ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143550 topics in this forum
-
மூன்றாவது வேட்பாளரை தமிழர்கள் நிறுத்துவதில் உள்ள அனுகூலங்கள்! - இரும்பொறை [Wednesday 2014-12-03 20:00] தமிழ் தேசியக்கூட்டமைப்புடன் பேச வேண்டிய அவசியம் மகிந்த அரசுக்கு இல்லை என்றும், தமிழ் மக்களின் வாக்குகளை பெறுவதற்கான வழிமுறைகள் மகிந்த அரசுக்கு தெரியும் என்றும், மகிந்த ராஜபக்ஸவின் பேச்சாளர் மமதைப்பேச்சு பேசியுள்ளார். பதிலுக்கு, மைத்திரி பாலசிறீசேனவை முன்னிறுத்தும் பொது எதிரணியினர், சமஸ்டி அரசியல் அமைப்பு முறையை எவருக்கும் வழங்க முடியாது என்றும், முற்றுமுழுதாக அதை தாம் நிராகரிப்பதாகவும், இரகசிய ஒப்பந்தங்கள் எதனையும் தாம் எவருடனும் செய்துகொள்ளத்தயாரில்லை என்றும் ஆணவத்துடன் கர்ஜித்துள்ளனர். அதே பொது எதிரணியைச்சேர்ந்த சஜித் பிறேமதாச இன்னும் ஒருபடி…
-
- 3 replies
- 789 views
-
-
அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவிப்பு:- பதிவு செய்யப்பட்ட முகவர்களிடம் இருந்து மாத்திரமே அரசசார்பற்ற நிறுவனங்கள் மாடுகளைக் கொள்வனவு செய்ய முடிவு:- யாழ்ப்பாணத்தில் இருந்து நல்லினப் பசுக்கள் களவாடப்பட்டு வேறு மாவட்டங்களுக்குக் கடத்தப்படுகின்ற சம்பவங்கள் அதிகரித்திருப்பதால், அதனைத் தடுப்பதற்குப் பதிவு செய்யப்பட்ட முகவர்களிடம் இருந்து மாத்திரமே இனிமேல் அரசசார்பற்ற நிறுவனங்கள் மாடுகளைக் கொள்வனவு செய்யவேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளதாக வடமாகாண விவசாய, கமநலசேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். கால்நடைகளின் களவுகளையும், கடத்தல்களையும் தடுப்பது தொடர்பாகக் கடந்த வெள்ளிக்கிழமை கால்நடைத் திணைக்கள அதிகாரிக…
-
- 0 replies
- 355 views
-
-
சுரேஷ் பிரேமச்சந்திரன் இலங்கையில் சிங்கள தமிழ் முஸ்லிம் ஆகிய அனைத்து மக்களுக்கும் பொதுவாக உள்ள பிரச்சினைகள் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலின் மூலம் முடிவு காண வேண்டியிருக்கின்ற போதிலும், தமிழ் மக்களுக்கென தனித்துவமாக உள்ள, தீர்க்கப்படாத பிரச்சினைகள் குறித்து, முக்கிய வேட்பாளர்களின் நிலைப்பாடுகள் பற்றி தெளிவாக அறிந்த பின்பே தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தீர்க்கமான முடிவொன்றை எடுக்கும் என்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், ஈபிஆர்எல்எவ் கட்சியின் தலைவருமாகிய சுரேஷ் பிரேமச்சந்திரன் சனியன்று வவுனியாவில் தெரிவித்தார். அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னோடியாக ஈபிஆர்எல்எவ் கட்சியின் மத்தியகுழு வவுனியாவில் கூடி நாட்டின் அரசியல் நிலைமைகள் குறித்து ஆராய்ந்ததன் பி…
-
- 1 reply
- 383 views
-
-
