Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கூட்டமைப்பு பதிவு செய்யப்படவில்லை! சுமந்திரன் பொய் சொல்கின்றார்! சம்பந்தனின் நிலைப்பாடு என்ன? சுரேஷ் பிறேமச்சந்திரன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினை ஒரு அரசியல் கட்சியாக பதிவு செய்வதில் இரா.சம்மந்தன் என்ன நிலைப்பாட்டை கொண்டிருக்கின்றார்? என்பதை வெளிப்படுத்தினாலேயே கூட்டமைப்பின் பதிவு தொடர்பான சர்ச்சைகள் ஒரு அளவுக்கு நிறைவுக்குவரும் என நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் காலை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நீர்வேலி அலுவலகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார். அவர் மேலும் குறிப்பிடுகையில், நேற்றைய தினம் திருகோணமலையில் இடம்பெற்ற சந்திப்பு ஒன்றில…

    • 4 replies
    • 504 views
  2. ஆட்சி மாற்றத்தின் பின்னரும் தொடரும் இராணுவ அச்சுறுத்தல்கள் பற்றி புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்தில் இணைக்கப்பட்ட முன்னாள் போராளிகள் அச்சங்கொண்டுள்ளனர். அது தொடர்பினில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் முறையிட்டுள்ளனர் என்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் ரூபின் மூடியிடம், யாழ். மறைவமாட்ட ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை தெரிவித்துள்ளார். யாழ்.ஆயர் இல்லத்தில் இன்று திங்கட்கிழமை ஆயர் - உயர்ஸ்தானிகர் சந்திப்பு நடைபெற்றிருந்தது.சந்திப்பு முடிந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே ஆயர், இவ்வாறு கூறினார். முன்னாள் போராளிகளுக்கு இராணுவ அச்சுறுத்தல் இருப்பதான விடயம் பிரதமரின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதனால் இப்பிரச்சினைக்கு உர…

    • 0 replies
    • 265 views
  3. இலங்கை இராணுவத்தின் தடுப்பு கைதியாக இருப்பதாகவும் நாட்டைவிட்டு வெளியேற தடைவிதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படும் கே.பி எனப்படும் குமரன் பத்மநாதன் இன்று தனது 60வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அவரது பிறந்த நாளை முன்னிட்டு யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பிலிருந்து வெளிவருகின்ற தமிழ் நாளிதழ்களினில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரால் நிர்வகிக்கப்படுவதாக கூறப்படும் செஞ்சோலை,அன்பு சிறுவர் இல்லம் மற்றும் பாரதி சிறுவர் என்பவற்றின் பேரினில் வாழ்த்து செய்திகள் பத்திரிகை அலுவலகங்களிற்கு அனுப்பப்பட்டு விளம்பரமாக இன்று பிரசுரிக்கப்பட்டுள்ளது.இதற்கான விளம்பரக்கட்டணமும் செலுத்தப்பட்டுள்ளது. சூழ்நிலைக்கைதியென சிலதரப்புக்களும் அவராகவே சரணடைந்தவர் என சிலதரப்புக்களும் அவர் பற்…

    • 13 replies
    • 852 views
  4. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமது அரசாங்கம் தொடர்பில் இரண்டு வார்த்தையில் கருத்து வெளியிட்டுள்ளார். “அப்பி பைஹினவா” என்ற இரண்டு வார்த்தைகளையே ஜனாதிபதி கூறியுள்ளார். “நாங்கள் வீழ்ச்சியடைந்துக்கொண்டிருக்கிறோம்” என்பதை பேச்சு வழக்கில் “நாம் கீழிறங்கிக்கொண்டிருக்கிறோம்” என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் ""நாங்கள் இறங்குவோம்"" என்று கூறுவதற்கும் இவ்வாறு அப்பி பைஹினவா” என்று சிங்கள மொழியில் கூறப்படுவதுண்டு. கடந்த வார இறுதிப்பகுதியில் இடம்பெற்ற அரசாங்கத்தின் நிறைவேற்றுசபைக் கூட்டத்தில் இந்த கருத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார். ஊழல்கள் மோசடிகள் தொடர்பில் பலர் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. எனினும் எவரும் இதுவரை கைது …

