ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143540 topics in this forum
-
நண்பர்களே ராஜபக்ஸ குடும்ப ஆட்சி முடிவுற்றது.. மழைவிட்டும் தூவானம் நிற்கவில்லை என்பது உண்மையே:- 17 ஜனவரி 2015 ஆனால் நாம் வரலாற்றுத் தவறிழைக்க முடியுமா நடராஜா குருபரன்:- ராஜபக்ஸ குடும்ப ஆட்சி முடிவுக்கு வந்துவிட்டது. ஆனால்அரை நூற்றாண்டு கால இனவாத மழை நின்று சனநாயகவானம் தெளிவடையத் தொடங்கியுள்ளதா? இக்கேள்வியை மறக்கக்கூடாத குறிப்புகளுக்குள் குறித்துவைப்போம். தேர்தல்முடிந்த சில நாட்களில் சில மாற்றங்கள் ஏற்பட்டுஇருக்கின்றன. இம் மாற்றங்கள் நிலையான மாற்றங்களுக்கு வழி வகுக்குமா என்பதனைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். புதிய ஆட்சியாளர்கள் கொண்டு வந்த உடனடிமாற்றங்கள் சில... · அனைத்து ஊடகங்கள் மீதான தடையும் நீக்கப்பட்டு விட்டது.இலங்கையில் அனைத்து ஊடகங்களை…
-
- 0 replies
- 545 views
-
-
கோதபாய ராஜபக்ஸவிற்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு 17 ஜனவரி 2015 முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராபஜக்ஸவிற்கு எதிராக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கம்பஹா மாவட்டம் வெலிவேரிய மற்றும் ரத்துபஸ்வல ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடு செய்ப்பட்டுள்ளது. இராணுவத்தைக் கொண்டு தாக்குதல் நடத்தியதாகவும் உயிர் பலிகளுக்கும் காயங்கள் மற்றும் சொத்து சேதங்களுக்கும் கோதபாய ராஜபக்ஸ பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டுமெனவும் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. வெலிவேரிய மற்றும் ரத்துபஸ்வெல இடங்களைச் சேர்ந்த மக்கள் சுத்தமான குடிநீரை வழங்குமாறு கோரியும், கழிவுகள் நீரில் கலப்பதனை தடுக்குமாறு கோரியும் போராட்டம் நடத்தியி…
-
- 0 replies
- 490 views
-
-
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவத்தை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவிற்கு வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாப்பிற்கு அமைய நேற்று அதன் தலைமைத்துவம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், எதிர்காலத்தில் கட்சியின் யாப்பு திருத்தப்பட்டு கட்சியின் தலைமைத்துவம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவிற்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாப்பின் 12ஆவது ஷரத்திற்கு அமைய, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் ஒருவர், இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவிக்கு தெரிவுசெய்யப்படு…
-
- 1 reply
- 288 views
-
-
அமெரிக்க போர்க்குற்ற விவகார நிபுணர் ஸ்டீபன் ராப் பதவி விலகல் JAN 17, 2015 | 2:21by கார்வண்ணன்in செய்திகள் போர்க்குற்ற விசாரணைகளுக்கு அமெரிக்க அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கத் தவறியுள்ளதால், போர்க்குற்ற விவகாரங்களுக்கான அமெரிக்க தூதுவர் ஸ்டீபன் ஜே ராப், தனது பதவியை விட்டு விலக முடிவு செய்துள்ளார். அடுத்த சில மாதங்களில், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பூகோள குற்றவியல் நீதிக்கான பணியகத்தின் தூதுவர் பதவியில் இருந்து தாம் நீங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சிரிய அதிபர் பசீர் அல் ஆசாத்துக்கு எதிராக போர்க்குற்ற விசாரணைகளை முன்னெடுக்கும் விடயத்தில், அமெரிக்க அரச நிர்வாகம் அதிருப்தியளிக்கும் வகையில் நடந்து கொண்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ள அவர், இது தமக்கு வெறுப்பளிப்ப…
-
- 0 replies
- 274 views
-
-
திகாமடுல்லை நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேனவுக்கு எதிராக ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று, இன்று வெள்ளிக்கிழமை (16) ஆலையடிவேம்பில் நடைபெற்றது. புதிய அரசாங்கத்தில் இவரை இணைத்துக் கொள்ளக்கூடாது எனக்கோரி, கோளாவில் விநாயகர் மகாவித்தியாலயத்துக்கு முன்னால் ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்டப் பேரணி ஆலையடிவேம்பு தர்மசங்கரி மைதானத்தை சென்றடைந்தது. 'அன்புக்கு இனிய அம்பாறை மாவட்ட தமிழ் மக்களே, ஒன்றுபடுவோம்! ஓரங்கட்டுவோம்!' எனும் தலைப்பில் இவ் ஆர்ப்பாட்டப் பேரணி முன்னெடுக்கப்பட்டது. http://www.tamilmirror.lk/137789#sthash.3iRm1WEr.dpuf
