Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கையின் வடக்கு மாகாணத்தில் இராணுவ பின்புலம் கொண்ட ஆளுநருக்குப் பதிலாக, மூத்த சிவில் அதிகாரியான பலிஹக்காரவை புதிய ஆளுநராக நியமிக்கும் புதிய அரசாங்கத்தின் நடவடிக்கையை வடக்கில் ஆட்சியதிகாரத்தைக் கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது. கடந்த மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் ஆளுநரை மாற்றுவதாக வாக்குறுதி அளித்திருந்த போதிலும், அந்த வாக்குறுதியை நிறைவேற்றத் தவறிவிட்டதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் பிபிசி தமிழோசையிடம் கூறினார். புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்றவுடன், அவரை சந்தித்து நடத்திய பேச்சுவார்த்தையின் போது ஆளுநர் மாற்றம் பற்றி ததேகூ கோரிக்கை விடுத்திருந்ததாகவும் சம்பந்தன் தெரிவித்தார். வெளியுறவுச் சேவையிலும் ஐநாவின் பணிகளி…

  2. ஆட்சியைக் கைப்பற்ற 2000 படையினரை கொழும்பில் குவித்தார் மகிந்த JAN 17, 2015 | 1:18by கார்வண்ணன்in செய்திகள் இராணுவப்புரட்சி மூலம் ஆட்சியைத் தொடர்வதற்காக முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச அதிபர் தேர்தலுக்கு முன்று நாட்களுக்கு முன்னதாக, 2000 சிறிலங்கா படையினரை கொழும்புக்கு நகர்த்தியதாக தகவல் வெளியிட்டுள்ளார், ஜனநாயக கட்சியின் தலைவரான சரத் பொன்சேகா. இந்தியாவின் என்டிரிவி தொலைக்காட்சிக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இந்த தகவலைக் குறிப்பிட்டுள்ளார். வடக்கு கட்டளை பீடத்தில் இருந்து மூன்று நாட்களுக்கு முன்னதாக கொண்டு வரப்பட்ட படையினர், கொழும்பில் இரண்டு இடங்களைச் சுற்றி நிறுத்தப்பட்டிருந்தனர். அலரி மாளிகையை சுற்றியுள்ள பகுதியில் முதலாவதாகவும், தேர்தல் ஆணையாளரின் செயலகத்…

  3. வடக்கு, கிழக்குக்கு கொண்டு செல்லக்கூடாது என்று தடைவிதிக்கப்பட்டிருந்த சில பொருட்கள் மீதான தடை நீக்கப்பட்டுள்ளதுடன் சில பொருட்கள் மீது விதிக்கப்பட்டிருந்த தடை நீடிக்கப்பட்டுள்ளது என்று பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற முதலாவது பாதுகாப்பு சபை கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்துக்கு யுத்த உபகரணங்கள் மற்றும் வெடிப்பொருட்கள் கொண்டு செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வடக்கு அந்த பொருட்களுடன் இரட்டை தொலைக்காட்டி( பைனோகியூலர்), இராணுவ சீருடைகளை ஒத்த சீருடைகள் மற்றும் துணிவகைகளை எடுத்துச்செல்வதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. http://www.tamilmirror.lk/137823#sthash.TSiaeDyT.dpuf

  4. ஹம்பாந்தோட்டை மற்றும் திஸ்ஸமஹாராமயில் நிலநடுக்கம் ஹம்பாந்தோட்டை மற்றும் திஸ்ஸமஹாராம பகுதிகளில் சிறிய அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்கப்பணியகம் தெரிவித்துள்ளது. http://www.virakesari.lk/articles/2015/01/17/%E0%AE%B9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D

  5. சண்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியர் அமரர் லசந்த விக்ரமதுங்க மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்pனர் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திரவின் கொலைகளுக்கு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராபஜக்சவே பொறுப்பு என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா குற்றம் சுமத்தியுள்ளார். இது தொடர்பிலான ஆவணங்கள் குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவித்துள்ளார். முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஸ மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ ஆகியோருக்கு எதிராக புலனாய்வுப் பிரிவில் மேர்வின் சில்வா இன்று முறைப்பாடு செய்துள்ளார். வெள்ளைவான் கலாச்சாரத்திற்கு கோதபாயவே பொறுப்பு என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். தாம் யாரையும் பாலியல் ரீதியாக து…

