ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143498 topics in this forum
-
சென்னையில் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாரயணன் மீது தாக்குதல்- பிரபாகரன் கைது!! சென்னை: நாட்டின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாரயணன் மீது சென்னையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியைச் சேர்ந்த பிரபாகரன் என்ற இளைஞரை கைது செய்துள்ளனர். ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவியில் இருந்தவர் எம்.கே. நாரயணன். ஐந்தாண்டு அந்த பதவியில் இருந்தார். இதையடுத்து மேற்கு வங்க ஆளுநராகவும் பதவி வகித்தார். இந்நிலையில், இந்தியாவில் இலங்கை அகதிகளின் எதிர்காலம் என்ற தலைப்பில் சென்னை ஆழ்வார்பேட்டையில் கருத்தரங்கம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் நாராயணன் க…
-
- 23 replies
- 3.1k views
-
-
அடுத்த தீபாவளிக்கு முன்னர் தமிழருக்கு விடிவு பிறக்கட்டும்! - சம்பந்தன் தீபாவளி வாழ்த்து [Tuesday 2015-11-10 07:00] நீண்ட காலமாக பல்வேறு துன்பங்களுக்கு முகங் கொடுக்கும் தமிழ் மக்களுக்கு மிக விரைவில் விடிவு ஏற்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தீபாவளி வாழ்த்துச் செய்திக் குறிப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, 'மிகவும் குதூகலமாக தீபாவளிப் பண்டிகையை கொண்டாடும் அனைவருக்கும் எமது இனிய தீபாவளி நல்வாத்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம். எமது மக்கள் நீண்டகாலமாக பல்வேறு துன்பங்களுக்கு முகங்கொடுத்து வருகின…
-
- 5 replies
- 944 views
-
-
வடக்கு முதல்வரை நீக்குவது தொடர்பில் நான் நடுநிலைவாதி வடமாகாண அமைச்சர்களை மாற்றுதல் மற்றும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரை நீக்குதல் ஆகிய விடயங்கள் தற்போது அதிகமாகப் பேசப்பட்டு வருகின்றன. இந்த இரண்டு விடயங்களிலும் நான் தலையீட்டை மேற்கொள்ளாமல் நடுநிலையாகச் செயற்படுவேன் என வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை நீக்குமாறு கட்சியிடம் கோரியிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், அவுஸ்திரேலியாவில் வைத்துக் கூறியுள்ளமை மற்றும் வடமாகாண அமைச்சர்களை மாற்றுமாறு உறுப்பினர்கள் சிலர் கோரியுள்ளமை தொடர்பில் அவைத்தலைவரிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். …
-
- 6 replies
- 889 views
-
-
deenLankasri38:44 Dr Varadarajan Meeting In UN 19 03 2014Lankasri World18:11 S V Kirupakaran HRC Mitting In - UNLankasri World15:38 Interview with Selvam AdaikalanathanLankasri News8:57 S V Kirupakaran HRC UN Meeting 25 03 2014Lankasri World15:19 S V Kirupakaran InterviewLankasri News13:26 Nilamdeen InterviewLankasri News10:49 Kirupakaran in UNramasamy thurairatnam3:17 …
-
- 0 replies
- 595 views
-
-
25 ஆயிரம் ரூபா ஓய்வூதியத்துடன் காலத்தை ஓட்டிய சந்திரிகா! [Monday 2015-11-09 19:00] தனக்கு ஓய்வூதியமாக 25,000 ரூபா மாத்திரமே வழங்கப்பட்டு வந்தததாகவும், கடந்த வாரம் அமைச்சரவை இதனை 98,500 ரூபாவாக அதிகரித்துள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார். 1994 இல் தான் முதலில் ஜனாதிபதியாக பதவியேற்ற வேளை தனக்கு சம்பளமாக 25,000 ரூபாவே வழங்கப்பட்டதாகவும், 2005 வரை அது மாறவில்லை எனவும் தெரிவித்துள்ள அவர், எனினும் 1994 இல் 14,000ஆக காணப்பட்ட அமைச்சர்களின் சம்பளத்தை அவர்கள் இலஞ்சத்திற்கு அடிமையாக கூடாது என்பதற்காக 35,000 ஆக உயர்த்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார். தனக்கு ஓய்வூதியமாக 25,000 ரூபா மாத்திரமே வழங்கப்பட்டு வந்தததாகவும், கடந்த வாரம் அமைச்சரவ…
