ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143529 topics in this forum
-
போராட்டங்களில் வன்முறைகளைத் தவிர்க்க வேண்டும்! - சம்பந்தன் கோரிக்கை. [saturday 2015-05-23 08:00] புங்குடுதீவு மாணவி வித்தியா காமுகர்களால் மிகக் கொடூரமாகக் கூட்டு வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இது மிகவும் கேவலமானது; படு அசிங்கமானது. இந்தப் படுகொலை மிலேச்சத்தனமானது; சமூகத்திற்குப் பெரும் அச்சுறுத்தலானது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலைக்கு நீதி வழங்கப்பட வேண்டும் எனக் கோரியும், காமுகர்களின் அந்தக் கூட்டு வன்புணர்வுக் கோரக் கொலையைக் கண்டித்தும் வடக்கு, கிழக்கில் தொடர் போராட்டங்களில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். மக்களின் இந்த உணர்வுகளை…
-
- 0 replies
- 341 views
-
-
ரவிராஜ் படுகொலை - ஐந்து கடற்படையினர் விளக்கமறியல்! [saturday 2015-05-23 08:00] தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை செய்யப்பட்ட வழக்கின் சந்தேக நபர்கள் ஐவருக்கும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. நேற்று இடம் பெற்ற குறித்த வழக்கு விசாரணைகளின் போது கொலைக்கு பயன்படுத்தியதாக கூறப்படும் துப்பாக்கியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட இரத்த மாதிரிகள் டீ.என்.ஏ. பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இரகசிய பொலிஸார் குறிப்பிட்டனர். இந்த நிலையில் பரிசோதனை அறிக்கை இன்னும் கிடைக்கப் பெறவில்லை எனவும் அவர்கள் கூறினர். தகவல்களை ஆராய்ந்த கொழும்பு மேலதிக நீதவான் சந்தேக நபர்களை தொடர்ந்தும் விளக் கமறியலில் வைக்க உத்தரவிட்டார். இதன…
-
- 0 replies
- 411 views
-
-
May 21st, 2015 அன்று பிரசுரிக்கப்பட்டது. ஒன்பது ஆண்டு காலத்திற்கு பின்னர் சம்பூர் மக்கள் தமது சொந்த மண்ணுக்கு திரும்பியுள்ளனர். மீண்டும் தமது சொந்த ஊரில் காலடி பதித்தவர்கள் ஆனந்த கண்ணீர் மல்கினர். மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கட்டைபறிச்சான், மணல்சேனை, கிளிவெட்டி, பட்டித்திடல் ஆகிய இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருந்த சம்பூர் மக்கள் அனைவரும் நேற்றுக் காலை தமது சொந்த ஊரான சம்பூருக்கு சென்றனர். மீண்டும் தமது சொந்த ஊரில் காலடி பதித்தவர்கள் ஆனந்த கண்ணீர் மல்கினர். இம்மக்கள் சம்பூர் பிரதேசத்திற்கு திரும்பிய சற்று நேரத்தில் அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸார் அவர்களை அவ்விடத்திலிருந்து அகன்று செல்லுமாறு பணித்தனர். அதன் போது நீதிமன்றத்தின் அறிவிப்பை பொதுமக்கள் தரப்பினர் சு…
-
- 19 replies
- 1.2k views
-
-
வாசுதேவ நாணயக்கார ஒரு வாடிய பூசணி - றணில் விக்கிரமசிங்க: குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- வாசுதேவ நாணயக்கார ஒரு வாடிய பூசணி - றணில் விக்கிரமசிங்க: குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்காரவை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று வாடிய பூசணி என வர்ணித்துள்ளார். வாசுதேவ நாணயக்கார பாராளுமன்றத்தில் ஆபாசமான வார்த்தை பிரயோகங்களை பயன்படுத்துவது மற்றும் பாராளுமன்றத்தில் அவரது நாடகங்கள் குறித்து ஐக்கிய தேசிய கட்சி அலுவலகத்தில் சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே பிரதமர் இதனை தெரிவித்துள்ளார். அவர் ஓரு காய்ந்து போன பூசணி, தனது வாழ்க்கையின் சுவையை இழந்தவர் என பிரதமர் த…
