ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142623 topics in this forum
-
பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன் அண்மையில் இலங்கைக்கு வருகை தந்த பொழுது யாழ்ப்பாணத்துக்கும் வந்து வடக்கு மாகாண மக்கள் தொடர்பாக கரிசனையுடன் அவர்களின் நலன்களில் கவனம் செலுத்தியமைக்காக வடக்கு மாகாணசபை அவரைப் பாராட்டி வரவேற்கும் தீர்மானம் ஒன்றை நேற்று சபை அமர்வின்போது நிறைவேற்றப்பட்டது. வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனால் முன்மொழியப்பெற்ற தீர்மானத்தில் பின்வரும் விடயம் அடங்கியிருந்தது. இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்ததன் பின்னர் வெளிநாட்டு அரசுத் தலைவர் ஒருவர் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த முதல் நிகழ்வாக அமைந்த பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூனின் வரலாற்று முக்கியத்துவமிக்க வருகையை இந்தச் சபை வரவேற்கின்றது. பிரிட்டன் பிரதமர் தமது யாழ்ப்பாணப் பயணத்தின் போது காட்டிய உணர்வு…
-
- 0 replies
- 237 views
-
-
மைத்திரியின் உறுதிமொழியைப் புறந்தள்ளி அரசியல் கைதிகளின் வழக்கு இடமாற்றம் வவுனியா மேல் நீதிமன்றில் 4 ஆண்டுகளாகத் தொடரும் வழக்கை வேறு நீதிமன்றங் களுக்கு இடமாற்றவேண்டாம் எனக் கூறி தமிழ் அரசியல் கைதிகள் மூவர் உணவு ஒறுப்புப் போராட்டம் நடத்தியிருந்த நிலையிலும், அந்த வழக்கை அநுராதபுரம் மேல் நீதிமன் றுக்கு மாற்றுமாறு சட்டமா அதிபர் திணைக்களத்தால் வவுனியா மேல் நீதிமன்றுக்கு கடந்த 13ஆம் திகதி கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அவர்கள் மூவருக்கு எதிரான வழக்கு வவுனியா மேல் நீதிமன்றிலேயே விசாரிக்கப்படும் என்று அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாள…
-
- 0 replies
- 146 views
-
-
புலமைப் பரிசில் பரீட்சையில்.. மட்டக்களப்பு கல்வி வலயம், இலங்கையில் இரண்டாம் இடம்!. இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட அகில இலங்கை ரீதியான தரம் ஐந்து 2021ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையின் பகுப்பாய்வுகளின் படி மட்டக்களப்பு கல்வி வலயம் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் சித்தி பெற்ற அடிப்படையில் இலங்கையில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளதாக மட்டக்களப்பு வலய கல்விபணிப்பாளர் சுஜாதா குலேந்திரகுமார் தெரிவித்தார். மட்டக்களப்பு வலய கல்வி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், ”2021ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் வெளிவந்த நிலையில் அதனைத் தொடர்ந்து …
-
- 5 replies
- 493 views
-
-
ஆண்டாள்குளம் துயிலுமில்லத்துக்கு அருகில் 55 ஏக்கர் காணியை கேட்கிறது இராணுவம்! [Tuesday, 2014-02-04 07:54:06] News Service மாந்தை கிழக்குப்பிரதேச செயலர் பிரிவில் 55 ஏக்கர் அரச காணியைத் தமது தேவைக்கு வழங்குமாறு கேட்டு படையினர் பிரதேச செயலருக்கு விண்ணப்பித்துள்ளனர். மாந்தை கிழக்குப் பிரதேசத்தில் ஆண்டான்குளத்தில் விடுதலைப் புலிகளின் மாவீரர் துயிலும் இல்லம் அமைக்கப்பட்டிருந்த இடத்தை அபகரித்த பாதுகாப்புப் படையினர் அருகாமையிலுள்ள விளையாட்டுக் கழகத்திற்குச் சொந்தமான காணியையும் சேர்த்து முள்ளுக் கம்பிவேலி அமைத்துள்ளனர்.பாதுகாப்புப் படையினரால் விளையாட்டு மைதானம் அபகரிக்கப்பட்டதையடுத்து கழகத்தின் நலன் கருதி பிரதேச செயலாளரினால் பிறிதொரு காணி விளையாட்டுக் கழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளத…
-
- 0 replies
- 300 views
-
-
