ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143538 topics in this forum
-
கடற்பாதுகாப்பு நிறுவனங்கள் சர்வதேச ஆயுத வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளன. கடந்த காலங்களில் இலங்கையில் செயற்பட்டு வந்த தனியார் கடற் பாதுகாப்பு நிறுவனங்கள் சர்வதேச ஆயுத கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டுள்ளன. குறித்த கடற் பாதுகாப்பு நிறுவனங்கள் எகிப்து மற்றும் யேமன் சட்டவிரோத ஆயுத வர்த்தகர்களுக்கு ஆயுதங்களை வழங்கியமைக்கான ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. 2012ம் ஆண்டு ஜூன் மாதம் 27ம் திகதி தனியார் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த 195 ஆயுதங்கள் காணாமல் போயுள்ளன. சட்டவிரோத ஆயுதக் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் இலங்கை கறுப்புப் பட்டியலிடப்பட இருந்த நிலையில் காணாமல் போன ஆயுதங்களில் 181 ஆயுதங்கள் மீள மீட்கப்பட்டிருந்தன. மேலும் 14 ஆயுதங்கள் இன்னமும் காணமவில்லை எனத் தெர…
-
- 0 replies
- 376 views
-
-
உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக கூறி நாட்டைவிட்டு வெளியேறி அவுஸ்திரேலியாவில் வாழ்ந்துவந்த முன்னாள் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் நிஷாந்த ஜயக்கொடி, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக நாடுதிரும்பினார். கடந்த அரசாங்கத்தின் போது உரிய முறையில் தன்னால் கடமையாற்ற முடியவில்லை என்றும் தனக்கு மரண அச்சுறுத்தல் இருந்ததையடுத்தே அவுஸ்திரேலியாவுக்கு சென்றதாக அவர் தெரிவித்தார். புதிய அரசாங்கத்தின் அரசியல் நிலைமை நன்றாக இருப்பதனால் இந்த நாட்டுக்கு மீண்டும் திருப்பியதுடன் கடமைகளை மீண்டும் பொறுப்பேற்பதற்கு எண்ணியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். http://www.tamilmirror.lk/140623
-
- 1 reply
- 608 views
-
-
'உண்மை வெளிப்படுத்தப்பட வேண்டும் எனக் கோருவது ஒருபோதும் இனவாதமாக முடியாது' எனத் தெரிவித்திருக்கும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், 'உண்மையை முதலில் அறிந்தால் தான் நல்லெண்ணம் பிறக்க வழி வகுக்கலாம்' எனவும் சுட்டிக்காட்டியிருக்கின்றார். வடமாகாண சபையில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட இனப்படுகொலை தீர்மானம் குறித்து, 'நல்லாட்சிமிக்க அரசாங்கத்துடன் விளையாட வேண்டாம். இதுவே இனவாதிகளுக்கான எனது இறுதி எச்சரிக்கை' என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார். இதற்குப் பதிலளிக்கும் முகமாக முதலமைச்சர் விக்னேஸ்வரன், நேற்று புதன்கிழமை கருத்து வெளியிட்ட போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர், தொடர்ந்து கருத்து வெளியிடுகையில், 'எம் மக்களுக்கு நடந்ததை வெளியிடுவதை இனவாத…
-
- 0 replies
- 404 views
-
-
ஊழல், மோசடிகளுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக அரசாங்கம் சட்டத்தை செயல்படுத்துவதை தாமதித்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு எதிரில் ஜே.வி.பி. இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது. ஆர்ப்பாட்டத்தில் ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வா, பிரசார செயலாளர் விஜித ஹேரத் உட்பட பலர் கலந்து கொண்டனர். இங்கு கருத்து வெளியிட்ட விஜித ஹேரத், ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதன் காரணமாகவே ராஜபக்ச குடும்பம் மற்றும் அவர்களின் சகாக்களின் அரசாங்கம் தோற்கடிக்கப்பட்டது. இந்த குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த தற்போதைய அரசாங்கம் தவறிய…
-
- 0 replies
- 338 views
-
-
