ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143530 topics in this forum
-
வாள் வெட்டு கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி; கையில் எடுத்தது வடக்கு மாகாண சபை யாழ். மாவட்டத்தில் அண்மைக்காலமாக தலைதூக்கியிருக்கும் வாள்வெட்டு கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு வடக்கு மாகாண சபை தீவிர நடவடிக்கையினை ஆரம்பித்துள்ளது. இன்று நடைபெற்று வரும் வடக்கு மாகாண சபையின் 28ஆவது மாதாந்த அமர்வில் அவைத்தலைவரால் குறித்த விடயம் சபைக்கு முன்வைக்கப்பட்டது. தற்போது அதிகரித்துள்ள வாள்வெட்டு கலாச்சாரத்தினால் பல மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. எனவே வாள்வெட்டுக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்கவும் சபையின் ஊடாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். அதற்குப் பதிலளித்த முதலமைச்சர், இங்கு நடைபெற்று வரும்…
-
- 5 replies
- 839 views
-
-
பிரிட்டனில் தேர்தலைக் கண்காணிக்க இரண்டு முன்னாள் அமைச்சர்களை அனுப்புகிறது இலங்கை! [Friday 2015-05-01 08:00] பிரிட்டனில் வரும் வாரம் நடைபெறவுள்ள தேர்தல் கண்காணிப்பு பணிகளில் இலங்கை முன்னாள் அமைச்சர்கள் இருவர் பங்கேற்கவுள்ளனர். எதிர்வரும் 7ம் திகதி பிரிட்டனில் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. இலங்கையின் முன்னாள் அமைச்சர்களான இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் மற்றும் கலாநிதி கருணாசேன கொடித்துவக்கு ஆகியோர் தேர்தல் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடவுள்ளனர். தேர்தல் கண்காணிப்பு பணிகளுக்காக அவர்கள் நாளை லண்டன் புறப்பட்டுச் செல்லவுள்ளனர். பொதுநல நாடுகள் அமைப்புச் செயலகத்தினால் அனுப்பி வைக்கப்பட்ட அழைப்பிற்கு அமைய அரசாங்கம் கண்காணிப்பாளர்களை அனுப்பி வைக்கவுள்ளது. …
-
- 3 replies
- 420 views
-
-
நாட்டின் முக்கிய பொறுப்புகளில் இருந்த தம்மை போன்ற பலரை பழிவாங்கியமையினாலேயே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று அரசியல் களத்தில் அநாதையாகியுள்ளதாக ஜனநாயக கட்சியின் தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு ஊழல் இல்லா நாடு என்ற தொனிப்பொருளில் ஜனநாயக கட்சியின் மேதின பொதுக்கூட்டம் நேற்று நாரஹேன்பிட்டி ஷாலிகா மைதானத்தில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்று உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். நிகழ்வின் ஆரம்ப கட்டமாக கொழும்பு ராஜகிரிய சந்தியிலிருருந்து முன்னெடுக்கப்பட்ட பேரணி பொரளை ஊடாக நாரஹேன்பிட்டி மைதானத்தை வந்தடைந்தது. பேரணியில் நூற்றுக்கண…
-
- 0 replies
- 319 views
-
-
இரு தமிழ் இளைஞர்கள் கட்டுநாயக்கவில் கைது [ வெள்ளிக்கிழமை, 01 மே 2015, 08:31.46 AM GMT ] கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து தமிழ் இளைஞர்கள் இருவர் இரகசிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலையைச் சேர்ந்த 28 மற்றும் 31 வயதுகளுடைய இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். போலியான கடவுச்சீட்டு மற்றும் விசா ஆகியவற்றை பயன்படுத்தி இத்தாலிக்கு செல்ல முயன்ற போதே அவ்விருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த இளைஞர்கள் டுபாய் ஊடாக இத்தாலிக்கு செல்வதற்காக போலியான ஆவணங்களை தயாரித்து கொண்டு விமான நிலையத்திற்குச் சென்றுள்ளனர். இதன்போதே இரகசியப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இருவரையு…
