ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143530 topics in this forum
-
கிளிநொச்சி கண்டாவளைப் பிரதேச செயலாளர் பிரிவுக்;குட்பட்ட கிராமமான 2ஆம் கட்டை கோரக்கன்கட்டு என்னுமிடத்தில் வசிக்கும் சிறுமியாருவர், வெள்ளிக்கிழமை (29) மாலை கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர். கோரக்கன்கட்டு குடியிருப்பு என்னுமிடத்தில் வசிக்கும் இராசையா கமலேஸ்வரி (வயது 13) எனும் சிறுமியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சிறுமி காலையிலிருந்து காணாமற்போயிருந்த நிலையில், அவரின் வீட்டுக்கு அருகாமையில் இருக்கும் கிணற்றுக்கு தண்ணீர் எடுக்க சென்றநேரத்தில் கிணற்றுக்குள் வீழ்ந்திருக்கலாம் என சந்தேகித்த உறவினர்கள், கிணற்றைப்பார்த்த போது சடலத்தை கண்டுள்ளனர். கிராம அலுவலர் பொலிஸார் ஆகியோருக்கு தகவல் வழங்கியதை அடுத்து கிணற்றில் இருந…
-
- 1 reply
- 442 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் சட்டவிரோதமான முறையில் கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த தென்னிலங்கை மீனவர்கள், தமது நடவடிக்கைகளை முள்ளிவாய்க்காலிலும் தொடக்கிய நிலையில் தனது தலையீட்டினால், அவர்கள் வெளியேறியுள்ளனர் என வடக்கு மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் வெள்ளிக்கிழமை (29) தெரிவித்துள்ளார். 'கரைவலைத் தொழிலுக்குரிய அனுமதியைப் பெற்று முள்ளிவாய்க்காலுக்கு வந்த தென்னிலங்கையைச் சேர்ந்த மீனவர், சட்டவிரோதமாக படகுகள் தெப்பங்களுடன் மீன்பிடியில் ஈடுபட்டனர்.' 'இந்த தொழில் நடவடிக்கையால் அதிருப்தியுற்ற முள்ளிவாய்க்கால் பகுதி தமிழ் மீனவர்களின் நெய்தல் முள்ளி வாய்க்கால் கிழக்கு கடல் தொழில் சங்கத்தினர், இதைத் தடுத்து நிறுத்த எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.' என கூற…
-
- 1 reply
- 407 views
-
-
வடமாகாணத்தில் கடந்த 14 நாட்களில் மாத்திரம் 10 பாடசாலை மாணவிகள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ள அதிர்ச்சித் தகவலை இராஜாங்க கல்வியமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ளார். ஊடகவியலாளர்களை இன்று சந்தித்து கருத்து வெளியிடும் போதே இதனைத் தெரிவித்தார். பாடசாலைக்கு வெளியிலுள்ள சிலரால் இந்த பாலியல் துஷ்பிரயோகங்கள் நடத்தப்பட்டுள்ள போதிலும், இதில் பாடசாலைகளில் கற்பித்துக் கொடுக்கும் ஒருசில ஆசிரியர்களினாலும் மேற்கொள்ளப்பட்டுள்ளமை கவலையை அளிப்பதாக அமைச்சர் கூறினார். இதற்கமைய கடந்த இரண்டு வாரங்களில் இடம்பெற்றுள்ள இச்சம்பவங்களில் 10 மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்திருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார். இந்த சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு…
-
- 0 replies
- 366 views
-
-