-
- 0 replies
- 376 views
-
-
கழிவு எண்ணெய் கிணறுகளில் பாதிக்கப்பட்ட வலி.வடக்குப் பிரதேச மக்கள் இன்று காலை 8.30 மணி தொடக்கம் சுன்னாகம் மின் நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டு வருகின்றனர். சுன்னாகத்தில் அமைந்துள்ள 'நொதேர்ன் பவர்' அனல் மின் நிலையம் கழிவு எண்ணெயை நிலத்தின் கீழ் செலுத்தியமையால் சுன்னாகம், தெல்லிப்பழை, மல்லாகம், உடுவில் பிரதேச மக்களின் கிணறுகளில் கழிவு எண்ணெய் கலந்தது. இந்தக் கழிவு எண்ணெய் நீரைப் பயன்படுத்தினால் தோல் சம்பந்தமான நோய்கள், புற்றுநோய், மலட்டுத்தன்மை, குறைபாடுடைய குழந்தைகள் பிறப்பதுடன் வேறு பல நோய்கள் ஏற்படும் என சுகாதாரப் பகுதியினர் எச்சரித்தனர். ஆனால் இந்தப் பிரச்சினைகள் குறித்து அரசியல்வாதிகளோ, அரச உயர் அதிகாரிகளோ கண்டு கொள்ளவுமில்லை. நடவடிக்கை எதுவும் எடுக்கவும…
-
- 0 replies
- 257 views
-
-
ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை மாற்றுவதற்கு அல்லது மாற்றுவழியில் தொடர்ந்து அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்கு கடந்த 8ஆம் திகதி இரவு அலரி மாளிகையில் முயற்சிக்கப்பட்டதாகக் கூறப்படும் அரச விரோத சூழ்ச்சி குறித்து காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சட்டமா அதிபரின் ஆலோசனைகளுக்கமைய இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறைப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இந்தச் சம்பவம் குறித்து அண்மையில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடொன்றைச் செய்திருந்தார். தேர்தல் நடைபெற்ற கடந்த 8ஆம் திகதி இரவு அலரி மாளிகையில் அரச விரோத சூழ்ச்சியொன்று முன்னெடுக்கப்படடதாக தனது முறைப்பாட்டில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கூறியிருந்த…
-
- 0 replies
- 278 views
-
-
கெலும் பண்டார ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி நாடாளுமன்றத்தை கலைத்து ஜுன் மாதம் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவார் என அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய அரசாங்கத்தின் 100 நாட்கள் வேலைத்திட்டம் முடிந்த பின்னர் விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்கெனவே தெரிவித்திருந்தார். இந்நிலையில், ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் தலைமைப்பதவியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் முன்னாள் ஜனாதிபதியும் சுதந்திரக்கட்சியின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ வெள்ளிக்கிழமை (16) கையளித்துள்ளார். புதிய ஜனாதிபதியின் தலைமையிலேயே நாடாளுமன்ற தேர்தல் நடவடிக்கைகளை முன்னேடுத்துச் செல்வதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி திட்டமிட்டுள்ளது. எவ்வா…
-
- 1 reply
- 436 views
-
-
100 நாள் வேலைத் திட்டத்தின் பின்னர் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியும், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் பொதுக் கூட்டணியொன்றை அமைத்து 'அன்னம்' சின்னத்தில் போட்டியிடுவது குறித்து தற்போது இரு தரப்புக்களுக்கிடையே பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நாட்டிலுள்ள அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக நாட்டிலுள்ள இரண்டு பிரதான கட்சிகளும் தேசிய அரசாங்கமாக சில வருடங்கள் நாட்டை நிர்வகிப்பது அத்தியாவசியமானது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தன்னை ஜனாதிபதியாக்குவதில் பாரியளவில் பங்களிப்புச் செய்த ஐக்கிய தேசியக் கட்சியும், தான் தலைமைத்துவம் வகிக்கும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் 100 நாள் வேலைத் திட்டத்தின் பின்னர் நடைபெறும் தேர்தலில் தனித்தனியாக…
-
- 2 replies
- 730 views
-
-
ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! இலங்கைத்தீவில் சீன ஆதிக்க நீக்கத்திற்கான மேற்கினதும் இந்தியாவினதும் வியூகத்திற்கு தமிழ் மக்கள் வாக்களித்திருக்கிறார்கள் - தமிழர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஒரு ஜனநாயக வெளி கிடைக்கக்கூடும். ஆய்வாளர் நிலாந்தன். தமிழ்3 ”அரசியல் களம்” நிகழ்ச்சி. 14.01.2105 ஒலிபரப்பாகியது.