மட்டக்களப்பில் மூன்று வருடங்களாக ஓடாத கடிகாரம் கிழக்கு மாகாண முன்னாள் மாகாணசபைக் காலத்தில் மட்டக்களப்பு மத்திய பேருந்து பஸ் தரிப்பு நிலையத்தில் நிறுவப்பட்ட மணிக்கூடு, கடந்த சுமார் மூன்று வருட காலமாக ஓடாமல் ஒரே நேரத்தையே காட்டி வருகிறது. பின்தங்கிய பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் பலரும் மட்டக்களப்பு மத்திய பேருந்து நிலையம் வழியாகவே தமது போக்குவரத்து நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். இதன்போது, சிலவேளைகளில் ஓடாத இந்த மணிக்கூட்டைப் பார்த்து நேரத்தைக் கணக்கிட்டுக்கொள்வதாகவும், இதனால் அவர்கள் சில சங்கடங்களுக்கு முகங்கொடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கின் பிரதான நகராக விளங்கும் மட்டக்களப்பின் பேருந்து நிலையத்தில் உள்ள இந்தப் ப…
-
- 0 replies
- 323 views
-
-
விமான நிலையங்களுக்கு செல்வோருக்கான... முக்கிய தகவல் வெளியானது! விமான நிலையங்களுக்கு பிரவேசிப்போர் மற்றும் விமான நிலையங்களில் இருந்து வெளியேறுவோர் பயண சீட்டு மற்றும் விமான கடவுச்சீட்டு ஆகியவற்றை ஊரடங்கு அனுமதிப்பத்திரங்களாக பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவில் விமான போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் இன்று(சனிக்கிழமை) மாலை 6 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை காலை 6 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையிலேயே சிவில் விமான போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1274514
-
- 2 replies
- 221 views
-
-
புலம்பெயர் தமிழர்கள் எழுப்பும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டிய கடப்பாட்டிலிருந்து நீங்கள் விலகிச் செல்ல முடியாது! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அறிக்கைப் புதிராளி திரு. காந்தன் அவர்களுக்கு! முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்குப் பின்னர் ஈழத் தமிழர்கள் யாரும் யாரையும் முழுமையாக நம்புவதற்குத் தயாராக இல்லை. இதில் கூட்டமைப்பினரும் விதிவிலக்காக இருக்க முடியாது. தமிழ் மக்களுக்கு ஏற்படும் சந்தேகங்களைத் தீர்க்க வேண்டிய அவசியம். அந்த மக்களுக்காக அரசியல் நடாத்தப்போவதாக முன் நிற்பவர்கள் அக்கினிப் பிரவேசம் செய்து தங்கள் தூய்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திலேயே உள்ளார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நடவடிக்கைகளால் எழுந்த சந்தேகங்கள் தீர்க்கப்படாமல் இருக்கும்வரை, என் போன்ற…
-
- 0 replies
- 966 views
-
-
தான் பணி புரியும் வீட்டுக்கு இலங்கைப் பெண்ணொருவர் தீவைத்த சம்பவம் ஒன்று சவூதி அரேபியாவில் இடம்பெற்றுள்ளதாக சவூதி அரேபிய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தனது எஜமானர்கள் வீட்டில் இல்லாத போதே இந்தப் பெண் அந்த வீட்டுக்குத் தீ வைத்துள்ளார். குறித்த வீட்டுக்குத் தீ வைக்கப் போவதாக இலங்கைப் பணிப் பெண் முன்னர் அச்சுறுத்தல் விடுத்திருந்தார் என வீட்டின் உரிமையாளர் பொலிஸாருக்குத் தெரிவித்துள்ளார். இதனையடுத்து இந்தப் பெண் சவூதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இருப்பினும் வீட்டின் உரிமையாளரின்; தவறான நடத்தையைக் கண்டித்து அதற்குப் பழிவாங்கும் வகையில் இலங்கைப் பணிப் பெண் தீ வைத்திருக்கலாமென சந்தேகிப்பதாக சவுதி அரேபிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். - See more at: http://…
-
- 5 replies
- 727 views
-
-
புத்தாண்டில்... மின்வெட்டு, அமுல் படுத்தப்படாது என அறிவிப்பு! ஏப்ரல் மாதம் 13 மற்றும் 14ம் திகதிகளில் மின்சாரம் தடை ஏற்படுத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். சித்திரை புத்தாண்டு தினங்களை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1275706
-
- 0 replies
- 233 views
-
-
உறவுகளே! எமது தேசியத்தின் கொள்கைகளில் உறுதியாகவுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினருக்கு புலம்பெயர் அமைப்பான பிரான்ஸ் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்புத் தனது ஆதரவைத் தெரிவிக்கின்றது. சைக்கிள் சின்னத்தில், இலட்சியத்தை நோக்கிய பாதையில் பயணிக்கவுள்ள இவ் அணியினருக்கு தாயகத்திலுள்ள எமது உறவுகளும் ஆதரவளித்து, வெற்றி பெற வைத்து, உறுதியான அரசியல் அணியை உருவாக்க முன்வரவேண்டும். கடந்த மே மாதத்திற்குப் பின்னான சூழ்நிலையில் எதிரிகளின் உதவியுடன் பல துரோக சக்திகள் தேர்தலில் களமிறங்கியுள்ள நிலையிலும் ஊடகங்களில் நாளுக்கு நாள் வெளியாகும் திரிபு படுத்தப்பட்ட, அல்லது தவறான செய்திகள், கட்டுரைகள், விளம்பரங்கள் என்பவற்றால் மக்கள் யாரை நம்புவது என்கின்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள இந் …
