ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143537 topics in this forum
-
ஜெயக்குமாரி போல ஏனைய தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும். அத்துடன், தமிழ் பேசும் மக்களின் உரிமைகள் உறுதிப்படுத்தப்பட்டு ஐக்கிய இலங்கைக்குள் ஒன்றுபட்டு வாழ வழிவகுக்க வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பிரிட்டனில் சந்தித்த புலம்பெயர் தமிழ் பேசும் மக்கள் வலியுறுத்தினர். மத்திய மாகாண சபை உறுப்பினரும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவருமான அஸாத் சாலி இந்த தகவலை வெளியிட்டுள்ளார். உத்தியோகபூர்வ பயணமாக பிரிட்டனுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சென்ற போது, அஸாத் சாலியும் அவருடன் சென்றிருந்தார். இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு தகவல் தெரிவிக்கையில்,பிரிட்டன் சென்ற ஜனாதிபதி மைத்திரிபால பொதுநலவாய மாநாட்டு நிகழ்வில் கலந்துகொண்டதுடன் …
-
- 0 replies
- 474 views
-
-
மலையக மக்களின் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க மலையக அரசியல் தலைவர்களை புதுடில்லிக்கு வருமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். இலங்கைக்கான இரண்டு நாள் பயணத்தை் மேற்கொண்ட இந்தியப் பிரதமர் கொழும்பு மற்றும் வடபகுதிக்கு மட்டுமே சென்றிருந்தார். நாட்டின் கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளுக்கு அவர் வராதது வருத்தமும், ஏமாற்றமும் அளிப்பதாக உள்ளன என்று அங்குள்ளவர்கள் கூறுகிறார்கள். இந்நிலையில் இந்தியா புறப்படும் முன்னர் மலையகப் பகுதித் தலைவர்களை நரேந்திர மோடி சந்தித்தார். அப்போது மலையகப் பகுதி தொடர்பான தகவல்கள் மற்றும் தரவுகள் தன்னிடம் போதியமான அளவில் இல்லை என்றும், அவற்றை சேகரிக்கும் நடவடிக்கைகளில் தான் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தங்களிடம் தெரிவித்…
-
- 0 replies
- 329 views
-
-
எதிர்வரும் செப்டம்பர் மாதம் நிறைவடைவதற்குள் யுத்தக்குற்ற விசாரணைகள் நிறைவு செய்யப்படும் என்று, சிறிலங்காவின் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ பிரித்தானிய அரசாங்கத்திடம் உறுதி வழங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆங்கில ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது. கடந்த வாரம் பிரித்தானிய சென்றிருந்த அவர், பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரனை சந்தித்து இந்த உறுதிமொழியை வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதம் சிறிலங்காவின் யுத்தக்குற்றங்கள் குறித்து அறிக்கை வெளியாக்கப்படும். இந்த அறிக்கை தாமதிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த காலப்பகுதிக்குள் விசாரணைகள் நிறைவு செய்யப்படும் என்று அவர் உறுதி வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.pathivu.com/news/38480/57//d,article_full.aspx
-
- 2 replies
- 357 views
-
-
19 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் முடிவு எடுக்க வேண்டும் என்ற நெருக்கடியான நிலைக்குள் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை ஜனாதிபதி தலைமையில்அமைச்சரவை கூடுகின்றது. கடந்த வியாழக்கிழமை நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் 19 ஆவது திருத்தச் சட்டம் உடன் நிறைவேற்றப்பட வேண்டும் என முக்கிய அமைச்சர்கள் வலியுறுத்தினர். இந்நிலையில் முடிவு காணப்படாமல் கூட்டம் முடிந்திருந்தது. இதையடுத்து நடந்த தேசிய நிறைவேற்று சபையின் கூட்டத்திலும் 19 ஆவது திருத்தம் தொடர்பில் முடிவு எட்டப்படவில்லை. இந்த சமயத்தில் ஏப்ரல் 23 ஆம் திகதி பாராளுமன்றத்தை கலைக்க வேண்டும் என ஐ.தே.க உறுதியாக இருக்கிறது. பாராளுமன்றம் கலைக்கப்படாமல் தேசிய அரசாங்கத்தை அமைக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முயற்சிக்கிறது. இதற்காக பல தனியான…
