ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143520 topics in this forum
-
யுத்தக்குற்ற விசாரணைகளுக்காக தனித்துவமான நடைமுறைகள் பின்பற்றப்படும் என்று சிறிலங்காவின் அரசாங்கம் தெரிவித்துள்ளது. வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இதனைக் கூறியுள்ளார். யுத்தக்குற்ற விசாரணைக்கான உள்நாட்டு பொறிமுறை விரைவில் ஆரம்பிக்கப்படும். சர்வதேச ஒத்துழைப்புடன் இடம்பெறவுள்ள இந்த பொறிமுறை, சிறிலங்காவுக்கே உரிய தனித்துவமான நடைமுறையின் அடிப்படையில் முன்னெடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார். http://www.pathivu.com/news/40965/57//d,article_full.aspx
-
- 1 reply
- 647 views
-
-
சிறிலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரை இந்தியத் தூதுவர் சந்திப்பு JUN 19, 2015by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் வை.கே.சின்ஹா இன்று சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். பாதுகாப்பு அமைச்சில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இருதரப்பு நலன்கள் சார்ந்த விவகாரங்கள் குறித்து இந்தச் சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டதாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. http://www.puthinappalakai.net/2015/06/19/news/7061
-
- 1 reply
- 603 views
-
-
பாரிஸிலிருந்து இன்று வியாழக்கிழமை கொழும்பு நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸிற்குச் சொந்தமான விமானம் நடுவானில் வைத்து குலுங்கியதில் ஐவர் காயமடைந்துள்ளனர். எனினும் விமானம் பாதுகாப்பாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளது. சம்பவத்தில் இருவர் படுகாயங்களுக்கு உள்ளாகியிருப்பதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன் நிறுவன பேச்சாளர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். 193 பயணிகளுடன் பாரிஸிலிருந்து இன்று அதிகாலை பயணித்த யு.எல். 564 ரக விமானம் நடுவானில் வைத்து குலுங்கியது. இதில் விமானப் பணியாளர்கள் ஐவரில் மூவர் சிறு காயங்களுக்கு உள்ளானதோடு, இருவர் படுகாயமடைந்தனர். குறித்த இருவரும் தற்போது கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தீபால்…
-
- 40 replies
- 1.9k views
-
-
http://www.ctr24.com/archive/18062015-1347-வணக்கம்-கனடா-june-17-2015-nirmanushan-balasundram-journalist-ncct-deva
-
- 8 replies
- 875 views
-
-
அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட இரண்டு இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நீண்டநாள் மீன்பிடிப் படகின் மூலம் அவுஸ்திரேலியாவைச் சென்றடைந்த இருவரே நாடு கடத்தப்பட்டுள்ளனர். 2012 ஆம் ஆண்டில் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவைச் சென்றடைந்த 16 இலங்கையர்களில் இருவர் அங்கிருந்து நேற்று திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். சிலாபம் மற்றும் உடப்பு பகுதிகளைச் சேர்ந்த 29 மற்றும் 31 வயதுடைய இருவரே விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இருவரையும் நீர்கொழும்பு நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். http://www.pathivu.com/news/40994/57//d,article_full.aspx
-
- 0 replies
- 185 views
-
-
கொத்துக்குண்டுகளையும் எறிகணை களையும் வீசி எமது பிஞ்சுகள் குலை, குலையாக அறுத்து நிலத்தில் வீழ்த்தப்பட்டு அவர்களின் உடல்களில் சிந்திய குருதியினால் சிகப்பேறிய மண்ணில் தான் இன்று பாடசாலைக் கட்டடடம் திறக்கப்படுகின்றது என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மலையாள்புரம் அன்னை சாரதா வித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டடடத்தொகுதியினை திறந்து வைக்கும் நிகழ்வில் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 1977ம் ஆண்டு மற்றும் 1983 இல் நடைபெற்ற இனக்கலவரங்களால் மலையகப்பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந…
