ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143538 topics in this forum
-
யாழ். மாவட்டத்தின் சனத்தொகையில் 50 வீதமானவர்கள் பெண்களாக உள்ளனர் என யாழ். மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார். யாழ். சமூக செயற்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் மகளிர் தின நிகழ்வுகள் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. அதில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ். மாவட்டத்தின் மொத்த சனத்தொகை 6 இலட்சத்து 15 ஆயிரமாக உள்ள நிலையில் பெண்களின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சமாக உள்ளது. எனவே யாழ். மாவட்டத்தைப்பொறுத்தவரையில் மொத்த சனத்தொகையில் 50 வீதமானவர்கள் பெண்களாகவே உள்ளனர்.எனவே இங்கு ஆண்களது எண்ணிக்கையும் பெண்களின் எண்ணிக்கையும் சமனாகவே உள்ளது. இதேவேளை, கடந்த கால போரினாலும் இயற்கையினாலும்…
-
- 4 replies
- 456 views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- நான் அனைவருக்கும் சொந்தமானவன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டனில் வைத்து தெரிவித்துள்ளார். தற்போது பிரித்தானியாவிற்கு விஜயம் செய்துள்ள மைத்திரிபால சிறிசேன, இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். இலங்கையில் காணப்படும் அரசியல் கலாச்சாரத்திற்கு அமைய தேசிய அரசாங்கமொன்றை அமைப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல என அவர் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் பிரித்தானிய கிளைக் குழுவினருடன் இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது. தாம் ஓர் பொது வேட்பாளர் எனவும் தாம் அனைவருக்கும் சொந்தமானவர் எனவும் தெரிவித்துள்ளார். எந்தவொரு தனித் தரப்பிற்கும் விசேடமாக சலுகைகளை வழங்கவோ ஒரு தரப்பினை ஒடுக்குமுறைக்கு உட்படுத்தவோ போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ள…
-
- 1 reply
- 514 views
-
-
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மறுசீரமைக்கும் பொறுப்பு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை முற்றுமுழுதாக மறுசீரமைத்து புதிய திட்டங்களை அமுல்படுத்தும் பொறுப்பு சந்திரிக்காவிடம் வழங்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கை மற்றும் திட்டமிடல் கமிட்யின் தலைவியாக சந்திரிக்கா நியமிக்கப்பட்டுள்ளார். அதன் செயலாளராக ஹொரணை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விதுர விக்ரமநாயக்க தெரிவு செய்யப்பட்டு உள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிர்வாகச் செயலாளர் எஸ்.எச். ஆரியசேன தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் கட்சியின் தேவைகளை கருத்திற் கொள்ளாது. தனிப்பட்ட தேவைகளை பூர்த்தி செய்ய முயற்சிக்கப்பட்…
-
- 1 reply
- 662 views
-
-
நாட்டை பிளவுபடுத்த வேண்டும் என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கையன்று – சஜித் நாட்டை பிளவுபடுத்த வேண்டும் என்ற நோக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி செயற்படவில்லை என வீடமைப்பு மற்றும் சமூர்த்தி அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். சம உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான கோரிக்கையாக அமைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார். அண்மையில் முல்கிரியாகலவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேற்குலக நாடுகளில் வாழ்ந்து வரும் தமிழீழ விடுதலைப் புலி குழுக்கள் தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு எதிராக போராட்டங்களை நடத்தியும், உருவ பொம்மைகளை எரித்தும் வருவதாகக் …
