ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143530 topics in this forum
-
இலங்கையில் போர் முடிந்து 6 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கத்துடன் தொடர்புகளை பேணத் தயாராக இருப்பதாக உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை எஸ்.ஜே. இமானுவேல் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமிழர்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பது தொடர்பில் நல்லெண்ண சமிக்ஞைகளை வெளிப்படுத்தி வருவதாகவும் அருட்தந்தை இமானுவேல் பிபிசி தமிழோசையிடம் கூறினார். முன்னைய மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலம் தமிழ் மக்களுக்கு கொடூரமானதாக இருந்ததாகவும் தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சி தமிழ் மக்களுக்கு நம்பிக்கை அளிப்பதாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். புதிய அரசாங்கம் வெளிப்படுத்துகின்ற நல்லெண்ண சமிக்ஞைகளுக்கு புலம்பெயர் தமிழர் தரப்பு மதிப்பளிக்க வேண்ட…
-
- 7 replies
- 933 views
-
-
யுத்தம் காரணமாக தடைப்பட்டிருந்த வட மாகாண கல்வி நிலையை மேம்படுத்தவதற்கும் மூடப்பட்டுள்ள யாழ்ப்பாணம் சிங்கள மகா வித்தியாலயத்தை மீள ஆரம்பிப்பதற்கும் தேவையான நடவடிக்கைகளை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க, கல்வி அமைச்சர் இராதாகிருஷ்ணனுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இதுகுறித்து அமைச்சர் இராதாகிருஷ்ணனிடம் கேட்டபோது, வடக்கு மாகாணத்தில் சீர்குலைந்துள்ள கல்வி நிலையைக் கட்டியெழுப்புவது குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளதாகக் கூறப்பிட்டார். அத்துடன், பிரதமரின் ஆலோசனைக்கமைய வடக்கு மாகாணத்தில் சாதாரண தர உயர் தர பெறுபேறுகளை மேம்படுத்துவது, பாடசாலையில் இடைநடுவில் விட்டுச் செல்லும் வீதத்தைக் குறைப்பது மற்றும் வடக்கில் சிறுவர…
-
- 1 reply
- 735 views
-
-
புதுக்குடியிருப்பு சிவன்கோயிலில் வடக்கு மாகாண முதலவர் விக்கினேஸ்வரன் ,அனந்தி சசிதரன், சுரேஷ் பிரேமசந்திரன் மேலும் பலர் போரில் மரணித்தவர்களிற்கான மோட்ச அர்ச்சனை வழிபாட்டில் கலந்து கொண்டனர். http://www.pathivu.com/news/40172/57//d,article_full.aspx
-
- 0 replies
- 558 views
-
-
இனப்படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கு முள்ளிவாய்க்காலில் நினைவுச்சுடரேற்றி இன்று அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. வடக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற பிரதான நிகழ்வுகள் முற்பகல் 10 மணிக்கு வடக்கு முதலமைச்சர் க.வி. விக்கினேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றிருந்தது. ஆகவணக்கத்தை தொடர்ந்து முதன்மைச்சுடரினை முதலமைச்சர் ஏற்றிவைத்தார். தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள்,வடக்கு மாகாண உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். பெருமனளிவினில் இராணுவப்பபுலனாய்வினர் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டிருந்த போதும் அவர்கள் நினைவேந்தல் நிகழ்வுகளிற்கு தடை விதித்திருக்கவில்லை. நினைவேந்தலையடுத்து புதுக்குடியிருப்பு சிவன் கோவிலில் வீரச்சாவடைந்த மாவீரர்கள்,பொதுமக்கள…
-
- 3 replies
- 665 views
-
-