-
- 2 replies
- 444 views
-
-
Published on May 19, 2015-11:24 am · No Comments தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன், வல்வெட்டித்துறை நகரசபையின் முள்ளாள் தலைவர் அனந்தராஜ் ஆகியோர் கலந்து கொண்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு பிரத்தியேகமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு இடத்தில் நேற்றுமாலை நடைபெற்றது. முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் பெற்ரோர், உறவினரை இழந்த பிள்ளைகள் வாழும் ஒரு இல்லத்தில் அவர்களுடன் சேர்ந்து இறுதிப் போரில் உயிர் நீத்த அனைவருக்கும் சுடரேற்றி வணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வு தனியே முள்ளிவாய்க்கால் நினைவு அஞ்சலி என்ற செய்தியை மட்டுமல்ல எதிர்கால அரசியல் செய்தி ஒன்றையும் சொல்கிறது. எதிர்வரும் பொதுத்தேர…
-
- 7 replies
- 1.4k views
-
-
புங்குடுதீவில் படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் சடலத்தின் மீது இனவாத அரசியல் ஆதாயம் தேடும் கேவலமான முயற்சியில், சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச இறங்கியுள்ளதாக, நீதியமைச்சர் விஜேயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”மாணவி வித்தியாவின் படுகொலைச் சம்பவத்தை உலகமே அனுதாபத்துடன் நோக்கும் இந்தத் தருணத்தில், நாட்டின் முன்னாள் அதிபர் இந்தச் சம்பவத்தை இனவாதத்தை தூண்டும் பகடைக்காயாக உபயோகித்திருப்பது மனிதாபிமானமற்ற செயலாகும். தேசப்பற்றுடைய எந்தவொரு நபராலும் இதுபோன்ற மிலேச்சதனமான செயற்பாடுகளை தாங்கிகொள்ள இயலாது. ஆனால் மகிந்த ராஜபக்ச, தான் இந்த நாட்டின் முன்னாள் அதிபர் என்ற உணர்வின்றி இது குறித்து மிகவும் இழிவானத…
-
- 0 replies
- 564 views
-
-
வடக்கில் தற்போது ஏற்படும் சம்பவங்களைப் போன்றே விடுதலைப் புலிகளும் ஆரம்பித்தில் நடந்துகொண்டதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். மஹியங்கனைப் பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகவியலாளர்களைச் சந்தித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார். ஊடகவியலாளர்களிடம் கருத்துரைத்த மகிந்து, ''தற்போது நீதிமன்றத்தின் மீதும், பொலிஸார் மீதும் கல்வீச்சு நடத்தப்படுகிறது. விடுதலைப் புலிகளும் அன்று இதேபோன்றே ஆரம்பித்தனர். இது மிகவும் பயங்கரமான நிலைமையும், ஆரம்பமுமாகும். வரலாற்றைப் பார்த்தால் விடுதலைப் புலிகளும் இதைப்போன்றே ஆரம்பித்தனர். இதனால் பொலிஸார் இயங்க வேண்டும். வடக்கில் சட்டம் ஒருவகையிலும் தெற்கில் ஒருவகையிலும் இருக்க முடியாது. நாட்டில் ஒரே சட்டம் இருக…
-
- 3 replies
- 788 views
-
-
புங்குடுதீவு சம்பவத்துக்கு பாராளுமன்றத்திலும் கண்டனம் பாடசாலை மாணவியான வித்தியா புங்குடுதீவில் பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பாராளுமன்றத்திலும் கண்டிக்கப்பட்டதுடன், குற்றவாளிகளுக்கு சட்டரீதியாக கடும் தண்டனை பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற குடிவரவு, குடியகல்வாளர் திருத்தச்சட்டமூலம் தொடர்பான விவாதத்தின் போதே புங்குடுதீவு சம்பவம் தொடர்பில் கண்டனங்கள் வெளியிடப்பட்டதுடன், ஒருவர் மீது ஒருவர் பரஸ்பர குற்றச்சாட்டுக்களையும் சுமத்தியிருந்தனர். வடக்கில் இயங்கும் ஆயுதக்குழுக்களின் காரணமாகவே புங்குடுதீவு சம்பவம் போன்ற சம்பவங்கள் யாழ் குடாநாட்டில் அதிகரித்திருப்பதாக ஐக்கிய தேசி…