எந்த அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படாமல் தமிழகத்தில் உள்ள அகதிகளை அழைத்து வர முடியாது என மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார். வவுனியாவுக்கு விஜயம் செய்த அமைச்சரிடம், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர்- இந்தியாவில் இருந்து வருவதற்கு 20 முதல் 30 வீதமானவர்கள் மாத்திரமே விருப்பம் தெரிவித்துள்ளனர். அவர்கள் இங்கு வந்து வசிக்க தேவையான அனைத்து வசதிகளும் மேற்கொள்ளப்பட்ட பின்னரே அவர்கள் இங்கு வரவழைக்கப்படுவர். அதுமட்டுமின்றி, இந்தியாவிலிருந்து அகதிகளை அழைத்து வருவதற்கு முன்னர் வவுனியா, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளில் உள்ளவர…
-
- 0 replies
- 345 views
-
-
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைக்கான உத்தியோகபூர்வ வருகையின்போது தலைமன்னார் பகுதிக்குச் சென்று மதவாச்சி - மன்னார் வரையான ரயில் சேவையை ஆரம்பித்து வைப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்திய பிரதமர் மோடி இலங்கை அரசின் அழைப்பையேற்று விரைவில் இலங்கைக்கு வருவதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்திய பிரதமர் இலங்கை வரும் சமயம் தலைமன்னார் பியர் பகுதிக்கும் வரவுள்ளார். இதற்கான முன்னேற்பாடுகளும் இடம்பெற்று வருகின்றன. இதற்கமைய கடந்த செவ்வாய்கிழமை இலங்கைக்கான இந்திய தூதரக அதிகாரிகளும் பாதுகாப்பு உயர் அதிகாரிகளும் மற்றும் மன்னார் மாவட்ட செயலக அதிகாரிகளும் தலைமன்னார் பியர் பகுதிக்குச் சென்று அங்குள்ள நிலைமைகளைப் பார்வையிட்டதுடன் தலைமன்னார் பியர் துறைமு…
-
- 0 replies
- 359 views
-
-
நிலத்தடி நீரில் கழிவு ஒயில் கலந்த இடத்தை சரியாக இனங்காணவும் கழிவு ஒயில் தேங்கி இருப்பின் அதன் அமைப்பிடத்தை கண்டறிவதற்கும் தரையை ஊடுருவி ஆராயும் ரேடார் அடுத்த வாரம் யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவரப்படவுள்ளதாக சுற்றுச்சூழல் அமைச்சர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். ரேடாரைப் பயன்படுத்துவது தொடர்பிலான கள நிலமைகளைக் ஆராய்வதற்காக நோர்வே நாட்டு நிபுணர்கள் நேற்று யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்திருந்ததுடன் சுற்றுச்சூழல் அமைச்சரையும் அவரது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர். சந்திப்பு தொடர்பில் அமைச்சர் ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள செய்திக் குறிப்பிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வலிகாமம் பிரதேசத்தில் நிலத்தடி நீரில் க…
-
- 0 replies
- 342 views
-
-
இலங்கை தொடர்பான போர்க்குற்ற விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படுவது நியாயமான காரணங்களின் அடிப்படையிலேயே ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஐ.நா மனித உரிமை பேரவையின் 28 வது கூட்டத் தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில், அறிக்கை சமர்ப்பிக்கப்படுவது ஒத்திவைக்கப்பட்டமை குறித்து எழுந்து வரும் எதிர்ப்புகளுக்கு பதிலளிக்கும் போதே ஐ.நாவுக்கான மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் யோகிம் ரகர் ஜகத் இதனை கூறியுள்ளார். 2014 ஆம் ஆண்டு பாலஸ்தீனத்தின் காஸா பள்ளத்தாக்கில் இடம்பெற்ற மோதல்கள் குறித்து விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட குழுவின் தலைவர் அந்த பதவியில் இருந்து விலகியமை, இலங்கையின் மோதல்கள் சம்பந்தமான அறிக்கை மிகவும் முக்கியமானது என்பதுடன் தர்க்க காரணங்களின…
-
- 0 replies
- 269 views
-
-