-
- 1 reply
- 314 views
-
-
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிபிரயோகத்தை மேற்கொள்ளும் உரிமையுள்ளதாக இலங்கை பிரதமர் ரணில்விக்கிரமசிங்க தெரிவித்த கருத்திற்கு வடமாகாணமுதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் கடும் கண்டனமும் எதிர்ப்பும் வெளியிட்டுள்ளதாக இந்தியாவின் சிஎன்என்- ஐபிஎன் தெரிவித்துள்ளது. இந்திய பிரதமர் நரேந்திரமோடியின் விஜயத்தின் பின்னர் சிஎன்என்- ஐபிஎன்னிற்கு விசேடமாக கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறன கருத்துக்களை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நட்பு நாடொன்று குறித்து அரசாங்கத்தின் தலைமைப்பொறுப்பில் உள்ள ஓருவர் கருத்து வெளியிடும் முறையிதுவல்ல,மீனவர்களை பொறுத்தவரை அனைத்து ஆழ்கடல் டிரோலர் படகுகளையும்,வங்காளவிரிகுடாவிற்கோ அல்லது அராபிய கடலிற்கோ அ…
-
- 0 replies
- 447 views
-
-
இந்திய அரசாங்கத்தின் உதவித்திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் கீரிமலையில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை பயனாளிகளுக்கு கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொள்ளச் சென்ற மோடி கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட வழிபாட்டிலும் கலந்து கொண்டார். இதேவேளை, மோடியின் வருகையினை முன்னிட்டு விசேட விதமாக வழிபாட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://seithy.com/breifNews.php?newsID=128273&category=TamilNews&language=tamil
-
- 7 replies
- 2.7k views
-
-
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளோர் தொடர்பான தகவல்கள் அடங்கிய அறிக்கையை தமக்கு சமர்ப்பிக்குமாறு தேசிய பாதுகாப்புச் சபைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்பு விடுத்திருக்கிறார். பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்ட ஜெயக்குமாரி பிணையில் விடுதலை செய்யப்பட்டார். வழக்குத் தாக்கல் இன்றி 182 முதல் 189 பேர் வரையானோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று நீதி அமைச்சர் அண்மையில் தெரிவித்திருந்தார். எனவே, இவர்கள் தொடர்பில் எத்தகைய நடவடிக்கை எடுக்கப்படும்? என்று எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே ஜனாதிபதி மைத்திரிபால மேற்கண்டவாறு தெரிவித்தார். இதற்கு ஜனாதிபதி மைத்திரிபால தெரிவித்தவை வருமாறு:- "புதிய அரசு ஆட்சிக்கு வந்…
-
- 0 replies
- 211 views
-
-
தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி, நந்திக்கடலில் தொடர்ந்தும் மீன்பிடித் தொழில் மேற்கொள்ளப்படுவதாகவும் இதனால் தமது தொழில் பாதிக்கப்படுவதாகவும் மீனவத் தொழிலாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். குறித்த கடலில் தற்போது இறால்பிடி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில், வீச்சு வலைகளைப் பயன்படுத்தி, இந்த இறால்பிடி மேற்கொள்ளப்படுகிறது. எனினும், முல்லைத்தீவிலுள்ள மூன்று மீன்பிடிச் சங்கங்களின் அங்கத்தவர்களான ஒருசில மீனவத் தொழிலாளர் இவ்வாறு நந்திக்கடலில் மீன்பிடிப்பதற்கு தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி இறால் பிடிப்பதாகவும் இதனால் தமது தொழில் பாதிக்கப்படுவதாகவும் நந்திக்கடல் மீன்பிடித் தொழிலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இவ்வாறு நந்திக்கடலில் தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படு…
