Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பதவியைப் பிடிக்கும் பேராசை தனக்கில்லை என்கிறார் சந்திரிகா! - மகிந்தவை சூசகமாக சாடினார்[Tuesday 2015-06-30 07:00] ஜனநாயகம் நிறைந்த நாடொன்றாக எமது நாட்டை கட்டியெழுப்ப உச்சக்கட்ட உதவிகளை புரிவேனே தவிர மற்றவர்களைப் போல் பதவியில் இருக்க வேண்டுமென்று எந்தப் பேராசையும் எனக்குக் கிடையாது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்தார். தனது பிறந்த தினத்தை முன்னிட்டு நேற்று கண்டியிலுள்ள ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் செய்து அங்கு இடம்பெற்ற பூஜை வழிபாடுகளில் சந்திரிகா கலந்துகொண்டார். அஸ்கிரிய மற்றும் மல்வத்த மஹாநாயக்க தேரர்களினது ஆசிர்வாதங் களையும் பெற்றுக்கொண்ட பின்னர் ஊடகவியலாளர் மத்தியில் கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்ட விடயத்தை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க…

  2. அதிகாரத்தில் இருந்தபோதே வெல்ல முடியாத மகிந்தவினால் இனி தலையெடுக்க முடியாது! - அனுரகுமார[Tuesday 2015-06-30 07:00] அரச வளங்கள், பெருந்தொகையான பணம், இராணுவத்தினரைக் கையில் வைத்துக்கொண்டு நடத்திய தேர்தலில் தோல்விகண்ட மகிந்த ராஜபக்சவினால் மீண்டுமொரு தேர்தலில் வெற்றிபெற முடியாது என ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.கடுவலை தேர்தல் தொகுதியில் நடைபெற்ற ஜே.வி.பியின் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர், கடந்த காலங்களில் இழைத்த தவறுகளைக் கொண்டு பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு கற்றுக்கொண்ட பாடங்களுக்கு அமைய நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்லுவதற்கு ஜே.வி.பி தலைமைத்துவம் வழங்கும். சகல வளங்களையும்…

  3. தேர்தல் வியூகங்களை வகுப்பதில் சிறுகட்சிகள் தீவிரம்! [Tuesday 2015-06-30 07:00] பிரதான கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவதா? தனித்துப் போட்டியிடுவதா? என்பது குறித்து தீர்மானிப்பதற்காக சிறு மற்றும் சிறுபான்மை கட்சிகள் மும்முரமாக ஆராய்ந்து வருகின்ன. சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயகக் கட்சி தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளதோடு ஜே. வி. பி. ஜனசெத பெரமுன என்பனவும் தனித்துப் போட்டியிடுவதாகத் தெரிவித்துள்ளன. இம்முறை பொதுபல சேனாவும் தேர்தலில் குதிக்க தீர்மானித்துள்ளது. இது குறித்து பொதுபல சேனா நேற்று அறிவித்துள்ளதோடு கட்சிச்சின்னமாக நாக பாம்பை பயன்படுத்த ஆணையாளரின் அனுமதியை எதிர்பார்த்துள்ளதாகத் தெரிய வருகிறது. இதேவேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கி…

  4. எல்லா அமைச்சர்களும் பதவியில் தொடர்வார்களாம்! - என்கிறார் விஜயதாஸ ராஜபக்ச[Tuesday 2015-06-30 07:00] பொதுத்தேர்தல் நிறைவடைந்து புதிய அமைச்சர்கள் பதவியேற்கும் வரை தற்போதைய அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்களின் பதவிகள் நடைமுறையில் இருக்கும் என்று நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார். 19வது அரசியலமைப்பு திருத்தத்தின்படி, பொதுத்தேர்தலின் முன்னர் காபந்து அரசாங்கத்தின் அமைச்சரவை அமைச்சர்கள் மாத்திரமே செயற்பட முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் 19வது திருத்தம், பொதுத்தேர்தல் முடிவடைந்ததன் பின்னரே நடைமுறைக்கு வரும் என்பதால் அமைச்சரவை அமைச்சர்கள், ராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்களின் பதவிகள் இந்த பொதுத்தேர்தலின் போது ரத்துச் செய்யப்படாது என்று அமை…