மக்கள் முழுமையாகப்பங்கெடுத்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நினைவேந்தல் வடமராட்சி கிழக்கின் மருதங்கேணியினில் இன்று அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.இன்று முள்ளிவாய்க்காலில் நடாத்த இருந்த நினைவேந்தல் நிகழ்விற்கு முல்லைத் தீவு நீதவான் நீதி மன்றம் தடைவிதித்திருந்த நிலையினில் நிகழ்வு வடமராட்சி கிழக்கின் மருதங்கேணிக்கு மாற்றப்பட்டிருந்தது. முள்ளிவாய்க்காலில் இன அழிப்பிற்குள்ளானவர்களிற்கான நினைவேந்தலிற்கான ஏற்பாடுகள் மருதங்கேணியினில் ஏற்பாடு செய்யப்பட்டுக்கொண்டிருந்த வேளை அங்கு சென்றிருந்த காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டதுடன் அங்கு பிரசன்னமாகியிருந்த ஏற்பாட்டாளர்களது விபரங்களை பெற்று வெளியேறியுள்ளனர். நினைவுச் சுடரேற்றல்,மற்றும் பிராத்தனைகளை தொடர்ந்து மரக்கன்றுகளும் வழங்கிவைக்கப…
-
- 0 replies
- 644 views
-
-
யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தில் சிங்கள இனவாத அரசினால் முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்ட எமது மக்களுக்கு அஞ்சலி செலுத்தினர். பிரதான மண்டபம் முன்னே நினைவுச் சுடர் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து கைலாசபதி கலையரங்கில் நினைவு வணக்க நிகழ்வுகள் இடம்பெற்றன http://www.pathivu.com/news/40160/57//d,article_full.aspx
-
- 0 replies
- 677 views
-
-
வடதமிழீழம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கீரிமலை நகுலேஸ்வரம் கோயிலில் ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட அமைப்பாளர் திரு துவாரகேஸ்வரன் ஏற்பாட்டில் நடைபெறும் முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த மக்களுகாகன சிறப்பு வழிபாட்டில் வடமாகாண அவை முதலமைச்சர் திரு விக்கினேஸ்வரன் மற்றும் வடமாகாண அவை உறுப்பினர் திருமதி அனந்தி சசிதரன் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். http://www.pathivu.com/news/40157/57//d,article_full.aspx
-
- 0 replies
- 451 views
-
-
முள்ளிவாய்க்காலில் இருந்து விடுதலையை நோக்கி - தத்தர் முள்ளிவாய்க்கால் ஒரு முடிவென்று எதிரி கருதுகிறான். அது முடிவல்ல, இனி அதுவே விடுதலைக்கான தொடக்கப் புள்ளி. முள்ளிவாய்க்கால் பெரும் துயரை எதிரி செய்துகாட்டி ஆறு ஆண்டுகள் உருண்டோடி விட்டன. இப்போது எம்முன் உள்ள பிரதான கேள்வி இதுதான். முள்ளிவாய்க்கால் பெரும் துயரத்துக்குள் மூழ்குண்டு கிடக்கப்போகிறோமா அல்லது அதையே அடிப்படை ஆதாரமாகக் கொண்டு வீறுடன் எழுந்து விவேகத்துடன் நடைபோடப் போகிறோமா. ஏதிரி எமக்கு ஒரு பெரும் சவாலை தந்திருக்கின்றான். அதனை எதிர்கொண்டு முன்னேற வேண்டியதும் விடுதலையை காணவேண்டியதும் எமது பொறுப்பு. முள்ளிவாய்க்காலில் அரங்கேற்றிய இனப்படுகொலையின் மூலம் எமது தேசியத் தளம் தகர்க்கப்பட்டுவிட்டது என்றும் இனி …
-
- 3 replies
- 3.9k views
-
-
வடதமிழீழம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கீரிமலை நகுலேஸ்வரம் கோயிலில் ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட அமைப்பாளர் திரு துவாரகேஸ்வரன் ஏற்பாட்டில் நடைபெறும் முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த மக்களுகாகன சிறப்பு வழிபாட்டில் வடமாகாண அவை முதலமைச்சர் திரு விக்கினேஸ்வரன் மற்றும் வடமாகாண அவை உறுப்பினர் திருமதி அனந்தி சசிதரன் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். http://www.pathivu.com/news/40157/57//d,article_full.aspx
-
- 2 replies
- 848 views
-
-
