Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அநுரகுமாரவின் வெளிப்பாடு அச்சுறுத்தல் அல்ல : பாதுகாக்கும் சுமந்திரன் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க வடக்கில் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் அவரைப் பாதுகாக்க முன்வந்துள்ளார். “தெற்கில் உள்ள மக்கள் மாற்றத்திற்காக அணிதிரளும் போது, அந்த மாற்றத்தை நீங்கள் எதிர்த்தால், தென்னிலங்கை மக்களின் மனநிலையை கற்பனை செய்து பாருங்கள். அந்த மாற்றத்தின் எதிர்ப்பாளர்களாக யாழ்ப்பாணம் பார்க்கப்படுவதை நீங்கள் விரும்புகிறீர்களா?” என்று அநுரகுமார வடக்கில் தெரிவித்திருந்தார். …

      • Downvote
      • Confused
      • Haha
      • Like
    • 14 replies
    • 1.2k views
  2. எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் மூன்று மாவட்டங்களிலும் போட்டியிட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தீர்மானம்! September 25, 2024 எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் போட்டியிட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொது செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் (24) திகதி தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் மட்டக்களப்பில் உள்ள கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் இடம் பெற்ற செயற்குழு கூட்டத்தில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் தொடர்பில் கட்சியினால் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் ஊடகவியலாளர்களை த…

  3. இலங்கையின் புதிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) இனவாதமற்ற இலங்கையை உருவாக்குவதற்காக பாடுபடுவதாக என்னிடம் உறுதி அளித்திருந்தார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் (Charles Nirmalanathan) தெரிவித்துள்ளார். மன்னாரில் (Mannar)இன்று (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். அவருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் என்னை சந்தித்து கதைத்த போது இனவாதமற்ற இலங்கையையும், இலஞ்ச ஊழல் அற்ற இலங்கையையும் உருவாக்குவதற்காக…

  4. நாட்டின் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இலங்கையில் இந்திய கூட்டு நிறுவனங்களின் திட்டத்தை தனது அரசாங்கம் இரத்து செய்யும் என்ற ஒரு அறிவிப்பை தேர்தலுக்கு முன்னர் பகிரங்கப்படுத்தியிருந்தார். இலங்கையில் இந்திய கூட்டு நிறுவனத்தால் முன்வைக்கப்பட்டுள்ள காற்றாலை மின் உற்பத்தியில் இருந்து யூனிட் ஒன்றுக்கு 0.0826 டொலர் என்ற விகிதத்தில் எரிசக்தியை வாங்குகிறது என்றும் அதேசமயம் இலங்கை நிறுவனம் ஒன்றுக்கு 0.0488 டொலர் மட்டுமே சக்தியை வழங்குகிறது என்றும் அவர் எடுத்துரைத்திருந்தார். தம்பவாணி என்ற பெயரில் இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான காற்றாலை மின்உற்பத்தி நிலையம் மன்னாரில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை செயல்படுத்தும்போது, சுற்றுச்சூழல் பாதிப்புகள் குற…

  5. ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் ஆட்சியின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ள பல கைது நடவடிக்கைகளுக்கு சீன தூதரகம் பெரும் தடையாக அமைந்துள்ளதாக கூறப்படுகின்றது. அதாவது அநுர பதவியேற்ற உடன் முன்னெடுக்கவிருந்த பல கைது நடவடிக்கைகள் சீன தூதரகத்தின் உதவியுடன் நேற்று முன்தினம் தடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே பலர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக வெளிநாடுகளுக்கு தப்பிச்செல்லாது பாதுகாப்பாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறான பின்னணியில் அநுரவிற்கு ஆபத்தானவராக ரணில் விக்ரமசிங்க செயற்பட வாய்ப்புள்ளதாகவும், தற்போது தான் உண்மை முகத்தினை பொது மேடைகளில் காட்டும் பட்சத்தில் பின்னால் வரும் கட்சி பெரும் பின்னடைவை சந்திக்கும் என்றும் அமைதியாக உள்ளதாக சுட்டிக்காட்டப்…

  6. Published By: VISHNU 25 SEP, 2024 | 08:49 PM (நா.தனுஜா) தமிழ், முஸ்லிம் கட்சிகள் இணைந்து எதிர்வரும் பொதுத்தேர்தலில் பலமானதொரு தரப்பாகப் போட்டியிடுவது குறித்து ஆராய்ந்து வருவதாக அறியமுடிகிறது. குறிப்பாக இலங்கைத் தமிழரசுக்கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன் ஆகியோருக்கிடையில் செவ்வாய்கிழமை (24) கொழும்பில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. இச்சந்திப்பின்போது நடைபெற்றுமுடிந்த ஜனாதிபதித்தேர்தல் மற்றும் அதன் பெறுபேறுகள் குறித்தும், எதிர்வரவுள்ள பொதுத்தேர்தல் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. …