-
- 13 replies
- 1.1k views
-
-
யுத்த காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான உள்நாட்டு விசாரணைகள், எதிர்வரும் ஜூன் மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டு செம்டெம்பருக்குள் நிறைவடையும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறினார். இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பான சர்வதேச விசாரணைக்கு இலங்கை அரசாங்கம் ஒருபோதும் இணங்கப்போவதில்லை என்று ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் பான் கீ மூனிடம் தான் திட்டவட்டமாகக் கூறியதாகவும் அவரும் அதனை ஏற்றுக்கொண்டதாகவும் ஜனாதிபதி கூறினார். இலங்கையின் தேசிய பத்திரிகைகளின் ஆசிரியர்களுடனான சந்திப்பொன்று இன்று புதன்கிழமை (20) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி, …
-
- 4 replies
- 484 views
-
-
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சம்பவம் பயங்கரவாதத்தின் ஆரம்பம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஆரூடம் வெளியிட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். பயங்கரவாதத்தின் ஆரம்பமும் இவ்வாறே அமைந்திருந்தது என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் காவல் நிலையம் மற்றும் நீதிமன்றம் மீது கல் வீசப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளும் இவ்வாறே போராட்டத்தை ஆரம்பித்தனர் என அ வர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். வடக்கிலே தெற்கிலோ சட்டம் ஒரே விதமாக அமுல்படுத்தப்பட வேண்டுமென தெரிவித…
-
- 7 replies
- 699 views
-
-
வேலணைப் பகுதியில் இளம் பெண்ணொருவரைக் காணவில்லை என்று அவரது பெற்றோர் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். 4ஆம் வட்டாரம், வேலணையைச் சேர்ந்த ராஜ்குமார் நிமலினி (வயது -20) என்பவரே இவ்வாறு காணாமற்போயுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திலுள்ள நண்டு பதனிடும் தொழிற்சாலையில் பணிபுரியும் இவர் நேற்று வியாழக்கிழமை காலை 7 மணியவில் வேலைக்காக வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளார். இரவாகியும் அவர் வீடு திரும்பாததையடுத்து நேற்றிரவு அவரது பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டைப் பதிவு செய்தனர். இது தொடர்பான விசாரணைகளை ஊர்காவற்றுறைப் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர். http://www.malarum.com/article/tam/2015/05/22/10198/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8…
-
- 2 replies
- 903 views
-
-
வித்தியா கொலை குற்றவாளிகள் 10 பேரையும் பகிரங்கமாக தூக்கில் போட வேண்டும்! - நாடாளுமன்றத்தில் விஜயகலா ஆவேசம் [Thursday 2015-05-21 08:00] புங்குடுதீவு மாணவி வித்தியா மீதான பாலியல் வல்லுறவு, படுகொலை ஆகியவற்றுடன் தொடர்புடைய பத்துப் பேருக்கும் பொதுமக்கள் முன்னிலையில் மரணதண்டனை நிறைவேற்ற வேண்டும் என்று பிரதியமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். புலிகளின் காலத்தில் இத்தகைய பாலியல் வல்லுறவுகள் இடம்பெற்றதில்லை. அப்படி நடந்தால் 24 மணித்தியாலத்தில் தண்டனை வழங்கிவிடுவர் என்றும் அவர் கூறியுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர், புங்குடுதீவு மாணவி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டிரு…