நலிவுற்ற மக்களின் மேம்பாட்டிற்கான சமூகநலப்பணிகளை ஆற்றிவரும் தியாகி அறக்கொடை நிறுவன ஸ்தாபகரின் 63 ஆவது அகவையை நினைவு கூறும் வகையில் பல்வேறு அறப்பணி நிகழ்வுகள் கடந்த 2 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெற்றன. வவுனியா, நாவலர் வீதியில் அமைந்துள்ள சொர்ணாம்பிகை மண்டபத்தில் நிறுவனத்தின் பணிப்பாளர் செ.கமலநாதன் தலைமையில் இந்நிகழ்வுகள் இடம்பெற்றன. யாழ்பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி பேராசிரியர் ப.சிவநாதன் பிரதம விருந்தினராகவும், யாழ்ப்பாணம் உதவி பிரதேச செயலர் செல்வி தனிஸ்கா வசந்தராஜா, சமாதானத்திற்கும் நல்லெண்ணத்திற்குமான மக்கள் குழு செயலாளர் எஸ். பரமநாதன், வவுனியா சர்வோதயம் வடமாகாண ஆலோசகர் அ.கி.சிவசுப்பரமணியம், யாழ் பிரதி கல்விப்பணிப்பாளர் சி.மாணிக்கராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவு…
-
- 1 reply
- 973 views
-
-
பாகிஸ்தானிய அரசாங்கம் இலங்கை மாணவர்களுக்கு பாகிஸ்தானில் மேற்படிப்பினை தொடர்வதற்கு புலமை பரிசிலினை வழங்கியுள்ளது. மருத்துவ துறையை சேர்ந்த ஐந்து மாணவர்களுக்கும் பல் நிபுணத்துவ துறையையில் ஒரு மாணவனுக்குமான புலமைப் பரிசில்கள் பாகிஸ்தானிய உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் காஸிம் குரேஸியினால் வழங்கப்பட்டது. வருடா வருடம் பாகிஸ்தானிய அரசாங்கம் க.பொ.த சாதாரண மற்றும் க.பொ.த உயர் தரத்தில் கல்வி கற்கும் நூறு மாணவர்களின் மேற்படிப்பிற்காக மொஹமட் அலி ஜின்னா புலமை பரிசில் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://metronews.lk/article.php?category=news&news=8015#sthash.n0kLKfTu.dpuf
-
- 0 replies
- 380 views
-
-
முகப்புத்தகத்தில் ஆபாச புகைப்படங்களை பதிவேற்றம் செய்து, இரு பெண்களுக்கு அவதூறு ஏற்படுத்தினார்கள் என்ற குற்றச்சாட்டில், குடும்பஸ்தர் ஒருவரையும் இளைஞர் ஒருவரையும் சனிக்கிழமை (06) கைது செய்ததாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர். கரவெட்டி கிழக்கு பகுதியைச் சேர்ந்த யுவதியொருவரை, வரணியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவர் தன்னை காதலிக்கும்படி முகப்புத்தகத்தினூடாக வற்புறுத்தி வந்துள்ளார். குறித்த யுவதி அதற்கு மறுப்பு தெரிவிக்கவே, அவ்விளைஞனின் முகப்புத்தக சுவற்றில் பதிவேற்றியிருந்த ஆபாச புகைப்படங்களை யுவதியின் பேஸ்புக் கணக்கில் இணைத்துள்ளார். தனது குடும்பத்தினருடன் முகப்புத்தகத்தை பார்த்த போது, தனது சுவற்றில் இணைக்கப்பட்டிருந்த ஆபாச படங்களால் அசௌகரியத்துக்கு உள்ளான அந்த யுவதி, இ…
-
- 0 replies
- 489 views
-
-
அண்மையில், தேசிய நல்லிணக்க பிரதியமைச்சர் நியமிக்கப்பட்ட பழனி திகாம்பரம் பிரதியமைச்சர் பதவியைத் துறந்து விட்டு, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையத் தீர்மானித்துள்ளார். இது தொடர்பாக நேற்றிரவு ஸ்ரீகொத்தாவில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றிருந்தது. குறித்த கலந்துரையாடலின் பின்னர் ஆளுங்கட்சியிலிருந்து விலகும் தனது முடிவை உறுதிப்படுத்திக் கொண்டுள்ள பிரதியமைச்சர் திகாம்பரம், அது தொடர்பான முடிவை பெரும்பாலும் இன்றுஊடகங்களுக்கு அறிவிப்பார் என்று தெரிய வருகின்றது. அதேவேளை, நேற்றுமாலை நாடாளுமன்ற உறுப்பினர் பெருமாள் இராஜதுரை ஆளுங்கட்சியை விட்டு ஐதேகவில் இணைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.seithy.com/breifNews.php?newsID=121238&category=TamilNews&langua…
-
- 29 replies
- 2k views
-
-