-
- 2 replies
- 400 views
-
-
மைத்திரிபால சிறிசேனவுக்கும், மகிந்தவுக்கும் இடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்த சந்திரிக்காவும், ராஜித்த சேனாரத்னவுமே தடையாக இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மகிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும இதனை தெரிவித்துள்ளார். மைத்திரிபால சிறிசேனவையும் மகிந்தராஜபக்ஷவையும் ஒன்றிணைக்கும் முயற்சிகள் தீவிரவமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக சிறிலங்கா சுதந்திர கட்சியில் சிரேஷ்ட்ட உறுப்பினர்கள் அடங்கிய குழு ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. எனினும் இரண்டு தரப்புக்கும் இடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்த சந்திரிக்காவும், ராஜித்த சேனாரத்னவும் தடையாக உள்ளனர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். http://www.pathivu.com/news/40981/57//d,article_full.aspx
-
- 0 replies
- 214 views
-
-
புதிய அரசினில் உறுதியளிக்கப்பட்ட அரசியல் கைதிகள் விடுதலை,படைக்குறைப்பு,காணிகள் விடுவிப்பு போன்றவற்றினில் போதிய முன்னேற்றமில்லையென்பதை ஏற்றுக்கொள்கின்றோம்.அதுவும் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் படையினர் பெருமளவினில் யாழினில் நிலை கொள்ளவைக்கப்பட்டுள்ளமை ஏற்றுக்கொள்ள முடியாததொன்றென தெரிவித்தார் நவசமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ண. இதே வேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் அரசியலுக்கு வருவதை அனுமதிப்போவதில்லையெனவும் அவ்வாறான நடவடிக்கைகள் இடம்பெற்றால் அதற்கு எதிராக போராடுவோம் எனவும் அவர் தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் மேலும் கூறியதாவது, 'மஹிந்த மீண்டும் அரசியலுக்கு வ…
-
- 0 replies
- 215 views
-
-
கௌரவ மாவை சேனாதிராஜா, (பா.உ), தலைவர், தமிழரசுக்கட்சி. அன்புடையீர், தங்கள் 11.06.2015 திகதிய கடிதத்தை இன்றே (17.06.2015) கண்டேன். முன்னர் ஈமெயிலில் அனுப்பிய ஒரு கடிதம் வேறு எழுத்துரு (font) காரணமாக வாசிக்க முடியாமையால் அதை அனுப்பிய பிருந்தா கந்தசாமி என்பவருக்குத் திருப்பி அனுப்பப்பட்டது. இணையத்தளங்களில் வெளிவந்த செய்திகளுக்கு விளக்கம் கொடுக்க வேண்டிய பொறுப்பு எனக்கில்லை. ஆனால் ஜனாதிபதியிடம் தெரிவித்த முறைப்பாடு குறித்துப் பதிலளிப்பதற்குக் கடமைப்பட்டுள்ளதால் இக்கடிதத்தை எழுதுகின்றேன். எமது மக்களின் வாயிலாக நாம் அறிந்து கொள்ளும் விடயங்களையே நம்பிக்கையானவையாகத் தென்பட்டால் நாம் மக்கள் நலம் கருதி வெளியிடுகின்றோம். அவற்றோடு சம்பந்தப்பட்டவர்கள் பிழையேதும் செய்யவில்ல…
-
- 22 replies
- 975 views
-
-
பிரான்சில் சிறிலங்கா அரச புலனாய்வாளர்கள் எனச் சந்தேகிக்கப்படுவோரின் கொலைவெறித் தாக்குதலில் பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுப் பொறுப்பாளர் பரமலிங்கம் அவர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு கடந்த நிலையில் தனது வர்த்தக நிறுவனத்தை மூடிவிட்டு செல்ல முற்படுகையிலேயே அங்கு காத்திருந்த கும்பல் அவர்மீது கண்மூடித்தனமான தாக்குதலைமேற்கொண்டுள்ளது. இதுகுறித்து பிரான்சு காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். புலம்பெயர் நாடுகளில் எமது தேசிய செயற்பாடுகளை முடக்கும் முகமாக செயற்பாட்டாளர்களை இலக்குவைத்து சிறிலங்கா அரச புலனாய்வாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். பிரான்சில் ஏற்கெனவே கப்டன் கஜன், லெப்.கேணல் நாதன் ஆகியோரை பா…
-
- 4 replies
- 746 views
-
-