    • 0 replies
    • 279 views
  5. யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சிவஞானம் சிறிதரன் வெளிப்படையாக பேசும் நபர் என்பதால், இலங்கை அரசாங்கங்கள் அவரை புலிகளின் முகவர் என கூறிவருகின்றன. விடுதலைப்புலிகளின் முக்கிய தளபதிகளில் ஒருவரான கேர்ணல் தீபன், நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் மைத்துனர் என்பதும் இதற்கு வலுசேர்க்கிறது என இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது. ஈழப் போரின் இறுதிக்கட்டத்தில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டமை தொடர்பான விடயத்தில் சிறிதரன் இந்தியா அலட்சியமாக நடந்து கொண்டதாக அவர் இந்தியாவை கடுமையாக விமர்சித்து வந்துள்ளார். எனினும் சிறிதரனின் இந்த அரசியல் நிலைப்பாட்டில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கிளிநொச்சியில் அவரது அலுவலகத்தில் அவருடன் நடத்திய நேர்காணலில் அறிய முடிந்ததாக இந்…

    • 2 replies
    • 824 views
  6. இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாணம் வந்த இலங்கைக்கான ஆஸ்திரேலிய தூதுவர் ரொபின் மூடி காலை 9.30 மணியளவில் யாழ்.ஆயர் இல்லத்தில் யாழ்.மறைமாவட்ட ஆயர் தோமஸ் சவுந்தரநாயகத்தை சந்தித்தார். இந்தச்சந்திப்பின்போது, ஆட்சி மாற்றத்தின் பின்னர் வடக்கில் ஏற்பட்டுள்ள நிலைமைகள், மக்களுக்குத் தேவைப்படும் உதவிகள் குறித்து விரிவாக்க கலந்துரையாடப்பட்டது என்று ஆயர் தெரிவித்தார். ஆட்சிமாற்றத்தின் பின் வடக்கில் பெரியளவு மாற்றம் ஏற்படாவிட்டாலும், சிறு சிறு மாற்றம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஆளுநர் மாற்றம், காணிகள் கையளிப்புக் குறித்த வாக்குறுதிகள் போன்றன மக்கள் மத்தியில் சில நம்பிக்கைகளை ஏற்படுத்தியுள்ளன. வடக்குக்கு வந்த பிரதமர் இங்குள்ள நிலைமைகளை விரிவாக ஆராய்ந்து சென்றுள்ளார். குறிப்பாக இராணுவப் பிர…

  7. நிமல் சிறி­பா­ல டி சில்வா தொடர்ந்தும் பாரா­ளு­மன்­றத்தின் எதிர்க்­கட்சி தலை­வ­ராக இருப்­ப­தற்கு தகு­தி­யற்­றவர். அதே­போ­ல தினேஷ் குண­வர்த்­த­னவால் எதிர்க்­கட்சி தலை­வ­ராக முடி­யாது. ஒரே கட்சி ஆளும் தரப்­பா­கவும் எதிர்த் தரப்­பா­கவும் இருந்து செயற்­பட அனு­ம­தி­யில்லை என மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலைவர் அனுர குமார திசா­நா­யக்க தெரி­வித்தார். அதேவேளை தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­புடன் இணைந்து பாரா­ளு­மன்­றத்தில் எதிர்க்­கட்­சியை உரு­வாக்க நாம் தயார் , சபா­நா­ய­க­ரி­டமும் எமது விருப்­பத்தை முன்­வைத்­துள்­ள­தாக அவர் கூறினார். பிர­தான இரு கட்­சி­களும் ஒன்­றி­ணைந்து தேசிய அர­சாங்­கத்தை அமைத்­துள்ள நிலையில் பாரா­ளு­மன்­றத்தின் எதிர்க்­கட்சி யார் என்ற முரண்­பாடு ஏற்­பட்­டுள்ள…