பூநகரி பிரதேச சபையின் செயற்பாடுகளுக்கு தகுதி இல்லை என்று தான் நினைத்தவர்களை நீக்குவதற்கு உதவித்தேர்தல் ஆணையாளருக்கு அறிவித்துள்ளதாக தமிழர் விடுதலைக்கூட்டணி செயலாளர் ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். பூநகரி பிரதேச சபையின் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் 6 பேரையும் கட்சித்தலைமை நீக்கியுள்ளமை தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளுராட்சி தேர்தல் வேட்பு மனுவில் இடம்பெற்ற பிரச்சனைகள் காரணமாக உடனடியாக தமிழர் விடுதலை கூட்டணி சார்பில் வேட்பு மனுத்தாக்கல் செய்ய வேண்டியிருந்தது.கடந்த மூன்று வருடங்களாக சபை இயங்கிவந்தது. ஆனால் சில உறுப்பினர்களின் மேல் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன. அத்துடன் சபையின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்காததன் காரணமாகவும் …
-
- 0 replies
- 370 views
-
-
இந்தியாவின் பெங்களூர் ரோட்டரி கழகத்தின் அல்சூர் கிளையினரால் அன்பளிப்பு செய்யப்பட்ட ஒருதொகுதி இலத்திரனியல் பொருட்கள் வாழ்வகம் - விழிபுலனற்றோர் மையத்திற்கு வழங்கிவைக்கப்பட்டன. இந்த நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வடக்கு மாகாண முதலமைச்சரின் வேண்டுகோளுக்கிணங்க இந்திய பதில் தூதர் தட்சணாமூர்த்தியின் ஒருங்கிணைப்பில் இந்த உதவி வழங்கப்பட்டுள்ளளது. நிகழ்வில், பதில் தூதர் மூர்த்தி, வடமாகாண உறுப்பினர் கஜதீபன், அல்சூர் ரோட்டரி சங்க நிர்வாகிகள் சோமசுந்தரம், சந்திரசேகர், மற்றும் சென்னை சன் சிட்டி ரோட்டரி சங்க ரோடரியன் தனசேகர், ராம் பிரசாத், நல்லூர் ரோட்டரி சங்க தலைவர் ரவினதாஸ், தூதரக அதிகாரி ராஜகோபால் உட்படப் பலர் கலந்து கொண்டனர். http://malarum.com/article/tam/2014/1…
-
- 0 replies
- 329 views
-
-
இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலை விடுக்கக்கூடிய பயங்கரவாதம் மீள் எழுச்சிப்பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் எழுந்துள்ளதாக பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச எச்சரிக்கை விடுத்துள்ளார். கொழும்பு தொழில்சார்நிபுணர்களின் சம்மேளனம் இன்றைய தினம் நடத்திய செயலமர்வில் தேசிய பாதுகாப்பு என்ற தலைப்பில் ஆற்றிய உரையின் போதே கோட்டாபய இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். போர் முடிவூக்கு கொண்டுவரப்பட்டு ஐந்து வருடங்கள் கடந்துள்ள நிலையிலும்இ இலங்கையின் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளது. பயங்கரவாதம் மீள எழுச்சிபெறக்கூடிய சாத்தியப்பாடுகள் அதிகமாக இருப்பதாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளாகவோ அல்லது வேறு ஒரு அமைப்பாகவே இது இருக்கலாம். குறிப்பா…
-
- 2 replies
- 686 views
-
-
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக, வெளிநாடுகளுக்கான தூதுவர்கள் மற்றும் தூதரக அதிகாரிகள் சிலர் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். சிறிலங்கா அரசாங்கத்தினால், அரசியல் செல்வாக்கில் நியமிக்கப்பட்ட தூதுவர்களே இவ்வாறு கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அவுஸ்ரேலியாவுக்கான தூதுவர் அட்மிரல் திசார சமரசிங்க, ஜப்பானுக்கான தூதுவர் அட்மிரல் வசந்த கரன்னகொட, சிட்னியில் உள்ள தூதரக அதிகாரி பந்துல ஜெயசேகர, கன்பராவில் உள்ள துணைத் தூதுவர் லக்ஸ்மன் ஹுலுகல்ல, ரஸ்யாவுக்கான தூதுவர் உதயங்க வீரதுங்க ஆகியோரே கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளது பற்றிய விபரங்களை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு வெளியிடாமல் மறைத்து வருகிறது. …