-
- 0 replies
- 452 views
-
-
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ கைது செய்யப்படுவதனை பிரதமர் ரணில் விக்ரமசிஙக் தடுத்து நிறுத்தினார் என கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. கோதபாய ராஜபக்ஸ உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்வது குறித்து சட்ட மா அதிபர் திணைக்களம் பிரதமரின் ஆலோசனையை கோரியதாகத் தெரிவிக்கப்படுகிறது. கைது செய்து விசாரணை செய்வதனை தவிர்ந்த ஏனைய அனைத்து விசாரணைகளையும் செய்யுமாறு ரணில் பணிப்புரை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கோதபாய ராஜபக்ஸ கைது செய்யப்பட்டால் அது தற்போதைய அரசாங்கத்திற்கு நெருக்கடிகளை ஏற்படுத்தக் கூடுமென பிரதமர் தெரிவித்துள்ளார். இதனால் கைது செய்வதனை தவிர்ந்த ஏனைய அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் எடுக்குமாறு கோரியுள்ளார். பாதுகாப்புச் செயலாளர் …
-
- 0 replies
- 577 views
-
-
யாழ்ப்பாணத்துக்கும் வருகிறேன்- ருவிட்டரில் மோடி MAR 09, 2015 | 0:30by அ.எழிலரசன்in செய்திகள் இந்தவாரம் சிறிலங்காவுக்கு மேற்கொள்ளவுள்ள பயணம் தொடர்பாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்றிரவு ருவிட்டரில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். “இந்தவாரம் நான் சீசெல்ஸ், மொறிசியஸ், சிறிலங்காவுக்குப் பயணம் செய்யவுள்ளேன். எனது பயணத்தின் மூலம் இந்த நட்புநாடுகளுடனான எமது உறவுகளை வலுப்படுத்திக் கொள்வதற்கு எதிர்பார்க்கிறேன். இந்தப் பயணம் சிறிலங்கா – இந்திய உறவுகளை வலுப்படுத்தும் என்ற நம்பிக்கையுடனும் மகிழ்ச்சியுடனும், சிறிலங்காவுக்குச் செல்கிறேன். தவிர, சிறிலங்கா நாடாளுமன்றத்தில் உரையாற்றவுள்ளதுடன், நான் மகாபோதி சமூகத்துக்கும், யாழ்ப்பாணத்துக்கும் பயணம் செய்யவுள்ளேன்” என்று குறிப்ப…
-
- 16 replies
- 1.3k views
-
-
அடங்குபவர்கள் அடக்கப்படுவீர்கள் . அடங்கினால் அடக்குமுறை இன்னும் பிரயோகிக்கப்படும் நீங்கள் உரிமைக்காக போராட வேண்டும் என யாழ். மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் மகளிர் தின நிகழ்வில் கலந்து கொண்டு தெரிவித்தார் . யாழ். சமூக செயற்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் மகளிர் தின நிகழ்வுகள் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. அதில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், மகளிர்களுக்கான உரிமைகள் கிடைக்கவில்லை என்பதற்கு போராட்டங்களும் விழிப்புணர்வுகளும் மகளிர் தினங்களும் ஆதாரப்படுத்துகின்றன. அதனைவிட எமது இந்து சமயத்திலும் மகளிர் பெருமை தத்துவங்கள் ரீதியாக காட்டப்படுகின்றது . அத்துடன் பிரதேச ரீதியில் இருக்கும் …
-
- 1 reply
- 424 views
-
-
'கச்சதீவு இலங்கைக்கே சொந்தம். எங்கள் மீனவர்கள் வாழ்வுரிமையை பறிக்கும் வகையில் இலங்கைக் கடல் எல்லைக்குள் அத்துமீறும் தமிழக மீனவர்கள் சுடப்பட்டால் எங்கள் சட்டம் ஏற்றுக்கொள்ளும்' என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்தியாவின் 'தந்தி' தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இருநாட்டு மீனவர்கள் பிரச்சினை குறித்து தெரிவித்துள்ள இந்தக் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது, இந்திய - இலங்கை மீனவர்கள் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும். இருப்ப…
-
- 52 replies
- 3.4k views
-
-