2009 ஆம் ஆண்டு தமிழினப் படுகொலையின் உச்சம் முள்ளிவாய்க்காலில் அரங்கேறியது. இப் படுகொலையில் பல சாட்சியங்களாக மாறின அவ்வாறான ஒரு சாட்சியமே ஊடகவியலாளர் இசை பிரியாவின் படுகொலை. இசை பிரியாவின் படுகொலையினை மையமாக வைத்து "போர்களத்தில் ஒரு பூ" என்ற திரைப்படத்தினை தமிழகத்தில் தயாரித்தனர் .இப் படத்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன் தணிக்கை குழு தடை விதித்துள்ளது. இத் தடை தொடர்பாகவும், திரைப்படம் தொடர்பாகவும் இயக்குநர் கணேசன் அவர்கள் பதிவு இணையத்திற்கு வழங்கிய சிறப்பு நேர்காணல். இந் நேர்காணலுடன் படத்தின் சிறப்பு காட்சிகளும், இரு பாடல் காட்சிகளும், படத்தின் முன்னோடமும் இணைத்துள்ளோம். நேர்காணல் - ரஞ்சித் குமார் மற்றும் பிரதீப் குமார் http://www.pathivu.com/news/40476/57…
-
- 0 replies
- 323 views
-
-
வணக்கம் வணக்கம் எல்லாருக்கும் வணக்கம் என்ன அப்பு இண்டைக்கு கலாதியா 3 தரம் வணக்கம் வைக்கிறார் எண்டுதானே யோசிக்கிறியள். தம்பி பிழையா நினைக்கக்கூடாது. நான் இப்ப கொஞ்சம் பிசி தம்பி. உங்களுக்கு தெரியும்தானே எங்கயும் பிரச்சனை எண்டால் என்னட்டைதான் வந்துநிப்பாங்கள். நான் இப்ப பாலா அண்ணை சொல்லிப்போட்டுப்போன விசயங்களை தம்பி ஒரு புத்தகமா எழுதிக்கொண்டிருக்கிறன். ஏனப்பு இப்ப அவசரம் எண்டு கேப்பியள் என்ன? உனக்கு சொன்னா என்ன தம்பி. பாலா அண்ணை கடைசி நேரத்தில சரியான கவலையோட கனக்க இரகசியங்களை சொன்னவர். ஓமோம் தலைவரைப்பற்றியும் தான். உந்தச்சண்டையில எல்லா தளபதிமாரும் செத்துப்போடுவினம் எண்டும் சொன்னவர் தம்பி. எனக்கு அப்ப அதைக்கேக்க பயங்கர சொக்கா இருக்கும் எண்டும் நீர் நினைப்பீர். ஆனா எனக்…
-
- 1 reply
- 1.2k views
-
-
இலங்கையினில் கடந்த காலங்களில் காணாமற் போயுள்ள ஊடகவியலாளர்கள் தொடர்பான விசாரணைகளை எவ்வித பாரபட்சமுமின்றி முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ள போதும் வடகிழக்கினில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பான விசாரணைகள் பற்றி கண்டு கொள்ளப்படாதிருப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்பட்டுள்ளன. மூடி மறைக்கப்பட்டுள்ள ‘பைல்கள்’ மீள திறக்கப்பட்டு முறையானதும் பாரபட்சமற்றதுமான விசாரணைகளை முன்னெடுப்பதற்கு வழிகாட்டல்களை வழங்கியுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். கடந்த சில தசாப்தங்களாக, குறிப்பாக கடந்த மூன்று தசாப்தங்களை நோக்கும்போது ஊடகவியலாளர்கள் காணாமற் போதல் மற்றும் பலியாகியுள்ளமை, சுதந்திரமான ஊடகத்துறை எதிர்கொள்ள நேர்ந்த நெருக்கடிகள் என்பத…
-
- 0 replies
- 425 views
-
-
ஒரு சீனா என்ற கொள்கையையும், தென் சீனக் கடல் விவகாரத்தில், சீனாவின் நிலைப்பாட்டையும் முழுமையாக ஆதரிப்பதாக சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன சீனப் பாதுகாப்புத் தரப்பிடம் உறுதியளித்துள்ளார். சீனா பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பிலேயே இந்த தகவல் இடம்பெற்றுள்ளது. சிங்கப்பூரில் நடக்கும், சங்கிரி லா கலந்துரையாடலில் பங்கேற்கச் சென்றுள்ள, சிறிலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தனவை, நேற்று பிற்பகல் சீனாவின் மக்கள் விடுதலை இராணுவத்தின் பிரதி தலைமை அதிகாரி அட்மிரல் சன் ஜியான்கூ சந்தித்துப் பேச்சு நடத்தினார். இந்தச் சந்திப்பின் போது தென் சீனக்கடல் விவகாரம் தொடர்பான சீனாவின் நிலைப்பாட்டை அட்மிரல் விபரித்துக் கூறியிருந்…