-
- 1 reply
- 638 views
-
-
வடக்கு மாகாணம் இதுகாறும் பாதிப்புற்றவாறு இனியும் பாதிப்புக்குள்ளாக விடக்கூடாது. எமது பிழையான நடத்தைகளை, வழிமுறைகளை, சிந்தனைகளை மாற்ற நாம் முன்வர வேண்டும். இவ்வாறு தெரிவித்தார் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன். வவுனியா பொது வைத்தியசாலையில் சிறுநீரக நோயாளர்களுக்கான குருதி சுத்திகரிப்பு நிலையம், தாய்ப்பாலூட்டல் ஊக்குவிப்பு மையம், இளையோர் நேய சுகாதார நிலையம் என்பன இன்று சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டன. இந்த நிகழ்வுகளுக்கு பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்- வடமாகாண சுகாதார அமைச்சரின் சிந்தனையில் சிதறி எழுந்து மத்திய சுகாதார அமைச்சின் நிதிப்பங்களிப்புடன் இந்த இரத்தமாற்று சிகிச்சை நிலையம் அம…
-
- 0 replies
- 827 views
-
-
வாக்குரிமை உள்ளவரா?; பரிசோதித்துப் பாருங்கள் இணையத்தில் ஜனாதிபதித் தேர்தலில் வாக்காளர்கள் வாக்களிப்பதற்கான தகுதியைப் பெற்றுள்ளீர்களா என்பதை http://www.slelections.gov.lk/ID/index.aspxஎன்ற இணையத்தள முகவரியில் பார்வையிடலாம் என தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது. எதிர்வரும் ஜனவரி 8 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் நீங்கள் வாக்களிக்கத் தகுதியானவரா? உங்கள் பெயரும் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா? என்பதை இலகுவாக அறிந்துகொள்ள தேர்தல் திணைக்களம் புதிய யுக்தி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=134123468305689657#sthash.qnxpNZay.dpuf
-
- 6 replies
- 533 views
-
-
வடமாகாண மக்களாகிய நாம் முன்னாள் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவுக்கு நன்றி கூறவேண்டும். அவருக்கு வடக்கு மக்கள் நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும் என வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். வவுனியா பொது வைத்தியசாலையில் சிறுநீரக நோயாளர்களுக்கான குருதி சுத்திகரிப்பு நிலையம், தாய்ப்பாலூட்டல் ஊக்குவிப்பு மையம், இளையோர் நேய சுகாதார நிலையம் என்பன வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் அவர்களால் இன்று சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டன. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்- வவுனியா பொது வைத்தியசாலையில் சிறுநீரக நோயாளர்களுக்கான குருதி சுத்திகரிப்பு நிலையம் திறப்பதற்கான கோரிக்கையை வைத்த …
-
- 3 replies
- 1.5k views
-
-