திருக்கேதீஸ்வரம் மாந்தை பகுதி மக்களை எதிர்வரும் 25ஆம் திகதிவரை குடியேற வேண்டாம் என புதைபொருள் ஆராட்சி திணைக்களத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திருக்கேதீஸ்வரம் மாந்தை பகுதியில் பூர்வீகமாக வாழ்ந்து வந்த மக்கள் அவர்களது சொந்த காணிகளை நேற்று துப்புரவு செய்து குடியேற முற்பட்டனர். அதனை பொலிசார் தடுத்து நிறுத்தியிருந்தனர். பொலிசாரிடம் தமது பூர்வீக காணி தொடர்பாக குறித்த கிராம மக்கள் தெரிவித்ததை அடுத்து புதைபொருள் ஆராட்சி திணைக்கள அதிகாரிகளை பகுதிக்கு வரவழைத்து விடயம் தொடர்பாக ஆராய ஒழுங்கு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து துப்புரவு செய்யும் பணிகள் நிறுத்தப்பட்டன. குறித்த விடயம் தொடர்பாக இன்று அப்பகுதிக்கு வந்திருந்த புதைபொருள் ஆராட்சி திணைக்கள அதிகாரி…
-
- 0 replies
- 268 views
-
-
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வடபகுதிக்கான பயண ஒழுங்கை இறுதி செய்வதற்காக இந்திய அதிகாரிகள் குழுவொன்று இன்றைய தினம் வடமாகாணத்துக்கு வருகை தரவுள்ளது. இந்தக் குழுவில் பாதுகாப்புத்துறை சார்ந்தவர்களும், வெளிவிவகார அமைச்சைச் சார்ந்தவர்களும் இடம் பெற்றிருப்பர். இந்தியப் பிரதமர் இரு நாள் பயணமாக எதிர்வரும் 13 ஆம் திகதி கொழும்புக்கு வருகிறார். இந்தப் பயணத்தின்போது வடபகுதிக்கும் அவர் வரவுள்ளார். தற்போதைய பயண ஒழுங்கில், எதிர்வரும் 14 ஆம் திகதி சனிக்கிழமை வடக்கு மாகாணத்திற்கு வருவதற்கான ஒழுங்குகள் குறிக்கப்பட்டுள்ளன. கொழும்பிலிருந்து சிறப்பு விமானத்தில் அநுராதபுரத்துக்கு வருகை தரும் மோடி அங்கு, மகாபோதியில் வழிபாடு நடத்தவுள்ளார். அதன் பின்னர் அங்கிருந்து மன்னார் மாவட்டத்தி…
-
- 0 replies
- 263 views
-
-
முன்னாள் போராளிகள், மாவீரர் குடும்பங்கள், தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவியைப் பொறுவதற்கு இதுவரையில் 40 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர். இந்தப் பதிவுகளை மேற் கொள்வதற்கான கால எல்லை இந்த மாதம் 31ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளையுடன் பதிவுகளுக்கான காலம் முடிவடைவதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. உதவிகளைப் பெறப் பதிவு செய்பவர்களுக்கு கொழும்பு அரசின் புலனாய்வாளர்கள் எந்த அச்சுறுத்தல்களையும் விடுக்கவில்லை என்பதால் உதவியை எதிர்பார்க்கும் ஏனையோரும் பதிவுகளை மேற்கொள்ளலாம் என்று அறிவித்துள்ளார் வடக்கு மாகாண சபை மீன்பிடித்துறை அமைச்சர் பா.டெனீஸ்வரன். வடக்கு மாகாண மீன்பிடி, போக்குவரத்து, வீதி அபிவிருத்தி, வர்த்தக, வாணிப, கிரா…
-
- 0 replies
- 261 views
-
-
ஜப்பானிய அரசாங்கத்தின் உதவியுடன் அனல் மின் நிலையமொன்று அமைக்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. 500 மெகாவொட் மின்சாரத்தை தேசிய நீரோட்டத்தில் சேர்க்கும் நோக்கில் இந்த புதிய மின் திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது. இந்திய நிதி உதவியின் கீழ் அமைக்கப்பட்டு வரும் சம்பூர் அனல் மின் நிலையத்திற்கு அருகாமையில் இந்த புதிய அனல் மின் நிலையம் அமைக்கப்படவுள்ளது. அனல் மின் நிலையத்தை அமைக்க ஜப்பான் கடனுதவி வழங்க உள்ளதாக மின்வலு எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இந்த அனல் மின் நிலையத்திற்கு ஜப்பான் கடனுதவி வழங்கிய போதிலும் நிறுவனத்தின் உரிமை முழுக்க முழுக்க இலங்கை மின்சார சபையிடம் காணப்படும். மின் நிலையத்தை அமைப்பதற்கு 800 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவ…
-
- 0 replies
- 311 views
-
-