-
- 7 replies
- 1.8k views
-
-
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் நீண்டநேரம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம் முடிவடைந்ததன் பின்னரே ஜனாதிபதியும் பிரதமரும் நீண்ட நேரம் கலந்துரையாடியுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன. குறிப்பாக பாராளுமன்றத்தை கலைத்தல் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டமாக தேர்தல் முறை மாற்றத்தைக் கொண்டுவருதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் நாட்டில் புதிய அரசாங்கம் பதவியேற்கும் என்று ஜனாதிபதி தெரிவித்துள்ள நிலையில் ஜூன் மாத நடுப்பகுதியில் பாராளுமன்றம் கலைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால் அத…
-
- 0 replies
- 615 views
-
-
அரசியல் சாசனப் பேரவையை நிறுவும் வரையில் நாடாளுமன்றத்தைக் கலைக்காதிருக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் ஶ்ரீலங்கா மிரர் இணையத்திற்குத் தெரிவித்தார். 19ஆவது அரசியலமைப்புத் திருத்திற்கமைய அரசியல் சாசனப் பேரவை நிறுவப்பட்ட பின்னரே நாடாளுமன்றம் கலைப்பது உறுதியாகியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். அரசியல் சாசனப் பேரவையை நிறுவுவது குறித்து அரசியல் கட்சிகளுக்கிடையே இணக்கப்பாட்டை எட்ட முடியாதிருப்பதால் அதற்கான அங்கத்தவர்களை நியமிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். அத்துடன், அடுத்த பொதுத் தேர்தல் வரையில், தற்காலிக அரசியல் சாசனப் பேரவையொன்றை வேண்டும் என்ற யோசனையும் தற்போது முன்வ…
-
- 0 replies
- 579 views
-
-
. Published on May 20, 2015-9:14 pm · No Comments சம்பூரில் ஜனாதிபதியின் உத்தரவில் முதலீட்டு ஊக்குவிப்புச் சபைக்கு ஒதுக்கப்பட்ட 818 ஏக்கர் பொதுமக்களின் காணிகளை விடுவிக்க நீதிமன்றம் விதித்திருந்த இடைக்காலத்தடையுத்தரவு இன்று நீக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் தமது காணிகளை விடுவிக்ககோரி கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டம் முடிவுக்கு கொணடுவரப்பட்டுள்ளது. இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இந்த மக்களின் நிலைமை குறித்து ஆராய்வதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் நீதிமன்ற தடை உத்தரவு நீக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தனர். இதனையடுத்து உண்ணாவிரதப்போராட்டம் நிறுத்தப்பட்டது. இந்த உண்ணாவிரத ப…
-
- 2 replies
- 605 views
-
-
வித்தியா படுகொலை! குற்றவாளிகளுக்கு அதியுச்ச தண்டனை வழங்க வேண்டும்--சிறிதரன் 3b1ce0ab07c03743fef5df5c1acab485
-
- 0 replies
- 792 views
-
-
சிங்கள இனவாதத்தைக் கொண்டு தமிழ் இனவாதத்தை தோற்கடிக்க முடியாது என ஜே.வி.பி கட்சியின் அரசியல் சபை உறுப்பினர் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார்.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இனவாத அடிப்படையில் செயற்பட்டு வருகின்றார் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். மஹிந்த ராஜபக்ஸ தெற்கின் இனவாதத்தை பிரதிநிதித்துவம் செய்து வருவதாகவும், இவரினால் மற்றுமொரு இனவாதத்தை தோற்கடிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். எந்தவொரு இனவாத நடவடிக்கைகளையும் ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை அரசியல்வாதிகள் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் இனவாதத்தை அதிகாரத்திற்காக பயன்படுத்திக்கொள்ளக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார். 2009ம் ஆண்டில் தமிழ் இனவாதத்தின் ஆயுத முனை …