  6. இலங்கையில் கடந்த வாரம் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்த்தலைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள மாற்றங்களினால் பிரதான எதிர்கட்சியாக உருவெட்டுக்கும் நிலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும், எதிர்க்கட்சியின் தலைவராக மாறும் நிலை அதன் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் ஏற்பட்டுள்ளது. சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியை புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் சென்றுள்ளதையடுத்தே இந்த நிலமை உருவாகியுள்ளது. கடந்த 8 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த மைத்ரிபால சிறிசேனவிடம் தேல்வியைத் தழுவிய அந்தக் கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, தானே தொடர்ந்தும் சுதந்திரக் கட்சியின் தலைவர் என்று கூறியிருந்தார். ஆயினும் அந்தக் கட்சியின் மு…

  7. VideoVideo அல்பிரட் துரையப்பாவை பிரபாகரன் கொலை செய்யவில்லை: அம்பலப்படுத்தும் வேல்முருகு [ சனிக்கிழமை, 17 சனவரி 2015, 11:50.17 AM GMT ] யாழ்.மாநகர சபையின் முன்னாள் மேயர் அல்பிரட் துரையப்பாவை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொலை செய்யவில்லை. அவருடைய கொலைக்கு யோகேஸ்வரன் காரணமாக இருந்தார். துரையப்பாவை வேறு சிலரே கொலை செய்தனர் என புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் வேல்முருகு தங்கராசா தெரிவித்துள்ளார். இன்றைய தினம் யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்த புதிய அமைப்பாளர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இந்தச் சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், துரையப்பா சுடப்பட்டபோது நான் அவருடன் இருந்திருக்க வேண்டும். ஆனால் …

    • 9 replies
    • 1k views
  8. ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிட்ட போதும் நிம்மதியான வாழ்வு கிடைக்கவில்லையென கவலை வெளியிட்டுள்ளார் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன். தொடர்ந்தும் புலனாய்வாளர்கள் தனக்கு அச்சுறுத்தல் விடுத்து வருவதாக அனந்தி மேலும் தெரிவித்துள்ளார். காணாமல்போனோரின் உறவினர்கள் பாப்பரசரை சந்திப்பதற்கும், பாப்பரசரின் ஆராதனைகளில் கலந்துகொள்வதற்காகவும் மடு திருத்தலத்திற்கு சென்றிருந்தனர். இவர்களுடன் காணாமல்போனோரின் உறவினர் என்ற வகையில் நானும் எனது இரு குழந்தைகளும் மடு திருத்தலத்திற்கு நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை சென்றிருந்தோம். அன்றைய தினம் தட்சணா மருதமடுவில் தங்கியிருந்து மறுநாளான புதன்கிழமை காணாமல் போனோரின் உறவினர்களின் குழுவுடன் இணைந்து பாப்பரசரை சந்திப்பதற்கு எண்ணியிருந்தேன். எனினும் நான் …

    • 55 replies
    • 4.2k views
  9. மீள் குடியேற்றம் என்ற போர்வையில் வட மாகாணத்தைச் சாராத எவரும் இம்மாகாணத்தில் குடியேற நாம் இடமளிக்க மாட்டோம் என்று வர்த்தக கைத்தொழில் அமைச்சர் ரிஷாட் பதியுத்தீன் தெரிவித்தார். புதிய மீள்குடியேற்ற அமைச்சர், வடமாகாண முதலமைச்சர், வடமாகாண சபை, தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருடன் ஒன்றிணைந்து மீள்குடியேற்ற நடவடிக்கைகளை ஒழுங்கு முறையாகவும், திட்டமிட்ட அடிப்படையிலும் மேற்கொள்ள நாம் திட்டமிட்டுள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டார். வட மாகாண மீள்குடியேற்ற நடவடிக்கைகளைத் திட்டமிட்ட அடிப்படையில் ஒழுங்கு முறையாக மேற்கொள்ளுவதற்குத் திட்டமிட்டுள்ளோம். இதன் நிமித்தம் புதிய மீள்குடியேற்ற அமைச்சர், வட மாகாண முதலமைச்சர், வட மாகாண சபை, தமிழ் தேசிய கூட்டமைப்…