இன்று காலை 10 மணியளவில் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பகுதியில் அப்பகுதி மீனவர்கள் தொழில் செய்துகொண்டிருந்தபோது அங்கு சென்ற இந்திய மீனவர்கள் கடலில் வைத்து கூரிய ஆயுதங்கள் மற்றும் கொட்டன்களால் வடமராட்சி கிழக்கு மீனவர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தியுள்ளனர். இதே வேளை நேற்று இரவு வடமாராட்சி கிழக்கு கடற்பகுதியில் மீனவர்களின் பல இலட்சம் பெறுமதியான வலைகள் இந்திய மீனவர்களால் அறுத்தெறியப்பட்டுள்ளன. இந்தச்சம்பவங்களை கண்டித்து இன்று அப்பகுதி மீனவர்கள் கடற்கரையில் திரண்டு இந்த பிரச்சனைக்கு தீர்வு தரும்படி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் அங்கு பா.உறுப்பினர் சி.சிறீதரனுக்கு வடமராட்சி கிழக்கு கட்சி அமைப்பாளர் சூரியகாந் ஊடாக மகஜர் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர். …
-
- 0 replies
- 350 views
-
-
பல்கலை போராட்டம் பெருவெற்றி! திரண்டது தமிழ் சமூகம்! யாழ்.பல்கலைக்கழக சமூகத்தின் மிகப்பெரும் போராட்டம் வெற்றி பெற்றுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற இன அழிப்பு படுகொலைகள் தொடர்பிலான ஐ.நா விசாரணை அறிக்கையை வெளியிடுமாறு வலியுறுத்தி கவனயீர்ப்புப் போராட்டம் காலை 10 மணியளவினில் பல்கலைக்கழக முன்றலில் ஆரம்பமாகியிருந்தது. யாழ்.பல்கலைக்கழக சமூகம் மற்றும் பொது ஜன அமைப்புக்களும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இப்போராட்டம் பல்கலைக்கழகத்தில் இருந்து ஆரம்பமாகி பேரணியாக பலாலி வீதியை சென்றடைந்து பின்னர் கந்தர்மடம் சந்தியினூடாக நல்லூர் வீதியை வந்தடைந்திருந்தது. நல்லூர் ஆலய முன்றலில் ஒன்று கூடிய போராட்டகாரர்கள் ஜ.நாவிற்கான தமது மகஜரை எடுத்து சென்று கையளிக்க மன்னார் ஆயர் அதிவண …
-
- 1 reply
- 505 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபர்கள் தொடர்பில் விரைவில் நடவடிக்கை உள்ளதாக தெரிவிக்கப்படகிறது. ஜெயகுமாரி பாலசந்திரன் உள்ளிட்ட தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபர்களுக்கு வழக்குத் தொடர்வது அல்லது விரைவில் விடுதலை செய்தல் என்ற அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள மேலதிக சொலிசுட்டர் ஜெனரல் ஒருவரின் தலைமயில் கமிட்டி ஒன்று நிறுவப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். லண்டனுக்கு விஜயம் செய்துள்ள அமைச்சர் பி.பி.சீ சந்தேசய செய்திப் பிரிவிற்கு இதனைக் குறிப்பிட்டுள்ளார். குற்றச்சாட்டுக்கள் இன்றி 182 தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபர்கள் வெலிக்கடைச் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். http:/…
-
- 1 reply
- 417 views
-
-
யுத்தக் குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர் பில் உள்ளக விசாரணை நடத்தப்படுவது அத்தியாவசியமானதாகும். இதனை விளங்கிக்கொள்ளாமல் பலரும் இந்த உள்ளக விசாரணை யில் நம்பிக்கையில்லையென்று தெரிவித்துவருகின்றனர். ஐ.நா.மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் 10ஆவது பந்தியில் சர்வதேச விசாரணையும் உள்ளக விசாரணையும் நடத்தப்படவேண்டும் என்றே கூறப்பட்டிருக்கிறது என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார். தமிழ் மக்களுக்கு நடந்த அநீதிகள் அதன் உண்மைகள் முழுமையாக வெளிவர வேண்டும் என்பதே எம் அனைவரதும் ஒரே எதிர்பார்ப்பாகும்.எனவே உள்ளக விசாரணையானத…
-
- 2 replies
- 532 views
-
-
முல்லைத்தீவு கடலில் இந்திய றோலர்களின் அத்துமீறிய மீன்பிடி, புதன்கிழமையும்(25) தொடர்ந்து இடம்பெற்று வருவதாக முல்லைத்தீவு மாவட்டக் கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசத்தலைவர் அந்தோனிப்பிள்ளை மரியராசா, வியாழக்கிழமை (26) தமிழ்மிரருக்குத் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், முல்லைத்தீவில் கொக்குளாய் தொடக்கம் நல்லதண்ணீர் தொடுவாய் வரையான எமது சமாச எல்லைப் பரப்பில் 26 சங்கங்கள் உள்ளன. சங்கங்களில் 6000 குடும்பங்கள் கடற்றொழிலையே நம்பி வாழ்கின்றன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியாவுக்கு சென்ற நாளில் இருந்து இந்திய றோலர்களின் அத்துமீறல் இங்கு அதிகரித்துள்ளது. நேற்றும் (புதன்கிழமை) கரையிலிருந்து 2 கிலோமீற்றர் தொலைவில் இந்திய றோலர்கள் அத்துமீறி மீன் பிடித்தன. ம…