போரின் இறுதி 2 ஆண்டுகளில் 57-ம் படையணிக்கு ஜகத் டயஸ் தளபதியாக இருந்தார் இலங்கை இராணுவத்தின் புதிய தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் நியமிக்கப்பட்டுள்ளமையை ஹியுமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பு விமர்சித்துள்ளது. இறுதிக்கட்ட யுத்தத்தின் கடைசி இரண்டு ஆண்டுகளில் இராணுவத்தின் 57-ம் படையணிக்கு தளபதியாக இருந்த ஜகத் டயஸ் நியமிக்கப்பட்டமை 'நீதிக்கு கிடைத்த அடி' என்று அந்த அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. இறுதிக்கட்டப் போரின் போது நடந்த மோசமான மனித உரிமை துஷ்பிரயோகங்களுடன் இலங்கை இராணுவத்தின் 57-ம் படையணி தொடர்புபட்டிருந்ததாகவும் ஹியுமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பு தெரிவித்துள்ளது. இதனால் ஜகத் டயஸின் படிநிலை உயர்வு, போர்க்குற்றங்கள் தொடர்பில் நம்பகமான விசாரணை நடத்தப்படும் என்ற அரசாங்கத…
-
- 1 reply
- 478 views
-
-
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான யுத்த வெற்றி நாள் நிகழ்வு இன்று கொழும்பில் இடம்பெறவுள்ளது . இன்று மாலை 4.30 மணியளவில் கொழும்பு விகாரமகாதேவி பூங்கா வளாகத்தில் இடம் பெறவுள்ள யுத்த வெற்றி நாள் நிகழ்வினை இராணுவ ஒன்றியத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர். இந் நிகழ்வு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தலைமை யில் இடம் பெறவுள்ளது. இந்த வெற்றிநாள் நிகழ்வில் தேசிய சுதந்திர முன்னணி, மக்கள் ஐக்கிய முன்னணி, தேசிய ஒருங்கிணைப்பு ஒன்றியம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யுத்தம் முடிவடைந்த மே மாதம் ௧௯ ஆம் திகதியை வெற்றி தினம் என்று அனுஷ்டிக்காமல் பிரிவினை எதிரான தினமாக அனுஷ்டிக்கப்பட வேண…
-
- 0 replies
- 664 views
-
-
சில சமயங்களில் பொலிஸாரின் பொறுப்பற்ற செயல்கள் குற்றங்கள் இழைக்க ஏதுவாக அமைகின்றன என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார். புங்குடுதீவு மகா வித்தியாலய உயர்தர மாணவி துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் முதலமைச்சரால் ஞாயிற்றுக்கிழமை (17) அனுப்பி வைக்கப்பட்டுள்ள கண்டன அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, மாணவியின் பரிதாப மரணமும் அவர் மீது மேற்கொள்ளப்பட்ட துஷ்பிரயோகமும் எமது சமுதாயத்தின் இன்றைய சீரழிந்த நிலையை எடுத்துக்காட்டுகின்றது. அண்மையில் யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருடன் வடமாகாணத்தில் அதிகரித்துள்ள குற்றங்கள் தொடர்பில் பேசினேன். பொதுமக்களின் உதவியுடன் இவ…
-
- 4 replies
- 544 views
-
-
. [ ஞாயிற்றுக்கிழமை, 17 மே 2015, 07:30.09 AM GMT ] இறுதி யுத்தத்தின் போது கொல்லப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக திருகோணமலையிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடத்தப்பட்டது. இன்று ஞாயிற்றுக்கிழமை 17.05.2015 காலை 9.10 மணிக்கு சிவன் கோயிலடியில் அமைந்துள்ள தந்தை செல்வா நினைவுத் தூபிக்கு முன்னால் இது நிறைவேற்றப்பட்டது.. இலங்கை தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட தலைவரும். கிழக்கு மாகாண கல்வி அமைச்சருமான சி.தண்டாயுதபாணி தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது. இதில் கிழக்கு மாகாண சபை திருகோணமலை உறுப்பினர்களான கு.நாகேஸ்வரன், ஜெ.ஜனார்த்னன், முன்னாள் திருகோணமலை நகர சபை தலைவர் க.செல்வராசா, சி.நந்தகுமர். த.கௌரிமுகுந்தன், வெருகல் பிரதேச சபை முன்னாள் தலைவர் ச.விஜயகாந்த், ஆகி…
-
- 16 replies
- 801 views
-
-