-
- 0 replies
- 274 views
-
-
தமிழின அழிப்புக்கு அனைத்து வகையிலும் நீதி வேண்டும் என வலியுறுத்த புலம்பெயர் தமிழ் உறவுகள் அணிதிரண்டு வலிமை சேர்க்க வேண்டும். போர்குற்ற விசாரணைகளைத் தள்ளிப்போடுவது என்னவென்றால் தமிழில் ஒரு பழமொழி இருக்கிறது '' ஆறின கஞ்சி பழங்கஞ்சி '' கஞ்சி பழையதாகி விடும். அந்த உத்தி தான் இது. விசாரணையைத் தள்ளிப் போட்டு வரும்போது நீதி கேட்கும் வேகம் அடங்கி விடும் என்று நினைக்கிறார்கள் என தமிழீழ ஆதரவாளரும் நடிகருமான சத்தியராஜ் அவர்கள் கூறியுள்ளார். பதிவு இணையத்தின் சிறப்பு நேர்காணலிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். ஜெனீவாவில் இடம்பெறும் நீதிக்கான மாபெரும் பேரணியில் புலம்பெயர் தமிழர்கள் அணி திரவேண்டும் - தாயக மக்கள் சார்பாக இந்திரகுமார் ஜ.நா முன்றலில் நடைபெறும் மாபெரும் பேரணிக்கு ப…
-
- 0 replies
- 390 views
-
-
தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு தலைமையேற்கப் போகும் விக்கினேஸ்வரன்! கிளிநொச்சியிலிருந்து… ஒரு ஊடகவியலாளனின் பார்வையில் தர்மத்தின் வாழ்வுதனை சூது கௌவும் ஆனால் தர்மம் என்றோ ஒருநாள் வெல்லும் என்பதை அறியாத சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்களின் புறமுதுக்கு குத்தல்கள், சூட்சுமமான ஏமாற்களால் எத்தனை தியாகங்கள்… எத்தனை ஈகங்கள்… எத்தனை… எத்தனை… என எண்ணமுடியாதளவு விலைமதிப்பற்ற இழப்புக்களை ஈழத்தில் சந்தித்த தமிழனம் இன்றும் போரடிக்கொண்டிருக்கின்றது. முள்ளிவாய்க்கால் முடிவுக்கு பின்னர் நந்திக்கடல் அமைதியான போதும் தமிழினத்தின் குருதியும் வேட்கையும் உரிமைக்காக முழுவிச்சுப்பெற்ற அலைகளாகவே இருக்கின்றன. யுத்தத்தின் ரணங்களுடன், வாழ்வாதார போராட்டத்துடன் தலைநிமிர்ந்த வாழ்வுக்காய் ஏங்கிக்கொண்டிருக…
-
- 0 replies
- 585 views
-
-
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் காலங்களில் அமெரிக்காவுக்கு உத்தியோகபூர்வ பயணம் செய்யவுள்ளார் - இதேவேளை மேற்கொள்வார் என அரசாங்கம் அறிவித்துள்ளது. அவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமெரிக்காவுக்கு விஜயம் செய்வாராயின், இலங்கை ஜனாதிபதி ஒருவர் 31 வருடங்களுக்கு பின் அமெரிக்காவுக்கு விஜயம் செய்வது இதுவாகும். அமெரிக்க ஜனாதிபதியாக ரொனால்ட் ரீகன் இருந்த காலத்தில் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜேவர்தன 1984 ஆம் ஆண்டு ஜீன் மாதம் அமெரிக்காவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை இந்திய பிரதமர் நரேந்திரமோடி அடுத்த மாதம் 13 ஆம் திகதி மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு இலங்கை வரவுள்ளார். இந்திய பிரதமர் ஒருவர் 1987 ஆம் ஆ…
-
- 0 replies
- 521 views
-
-
இலங்கைக்கு இருநாள் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி, 25 வருடங்களுக்குப் பின்னர் தலைமன்னாருக்கான ரயில் சேவையை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைத்தார். இந்திய அரசின் உதவியுடன் மதவாச்சியிலிருந்து தலைமன்னாருக்கான ரயில் பாதைப் புனரமைப்பு இடம்பெற்று இந்த சேவை இன்று சனிக்கிழமை நண்பகல் 12:30 மணியளவில் வைபவரீதியாக ஆரம்பித்துவைத்தார். இன்று காலை தலைமன்னார் வந்திருந்த இந்திய பிரதமருக்கு பிரமாண்டமான வரேவேற்பு வழங்கப்பட்டது. இதன் பின் வைபவரீதியாக கொடி அசைத்து அவர் ரயில் சேவையை ஆரம்பித்துவைத்தார். இந்த நிகழ்வின்போது வடக்கு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், மீனவர் பிரச்சினைகள், அரசியல் தீர்வு குறித்த விடயங்களை வலியுறுத்தி இந்தியப் பிரதமர் மோடிக்கு மனு ஒன்று…