  5. இறுதிப்பட்டியல் தயாரிக்க சுதந்திரக் கட்சியின் வேட்புமனுக் குழு இன்று கூடுகிறது! [Tuesday 2015-06-30 07:00] எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடும் பொருத்தமான வேட்பாளர்களை தெரிவு செய்யும் , ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பு மனுக் குழு இன்றைய தினம் கூடவுள்ளது.கம்பஹா, கொழும்பு, குருணாகல் மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு வழங்குமாறு கோரி விண்ணப்பம் செய்தவர்கள் முதலில் அழைக்கப்பட உள்ளனர். நாடாளுமன்றை பிரதிநிதித்துவம் செய்தவர்களை தவிர்ந்த ஏனையவர்கள் நேர்முகத் தேர்விற்காக அழைக்கப்பட உள்ளனர். எதிர்வரும் நாட்களில் ஏனைய மாவட்டங்களுக்கான நேர்முகத் தேர்வும் நடைபெறவுள்ளது. மஹிந்த ராஜபக்ச தரப்பு எவ்வாறு போட்டியிட உள்ளது என்பது பற்றிய இறுதித் தீர்…

  6. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதான பங்காளிக் கட்சியான தமிழரசுக் கட்சியின் கழுத்தை சுருக்குக் கயிறுகள் பலவும் இறுக்கத் தயாராகி உள்ளன. தமிழரசுக் கட்சியை ஆரம்பித்தவர் ஈழத்து காந்தி என்று அறியப்படுகின்ற எஸ். ஜே. டபிள்யூ. செல்வநாயகம் ஆவார். அன்றில் இருந்து அகிம்சைக் கட்சியாக தமிழரசுக் கட்சி வெளிப்பட்டு வந்திருக்கின்றது. குறிப்பாக 2009 ஆம் ஆண்டு நான்காம் ஈழப் போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பிற்பாடு தமிழரசுக் கட்சி இரத்தக் கறை படாத கட்சியாக வெளிப்படையாகவே காட்டிக் கொள்ள பார்க்கின்றது. புலிகளை சர்வதேச சமூகமும், ஸ்ரீலங்கா அரசாங்கமும் பயங்கரவாதிகளாக பிரகடனப்படுத்தி உள்ள சூழலிலேயே தமிழரசுக் கட்சி தலைவர்கள் இவ…

    • 0 replies
    • 564 views
  7. பருத்தித்துறை இலங்கை வங்கிக்கு அண்மையில் இயங்கி வரும் விபசார விடுதி மீது நடவடிக்கை எடுக்குமாறு காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் அத்தியட்சகருக்கு, பருத்தித்துறை மாவட்ட நீதவான் மா.கணேசராசா, திங்கட்கிழமை (29) உத்தரவு பிறப்பித்துள்ளார். மேற்படி பகுதியில் நபரொருவர் விபசார விடுதியொன்றை நடத்தி வருவதாக பொதுமக்கள் கடிதம் மூலம் பருத்தித்துறை நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வந்தனர். அத்துடன், புலனாய்வு பொலிஸாரும் இந்தத் தகவலை உறுதிப்படுத்தினர். இதனையடுத்தே விடுதியை முற்றுகையிட்டு நடத்துநரைக் கைது செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். http://www.tamilmirror.lk/149342#sthash.R4mitrl2.dpu

  8. ரணில் அரசுட்ன இதயங்களால் இணைந்திருக்கிறோம் என்று தலைவர்கள் சொன்னதை ஏற்றுக் கொண்டோ என்னவோ தொண்டர்களுமம் பெருமளவில் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துள்ளதாக ஆங்கில இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தில் தமீழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த 1000 பேர்வரையில் தயா கமகே முன்னிலையில் ஐக்கிய தேசியக் கட்சியி;ல இணைந்துள்ளதாக அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. Merely days after the announcement of the general election, one thousand Tamil National Alliance members in the Ampara District joined the United National Party. They accepted membership of the party from its National Organizer Daya Gamage. Accordingly, 400 TNA members joined the UNP a…

  9. திருகோணமலை பொதுச்சந்தையில் ஜனாதிபதி மைத்திரி! [Monday 2015-06-29 20:00] ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று திருகோணமலை பொதுச்சந்தையினைப் பார்வையிட்டுள்ளார். அங்கு விலைவிபரங்களை விசாரித்து வர்த்தகர்களுடன் அவர் கலந்துரையாடியுள்ளார். இதேவேளை, ஜனாதிபதி சந்தைக்கு வந்திருந்த பொதுமக்களிடமும் தகவல்களைக் கேட்டறிந்துள்ளார். இதன் போது மக்கள் தமது பிரதேசத்தில் இருக்கும் குறை நிறைகளை ஜனாதிபதிக்கு தெரிவித்துள்ளனர். http://www.seithy.com/breifNews.php?newsID=135039&category=TamilNews&language=tamil