-
- 3 replies
- 543 views
-
-
உள் வட்ட அரசியல் மப்றூக் ஆயுத இயங்கங்கள் முதல் அரசியல் கட்சிகள் வரை உள்ளக முரண்பாடுகள் இல்லாதவை என்று எவையும் இல்லை. ஆனானப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அழிவுக்கே உள்ளக முரண்பாடுகள்தான் காரணமாகிப் போயின. சுதந்திரத்துக்குப் பின்னரான இலங்கையை முதன் முதலாக ஆட்சி செய்த ஐ.தே.கட்சியில் ஏற்பட்ட உள்ளக முரண்பாடுகள்தான், அந்தக் கட்சிக்கு எதிராக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உருவாகுவதற்குக் காரணமானது. கடந்த 10 வருடங்களில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குள் ஏற்பட்ட உள்ளக முரண்பாடுகளால், மு.காங்கிரஸ் உடைந்ததோடு அந்தக் கட்சிக்கு எதிராக, அதிலிருந்து பிரிந்து சென்றவர்களாலேயே இரண்டு கட்சிகள் உருவாக்கப்பட்டன. …
-
- 0 replies
- 786 views
-
-
மஹிந்தவுக்கு பெக்கர் போன்று ரணிலுக்கு ஜோர்ஜ் சொரோக் கிடைத்துள்ளார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கொண்டுவந்துள்ள இடைக்கால பொருளாதாரத் திட்டமானது நாட்டின் அரச துறையை முழுமையாக தனியார் மயப்படுத்தி நாட்டை நாசப்படுத்தும் ஜே.ஆர். மற்றும் பிரேமதாசவின் கலப்பு திட்டமாகுமென சாடியுள்ள ஜே.வி.பி. முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவிற்கு ஜேம்ஸ் பெக்கர் கிடைத்ததைப்போல் பிரதமர் ரணிலுக்கு ஜோர்ஜ் சொரோக் கிடைத்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது. சீபா உடன்படிக்கையை மேற்கொண்டு நாட்டின் பொருளாதரத்தை முழுமையாக சீரழிக்க முயற்சிக்கும் புதிய ஆட்சியாளர்கள் சர…
-
- 0 replies
- 412 views
-
-
யாழில் களஞ்சியசாலை மீது தாக்குதல் : 2 இலட்சம் ரூபா பெறுமதியான வாகன உதிரிப்பாகங்கள் திருட்டு யாழ்ப்பாணம் மல்லாகம் கட்டுவன் வீதியிலமைந்துள்ள பல்பொருள் களஞ்சியசாலை மீது இனந்தெரியாதோர் நடத்திய தாக்குதலில் 3 வாகனங்கள் சேதமாக்கப்பட்டுள்ளதுடன் 2 இலட்சம் ரூபா பெறுமதியான வாகன உதிரிப்பாகங்கள் திருடப்பட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச் சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது. முகத்தை மூடிக் கட்டிக்கொண்டு இனந்தெரியாத நால்வர் குறித்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக கடையில் பொருத்தப்பட…
-
- 0 replies
- 373 views
-
-
நீதி அமைச்சர் பதவியில் நீடிப்பாரா? நல்லாட்சி அரசாங்கத்தின் நீதி அமைச்சராக கடமையாற்றி வரும் விஜயதாச ராஜபக்சவின் பதவியில் மாற்றம் செய்யப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது. அவன்ட் கார்ட் சம்பவம் தொடர்பிலான சர்ச்சைகளின் காரணமாக இவ்வாறு பதவியில் மாற்றம் ஏற்படுத்தப்படலாம் என கொழும்பு ஊடகமொன்று எதிர்வு கூறியுள்ளது. அவன்ட் கார்ட் சம்பவம் காரணமாக தொடர்ந்தும் விஜயதாச ராஜபக்சவை நீதி அமைச்சர் பதவியில் நீடிக்கச் செய்வதா அல்லது வேறு ஒருவரை நீதி அமைச்சராக நியமிப்பதா என்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது. நீதி அமைச்சர் பதவியில் மாற்றம் செய்வது குறித்து ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். …