-
- 0 replies
- 794 views
-
-
வடமராட்சியில் ஒவ்வொரு தைப்பொங்கல் தினத்திலும் பட்டம் விடும் போட்டி தொன்றுதொட்டு நடைபெற்றுவருகிறது. தைப்பொங்கல் தினமான நேற்றும் வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரையில் மாபெரும் பட்டம் விடும் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் கண்ணைக் கவரும் வகையில் நூற்றுக்கு மேற்பட்ட பட்டங்கள் வானில் பறக்கவிடப்பட்டன. இந்தப் பட்டம் விடும் போட்டியைக் காண்பதற்காக பெருமளவிலான் மக்கள் திரண்டிருந்தனர். நடுவர்களால் தெரிவுசெய்யப்பட்ட பட்டங்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன. http://www.malarum.com/article/tam/2015/01/16/8109/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%…
-
- 12 replies
- 4.1k views
-
-
அமைச்சுப் பதவிகளைத் தமது கட்சி பெற்றுக்கொண்டால் தற்போதைய அரசாங்கத்தின் தவறுகளைத் தட்டிக்கேட்க முடியாமல் போகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு – கல்லடி விவேகானந்தா மகளிர் வித்தியாலயத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். தமிழர்களின் பிரச்சினைகளை அண்மையில் தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதியிடம் தாம் தெரிவித்துள்ளதாகவும் அவை அனைத்திற்கும் அவர் பச்சைக்கொடி காட்டியுள்ளார் எனவும் பொன். செல்வராசா குறிப்பிட்டார். அத்துடன், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் அதற்கு இணங்கியுள்ளதாகக் கூறினார். தமது இலக்கு அமைச்சுப் பதவிகள் அல்ல என குறிப்பிட்ட அவர், அமைச்சுப் பதவிகளைப்…
-
- 1 reply
- 619 views
-
-
-பொ.சோபிகா கொழும்பில் இருந்து யாழ் நோக்கி வந்த தபால் ரயிலில் வந்த மூவருக்கு மயக்கமருந்து கலந்த ரொட்டியைக் கொடுத்து அவர்களிடமிருந்த பணம், நகை என்பன அபகரிக்கப்பட்ட சம்பவம் வியாழக்கிழமை (15) இடம்பெற்றுள்ளது. ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐ.அனீஸ் வயது 32, ஏ.றுபிஸா வயது29, ஐ.இன்ஸா வயது 15 ஆகிய மூவரும் கொழும்பில் இருந்து கிளிநொச்சிக்கு புதன்கிழமை (14) மாலை ரயிலில் ஏறியுள்ளனர். குருநாகலில் இருந்து ஏறிய மூன்று பேர் இவர்களுடன் உரையாடிக்கொண்டு வந்துள்ளனர். தரிப்பிடமொன்றில் குருநகரிலிருந்து ஏறிய மூவரில் ஒருவர் ரொட்டி வாங்கி வந்து, இவர்கள் மூவருக்கும் உண்ண கொடுத்துள்ளார். ரொட்டியை உண்ட மூவரும் மயக்கமடைந்த நிலையில் ஒருவருடைய மோதிரமும் பையில் இருந்த 10 ஆயிரம் ருபாய் பணமும…
-
- 2 replies
- 537 views
-
-
யாழ்.வடமராட்சி கிழக்கில் மகேஸ்வரி நிதியத்தினால் மேற்கொள்ளப்பட்டுவந்த மணல் அகழ்வுக்கு பயன்படுத்தப்பட்ட அனுமதிப்பத்திரம் முறையற்றவகையில் பெறப்பட்டுள்ளதாக மக்கள் முன்வைத்த குற்றச்சாட்டையடுத்து குறித்த பகுதியில் மணல் அகழ்வதற்கும், அகழப்பட்ட மணலை அள்ளுவதற்கும் காவல்துறை இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. குடத்தனை, அம்பன், நாகர்கோவில் பகுதிகளில் ஈ.பி.டி.பி அமைப்பினால் மகேஸ்வரி நிதியத்தினால் கடந்த சில வருடங்களாக சட்டத்திற்கு மாறான வகையிலும், வழங்கப்பட்ட நியமங்களை மீறியும் மணல் அகழப்பட்டுவந்ததாக மக்கள் மற்றும் அரசியல் தரப்புக்களால் குற் ற்றம் சாட்டப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்றைய தினம் அம்பன் பகுதியில்,தமிழ்தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ்தேசிய மக்கள் முன்னணி இணைந்து வடமராட…