-
- 6 replies
- 923 views
-
-
மக்களுக்கு மற்றுமொரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென ஜே.வி.பி கட்சி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரியுள்ளது. பாராளுமன்றத்தை கலைத்து ஸ்திரமான அரசாங்கமொன்றை உருவாக்க ஜனாதிபதி வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கடந்தகாலங்களில் ஜனாதிபதியை எதிர்த்த தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா உள்ளிட்ட தரப்பினரின் பேச்சை ஜனாதிபதி கேட்கக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார். கூட்டணி அரசாங்கம் இயலாமைiயே பிரதிபலித்து வருவதாகத் தெரிவித்துள்ளார். 19ம் திருத்தச் சட்ட அமுலாக்கம் வரலாற்று ரீதியிலான வெற்றி என அவர் தெரிவித்துள்ளார். எனினும், வாக்குகளைப் பெற்றுக்கொள்ள அவர்களுக்கு அமைச்சுப் பதவிக…
-
- 0 replies
- 285 views
-
-
தேசிய ஐக்கியத்தை ஏற்படுத்தும் முயற்சியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட தற்போதைய அரசாங்கம் முயற்சித்து வருவதாகவும் அதற்கு இடையூறு ஏற்படும் வகையில் முன்னாள் தலைவர்கள் செயற்பட்டு வருவதாகவும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். நாட்டில் வாழும் அனைத்து இன சமூகங்களையும் ஐக்கியப்படுத்தி தேசிய ஒற்றுமையை ஏற்படுத்த அரசாங்கம் முயற்சித்து வருவதாகவும், அதனை ஜனாதிபதியின் சூழ்ச்சித் திட்டமாக முன்னாள் தலைவர்கள் பிரச்சாரம் செய்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.முன்னாள் தலைவர்கள் எவ்வாறான பிரச்சாரங்களில் ஈடுபட்டாலும் வடக்கில் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் ஒற்றுமையுடன் வாழ ஆரம்பித்துள்ளதாகத் தெரவித்துள்ளார். வடக்கு தமிழ் மக்களின் உரிமைகளை வழங்க அரசாங்கம்…
-
- 0 replies
- 227 views
-
-
ஆந்திர மாநிலத்தில் தமிழர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டதற்கு வடக்கு மாகாண சபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த மாதத்தின் இரண்டாம் வாரத்தில் இந்தியா ஆந்திரமாநிலம் திருப்பதிக்கு அருகில் 20 தமிழர்கள் செம்மரக் கடத்தலுடன் தொடர்புள்ளவர்கள் என்று கூறி செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு பொலிஸாரினால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். சம்பவம் தொடர்பில் இன்று நடைபெற்று வரும் 28 ஆவது வடக்கு மாகாண சபையின் மாதாந்த கூட்டத்தில் வடக்கு முதல்வரால் சபையில் எடுத்துக் கொள்ளப்பட்டு குறித்த செயற்பாட்டிற்கு கண்டன தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து உரையாற்றிய முதல்வர் க.வி. விக்கினேஸ்வரன் , 20 தமிழர்கள் எதுவித விசாரணையும் இன்றி சுட்டுக்கொலை செய்யப்பட்டதனால் அங்கு தொ…
-
- 15 replies
- 1.7k views
-
-
மறைந்த முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் உருவச்சிலைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அஞ்சலி செலுத்தினார். இந் நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ரணசிங்க பிரேமதாஸவின் மனைவி, அவரின் புதல்வர் அமைச்சர் சஜித்பிரேமதாஸ ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர். http://www.virakesari.lk/content/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF
-
- 4 replies
- 390 views
-
-