கார்த்திகை விளக்கீடு என்பது கார்த்திகை மாதத்தில் வரும் பெளர்ணமி திகதியும் கார்த்திகை நட்சத்திரமும் கூடிய திருக்கார்த்திகை நாளில் கோயில்களிலும் வீடுகளிலும் இடம்பெறும் சிறப்பான தீபத் திருவிழாவாகும். இன்றைய நாளில் சுதுமலை முருகன் கோயிலில் சொக்கப்பனைக்கு அக்கினியிட்டு சோதி வடிவாகக் சாட்சியளிக்கச் செய்த சிவபெருமான் சோதிப்பிழம்பாகத் தோன்றிய காட்சியை நினைவு கூர்ந்து அடியார்கள் வழிபட்டனர். கார்த்திகை மாதத்தில் வருகின்ற கார்த்திகை நாள் ஏனைய கார்த்திகை நாட்களினை விடவும் விமர்சையாக தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகின்ற ஒரு விழா. மாலை வேளையில் இல்லங்களை விளக்குகளால் அலங்கரித்து ஒளி வெள்ளத்தில் இல்லங்களை மிதக்க வைத்து வழிபடுவதும் குறிப்பிடத்தக்கது. - See more at: http://o…
-
- 9 replies
- 934 views
-
-
-வடமலை ராஜ்குமார் யுத்தத்தின் பின் மீள் குடியேற்றயேற்றப்பட்டுள்ள மூதூர் கிழக்கு மக்களுடைய உற்பத்திகளுக்கு சிறந்த சந்தை வாய்ப்பினை ஏற்படுத்தும் நோக்கிலான கண்காட்சி, மூதூர் கிழக்கு கட்டைபறிச்சான் பொதுச்சந்தை வளாகத்தில், நேற்று வெள்ளிக்கிழமை(05) ஆரம்பமானது. இக்கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை(07) வரை நடைபெறவுள்ளது. திருகோணமலை மாவட்ட இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தினால், சுவீடன் கூட்டறவு நிறுவன நிதி உதவியின் ஊடாக கூட்டறவு சங்கங்களை வலுவூட்டி அதன் மூலமே இக் கண்காட்சி நடத்தப்படுகிறது. இதன் ஆரம்பநிகழ்வின் போது பிரதம விருந்தினரான கிழக்கு மாகாண கூட்டுறவு உதவி ஆணையாளர் திருமதி ராஜினி கணேசப்பிள்ளை, சுவீடன் கூட்டுறவு நிறுவனத்தின் நிகழ்ச்சி திட்ட இணைப்பாளர் டி.மயூரன், கட்டைப்பரிச்சான் இ…
-
- 0 replies
- 361 views
-
-
ஜனாதிபதி வேட்பாளர்கள் இருவருக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என பொதுபலசேனா அதிரடியாகத் தெரிவித்துள்ளது. அதன்படி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிக்க முடியாது என குறிப்பிட்டுள்ளது. அதற்காக மைத்திரிபாலவுடன் இணைந்து கொண்டுள்ள நபர்களின் கடந்த கால மற்றும் தற்கால நடவடிக்கைகள் குறித்து திருப்தி அடைய முடியாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளது. மைத்திரிபால சிறிசேனவின் பின்னணியில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க செயற்பட்டுள்ளார். எனவே மைத்திரிபால சிறிசேனவை நம்ப முடியாது என பொதுபலசேனா குறிப்பிட்டுள்ளது. இதேவேளை பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனாவிற்கு மட்டுமல்ல, அரசிற்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என பொதுபலசேனா தெரிவித்துள்ளது. http://onlineuth…
-
- 2 replies
- 344 views
-
-
மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தால் பதவியிலிருந்து அகற்றப்பட்ட முன்னாள் பிரதம நீதியரசர், சிராணி பண்டாரநாயக்க பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்து உள்ளதாகவும், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைநீக்கத்திற்கு குறிப்பாக அவர் அதிகளவு ஆதரவளிப்பதாகவும் அரசியல்வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பொதுவேட்பாளரின் தேர்தல் பிரச்சாரத்தின் உருவாககூடிய சட்டசிக்கல்களை சிரானி கையாள்வார், எனவும் எனினும் அவர் பிரச்சார மேடைகளில் தோன்றுவாரா என்பது தெரியாது எனவும் தகவல்வெளியாகியுள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் மாதுளவா சோபித தேரர் ஏற்பாடுசெய்த அரசியல் நிகழ்வொன்றில் அவர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை அவர் இழந்த உரிமைகளை தேர்தலில் வெல்லும் பட்சத்தில் மீள ஏற்படுத்திக்கொ…