    • 6 replies
    • 1.3k views
  8. வவுனியா, புளியங்குளம், இராமர்புளியங்குளம் பகுதியில் ஓட்டோவும் பிக்கப் வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் முச்சக்கர வண்டியில் பயணித்த ஒன்றரை வயதுச் சிறுமி உயிரிழந்ததுடன், சிறுமியின் தாயும் தந்தையும் ஓட்டோ சாரதியும் படுகாயமடைந்தனர். இந்த விபத்து இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றது. வவுனியாவிலிருந்து புளியங்குளம் நோக்கிப் பயணித்த ஓட்டோவும் எதிரே வந்த பிக்கப் ரக வாகனமும் புளியங்குளம், இராமர்புளியங்குளம் பகுதியில் ஏ-9 வீதியில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இதன்போது ஓட்டோவில் பயணித்த ஒன்றரை வயதுச் சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், சிறுமியின் தாயும், தந்தையும், ஓட்டோ சாரதியும் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.…

  9. பலாலி உயர்பாதுகாப்பு வலயத்தினுள் அமைந்திருக்கும் பலாலி கிழக்கு இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு பங்குனி திங்கள் நிகழ்வினை முன்னிட்டு வழிபடச்சென்றிருந்த வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். படையினரது ஆக்கிரமிப்பினில் இருக்கும் உட்பகுதிகளது செழிப்பு தொடர்பான தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் வெளிவருவதை தடுக்கவே தடைவிதிக்கப்பட்டிருக்கலாமென நம்பப்படுகின்றது. முன்னதாக இன்றைய தினம் பங்குனி திங்கள் நிகழ்வினை முன்னிட்டு பக்தர்களை உள்ளே செல்ல அனுமதிப்பதாக படைத்தரப்பு அறிவித்திருந்தது.இதற்கு முன்னரும் பக்தர்களினில் ஒரு பகுதியினரை அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அழைத்து சென்றிருந்த நிலையினில் அங்கு அமைந்திருந்த மாட்டுப்பண்ணைகள் போன்றவை தொடர்பினில் தகவல்கள் வெ…

    • 1 reply
    • 599 views
  10. சிறிலங்காவில் இறுதிக்கட்டப் போர் நடந்த முள்ளிவாய்க்காலில், அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள உதவிச்செயலர் ரொம் மாலினோவ்ஸ்கி நேற்று உயிரிழந்த இருதரப்பினருக்காகவும் மலர் தூவி இறுதிவணக்கம் செலுத்தினார். அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் விவகாரங்களுக்கான உதவிச்செயலர், ரொம் மாலினோவ்ஸ்கி சிறிலங்காவில் பயணத்தை மேற்கொண்டிருந்தார். நேற்று அவர் முல்லைத்தீவுக்குச் சென்று, ஆயிரக்கணக்கான பொதுமக்களும், விடுதலைப் புலிகளும், சிறிலங்கா படையினரும் கொல்லப்பட்ட முள்ளிவாய்க்கால் கரையோரத்தில் நடந்து சென்றார். முள்ளிவாய்க்காலில், பாரா கப்பல் தரைதட்டி நின்ற பகுதியில், கரையோரத்தில், மலர்களைத் தூவி, உயிரிழந்தவர்களுக்கு அவர் இறுதி வணக்கம் செலுத்தினார். …