-
- 3 replies
- 640 views
-
-
அக்கராயன் கரும்புத்தோட்டக் காணியை தாரை வார்த்து விட்டார் முதலமைச்சர் Share அக்கராயன் கரும்புத் தோட்டக்காணியான 210 ஏக்கர் நிலத்தை வடக்கு முதல்வர் முறையற்ற விதத்தில் குத்தகைக்கு விட்டுள்ளார். அதனை அவர் மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என வடக்கு மாகாண சபையில் தீர் மானிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான கவனவீர்ப்பை மாகாணசபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை நேற்று முன்தின அமர்வில் கொண்டு வந்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது: அக்கராயன் பகுதி கரும்புத் தோட்டக்காணியை முதல்வர் சண்டியர்களுக்கும், செல்வந்தர்களுக்கு…
-
- 0 replies
- 282 views
-
-
120,000 மெட்ரிக் தொன், எரிபொருள்... இலங்கைக்கு! இரண்டு கப்பல்கள் மூலம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 120,000 மெட்ரிக் தொன் எரிபொருளை இறக்கும் பணி தொடங்கியுள்ளது. 38 மில்லியன் டொலர்கள் செலுத்தப்பட்டதன் பின்னர் எரிபொருளை இறக்கும பணிகள் தொடங்கியதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இதில் விமான சேவைக்கு தேவையான எரிபொருள் மற்றும் டீசல் என்பன அடங்குவதாகவும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இதேவேளை எதிர்வரும் பருவ மழைக்கு முன் நிலக்கரி தேவையான நிலக்கரியும் கிடைத்துள்ளது என்றும் அவர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1277472
-
- 0 replies
- 172 views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பினரால் ஒழுங்கமைக்கப்பட்ட விசேட கலந்துரையாடல் ஒன்று தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் இடம்பெற்று வருகின்றது. அதன்படி இன்று காலை 10மணிக்கு யாழ் பொது நூலக மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமாகிய இந்த விசேட கலந்துரையாடல் பிற்பகல் வரை இடம்பெறவுள்ளது. மேலும் இந்த விசேட பொது கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் , வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகளின் உறுப்பினர்களும் கலந்து கொண்டுள்ளனர். எனினும் குறித்த விசேட கலந்துரையாடலானது இரணைமடு நீர்விநியோகத்திட்டம் தொடர்பில் தீர்வுகளை எட்டுவதற்காகவே கூட்டப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை நேற்று கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அவர்கள் கிளிநொச்சிக்கு சென்று விவசாயிகளை நேரடியாக சந்தித்து க…
-
- 0 replies
- 222 views
-
-
புலமைபரிசில் பரீட்சையில் சித்திபெற்ற 35 மாணவர்களுக்கு பொலிசாரால் பரிசு கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தில் புலமைபரிசில் பரீட்சையில் சித்திபெற்ற 35 மாணவர்களுக்கு இன்று பொலிசாரால் பரிசு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன. குறித்த நிகழ்வு இன்று காலை 10.30 மணியவில் பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதி பொலிஸ்மா அதிபர் வெலிக்கன்ன, வடமாகாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கணேசநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். http://tamil.adaderana.lk/news.php?nid=96327
-
- 0 replies
- 264 views
-
-
யாழ் குடாநாட்டில் தனியாருக்கு சொந்தமான காணி மற்றும் கட்டிடங்களில் தங்கியிருக்கும் இராணுவத்தினர் அவற்றிலிருந்து விலகிச்செல்லவிருப்பதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்தார். யாழ் குடாநாட்டுக்கான விஜயத்தினை கோத்தபாய ராஜபக்ஸ நேற்று மேற்கொண்டிருந்த நிலையிலேயே, இவ்வாறு கூறினார். இதேவேளை, ஆணையிறவில் படையினரின் நினைவுத்தூபியை கோத்தபாய ராஜபக்ஸ இன்று திறந்துவைத்தார் http://www.tamil.dailymirror.lk/செய்திகள்/2119