-
- 1 reply
- 565 views
-
-
புதன்கிழமை நிதிமோசடி குறித்த விசேட பொலிஸ்பிரிவின் முன்னிலையில் ஆஜரான வேளை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மிகவும் பதட்டத்துடன் காணப்பட்டதாகவும், மிக் விமான கொள்வனவில் முறை கேடுகள் ஏதாவது இடம்பெற்றிருந்தால் அதற்கு முன்னாள் விமானப்படை தளபதியே காரணம் என தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து மேலும் தெரிவிக்கப்படுவதாவது ஆறு மணி நேரம் இடம்பெற்ற இந்த விசாரணைகளின் பொது கோத்தபாயவிடம் முதலில் மிக்விமான கொள்வனவு குறித்த கேள்விகளே எழுப்பப்பட்டன. மிகவும் பதட்டத்துடன்,கைநடுக்கத்துடன் காணப்பட்ட கோத்தா உரிய முறையிலேயே விமான கொள்வனவு இடம்பெற்றதாக குறிப்பிட்டார், எனினும் இது குறித்து நிதிமோசடி தொடர்பான பொலிஸார் துருவிதுருவி விசாரிக்கத் தொடங்கியதும் …
-
- 2 replies
- 789 views
-
-
நெல்லியடியில் புதிதாக அமைக்கப்பட்ட மத்திய பேருந்து நிலையம் இன்று வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சு, உறுப்பினர்கள், கரவெட்டி பிரதேச சபையின் நிதிப்பங்களிப்பில் சுமார் 30 இலட்சம் ரூபா செலவில் இந்தப் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது. புதிய பேருந்து நிலையத்தை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன், வடக்கு மாகாண சபை உறுப்பினர் எஸ்.சுகிர்தன், கரவெட்டி பிரதேச சபைத் தவிசாளர் பொ.வியாகேசு ஆகியோர் இணைந்து நாடா வெட்டித் திறந்து வைத்தனர். இந்நிகழ்வில் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஆர்னோல்ட், சயந்தன், சிவயோகன் ஆகியோரும் கலந்து கொண்டனர். http://www.malarum.com/article/tam/2015/05/21/1019…
-
- 2 replies
- 568 views
-
-
புங்குடுதீவு மாணவி படுகொலையை கண்டித்து முஸ்லிம் சமூகம் போராட்டம் புங்குடுதீவு மாணவியின் படுகொலையை கண்டித்தும்,மாணவிக்கு நீதி கோரியும் யாழ்.முஸ்லிம் சமூகம் கண்டன போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இன்றைய தினம் காலை ஒஸ்மானியாக் கல்லூரியிலிருந்து குறித்த போராட்டம் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=456694041720283904#sthash.dOtXnIFz.dpuf
-
- 31 replies
- 1.8k views
-
-
வித்தியாவின் கொலை தொடர்பில் யாழ் இளவரசர் புங்குடுதீவு மாணவி வித்தியா விவகாரத்தால் நேற்று யாழ்ப்பாணமே கொந்தளித்த நிலையில், யாழ்ப்பாண இளவரசர் ராஜா ரெமிஜியஸ் கனகராஜ், நெதார்லாந்தில் இருந்து அவசர கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார். இளவரசரின் நியாயாதிக்கத்திற்குட்பட்ட பகுதியில் யாரும் சட்டத்தையும், ஒழுங்கையும் கையிலெடுக்க வேண்டாம் என வலியுறுத்தியுள்ளார். பொலிசார் குற்றவாளிகளை நீதியின் முன்நிறுத்த மேற்கொள்ளும் நடவடிக்கைகளிற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுள்ளார். சிங்கை ஆரியச்சக்கரவர்த்தியின் பரம்பரையில் வந்த இவர் நெதர்லாந்தில் வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. http://lankaroad.net/
-
- 9 replies