நாட்டில் நல்லாட்சி வேண்டும் எனக் கோரி மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்க கொழும்பு 7 இல் அமைந்துள்ள சுதந்திர சதுர்க்கத்தில் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், ஜனவரி மாதம் 9 திகதி முதல் நாட்டில் நல்லாட்சி இல்லாது போயுள்ளது. நாட்டில் நல்லதொரு ஆட்சி நிலவ வேண்டும். நாட்டில் சிறந்த அரசியல் அமைப்பொன்று இருகின்றது. ஆனாலும் ஆட்சி முறையில் மாற்றம் ஏற்பட வேண்டும். நல்லாட்சி இல்லையென்றால் நாட்டை முன்கொண்டு செல்ல முடியாது என அவர் மேலும் தெரிவித்தார். http://www.virakesari.lk/articles/2015/05/01/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%85%E…
-
- 3 replies
- 347 views
-
-
டேவிட் அய்யாவின் 92 வதுபிறந்த நாள் சென்னை புழல் பகுதியில் அய்யா வசித்து வரும் எளிய வாடகைக் குடியிருப்பில் அய்யாவின் 92 வது பிறந்த நாளை கொண்டாடினோம். அய்யாவோடு நிறைய பேசினோம். அய்யாவின் மகிழ்ச்சியில் நாங்கள் மகிழ்ச்சி அடைந்தோம். அய்யா அடிக்கடி சிரித்துக் கொண்டார். அது ஒரு குழந்தை சிரிப்பதைப் போலிருந்தது. அய்யா பிறந்த தேதி 24.04,1924 நன்றி தோழர் சி. மகேந்திரன் இவ் தகவலும் புகைப்படங்களும் தோழர் சி. மகேந்திரனின் முகநூலில் இருந்து அவரது முழு அனுமதியுடன் பகிரப்படுகின்றது
-
- 18 replies
- 1.5k views
-
-
வடமாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தினால் கொக்குவில் மேற்கு மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தினருக்கு ஒரு மில்லியன் ரூபாய் செலவில் கர்ப்பூரம் உற்பத்தி செய்யும் நிலையம் வடமாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனீஸ்வரனால் நேற்று முன்தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்தில் உள்ளவர்களின் வாழ்வாதாரத்தை அதிகரிக்கும்நோக்குடன் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் எஸ்.தவராசா, மாகாணசபை உறுப்பினர்கள் பா.கஜதீபன்,அ.பரஞ்சோதி,யாழ்.மாவட்ட உதவி அரசாங்க அதிபர் றூபினி வரதலிங்கம், நல்லூர் பிரதேச செயலர் பா.செந்தில்நாதன், உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஆர். வரதீஸ்வரன்,கிராம அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் சி.சத்தியசீலன…
-
- 0 replies
- 1k views
-
-
கொழும்பில் ஏட்டிக்குப் போட்டியாக மேதின பேரணிகள், கூட்டங்கள் சர்வதேச தொழிலாளர் தினமான மே தினம் இன்று பிரதான அரசியல் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி, சுதந்திரக் கட்சி, ஜே.வி.பி., ஜனநாயக கட்சி ஆகியன தமது மே தினக்கூட்டங்களை ஏட்டிக்குப் போட்டியாக கொழும்பில் நடத்தின. http://www.virakesari.lk/articles/2015/05/01/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B…
-
- 0 replies
- 403 views
-
-
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மே தின பேரணி இன்று மாலை பருத்தித்துறை கொட்டடி கடற்கரையில் இருந்து ஆரம்பமாகி நடராஜா கலையரங்கில் நிறைவுபெற்றது. பொதுக்கூட்டமும் காரைநகர் கணேச வித்தியாலய அதிபர் சிவகுரு இளங்கோ தலைமையில் ஆரம்பமாகி நடை பெற்று கொண்டு உள்ளது. கொடியேற்றல் நிகழ்ச்சியுடன் ஆரம்பமாகி அதனை தொடர்ந்து பேரணி, ஈகைச்சுடர் ஏற்றல், அகவணக்கம், வரவேற்புரை, தலைமையுரை, அதிதிகள் உரைகளுடன் இறுதியாக இசைநிகழ்ச்சியுடன் நிறைவுபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சிறப்புரையாற்றவுள்ளார். http://www.pathivu.com/news/39710/57//d,article_full.aspx