-
- 0 replies
- 755 views
-
-
பொதுபல சேனா அமைப்பை தடை செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் சிற்றுண்டிச்சாலை ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது. குறித்த அமைப்பானது இனங்களுக்கு இடையில் ஒற்றுமையின்மையை தோற்றுவிப்பதாக சிற்றுண்டிச்சாலை ஒன்றியத்தின் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். சிங்கள மக்கள் பற்றி பேசி சிங்கள மக்களின் ரத்தத்தை சூடேற்றி அதன் ஊடாக மகிந்த ராபஜக்சவை வெற்றியீட்டச் செய்ய பொதுபல சேனா முயற்சித்தது. இந்த முயற்சியினால் சிங்கள மக்கள் சர்வதேசத்தின் முன்னிலையில் தோல்வியைத் தழுவியுள்ளனர்.கடந்த ஜனாதிபதி தேர்தலில் உண்மையான சிங்கள பௌத்தர்கள் தோல்வியடையவில்லை. சரியான சிங்கள பௌத்தர்கள் மைத்திரிபால சிறிசேனவிற்கு வாக்களித்து அவரை வெற்றிபெறச் செய்துள்ளனர். எனவே பொதுபல சேனா அமைப…
-
- 0 replies
- 1.6k views
-
-
வடக்கு மாகாண ஆளுநர் நியமனத்தை வரவேற்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தற்போது நியமனம் பெற்றுள்ள எச்.எம்.ஜி.எஸ்.பாலிஹக்கார, இலங்கையில் இடம்பெற்ற யுத்தக்குற்றங்களை நியாயப்படுத்தி வெளிநாடுகளில் கருத்து வெளியிட்டு வந்தவர் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. இதுகுறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கரு்த்து வெளியிடுகையில்- வடக்கு மாகாணத்தில் ஆளுநராக இருந்த இராணுவ அதிகாரியான ஜி.ஏ.சந்திரசிறியை மாற்றுமாறு நாம் முன்னைய அரசிடம் பலதடவைகள் கோரிக்கை விடுத்த போதும் எமது கோரிக்கை கருத்தில் கொள்ளப்படவில்லை. தற்போது புதிய ஆட்சியில் சிவில் நிர்வாகி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி வரவேற்கத்தக்கது. எனினும் தற்போது நியமனம் பெற்றுள்ள எச்.எ…
-
- 0 replies
- 385 views
-
-
இலங்கையில் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் அமைந்துள்ள புதிய அரசு பொதுமக்களுக்கான சில பொருளாதரச் சலுகைகளை அறிவித்துள்ளது. புதிய இலங்கை அரசு செலவினங்களை எப்படி கையாளும் என்பது குறித்து கேள்விகள் அரசு ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு, சமையல் எரிவாயுவின் விலை மற்றும் வரிகள் குறைக்கப்படும் போன்ற அறிவிப்புகளை பதவியேற்றவுடன் ஜனாதிபதி அறிவித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே இலங்கையின் பொருளதாரம் இறங்குமுகத்தில் இருக்கும் வேளையில், அரசின் நிதிச் சலுகைகள் குறித்த அறிவிப்பு வந்துள்ளது. கூடுதலான பொருளாதாரச் செலவினங்களை அரசு எப்படி சமாளிக்கப் போகிறது, புதிய அரசின் பொருளாதாரப் பார்வை எப்படி இருக்கும் என்பது குறித்து கொழும்பு பல்கலைக்கழகப் பொருளாதாரப் பேராசிரியர் டாக்டர் மு கணேச…
-
- 21 replies
- 1.4k views
-
-