  10. எம்மை நாமே ஆளுகின்ற அதிகாரங்கள் வேண்டும்! - இரா.சம்பந்தன் [Monday 2015-06-29 07:00] எமது மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கின்ற, எம்மை நாமே ஆளுகின்ற அதிகாரங்கள் வேண்டும். அதனைத் தான் நாம் கோருகின்றோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். திருகோணமலை தமிழர் அபிவிருத்தி ஒன்றியத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட திருகோணமலை மாவட்டத்தின் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆயர் அதிவணக்கத்திற்குரிய நோயல் இம்மானுவலை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று சர்வோதய ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது. இந்தநிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், மக்கள் தமது அனுபவம் மற்றும் அறிவின் அடிப்படையில் தாமக…

  11. நடந்துமுடிந்த ஜனாதிபதி தேர்தலின் போது வாக்களிப்பின் போது வாக்களிப்பு நேரத்தை நீடிப்பது தொடர்பினில் டாண் தொலைக்காட்சி எந்தவொரு செய்தி அறிக்கையிடலையும் செய்திருக்கவில்லையென இலங்கை காவல்துறை நீதிமன்றிற்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. வாக்களிப்பு தினமான ஜனவரி 8ம் திகதி காலை 7மணி முதல் மாலை 6மணிவரை அவ்வாறு எத்தகைய செய்தியினையும் ஒளிபரப்பவில்லையென செய்தி ஆசிரியர் அந்தோனிமுத்து ஜெயச்சந்திரா தெரிவித்ததாகவும் நீதிமன்றிற்கு அறிக்கையிடப்பட்டுள்ளது. வாக்களிப்பு தினத்தன்று வாக்களிப்பதற்கான காலை மாலைவேளை நீடிக்கப்பட்டுள்ளதாக குறித்த தொலைக்காட்சி செய்தியினை பல தடவைகள் அறிக்கையிட்டிருந்தது.இதனை நம்பி தாமதமாக வாக்களிக்க சென்றிருந்த தனக்கு வாக்களிக்க அனுமதி மறுக்கப்பட்டிருந்ததாகவும் தேர்தல்…

  12. யாழ்ப்பாணத்தில் 4 மணித்தியாலத்துக்கு ஒருவர் தற்கொலை முயற்சி! - வைத்திய நிபுணர் சி.சிவன்சுதன் அதிர்ச்சித் தகவல்[Monday 2015-06-29 20:00] யாழ்ப்பாணத்தில் 4 மணித்தியாலயத்துக்கு ஒருவர் தற்கொலை முயற்சி மேற்கொண்ட நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதாக யாழ்.போதனா வைத்தியசாலை வைத்திய நிபுணர் சி.சிவன்சுதன் தெரிவித்தார். யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கூறுகையில், யாழ். போதனா வைத்தியசாலையில் தற்கொலை முயற்சியில் அதிகமானோர் அனுமதிக்கப்படுவதற்கு, போதைபொருள் பாவனை மறைமுகமாகவும் நேரடியாகவும் செல்வாக்கு செலுத்துகின்றது. வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அரைவாசிக்கு வாட்களுக்கு …

  13. தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற கட்சிகள் தமக்குள் வேட்பாளர்களைப் பகிர்ந்துகொள்வதில் இன்னும் இறுதி முடிவெடுக்கவில்லை என அக்கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் டெலோ அமைப்பின் தலைவருமாகிய செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்திருக்கிறார். ஒருவர் இரண்டு முறைக்கு மேல் நாடாளுமன்ற உறுப்பினாராக இருக்கக்கூடாது என்பது சாத்தியமற்ற திட்டம் என செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். நாளை அல்லது நாளை மறுதினம் நடைபெறவுள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முக்கிய கூட்டத்தில் இழுபறியில் உள்ள யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு ஆகிய தேர்தல் மாவட்டங்களின் தொகுதி பங்கீடு குறித்து இறுதி முடிவெடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். பெண் வேட்பாளர்கள் நிறுத்தப்பட வேண்டும், வன்னி தேர்தல் ம…

