Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. குற்றமிழைத்த புலிகளின் தலைவர்களும் தண்டிக்கப்படுவர்! - என்கிறார் பிரதி நீதியமைச்சர் சுஜீவ சேனசிங்க [Sunday 2015-06-28 08:00] நல்லிணக்க அடிப்படையில் அரசியலில் இணைந்திருந்தாலும் விடுதலைப் புலிகளின் முன்னாள் தலைவர்களும் அவர்கள் மேற்கொண்ட குற்றங்களுக்காக தண்டிக்கப்படுவார்கள் என்று பிரதி நீதியமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார். மிருசுவிலில் 8 பொதுமக்களை கொலை செய்த இராணுவ வீரருக்கு, கடந்த வாரம் கொழும்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதன் பின்னணியில் முன்னாள் பிரதியமைச்சர் கருணா என்ற விநாயகமூர்த்தி முரளிதரன், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தன், விடுதலைப்புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் …

  2. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து செயற்பட விரும்புவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. நீண்ட காலமாக நிலவி வரும் மனித உரிமை மீறல் பிரச்சினைகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளதாக அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது. அத்துடன், அண்மையில் அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட மனித உரிமை குறித்த அறிக்கை கடந்த 2014ஆம் ஆண்டுக்கானது என இலங்கைக்கான அமெரிக்க தூதரக பேச்சாளர் ஜொசுவா சேன் தெரிவித்துள்ளார். அமைதியான, ஜனநாயகமான மற்றும் சுபீட்சமான இலங்கையை கட்டியெழுப்புவதற்கு ஒத்துழைப்பு வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். மனித உரிமை பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு நல்லாட்சியை ஏற்படுத்துவதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக அவர் …

    • 0 replies
    • 398 views
  3. திருகோணமலை கடற்படை முகாமில் அமைக்கப்பட்டுள்ள இரண்டு மாடி கட்டடத்தை திறந்து வைப்பதற்காக நேற்று சனிக்கிழமை (27) சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, திருகோணமலை கடற்கரையில் மக்களோடு சேர்ந்து உலாவுவதை படங்களில் காணலாம். (படங்கள்: ஜனாதிபதி செயலகம்) http://www.tamilmirror.lk/149230#sthash.zPxVwjgW.dpuf

    • 0 replies
    • 498 views
  4. பராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளபோதிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தொடர்ந்து இடம்பெறும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறினார். இதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான பேச்சுவார்த்தை அடுத்த ஆட்சியிலும் தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தேர்தலின் பின்னர் நிலையான அரசு நாட்டில் அமைக்கப்படும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ள சம்பந்தன் அந்த அரசில் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கிடைப்பது நிச்சயம் என்றும் கூறியுள்ளார். இலங்கைத் தீவில் நெடுங்காலமாக நிலவும் இனப்பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம்பெறுவதாக சம்…

  5. பளை பொது விளையாட்டு மைதானம் புனரமைப்பில் மோசடி தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்படும் பச்சிலைப்பள்ளி (பளை) பிரதேச சபைக்குட்பட்ட பொது விளையாட்டு மைதான புனரமைப்பில் மோசடி இடம்பெற்றுள்ளதாக பிரதேச சபை உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியமைக்கு அமைவாக விசாரணைகள் நடத்தப்பட்டு தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களின் உள்ளுராட்சி உதவி ஆணையாளர் நா.பிரபாகரன், வியாழக்கிழமை (25) தெரிவித்தார். நெல்சிப் திட்டத்தில் 10 மில்லியன் ரூபாய் செலவில் கீழ் புனரமைக்கப்பட்ட இந்த மைதானம் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரியால் புதன்கிழமை (24) திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளரிடம், மைதானம் உரிய முறையில் பு…