  10. வெளிநாட்டுப் பிரஜைகளின் வடக்கு பயணங்கள் தொடர்பிலான தடைகள் நீக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டு கடவுச் சீட்டுடையவர்கள் வடக்கிற்கு பயணம் செய்யும் போது அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டுமென கடந்த அரசாங்கம் கட்டுப்பாடு விதித்திருந்தது. பாதுகாப்பு அமைச்சிடம் இந்த அனுமதி பெற்றுக்கொள்ளப்பட வேண்டுமென உத்தரவிடப்பட்டிருந்தது. நாட்டில் நிலவி வரும் அமைதியான சூழ்நிலை காரணமாக இவ்வாறு பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படக் கூடிய அவசியம் கிடையாது என பாதுகாப:பு அமைச்சு அறிவித்துள்ளது. எதிர்வரும் காலங்களில் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற்றுக்கொண்டு வெளிநாட்டுக் கடவுச்சீட்டுடையவர்கள் வடக்கு பயணம் செய்ய வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. வடக்கிற்கு பொருட்கள் எடுத்துச் செல்வது தொடர்பில் நிலவி வந்…

  11. சீனாவின் திட்டத்தினால் நாட்டின் இறைமை, பாதுகாப்புக்கு ஆபத்து – சிறிலங்கா அரசாங்கம் JAN 16, 2015 | 11:56by கார்வண்ணன்in செய்திகள் சீனாவின் 1.3 பில்லியன் டொலர் உதவியுடன் மேற்கொள்ளப்படும், கொழும்பு துறைமுக நகரத் திட்டம், சிறிலங்காவின் பாதுகாப்பு மற்றும் இறைமை பற்றிய கவலைகளை ஏற்படுத்தியுள்ளதாக, சிறிலங்காவின் புதிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதனால் இந்த திட்டத்தை மீளாய்வு செய்யவுள்ளதாக, சிறிலங்காவின் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கபீர் ஹாசிம் இன்று கொழும்பில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். “துறைமுக நகரத் திட்டத்தை முழுமையாக மீளாய்வு செய்ய வேண்டியுள்ளது. இதனால் ஏற்படக் கூடிய பாதுகாப்புக் கவலைகள் குறித்தும் நாம் எப்போதும் பேசி வந்துள்ளோம். இ…

    • 16 replies
    • 1.7k views
  12. சுன்னாகம் மின்சார நிலையத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட கழிவு ஒயிலினால் குடி நீர் கிணறுகள் பாதிக்கப்பட்ட மக்கள் இன்று சனிக்கிழமை காலையில் பெரும் அளவிலான கண்டனப் பேரணி ஒன்றை நடத்தினார்கள். சுன்னாகம் கதிரமலைசிவன்ஆலய முன்றலில் இருந்து பல்வேறு கோசங்கள் அடங்கிய பதாதைகளையும் தாங்கிய வண்ணம் அண்கள் பெண்கள் சிறுவாகள் முதியவாகள் என்றவேறுபாடுகள் இன்றி இந்த கண்டனப் பேரணியில் அனைவரும் கலந்துகொண்டார்கள். சுன்னாகம் பொலிசார் பாதுகாப்பு நிமித்தம் கண்டணப்பேரணி சென்ற பாதையிலும் மற்றும் மின்சார நிலைய வளாகத்திலும்’ காவல் கடமையில் ஈடுபட்டு இருந்தார்கள்.இதேவேளை சுன்னாகம் மின்சார நிலைய வளாகத்தில் காவல் கடமயில் ஈடுபட்டு இருந்த ஈராணுவத்தினர் அமைதியான முறையில் முன்வாசலில் இருந்தும் விலக உள்புறம…