கோத்தா, அட்மிரல் சோமதிலக திசநாயக்க உள்ளிட்டோர் வெளிநாடு செல்லத் தடை MAR 09, 2015 | 11:37by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச மற்றும், முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் சோமதிலக திசநாயக்க உள்ளிட்ட நால்வர் வெளிநாடு செல்வதற்கு காலி நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. காலி துறைமுகத்தில் கைப்பற்றப்பட்ட மிதக்கும் ஆயுதக் களஞ்சியம் தொடர்பான வழக்கு இன்று காலி நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவன்ற் கார்டே நிறுவனத்தின் இந்த ஆயுதக் களஞ்சியம் தொடர்பான வழக்கு முடியும் வரை, கோத்தாபய ராஜபக்ச உள்ளிட்டவர்களை வெளிநாடு செல்லத் தடை விதிக்குமாறு, குற்றப்புலனாய்வுத் திண…
-
- 0 replies
- 442 views
-
-
இலங்கையின் வாவிகளில் நீளத்தில் இரண்டாவது இடத்தைப் பெற்ற மட்டக்களப்பு வாவியில் மீன்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதனால், வாவித் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர். உல்லாசப் பயணிகளை அதிகமாகக் கவரும் நண்டு மற்றும் இறால் என்பன முற்றாக இல்லாமல் உள்ளதனால், வளர்ப்பு இறால்கள் கிலோ ரூபாய் 1,000 முதல் 1,200 வரை விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் வறுமைக் கோட்டின் கீழ் உள்ள குடும்பங்களின் தலைவர்கள் தங்கள் பிள்ளைகள் சகிதம் தூண்டிலில் மீன்பிடித்து தமது அன்றாட உணவுத் தேவைக்குப் பயன்படுத்துகின்றனர். வறுமை நிலையில் உள்ள மாணவர்கள் கூட மீன்களைப் பிடித்து விற்பனை செய்வதன் மூலம் சேகரிக்கப்படும் பணத்தை தமது கல்விச் செலவுக்காக பயன்படுத்துவதாகத் தெரிவி…
-
- 2 replies
- 494 views
-
-
இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பு கொழும்பில் நேற்று நடைபெற்றது. இந்தச் சந்திப்பில் கலங்துரையாடப்பட்ட விடயங்கள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு: மீள்குடியேற்றம் என்பது முழுமையாக நடைபெற வேண்டும். சொற்ப காணிகளை விடுவிப்பதாக அரசாங்கம் அறிவித்த போதும் இதுவரை ஒரு துண்டு காணி கூட விடுவிக்கப்படவில்லை. இந்தியாவில் உள்ள தமிழ்மக்கள் மீளத்திரும்பி வாழ்வதற்கு முழுமையான மீள்குடியேற்றம் நடைபெறவேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளோம். ஜே.வி.பி யினருக்கு பொதுமன்னிப்பு வழங்கியதைப் போன்று அனைத்து தமிழ் அரசியல் கைதிகளுக்கும் பொதுமன்னிப்பு …
-
- 5 replies
- 495 views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒற்றையாட்சிக்கு எதிரானதாயின் இங்கிலாந்தில் உள்ள விடுதலைப்புலிகளுக்கு சார்பானவர்கள் இரா. சம்பந்தனதும் சுமந்திரனதும் உருவ பொம்மைகளை ஏன் எரித்தனர் என வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சர் சஜித் பிரேமதாஸ கேள்வியெழுப்பினார். தமிழ் தேசிய கூட்டமைப்பு நாட்டைப் பிளவு படுத்தவோ வேறு இராஜ்ஜியத்தை உருவாக்கவோ முன் வராது என்றும் சுட்டிக்காட்டினார். அமைச்சர் சஜித் பிரேமதாஸவின் நிதி உதவியினால் முல்கிரிகல தேர்தல் தொகுதியில் அமைக்கப்பட்ட ஹதுகல விகாரையின் கட்டிடமொன்றை திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் அங்கு கருத்து தெரிவிக்கையில், இன, மத, ஜா…
-
- 2 replies
- 541 views
-
-
கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை பாதுகாக்க சீனா இராஜதந்திர ரீதியாக முயற்சி MAR 09, 2015by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்கா அரசாங்கத்தினால், இடைநிறுத்தப்பட்ட 1.4 பில்லியன் டொலர் பெறுமதியான கொழும்பு துறைமுக நகரத் திட்ட உடன்பாட்டைப் பாதுகாப்பதற்கு, சீனா தனது இராஜதந்திர முயற்சிகளை ஆரம்பித்துள்ளது. இந்த திட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்த சிறிலங்கா அமைச்சரவை கடந்த புதன்கிழமை முடிவெடுத்திருந்தது. இதையடுத்து, அண்மையில் பொறுப்பேற்ற சீனத் தூதுவர் யி ஜியான்லியாங் கடந்த வியாழக்கிழமை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும், வெள்ளிக்கிழமை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவையும் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார். இதையடுத்து. கொழும்பிலுள்ள சீனத் தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், சீன- ச…