  11. வடக்கு கிழக்கில் அண்மைநாட்களில் இணைத்துக்கொள்ளப்பட்ட தமிழ் காவல்துறை மற்றும் படை தொண்டர்கள் உள்ளுர் அடாவடிகளில் முழுதாக ஈடுபட்டுவருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. அவ்வகையில் வடமராட்சி நெல்லியடிப்பகுதியினில் பாடசாலை மாணவியொருத்தியை வீதியினில் வைத்து காவல்துறையினைச் சேர்ந்த ஒருவர் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்த முற்பட்டமை அம்பலமாகியுள்ளது. உடுப்பிட்டியிலுள்ள மகளிர் கல்லூரி மாணவியையே பட்டப்பகலில் பின் தொடர்ந்து சென்று பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தமுற்பட்டமை அம்பலமாகியுள்ளது. இதனிடையே அச்சுவேலிப்பகுதியினிலும் இவ்வாறு வீடொன்றினுள் புகுந்து பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட முற்பட்ட இராணுவ சிப்பாய் பொதுமக்களிடம் அகப்பட்டுக்கொண்டதுடன் பின்னர் தர்ம அடியினை வாங்கியிருந்தார். …

    • 1 reply
    • 521 views
  12. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமது கட்சியை வளர்க்கவும் நிலைநாட்டவுமே இங்கு வந்தார். அதற்கும் எமக்கும் எந்த சம்பந்தமுமில்லை. இது முற்றிலும் ஓர் அரசியல் ரீதியான பயணம். எனவே நான் மக்களின் பிரதிநிதி என்ற முறையில் பிரதமரின் கூட்டங்களில் கலந்துகொள்ளவில்லையே என்ற குற்றச்சாட்டு அர்த்தமற்றது என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை விடுதித் தொகுதி மற்றும் இரத்த வங்கி திறப்பு விழாவில் இணை பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்ததாவது:- இன்று நான் கொழும்பு செல்ல வேண்டியிருந்தது. ஜனாதிபதியுடன் சம்பந்தன் அவர்கள் ஒரு கூட்டத்தைக் கூட்டி என்…

    • 1 reply
    • 287 views
  13. மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கோப்புப் படம்: பி.டி.ஐ. கோவாவில் உள்ள பிரபல துணிக் கடையில் உடை மாற்றும் இடத்தில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருந்ததை கண்டறிந்து மத்திய மனிதவளத்துறை மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி புகார் அளித்துள்ளார். மத்திய மனிதவளத்துறை மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானி கோவாவில் உள்ள பிரபல துணிக் கடைக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) தனது குடும்பத்துடன் சென்றிருக்கிறார். அப்போது அந்த கடையில் வாங்கிய துணிகளை உடை மாற்றும் அறையில் சரிபார்க்க சென்றபோது, அந்த அறையில் ரகசிய சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டிருந்ததை அவரது உதவியாளர்கள் கண்டறிந்துள்ளனர். பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம் குறித்து ஸ்மிருதி இரானி தரப்பிலிருந்து கோவா காவல் நிலையத்தில் புக…

    • 12 replies
    • 2.8k views
  14. சிறிலங்கா அரசாங்கம் உள்நாட்டு விசாரணைகளை மேற்கொண்டால், அது நம்பகத்தன்மையானதாக இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. சிறிலங்கா அரசாங்கம் யுத்தக்குற்றங்கள் குறித்து உள்நாட்டு விசாரணைகளை மேற்கொள்ளவிருப்பதாக உறுயளித்திருக்கிறது. இதில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்படுகின்றவர்கள் உள்நாட்டு சட்டத்தின் கீழேயே தண்டிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த விசாரணைகள் குறித்து மாறுபட்ட கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. இதனால் இது உள்நாட்டில் பாரிய அரசியல் ரீதியான அழுத்தங்களுக்கு உள்ளாகி, நம்பகத்தன்மையை இழக்கும் என்று அந்த ஊடகம் தெரிவித்துள்ளது. http://www.pathivu.com/news/39003/57//d,article_full.…