வித்தியா படுகொலை சூத்திரதாரிகளை காப்பாற்ற திட்டமிட்ட சதி வேலைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக ஜ.தே.கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் தியாகராசா துவாரகேஸ்வரன் பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார். யாழ்.ஊடக அமையத்தினில் இன்று அவர் நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டினில் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் மற்றும் சட்டத்தரணி தவராசா ஆகியோர் இவ்விடயத்தினில் பின்னின்று செயற்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். வித்தியா படுகொலை தொடர்பிலான சான்றாதரங்களை அழிப்பதற்கு சிரமதானமென்ற பேரினில் புங்குடுதீவினில் கனரக வாகனங்கள் மூலம் தடயங்கள் இல்லாமல் செய்யப்பட்டுள்ளது.வித்தியாவினது உறவுகளது எதிர்ப்பினை தாண்டி அவ்வாறு தடயங்கள் அகற்றப்பட்டுள்ளன. வித்தியா படுகொலை வழக்கினை குழப்பியடிக்கவும் குற…
-
- 0 replies
- 1.3k views
-
-
வெள்ளவத்தையிலிருந்து யாழ்ப்பாணம் வரையுள்ள தமிழர்களின் கோயில்களை ஒழித்துக்கட்ட எமக்கு தேவைக்கும் அதிகமான சக்தியுள்ளது. ! ஞானசார தேரர் சூளுரை ! 780adad1beb27f0c54647e4de568fd26
-
- 25 replies
- 1.7k views
-
-
சீன இராணுவ அதிகாரிகள் குழு சிறிலங்கா இராணுவத் தளபதியை சந்திப்பு JUN 19, 2015by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சீன உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் குழு, சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வாவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளது. சிறிலங்கா இராணுவத் தலைமையகத்தில் நேற்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் அதிகாரிகள் தலைமையகத்தின் இராணுவப் பயிற்சித் திணைக்கள அரசியல் ஆணையாளர் மேஜர் ஜெனரல் செங் ஜியாங் தலைமையிலான ஆறு இராணுவ அதிகாரிகள் இந்தச் சந்திப்பில் பங்கேற்றனர். இவர்கள், சீனாவின் நிதியுதவியுடன் தியத்தலாவ இராணுவப் பயிற்சி முகாமில் கட்டப்பட்டு வரும், கட்டத்தொகுதி தொடர்பான தொழில்நுட்ப உதவிகளை வழங்கு…
-
- 0 replies
- 593 views
-
-
சீனாவின் ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி உடன்பாட்டில் கையெழுத்திடுகிறது சிறிலங்கா JUN 19, 2015 | 10:59by கி.தவசீலன்in செய்திகள் சீனாவினால் முன்முயற்சி மற்றும் கூடுதல் மூலதனத்துடன் உருவாக்கப்படும், ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியில், இணைந்து கொள்ளும் உடன்பாட்டில் சிறிலங்கா கையெழுத்திடவுள்ளது. இதற்கு சிறிலங்கா அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில்,நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க முன்வைத்த இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்தது. சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ளும் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, வரும் 29ஆம் நாள் பீஜிங்கில் ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியில் இணைந்து கொள்வது த…
-
- 0 replies
- 359 views
-
-
போலி நகைகளைக் கொடுத்து முன்னாள் போராளிகளை ஏமாற்றிய மகிந்த JUN 19, 2015 | 8:49by VANNIin செய்திகள் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளுக்கு திருமணம் செய்து வைத்த நிகழ்வில், சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் சார்பில் பரிசளிக்கப்பட்ட தங்க நகைகள் போலி என்று தெரியவந்துள்ளது. வடக்கு மாகாணசபை ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்டம், பாலிநகரில், நேற்று நடந்த நடமாடும் சேவையில், முன்னாள் போராளி ஒருவர், வடக்கு மாகாண அமைச்சரிடம் இதுகுறித்து முறையிட்டுள்ளார். வடக்கு மாகாண அமைச்சர் ஒருவருக்கு, முன்னாள் போராளி ஒருவர் கையளித்த மனு ஒன்றிலேயே, போலி தங்க நகையை கொடுத்து மகிந்த ராஜபக்ச ஏமாற்றியது குறித்து விபரித்துள்ளார். வவுனியாவில் உள்ள புனர்வாழ்வு முகாமில் வைத்து, 2010…
-
- 0 replies
- 512 views
-
-