-
- 0 replies
- 442 views
-
-
19வது அரசமைப்பு திருத்தம்: கோத்தபாய, நாமல் ராஜபக்ச ஆகியோர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியா நிலை! நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள அரசியலமைப்பின் 19வது திருத்தச் சட்டமூலத்தின் மூலம் சிறிலங்காவின் முன்னாள் படைத்துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மற்றும் மகிந்த ராஜபக்சவின் மகன் நாமல் ராஜபக்ச ஆகியோர் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சிறிலங்காவின் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச போட்டியிடத் திட்டமிட்டிருந்த நிலையில், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 19வது திருத்தச்சட்டமூலம் அவரை தேர்தலில் போட்டியிட முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்ட 19வது திருத்தச்சட்டமூலம், இரட்டைக் குடியுரிமை …
-
- 2 replies
- 531 views
-
-
ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் பொதுச் சொத்துக்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்தி அவற்றைக் கொள்ளையிட்டவர்களை கைதுசெய்யும் நடவடிக்கை அடுத்தவாரம் முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என அரசாங்கத்திலுள்ள சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் 'ஶ்ரீலங்கா மிரர்'' இணையத்தளத்திற்குத் தெரிவித்தார். இவ்வாறு குற்றச்சாட்டப்பட்டுள்ள அரசியல்வாதிகள், அதிகாரிகள் உள்ளிட்ட 08 பேர் குறித்த விசாரணைகள் நிறைவுக்கு வந்துள்ள போதிலும் 19ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றிக் கொள்ளும் வரை கைது நடவடிக்கையை நிறுத்திவைக்க அரசாங்கம் தீர்மானித்ததாக அவர் மேலும் தெரிவித்தார். தற்போது விசாரணை செய்யப்பட்டுவரும் சந்தேக நபர்களில் பெரும்பாலானவர்கள் சட்டத்தின் பார்வையில் குற்றவாளிகள் என்பதற்கான சாட்சியங்கள் இருப்பதாக தகவல் கிடைத்துள…
-
- 0 replies
- 751 views
-
-
மயூரனுக்காக அழுதவர்கள், இவர்களுக்காக எழுத மாட்டார்களா? விசேட ஆக்கம் கொழும்பு மிரருக்காக ஜெரா போதைப்பொருள் கடத்தல் குற்றத்தில் கைதாகி, மரணித்த இலங்கையைப் பூர்வீகமாகக்கொண்ட ஆஸ்திரேலியாவின் மயூரன் உலகின் மனச்சாட்சியை மறுபடியும் உலுக்கிப் பார்த்திருக்கிறான். இன்றைய இளைய தலைமுறையினரைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் பெரும்பணியைச் செய்யும் போதைப்பொருளை சமூகமயப்படுத்தும் குற்றம் மிகப்பாரியது. அது ஒரு போதும் தெரியாமல் செய்த குற்றம் என்ற வகைக்குள் வைத்துப் பார்க்கக்கூடியதல்ல. ஒரு தனிநபரின் செல்வந்த இருப்புக்காக மொத்த சமூகத்தையும் கருவறுக்கும் கொடிய நிலை அது. ஆனால் போதைப்பொருள் கடத்தல் குற்றவாளியான மயூரனை நோக்கி சமூக வலைதளங்களில், இணையங்களில் எழுந்த ஆதரவு, ஒரு சாகசக்கார…
-
- 0 replies
- 1.3k views
-
-
[ வெள்ளிக்கிழமை, 01 மே 2015, 06:02.23 AM GMT ] முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை வீட்டிற்கு அனுப்புதல் என்பதில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டதன் காரணமாக அந்த நடவடிக்கை வெற்றிகரமாக நிறைவேறியது. அதனைத் தொடர்ந்து ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்களை குறைக்கின்ற நோக்கில் கொண்டுவரப்பட்ட 19வது திருத்த சட்டமூலமும் நிறைவேறியாயிற்று. இந்த நாட்டிற்கு பொருத்தமற்ற ஜனாதிபதி ஆட்சி முறைமையை வலுக்குறைக்கின்ற செயற்பாடு நடந்து முடிந்ததையடுத்து, ஜனாதிபதி மைத்திரியின் அடுத்த கட்ட நடவடிக்கை இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதாக இருக்க வேண்டும். இலங்கையின் அபிவிருத்தி தடைப்பட்டது முதல் இந்த நாட்டின் பெருமைக்கு குந்தகமாக இருந்தது வரையான அத்தனைக்கும் இனப்பிரச்சினையே காரணமாகும். ஒரு நா…