விடுதலைப் புலிகளின் காலத்தில் பெண்கள் நள்ளிரவிலும் தனியாக நடமாட முடிந்தது:- வடக்கு விவசாய அமைச்சர் விடுதலைப் புலிகளின் காலப்பகுதியில் பெண்களால் நள்ளிரவிலும் தன்னந்தனியாக நடமாடமுடிந்தது. அதுபோன்ற ஒரு காலம் மீளவும் வராதா என்று மக்கள் இப்போது ஏங்க ஆரம்பித்துள்ளனர் என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்தார். புங்குடுதீவில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திப் படுகொலை செய்யப்பட்ட மாணவியின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சி நேற்று புங்குடுதீவு மகாவித்தியாலயத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்திய பின்னர் உரையாற்றிய போதே அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில், மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலையை மிருகத்…
-
- 31 replies
- 1.9k views
-
-
சென்னை மெரினா கடற்கரையில் மாற்றம் மாணவர் இயக்கத்தின் ஏற்பாட்டில் ஈழத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கான நினைவேந்தல் அணிவகுக்கு ஒன்று நடை பெற்றது. அவ் நிகழ்வில் இலங்கை, இந்தியா உலக வல்லாதிக்க நாடுகளின் துணை கொண்டு படுகொலை செய்யப்பட்ட்ட போராளிகளுக்கும் ,மக்களுக்கும் மாணவர்கள் அணிவகுக்கு மரியாதையோடு மலர் அஞ்சலி செலுத்தி பின்னர். இதில் உணர்ச்சி பாவலர் காசி ஆனந்தன் உட்பட பல தமிழ் உணர்வாளர்கள் கலந்து கொண்டனர். http://www.pathivu.com/news/40132/57//d,article_full.aspx
-
- 0 replies
- 638 views
-
-
மாணவி வித்தியாவின் பரிதாப மரணமும் அதற்கு முன்னர் அவர் மீது நடாத்தப்பட்ட வன்புணர்வும், சித்திரவதையும் எமது சமுதாயத்தின் இன்றைய சீரழிந்த நிலையையே எடுத்துக் காட்டுகின்றதென தெரிவத்தள்ள டவக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரன் இது தொடர்பினில் விடுத்துள்ள ஊடக அறிக்கையினில் மேலும் தெரிவிக்கையில்:- இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னர்தான் பிரதிப் பொலிஸ்மா அதிபராக யாழ் மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்டிருக்கும் திருபு.மு.பெரேரா அவர்களுடன் வடமாகாணத்தில், குறிப்பாக யாழ் குடாநாட்டில், அதிகரித்துக் கொண்டு போகுங் குற்றங்கள் சம்பந்தமாகப் பேசிக்கொண்டிருந்தேன். பொதுமக்கள் உதவியுடன் இவற்றைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்போவதாக அவர் வாக்களித்தார். எனினும் நிலமை கட்டுக்கடங்காது செல்கின்றதோ என்று எண்ண …
-
- 0 replies
- 741 views
-
-
சம்பூரை விடுவிக்கும் வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடை உத்தரவு விதிக்கப்பட்டாலும் ஏலவே நிலுவையிலுள்ள வழக்குடன் தடை உத்தரவு வழக்கையும் இணைத்து தடையை நீக்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்வோம் என யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். சம்பூரை விடுவிக்கும் ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலுக்கு உச்ச நீதிமன்றினால் விதிக்கப்பட்ட தடை உத்தரவு சம்மந்தமாக விளக்கம் அளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், 2012 ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் முதலீட்டு சபைக்கு சம்பூரில் உள்ள 818 ஏக்கர் நிலம் சுவீகரிக்கப்பட்டிருந்தது. இதற்கு அமைய மேற்படி முதலீட்டு சபை கெற்வே இன்டஸ்றீ…
-
- 0 replies
- 436 views
-
-