-
- 3 replies
- 638 views
-
-
நம்பிக்கையில்லாப் பிரேரணை... அடுத்த வாரம், சமர்பிக்கப்படும் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். குறித்த இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையானது தற்போதைய அரசாங்கத்தை ஆதரிக்கும் மற்றும் எதிர்க்கும் தரப்பினரை வெளிப்படுத்தும் என அவர் கூறியுள்ளார். எனவே எதிர்வரும் வாரம் நாட்டின் எதிர்காலத்திற்கு மிகவும் தீர்க்கமானதாக அமையும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார். இதேவேளை ஐக்கிய மக்கள் சக்தி ஒரு இடைக்கால அல்லது சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு ஒருபோதும் ஆதரவளிக்காது என்றும் அவர் கூறியுள்ளார். தற்போதைய பொருளாத…
-
- 0 replies
- 148 views
-
-
நேரலை: நாம் தமிழர் இயக்க அரசியல் கட்சித்தொடக்க மாநாடு இயக்குநர் சீமானின் நாம் தமிழர் அரசியல் கட்சி மாநாடு நேரலையாக நமது மீனகத்தில்… சீமான், மலேசியா பினாங்கு மாநில துணை முதல்வர் ராமசாமி, தமிழருவி மணியன் மற்றும் பலர் உரையாற்றுகிறார்கள்… http://meenakam.com/
-
- 1 reply
- 874 views
-
-
தெற்கு அரசியலுக்காக, வடக்கில் ஆயுதப்போராட்டத்தை உயிர்ப்பிக்க முனைகிறது அரசாங்கம்! – சிவசக்தி ஆனந்தன் குற்றச்சாட்டு. [sunday, 2014-03-16 07:51:41] இந்த அரசாங்கத்திற்கு தமிழீழ விடுதலைப் புலிகளையும் ஆயுதப் போராட்டத்தையும் வலிந்து இழுக்கும் தேவை இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். வவுனியா நகரில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். “ஜனநாயக ரீதியான போராட்டத்தை சர்வதேச சமூகமும் மனித உரிமை அமைப்புக்களும் கைது செய்யப்பட்டுள்ள ஜெயக்குமாரியின் விடுதலைக்கு குரல் கொடுக்கவேண்டும் என நாம் பகிரங்கமாக வேண்டுகோள் விடுக்கின…
-
- 0 replies
- 240 views
-
-
இனத்துவேசத்தை பேசும் சில தமிழ் அரசியல் தலைவர்கள் வட கிழக்கு இணைப்பதற்கு மட்டக்களப்பு மாவட்டத்திலே இருக்கின்ற முஸ்லிம்களுடைய வாக்குகளை என்ன மனநிலையில் கேட்க முடியும் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். கிராமிய பொருளாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் வறிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் திக்கோடை தும்பாலை சிறுகல் உடைக்கும் தொழிலாளர்களுக்கு கூரைத்தகடு வழங்கும் நிகழ்வு தும்பாலை பால முருகன் ஆலய முன்றலில் இடம்பெற்ற போது உரையாற்றுகையில் மேற்சொன்னவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்- மட்டக்களப்பு மாவட்டத்தில் சில தமிழ் அரசியல் தலைவர்கள் இன ரீதியாக அல்லது தமிழ் முஸ்லிம் உறவு ரீதியாக மிகுந்த துவேசத்த…
-
- 0 replies
- 497 views
-
-
ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து... வெளியேறினார் ஹரீன்! ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்ணான்டோ, அக்கட்சியிலிருந்து விலகி சுயாதீனமாக செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளார். இன்று(புதன்கிழமை) மாலை நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தி கூட்டத்தில் கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாஸவிடம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தனது எதிர்கால அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் இறுதித் தீர்மானம் எதனையும் எடுக்கவில்லை எனவும் தற்போது சுயாதீனமாக நாடாளுமன்றில் செயற்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1281503
-
- 3 replies
- 229 views
-
-
பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் தற்போது உயிருடன் இல்லை: கோட்டபாய திகதி: 28.05.2010 // தமிழீழம் முள்ளிவாய்க்கால் பகுதியில் முடிவுற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் பின் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சென்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய அரசியல் பிரமுகர்களில் பலர் சிறீலங்கா இராணுவத்தால் கொல்லப்பட்டு விட்டதாக செய்திகள் வெளியாகின்றன. தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் என்று சுமார் 10,000 பேரின் பெயர் விபரங்களை பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டிருந்த நிலையில் இந்த பட்டியலில் அரசியல், மற்றும் இராணுவப் பிரிவை சேர்ந்த முன்னணி உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது. போரின் பின் சிறீலங்கா இராணுவத்திடம் சரணடைந்த புதுவை இரத்தினது…
-
- 0 replies
- 826 views
-
-
வட்டுக்கோட்டை பகுதி நேற்றிரவு முதல் இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டு 300 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இன்று காலை முதல் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு அருகிலுள்ள திடலுக்கு கொண்டு செல்லப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது. தருமபுரத்தில் ஜெயக்குமாரியின் வீடு சுற்றி வளைக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்ட போது பொலிசாரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடிய நபர் வட்டுக்கோட்டையில் மறைந்திருப்பதாக இராணுவத்தினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நேற்றிரவு தொடக்கம் இராணுவத்தினரும் பொலிசாரும் இணைந்து அப்பகுதியில் சுற்றிவளைப்பில் ஈடுபட்டுள்ளதாக பொதுமக்கள் கருதுகின்றனர். இரவிரவாக நடைபெற்ற தேடுதலில் இராணுவத்தினர் மதில் பாய்ந்தும் , வேலிகளை வெட்டியும் வீடுகள…
-
- 0 replies
- 157 views
-
-
வடக்கு, கிழக்கு... இணைந்த தாயகத்திலே, தமிழ் மக்களுக்கான உரிமையை... வழங்க வேண்டும் – அரியநேத்திரன் வடக்கு கிழக்கு இணைந்த தாயகத்திலே தமிழ் மக்களுக்கான உரிமையை வழங்க வேண்டும் என்ற அழுத்தத்தை இந்தியா உட்பட சர்வதேசம் இலங்கை அரசாங்கத்திற்கும் புதிய பிரதமருக்கும் கொடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் எற்பாட்டில் இடம்பெறும் பொத்துவில் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரையான பேரணியின் இரண்டாம் நாள் மட்டக்களப்பில் ஆரம்பித்த வேளையில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது சகோதரர் நடத்திய இனப்படுகொலைக்க…
-
- 0 replies
- 85 views
-
-
ராம ராவணன் என்ற மலையாளப் படத்தின் பத்திரிகையாளர் சிறப்புக் காட்சி நேற்று திரையிடப்பட்டது. இப்படம் தமிழ் ஈழப் போராளிகளைக் கொச்சைப்படுத்தும் விதத்தில் எடுக்கப்பட்டிருக்கிறது என்று பத்திரிக்கையாளர்கள் கொதித்தனர். இந்த விசயம் நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர் இந்தப்படத்தை உலகம் முழுவதும் திரையிட விடமாட்டோம் என்று அறிவித்துள்ளார். அவர், ‘’சிங்களத்தையும் புத்தத்தையும் உயர்த்திப் பிடிக்கும், தமிழினத்தைக் காட்டுமிராண்டிகளாகச் சித்தரிக்கும் இந்தப் படத்தை, சமய சகுனிப் படமாகவே கருதுகிறோம். தமிழினத்துக்கும் தமிழீழ விடுதலைக்கும் களங்கம் கற்பிக்கவே இப்படத்தை இங்கு வெளியிட முனைகிறார்கள் என்பது உறுதியாகத் …
-
- 0 replies
- 1.5k views
-
-
சம்பந்தன் தொடர்பில் சபாநாயகரிடம் முறைப்பாடு கூட்டமைப்பு எம்.பி. சிவசக்தி ஆனந்தன் சபையில் முன்வைத்தார் (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) இடைக்கால அறிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்ற எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் அனுமதி மறுத்துள்ளார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அரசியலமைப்பு சபையின் தலைவர் கரு ஜெயசூரியவிடத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இச்சமயத்தில் எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன், மாவை.சோனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன் உள்ளட்ட எதிர்க்கட்சியான கூட்டமைப்பின் எம்.பி.க்கள் சபையில் பிரசன்னமாகியருந்து அமைதியாக முற…
-
- 6 replies
- 601 views
-