-
- 0 replies
- 207 views
-
-
வித்தியா படுகொலையினை தொடர்ந்து யாழ். நகரப்பகுதியில் வன்முறையில் ஈடுபட்டதா குற்றஞ்சாட்டி மேலும் நால்வரை இன்று சனிக்கிழமை கைது செய்துள்ளதாக யாழ்பாணம் பொலிஸார் தெரிவிததுள்ளனர். கைதான நால்வரும் ஓட்டுமடப்பகுதியினை சேர்ந்தவர்கள் என தெரியவருகின்றது. படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றிருந்தன. இதன்போது வர்த்தக நிலைய உரிமையாளர்களை அச்சுறுத்தியமை, வங்கிகளுக்குள் புகுந்து அதன் செயற்பாடுகளுக்கு பங்கம் விளைவித்தமை, தனியார் கட்டடங்கள் மீது கல்வீசி தாக்கியமை போன்ற குற்றங்களில் ஈடுபட்டவர்களையே இவ்வாறு கைது செய்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இதனிடையே வன்முறைகளுடன் தொடர்புடைய ஏனையவர்களையும் கைது செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கா…
-
- 0 replies
- 244 views
-
-
வடமாகாண அமைச்சர் ஜங்கரநேசனின் சிபார்சின் அடிப்படையினில் யாழ்.மாவட்ட மேலதிக அரச அதிபராக செந்தில் நந்தனன் நியமிக்கப்படவுள்ளார்.யாழ்.மாவட்ட மேலதிக அரச அதிபர் ரூபினி வரதலிங்கம் பதவி உயர்வால் வடமாகாண பொது சேவை ஆணைக்குழுவுக்கு மாற்றமாகி செல்லவுள்ளார். அதன்படி ரூபினி வரதலிங்கத்தின் இடத்திற்கு நல்லூர் பிரதேச செயலர் செந்தில் நந்தனன் நியமிக்கப்படவுள்ளார்.இதேவேளை எதிர்வரும் திங்கட்கிழமை புதிதாக யாழ்.மாவட்ட மேலதிக அரச அதிபராக நல்லூர் பிரதேச செயலர் செந்தில் நந்தனன் பதவியேற்கவுள்ளார். முன்னதாக முல்லைதீவிற்கு இடமாற்றம் வழங்கப்பட்ட வேளை அதனை ஏற்க மறுத்த அவரிற்கு அமைச்சர் ஜங்கரநேசன் அடைக்கலம் வழங்கியிருந்தார். http://www.pathivu.com/news/40463/85//d,article_full.aspx
-
- 0 replies
- 213 views
-
-
ரவிராஜ் படுகொலையுடன் கோத்தபாய, கரன்னகொடவுக்குத் தொடர்பு! [Wednesday 2015-05-27 19:00] தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் படுகொலையுடன் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸவிற்கும், முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவிற்கும் தொடர்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ரவிராஜ் கொலையுடன் தொடர்புடைய விசாரணைகளை குற்ற புலனாய்வுப் பிரிவினர் பூர்த்தியாக்கியுள்ளனர். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்களான முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட ஆகியோர் இதுவரையில் கைது செய்யப்படவில்லை. சட்ட மா அதிபர் திணைக்களத்தின் மெத்தனப் போக்கே இவ்வாறு பிரதா…
-
- 1 reply
- 524 views
-
-
போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றவை எனக் கூறப்படும் யுத்தக்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான செயற்பாடுகள் சம்பந்தமாக இராணுவத்தின் உயரதிகாரிகளிடம் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை நடத்திவருகிறது. இதன் ஒரு கட்டமாக அனைத்துலக மட்டத்தில் போர்க்குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளவரும், அண்மையில் அரசால் இராணுவத் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டவருமான மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸிடம் உள்ளக விசாரணைக்குழு வாக்குமூலத்தைப் பதிவுசெய்துள்ளது. போரின் இறுதிக்கட்டத்தில் அதிகளவு மனித உரிமை மீறல்களைப் புரிந்த படைப்பிரிவுக்கு இவரே தலைமைதாங்கினார் என்ற குற்றச்சாட்டும் இருந்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது. அத்துடன், நந்தன உடவத்த, கமல் குணரத்தன ஆகிய உயர்மட்ட இராணுவ புள்ளிகளிடமும் விசாரணைகள் நடத்தப்பட்…
-
- 6 replies
- 1.5k views
-
-
சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பது தொடர்பில் கூடிய கவனம் செலுத்துவதாகவும் வெகு விரைவில் நல்ல செய்தியை எதிர்பார்க்கலாம் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கைதிகள் தொடர்பான அறிக்கையை வெகுவிரைவில் அமைச்சரவையில் சமர்ப்பித்து கைதிகளை விடுவிக்க முடியும் என வும் கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது. நீண்டகாலமாக சிறைச்சாலைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான நடவடிக்கைகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் அது தொடர்பில் தற்போதைய நிலைப்பாட்டினை வினவியபோதே கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு …
-
- 4 replies
- 582 views
-
-
எனது அம்மா அவமானப்படுத்தப்பட்டு, துன்பறுத்தப்பட்ட வேளை எங்கள் குடும்பம் எவ்வளவு எவ்வளவு வேதனையடைந்தது என்பதை தற்போது உணர்கிறீர்களா என முன்னாள் பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்காவின் மகன் சவீன் பண்டாரநாயக்க நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிடம் கேள்வி எழுப்பியுள்ளார். தனது தாய் விசேட பொலிஸ்பிரிவிற்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டது குறித்து நாமல் ராஜபக்ச வெளியிட்டிருந்த டுவிட்டர் செய்திக்கு பதிலடியாக தனது முகப்புத்தகத்தில் இதனை சவீன் இதனை தெரிவித்துள்ளார். ராஜபக்ச அவர்களே எனது தாய்,தந்தை அல்லது எங்கள் குடும்பத்தவர்கள் யாரும் அரசியல்வாதிகளல்ல,எனினும் கடந்த 2 வருடங்களுக்கு மேலாக உங்கள் அரசாங்கம் எங்கள் குடும்பத்தை துன்புபுறுத்தியது, அவமானத்தை ஏற்படுத்தியது தீயவர்களா…
-
- 1 reply
- 668 views
-
-
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த காவி அணியாத பிக்குவாகிவிட்டமையினால் ஞானசார தேரரையும் மிஞ்சிவிட்டார் என ஐக்கிய சோசலிஷ கட்சியின் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய தெரிவித்தார். வித்தியாவின் கொலையானது சிறுபான்மையினரை சில அரசியல்வாதிகள் இன் னும் அடிமைகளாகவே நடத்த முயற்சித்து வருகின்றனர் என்பதையே எடுத்துக்காட்டுகிறது எனவும் தெரிவித்தார். வெள்ளவத்தை தமிழ்ச் சங்கத்தில் இடம் பெற்ற வித்தியாவுக்கான மலரஞ்சலி செலு த்தும் நிகழ்வில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், புங்குடுதீவு மாணவி வித்தியா கொடூரமாக கொலை செய்யப்பட்டமையினால் நாட்டின் அனைத்து இன மக்களும் மனம் …