- 2.1k views
-
-
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்காரவுக்குமிடையில் நாடாளுமன்றில் நேற்று வியாழக்கிழமை கடும் சொற்போர் மூண்டது. நாடாளுமன்றம் நேற்றுப் பிற்பகல் ஒரு மணிக்கு சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் கூடியது. சபாநாயகர் அறிவிப்பு, மனுத் தாக்கல், வாய்மூல விடைக்கான கேள்விச்சுற்று ஆகியன முடிவடைந்த பின்னர் நிலையியற் கட்டளைச் சட்டத்தின் 17/1ஆம் பிரிவின் கீழ் ஜீ.எல்.பீரிஸ் எம்.பி. அவசர பிரேரணையொன்றை முன்வைத்தார். மத்திய வங்கி ஆளுநருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழுவின் விசாரணை அறிக்கை கடந்த செவ்வாயன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த அறிக்கை தொடர்பில் விவாதம் நடத்துமாறு …
-
- 1 reply
- 376 views
-
-
முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகள், படுக்கையில் தங்கள் வாழ்நாளைக் கழித்து படுக்கைப் புண்ணால் இளம் வயதிலேயே உயிரிழந்து வருகின்றனர் என்று வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார். வடமாகாண சபையால் ஆரம்பிக்கப்பட்ட முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மாதாந்த கொடுப்பனவு வழங்கும் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு, வவுனியா - பம்பைமடுவிலுள்ள வைகறை நிறுவன கேட்போர் கூடத்தில் வியாழக்கிழமை (23) நடைபெற்றது. அதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'முன்னாள் போராளிகளில் பலர் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளனர். இதனால் அவர்கள் த…
-
- 4 replies
- 1.3k views
-
-
வடமாகாணத்தில் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தால் வழங்கப்படும் கொடுப்பனவை பெறுவதற்கான விண்ணப்பப் படிவங்கள் பிரதேச செயலக சமூக சேவைகள் அலுவலர்களால் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இடுப்புக்கு கீழ் பாதிக்கப்பட்டவர்களுக்கு 1,500 ரூபாயும், கழுத்துக்கு கீழ் பாதிக்கப்பட்டவர்களுக்கு 3,000 ரூபாயும் மாதாந்த கொடுப்பனவு வழங்கும் திட்டம் வடமாகாண சுகாதார அமைச்சின் கீழுள்ள சமூக சேவைகள் பிரிவால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் பாதிப்புத் தொடர்பில் அரச மருத்துவரின் மருத்துவ அறிக்கையைப் பெறவேண்டும். அத்துடன் விண்ணப்பபடிவத்தையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். மத்திய அரசின் சமூக சேவைகள் திணைக்களத்தால் மாதாந்தம் வழங்க…
-
- 0 replies
- 317 views
-
-
யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்ட 129 பேருக்கும் விளக்கமறியல்! - அனுராதபுரம் சிறைக்கு அனுப்பிவைப்பு. [Thursday 2015-05-21 19:00] யாழ்ப்பாணம் நீதிமன்றத்தின் மீது தாக்குதல் நடத்திய 129 சந்தேக நபர்கள் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.நேற்றைய தினம் வன்முறை கும்பல் ஒன்றினால் நீதிமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதன் பின்னர் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து 129 பேரை கைது செய்திருந்தனர். இவர்கள் இன்றைய தினம் நீதிமன்றில் ஆஐர் செய்யப்பட்டனர். இதன்படி 4 பிரிவுகளாக ஆஜர்படுத்தப்பட்ட சந்தேக நபர்களில் முதலாவதாக ஆஜர்படுத்தப்பட்ட 43 பேரையும் எதிர்வரும் ஜூன் மாதம் 3ஆம் திகதி வரையும் இரண்டாவதாக ஆஜர்படுத்தப்பட்ட 39 பே…
-
- 0 replies
- 741 views
-