-
- 0 replies
- 311 views
-
-
யுத்தம் முடிவடைந்து 6 வருடங்கள் நிறைவடையும் நிலையிலும் யுத்த பாதிப்புக்களும் அதன் அவலங்களும் இன்னும் மக்கள் வாழ்வியலில் இருந்து அகலவில்லை. ஆட்சி மாற்றத்தின் பின்னாவது தமக்கு நல்லது நடக்கும் என எதிர்பார்த்த மக்கள் அதற்காக தமது வாக்குகளையும் பயன்படுத்தி இருந்தனர். மைத்திரி யுகம் ஆரம்பித்து அதன் 100 நாள் வேலைத்திட்டத்தில் அரைவாசி நாட்களும் நிறைவடையப் போகிறது. ஆனால் அந்த மக்களின் எதிர்பார்ப்புக்கள் மட்டும் விடை இன்றி தொடர்கிறது. அத்தகைய ஒரு கிராமமே மருதங்குளம். வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கிராமமே மருதங்குளம். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அமையாரின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற முக்கியத்துவம் மிக்க இராணுவ நடவடிக்கைகளில் ஒன்று 'ஜயசிக்குறு'. இதன் காரணமாக 1997 ஆம் ஆண…
-
- 0 replies
- 272 views
-
-
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் மார்ச் மாதம் 7ம் திகதி லண்டனுக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டமொன்றை நடத்த பிரித்தானிய தமிழர் பேரவை தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக பிரித்தானிய தமிழர் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில், ராஜபக்சவுடன் அண்மைக்காலம் வரை இன அழிப்பில் இணைந்திருந்த இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வருகிற மாதம் 7 ம் திகதியளவில் லண்டன் வர உள்ளதாக அறிய வந்துள்ளது. இதற்கு பாரிய எதிர்ப்பை காட்டி அவரை வெளியேற்றும் போராட்டம் ஒன்றை செய்ய தீர்மானித்துள்ளோம். இலங்கை அரசாங்கத்தின் வெளி முகங்கள் மாறி இருந்தாலும் உட்கட்டமைப்புக்கள் எதுவும் மாறவில்லை. 100 நாள் செயல் திட்டத்தில் தமிழர்கள் அனுபவிக்கும் பிரச்சினைகள் அடக்கப்…
-
- 1 reply
- 471 views
-
-
இலங்கையில் இடம்பெற்ற மாற்றங்களின் பின்னணியில் அமெரிக்கா: ஜோன் கெரீ இலங்கையில் தற்போது இடம்பெற்றுள்ள மாற்றங்களின் பின்னணியில் அமெரிக்கா காணப்படுகின்றது என அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரீ தெரிவித்துள்ளார். அமெரிக்க பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அமெரிக்கா, பிரச்சினைகளுக்குரிய பல நாடுகளில் பல்வேறு நலன்புரித்திட்டங்களை மேற்கொண்டுள்ளது. உலக நாடுகளில் இதுவரை ஜனநாயகம் இல்லாத பிரச்சினைகளை சந்தித்த பல நாடுகளில் இப்போது உண்மையான ஜனநாயகத்தை காணமுடிகின்றது என அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அமெரிக்க இராஜாங்கச் செயலாளரின் இந்தக் கருத்து, இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னணியில் அமெரிக்கா இருந்திருப்பதை மேலும் வலுப்படுத்…
-
- 0 replies
- 424 views
-
-
மகாராணியுடன் மைத்திரிக்கு விருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இங்கிலாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். தற்போது லண்டனுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இருக்கும், நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இதனை உறுதிபடுத்தியுள்ளார். ஜனாதிபதி எதிர்வரும் 7ம் திகதி இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், ஜனாதிபதியின் இவ்விஜயத்தின் போது எதிர்வரும் 11ம் திகதி, எலிசபெத் மகாராணியுடன் பகற்போசன விருந்தொன்றை உட்கொள்வதற்கு ஜனாதிபதிக்கு விசேட அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது. tmilwin,com