  7. புதிய இணைப்பு சந்தர்ப்பவாதம், அதிகாரமோகம், சர்வாதிகாரம் மற்றும் இனவாதம் காரணமாகவே நாட்டை மேலும் உயர்த்தி வைக்க முடியாமல் உள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார். நாட்டு மக்களுக்காக இன்றையதினம் ஆற்றிய முதல் உரையின் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். குறித்த உரையில் அவர் மேலும் தெரிவித்ததாவது, பல தசாப்தங்களாக நாம் எழுப்பிய குரலுக்கு மெது மெதுவாக ஆனால் சீராக செவிசாய்த்து, நாங்கள் முன்வைத்த வேலைத்திட்டத்திற்கு உயிர்மூச்சாக இருந்த இந்நாட்டு மக்கள் அனைவருக்கும் எங்களது கௌரவத்தைத் தெரிவிக்கிறோம். எங்கள் வேலைத்திட்டத்தில் உடன்படாத தரப்பினர் கூட நாங்கள் அடைந்த வெற்றியால் மகிழ்ச்சி அடைந்தால் மாத்திரமே நீங்கள் அளித்த இந்த வெற்றி மேலும் பலமானத…

  8. மதுபான விற்பனை நிலையங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி பத்திரங்கள் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.அநுர அதிரடி உத்தரவு - தமிழ் அரசியல்வாதிகள் உட்பட பலர் அதிர்ச்சிhttps://tamilwin.com/article/we-are-ready-for-general-elections-1727158260 மதுபான விற்பனை நிலையங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி பத்திரங்கள் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வழங்கியுள்ளார். நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ் அரசியல்வாதிகள் உட்பட பலருக்கு மதுபான விற்பனை நிலையத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. தமக்கு ஆதரவு வழங்கிய தரப்பினருக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த அனுமதி…

  9. தமிழ் கட்சிகள் யாழில் அவசர சந்திப்பு

  10. பொதுத்தேர்தல் திகதி அரசியலமைப்புக்கு முரணானது?; மறுக்கிறது தேர்தல் ஆணைக்குழு Published By: DIGITAL DESK 3 25 SEP, 2024 | 04:02 PM பொதுத்தேர்தலை நடத்த அறிவிக்கப்பட்டுள்ள திகதி அரசியலமைப்புக்கு முரணானது என சமூக ஊடகங்களில் வெளியாகும் கருத்துக்களை தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க மறுத்துள்ளார். பொதுத்தேர்தலை நடத்த நவம்பர் மாதம் 14 ஆம் திகதி ஏற்ற திகதி அல்ல. ஏனெனில் தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர் 5 வார கால இடைவெளி இருக்க வேண்டும் என சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என பலர் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். இதற்கு, தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க விளக்கமளித்துள்ளார். ப…

  11. 25 SEP, 2024 | 03:34 PM இலங்கையின் வடக்கு - கிழக்கு பிராந்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்களுக்கு இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படும் கல்விக்கான நிதியுதவித் திட்டத்தின் கீழ், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கான புலமைப்பரிசில் உதவித் தொகை வழங்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை (25) இடம்பெற்றது. இந்திய அரசாங்கத்தின் உதவித் திட்டத்தின் கீழ், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அனைத்துப் பீடங்களிலும் இருந்தும் சுமார் 100 மாணவர்கள் இதற்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இத் திட்டத்துக்கான ரூபா 30 இலட்சம் இன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தரிடம் கையளிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்த…

  12. 25 SEP, 2024 | 02:09 PM சட்டமொழுங்கை பேணுவதற்கும் பொலிஸார் மீது நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கும் துரித நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பொதுமக்க்ள் பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் உறுதியளித்துள்ளார். பொலிஸார் அரசியல் தலையீடுகள் இன்றி சுதந்திரமாக செயற்படுவதற்கான சூழல் உடனடியாக உருவாக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் கடமைகளை இன்று உத்தியோகபூர்வமாக பதவியேற்ற பின்னர் அவர் இதனை தெரிவித்துள்ளார். கடவுச்சீட்டினை வழங்குவதே தனது அமைச்சு எதிர்கொண்டுள்ள முக்கியமான பிரச்சினை என தெரிவித்துள்ள அவர் கடவுச்சீட்டு விவகாரத்திற்கு தீர்வை காண்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். …

