ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143530 topics in this forum
-
இலங்கைக்கு விஜயம் செய்த அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரியை தமிழ்தேசிய கூட்டமைப்பினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் சந்தித்து பேச்சு நடத்தியபோது வடக்கு முதலமைச்சரினை வாய் திறக்க கூட சம்பந்தன் மற்றும் சுமந்திரன் அனுமதித்திராமை சர்ச்சைகளினை தோற்றுவித்துள்ளது. எனினும் நிலைவரத்தை முன்கூட்டியே சுதாகரித்துக்கொண்ட முதலமைச்சர் சந்திப்பின் ஆரம்பத்திலிருந்தே ஜோன் கெரியிடம் ஒரு மகஜரை சமர்ப்பித்தார். வடக்கு மாகாணசபையின் தற்போதைய தேவைகள் அதில் குறிப்பிடப்பட்டிருந்தன. சந்திப்பில் மைத்திரி அரசிற்கு சம்பந்தன் பாராட்டுப்பத்திரம் வாசிக்க இரண்டு தடவைகளாக குறுக்கிட்ட சுரேஸ்பிறேமச்சந்திரன் அதனை மறுதலித்து அரசியல் தீர்வு ஒன்று கிட்டும் வரையில் இடைக்கால நி…
-
- 5 replies
- 1k views
-
-
எனது அரசியல் வாழ்க்கையில் அதிகாரங்களை கைவிட்ட எந்தத் தலைவரையும் நான் கண்டதில்லை. தமது அதிகாரங்களை அதிகரித்துக்கொள்ளவே தலைவர்கள் முயற்சித்தனர். ஆனால் 19 ஆவது திருத்தத்தின் ஊடாக ஜனாதிபதி தனது அதிகாரங்களை குறைத்துக்கொண்டுள்ளார் என்று நிதி இராஜாங்க அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். அமெரிக்க இராஜாங்க செயலர் இலங்கைக்கு வந்ததன் மூலமும் அவர் கூறிய விடயங்களின் மூலமும் உலகின் மிகப்பெரிய வல்லரசு நாட்டின் உதவி எமக்கு கிடைத்துள்ளமை உறுதியாகியுள்ளது. இது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். களுத்துறை பகுதியில் சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு…
-
- 1 reply
- 370 views
-
-
இலங்கையில் இன்னும் சில கடினமான விவகாரங்கள் சவாலான முறையில் நிலுவையில் உள்ளதாக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட அமெரிக்க இராஜாங்க செயலர் ஜோன் கெரி தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய மற்றும் சமாதான இலங்கைக்கான தனது எதிர்பார்ப்பை என்னிடம் பகிர்ந்துகொண்டமை சிறப்பான விடயமாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை விஜயத்தை முடித்துக்கொண்டு புறப்பட்டுச் செல்வதற்கு முன்னர் இலங்கையில் அமெரிக்க தூதரக உத்தியோகத்தர்களுடனான சந்திப்பின்போது அமெரிக்க இராஜாங்க செயலர் ஜோன் கெரி மேற்கண்டவாறு தெரிவித்ததாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது. "இலங்கையின் தலைவர்களை சந்தித்து அவர்களுடன் நேரத்தை செலவிட கிடைத்தமை மகிழ்ச்சிக்குரிய விடயம். இலங்க…
-
- 0 replies
- 275 views
-
-
நம்பிக்கை தளராத முன்னாள் போராளி! இறுதி யுத்தத்தில் சரணடைந்து அல்லது படையினரால் கைது செய்யப்பட்டு புனர்வாழ்வு நடவடிக்கைகளிற்காக அனுப்பப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் போராளிகளில் பெருமளவானவர்கள் விடுதலை செய்யப்பட்டு விட்டனர். விடுதலை செய்யப்பட்ட போராளிகளின் வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இல்லையென்பதை ஏற்கனவே செய்திகள் வாயிலாக அனைவரும் அறிந்திருப்பீர்கள். விடுதலையானவர்களின் தொழில்வாய்ப்புக்களிற்காக அரசாங்கம் மனப்பூர்வமான நடவடிக்கையெதனையும் செய்யவில்லை. ஏனோதானோ பாணியில் சில சிறிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அது யானைப்பசிக்கு சோளப்பொரி போட்ட கதையாகத்தான் உள்ளது. புலம்பெயர் தமிழர்கள் பலர் முன்னாள் போராளிகளிற்கு நிறைய உதவிகள் செய்துள்ளனர். எனினும் இந்த உதவிகள…
-
- 7 replies
- 1k views
-
-
40 இலங்கையர்களுக்கு எதிராக போர்க்குற்றச்சாட்டு! [Monday 2015-05-04 09:00] இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்ற யுத்தகுற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, 40 இலங்கையர்களுக்கெதிராக போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. முன்னாள் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையிலேயே, இந்த விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த 40 பேரில் முன்னாள் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரி மற்றும் மூத்த ராணுவ அதிகாரிகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. யுத்த குற்றம் சுமத்தப்பட்ட ராணுவ அதிகாரிகள் பலர் கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில ராஜதந்திர நடவடிக்கைகளுக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சுமத்தப்பட்ட…