-
- 0 replies
- 450 views
-
-
100 நாள் வேலைதிட்டத்தின் முன்னேற்றம் மற்றும் சகல தகவல்களையும் அறிந்துகொள்வதற்கு புதிய மின்னஞ்சல் முகவரி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மார்ச் மாதம் 1ஆம் திகதி முதல் 100 நாட்கள் வரையிலான வேலைதிட்டத்தின் அட்டவணை மற்றும் சகல தகவல்களும் திட்ட மேலாண்மை மற்றும் கண்காணிப்பு துறை திணைக்களத்தின் www.pmm.gov.ilk என்ற மின்னஞ்சல் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என பிரதம அமைச்சரின் அலுவலகம் அறிவித்துள்ளது. 100 நாள் வேலைதிட்டம் தொடர்பாக பொது மக்களின் கருத்துக்களை முன்வைப்பதற்கான வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. பொது மக்கள் கருத்து, பணிப்பாளர் நாயகம், திட்ட மேலாண்மை மற்றும் கண்காணிப்பு திணைக்களம், இலங்கை மத்திய வங்கி கட்டிடம், கொழும்பு 01 என்ற விலாசத்தில் அல்லது 100dayafeedback@pm…
-
- 0 replies
- 976 views
-
-
2006ஆம் ஆண்டு உக்ரெய்னில் இருந்து மிக் ரக விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்ட போது நிதிமோசடிகள் இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது. இந்தநிலையில் விசாரணைகள் தொடர்வதாக இலங்கையின் புதிய அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ள நிதிமோசடி தொடர்பான பொலிஸ் விசாரணை பிரிவு தெரிவித்துள்ளது. இந்த கொள்வனவின் போது 14.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதிதுஸ்பிரயோகம் இடம்பெற்றுள்ளதாக முறைப்பாடு கிடைத்துள்ளது. இதேவேளை கெரவலப்பிட்டிய மின்சாரநிலைய 122 மில்லியன் டொலர் நிதிமோசடி தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மிக் விமானக் கொள்வனவில் கோத்தபாய ராஜபக்ச ஊழல் செய்ததாக முன்னர் குற்றச்சாட்டுகள் எழுந்திருந்தன. http://seithy.com/breifNews.php?newsI…
-
- 1 reply
- 702 views
-
-
இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி யாழ்ப்பாணம் செல்கின்றார்.இந்தப் பயணத்தின்போது அவரது கவனத்தை ஈர்க்கும் வகையில் யாழ் நகரில் காணாமல் போனோர்களது உறவுகள், தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம், கிராமிய உழைப்பாளர் சங்கம் என்பன இணைந்து கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை நடத்திவருகின்றன. இந்திய இழுவைப்படகுகளால் வடபகுதி மீனவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் அந்த முறையைத் தடுக்கக் கோரியும், இந்திய - இலங்கை மீனவர் பிரச்சினையைத் தீர்க்கக் கோரியும் இந்தப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. போர் காரணமாக இடம்பெயர்ந்த மக்களை சொந்த நிலங்களில் பூர்விகமாக குடியிருந்த பிரதேசத்தில் குடியமர்த்தல், மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மக்களுக்கு பூரணமான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றி கொடுத்தல்,மீள்குடியேற்ற ம…
-
- 7 replies
- 843 views
-
-
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கடந்த ஒரு வருட காலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த பாலேந்திரன் ஜெயக்குமாரியை இலங்கை அரசாங்கம் விடுதலை செய்தமையை வரவேற்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பேச்சாளர் ஜென் சகி இதனை தெரிவித்தார். தமிழ் சிறுபான்மையினரை நோக்கி புதிய அரசாங்கத்தின் நல்லலெண்ண நடவடிக்கை இது எனத் தெரிவித்த அவர் இலங்கையில மனித உரிமையை நிலைநாட்டுவதை நோக்கிய சாதகமான நடவடிக்கை எனவும் வர்ணித்தார். http://seithy.com/breifNews.php?newsID=128184&category=TamilNews&language=tamil