-
- 0 replies
- 341 views
-
-
கைதிகளில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி கொழும்பு - வெலிக்கடை சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழ் அரசியல் கைதிகளில் ஒருவர் மயக்கமுற்ற நிலையில் நேற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்களை விடுதலை செய்யுமாறு கோரி நாடு முழுவதிலுமுள்ள சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையிலே, வெலிக்கடை சிறையிலுள்ள தமிழ்க் கைதி ஒருவர் உடல் சோர்வுற்று மயக்கமடைந்ததை தொடர்ந்து சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும், கு…
-
- 0 replies
- 306 views
-
-
அரசியல் கைதிகளின் பிணை கோரிக்கைக்கு சட்டமா அதிபர் திணைக்களம் இணங்கும் பிணையில் விடப்பட அடையாளம் காணப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் பிணை கோரிக்கைகளுக்கு சட்டமா அதிபர் திணைக்களம் எதிர்ப்பு தெரிவிக்காமல் இணங்கும். இந்த விவகாரம் தொடர்பில் பிரதமர் தலைமையில் செயற்படும் குழுவில் எடுக்கப்பட்டுள்ள முடிவின்படி, அடையாளம் காணப்பட்டுள்ள 32 தமிழ் அரசியல் கைதிகளின் சட்டத்தரணிகள் நாளை நீதிமன்றில் முன்வைக்கும் பிணை கோரிக்கைகளுக்கு இணக்கம் தெரிவிக்கும்படி சட்டமா அதிபர் திணைக்களம் தனது அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளது. இந்த அடிப்படையில் முதற்கட்டமாக 32 தமிழ் அரசியல்கள் பிணையில் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். இன்று காலை, இந்த குழுவின் தலைவர் என்ற அ…
-
- 0 replies
- 387 views
-
-
நல்லாட்சி அரசாங்கத்துக்கு முதல் சரிவு மாரப்பன இராஜினாமா? ஜோனுக்கு நியமனம்? இரு தினங்களுக்குள் முடிவு குழுமமே விலக வேண்டுமாம் நல்லாட்சி வெடித்துச் சிதறியது ரக்ன லங்கா பாதுகாப்பு நிறுவனத்தின் அவன்ட் காட் கப்பல் தொடர்பான விவகாரம் சூடுபிடித்திருந்த நிலையில், சட்டமும் ஒழுங்கும் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் திலக் மாரப்பன தனது அமைச்சுப் பதவியை நேற்று திங்கட்கிழமை இராஜினாமாச் செய்துள்ளார். அவன்ட் காட் விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் நான் ஆற்றிய உரையை அடுத்து, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும் சிவில் சமூகத்தினரும் விமர்சனம் செய்ததுடன் அந்த உரைக்கு எதி…
-
- 0 replies
- 215 views
-
-
'இனச் சுத்திகரிப்பு'ம் தமிழர்களும் வடக்கிலிருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டு 25 வருடங்கள் பூர்த்தியாகியிருக்கின்றன. அதனை நினைவுபடுத்துவதற்காகவென ஆரம்பிக்கப்பட்ட கலந்துரையாடல்கள், மிகவும் உச்ச நிலையை அடைந்திருக்கின்றன என்று சொல்லக்கூடியளவுக்குக் காணப்படுகின்றன. நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஏனைய அரசியல்வாதிகள், பத்தி எழுத்தாளர்கள், சமூக ஊடகப் பயனர்கள், அரட்டை இடங்களென, முஸ்லிம்களின் வெளியேற்றம் தொடர்பிலான கருத்துப் பரிமாற்றங்கள் அதிகரித்திருக்கின்றன. 25 வருடப் பூர்த்தியையொட்டி மாத்திரம் இவை இடம்பெறுகின்றனவா என்றொரு கேள்வி இருந்தாலும், இவ்வாறான கலந்துரையாடல்கள், ஆரோக்கியமானவை. ஏனெனில், திறந்த கலந்துரையாடல்களும் கருத்துப் பரிமாற்றங்களுமில்லாத சமூகம், தேங்கி நிற்கவே செ…