தற்போது பெய்துவரும் மழைக்காரணமாக முல்லைத்தீவு துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள இரு குளங்கள் வான் பாய்கின்றன. புத்துவெட்டுவானின் மருதங்குளம், மற்றும் பழைய முறிகண்டிக்குளம் ஆகிய குளங்களும் வான் பாய்கின்றன. மருதங்குளத்தின் வான் பாய்வதன் காரணமாக கிளிநொச்சியின் இரண்டாவது பெரியகுளமான அக்கராயன்குளத்தின் நீர்மட்டம் அதிகரித்து வருகின்றது. பழைய முறிகண்டிக்குளம் வான் பாய்வதன் காரணமாக துணுக்காயின் அம்பலப்பெருமாள் குளத்தின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதுடன் வான்பாய்வதற்கான நீர்மட்டத்தினையடைந்து கொண்டிருக்கின்றது. மழை தொடர்ந்து பெய்வதன் காரணமாக கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள பல குளங்கள் வான்பாய்வதற்கான நீர்மட்டத்தினையடைந்துள்ளன. http://www.tamilmirror.lk/14632…
-
- 0 replies
- 582 views
-
-
அச்சுவேலி நகர்ப்பகுதியில் மாவா எனப்படும் போதைப் பாக்கு விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் கறுப்பையா ஜீவராணி, வெள்ளிக்கிழமை (15) தீர்ப்பளித்தார். தண்டப் பணத்தைச் செலுத்தத்தவறின் 3 மாதகாலம் சிறைதண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதவான் கூறினார். அச்சுவேலி நகரப் பகுதியில் போதைப்பாக்கு விற்பனை செய்த கடை உரிமையாளரை கடந்த ஜனவரி மாதம் காங்கேசன்துறை விசேட போதைப்பொருள் தடுப்பு பொலிஸார் கைது செய்திருந்தனர். கடை உரிமையாளருக்கு எதிரான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று, வெள்ளிக்கிழமை (15) தீர்ப்பு வாசிக்கப்பட்டபோதே நீதவான் மேற்கண்டவாறு தீர்ப்பளித்தார். http://www.tamilmirror.lk/146194#sthash.JwIJKbBH.dpuf
-
- 7 replies
- 5k views
-
-
இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் விசேட பிரதிநிதி எரிக்சொல்ஹெய்ம்,யுத்தத்தின் இறுதி தருணங்களிள் இடம்பெற்ற சம்பவங்கள் மற்றும் வெள்ளைக்கொடி விவகாரம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் விசாரணைகுழு முன்னிலையில் சாட்சியமளித்ததாக தெரிவித்துள்ளார்.சிலோன் டுடேயிற்கு அளித்துள்ள பேட்டியில் இதனை அவர் குறிப்பிட்டுள்ளார். ஆம் நான் யுத்தத்தின் இறுதி தருணங்கள் மற்றும் வெள்ளைக்கொடி விவகாரம் குறித்து நான் அறிந்தவற்றை எல்லாம் ஐ.நா விசாரணைக்குழுவிற்கு தெரிவித்தேன் என அவர் குறிப்பிட்டுள்ளார். யுத்தத்தின் இறுதி தருணங்கள் குறித்த நம்பகத்தன்மை மிக்க தேசிய அல்லது சர்வதேச ஆணையத்தின் முன்பாக தான் அறிந்த அனைத்தையும் தெரிவிப்பதற்கு தயாhர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். …
-
- 0 replies
- 602 views
-
-
இவ்வருடம் யுத்த வெற்றி விழா கொண்டாடப்படமாட்டாது. மாறாக பிரிவினைக்கு எதிரான தினமே கொண்டாடப்படுமென அரசு அறிவித்துள்ளதெனில் நாளை மறுதினம் 19 ஆம் திகதி மாத்தறையில் அரசு என்ன விழாவை கொண்டாடவிருக்கிறது என யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். இவ்வருடம் யுத்த வெற்றி விழா கொண்டாடப்பட மாட்டாது என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளமை குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்தும் அவர் கூறுகையில் அமைச்சர் கருஜெயசூரிய பயங்கரவாதிகளை நினைவு கூர முடியாதென்று கூறியுள்ளார். அவ்வாறாயின் எமது கேள்வி அரச பயங்கரவாதிகளை நினைவு கூர முடியுமா? என்பதேயாகும். கண்மூடித்தனமாக எத்தனையோ ஆயிரம் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்…
-
- 0 replies
- 829 views
-
-