சீனாவைச் சார்ந்த வெளிவிவகாரக் கொள்கை மீளாய்வு – ஜப்பானில் மங்கள சமரவீர தெரிவிப்பு JUN 19, 2015 | 6:16by கார்வண்ணன்in செய்திகள் சீனாவைச் சார்ந்திருக்கும் வெளிவிவகாரக் கொள்கையை சிறிலங்கா மீளாய்வு செய்யவுள்ளதாக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். ஜப்பானுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, அந்த நாட்டின் என் எச் கே செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள செவ்வியிலேயே இவ்வாறு கூறியுள்ளார். “சீனாவின் உதவி முன்னைய ஆட்சியில் ஊழல்கள் மலிவதற்கு இடமளித்தது. கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தை சிறிலங்கா அரசாங்கம் இடைநிறுத்தியுள்ளது. அது தற்போது மீளாய்வு செய்யப்பட்டு வருகிறது. அந்த திட்டம் முறையான நடைமுறைகளைப் பின்…
-
- 0 replies
- 268 views
-
-
பொதுத்தேர்தலில் பெண் வேட்பாளரையும் நிறுத்துவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு முடிவு! [Tuesday 2015-06-16 20:00] பொதுத் தேர்தலில் பெண் வேட்பாளர் ஒருவரை நியமிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பின் நான்கு கட்சி தலைவர்களும் உத்தேசித்துள்ளனர். பொதுத் தேர்தல் மற்றும் கட்சிக்குள் காணப்படும் பிரச்சினைகள் குறித்து ஆராயும் கலந்துரையாடல் இன்று யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கை தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. அதன்போது எதிர்வரும் பொதுத் தேர்தலில் பெண் வேட்பாளர் ஒருவரை நியமிப்பது குறித்தும், தொகுதி பங்கீடுகள் மற்றும் வேட்பாளர்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது. குறித்த வேட்பாளர் நியமனம் குறித்த கலந்துரையாடல் எதிர்வரும் ஜூலை மாதம் 21 ஆம் திகத…
-
- 30 replies
- 1.8k views
-
-
இறந்தவர்களை மனதிலிருத்தியே நாம் அனைத்தையும் செய்யவேண்டும்.2006 – 2009 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இப்பகுதியில் சுமார் 120 பாடசாலைப் பிள்ளைகள் கொத்துக் குண்டுகள் மூலமாகவும் எறிகணைகள் மூலமாகவும் கொன்று குவிக்கப்பட்டனர் என்றும் 200 பிள்ளைகள் தாய் அல்லது தகப்பனை அல்லது இருவரையும் இழந்த மாணவர்க உள்ளனர் எனவும் 30 பிள்ளைகளின் நிலைமை என்னவென்று இதுவரை தெரியாது உள்ளதாகவும் நினைவு கூர்ந்துள்ளார் வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரன். கிளிநொச்சி மலையாளபுரம் சாரதாதேவி வித்தியாலய வகுப்பறை கட்டட திறப்பு விழா நிகழ்வினில் கலந்து கொ:டு உரையாற்றிய அவர் கொத்துக் குண்டுகள் மூலமும் எறிகணைகள் மூலமும் எமது பிஞ்சுகள் குலைகுலையாக அறுத்து நிலத்தில் வீழ்த்தப்பட்டு அவர்களின் உடல்களில் இருந்து சிந்…
-
- 6 replies
- 708 views
-
-
கடுமையான வாதப் பிரதிவாதங்களுக்கு மத்தியில், வடக்கு மாகாண சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொது வேட்பாளராக முன்னாள் நீதியரசர் சி.விக்னேஸ்வரனை நிறுத்துவதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் ஏகமனதாக தீர்மானித்துள்ளன. மேலும்,http://tamilworldtoday.com/?p=22576
-
- 20 replies
- 1.5k views
-
-
வடக்கின் ஒவ்வொரு பிடி மண்ணிலும் தனது மூச்சை வைத்திருப்பவரே, முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்கப்பட வேண்டும்... [saturday, 2013-07-13 20:14:47] ...தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமையிடம் மனித உரிமை ஆர்வலர் சண் மாஸ்டர் வலியுறுத்தல். அறிவிக்கப்பட்டுள்ள வடமாகாண சபை தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பது தொடர்பில் கூட்டமைப்புக்குள் பலத்த வாதப்பிரதிவாதங்கள் காணப்படுவதோடு, கால அட்டவணையில் சந்திப்புகளும் தொடர்கின்றன. இந்நிலையில் முதலமைச்சராக நிறுத்தப்பட வேண்டியவரின் தகுதிகள் பற்றி பலரும் பலவித கோணங்களில் பேசுகின்றனர். அறிக்கைகள் விடுகின்றனர். குறிப்பாக சட்ட ஆளுமை பற்றியும், ஆங்கில மொழிப்புலமை பற்றியும் முன்னிறுத்தி பேசுகின்றனர். சட்ட…
-
- 17 replies
- 1k views
-
-