-
- 29 replies
- 3.9k views
-
-
யார் இந்த சோபித தேரர்? சிறுபான்மையினமும் கண்ணீர் சிந்த காரணம் என்ன? [ திங்கட்கிழமை, 09 நவம்பர் 2015, 07:08.59 PM GMT ] தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும், இந்த நாட்டின் ஜனாதிபதியாக வரலாம் என்று கூறி, தமிழ் மக்களின் நன்மதிப்பினைப் பெற்ற ஒரு பெரும்பான்மையின மத தலைவரின் மரண செய்தி, இன, மத, மொழி பேதமின்றி, அனைவரது மனங்களில் துயரத்தினை ஏற்படுத்தியுள்ளது. பொதுபலசேனா போன்ற இனவாதம் பேசும், துறவிகளின் மத்தியில், இன நல்லுறவினை பற்றி பேசிய பௌத்த நெறி துறவியாக இவர் அனைவராலும் கையெடுத்து வணங்கப்பட்டார். சோல்பரி அரசியலமைப்பின் சிறுபான்மையின காப்பீட்டை போல, இலங்கை சிறுபான்மை மக்களின் காப்பீடாகவே இவர் இருந்தார் என்றே சொல்ல முடியும். இலங்கை வரலாற்றிலே பெர…
-
- 1 reply
- 527 views
-
-
சோபித தேரரின் மறைவு நாட்டுக்கு இழப்பாகும் : எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன். சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் அழைப்பாளரும், கோட்டே ஸ்ரீ நாக விஹாரையின் விஹாராதிபதியுமான மாதுலுவாவே சோபித தேரரின் மறைவு நாட்டுக்கே இழப்பாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளார். சமூகத்திலும் மதப் பிரிவுகளிலும் சோபித தேரருக்கு சிறந்த மரியாதை காணப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார். சோபித தேரரின் மறைவு இலங்கை வாழ் மக்களுக்கு ஓர் துயரமான செய்தியேயாகும் என அவர் தெரிவித்துள்ளார். சோபித தேரர் தைரியமாக இலங்கை வாழ் மக்களின் உரிமைகளுக்காக போராடியிருந்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.ஜனநாயகத்திற்காக சோபித தேரர் குரல் கொடுத்து வந்ததாகத் தெரிவித்துள்ளார். நாட்டில் நி…
-
- 2 replies
- 748 views
-
-
யாழ், கிளிநொச்சியில் முழு அடைப்பு போராட்டத்துக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அழைப்பு! [Monday 2015-11-09 20:00] தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டத்திற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி அழைப்பு விடுத்துள்ளது. இந்த போராட்டம் எதிர்வரும் 13 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்படவுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 'கடந்த காலப்பகுதியில் இலங்கை அரசினால் கைது செய்யப்பட்ட பல நூற்றுக் கணக்கான தமிழர்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். யுத்தம் முடிந்து ஆறு …
-
- 1 reply
- 540 views
-
-
அரசியல் கைதிகள் விடுதலை தேசத்துரோகம்! - என்கிறார் உதய கம்மன்பில [Monday 2015-11-09 20:00] தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்வதன் மூலம் அரசாங்கம் தேசத்துரோக செயலில் ஈடுபடுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், குறிப்பாக, பல்வேறு எதிர்ப்பு மற்றும் எதிர்பார்ப்புக்களின் மத்தியில், இன்று தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடையவர்கள் என சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு சிறைச்சாலைகளிலுள்ள கைதிகளில், 30 பேர் விடுவிக்கப்படவுள்ளதாக நீதி அமைச்சு தெரி…
-
- 0 replies
- 390 views
-
-