வடக்கு மாகாண ஆளுனராக பாலிஹக்கார நியமனம் JAN 15, 2015 | 12:16by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்காவின் முக்கிய இராஜதந்திரிகளில் ஒருவரான எச்.எம்.ஜி.எஸ்.பாலிஹக்கார, வடக்கு மாகாண ஆளுனராக அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் இன்று அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வடக்கு மாகாண ஆளுனராகப் பதவி வகித்து வந்த மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறிக்கு பதிலாக, இவரைப் புதிய அரசாங்கம் நியமித்துள்ளது. இராணுவப் பின்னணி கொண்ட ஆளுனரான மேஜர் ஜெனரல் சந்திரசிறிக்குப் பதிலாக புதிய ஆளுனர் ஒருவரை நியமிக்கும்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. அதற்கு மகிந்த ராஜபக்ச அரசாங்கம் இணங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ப…
-
- 15 replies
- 1.6k views
-
-
சிறிலங்காவின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அதிருப்தியில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி தேர்தலின் போது மைத்திரிபால சிறிசேன வழங்கிய உறுதிமொழிகளை மீறிய செயற்பாடுகளில் அவர் ஈடுபட்டுள்ளதாக கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். இராணுவத்தை வெளியேற்றுதல், காணிகளை விடுவித்தல் போன்ற விடயங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு மைத்திரிபால சிறிசேன உறுதி மொழிகளை வழங்கி இருந்தார். எனினும் தற்போது இந்த விடயங்கள் தொடர்பில் ஆய்வு செய்வதற்காக தனிதனிக் குழுக்களை நியமிக்கவிருப்பதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார். கடந்த மகிந்த அரசாங்கமும் இவ்வாறு ஆய்யுவுக்குழுக்களை நியமித்ததே தவிர, தீர்வுகள் வழங்கப்படவில்லை. இந்த விடயம் குறித்து தமிழ் த…
-
- 1 reply
- 617 views
-
-
ரணில் வசமானது அலரி மாளிகை JAN 16, 2015by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவின் புதிய பிரதமரான ரணில் விக்கிரமசிங்க தனது அதிகாரபூர்வ செயலகத்தை அலரி மாளிகைக்கு மாற்றியுள்ளதுடன் இன்று அங்கு தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். பிரதமரின் அதிகாரபூர்வ வசிப்பிடமாகவும் செயலகமாகவும் இருந்து வந்த அலரி மாளிகையை முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தனது வசிப்பிடமாக மாற்றிக் கொண்டிருந்தார். இதனால், அவரது ஆட்சிக் காலத்தில் பிரதமர் செயலகம் பிளவர் வீதியில் இயங்கி வந்தது. மகிந்த ராஜபக்ச அலரி மாளிகையில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், மீண்டும் அதனை பிரதமரின் செயலகமாக மாற்றியுள்ளார் ரணில் விக்கிரமசிங்க. இன்று அவர் தனது கடமைகளை அலரி மாளிகையில் பொறுப்பேற்றார். எனினும், பிரதமர…
-
- 0 replies
- 801 views
-
-
வடமராட்சி கிழக்கில் இடம்பெறும் மணல் அகழ்வினை உடன் நிறுத்துமாறு கோரி இன்றைய தினம் போராட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, வலி.வடக்கு மீள்குடியேற்றக் குழு, பார ஊர்திகள் சங்கம் மற்றும் பல்வேறு கிராம அமைப்புக்கள் இப்போராட்டத்திற்கு முழுமையான ஆதரவினை வழங்கவுள்ளன. இந்த போராட்டத்தில் அனைத்துத் தரப்பினரையும் கலந்து கொண்டு கோரிக்கைகளுக்கு வலுச் சேர்க்குமாறு போராட்ட ஏற்பாட்டுக் குழு கேட்டுக் கொண்டுள்ளது. வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம், நாகல் கோவில் மக்கள் ஒன்றியம், வடமராட்சி கிழக்கு பல நோக்கு கூட்டுறவுச் சங்கம் ஆகியனவற்றில் ஒன்றின் அனுமதி மணல் அகழ்விற்கு கட்டாயம் கோரப்பட வேண்டும் என்பதை உறுதிப்படுத்த வேண்டும். மண…
-
- 0 replies
- 247 views
-
-