எயிட்ஸ் நோயைத் தடுக்கும் மருந்தைக் கண்டுபிடித்த மாணவனுக்கு ஜனாதிபதி பாராட்டு! [Friday 2015-06-19 07:00] எயிட்ஸ் நோயைத் தடுப்பதற்கான மருந்தொன்றை உற்பத்தி செய்து கொழும்பு நாலந்தா கல்லூரி மாணவன் ரகித்த தில்ஷான் மாலேவன சர்வதேச பாராட்டைப் பெற்றுள்ளார். இந்த மாணவனை நேற்று முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அழைத்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது திறமையின் மூலம் இலங்கைக்கு மாபெரும் புகழை ஈட்டித் தந்துள்ள ரகித்த தில்ஷான் மாலேவன மாணவனின் திறமைகளை பாராட்டிய ஜனாதிபதி அம்மாணவனுக்கு தனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார். அவருடைய எதிர்கால நடவடிக்கைகளுக்கு ஆசிகூறிய ஜனாதிபதி, அதற்காக எந்த நேரத்திலும…
-
- 0 replies
- 447 views
-
-
மகிந்தவின் தலைமையிலேயே போட்டி! - என்கிறார் வாசுதேவ நாணயக்கார [Friday 2015-06-19 07:00] முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தலைமையில் தேர்தலில் போட்டியிட உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். மஹிந்தவிற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வேட்பு மனு வழங்கத் தவறினால் அவரது தலைமையில் வேறும் ஓர் அரசியல் கட்சியின் கீழ் தேர்தலில் போட்டியிடுவோம். ஏற்கனவே இது குறித்து மக்களை தெளிவுபடுத்தும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சில கட்சிகள் இந்தப் பணிகளை ஆரம்பித்துள்ளன. வேட்பு மனு தாக்கல் செய்யும் சந்தர்ப்பத்தை கருத்திற் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும். பொதுத் தேர்தலின் போது மஹிந்த தலைமயிலான கூட்டணி 100 ஆசனங்களை வெற்…
-
- 0 replies
- 403 views
-
-
20வது திருத்த வர்த்தமானியை மீளப்பெற வேண்டும்! - சிறு மற்றும் சிறுபான்மைக் கட்சிகள் கோரிக்கை [Friday 2015-06-19 07:00] அரசமைப்பின் 20ஆவது திருத்தத்தை சிறு கட்சிகளும், சிறுபான்மையின கட்சிகளும் முழுமையாக எதிர்க்கத் தீர்மானித்துள்ளன என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். அத்துடன் பூரண ஒத்திசைவு இல்லாமல் அரச வர்த்தமானியில் பிரசுரித்த 20ஆவது திருத்தத்தை உடனடியாக மீளப்பெறவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். சிறு கட்சிகளும், சிறுபான்மையின கட்சிகளும் நேற்று இரவு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ‘தாருஸ்ஸலாம்’ தலைமையகத்தில் நடத்திய அவசர கூட்டத்திலேயே மேற்படி தீர்மானங்கள் எடுக்கப்பட்டன என்றும் அவர் சுட…
-
- 0 replies
- 325 views
-
-
மகி்ந்தவைப் பிரதமராக்கினால் மைத்திரியைப் போட்டுத் தள்ளுவார்! - ரஞ்சன் ராமநாயக்க [Friday 2015-06-19 07:00] ஜனாதிபதி மைத்திபால சிறிசேனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்குமிடையே இரகசிய நட்பு தொடர்வதாகவும் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளராக மஹிந்த ராஜபக்ஷவை களமிறக்குவதற்கான முயற்சிகள் திரைமறைவில் முன்னெடுக்கப்படுவதாகவும் கூறப்படும் செய்திகள் வெறும் புரளியாகுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார். மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்கினால் அவர் அப்பதவியிலிருந்து ஜனாதிபதியாவதற்கு ஒரு தோட்டாவை மாத்திரமே செலவு செய்வாரென்பதை நன்கு புரிந்து வைத்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இறுதிவர…
-
- 0 replies
- 420 views
-
-
மக்களின் ஆணைக்கு மதிப்பளிக்குமாறு கோரி அரசுக்கு எதிராக ஜேவிபி பேரணி! [Friday 2015-06-19 07:00] மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத அரசாங்கம் நாட்டுக்கு அவசியமில்லை வாக்குறுதிகளை விரைவில் நிறைவேற்ற முடியாவிடின் மைத்திரி,ரணில் அரசாங்கம் வீடு திரும்ப வேண்டும் என வலியுறுத்தி மக்கள் விடுதலை முன்னணி கொழும்பில் நேற்று ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை முன்னெடுத்தது. மக்கள் ஆணைக்கு மதிப்பளித்து கொடுத்த வாக்குறுதிகளை துரித கதியில் நிறைவேற்று என்ற தொனிப்பொருளில் நேற்று மாலை பொரளையில் இருந்து பேரணியாக வருகைதந்த மக்கள் விடுதலை முன்னணியினர் கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் முன்பாக கோஷங்களை எழுப்பியவாறும் பதாகைகளை ஏந்தியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட…
-
- 0 replies
- 257 views
-