-
- 0 replies
- 545 views
-
-
பொதுத் தேர்தலின் பின்னர் உருவாக்கப்படும் தேசிய அரசாங்கத்தின் மூலம் இனப்பிரச்சினைக்கான தீர்வை இரு வருடங்களில் காண முடியுமென தான் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும், இந்த விடயத்தில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தி வருவதால் நிச்சயமாக இது சாத்தியப்படும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். அதிகூடிய அதிகாரப் பகிர்வின் மூலம் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டுமென கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிகாரப் பகிர்வின் மூலமே நாட்டில் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டுமென தொடர்ச்சியாக அரசாங்கத்துக்கு அழுத்தங்களைக் கொடுப்போம் என்றும் அவர் தெரிவித்தார். “அதிகாரத்தைப் பகிர்ந்து ஐக்கியப்ப…
-
- 2 replies
- 392 views
-
-
வலிகாமம் பிரதேசத்தில் நிலத்தடி நீரில் கழிவுஎண்ணெய் கலந்துள்ளமை தொடர்பாக ஆராய்வதற்காக நோர்வே நாட்டு நிபுணர்கள் வருகை தந்துள்ளனர். இவர்கள் இப்பிரச்சினை தொடர்பாக வடக்கு விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, கூட்டுறவு அபிவிருத்தி, உணவு வழங்கல், நீர் வழங்கல், நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசனை அவரது அலுவலகத்தில் இன்று புதன்கிழமை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்கள். நிலத்தடி நீரில் கழிவுஎண்ணெய் கலந்துள்ளமை பற்றி ஆராய்வதற்காக வடக்கு முதல்வர் க.வி.விக்னேஸ்வரனின் அறிவுறுத்தலுக்கமைய நிபுணர்குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், கிழக்குப் பல்கலைக்கழகம், பேராதனைப் பல்கலைக்கழகம் மற்றும் கொழும்புப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த துறைசார்ந்த வல்லு…
-
- 0 replies
- 412 views
-
-
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும் உள்ளடக்கிய வகையில் தேசிய அரசமைப்பதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ள புதிய அரசு இதற்காக புதிய சில அமைச்சுகளையும் உருவாக்கவுள்ளது. இதன்படி, மனித உரிமைகள் விவகாரத்துக்குப் பொறுப்பாக தனி அமைச்சு அமைக்கப்படவுள்ளது. இதற்குரிய ஏற்பாடுகள் தற்போது இடம்பெற்றுவருவதாக அரச வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. அத்துடன், அரசு மீது அதிருப்தியில் இருக்கும் ரஜீவ விஜேசிங்கவுக்கும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவியொன்று வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கு பிரதமரும் பச்சைக்கொடி காட்டியுள்ளார். பிரதான எதிர்க்கட்சியாக செயற்படுவதற்கு சுதந்திரக் கட்சி முன்னதாக தீர்மானித்திருந்தாலும், தற்போது 10 நிபந்தனைகளுடன் தேசிய அரசில் அங்கம் வகிக்கும் நிலைப்ப…
-
- 0 replies
- 256 views
-
-
மூன்று பக்கங்கள் கடலாலும் மறுபக்கம் வயல்களாலும் சூழப்பட்டு பெயருக்கேற்றவாறு சம்பூரணமாகக் காணப்பட்ட சம்பூர் கிராமம் மக்களிடமிருந்து பறித்தெடுக்கப்பட்டு எட்டு வருடங்கள் கடந்து விட்டன. ஆனாலும் சம்பூர் மக்களின் அகதிவாழ்வும் துன்பங்களும் இன்னும் முடிந்தபாடில்லை. சம்பூர் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட பின்னர் இலங்கை இராணுவத்தினர் பத்திரிகையாளர் குழுவொன்றினை சம்பூருக்கு அழைத்துச் சென்றிருந்தனர். நேசன் வாரப் பத்திரிகையின் அப்போதைய பத்திரிகையாளரான தரிசா பஸ்தியன் அவர்கள் 10.09.2006 அன்று வெளியான நேசன் பத்திரிகையில் 'சம்பூர் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து இடம்பெறும் தேடுதல் நடவடிக்கைகளினால் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் சிறு பாதிப்புக்களுக்கு அப்பால் பாடசாலைகள், வைத்தியசாலைகள் உள்ளிட்ட…