  13. Published By: RAJEEBAN 25 SEP, 2024 | 12:27 PM இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடுவதில்லை. அதன் இறைமையை மதிப்பது என்ற கொள்கையை பின்பற்றியவாறு இலங்கையின் நிலையான பொருளாதார சமூக அபிவிருத்திக்கு உதவுவதற்கு தயார் என சீனா தெரிவித்துள்ளது. சீனாவின் வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் லின்ஜியான் இதனை தெரிவித்துள்ளார். இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில் அனுரகுமார திசநாயக்க ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டமை குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை கூறியுள்ளார். செப்டம்பர் 21ஆம் திகதி தேர்தல் அமைதியான முறையில் இடம்பெற்றதாக தெரிவித்துள்ள அவர், இலங்கையின் நட்புறவுமிக்க அயல்நாடு என்ற அடிப்படையில் சீனாவும் இலங்கையும் ஒருவரையொருவர் பரஸ்பரம…

  14. இந்திய மீனவர்களை விடுவிப்பதன் மூலம் புதிய ஆரம்பத்தை ஆரம்பிக்கவேண்டும்; இந்தியாவிலிருந்து அனுரவுக்கு வந்த கடிதம் தனக்குள்ள அதிகாரங்களை பயன்படுத்தி கைதுசெய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுவிப்பதன் மூலம் புதிய ஆரம்பத்தை ஆரம்பிக்கவேண்டும் என இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சுதா இலங்கையின் புதிய ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். நல்லெண்ண மற்றும் நேச சமிக்ஞையாக இலங்கை ஜனாதிபதி கைதுசெய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும் பயன்படுத்தக்கூடிய நிலையில் உள்ள அவர்களின் அனைத்து படகுகளையும் விடுதலை செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள அவர் அவ்வாறான நடவடிக்கை இலங்கைக்கு ஒரு …

  15. கிளிநொச்சி சிறுவனின் சாதனை நடைபயணம்! சாதனையொன்றை நிலைநாட்ட வேண்டும் என்ற நோக்கில், கிளிநொச்சி, கோணாவில் பகுதியைச் சேர்ந்த 11 வயதுடைய சிறுவன் ஒருவன், நாடளாவிய ரீதியாக நடைபயணமொன்றை ஆரம்பித்துள்ளார். கிளிநொச்சி, கோணாவில் பகுதியைச் சேர்ந்த முரளிதரன் டியோஜன் எனும் 11 வயதுடைய மாணவன் முழு நாட்டையும் சுற்றி நடை பயணம் ஒன்றை இன்று ஆரம்பித்துள்ளார். சிறுவயதில் ஏதாவது ஒரு சாதனையை நிலைநாட்ட வேண்டும் எனும் நோக்கில் இந்த பயணத்தை இவர் ஆரம்பித்துள்ளார் என்று குறித்த மாணவனின் தந்தை தெரிவித்துள்ளார். அந்தவகையில், இன்று காலை 8.30 மணியளவில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக சமய நிகழ்வுகளுடன் முல்லைத்தீவு நோக்கி குறித்த மாணவன் தனது சாதனை பயணத்தை ஆரம்பித்துள்ளார். இந்த பய…

  16. Published By: VISHNU 25 SEP, 2024 | 03:27 AM மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளை 4 ஆம் பிரிவு பாலர் பாடசாலை வீதியிலுள்ள வீடொன்றிலிருந்து குடும்பப் பெண் ஒருவர் சடலமாக செவ்வாய்க்கிழமை (24) மாலை மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தனர். இவ்வாறு மீட்கப்பட்டவர் 44 வயதுடைய சசிகுமார் கௌரி என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த வீட்டில் கணவன் மனைவி ஆகிய இருவரும் வசித்து வந்துள்ளனர். எனினும் கணவன் மனைவி இருவருக்கும் இடையிடையே தகராறுகள் இடம்பெற்று வருவதாக அயலவர்கள் தெரிவித்தனர். குறித்த குடும்பப் பெண் தனியார் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வருகின்றார். சம்பவதினமான செவ்வாய்…

  17. Published By: DIGITAL DESK 7 24 SEP, 2024 | 06:47 PM (நா.தனுஜா) மிக மோசமான பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை மீண்டுவருவதற்குப் பங்களிப்புச் செய்யக் கூடிய வகையில் கடின முயற்சிகளின் ஊடாக வென்றெடுக்கப்பட்ட அடைவுகளைத் தொடர்ந்து முன்கொண்டு செல்வதை இலக்காகக் கொண்டு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடனும், அவரது அணியினருடனும் இணைந்து செயற்பட எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. நாட்டின் ஒன்பதாவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியைத் தெரிவுசெய்வதற்கான தேர்தல் கடந்த சனிக்கிழமை நடைபெற்றுமுடிந்தது. இத்தேர்தலுக்கு முன்பதாக சுமார் ஒருமாதகாலம் நாடளாவிய ரீதியில் சகல வேட்பாளர்களாலும் முன்னெடுக்கப்பட்ட பிரசாரங்களின் பிரதான பேசுபொ…