-
- 1 reply
- 421 views
-
-
19ம் திருத்தச் சட்டம் இன்னமும் முழுமையாக அமுல்படுத்தப்படவில்லை – நீதி அமைச்சர் 19ம் திருத்தச் சட்டம் இன்னமும் முழுமையாக அமுல்படுத்தப்படவில்லை என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ஏப்ரல் மாதம் 30ம் திகதி முதல் அமுல்படுத்தப்பட முன்னதாக திட்டமிடப்பட்டிருந்தது. 19ம் திருத்தச் சட்டம் குறித்த குழு நிலை விவாதத்தில் பல்வேறு திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் இவற்றை உள்ளடக்குவதற்கு கால அவகாசம் தேவைப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அனைத்து திருத்தங்கள் உள்ளடக்கப்பட்டு சட்டம் முழுவடிவம் பெற்றதன் பின்னரே சட்டத்தில் சபாநாயகர் கையொப்பமிடுவார் என அவர் குறிப்பிட்டுள்ளார். சபாநாயகர் உறுதிப்படுத்தப்படும் வ…
-
- 0 replies
- 476 views
-
-
மகிந்தவைச் சந்திக்க மைத்திரி முன்வைத்துள்ள நிபந்தனை! [Monday 2015-05-04 21:00] முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடனான சந்திப்பிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிபந்தனைகளை விதித்துள்ளார். மகிந்தவுக்கும், மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் எதிர்வரும் 6ம் திகதி விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ள நிலையிலேயே ஜனாதிபதி இந்த நிபந்தனையை விதித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதியை தனியாக சந்தித்து பேச்சுநடத்துவதற்கு தான் தயார் இல்லை எனவும், முன்னாள் ஜனாதிபதியுடன் அவரது பிரதிநிதிகளும், தமது கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களும் இந்த சந்திப்பில் பிரசன்னமாக வேண்டும் எனவும் ஜனாதிபதி நிபந்தனை விதித்துள்ளார். மேலும் மகிந்த ராஜபக்சவின் சார்பில் கலந்து…
-
- 0 replies
- 621 views
-
-
வவுனியாவில் 6000 ஏக்கர் காணியைக் கைப்பற்றத் திட்டமிடும் இராணுவம்! [Monday 2015-05-04 19:00] வவுனியா, செட்டிகுளம் பிரதேச செலக பிரிவிலுள்ள 6000 ஏக்கர் காணியை இராணுவத்தினரின் தேவைக்கு சுவீகரிக்க பிரதேச செயலாளரிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என வவுனியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மீள்குடியேற்றம் தொடர்பான கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் வவுனியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மீள்குடியேற்ற அமைச்சின் உயரதிகாரிகளுடனான கூட்டத்தில் மேற்படி முடிவு எட்டப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண புனர்வாழ்வு அமைச்சர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது…
-
- 0 replies
- 469 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரிக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பு, பூரண திருப்தியளிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். 43 வருடங்களின் பின்னர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான சந்திப்பு, கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 9.35 மணிக்கு இடம்பெற்றது. இச்சந்திப்பு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கருத்து தெரிவிக்கையில், 'ஜோன் கெரியுடனான சந்திப்பு சுமார் 30 நிமிடங்கள் நீடித்தது. இச்சந்திப்பில், யுத்தம் காரணமாக இடம…
-
- 6 replies
- 663 views
-
-