  13. எங்களது குடும்ப ஆட்சியே தமிழீழ விடுலைப் புலிகளுக்கெதிரான யுத்தத்தை வெற்றிகொள்ள வழிவகுத்தது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள அவரது சட்ட நிறுவன அலுவலகத்தில் வைத்து இந்திய என்.டி.ரீ.விக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தனது தந்தை மற்றும் சிறிய தந்தையான பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷக்கு இடையிலான நெருக்கமான தொடர்புகளே எல்.ரீ.ரீ.ஈயினருடனான போரில் இலங்கை இராணுவம் வெற்றிபெற காரணம் எனவும் அவர் கூறினார். தமது குடும்பத்துக்கிடையேயுள்ள பிணைப்பே யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்ததாக தெரிவித்த நாமல், எந்தவொரு தலைவருக்கும் நம்பிக்கைக்குரிய பாதுகாப்பு செயலாளர் ஒருவர் தேவைப…

    • 4 replies
    • 676 views
  14. கொழும்பு, இலங்கை வெளியுறவு துறை மந்திரி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், இந்தியாவுடன் உறவுகளை நல்ல முறையில் பேணுவதற்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்றும் இருதரப்பு உறவுகளில் முன்னேற்றம் ஏற்படும் என்று நம்புவதாகவும் இலங்கை தெரிவித்துள்ளது. இலங்கையில், கடந்த 8 ஆம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலில் ராஜபக்சே தோல்வி அடைந்த பிறகு மைத்ரிபால சிறிசேனா புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இலங்கையில் புதிய அரசு அமைந்த பிறகு முதன்முறையாக அந்நாட்டு வெளியுறவு துறை அமைச்சர் மங்கலா சமரவீரா இந்தியாவுக்கு நாளை சுற்றுப்பயணம் மேற்கொள்ள வுள்ளார். இந்த நிலையில், மங்கலா சமரவீராவின் சுற்றுப்பயணம் குறித்து பேட்டி அளித்த இலங்கை வெளியுறவுதுறை துணை அமைச்சர் அஜித் பி பெரரே, …

  15. யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டுச் சம்பவங்கள் மீண்டும் அதிகரித்துள்ளன. அதில் ஈடுபடுவர்களின் எண்ணிக்கையும் சம்பவ இடங்களும் கூட அதிகரித்துள்ளன. கடந்த 14 நாள்களில் 6 இடங்களில் வாள்வெட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. என்று யாழ்.பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பி.விமலசேன தெரிவித்துள்ளார். நேற்று பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் இவ்வாறு தொடரும் வாள்வெட்டுச் சம்பவங்கள் குறைவின்றித் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.யாழில் கடந்த 2013 ஆம் ஆண்டு இறுதியிலிருந்து வாள்வெட்டுச் சம்பவங்கள் அதிகரிக்கத் தொடங்கி கடந்த வருடம்பல இடங்களில் பலர்; வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளனர்.சிலர் உயிரிழந்துள்ளனர். புதுவருடம் தொடங்கி 14 நாள்க…

  16. விலகினார் மகிந்த – சுதந்திரக் கட்சியை கைப்பற்றினார் மைத்திரி JAN 16, 2015 by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்து தாம் இன்று விலகிக் கொள்வதாக, முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார். இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், சிறிலங்காவின் புதிய அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் கட்சியின் தலைமைப் பதவியை ஒப்படைக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தனது கட்சி பிளவுபடுவதைப் பார்க்கத் தாம் விரும்பவில்லை என்றும், அதனால், புதிய அதிபரிடம் கட்சியை ஒப்படைக்கத் தீர்மானித்துள்ளதாகவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார். மகிந்த ராஜபக்ச தனது பதவி விலகல் கடிதத்தை, சுதந்திரக் கட்சியின் செயலர் அனுர பிரியதர்சன யா…