    • 3 replies
    • 412 views
  14. நாக பாம்புச் சின்னத்தில் களமிறங்குகிறது பொது பலசேனா! [Monday 2015-06-29 20:00] நாடாளுமன்றத் தேர்தலில் பொதுபலசேனா அமைப்பு நாக பாம்பு சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக அந்த அமைப்பின் நிறைவேற்று அதிகாரி திலந்த விதானகே தெரிவித்துள்ளார். தமது அமைப்பானது நாகபாம்பு சின்னத்தை தெரிவு செய்து தேர்தல்கள் ஆணையாளருக்கு வழங்கியுள்ளதாகவும், நாளைய தினம் அந்த சின்னத்துக்கு அனுமதி கிடைக்கும் என தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார். http://www.seithy.com/breifNews.php?newsID=135046&category=TamilNews&language=tamil

    • 1 reply
    • 496 views
  15. தேர்தல் கவிதை - 01 ஒரு நள்ளிரவிற்குப் பின் ------------------------------------------------------------------------ வெற்றிலை கொப்பளித்து துர்நாற்றம் வீசும் எச்சில் வாய்களோடு - சிலர் இனிச் சிலகாலம் எங்கள் காலடிகளைச் சுற்றிவருவார்கள் என் அக்காளையும் அண்ணன்களையும் புனிதர்கள் என்று புகழ்வார்கள் கல்லறைகளை கடவுளர்களின் கோயில்களாக்குவதாய் கதைவிடுவார்கள் இருக்கிறதை வைத்துக்கொண்டு இல்லாததைப் புடுங்குவோம் என்பார்கள் பல்லுக்காட்டி சொகுசு வாகனம் வாங்கமாட்டோமென்பார்கள் மத்தியில் அரசோடு ஒட்டு-உறவில்லை என்பார்கள் பின் எங்கள் விடுதலைக்காய் - இரகசிய ஒப்பந்தங்கள் பல செய்ததாய் பிதற்றுவார்கள் எங்கள் வீட்டு மதில்களில் பல்லை இளிப்பார்கள் தாங்களே எங்கள் மீட்பார்கள் என்பார்கள் எங்கள் படலைகளில…

    • 3 replies
    • 516 views
  16. வலி.வடக்கில் மீளக்குடியேற அனுமததிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டார் அமைச்சர் சுவாமிநாதன்! [Monday 2015-06-29 20:00] வலி. வடக்கில் மீளக்குடியேற அனுமதிக்கப்பட்ட வறுத்தலைவிளான் மற்றும் கீரிமலைப் பகுதிகளை மீள்குடியேற்ற இந்து கலாசார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் இன்று நேரில் சென்று பார்வையிட்டார். இவருடன் மகளிர் விவகார பிரதி அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சுமந்திரன், சரவணபவன், சந்திரகுமார், வட மாகாண பதில் முதலமைச்சரும் கல்வி அமைச்சருமான த.குருகுலராசா, விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், வலி. வடக்கு பிரதேச சபைத்தலைவர் சோ.சுகிர்தன், யாழ் மாவட்ட படைகளின் கட்டளைத்தளபதி, விமானப்படைத்தளபதி, யாழ். மாவட்ட அரசாங்க அதிபர், …

    • 1 reply
    • 448 views
  17. நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ்சின் மனைவி களமிறக்கப்போவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சில தரப்புக்கள் வதந்திகளை கட்டவிழ்த்து விடத்தொடங்கியுள்ளன. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தியின் சார்பில் தென்மராட்சியை பிரதிநிதுவப்படுத்தி அவர் தேர்தலில் போட்டியிட வைக்கப்படவுள்ளதாக வடமாகாணசபை உறுப்பினர் சயந்தன் தரப்பினிலிருந்து கதைகள் அவிழ்த்து விடப்பட்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.. இது சம்மந்தமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் ரவிராஜ்சின் மனைவியுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் பாராளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைந்துள்ளமை என்ற காரணத்தினாலும், இம்முறை நடைபெறவுள்ள பாராளுமன்றத…