-
- 2 replies
- 541 views
-
-
அநாமதேயிகளின் அட்டகாசமே இது என்கிறது இளைஞர் அணி!! தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைக் கேலிசெய்து, வாசகங்கள் எழுதப்பட்ட உருவப்பொம்மைகள் யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களில் கட்டிவைக்கப்பட்டிருந்தன. நேற்றிரவு இளைஞர்கள் பலர் இந்த உருவப்பொம்மைகளை வீதிகளிலும், தமிழரசுக்கட்சி அலுவலகப் பகுதிகளிலும் கட்டிவைத்துள்ளனர். அந்த உருவப்பொம்மைகளில் எழுதப்பட்டுள்ள வாசகங்களுக்கு கீழே தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணி என்று உரிமை கோரப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால யாழ்ப்பணம் வந்து திரும்பிய நிலையில், வடமராட்சி, தென்மராட்சி மற்றும் யாழ்.நகர் பகுதியென பரவலாக இந்த உருவப்பொம்மைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. வடமராட்சியில் கரவெட்டி, மூத்தவிநாயகர் கோவிலடியில் ச…
-
- 22 replies
- 1.4k views
-
-
மோடியின் வருகையின் போது ஜெயகுமாரிக்கு விடுதலை MAR 09, 2015 | 1:47by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்தவாரம் சிறிலங்காவுக்கு மேற்கொள்ளும் பயணத்தின் போது, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதாகி தடுத்து வைக்கப்பட்டிருக்கும், பாலேந்திரன் ஜெயகுமாரியை சிறிலங்கா அரசாங்கம் விடுதலை செய்யக் கூடும் என்று பிரிஐ செய்தி வெளியிட்டுள்ளது. ஒரு ஆண்டுக்கு முன்னர், கிளிநொச்சியில் கைது செய்யப்பட்ட பாலேந்திரன் ஜெயகுமாரி, பூசா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். அண்மையில் அவர் வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இவரையும், முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் கைது செய்யப்பட்டு குற்றச்சாட்டுகளின்றி தடுத்து வைக்கப்பட…
-
- 0 replies
- 673 views
-
-
தேசிய நல்லிணக்க முயற்சிக்கு பிரித்தானிய பிரதமரிடம் உதவி கோரவுள்ளார் மைத்திரி MAR 09, 2015 | 0:12by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் போருக்குப் பிந்திய தேசிய நல்லிணக்க முயற்சிகளுக்கு, பிரித்தானியாவில் உள்ள செல்வாக்குப் பெற்ற புலம்பெயர் தமிழ் அமைப்புகளை ஆதரவை திரட்டுவதற்கு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும் அவரது அரசாங்கமும், பிரித்தானியாவின் உதவியைக் கோரவுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. தற்போது பிரித்தானியா சென்றுள்ள, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும், பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூனுடன் நடத்தவுள்ள பேச்சுக்களின் போது, புலம்பெயர் தமிழர் அமைப்புகளின் ஆதரவை பெறுவதற்கான வழிமுறை…
-
- 0 replies
- 353 views
-
-
கருணாவை போராட்டத்திலிருந்து பிரித்து எங்கள் மண்ணை சிதைப்பதற்கு முக்கிய பங்காற்றியவர் ரணில்: சிறீதரன் எம்.பி [ ஞாயிற்றுக்கிழமை, 08 மார்ச் 2015, 03:31.33 PM GMT ] புதிய அரசாங்கம் வந்து அறுபது நாட்களுக்கு மேல் கடந்துவிட்டன. தமிழர்கள் வாழ்வில் துளியளவும் மாற்றங்கள் ஏற்பட்டதாக தெரியவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்தார். சர்வதேச பெண்கள் எழுச்சி நாள் இன்று கிளிநொச்சி பளையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மகளிர் அணியால் முன்னெடுகப்பட்டது. இதில் கலந்து கொண்ட பா.உறுப்பினர் சி.சிறீதரன் தனது உரையில், தன்னெழுச்சியாக திரண்டு வந்திருக்கின்ற இன்றைய பெண்கள் நாளின் திரட்சியை பார்க்கின்றபோது நமது நாளைய நாட்கள் மீது நம்பிக்கை எழுகின்றது. எமது பெண்கள் தாய்மார்கள் இன்றைக்…