  18. வடக்கு மாகாண ஆளுநராக யாழ்ப்பாணம் மாவட்ட முன்னாள் அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி முன்னிலையில் அவர் இன்று ஆளுநராகப் பதவிப் பிரமாணம் செய்யவுள்ளார். https://thinakkural.lk/article/309881

  19. சிறையில் வாடும் அரசியல் கைதிகளை விடுதலை செய்து நல்லெண்ண அடையாளத்தை வெளிப்படுத்துங்கள்; அருட்தந்தை சத்திவேல் கோரிக்கை மிகநீண்ட காலமாக சிறையில் வாடும் அரசியல் கைதிகளை அரசியல் தீர்மானம் எடுத்து விடுதலை செய்து உங்கள் நல்லெண்ண அடையாளத்தை வெளிப்படுத்துங்கள் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அவரால் இன்றையதினம்(25) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையின் கடந்த கால அரசியல், பொருளாதார, அபிவிருத்தி, சமூக நல பொது சேவைகள் அது தொடர்பான கொள்கைகள், கட்டமைப்புகள் என்பவற்றோடு அரசியல் கலா…

  20. வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துக்கு இந்திய வெளிவிவகார அமைச்சர் வாழ்த்து! இலங்கையின் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள விஜித ஹேரத்துக்கு இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். அத்துடன் ” இந்தியா-இலங்கை இடையே காணப்படும் நட்புறவு மேலும் வலுப்படுத்தப்படும் எனவும் ஜெய்சங்கர் இதன்போது உறுதியளித்துள்ளார். https://athavannews.com/2024/1400986

  21. Published By: VISHNU 25 SEP, 2024 | 02:50 AM பொதுக்கட்டமைப்பின் அழைப்பை ஏற்று மிகவும் குறுகிய ஒரு காலப்பகுதியில் எந்தவிதமான முன்னாயத்தங்களும் இல்லாமல் இந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனுக்கும், தமிழ் தேசியத்தை நேசித்து அதனை பலப்படுத்தும் வகையில் அரியநேத்திரனுக்கு வாக்களித்த அத்தனை தமிழ் மக்களுக்கும் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் நன்றி தெரிவித்துள்ளார். நடைபெற்றுமுடிந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளராகப் போட்டியிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனுக்கு எனது இதயபூர்வமான நன்றிகளை தமிழ்மக்கள் சார்பாகவும் தமிழ் மக்கள் கூட்ட…

  22. அதிரடி அறிவிப்பை வெளியிட்ட சஜித் பிரேமதாச! ”முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் எந்த கூட்டணியையும் அமைக்கப் போவதில்லை” என ஜக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தலைவர்களுடன் இன்று கொழும்பில் இடம்பெற்ற சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளதாவது” பொது தேர்தலை இலக்கு வைத்து பிரச்சாரம் செய்ய ஐக்கிய மக்கள் சக்தி தயாராகியுள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் எனக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு சமூகங்களில் இருந்து எனக்கும் ஆதரவு கிடைத்தது. இலங்கையின் முன்னேற்றத்திற்கான எனது அர்ப்பண…

  23. நாட்டு மக்களுக்காக ஜனாதிபதி இன்று விசேட உரை! ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று (25) இரவு 7.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றினை ஆற்றவுள்ளார். இதன்போது, அவர் விசேட அறிவிப்பொன்றை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்று (24) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்து ஜனாதிபதியினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அதேநேரம், புதிய பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/2024/1400983

  24. இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 70 ஆவது சரத்தின் மூலம் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் மற்றும் 1981 ஆம் ஆண்டு இலக்கம் 1 ஆம் இலக்க நாடாளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் 10 வது பிரிவின் விதிகளின்படி ஜனாதிபதி வர்த்தமானியை வெளியிட்டுள்ளார். இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பாராளுமன்றத்தை கலைத்து புதிய பாராளுமன்றத்தை 2024 நவம்பர் 21 ஆம் திகதி கூட்டுவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் 2024 ஆம் ஆண்டு நவம்பர் 14 ஆம் தேதி புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேதியாகவும் அது நிர்ணயிக்கிறது. வர்த்தமானி அறிவித்தல் மேலும் அக்டோபர் 04 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 11, 2024 நண்பகல் 12 மணிக்கு முடிவடையும் காலத்தை வே…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.