புதிய அரசு எத்தகையதென்பதை முள்ளிவாய்க்கால் நினைவேந்தலிற்காக நீதிமன்ற தடைகளை பெற்றிருப்பதை கொண்டு புரிந்துகொள்ளமுடியுமென தெரிவித்துள்ளார் வடமாகாண பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன். முள்ளிவாய்க்காலில் மே18 நினைவேந்தல்களை நடத்த தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு இன்றிரவு 9.30அளவினில் கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர் இரவிகரனிடம் , வடமாகாண பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதனிடமும் தடை உத்தரவு கடிதத்தை அவர்களது வீடுகளினில் வைத்து இலங்கைப்பொலிஸார் கையளித்துள்ளனர். இது பற்றி கருத்து தெரிவித்த அவர் கடந்த 12ம் திகதி நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு நாங்கள் முள்ளிவாய்க்கால் கடற்கரையினில் விளக்கேற்றியிருந்தோம். ஆனால் எதிர்வரும் 18 ம் திகதி நின…
-
- 5 replies
- 738 views
-
-
தமிழ் மொழியில் தேசியம் கீதம் பாடப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அரச உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவமொன்று இன்று மட்டக்களப்பு வந்தாறுமூலை பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றுள்ளது. பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே தமிழில் தேசிய கீதம் இயற்றப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து சிங்கள மாணவர்களே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். தாக்குதலில் பத்தக்குட்டி சுமன் என்ற குடும்பஸ்தரே தாக்குதலுக்கு இலக்காகி செங்கலடி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். http://www.virakesari.lk/articles/2015/05/16/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF…
-
- 4 replies
- 673 views
-
-
சதீஸ் செத்துக் கொண்டிருக்கிறான். 2008ம் ஆண்டு கொழும்பில் கைதாகி சயனைட் உட்கொண்டு உயிர் தப்பவைக்கப்பட்ட சுந்தரம் சதீஸ் வழக்கிற்காக கழுத்துறைக்கு 21.08.2012 கொண்டு செல்லப்பட்டான். காரணம் தெரியாது காயங்களுடன் மரணப்படுக்கையில் கிடக்கிறான். அவனுக்கு என்ன நடந்ததென்றது புதிராகவே இருக்கிறது. சுயநினைவை இழந்து போயிருக்கிறான். வழக்கிற்காக வளமையாக காலிக்கு போய் வருகிறவனுக்கு என்ன நடந்தது ? அவனை நம்பிய அவனது மனைவி கவிதா அவனது குழந்தை சாகித்தியன் இருவரினதும் கண்ணீர்க்குரல் சதீசின் கண்களிலிருந்து கண்ணீரை மட்டுமே சிந்த வைக்கிறது. ஒரு காலத்தின் வரலாறு ஒரு இனத்தின் விடுதலையை நேசித்தவன் கடமைக்காகவே குடும்பம் என்ற கூட்டைக் கட்டியவன். இன்று அனாதையாய் எல்லாம் இழந்து 4வருடங்கள் ச…
-
- 32 replies
- 6.7k views
-
-
மன்னார் மாவட்டத்திற்கான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வும் ஆத்ம சாந்தி பிராத்தனையும்,விசேட நினைவு உரையும் மன்னார் நகர மண்டபத்தில் எதிர்வரும் திங்கள் காலை 10.00மணிக்கு இடம் பெறவுள்ளது. இது தொடர்பினில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் இளைஞரணி செயலாளர் வி.எஸ். சிவகரன் இன்றிரவு விடுத்துள்ள செய்திக்குறிப்பினில் தமிழினப்படு கொலையின் ஆறாம் ஆண்டு நினைவு நாளாகிய மே – 18 அன்று உலகெங்கும் வாழும் தமிழர்களின் இல்லங்களில் சுடர் ஏற்றி கோரமாக படுகொலை செய்யப்பட்டவர்களின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்தியுங்கள். இறுதியுத்தத்திலே காணாமல் போன அல்லது படுகொலை செய்யப்பட்ட 146இ793 அப்பாவி தமிழ் மக்களின் உயிர்கள் விலைமதிப்பற்றவை என்பதை ஆறு ஆண்டுகள் கடந்தும் இலங்கை அரசும் இனப்படுகொலைக்கு காரணமாக இர…
-
- 0 replies
- 685 views
-