  18. அமெரிக்காவில் நடந்த கடல்வள கருத்தமர்வில் வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சர் பங்கேற்பு! [Monday 2015-06-29 19:00] அமெரிக்காவில் இடம்பெற்ற கடல் வளங்களைப் பாதுகாப்பது தொடர்பிலான கருத்தமர்வில் வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சர் பா. டெனீஸ்வரன் கலந்து கொண்டார். தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகள் மூலமும் இயற்கையின் சீரற்ற நிலைமை காரணமாகவும் கடல்வளங்கள் அழிந்து வருகின்றது. இக்கடல் வளங்களை பாதுகாப்பது தொடர்பான கருத்தமர்வு ஒன்று அமெரிக்க அரசால் ஏற்பாடு செயப்பட்டிருந்தது. இக்கருத்தமர்வில் 16 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். தடை செய்யப்பட்ட தொழில் முறைகளை கையாளும் நாடுகளில் இலங்கை முக்கிய இடம் வகிப்பதால், இலங்கையின் பிரதிநிதியாக வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனிஸ்வரன் கலந்து …

  19. மல்லாகத்தில் கடைக்குச் சென்ற சிறுவனைக் காணவில்லை! - பொலிசில் முறைப்பாடு.[Monday 2015-06-29 19:00] மல்லாகம் காளி கோவில் வீதியைச் சேர்ந்த இராஜேந்திரன் கினிஸ் என்ற 17 வயதுடைய சிறுவனை கடந்த 26ஆம் திகதி முதல் காணவில்லையென முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடைக்குச் சென்ற மேற்படி சிறுவன், இதுவரையில் வீடு திரும்பவில்லையென குறித்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. முறைப்பாட்டின் பிரகாரம் தெல்லிப்பழை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர். http://www.seithy.com/breifNews.php?newsID=135034&category=TamilNews&language=tamil

  20. யாழ். செயலக கூட்டத்தில் இருந்து ஊடகவியலாளர்கள் வெளியேற்றப்பட்டனர்! [Monday 2015-06-29 20:00] வலிகாமம் வடக்கு மீள்குடியேற்றம் மற்றும் அண்மையில் மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மக்களுடைய தேவைகள் தொடர்பாக கண்டறிவதற்கான கூட்டத்தில் செய்தி சேகரிப்பதற்கு யாழ்.ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மீள்குடியேற்ற அமைச்சர் மற்றும் அமைச்சு செயலாளர் ஆகியோர் ஒருவருக்கு ஒருவர் மாறுபட்ட கருத்துக்களை கூறி ஊடகவியலாளர்களை வெளியேற்றினர். யாழ்.மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் பிற்பகல் 2.30 மணியளவில் மேற்படி கூட்டம் நடைபெற்றிருந்தது. கூட்டத்திற்கு முன்னதாகவே, ஊடகவியலாளர்களை சபையிலிருந்து வெளியேற்ற வேண்டும் என யாழ்.அரசாங்க அதிபர் என். வேதநாயகன் மீள்குட…

  21. தேர்தல் பிரச்சாரங்கள் இன்னும் இரு வாரங்களில் சூடு பிடிக்கவுள்ள நிலையில், தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரும் வடமராட்சி வேட்பாளரும் மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தை பிரதிநிதிபடுத்துபவரும் இரணைமடு குள நீரை வைத்து அரசியல் செய்துவருபவரும் பணத்தை அள்ளிவீச தொடங்கியுள்ளனர்.அவர்கள் இருவரும் தத்தமது தேர்தல் பிரச்சாரத்திற்காக யாழ்ப்பாண நாளிதழ்களில் பத்திரிகையின் முன்பக்க விளம்பரத்திற்காகத் தலா பதினைந்து இலட்சம் ரூபாய் முற்பணம் வழங்கியுள்ளதாக அறியமுடிகின்றது. அதுவும் சாதாரண பாடசாலை ஆசிரியர் ஒருவர் இவ்வாறு பணத்தை அள்ளிக்கொட்டுவதற்கு எவ்வாறு பணம் வந்ததென கேள்வி எழுப்பப்படுகின்றது. புலம்பெயர் உறவுகளது பணத்தை சுருட்டி இவ்வாறு இடாம்பீகமாவெனவும் கேள்வ…