    • 0 replies
    • 291 views
  15. வடக்கிற்கு ஒதுக்கப்பட்ட நிதி காங்கேசன்துறையினில் நட்சத்திரவிடுதி கட்டவே செலவிடப்பட்டுள்ளதாக கண்டுபிடித்துள்ளார் முன்னைய மகிந்த அரசின் செல்லப்பிள்ளையான விஜகலாமகேஸ்வரன். முன்னைய அரசு அபிவிருத்தி என்று சொல்லி வீதிகளையும் கட்டடங்களையும் கட்டியுள்ளதே தவிர போரால் அங்கவீனமானவர்களுக்கோ விதவைகள் ஆக்கப்பட்டவர்களுக்கோ எந்த விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை அத்தோடு வடபகுதிக்கென ஒதுக்கப்பட்ட நிதி எங்கே போய்விட்டது கே.கே.எஸ் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மாளிகைக்கு தான் செலவளிக்கப்பட்டுள்ளது போல தெரிகிறதெனவும் குற்றஞ்சாட்டியுள்ளார். தற்போதைய மகளிர் விவகார பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன். நேற்று கிளிநொச்சியில் பெண்களுக்கு வலுவூட்டல் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்…

    • 0 replies
    • 511 views
  16. அளவெட்டி மண்ணிண் மைந்தர் திரு.நாகலிங்கம் வேதநாயகன் யாழ்.மாவட்ட அரசஅதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். பண்டிதர் க.நாகலிங்கத்தின் மூத்த மகனான இவர் முன்னர் தெல்லிப்பளை மற்றும் சண்டிலிப்பாய் பிரதேச செயலராகவும் கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசஅதிபராகவும் முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபராகவும் கடமையாற்றியிருந்தார். மிகவும் நேர்மையான அதிகாரியாக மதிக்கப்படும் இவர் யாழ்.மாவட்ட அரச அதிபராக நியமிக்கப்பட்டுள்ளமையை பல்வேறு தரப்புக்களும் வரவேற்றுள்ளன. அவரது பணிசிறக்கவும் அவர் வல்லமைகளின் வழி யாழ்.மக்களின் வாழ்வு செழிக்கவும் எமது இணையத்தின் வாழ்த்துக்கள்.. http://www.alaveddy.ch/?p=22276

  17. நடை­பெ­ற­வுள்ள பாரா­ளு­மன்ற பொதுத் தேர்­தலில் ஜனா­தி­பதி மைத்திரி­பால சிறி­சேன, முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ மற்றும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம சிங்க ஆகியோர் தலை­மையில் மூன்று கூட்­ட­ணிகள் தனித்­த­னி­யாக கள­மி­றங்­க­வுள்­ள­தாக நம்பத் தகுந்த வட்­டா­ரங்கள் தெரி­விக்­கின்­றன. எதிர்­வரும் பாரா­ளு­மன்றத் தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தற்­கான ஆரம்­பக்­கட்ட பணி­களை கிராம மட்­டங்­க­ளி­லி­ருந்து கட்­சிகள் ஆரம்­பித்­துள்­ளன. அதே­வேளை, ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி மற்றும் சில அமைப்­புக்­க­ளுடன் கூட்­ட­ணி­யா­கவும் ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு தலை­மைத்­துவம் வழங்கும் ரணில் விக்கிர­ம­சிங்க தமிழ், முஸ்லிம் மற்றும் சில கட்­சி­க­ளுடன் கூட்­ட­ணி­யா­…

    • 1 reply
    • 1.7k views
  18. இலங்கை நிலைமைகள் குறித்து சிங்கப்பூரில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன. அரசியல் பிரமுகர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், கல்வியியலாளர்கள், புலம்பெயர் சமூகத்தினர், சர்வதேச பங்குதாரர்கள் உள்ளிட்ட பலரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் பிரதிநிதி ஒருவரும் கண்காணிப்பாளராக இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் மற்றும் ஜனநாயகத்தை நிலைநாட்டல் ஆகியன தொடர்பில் இந்தக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்து மற்றும் தென்னாபிரிக்க அரசாங்கப் பிரதிநிதிகளும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இலங்கையில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்திக்கொள்வது குறித்து பேசப்பட்டுள்ளதாக…