    • 8 replies
    • 1.6k views
  17. இரணைமடு குளத்திட்டத்தின் நோக்கம், கிளிநொச்சி மாவட்டத்தின் உணவு தேவையை பூர்த்தி செய்வது மாத்திரமல்ல. யாழ்ப்பாணத்துக்கான உணவுப் பாதுகாப்பும் இரணைமடு குளத்திலேயே தங்கியுள்ளது. இதனாலேயே இரணைமடுவில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு குடிநீர் எடுத்து வரும் மத்திய அரசின் திட்டத்துக்கு பதிலாக நாம் மாற்றுத்திட்டத்தை முன்வைக்க நேர்ந்தது என்று வடக்கு விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்தார். இரணைமடுக்குளத்தின் 95ஆவது வருடத்தையொட்டி 95 பானைகள் வைத்துப் பொங்கும் மாபெரும் பொங்கல் விழா, இரணைமடு கனகாம்பிகை ஆலய முன்றலில் வெள்ளிக்கிழமை (16)இடம்பெற்றது. இப்பொங்கல் விழாவில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அமைச்சர் அங்கு தொடர்…

  18. வட மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்த உள்ளார். காணிப் பிரச்சினை, மீள்குடியேற்றம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இந்த சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட உள்ளது. எதிர்வரும் நாட்களில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வட மாகாணப் பிரச்சினைகள் குறித்து ஏற்கனவே ஜனாதிபதிக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக வட மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இந்த பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியுடன் விரைவில் பேச உத்தேசித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். கடந்த 12ம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஜனாதிபதி மைத்திரிபால சந்திப்பு ஒன்றை நடத்தியிருந்தார். எனினும், இந்த ச…

  19. வடக்கு, கிழக்கிலுள்ள இராணுவ முகாம்களை அகற்றுவது தொடர்பில் இதுவரையில் எந்தவொரு தீர்மானமும் எட்டப்படவில்லை என இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார். “அங்குள்ள முகாம்கள் மற்றும் பிரதேசங்களின் பாதுகாப்பு நிலவரங்கள் தொடர்பான சகல விடயங்களும் உள்ளடங்கிய அறிக்கையொன்றை பாதுகாப்பு அமைச்சு கோரியுள்ளது. மேற்படி பிரதேசங்களின் நிகழ்கால மற்றும் எதிர்கால பாதுகாப்பு நிலைமை, பாதுகாப்புப் படையினர் நிலைகொண்டிருக்க வேண்டிய பிரதேசங்கள் எவை?, பாதுகாப்பு படையினர் அகற்றப்பட வேண்டிய பிரதேசங்கள், வடக்கில் கடமையாற்றுபவர்களை அங்கேயே கடமையாற்ற விடுவதா? இல்லை வேறு இடங்களுக்கு அவர்களை மாற்றுவதா உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்த பின்னரே இது தொடர்பில் பாதுகாப்பு அமை…

  20. கடந்த காலங்களில் ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக செயற்பட முடியாத அச்சுறுத்தல் நிலவியதால்,வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்த ஊடகவியலாளர்களை மீள தாய் நாட்டுக்கு வருமாறு புதிய ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க அழைப்பு விடுத்தார். புதிய ஊடகத்துறை அமைச்சரான கயந்த கருணாதிலக்க நேற்று பொல்ஹேன்கொடயிலுள்ள ஊடக அமைச்சில் தம் பொறுப்புக்களை உத்தியோகபூர்வமாகக் கையேற்றார். முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உட்பட அமைச்சர்கள் முக்கியஸ்தர்கள் அமைச்சரின் உறவினர்கள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் கடமைகளைப் பொறுப்பேற்று உரையாற்றிய அமைச்சர், எந்த உலக நாடுகளை எடுத்துக் கொண்டாலும் அங்கு அரசாங்கங்களில் நான்காவது தூணாக திகழ்வது ஊடகத்துறையே. நிறைவேற்று அதிகாரம், அரசியலமைப்பு, நீத…

  21. சிறிலங்காவுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் விதித்திருந்த தடை இன்று முதல் அமுலுக்கு வந்துள்ளது. சிறிலங்காவில் சர்வதேச சட்டங்கள் கடைபிடிக்கப்படாத நிலையில், அங்கிருந்து கடலுணவுப் பொருட்களை இறக்குமதி செய்யப் போவதில்லை என்று ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்திருந்தது. கடந்த ஒக்டோபர் மாதம் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்ட போதும், அதனை தடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கவில்லை. தற்போது அமுலாக்கப்பட்டுள்ள இந்த தடையினால் சிறிலங்காவுக்கு வருடாந்தம் 73 மில்லியன் யூரோக்கள் நட்டம் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.pathivu.com/news/36974/57//d,article_full.aspx