மாரப்பன விலகலை அடுத்து, சட்டம் ஒழுங்கு அமைச்சு சாகல ரத்நாயக்கவிடம்! - சுவாமிநாதனுக்கு சிறைச்சாலை அமைச்சு [Monday 2015-11-09 20:00] அமைச்சர் திலக் மாரப்பன, சட்டம், ஒழுங்கு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் பதவியினை இராஜினாமா செய்ததனை தொடர்ந்து, அவருடைய அமைச்சுக்கள், அமைச்சர் சாகல ரத்னாயக்க மற்றும் அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். புனர்வாழ்வு, மீள்குடியமர்வு மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் டி.எம் சுவாமிநாதன், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்…
-
- 0 replies
- 379 views
-
-
கைதிகள் விடுதலை குறித்து சிறைச்சாலைக்கு அறிவிக்கப்படவில்லை - குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:- 09 நவம்பர் 2015 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை குறித்து சிறைச்சாலைகளுக்கு அறிவிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. பயங்கரவாத தடைச் சட்டத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள 32 கைதிகள் விடுதலை இன்றைய தினம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கைதிகள் விடுதலை செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. கைதிகளை விடுதலை செய்வதற்கு சில நியதிகளை பின்பற்ற வேண்டியிருப்பதாகவும் அதற்கான நடவடிக்கைகளை சிறைச்சாலை தலைமையகம் இதுவரையில் எடுக்கவில்லை என உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சட்டம் ஒழுங்கு ம…
-
- 1 reply
- 612 views
-
-
ஆயுதக் கப்பல் மிதக்குமா மூழ்குமா? -ஜே.ஏ.ஜோர்ஜ முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தசாப்தகால ஆட்சியை நிறைவுக்கு கொண்டுவந்து, ஜனவரி 8ஆம் திகதி நாட்டில் நல்லாட்சி பிறந்தது. ஜனாதிபதி மைத்திரி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கூட்டில் உருவான நல்லாட்சியை மக்கள் இன்னுமே வாய்பிளந்து பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றனர். நல்லாட்சி, மக்களுக்கு ஏதாவது நல்லதைச் செய்யவேண்டும் என்ற முனைப்புடன் செயற்படும் ஏககாலத்தில், முன்னாள் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற இலஞ்சம் - ஊழல் தொடர்பில் அலசி ஆராய்ந்துகொண்டே இருக்கின்றது. இதில், சட்டவிரோதமான ஆயுதங்கள் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த மிதக்கும் ஆயுதக் கப்பல் என்ற விவகாரம் அமைச்சரவைக்குள் பெரும் …
-
- 0 replies
- 427 views
-
-
78 இந்திய மீனவர்கள் யாழ். நீதிமன்றங்களால் விடுதலை யாழ். சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 78 இந்திய மீனவர்கள் இன்று ஊர்காவற்துறை மற்றும் பருத்தித்துறை நீதிமன்றங்களினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சட்டமா அதிபரின் பணிப்புரைக்கு அமைவாக குறித்த மீனவர்கள் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். பருத்தித்துறை மற்றும் நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டவர்கள் என்ற குற்றச்சாட்டில் காங்கேசன்துறை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு, யாழ். மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு, பருத்தித்துறை மற்றும் ஊர்காவற்துறை நீதிமன்றங்களில் ஆஜர்ப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப…
-
- 0 replies
- 504 views
-
-
