையும், உள்ள 10ராட்சித்திணைக்களம், தொழிற்றுறைத்திணைக்களம், மாகாணக்காணி ஆணையாளர் திணைக்களத்தையும் உள்ளடக்கியுள்ளது. இவற்றிற்காக 2016 ம் ஆண்டிற்கு ரூபா 2,357.191 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ரூபா 2,038.691 மில்லியன் மீண்டுவரும் செலவினத்திற்கும ; ரூபா 318.5 மில்லியன் மூலதனச்செலவினத்திற்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் அமைச்சிற்கு 2016 ம் ஆண்டிற்கு ரூபா 57.491 மில்லியன் மீண்டெழும் செலவினத்திற்காகவும், பிரமாண அடிப்படையிலான கொடைக்கு ரூபா 8 மில்லியனும், மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்திக…
-
- 9 replies
- 657 views
-
-
யாழ்.மேல் நீதிமன்றத்திற்கு வருகை தருவோர் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்துக்கு, வழக்கு நடைபெறும் போது வருகை தருபவர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் மேல் நீதிமன்ற பதிவாளரால் அறிவித்தல் ஒன்று ஒட்டப்பட்டுள்ளது. நீதிமன்றத்தினுள்ளே அலைபேசிப் பாவனையானது தடை செய்யப்பட்டுள்ளது. ஆண்கள், ஜீன்ஸ் அல்லது வேட்டியுடன் சேட் அணிந்து வருகை தரவேண்டும். பெண்கள், சேலை, சல்வார் மற்றும் ஒழுக்கமான நாகரீகமான ஆடைகளை அணிந்து வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. http://onlineuthayan.com/news/5101
-
- 2 replies
- 497 views
-