-
- 1 reply
- 372 views
-
-
மலையகத்தில் உழைக்கும் பெண்கள் முன்னனியின் மே தினம்: [Friday 2015-05-01 13:00] உலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மலையகத்தின் பொரும்பாலான இடங்களில் தொழிலாளர் தினம் நினைவு கூரப்பட்டது. அதன் ஒரு கட்டமாக புஸ்ஸல்லாவையில் கண்டி உழைக்கும் பெண்கள் முன்னனியின் மேதின நிகழ்வுகள் நடைபெற்ற போது பதுளை நுவரெலியா கண்டி மாவட்டங்களை சேர்ந்த பெண்கள் உணர்வு பூர்மாக கலந்துக் கொண்டையும். முன்னியின் உப தலைவி எம்.மகேஸ்வரி செயளாலர் கி. யோகேஸ்வரி கண்டி சமூக அபிவிருத்தி நிறுவகத்தின் தலைவர் பெ.முத்துலிங்கம் சமூக அபிவிருத்தி நிறுவகத்தின் நிகழ்ச்சித்திட்ட அதிகாரி சந்தனம் சத்தியநாதன் தோட்ட தொழிலாளர்கள் ஸ்தாபனமயப்படாத தொழிலாளர்கள் உட்பட பலர் கலந்துக் கொண்டதை படங்களில் காணலாம். …
-
- 0 replies
- 393 views
-
-
உலகத் தொழிலாளரைப் போற்றும் மேதினம்! - கொழும்பு, யாழ். உள்ளிட்ட இடங்களில் பேரணிகளுக்கு ஏற்பாடு. [Friday 2015-05-01 08:00] தொழிலாளர்களின் தேசிய தினமான மே தினம் இன்று உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி மே தினக் கூட்டங்களும், பேரணிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தலைநகர் கொழும்பை மையப்படுத்தியே பிரதான அரசியல் கட்சிகளினதும் தொழிற்சங்கங்களினதும் கூட்டங்கள் இடம்பெறவுள்ளன. அமெரிக்காவின் சிக்காகோ நகரில் ஆரம்பித்த தொழிலாளர் புரட்சி பல்வேறு பரிணாம வளர்ச்சிகளைச் சந்தித்து இன்று 126ஆம் ஆண்டில் காலடி எடுத்துவைத்துள்ளது. உலகளாவிய ரீதியில் பெரும்பாலான நாடுகளில் தொழிலாளர்கள் தங்களுடைய உரிமைகளை வென்றெடுத்துள்ள போதிலும் இலங்கையில் இன்னமும் அடிமை மட்…
-
- 0 replies
- 242 views
-
-
மாகாணசபையின் அதிகாரங்களில் அத்துமீறும் ரணில்! - வடக்கு அவையில் கண்டனம். [Friday 2015-05-01 08:00] வடக்கில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் செயற்பாடுகள் மக்களை தன்னை நோக்கி ஓடி வரும்படி அழைப்பதைப்போல இருப்பதாக வடமாகாண சபை முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் 28வது அமர்வில் முன்மொழியப்பட்ட பிரேரணை ஒன்றின் மீதான விவாதத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மாகாணசபை உறுப்பினர் ஜி. ரி. லிங்கநாதன் வவுனியா வடக்கு வலயத்தை கஷ்ட பிரதேசமாக பிரகடனப்படுத்தமாறும் முன்னதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களை கஷ்ட பிரதேசங்களாக பிரகடனப்படுத்தியிருப்பதனால் பிரதமரிடம் வவுனியா வடக்கு கல்வி வலயத்தையும் பிரகடனப…
-
- 0 replies
- 264 views
-
-
இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பிலான உண்மைகளைக் கண்டறியவும், அதற்கான குழுக்களை அமைக்கவும் ஒத்துழைப்புக்களை வழங்கிவருவதாக அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சூசன் ரைஸ் தெரிவித்துள்ளார். இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பிலான உண்மைகளைக் கண்டறியவும், அதற்கான குழுக்களை அமைக்கவும் ஒத்துழைப்புக்களை வழங்கிவருவதாக அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் இதேசிய பாதுகாப்பு ஆலோசகர் சூசன் ரைஸ் தெரிவித்துள்ளார். நியூஜேர்சியில் உள்ள செற்றன் ஹோல் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற உரையாடல் ஒன்றில் வைத்தே மேற்கண்டவாறு சூசன் ரைஸ் தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் அங்கு உரையாற்றுகையில், இலங்கை, லிபியா, கிர்கிஸ்தான், ஐவரிகோஸ்ட் மற்றும் வட-கொர…