-
- 25 replies
- 1.6k views
-
-
புலம்பெயர்வாழ் தமிழர் தம் தாய்நிலத்திற்கு ஆற்றவேண்டிய பணிகள்: பேராசிரியர் இரா.சிவசந்திரன் சிந்தனைக்கூடம் - யாழ்ப்பாணம் எனும் ஆய்வு அபிவிருத்தி நிறுவனத்தில் புலம் பெயர் வாழ் கல்வியாளர் சிலருடனான கலந்துரையாடல் ஒன்று 07.03.2015 சனிக்கிழமையன்று நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் சிந்தனைக் கூடத்தின் பணிப்பாளர் பேராசிரியர் இரா.சிவசந்திரன் ஆற்றிய உரையாடலின் போது புலம்பெயர் தமிழர் தம் தாய் நிலத்திற்கு ஆற்றவேண்டிய பணிகள் பற்றிய பல்வகைப்பட்ட சிந்தனைகளை முன்வைத்தார். புலம்பெயர் வாழ் தமிழர்கள் தம் தாய்நிலத்திற்கு ஆற்ற வேண்டிய பணிகளை அரசியல், பொருளாதார, சமூக ரீதியாக வகைப்படுத்தக்கூடியதாக உள்ளது. இதனை அரசியல் ரீதியாகவும் பொருளாதாரம் என்ற பிரிவினுள் விவ…
-
- 14 replies
- 1.1k views
-
-
பொதுபல சேனா போன்ற பேரினவாத இயக்கங்களினால் இலங்கை முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வன்முறைகளின் பின்னணியில் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் இருந்துள்ளது என சிறிலாங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிச் செயலாளர் நாயகமும் கல்முனை மாநகர முதல்வருமான சட்ட முதுமாணி எம்.நிஸாம் காரியப்பர் ஐ.நா.மனித உரிமை மாநாட்டில் தெரிவித்துள்ளார். ஜெனீவாவில் இடம்பெறுகின்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 28 ஆவது வருடாந்த அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஐ.நா.மனித உரிமை ஆணைக்குழுவின் மத சுதந்திரத்திற்கான உப குழுக் கூட்டம் அதன் விசேட தூதுவர் ஹைனர் பீல்ட்பெல்ட் தலைமையில் நேற்றுமுன்தினம் ஜெனீவாவில் அமைந்துள்ள அதன் தலைமையகத்தில் இடம்பெற்றது. …
-
- 6 replies
- 489 views
-
-
இந்தியா, அமெரிக்க போன்ற நாடுகளின் புலனாய்வு சேவைகளே கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தன்னை தோற்கடித்ததாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார் இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார். இந்தியாவின் றோ புலனாய்வு சேவை, அமெரிக்காவின் சி.ஐ.ஏ புலனாய்வு சேவை, எம்.ஐ.6 அமைப்பு ஆகியனவே என்னை கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தோற்கடிக்க நடவடிக்கை எடுத்தன. என்னை ஆட்சியில் இருந்து அகற்றும் திட்டங்கள் இரண்டு வருடங்களுக்கு முன்னமே ஆரம்பிக்கப்பட்டது. சீனாவுடன் எனக்கு இருந்த தொடர்புகளே இந்த சதித்திட்டம் அரங்கேற காரணமாக இருந்தது. ஜனாதிபதித் தேர்தலின் இறுதிக்கட்டத்தில் இதனை நான் அறிந்து கொண்டேன். இந்திய புலனாய்வு சேவையான றோவின் இந்த செயற்பாடுகளில் இந…
-
- 4 replies
- 841 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளை சந்தித்தார் மோடி MAR 13, 2015by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர். இன்றுமாலை நடந்த இந்தச் சந்திப்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன், சுரேஸ் பிரேமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்தச் சந்திப்பில் பேசப்பட்ட விவகாரங்கள் பற்றிய தகவல்கள் இன்னமும் வெளியாகவில்லை. http://www.puthinappalakai.net/2015/03/13/news/4379
-
- 15 replies
- 1.8k views
-
-