  6. யாழ்ப்பாணம் வறணி கரந்தாய் பகுதியில் போதையில் வரும் குழு ஒன்று தினமும் அப்பகுதி மக்களுக்கு தொந்தரவு செய்து வருகின்றது. குறித்த பகுதிக்கு எமது விசேட செய்தியாளர் சென்று அப்பகுதி மக்களுடன் உரையாடியுள்ளார். இதன்போது குறித்த போதைக்குழுவை கைது செய்து தமது பகுதி சந்திக்கும் அசௌகரியங்களை தடுக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக எமது செய்தியாளர் கூறினார். நேற்று மாலை அந்தப் பகுதிக்கு எமது செய்தியாhளர் சென்றிருந்த சந்தர்ப்பத்திலும் குறித்த போதையில் வரும் குழு அட்டகாசத்தில் ஈடுபட்டதாக எமது செய்தியாளர் பதிவு செய்தார். இவர்கள் சட்ட விரோத போதைப் பொருளை பாவிப்பதாக அந்தப் பகுதி மக்கள் குறிப்பிட்டுள்ளனர். அத்துடன் மாலை வேளையில் துன்னாலைப் பகுதியில் இருந்து வரும் குறித்த குழு வறணி முருகன்…

    • 0 replies
    • 236 views
  7. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் குமார வெல்கம இதனை உறுதி செய்துள்ளார். எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17ம் திகதி பொதுத் தேர்தல் நடத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடவே மஹிந்த விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். மஹிந்த பிரதமர் வேட்பாளராக போட்டியிடுவார் என்பதனை தெளிவாக உறுதி செய்ய முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அதில் எவ்வித மாற்றுக் கருத்துக்களும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் அனைத்து பங்காளிக் கட்சிகளையும் அணி திரட்டும் முனைப்புக்கள் தீவிரப்படு…

    • 0 replies
    • 208 views
  8. 5 இராணுவ ஜெனரல்களுக்கு எதிராகவும் யுத்தக் குற்றச் குற்றச்சாட்டை UN முன்வைத்துள்ளது? முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜபக்ஸ, முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா உள்ளிட்டவர்களுக்கு எதிராக யுத்தக் குற்றச் செயல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் நடத்தப்பட்டு வரும் இலங்கை தொடர்பான விசாரணைகளில், குறித்த நபர்கள் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக ராஜதந்திர வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ஐந்து இராணுவ ஜெனரல்களுக்கு எதிராகவும் யுத்தக் குற்றச் செயல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்…

    • 0 replies
    • 206 views
  9. தேர்தல் நடத்தாலும், நடக்காவிட்டாலும் சர்வதேச யுத்தக் குற்ற விசாரணை அறிக்கை வெளிவரும் என்பது உறுதி என தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன். குறிப்பாக யுத்த குற்றம் தொடர்பான சர்வதேச விசாணையின் அறிக்கையினை ஜக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வெளியிட்டே தீரும் என்றும் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இலங்கையில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றாலும், நடைபெறா விட்டாலும் வெளிவரும் அறிக்கை தடைப்படாது என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் மாதம் ஜ.நாவின் அறிக்வை வெளிவரவிருந்தது. இவ்வறிக்கை தாமதப்படுத்தப்படும் போது மனித உரிமைகள் பேரவையின் பொறுப்பு வாய்ந்த அதிகாரி ஒரு முறைதான் இவ்வறிக்கை தாமதப்படுத்தப்படும் என்று அவர் தெரிவி…

  10. காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் திருகோணமலை மாவட்டத்துக்கான அமர்வு இன்று சனிக்கிழமை இடம்பெற்று வருகின்ற நிலையினில் காணாமல் போனோரின் உறவினர்கள் சிலர் இன்று காலை திருகோணமலை மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மூதூரிலுள்ள திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இன்று காலை முதல் இந்த அமர்வு நடைபெற்று வருகின்றது.எதிர்வரும் 30ஆம் திகதி வரை திருகோணமலையில் சாட்சியப் பதிவுகளை நடைபெறவுள்ளன.இந்நிலையினில் ஆணைக்குழுக்கள் மீது நம்பிக்கை இல்லை எனக் கூறிய மக்கள் சாட்சியப் பதிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.முன்னரும் திருமலையினில் நடந்த அமர்வினை மக்கள் புறக்கணித்திருந்தது குறிப்பி…

  11. இலங்கை அரசின் விசாரணையில் நம்பிக்கையில்லை! - சுரேஸ் பிரேமச்சந்திரன்[Thursday 2015-06-25 19:00] காணாமற்போனவர்கள் பற்றிய தகவல்களை கண்டறிய சர்வதேச விசாரணையே தேவை. இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் விசாரணையில் எமக்கு நம்பிக்கையும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணததில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது, 'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சி தலைவர்கள் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேசிய போது, காணாமல் போனவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படும் இரகசிய முகாம்கள் பற்றி பேசியுள்ளனர். காணாமல் போனவர்கள் தொடர்பான குழுவிடம் காணாமல் போனவர்கள் ஏறத்தாழ…