    • 0 replies
    • 566 views
  19. யாழ்ப்பாணம் வலிகாமத்தில் நிலைத்தடி நீர் மாசடைந்துள்ளது என்பது தொடர்பில் குழப்பகரமான அறிக்கைகளும் செய்திகளும் வெளியாகி வருவதால் இந்த சிக்கலில் வடமாகாண முதலமைச்சர், யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர், வடமாகாண ஆளுனர் மற்றும் உலக சுகாதார நிறுவனம் போன்றவர்கள் இதில் நேரடியாக தலையிடக்கோரி, யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் முன்றலில் எதிர்வரும் 07.05.2015 செவ்வைக்கிழமை காலை 8.00 மணியளவில் மக்கள் திரள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கிறோம். -தூய நீருக்கான பாதிக்கபட்ட மக்கள் ஒன்றியம் -இயற்கை மற்றும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு அமையம் -விதை குழுமம் நீருக்காகப் போராடும் அன்பார்ந்த மக்களே! எமக்கான இறுதிச்சந்தர்ப்பம்! ஒன்று திரள்வோம் வெற்றி பெறுவோம்! …

    • 0 replies
    • 681 views
  20. மலேசிய விமானம் வெடித்து சிதறிய விபத்தில், அமெரிக்காவுக்கான முன்னாள் தூதர் உட்பட 6 பேர் பரிதாபமாக பலியாகினர். மலேசிய பிரதமருடைய மகளின் திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு திரும்பியபோது நேற்று இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. மலேசிய நாட்டு பிரதமர் நஜீப் ரசாக் மகளின் திருமணம், பெகான் என்ற இடத்தில் நேற்று நடைபெற்றது. இந்த திருமணத்தில் மலேசியாவை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர். திருமணம் முடிந்து, அமெரிக்காவுக்கான முன்னாள் தூதர் ஜமாலுதீன் ஜார்ஜிஸ், பிரதமரின் உதவியாளர் உள்ளிட்ட 6 பேர் ஹெலிகாப்டரில் திரும்பினர். மலேசியாவின் தெற்கு மாகாணமான செமன்யீக் பகுதியில் ஹெலிகாப்டர் சென்று கொண்டிருந்தது. காலை 4.55 மணியளவில்…

    • 5 replies
    • 1.6k views
  21. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக யாழில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோரின் உருவபொம்மைகள் எரிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட பெண்கள் அமைப்பினால், இன்று சனிக்கிழமை (04) இவ் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது. தந்தை செல்வா நினைவு சதுக்கத்தின் அருகாமையிலிருந்து ஆரம்பிக்கப்பட்டு, மார்டின் வீதியில் அமைந்துள்ள இலங்கை தமிழரசுக்கட்சியின் அலுவலகம் வரை இரு தலைவர்களின் உருவபொம்மைகளும் ஆர்ப்பாட்டகாரர்களால் வீதியில் இழுத்துச் செல்லப்பட்டு அலுவலக முன்றலில் எரியூட்பட்டன. தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் ஒருவர் பல பெண்களை பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தியமை…