இந்தியாவிடம் இருந்து 200 மில்லியன் டொலர் பெறுமதியான டீசலினால் இயக்கப்படும் தொடருந்து இயந்திரங்கள் மற்றும், தொடருந்துப் பெட்டிகளை வாங்கவுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.சிறிலங்காவின் போக்குவரத்து அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் சிறிலங்காவுக்கு மேற்கொண்ட பயணத்தின் போது, அறிவித்த கடன் திட்டத்தின் கீழ், இந்த தொடருந்து இயந்திரங்களும், பெட்டிகளும் வாங்கப்படவுள்ளன. 160 ரயில் பெட்டிகள், 30 எரிபொருள் தாங்கி பெட்டிகள், ஆறு டீசல் இயந்திரங்கள் என்பனவே இந்தியாவிடம் இருந்து வாங்கப்படவுள்ளன. இவை, அடுத்த மாதம் விநியோகிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில், பெரும்பாலும், சீனாவிடம் இ…
-
- 8 replies
- 631 views
-
-
பலாப்பழத்தின் சுளைச்சவ்வு தொண்டையில் சிக்கிய நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை (03) உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணம் மாவட்டச் செயலக பகுதியைச் சேர்ந்த எஸ்.தனுசன் (வயது 08) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த 01ஆம் திகதி பலாப்பழம் உண்ட சிறுவன் சவ்வு சிக்கி மூச்சுத்திணறியதையடுத்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்துள்ளார். http://www.tamilmirror.lk/145323#sthash.HpKxA4lV.dpuf
-
- 3 replies
- 589 views
-
-
மகிந்தராஜபக் தேர்லில் போட்டியிடுவாராக இருந்தால், முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கு வழங்கப்படுகின்ற சிறப்புரிமைகள் அனைத்து ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. 19ம் திருத்தச் சட்டத்தின் கீழ் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர் தேர்தலில் போட்டியிடும் தீர்மானத்தை கைவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனவே எதிர்வரும் புதன் கிழமை மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து தாம் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று கூறவிருப்பதாக அவருக்கு நெருக்கமான தரப்பினர் கூறியுள்ளனர். அதேநேரம், மகிந்தவுக்கு ஆதரவான தரப்பினர் கோட்டாபய ராஜபக்ஷவை தேர்தலில் பிரதம வேட்பாளராக நிறுத்தும் முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. http://www.pathivu.com/news/…
-
- 0 replies
- 870 views
-
-
முக்கிய தீர்மானங்களை எடுக்க இன்று வவுனியாவில் கூடுகிறது தமிழரசுக் கட்சி மத்திய குழு! [Monday 2015-05-04 08:00] முக்கிய விடயங்கள் தொடர்பாக தீர்மானங்களை எடுப்பதற்காக இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழு கூட்டம் இன்று வவுனியாவில் இடம்பெறவுள்ளது. இன்று காலை 10 மணிக்கு வவுனியா நகரிலுள்ள விருந்தினர் விடுதி மண்டபத்தில் தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் இக்கூட்டம் நடைபெறவுள்ளது. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல், புதிய அரசின் நடவடிக்கைகள், அங்கத்துவ கட்சிகளுக்கு வழங்கப்படவுள்ள ஆசன பங்கீடுகள் உள்ளிட்ட பல விடயங்கள் இதில் கலந்துரையாடப்படவுள்ளன. இந்தக் கூட்டத்தில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட மத்திய குழு உறுப்பினர்கள் அனைவ…
-
- 2 replies
- 323 views
-
-
[ ஞாயிற்றுக்கிழமை, 03 மே 2015, 11:28.23 AM GMT ] தமிழ் மக்கள் தாம் சரித்திர ரீதியாக வாழ்ந்து வந்த பிரதேசங்களில் தங்களுடைய அபிலாசைகளை நிறைவேற்றக் கூடிய வகையில், அவர்களுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என அமெரிக்க இராஜாங்க செயலாளரிடம் வலியுறுத்தியதாக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அமெரிக்க இராஜாங்கச் செயலாளரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் இன்று கொழும்பில் சந்தித்து கலந்துரையாடினர். இது குறித்து லங்காசிறி வானொலிக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே கூட்டமைப்பின் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். http://www.tamilwin.com/
-
- 10 replies
- 962 views
-
-
மாற்றத்தின் குரல் - பிரித்தானியா
-
- 8 replies
- 589 views
-
-