ஊடகங்களின் செய்திகளைப் பார்த்து என்னை கேள்வி கேட்கக் கூடாது ஊடகங்களின் செய்திகளை பார்த்து என்னை கேள்வி கேட்கக் கூடாது என மாணவி வித்தியா கொலை வழக்கு சந்தேக நபர்களுக்கு நீதவான் எஸ்.லெனின்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். இன்றைய தினம் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் வித்தியாவின் கொலை வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன் போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்துள்ளார். சந்தேகநபர்கள் நீதவானை நோக்கி பத்திரிகையில் எம்மை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டனர். இதனை செவிமடுத்த நீதவான் அது பற்றி எனக்கு தெரியாது எனவும் ஊடகங்களில் வருவதை பார்த்து என்னை கேள்வி கேட்கக் கூடாது என சந்தேக நபர்கள…
-
- 0 replies
- 321 views
-
-
அவன்ட்கார்ட் பற்றி நான் கூறியவை அனைத்துமே உண்மை– திலக் மாரப்பன அவன்ட் கார்ட் ஆயுதக் கப்பல் குறித்து தாம் கூறியவை அனைத்துமே உண்மையே என சட்டம் ஒழுங்கு அமைச்சர் மாரப்பன தெரிவித்துள்ளார். தமக்கு எதிராக சில தரப்பினரும் சில கட்சிகளும் செய்து வரும் விமர்சனங்களை கண்டு எந்த வகையிலும் அஞ்சப் போவதில்லை என அவர் சுட்டிக்கட்டியுள்ளார். ஊடகங்களில் பிரபல்யம் அடையும் நோக்கில் சிலர் தமக்கு எதிராக இவ்வாறு பிரச்சாரம் செய்து வருகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு பிரல்யம் அடையும் நோக்கில் பிரச்சாரத்தில் ஈடுபடுவோர் பற்றி மக்கள் நன்கு அறிந்து வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். அவன்ட் கார்ட் சம்பவம் குறித்த விடயங்கள் உண்மையா என எமத…
-
- 1 reply
- 753 views
-
-
வடக்கு முதல்வரை கட்சியிலிருந்து நீக்குமாறு சுமந்திரன் எம்.பி வேண்டுகோள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை கட்சியிலிருந்து நீக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தமது கட்சியிடம் கேட்டிருக்கின்றார். ஆஸ்திரேலியா சென்றிருக்கும் அவர் அந்நாட்டு வானொலி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயேமேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும்தெரிவிக்கையில் முதலமைச்சர்விக்னேஸ்வரனை இந்தப் பொறுப்புக்கு அழைத்து வந்தவர்களில் நானும் முக்கியமான ஒருவன். அவருக்கு வடமாகாண சபையை நிர்வகிக்கின்ற பொறுப்பை கட்சி கொடுத்திருந்தது. கடந்த நாடாளுமன்றப் பொதுத் தேர்தலின் போது கட்சிக்கு சார்பாகச் செயற்பா…
-
- 4 replies
- 1.1k views
-
-
வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் நீக்கமா? சம்பந்தன் விளக்கம் வடக்கு மாகாண முதல்வர் பதவியில் இருந்து விக்னேஸ்வரன் நீக்கப்பட்ட உள்ளதாக வந்த செய்திக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக தனியார் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், "கடந்த நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றபோது முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறிய சில கருத்துகள் மற்றும் அவரின் சில நடவடிக்கைகள் சம்பந்தமாக சில கேள்விகள் எழுப்பப்பட்டது உண்மை. அது தொடர்பாக அவரிடம் நாங்கள் இன்னும் பேசவில்லை. பேச இருக்கிறோம். எனினும், கட்சியிலிருந்து அவரை நீக்குவதற்கு முடிவு எடுக்கப்பட்டதாக யாரும் கூறியிருந்தால் அது தவறு" என தெரிவித்துள்ளார். …
-
- 2 replies
- 855 views
-