-
- 0 replies
- 400 views
-
-
மாகாண சபையில் அன்ரனி ஜெகநாதன் கேள்வி:- மாகாண சபையில் இடம்பெற்ற விவாதத்தன் சுருக்கம்:- டெனிஸ் வரன் :- கொடும்பாவி எரித்ததற்கு கண்டனம் தெரிவிப்பு அனந்தி :- உணர்ச்சி வசப்பட்டவர்களால் எரிக்கப்பட்டது. இது திட்டமிட்டு எரித்தது என கூறுவது தவறு. அன்ரனி ஜெகநாதன் :- இது திட்டமிட்டு எரிக்கப்பட்ட து. இதே போல புலிகளால் காணாமல் போக காரணமாக இருந்தவர்களின் கொடும்பாவிகள் எரிக்கப்பட தொடங்கினால் நிலைமை என்னவாகும்? கூட்டமைப்பில் உள்ளவர்களுள் மண்டைவளம் மிக்கவர் சுமந்திரனேயென வடமாகாணசபையின் பிரதி அவை தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முல்லைத்தீவு மாவட்ட மாகாண சபை உறுப்பினருமான அன்ரனி ஜெகநாதன் தெரிவித்துள்ளார். அத்துடன் புலிகளால் பிடித்து செல்லப்பட்டவர்களிற்காக யாரது கொடும…
-
- 10 replies
- 885 views
-
-
நான் ஒரு போதும் விடுதலைப் புலிகளின் தலைவரை வழி நடத்தவில்லை. அவரிடம் ஒரு வினாவைக் கூட 2002 இல் வினவவில்லை என கூறுகிறார் சிரேஸ்ட ஊடகவியலாளர் வித்தியாதரன் வெளிப்படையாக இன்று தான் கூறுகிறேன். இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இருந்து விலகி விட்டேன். அவர்களின் கொள்கை பிடிக்கவில்லை என லங்காசிறி வானொலிக்கு வழங்கிய செவ்வியில் என்.வித்தியாதரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி - சுவிஸ் பழைய மாணவர் சங்கம் அமைப்பின் தலைவர் த.நீதிராஜா தலைமையில் வித்தியின் என் எழுத்தாயுதம் நூலின் அறிமுக விழா சுவிஸின் சூரிச் நகரில் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilwin.com/show-RUmtyCRZSUnu0J.html
-
- 1 reply
- 596 views
-
-
தனது மனைவியின் குற்றச் செயலை மறைத்து சிங்கள மக்கள் மத்தியில் அனுதாபம் தேட வீரவன்ச முயல்கின்றார். அது மட்டுமல்ல பயங்கரவாதத்தை ஒழித்தவர்கள் இன்று சிறை செல்ல வேண்டியுள்ளது என்று கூறி இனவாதத்தையும் கிளப்ப முயல்கிறார் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார். அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் ஊடக மாநாடு இன்று புதன்கிழமை கொழும்பில் இடம்பெற்றது. இம்மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கையிலேயே மனோ கணேசன் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பிறப்பு சான்றிதழில் சொந்த பெயரை மாற்றலாம். அதற்கு சட்ட வழிமுறைகள் உள்ளன. ஆனால், பிறந்த திகதி, பிறந்த இடம், பெற்றோர் பெயர்கள் ஆகியவற்றை ஒருபோதும் மாற்ற முடியாது. அவற்றை …
-
- 0 replies
- 325 views
-
-
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தால் தயாரிக்கப்பட்டுள்ள இலங்கை குறித்த அறிக்கை ஆறு மாதங்களுக்கு பிற்போடப்பட்டுள்ளமை புதிய அரசு பெற்றுக்கொண்ட பெரும் வெற்றியாகும் என்று கூறியுள்ளார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. ஐக்கிய தேசியக் கட்சியுடன் தனக்கு எந்தவிதமான உடன் படிக்கையும் இல்லை. சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மிக நீண்ட ஆயுள் காலத்துக்காக கசப்பான உண்மைகளைப் பேசவேண்டியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கட்டுநாயக்காவில் நடைபெற்ற இரண்டு நாள் செயலமர்வில் கடந்த ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். "ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகத்தால் தயாரிக்கப்பட்டுள்ள இலங்கை விவகாரம் குறித்த அறிக்கை எத…
-
- 6 replies
- 647 views
-