-
- 1 reply
- 439 views
-
-
நோர்வே உயர்ஸ்தானிகர்-அரச அதிபர் சந்திப்பு இலங்கைக்கான நோர்வே உயர்ஸ்தாணிகர் கிரேட் லோசன் உட்பட மூவர் அடங்கிய குழுவினர் இன்று காலை யாழ். மாவட்ட செயலகத்திற்கு விஜயம் செய்ததுடன் யாழ். மாவட்ட அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகத்தினை சந்தித்து கலந்தரையாடினர். குறித்த கலந்துரையாடலில் யாழ். மாவட்டத்தில் நோர்வே அரசின் மூலமாக நடைபெற்று வரும் அபிவிருத்திப்பணிகள்இ தற்போதைய மாவட்டத்தின் நிலைமைகள் தொடர்பாகவும் மாவட்ட அரச அதிபரிடம் இலங்கைக்கான நோர்வே உயர்ஸ்தானிகர் கிரேட் லோசன் கேட்டறிந்து கொண்டார். மேலும் தற்போது வலி. வடக்கில் மீள்குடியேறிய மக்களின் அடிப்படை தேவைகளையும் உதவிகளையும் நலத்திட்டங்களையும் முன்னெடுக்க நோர்வே அரசு தயாராகவுள்ளதாகவும் இலங்கைக்கான நோர்வே உயர்தானிகர் கிரேட் லோச…
-
- 2 replies
- 536 views
-
-
இலங்கையின் எதிர்கால அரசியலில் மஹிந்த ராஜபக் ஷ என்ற பெயர் இனி ஒருபோதும் உச்சரிக்கப்படாது. இந்த நாட்டில் ஜனநாயகம் என்ற வார்த்தை மட்டுமே உச்சரிக்கப்படும். அதையும் மீறி யாரேனும் ஜனநாயகத்தை சீரழிக்க முயற்சித்தால் அதற்கு ஒருபோதும் நாம் இடமளிக்க மாட்டோம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். ஜனநாயகத்தை வென்றெடுக்கும் போராட்டத்தை மாதுலுவாவே சோபித தேரர் ஆரம்பித்திருக்காவிடின் இன்று நாட் டில் மாற்றம் ஒன்று ஏற்பட்டிருக்காது. நாட்டில் ஜனநாயகத்தை தொடர்ந்தும் தக்கவைக்க வேண்டுமாயின் மாதுலுவாவே சோபித தேரரின் ஒத்துழைப்பு அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டார். மாதுலுவாவே சோபித தேரரின் ஜனன தினத்தை முன்னிட்டு சமூக நீதிக்…
-
- 1 reply
- 714 views
-
-
இராணுவச் சிப்பாய்க்கு மரணதண்டனை விதித்தது யாழ்.மேல் நீதிமன்றம்! [Thursday 2015-05-28 18:00] காங்கேசன்துறை நலன்புரி நிலையத்தில் வைத்து, இராணுவ உயரதிகாரியொருவரை கடந்த 2007ஆம் ஆண்டு மே மாதம் 15ஆம் திகதி சுட்டுக்கொன்ற இராணுவ வீரருக்கு, மரணதண்டனை விதித்து யாழ். மேல் நீதிமன்ற ஆணையாளர் திருமதி கனகா சிவபாதசுந்தரம் இன்று உத்தரவிட்டார். குற்றஞ்சாட்டப்பட்ட பொன்னம்பெரும ஆராய்ச்சிகே வசந்த (வயது 39) என்ற சிப்பாய், காங்கேசன்துறை நலன்புரி நிலையத்தில் கடமையாற்றிய போது, தனக்கு விடுமுறை வழங்காமல் இடமாற்றம் செய்கின்றார் என கோபப்பட்டு உயரதிகாரி றலப்பனாவ (39 வயது) மீது ரீ–56 ரக துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்தார். கடந்த 2011 ஜூலை 8ஆம் திகதி மேற…
-
- 3 replies
- 655 views
-
-