  22. தமிழ் அரசியல் கைதிகளுக்கு விரைவில் விடுதலை: ஆணையாளர் நாயகம் 16-01-2015 03:51 AM -ஏ.பி.மதன் விசாரணைக் கைதிகளாக நீண்டகாலமாக இருக்கும் அனைவரது விடுதலை பற்றியும் ஜனாதிபதி செயலாளர் மற்றும் உயரதிகாரிகளிடம் எடுத்துரைப்பதோடு அவர்களது விடுதலையை மிகவிரைவுபடுத்த நடவடிக்கை எடுப்பதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்திரானந்த பல்லேகம, கூறினார். தமிழர் முன்னேற்றக்கழகத்தின் பிரதம அமைப்பாளர் வி.ஜனகனின் ஏற்பாட்டில், தைப்பொங்கல் நிகழ்வு, கொழும்பு வெலிக்கடை மற்றும் புதிய மகசின் விளக்கமறியல் சிறைச்சாலைகளில் வியாழக்கிழமை (15) நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டபோதே சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்திரானந்த பல்லேகம, மேற்கண்டவாறு கூறினார். அவர், தமிழ் அரசி…

  23. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கடஅவுட்கள் மற்றும் பேனர்களை அகற்றுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இலங்கையின் ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன தெரிவு செய்யப்பட்ட பின் நாடு முழுவதிலும் அவரது கட்அவுட்கள் மற்றும் பேனர்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றை உடனடியாக அகாற்றுமாறு ஜனாதிபதி செயலகம் உத்தரவிட்டுள்ளது. எதிர்வரும் காலங்களில் தமது உருவப்படம் உள்ள கட்அவுட்கள் மற்றும் பேனர்களை காட்சிப்படுத்த வேண்டாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார். கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தேவையற்ற வகையில் பேனர்கள், கட்அவுட்களை காட்சிப்படுத்த பொதுமக்கள் பணத்தை விரயமாக்கியதாக எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தமை கு…

  24. மகிந்தவின் புதையல் அம்பலம் news மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலப்பகுதயில் அவரது கட்டுப்பாட்டில் இருந்த அலரி மாளிகையில் இருந்த பெருந்தொகைப் பணமும், நகைகளும் நேற்றுக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அத்துடன் அலரி மாளிகைக்குள் புதிது புதிதாக கட்டடங்கள் கட்டப்பட்டமையும் தெரியவந்துள்ளது. புதிய அரசின் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க நேற்று தனது கடமைகளை அலரி மாளிகையில் ஆரம்பித்தார். அதன்பின்னர் மாலையில் தனது கட்சி அமைச்சர்கள்.பிரதி அமைச்சர்கள் மற்றும் அமைச்சரவை அந்தஸ்து அற்ற அமைச்சர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.அதற்கு ஊடவியலாளர்களும் அனுமதிக்கப்பட்டிருந்தனர். கலந்துரையாடலின் முடிவில் அலரி மாளிகையைச் சுற்றிப் பார்க்க அனைவருக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.அதன்…

  25. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கட்அவுட்கள் மற்றும் பேனர்களை அகற்றுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இலங்கையின் ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன தெரிவு செய்யப்பட்ட பின் நாடு முழுவதிலும் அவரது கட்அவுட்கள் மற்றும் பேனர்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றை உடனடியாக அகாற்றுமாறு ஜனாதிபதி செயலகம் உத்தரவிட்டுள்ளது. எதிர்வரும் காலங்களில் தமது உருவப்படம் உள்ள கட்அவுட்கள் மற்றும் பேனர்களை காட்சிப்படுத்த வேண்டாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார். கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தேவையற்ற வகையில் பேனர்கள், கட்அவுட்களை காட்சிப்படுத்த பொதுமக்கள் பணத்தை விரயமாக்கியதாக எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தமை குறிப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.