-
- 1 reply
- 645 views
-
-
இலங்கைக்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவர், தனக்கு லஞ்சம் வழங்க முன்வந்தார் என்று அமைச்சர் குணரத்தின வீரக்கோன் தெரிவித்துள்ள குற்றச்சாட்டை அமெரிக்க தூதரகம் நிராகரித்துள்ளது. ஐ.நா. பதவியை ஏற்பதற்காக இலங்கையில் தனது பணிகளை முடித்துக்கொண்டு புறப்பட்டுள்ள முன்னாள் தூதுவர் மீதான இந்தக் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது. மீள்குடியேற்ற அமைச்சர் அண்மையில் முன்னாள் தூதுவர் தனக்கு லஞ்சம் வழங்க முன்வந்தார் என்றும், அது பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும், அமைச்சின் செயலாளரும் அவ்வேளை அங்கிருந்தார் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார். வெளிநாட்டு தூதுவர்கள் எப்படி அமைச்சர்களுக்கு வலைவீசுகின்றனர் என்பதை, தான் இந்த அனுபவத்தின் மூலமாக உணர்ந்துகொண்டார் என்றும் அமைச்…
-
- 2 replies
- 498 views
-
-
தனியொரு குடும்பமே நாட்டை அழித்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும குற்றம்நாட்டியுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் சலூன் கதவில் தற்போது பயனில்லை. போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது என்பதனை ஒப்புக்கொள்கின்றோம். எனினும் நாட்டின் சட்டம் ஒழுங்கு, கல்வித்துறை, ஒழுக்க விழுமியங்கள் சீரழிந்துள்ளன. சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட அரசாங்கம் முனைப்பு காட்டத்தவறியுள்ளது. ஒரு குடும்பம் கூட்டிணைந்து இந்த நாட்டை அழிவுப் பாதைக்கு நகர்த்தியுள்ளது. இதனை தடுக்கும் நோக்கிலேயே சகல சக்திகளும் ஒன்றிணைந்துள்ளன என பாலித தெவரப்பெரும தெரிவித்துள்ளார். http://seithy.com/breifNews.php?newsID=122131&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 253 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சந்திரிகா செய்து கொண்டுள்ள இரகசிய உடன்பாட்டை வெளிப்படுத்த வேண்டும் என்று அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர், எதிரணியில் கட் அவுட்டுகள் அடிப்பதற்கு ஆட்கள் இல்லை. தமது இயலாமையை காட்டி கொள்ளாமல் இருப்பதற்கே எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன உள்ளிட்டோர் பொய் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். ஜனாதிபதி தேர்தலில் ஒருவேளை மைத்திரிபால சிறிசேன வெற்றிபெற்று விட்டால் யாருக்கு அதிகாரம் என்பதில் குழப்பநிலை ஏற்படும். ஒரு கடையில் மூன்று முதலாளிகள் இருக்க முடியுமா?…
-
- 0 replies
- 296 views
-
-