மகிந்த ராஜபக்ஷவை மக்கள் விரட்டியடித்தமை குறித்து பிரித்தானியாவை தளமாக கொண்டு இயங்கும் த இன்டிபெண்டன்ட் இணையத்தளம் வரவேற்பு தெரிவித்துள்ளது. சிறிலங்காவில் 2005ம் ஆண்டு ஆட்சியை கைப்பற்றிய மகிந்தராஜபக்ஷ, நீதித்துறை உள்ளிட்ட அனைத்தையும் துஸ்பிரயோகம் செய்துள்ளார். மகிந்தவின் குடும்ப ஆட்சி நாட்டில் அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருந்ததது. இதற்காக மூன்றாவது தடவையாகவும் ஜனாதிபதியாகவும் வகையில் அவர் சிறிலங்காவின் அரசியல் அமைப்பில் மாற்றங்களை மேற்கொண்டிருந்தார். எனினும் தேர்தல் மூலம் மகிந்த ராஜபக்ஷ தோற்கடிக்கப்பட்டிருக்கிறார். ஆனால் ஏனைய நாடுகளைப் போன்று மக்கள் கிளர்ச்சி ஏற்பட்டு அவர் தோற்கடிக்கப்படுவதற்குமுன்னர் தேர்தல் மூலம் தோற்கடிக்கப்பட்டுள்ளமை ஆச்சரியமான விடயம் என்று …
-
- 0 replies
- 359 views
-
-
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் யாழ்ப்பாண காரியாலயம் மூடப்பட்டுள்ளது. நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலை அடிப்படையாகக் கொண்டு, டக்ளஸ் தேவானந்தாவை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ யாழ்ப்பாண மாவட்ட இணைத் தலைவராக நியமித்திருந்தார். இந்த நியமனத்தைத் தொடர்ந்து டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் தனக்கு என ஓர் காரியாலயமொன்றை அமைத்துக்கொண்டிருந்தார். யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் 42ம் இலக்க அறையில் இந்த காரியாலயம் செயற்பட்டு வந்தது. புதிய அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டதனைத் தொடர்ந்து காரியாலயம் மூடப்பட்டுள்ளது. புதிய அரசாங்கத்திற்கு நிபந்தனை அற்ற அடிப்படையில் ஆதரவு வழங்குவதாக டக்ளஸ் தேவானந்தா அறிவித்த போதிலும், அவருக்கு அமைச்சுப் பதவி…
-
- 9 replies
- 2.4k views
-
-
தேசிய நிறைவேற்று சபை என்ற உயர் சபையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று நியமித்துள்ளார். இச்சபையின் முதல் கூட்டம் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. 100 நாள் வேலைத்திட்டம், உறுதியளிக்கப்பட்டுள்ள அரசியல் அமைப்பு திருத்தங்கள், கடந்த அரசின் ஊழல், சட்டவிரோத நடவடிக்கைகள், மனித உரிமை மீறல்கள், நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது நடைபெற்ற முறைகேடுகள், கொழும்பு மாநகரிலும், வடக்கு, கிழக்கு உட்பட நாடு முழுக்க நடைபெற்ற காணிக்கொள்ளைகள், தேசிய கணக்காய்வாளர் நடவடிக்கைகள் உட்பட புதிய அரசாங்கத்தின் தேசிய முன்னெடுப்பு தொடர்பாக, ஒவ்வொரு செவ்வாய்க்கிழமைகளிலும் இந்தத் சபை ஜனாதிபதி செயலகத்தில் கூடி ஆராய்ந்து முடிவுகளை எடுக்கும். இந்த சபையின் அங்கத்தவர்களாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ப…
-
- 3 replies
- 1.1k views
-
-
வடமராட்சி பகுதியில் 11 வயது சிறுமியை கற்பிணியாக்கியமை தொடர்பில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். வடமராட்சி நெல்லியடியைச் சேர்ந்த 11 வயது சிறுமியை கற்பிணியாக்கியமை தொடர்பில் அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளார். குறித்த இளைஞர் எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. http://virakesari.lk/articles/2015/01/16/11-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E…
-
- 0 replies
- 464 views
-