மண்டூர் பிரதேசம் நாவிதன்வெளியில் வசிக்கும் சமூக சேவை உத்தியோகத்தர் மதிதயான் மண்டூர் கோயில் நிர்வாகத்துடன் சில மோசடிச் சம்பங்கள் தொடர்பில் முரண்பட்டிருந்ததாகவும் அதன் காரணமாகவே அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. அண்மையில் பட்டப்பகலில் நடைபெற்ற இந்தப் படுகொலைச் சம்பவம் மட்டக்களப்பு மாவட்டத்தை மாத்திரமின்றி வடக்கு கிழக்கு மாகாணங்களையே பெரும் பதற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது. கிழக்கு மாகாணத்தில் மிக நீண்ட காலத்தின் பின்னர் இவ்வாறு படுகொலை சம்பவம் நடந்திருப்பது மக்களை அதிரச்சிக்குள்ளாக்கியுள்ளது. கொல்லப்பட்ட சமூகசேவை உத்தியோகத்தர் மண்டூர் ஆலய நிர்வாகத்தில் இருந்தவர்கள் செய்த நிதிமோசடி மற்றும் ஆலய நில மோசடி குறித்து நடவடிக்கை எடுக்கும் முகமாக வழக…
-
- 1 reply
- 353 views
-
-
வடக்கில் 100 வீத சமாதானம் உள்ளது; என்கிறார் வடக்கு டிஐஜி காட்டுச் சட்டம் என்பது பலமுள்ளவர்கள் பலமில்லாதவர்கள் மீது பிரயோகிப்பதாகும். அந்த சட்டம் 14ஆம் 15 ஆம் நூற்றாண்டு காலப்பகுதியிலேயே இருந்தது.அது விடுதலைப்புலிகளது சட்டம் இல்லை என வடக்கு மாகாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் ஏ . ஜயசிங்க தெரிவித்தார். யாழ்ப்பாண ஊடகவியலாளர்களுக்கும் வடக்கு மாகாண சிரேஸ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபருக்கும் இடையில் சந்திப்பொன்று இன்று யாழ். பொலிஸ் தலைமையகத்தில் இன்று நடைபெற்றது. அதன்போது காட்டுச்சட்டம் என்று கூறுவது விடுதலைப்புலிகளது சட்டமா என ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், காட்டுச் சட்டம் என்பது பலமுள…
-
- 5 replies
- 754 views
-
-
வடக்கினில் நிலவிவரும் அண்மைய குழப்பகரமான சூழல் தொடர்பினில் மேற்குலகு கூடிய அக்கறை கொண்டுள்ளது.அவ்வகையினில் இலங்கைக்கான லண்டன் உயர் ஸ்தானிகர் ஜேம்ஸ் டயுரிஸ் யாழ்ப்பாணத்திற்கு நேற்று புதன்கிழமை விஜயம் மேற்கொண்டிருந்தார். அந்த விஜயத்தின் போது, வடமாகாண முதலமைச்சரை அவரது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். அந்த சந்திப்பின் பின்னர் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் வேதநாயகனை யாழ்.மாவட்ட செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். குறிப்பாக இலங்கையின் நீதித்துறை மற்றும் காவல்துறை தொடர்பினில் மக்கள் மனமாற்றம் கொண்டுள்ளனராவென்பதை கண்டறிய அவர் முற்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது. http://www.pathivu.com/news/40428/57//d,article_full.aspx
-
- 6 replies
- 736 views
-
-
வீதியில் எதிர்ப்பு... காணாமல் போனவர்களை கண்டுபிடித்து தருமாறு கோரி, அவர்களின் உறவினர்கள் கொழும்பு, தும்முல்ல சந்தியில் இன்று வெள்ளிக்கிழமை (29) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த 'வீதியில் எதிர்ப்பு'என்ற அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. (படங்கள்: கித்சிறி டி மெல்) http://www.tamilmirror.lk/147155#sthash.B1W8gmNd.dpuf
-
- 2 replies
- 480 views
-
-
வரதரின் பாதையில் போகிறார் விக்கி! - சுசில் பிரேம்ஜயந்த [Thursday 2015-05-28 09:00] வரதராஜப்பெருமாள் அன்று எவ்வாறு தனது தனிநாட்டுக் கோரிக்கையை ஆரம்பித்தாரோ அதையே இன்று வட மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் முன்னெடுத்து செல்கின்றார். இவர்கள் தெரிவிப்பதைப்போல் வடக்கு,கிழக்கு பூமி அவர்களின் தாயகம் அல்ல என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்தார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், புங்குடுதீவு பாடசாலை மாணவி படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் நாம் எமது அனுதாபங்கள…