  22. இலங்கைக்கடற்படையினரால் தாக்கப்பட்டு காயமடைந்த இந்திய மீனவர்கள் மூவர் யாழினில் வைத்தியசாலையினில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பினில் காயமடைந்தவர்கள் தெரிவிக்கையினில் எங்களைச் சுற்றிவளைத்தனர். பின்னர் எங்கள் படகில் ஏறிக்கைகளைப்பின் பக்கமாகக் கட்டிவிட்டுக் கயிற்றினாலும், துப்பாக்கியின் பின்பக்கத்தினாலும் கடுமையாகத் தாக்கினர் என் நேற்று நீதிமன்றில் தெரிவித்தனர். பருத்தித்துறைக் கடற்பரப்பை அண்மித்துக் கைதாகிய 37 இந்திய மீனவர்களில், இலங்கைக் கடற்படை யினரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் படகின் மாலுமிகள் மூவரையும் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்துமாறு சிறைச்சாலைக் காவலர்களுக்குப் பருத்தித்துறை நீதிவான் மா.கணேசராஜா நேற்று உத்தரவிட்டார். அத்துடன் மருத்துவப் பரிசோத …

    • 7 replies
    • 695 views
  23. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் நூற்றி இருபத்ததைந்தாவது ஆண்டு நிறைவையொட்டி முன்னாள் அதிபர்களில் ஒருவரான சபாலிங்கம் ஞாபகார்த்தமாக நிர்மாணிக்கப்பட்ட சபாலிங்கம் அரங்கம் இன்று வெள்ளிக்கிழமை பகல் முன்னாள் அதிபர்களில் ஒருவரான க.பொன்னம்பலத்தினால் திறந்து வைகப்பட்டது. முன்னதாக யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் அமைந்துள்ள வைரவர் ஆலயத்தில் இருந்து விருந்தினர்கள் மேளவாத்தியம் முழங்க ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்கள். இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கல்லூரியின் முன்னாள் அதிபர் பொன்னம்பலம் தம்பதியரும், சிறப்பு விருந்தினர்களாக சபாலிங்கத்தின் புத்திரர்களான வைத்திய கலாநிதி ஜோதிலிங்கம், ஜெயலிங்கம், அபயலிங்கம் மற்றும் புதல்விகளான திருமதி கற்பகாம்பிகை புவனேந்திரராசா, திருமதி ஜெகதாம்…

    • 33 replies
    • 3.3k views
  24. During bilaterals, they told us not to make it public that they would support us due to the sensitivities in Tamil Nadu. A couple of hours after the final bilateral discussion, our head of the delegation issued a public statement that India fully backed Sri Lanka. Within a matter of hours, Tamil Nadu was up in arms. Lok Sabha had adjourned. Delhi's Charge d'Affairs called me and said: "Ask those guys in the delegation that they should know where they stand. Do they want to re-impose US imperialist presence in the region or do they want to control the destiny of the country and defend Sri Lanka's national interest?" I immediately conveyed the message to the Presiden…

  25. உயர்பாதுகாப்பு வலயமும் அனல் மின்னிலைய காணிகளும் விடுவிக்கப்பட வேண்டும் செய்தியாக்கம்: குளோபல் தமிழ் விசேட செய்தியாளர்:- பொரு­ளா­தார வலயம் நிர்­மா­ணிப்­ப­தற்­காக இலங்கை அர­சாங்­கத்தால் முத­லீட்டு சபைக்காய் சுவீகரிக்கப்பட்ட சம்பூர் மக்­க­ளுக்கு சொந்­த­மான 818 ஏக்கர் நிலத்தின் முத­லீட்டு சபைக்­கான உரிமம் இரத்து செய்யும் வர்த்­த­மானி அறி­வித்தல் இம்­மாதம் 17 ஆம் திகதி வெளி­வ­ர­வி­ருக்­கி­றது. காணி அமைச்சின் செய­லாளர் இவ்­வர்த்­த­மானி அறி­வித்­தலை மேற்­கொள்­ள­வி­ருக்­கி றார் என உயர் அதி­காரி ஒருவர் கொழும்பு பத்திரிகை ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். இவ்­வ­றி­வித்­தலைத் தொடர்ந்து மேற்­படி காணிகள் இம்­மாத இறு­திக்குள் சம்பூர் மக்­க­ளுக்கு உத்­தி­யோ­க­பூர்­வ­மாக கைய­ள…

    • 0 replies
    • 413 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.