    • 17 replies
    • 1k views
  12. இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் திருகோணமலையில் நடைபெறுகிறது. கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் அரசியல் பீடத் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோரின் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. இதில் கொழும்புஇ வடக்கு கிழக்கு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர். நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில்இ தேர்தல் தொடர்பான கட்சியின் அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக இந்த கூட்டம் இன்று நடத்தப்படுகிறது.http://www.pathivu.com/news/41155/57//d,article_full.aspx

  13. பாராளுமன்றம் இன்றிரவு கலைக்கப்பட இருப்பதாக சிங்கள ஊடகமான லங்காதீப செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அரசாங்க அச்சகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அந்தச் செய்தி மேலும் தெரிவிக்கிறது

  14. வரணி பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் மாணவிகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்ய முயற்சித்த ஆசிரியர் ஒருவரை எதிர்வரும் ஜூலை மாதம் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரன் வியாழக்கிழமை (25) உத்தரவிட்டார். ஆசிரியர் தரம் 3, தரம் 4 மாணவிகளுக்கு பாலியல் ரீதியில் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இது தொடர்பில் மாணவிகள் அதிபருக்கு தெரியப்படுத்தியதையடுத்து, அதிபர் சிறுவர் நன்னடத்தை அதிகாரியின் கவனத்துக்கு கொண்டு வந்தார். சிறுவர் நன்னடத்தை அதிகாரி கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் ஆசிரியர் வியாழக்கிழமை (25) கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். http://www.tamilmirror.lk/149118#sthash.62fpOGMO.dp…

  15. மிருசுவிலில் சிறுவர்கள் உள்ளிட்ட எட்டுப் பொதுமக்களைப் படுகொலை செய்த வழக்கில், குற்றம் நிரூபிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட சிறிலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணியைச் சேர்ந்த சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவுக்கு முகநூலில் ஆதரவு பெருகி வருகிறது. போர் வீரர் சுனில் ரத்நாயக்கவைப் பாதுகாப்போம் என்ற தொனிப் பொருளில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த முகநூலில், 14 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இணைந்து கொண்டுள்ளனர். இந்த முகநூலில், தவறிழைத்த சிறிலங்காப் படையினருக்குத் தண்டனை வழங்கப்படுவதற்கு எதிரான கருத்துக்கள் பரப்பப்படுவதுடன், மரணதண்டனைக் குற்றவாளியான சுனில் ரத்நாயக்க குற்றமிழைக்காதவர் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஐ.நா விசாரணை அறிக்கை வெளிவரவுள்ள நிலையிலும், சிறிலங்காவில் உள்நாட…

  16. கொக்கிளாய் பகுதியில் தமிழர்களின் காணியை பௌத்த பிக்கு ஒருவர் இராணுவத்துடன் இணைந்து சுவீகரித்து விகாரை அமைத்து வருகிறார். இதனை நிறுத்துமாறு அண்மையில் தடை விதிக்கப்பட்ட போதும்இ தொடர்ந்து விகாரையின் நிர்மாணப் பணிகள் இடம்பெற்று வருகின்றன. குறித்த காணிப் பிரச்சினையை தீர்த்துக் கொள்வதற்கிடையில்இ மேலும் இதில் சிக்கலை எற்படுத்துதற்காகஇ குறித்த காணியில் சிங்கள இராணுவத்தினரின் நினைவு கற்களை நாட்டி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சில் இருந்து வழங்கப்பட்ட ஆலோசனையின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.http://www.pathivu.com/news/41154/57//d,article_full.aspx

  17. சிறிலங்காவில் வரும் ஓகஸ்ட் 17ஆம் நாள் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதால், க.பொ.த உயர்தரத் தேர்வுகளைப் பிற்போட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக சிறிலங்காவின் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். சிறிலங்காவில் க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான தேர்வு ஆண்டுதோறும் ஓகஸ்ட் மாத முற்பகுதியில் இடம்பெறுவது வழக்கம். ஆனால், ஓகஸ்ட் மாத நடுப்பகுதியில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால், இந் தேர்வுகளைப் பிற்போட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆசிரியர்கள், மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர்,க.பொத உயர்தரத் தேர்வு குறித்த முடிவை கல்வி அமைச்சு அறிவிக்கும் என்றும் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். http://www.pathivu…