  22. கூட்டமைப்பு தமிழ் மக்களிற்கு துரோகம் இழைக்காததொரு கட்சியென தெரிவித்துள்ளார் அக்கட்சியின் முன்னாள் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன். வட்டுக்கோட்டையில் இன்று இடம்பெற்ற கூட்டமொன்றில் பேசிய சுமந்திரன் மேலும் தெரிவிக்கையில் சொல்லமுடியாதிருக்கின்றவற்றினை புரிந்து வாக்களிக்கவும் மக்களினை கேட்டுக்கொண்டுள்ளார். கூட்டமைப்பு அனைத்தையும் மக்கள் முன் சொல்லி செயற்படுத்தும் கட்சியென தெரிவித்த சுமந்திரன் சொல்லமுடியாதிருப்பவை பற்றி மக்கள் புரிந்து கொள்ளவேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனிற்கு ஆதரவு கோரும் இப்பிரச்சார கூட்டத்தில் உரையாற்றிய வடமாகாண அவைத் தலைவர் சீ.வி,கே.சிவஞானம் நடந்து முடிந்த வடமாகாணசபை தேர்தலில் சரவணபவன் அவரது பத்திரிக…

  23. அவுஸ்திரேலியாவை தளமாக கொண்டியங்கும் பொருளாதார மற்றும் சமாதானத்துக்கான நிறுவகத்தின் உலக சமாதான சுட்டியில் இலங்கை 114ஆவது இடத்தை பெற்றுள்ளது. இந்த நிறுவகமானது 162 நாடுகளில் மேற்கொண்ட தேசிய சமாதானம் தொடர்பான அளவீடுகளிலிருந்தே இலங்கைக்கு 114ஆம் இடம் கிடைத்துள்ளது. இந்த பட்டியலில் இலங்கையின் அயல் நாடுகளான பூட்டான் 18வது இடத்திலும், நேபாளம் 62வது இடத்திலும், பங்களாதேஷ் 84வது இடத்திலும், இந்தியா 143வது இடத்திலும், பாகிஸ்தான் 154வது இடத்திலும், ஆப்கானிஸ்தான் 162வது இடத்திலும் உள்ளது. இதேவேளை மிகவும் அமைதியான நாடு என்ற பட்டத்தை ஐஸ்லாந்து இம்முறையும் தக்கவைத்துக்கொண்டுள்ளது. - See more at: http://www.tamilmirror.lk/149316#sthash.fgTyMbp1.dpuf

  24. மன்னாரில் உப்பு அறுவடை இன்று திங்கள்கிழமை காலை வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. மன்னார், மாந்தை சோல்ட் லிமிட்டெட்டின் 2015ஆம் ஆண்டுக்கான உப்பு அறுவடையை அதன் பொது முகாமையாளர் முகமட் யூமாயின் வைபவரீதியாக ஆரம்பித்து வைத்தார். கடந்த காலத்தில் 2000 தொடக்கம் 3000 மெற்றிக்தொன்னாக காணப்பட்ட உற்பத்தி 2010ஆம் ஆண்டிற்குபின் கிடைக்கப்பெற்ற நிதியின் ஊடாக குறித்த உப்பளம் அபிவிருத்தி செய்யப்பட்டு தற்பொழுது 5000 தொடக்கம் 6000 வரையிலான மெற்றிக்தொன் உப்பு உற்பத்தி செய்யப்பட்டுவருகிறது. இது நாட்டின் உப்பு உற்பத்தியில் 4 தொடக்கம் 5 வீதமாக காணப்படுவது குறிப்பிடத்தக்கது. http://www.malarum.com/article/tam/2015/06/29/10755/மன்னாரில்-உப்பு-அறுவடை.html#sthash.S1IYBZFN.dpuf

    • 4 replies
    • 1.6k views
  25. திருகோணமலைக் கடற்கரையில் பொதுமக்களுடன் பொழுதைக் கழித்த மைத்திரி! - கோணேசரையும் வழிபட்டார். [Sunday 2015-06-28 20:00] திருகோணமலை கடற்படை முகாமில் அமைக்கப்பட்டுள்ள இரண்டு மாடி கட்டடத்தை திறந்து வைப்பதற்காக நேற்று சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, திருகோணமலை கடற்கரையில் மக்களோடு சேர்ந்து உலாவி பொழுதைக் கழித்தார். அத்துடன் திருகோணமலை கோணேஸ்வரர் கோவிலுக்கு விஜயம் செய்து ஆசீர்வாதம் பெற்றுள்ளார். தலைமை குருக்கள் அவர்களினால் விஷேட சமய வழிபாடுகள் செய்து ஜனாதிபதி ஆசீர்வாதிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் பாரியார் திருமதி ஜெயந்தி சிறிசேனவும் இந்நிகழ்வில் பங்கேற்றுள்ளார். திருகோணமலைக் கடற்கரையில் பொதுமக்களுடன் பொழுதைக் கழித்த மைத்தி…

    • 2 replies
    • 609 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.