-
- 8 replies
- 1k views
-
-
புங்குடுதீவு மாணவி கொலைச் சந்தேகநபர்களின் டீ.என். ஏ அறிக்கைக்காக காத்திருக்கின்றோம்; வடக்கு டிஐஜி புங்குடுதீவு மாணவியின் படுகொலை தொடர்பில் பொலிஸாரின் விசாரணைகள் முழுமைபெற்றுவிட்டன. தற்போது மரபணுப் பரிசோதனை அறிக்கைக்காக காத்திருக்கின்றோம் என வடக்கு மாகாண சிரேஸ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் லலித் ஏ. ஜயசிங்க தெரிவித்தார். ஊடகவியலாளர்களுக்கும் வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கும் இடையில் சந்திப்பொன்று யாழ்ப்பாண பொலிஸ் தலைமைகத்தில் இன்று இடம்பெற்றது. அதன்போது புங்குடுதீவு மாணவியின் கொலை தொடர்பில் தற்போதைய நிலை என்ன என ஊடகவியலாளர் ஒருவர் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், புங்குடுதீவு மாணவியின் படுகொலை தொடர்பில் 9 பேர…
-
- 0 replies
- 851 views
-
-
நோர்வே தூதுவர் தலைமையில் நீரியல் நிபுணர்கள் வடக்கு விவசாய அமைச்சருடன் சந்திப்பு இலங்கைக்கான நோர்வே தூதுவர் கிறீற் லோகீன் தலைமையில் நோர்வே நீரியல் நிபுணர்கள் வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனை அவரது அலுவலகத்தில் இன்று பிற்பகல் சந்தித்துக் கலந்துரையாடினர். வடமாகாண சபையால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அழைப்பின் பேரில், இலங்கை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் அண்மையில் சுன்னாகம் பகுதியில் தரையை ஊடுரும் றேடாரைப் பயன்படுத்தி ஆய்வுகளை மேற்கொண்டிருந்தது. இதற்கான அனுசரணையை நோர்வே வழங்கியிருந்தது. இதன் அடுத்த கட்ட ஆய்வுக்காகவே நோர்வே புவிச்சரிதவியல் நிறுவகத்தைச் சேர்ந்த நீரியல் நிபுணர்கள் யாழ்ப்பாணம் வந்துள்ளனர். கடந்த புதன்கிழமை யாழ்ப்பாணம் வந்தடைந்த நோர்வே நிபுணர…
-
- 0 replies
- 681 views
-
-
போருக்குப் பின்னரும் வடக்கு மாகாணம் முரண்பாடுகளுடைய மாகாணமாகவே இருக்கின்றது ; அமைச்சர் சத்தியலிங்கம் ஆயுதப்போராட்டம் முடிவுற்றதே தவிர அதற்குப் பின்னரான காலத்தில் போருக்குக் காரணமான அடிப்படை பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை.அதனால் போரால் என்ன செய்ய நினைத்தார்களோ அதனை வேறு பல வழிகளால் அந்தந்த அரசுகள் செய்ய முற்படுவது தான் இங்குள்ள வித்தியாசம்.அவற்றில் ஒன்று தான் வடக்கில் புகைப்பொருள் பாவனை என்று சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் தெரிவித்தார். சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினம் நேற்று யாழில் அனுஸ்டிக்கப்பட்டது.இதில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும் அவர் உரையாற்றுகையில், வடக்கு மாகாணம் போருக்குப் பின்னர் அரசியல் தீர்வு எட்…
-
- 0 replies
- 500 views
-