ரணில் விக்கிரமசிங்க ஈழத்தமிழருக்கும் பிரதமரா? [ வெள்ளிக்கிழமை, 13 மார்ச் 2015, 08:55.51 AM GMT ] தமிழ் மக்களைப் புரிந்து கொள்வதில் தொடர்ந்தும் முயற்சிக்கப் போவதில்லை என்பதை ரணில் மீண்டும் நீரூபித்துள்ளார். ஏற்கெனவே முயற்சிக்காததால் தான் ஜனாதிபதியாகும் வாய்ப்பை இழந்தவர் இவர். இப்போது வடமாகாண தமிழ் மக்களின் சுயகௌரவத்துக்கு சவால் விட நினைத்து மூக்குடைபடப் போகிறார். இவரை நம்பி போட்டியிடப்போகும் விஜயகலா மகேஸ்வரனின் நிலைமை தான் பரிதாபகரமானது. ஏற்கனவே இலங்கையின் சுதந்திரத்தினத்தன்று அரசியல் கைதிகளில் ஒரு பகுதியினர் விடுவிக்கப்படுவார்கள் என அறிவித்து மூக்குடைபட்ட நிலையில் இருக்கிறார். இந்தியாவில் ஒரு மரபு உள்ளது. பதவியிலிருக்கும் பிரதமர் ஒரு மாநிலத்துக்கு விஜயம் செய்யும் போ…
-
- 1 reply
- 646 views
-
-
தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த ஜெயகணேஸ் பகீரதியை இன்று காலை கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது 2 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் செல்ல நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு பொலிஸாரினால் கடந்த 2 ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பகீரதி கைதுசெய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தார். இவருடைய 8 வயது குழந்தை தொடர்பாக ஆழமான கவனத்தை கருத்தில் கொண்டு நீதிவான் நீதிமன்றத்தின் மேலதிக நீதிபதி அருணி ஆட்டிகல பிணையில் செல்வதற்கான அனுமதியை அளித்தார். பிரதிவாதி தரப்பில் சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி. தவராஜா ஆஜராகியிருந்தார். http://virakesari.lk/articles/2015/03/13/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%80%E0%AE%B…
-
- 2 replies
- 1.6k views
-
-
மக்களின் தீர்க்கபடாத பிரச்சினைகளைத் தீர்க்க இலங்கை அரசுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி யாழ்ப்பாணம் வரும் சமயம் யாழில் மாபெரும் ஊர்வலத்துடன் கூடிய மௌனப்போராட்டம் நடத்தப்படவுள்ளது. நாளை காலை 9.30 மணிக்கு யாழ்.பிரதான பேருந்து நிலையத்தில் இருந்து ஊர்வலமாக,யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத்தூதரகத்துக்குச் சென்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து மகஜர் கைளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இலங்கைக்கு வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடி நாளை யாழ்.வருகை தரவுள்ளதால் குறித்த தினத்தில் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போர் காரணமாக இடம்பெயர்ந்த மக்களை சொந்த நிலங்களில் பூர்விகமாக குடியிருந்த பிரதேசத்தில் குடியமர்த்தல்…
-
- 2 replies
- 640 views
-
-
இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு, காலி முகத்திடலில் வைத்து 19பீரங்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. அவருக்கு கடற்படையினர் அணிவகுப்பு மரியாதை செலுத்தினர். குதிரைப்படை சகிதம் ஜனாதிபதி செயலகத்துக்கு அவர் அழைத்துவரப்பட்டார். அங்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்ததுடன் நான்கு ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுவதற்கான இருதரப்பு பேச்சுவார்த்தை தற்போது இடம்பெற்றுகொண்டிருக்கின்றது. http://www.tamilmirror.lk/141571
-
- 18 replies
- 869 views
-
-
www.ndtv.com/video/player/news/have-to-heal-hearts-of-all-sections-of-society-pm-modi-in-lankan-parliament/359735
-
- 2 replies
- 548 views
-