  18. யாழ்ப்பாணத்தை சேர்ந்த 22 மாணவர்களுக்கு எயிட்ஸ் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 18 மாதங்களில் மட்டும் சுமார் 45 மாணவர்களுக்கு எயிட்ஸ் நோயின் தாக்கம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. மொத்தமாக சுமார் 118 பேருக்கு இன் நோய் இருப்பது கண்டறியப்பட்டாலும், மாணவர்களுக்கு மத்தியில் முன்னெப்பொழுதும் இல்லாதவாறு இன்நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது என்கிறார்கள் இலங்கை அதிகாரிகள். யாழ்ப்பாணத்தை பொறுத்தவரை சொல்லவே தேவையில்லை. 22 மாணவர்களுக்கு எயிட்ஸ் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. சிங்களப் பகுதிகளை பொறுத்தவரை , கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்ட என்று பல மாகாணங்களில் உள்ள லட்சக்கணக்கான மக்களில் 23 மாணவர்களுக்கு இன் நோய் தொற்றியுள்ளது. ஆனால் யாழ் மாவட்டம் என்பது ஒரு சிறிய பகுதியாகும். இங்கே …

    • 0 replies
    • 704 views
  19. புங்குடுதீவு மாணவி படுகொலை சம்பவத்தினில் குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள சுவிஸ் குமார் எனப்படும் மகாலிங்கம் சிவகுமார் தமது நாட்டு பிரஜை இல்லையென கொழும்பிலுள்ள சுவிஸ் தூதவராலயம் அறிவித்துள்ளது. இன்று தூதுவாலயம் விடுத்துள்ள செய்திக்குறிப்பினில் குறித்த நபர் இலங்கை பிரஜையே எனவும் எனினும் சுவிஸினில் வதிவிட அனுமதி பெற்றுக்கொண்டுள்ளவரெனவும் அச்செய்தி குறிப்பினில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலையினை வன்மையாக கண்டித்து சுவிஸ் அரசு பக்கச்சார்பற்ற விசாரணைகளை வலியுறுத்தியுள்ளதுடன் குற்றவாளிகளை சட்டத்தின் முன்னிறுத்தப்பட வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டுள்ளது. அதே வேளை கொலை குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள நபரொருவர் சுவிஸ் பிரஜை என தெர…

    • 32 replies
    • 5.6k views
  20. மன்னார் தல்லாடி பகுதியில் சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்வதற்காக 50 ஏக்கர் காணி சுவீகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த வாரம் இந்த பகுதியில் கடற்படையினர் குறித்த காணிப் பிரதேசம் தங்களுக்குரியது என்று அறிவித்தல் பலகையை வைத்துள்ளனர். இது சிங்களவர்களின் குடியேற்றத்துக்காக சுவீகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் இருந்து நாடு திரும்புகின்ற மன்னார் வாசிகளை குடியேற்றுவதற்கு காணி இல்லாத நிலைமை காணப்படுகிறது. எனினும் சிங்கள படையினர் இவ்வாறான காணி சுவீகரிப்பை தொடருந்தும் மேற்கொண்டு வருகின்றனர்.http://www.pathivu.com/news/41158/57//d,article_full.aspx

    • 0 replies
    • 444 views
  21. மட்டக்களப்பு மாவட்டத்தில் இராணுவ கண்காணிப்பு நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு செயற்படும் சமுக அமைப்புகள் இதனைத் தெரிவிக்கின்றன. மட்டக்களப்பில் உள்ள 14 மாவட்ட செயலக பிரிவுகளிலும் இவ்வாறான கண்காணிப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஆலய நிகழ்வுகள்இ சமுக கூட்டங்கள் என அனைத்து பகுதிகளிலும் புலனாய்வாளர்கள் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக மக்களின் நடமாட்ட மற்றும்ஒன்று கூடல் சுதந்திரம் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக சமுக அமைப்புகள் தெரிவிக்கின்றன. கொழும்பில் இருந்து வழங்கப்பட்ட உத்தரவின் அடிப்படையில் இந்த கண்காணிப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.http://www.pathivu.com/news/41153/57//d,article_full.aspx