-
- 0 replies
- 445 views
-
-
சிறிலங்கா ஆட்சி மாற்றத்தின் பின் சீனா எதிர்கொள்ளும் சவால்கள் – கேணல் ஹரிகரன் MAR 08, 2015 | 8:33by நித்தியபாரதிin ஆய்வு கட்டுரைகள் உலகின் உண்மையான அரசியலின் பிரகாரம், தனது மூலோபாய வெளிக்குள் சீனா உள்நுழைவதானது இந்திய மாக்கடல் பிராந்தியத்திலும் சிறிலங்காவிலும் இந்தியா தனது மேலாதிக்கத்தை இழப்பதற்கு வழிவகுக்கும் என இந்தியா கருதுகிறது. இவ்வாறு eurasiareview.com இணையத்தில் கேணல் ஹரிகரன் எழுதியுள்ள ஆய்வில் குறிப்பிட்டுள்ளார். இதனை ‘புதினப்பலகை’க்காக மொழியாக்கம் செய்துள்ளவர் ‘நித்தியபாரதி’. ஜனவரி 2015 இல் இடம்பெற்ற அதிபர் தேர்தலில், அதிபராக இருந்த மகிந்த ராஜபக்சவை எதிர்த்துப் போட்டியிட்ட எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை இலங்கைவாழ் மக்கள் தமது புதிய அதிபராகத்…
-
- 0 replies
- 330 views
-
-
கொழும்பு மாவட்டத்தின் மாநகர பிரதேச எல்லைகளுக்குள் மட்டக்குளி முதல் தெஹிவளை வரை அருள்பாலிக்கின்ற பெரிய இந்து ஆலயங்கள், கொழும்பு மாவட்டத்தில் அமைந்துள்ள தமிழ்-இந்து பாடசாலைகளின் வளர்ச்சிக்கு உதவிட வேண்டும். இந்து ஆலயங்களின் அறங்காவலர் சபையினர், தமது ஆலய வருமானத்தின் ஒரு குறிப்பிட்ட விகிதத்தை இந்த நல்ல நோக்கத்துக்கு ஒதுக்கித்தர முன்வர வேண்டும். இதற்காக கொழும்பின் சகல ஆலயங்களின் அறங்காவல் பிரதிநிதிகளை உள்வாங்கி ஒரு அறக்கட்டளை அமைக்கப்பட வேண்டும். எந்த பாடசாலைக்கு என்ன தேவை, எந்த பணிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் போன்ற விபரங்களை திரட்டி தந்து இந்த அறக்கட்டளைக்கு உதவிட என்னால் முடியும். ஆலய வருமானத்தின் ஒரு சிறுபகுதியை கொண்டு ஏழை பிள்ளைகளின் அறிவுக்கண்களை திறந்…
-
- 4 replies
- 571 views
-
-
சர்வதேச மகளிர் தினமான இன்று வவுனியாவில் 85 வயதிலும் உழைத்து வாழும் பூபதி எனும் பெண்மணியை தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பு கௌரவித்துள்ளது. வவுனியாவில் இருந்து நெளுக்குளம் ஊடாக செட்டிகுளம் செல்லும் வழியில் பாவற்குளம் பாடசாலைக்கு முன்பாக ஒரு சிறிய தேநீர்கடை நடத்தி வரும் அவரே இன்று கௌரவிக்கப்பட்டார். குருநாகலில் பிறந்து 1958இல் வவுனியா பாவக்குளத்தில் குடியேறி சிவசுப்ரமணியம் என்பவரை மணந்த இவர் 10 பிள்ளைகளின் தாயாவார். 3 பிள்ளைகள் ஐரோப்பிய நாடுகளிலும் மற்றைய பிள்ளைகள் சிறப்பாக வாழும் போதிலும் யாரின் கையையும் எதிர்பார்க்காமல் வாழ வேண்டும் என்ற வைராக்கியத்துடன் வாழும் இப் பெண்மணியை கௌரவிப்பதில் பெருமை கொள்வதாக இவ் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த நிகழ்வில் தமிழ் …
-
- 0 replies
- 329 views
-
-
இலங்கை- சீனா ஒப்பந்தங்கள் மற்றும் வணிக ஒப்பந்தங்களை மதித்து முதலீட்டாளர்களின் நலனை பாதுகாக்குமாறு இலங்கை அரசாங்கத்திடம் சீனா வலியுறுத்தியுள்ளது. சீனத் தூதுவர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோரை சந்தித்து கலந்துரையாடிய போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். குறித்த சந்திப்பு நேற்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த புதன்கிழமை கூடிய அமைச்சரவையில், சீனாவினால் பெரும் செலவில் நிர்மாணிக்கப்பட்டு வந்த துறைமுக நகரத் திட்டத்தை, தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது. இதேவேளை, இலங்கை அமைச்சரவையின் இந்த முடிவை ஏற்றுக் கொள்வதாகவும் இலங்கை அரசாங்கத்துக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவதாகவும் துறைமுக நகர் திட்டத்தை முன்னெட…
-
- 0 replies
- 304 views
-