வாக்காளர் இடாப்பு பதிவு இம்மாதம் 15முதல் ஆரம்பம் வாக்காளர் இடாப்பு பதிவுப் பத்திரங்கள் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் விநியோகிக்கப்படும் என்று தேர்தல் செயலகம் தெரிவித்துள்ளது. 2015 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்புப் பதிவுப் பத்திரங்களை கிராமசேவகர்கள் வீடுகளுக்கு வருகை தந்து வாக்காளர் இடாப்பு பதிவுப்பத்திரத்தை விநியோகிப்பார்கள் என்றும் தேர்தல் செயலகம் அறிவித்துள்ளது. மே 15 ஆம் திகதி ஆரம்பமாகும் பதிவு நடவடிக்கை யூன் மாதம் 15 ஆம் திகதியுடன் முடிவடையும். இருப்பினும் காலம் நீடிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து கிராமசேவகர்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளதாகவும் கிராம சேவகர் வழங்கும் பத்திரத்தை சரியாக நிரப்பி மீண்டும் கிராம சேவகரிடம் கையளிக்க வ…
-
- 0 replies
- 353 views
-
-
ஜோன் கெரியிடம் முதலமைச்சர் விக்னேஸ்வரன் கையளித்த முக்கிய ஆவணம்! [Monday 2015-05-04 09:00] 13 ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் காணப்படும் பிரச்சினைகளுக்கு அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து உரிய தீர்வைப் பெற்றுத்தர வேண்டும் என்பது உட்பட முக்கிய கோரிக்கைகள் அடங்கிய ஆவணமொன்றை வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் ஜோன் கெரியிடம் கையளித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்திருந்த ஜோன் கெரியை நேற்றையதினம் கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்தித்திருந்தது. இதன்போதே குறித்த ஆவணத்தை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் கையளித்துள்ளார். இது குறித்து அவர் கருத்து வெளியிடுகையில், இராஜாங…
-
- 0 replies
- 535 views
-
-
அண்ணனின் வீட்டில் மைத்திரியைச் சந்திக்கிறார் மகிந்த! [Monday 2015-05-04 09:00] ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையில் எதிர்வரும் புதன் அல்லது வியாழக்கிழமையன்று சபாநாயகரின் இல்லத்தில் இடம்பெறவுள்ளது.இது தொடர்பில் கடந்த சனிக்கிழமையன்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான டிலான் பெரேரா, மஹிந்த அமரவீர மற்றும் லசந்த அழகியவன்ன ஆகியோர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கலந்துரையாடல் நடத்தினர். இதன்போது இருவருக்கும் இடையில் உள்ள பிரச்சினைகள் களையப்பட வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டனர். இந்தநிலையில் ஜனாதிபதியுடனான சந்திப்புக்கான அழைப்பை விடுக்க, முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு அழைப…
-
- 0 replies
- 401 views
-
-
கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்துக்குட்பட்ட கரந்தாய்க் குளத்தை சுற்றுலா மையமாக மாற்றும் வேலைகள், வடமாகாண சபையின் சுற்றுலா வேலைத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளும் வாய்ப்பு உள்ளதாக வடமாகாண சபையின், கிளிநொச்சி மாவட்ட உறுப்பினர் பசுபதி அரியரட்ணம் தெரிவித்தார். கரந்தாய்க் குளத்தை சுற்றுலா மையமாக உருவாக்கும் வேலைகள் ஆரம்பிக்கப்படாத நிலையில் உள்ளன. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தால் கரந்தாய் குளத்தை சுற்றுலா மையமாக உருவாக்குவதென முடிவெடுக்கப்பட்டது. இதுவரை எவ்வித வேலைகளும் முன்னெடுக்கப்படவில்லை. பச்சிலைப்பள்ளியின் இயற்கை எழிலுடன் கூடிய வகையில் கரந்தாய்க்குளம் விளங்குகின்றது. எவ்வாறான கடுமையான வரட்சி ஏற்பட்டாலும் இக்குளம் வற்றுவதில்லை. இந்நிலையில் இ…
-
- 0 replies
- 445 views
-
-
ஜோன் கெரியை சந்திக்க முயன்ற மகிந்தவுக்குத் தோல்வி! [Monday 2015-05-04 09:00] அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரியை சந்திப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு விஜயம் செய்திருந்த ஜோன் கெரியை சந்திக்க சந்தர்ப்பம் ஏற்படுத்தித் தருமாறு மஹிந்த ராஜபக்ச, இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்திடம் கோரியுள்ளார். எனினும், இந்தக் கோரிக்கை தொடர்பில் அமெரிக்கத் தூதரகம் அமைதி பேணியுள்ளது. ஜோன் கெரியை சந்திக்க அனுமதியளிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு, அவர்களுக்கு அதற்கான சந்தர்ப்பத்தையும் தூதரகம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் இலங்கை விஜயம் உறு…