    • 0 replies
    • 370 views
  22. 20ம் நூற்றாண்டின் மிகப்பெரும் வன்முறையான யாழ் பொது நூலகம் எரித்த நாள் இன்று. [saturday, 2014-05-31 21:47:22] யாழ் நுலகம் எரியூட்டப்பட்ட நாள் நினைவுநாள் இன்று.யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிப்பு என்பது இலங்கை இனப்பிரச்சினையில் ஒரு முக்கிய நிகழ்வாகும். இந்நிகழ்வு 1981 ஆம் ஆண்டு மே 31 ஆம் திகதி நள்ளிரவுக்கு பின்னர் சிங்கள அரசபடைக் குழுவொன்றால் இடம்பெற்றது.இது 20ம் நூற்றாண்டின் இன, நூலழிப்புகளில் ஒரு மிகப்பெரும் வன்முறையாகக் கருதப்படுகிறது. இவ்வழிப்பு நேர்ந்த காலகட்டத்தில் யாழ்ப்பாணப் பொது நூலகம் கிட்டத்தட்ட 97,000 அரிய நூல்களுடன் தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாகத் திகழ்ந்தது. இந்த நூலக எரிப்பு வன்கும்பலில் இலங்கையின் அமைச்சர் காமினி திசாநாயக்கா உட்பட வேறு பல அப்போதைய ச…

  23. மிருசுவில் படுகொலை குற்றவாளிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் இதனைத் தெரிவித்துள்ளார். 2000ம் ஆண்டு மிருசுவில்லில் இடம்பெற்ற 8 தமிழர்களின் படுகொலை தொடர்பில் இராணுவ சிப்பாய் ஒருவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. சிறிலங்காவின் சட்டத்தில் மரண தண்டனை இருக்கின்ற போதும், அது நிறைவேற்றப்படுவதில்லை. இந்த நிலையில் குறித்த சிப்பாயும் மரண தண்டனை பெற்றுள்ள போதும், அவர் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்து ஒரு காலத்தில் விடுவிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே அவருக்கான மரண தண்டனையை நிறைவேற்றுவதன் மூலமே இந்த படுகொலை சம்பவத்துக்கு நியாயத்தை வழங்க முடியும் என்று அரியநேத்திரன் தெரிவித…

    • 17 replies
    • 900 views
  24. எதிர்க்கட்சியிடம் அரசாங்கம் அடிக்கடி தோப்புக்கரணம் போடுகிறது என்கிறார் ரவூப் ஹக்கீம் Jun 26, 2015 Bella Dalima Local 0 inShare எதிர்க்கட்சியிடம் சென்று அரசாங்கம் அடிக்கடி தோப்புக்கரணம் போடுவதாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். புத்தளத்தில் நேற்று (25) நடைபெற்ற பொதுக்கூட்டத்திலேயே அவர் இதனைக் கூறினார். http://newsfirst.lk/tamil/2015/06/எதிர்க்கட்சியிடம்-அரசாங/

    • 2 replies
    • 419 views
  25. கலைக்கப்பட்டது பாராளுமன்றம்...! பலியான புலி இனி வெளிவரும்..! [ வெள்ளிக்கிழமை, 26 யூன் 2015, 08:18.49 PM GMT ] தனக்கு என்று ஒரு பாணியை உருவாக்கி கொண்டவர் நகைச்சுவை நடிகர் வடிவேலு. அவரின் மிகப்பெரிய நகைச்சுவைகளில் ஒன்று வரும். ஆனா வராது.! இது போன்றதே இலங்கை பாராளுமன்றம் கலைக்கப்படும் ஆனா கலைக்கப்படாது. என்று இருந்த பாராளுமன்றம் இன்று கலைக்கப்பட்டுள்ளது. 2015 தை 08 ஆம் திகதியோடு இலங்கையின் தலையெழுத்து மட்டுமல்ல பல அரசியல்வாதிகளின் தலையெழுத்தும் மாற்றி எழுதப்பட்டுவிட்டது. ஆனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சில அமைதிக்காப்போடு 19வது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றும் வரை பாராளுமன்றம் கலைக்கப்படாது என்பதில் உறுதியாக இருந்தார். நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறைமை இல்லாது செய்…

    • 0 replies
    • 438 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.