-
- 2 replies
- 396 views
-
-
இந்தோனேஷியாவில் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் 8 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. குற்றச்சாட்டப்பட்ட 9 பேரில் ஒருவரின் மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை. மேலும் செய்தி விரைவில் http://www.pathivu.com/news/39625/57/8/d,article_full.aspx
-
- 60 replies
- 6.5k views
-
-
நிறைவேற்றப்பட்டுள்ள 19ஆவது திருத்தத்தின் ஊடாக ஜனாதிபதிக்கு எதிராக வழக்கு தொடர்வதற்கு இருந்த தடை நீக்கப்பட்டுள்ளதாகவும், தேவையெனில் ஜனாதிபதி ஒருவருக்கெதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியும் எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி ஜயம்பதி விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். இரட்டைக் குடியுரிமை வைத்திருப்பவர்கள் இனிமேல் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட முடியாது என அரசியலமைப்பு குறித்த ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். 19ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் இந்த புதிய நடைமுறை அமுலுக்கு வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார். 19ஆவது திருத்தச் சட்ட…
-
- 1 reply
- 271 views
-
-
கூட்டமைப்பிற்குள் தமிழரசு தனித்து மேதினத்தை அனுஸ்டிக்கும் நிலையினில் அடக்குமுறைக்கும் ஒடுக்குமுறைக்கும் ஆளாகியுள்ள தமிழினம் அழிக்கப்படும் நிலையிலிருந்து விடுதலை பெறவும், இந்நிலைக்குள் அடக்கப்பட்டுள்ள உழைக்கும் வர்க்கத்தின் வாழ்வுரிமையை நிலைநாட்டவும் இன்றைய மே தினத்தில் நாம் ஒன்றுபட்டு அணிதிரள்வோமென தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது மே தினச் செய்தியில் அறைகூவல் விடுத்துள்ளது. இது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா விடுத்துள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- உலகத் தொழிலாளர் தினம் உலக நாடுகளிலும் இலங்கையிலும் மே முதல் நாளில் கொண்டாடப்படுகின்றது. தொழிலாளர் வர்க்கம், பாட்டாளி வர்…
-
- 3 replies
- 625 views
-
-
மட்டக்களப்பு பூநொச்சிமுனையில் சுமார் 9.5மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள முகைதீன் ஜும் ஆ பள்ளிவாயலின் புதிய கட்டடம் நேற்று செவ்வாய்க்கிழமை (28) மாலை திறந்து வைக்கப்பட்டது. முன்னாள் பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியினால் ஸ்ரீ லங்கா ஹிறாபவுண்டேனசன் நிறுவனத்தின் உதவியுடன் சவூதி அரேபிய நாட்டு தனவந்தரின் நிதிப்பங்களிப்புடன் நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டடம் சவூதி அரேபிய நாட்டு பிரமுகர்களினால் திறந்து வைக்கப்பட்டது. இந்த வைபவத்தில் காத்தான்குடி காதி நீதிபதி மௌலவி எஸ்.எம்.அலியார் பலாஹி, மற்றும் ஸ்ரீ லங்கா ஹிறாபவுண்டேனசன் நிறுவனத்தின் செயலாளர் மௌலவி ஏ.எல்.மும்தாஸ் மதனீ, காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ…
-
- 6 replies
- 1.8k views
-