-
- 0 replies
- 240 views
-
-
மைத்திரியின் கூட்டத்தில் கைத்துப்பாக்கி! - விசாரணை வளையத்துக்குள் நாமல் ராஜபக்ச [Monday 2015-05-04 08:00] ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்ற கூட்டத்தில் இராணுவ கோப்ரல் ஒருவர் துப்பாக்கியுடன் நுழைந்தமை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. ஹம்பாந்தோட்டை ஹங்கொனுகொலபெலஸ்ஸவில் நடைபெற்ற கூட்டமொன்றின் போது கைத்துப்பாக்கி ஒன்றுடன் இராணுவ கோப்ரல் கூட்டத்திற்கு சென்றிருந்ததாகக் குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவ கோப்ரல், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் மெய்ப்பாதுகாவலர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. குறித்த இராணுவ கோப்ரலை பொலிஸார் நேற்று முன்தினம் கைது செய்து நீதிமன்றில் மு…
-
- 0 replies
- 197 views
-
-
நியுசிலாந்து மாதிரியான தேர்தல் முறை! – 13ம் திகதி அமைச்சரவையில் ஆலோசனை [Monday 2015-05-04 08:00] தேர்தல் முறை மாற்றம் தொடர்பான இறுதி சட்டமூல வரைபு எதிர்வரும் 13 ஆம் திகதி அமைச்சரவைக் கூட்டத்தின்போது அங்கீகாரத்துக்காக சமர்ப்பிக்கப்படும் என அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன. இந்நிலையில் அனைத்து தரப்பினரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய தேர்தல் முறை ஒன்றை உருவாக்குவது தொடர்பில் அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதேவேளை இலங்கையின் புதிய தேர்தல் முறை நியூசிலாந்தின் தேர்தல் நடைமுறைகளில் காணப்படும் சாதகமான சில அம்சங்களை உள்ளடக்கியதாக காணப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 29 ஆம் திகதி நடைபெற்ற அமைச் சரவைக் கூட்டத்தின்போது தேர்தல் முறை மாதிரி…
-
- 0 replies
- 243 views
-
-
வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பெலியத்த மெதமுலன இல்லத்தில் இன்று விசேட தர்ம உபதேசம் நடத்தப்பட்டது. தர்ம உபதேசத்தை கலாநிதி மெதகொட அபயதிஸ்ஸ நாயக்க தேரர் நடத்தினர். இதில் முன்னாள் ஜனாதிபதியின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ உட்பட அவர்களது குடும்பத்தார் பலர் கலந்து கொண்டனர். http://www.malarum.com/article/tam/2015/05/03/9900/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%…
-
- 2 replies
- 428 views
-
-
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, இலங்கைக்கு விஜயம் செய்திருந்த அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரியை சந்திக்க எடுத்த முயற்சி தொல்வியடைந்துள்ளது. மஹிந்த ராஜபக்ஸ, இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தின் ஊடாக இந்த முயற்சியை எடுத்துள்ளார். ஜோன் கெரியுடன் சந்திப்பு ஒன்றை நடாத்த நேரத்தை ஒதுக்கித் தருமாறு மஹிந்த பல தடவைகள் தூதரக அதிகாரிகளிடம் கோரியுள்ளார். ஜோன் கெரியின் இலங்கை விஜயம் தொடர்பில் அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்தது முதல் மஹிந்த இந்த முயற்சிகளை எடுத்திருந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது. எனினும், ஜோன் கெரியுடன் தமக்கு சந்திப்பு ஒன்றை நடாத்த ஏற்பாடு செய்து தருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அமெரிக்கத் தூதரகத்திடம் விடுத்த கோரிக்கை ஏற…
-
- 3 replies
- 505 views
-
-
மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் உடல்நலம் பாதிக்கப்பட்டு கொழும்பு தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.பதிவு இணைய செய்திகள் இலங்கை வந்துள்ள அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஜோன் கெரியை சந்திக்கச் சென்றுகொண்டிருந்த போதே அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும், உடனடியாக அவர் கொழும்பிலுள்ள தேசிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.மன்னார் ஆயர் இல்லம் தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.பதிவு இணைய செய்திகள் http://www.pathivu.com/news/39744/57//d,article_full.aspx
-
- 8 replies
- 2.1k views
-