தமிழர் தாயகப்பகுதியில் நிலை கொண்டுள்ள இராணுவத்தினரை அம்பாந்தோட்டையில் கொண்டு போய்விடுங்கள் ஜனாதிபதிக்காவது பாதுகாப்பாக இருக்கட்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். போரினால் இடம்பெயர்ந்து நலன்புரி முகாம்களில் வாழும் வலி.வடக்கு மக்களுடன், நேற்று மருதனார்மடத்தில் உள்ள விவசாய பயிற்சிக் கல்லூரியில் நடைபெற்ற கலந்துரையாடலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 1990 ஆம் ஆண்டு போர் காரணமாக இடம்பெயர்ந்து கடந்த 25 ஆண்டுகளாக நலன்புரி முகாம்களிலும் உறவினர், நண்பர்கள் மற்றும் வாடகை வீடுகளிலும் வலி.வடக்கு மக்கள் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வாழ்ந்து வருகின்றனர். தங்களது சொந்த நிலங்களுக்கு செல்வதற்கான உரிமை இருக்கின்றது.…
-
- 0 replies
- 290 views
-
-
விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தில் 75 சதவீதத்தை நானே வெற்றிகொண்டேன் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கூறியுள்ளார். மாத்தறையில் இடம்பெற்ற, எதிரணியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போதே அவர் இதனைக் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தில் 75 வீதத்தை நானே வெற்றிகொண்டேன். நாங்கள் விட்டுவைத்த மிகுதி 25 வீதத்தையே ராஜபக்ச அரசாங்கம் வெற்றிகொண்டது. அதுவும் சரத்பொன்சேகாவின் வெற்றி அது. இந்த யுத்த வெற்றி எங்களது. என்னவாக இருந்தாலும் யுத்தம் முடியும் போது, நாட்டின் பாதுகாப்பு அமைச்சராக இருந்தவர் மைத்திரிபால சிறிசேனவே' என சந்திரிகா குமாரதுங்க எதிரணிகளின் தேர்தல் பரப்புரைக்கூட்டத்தில் மேலும் கருத்து வெளியிட்டுள்ளார். http://www.pathivu.com/new…
-
- 2 replies
- 712 views
-
-
100 மில்லியன் வழங்கியதை பகிரங்கமாக கூறினார்: ஏன் மறைக்கப்பட்ட நிலையில் விசாரணை? : ஐ. தே.க. அரசியல் எதிரிகளை விரட்டி பழிவாங்கும் இந்த முறையை மாற்றியமைப்பதற்கு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நாட்டு மக்களுக்கு சிறந்த சந்தர்ப்பம் ஒன்று கிடைத்துள்ளது. இந்த சந்தர்ப்பத்தை நாட்டு மக்கள் தவறவிடமாட்டார்கள் என்று நம்புகின்றோம் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. நவீன் திசாநாயக்கவுக்கு 100 மில்லியன் ரூபா வழங்குவதற்கு முன்வந்துள்ளமை தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமைக்கு ஐக்கிய தேசிய கட்சி எதிர்ப்பு வெளியிடவில்லை. எனினும் மறைக்கப்பட்ட நிகழ்ச்சிநிரலுக்கு அமைய அதனை முன்னெடுப்பதையே எதிர்க்கின்றோ…
-
- 0 replies
- 510 views
-
-
எனக்கு பிள்ளைகள் இல்லை, எனக்கென்று குடும்பம் இல்லை :ரணில் எனக்கு பிள்ளைகள் இல்லை. எனக்கென்று குடும்பம் இல்லை. நான் உழைத்து கொடுப்பதற்கும் எவரும் இல்லை. எனது நோக்கம் நாட்டின் செல்வமான இளைஞர்களுக்கு நல்லதொரு எதிர்க்காலத்தை ஏற்படுத்துவதாகும். அதனை நான் முன்னின்று செய்வேன். இதற்கமைய 5 வருடத்தில் 16 இலட்சம் தொழில் வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுப்பேன் என ஐ.தே.க. தேசிய தலைவரும் எதிர்க்கட்சி தலைவரும் ரணில் விக்கிரம சிங்க சூளுரைத்தார். மஹிந்த ராஜபக் ஷ ஜனாதிபதியாக இருக்கும் வரை இளைஞர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை ஏற்படுத்த முடியாது. எனவே மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி ஆக்கி 2 வருட தேசிய அரசின் ஊடக நாட்டின் முக்கிய பிரச்சினையை தீர்ப்பேன் எனவும் அவர் தெரிவித்தார். ம…
-
- 0 replies
- 543 views
-