ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143555 topics in this forum
-
இலங்கையில் இனப்படுகொலை நடைபெற்றுள்ளது என்ற பிரேரணை வடக்கு மாகாணசபையில் ஏற்கப்பட்டு விவாதம் நடத்தப்பட வேண்டும் என்றும், இல்லையேல் தமது உறுப்பினர் பதவியைத் துறந்து போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். 'தமிழ் மக்களுக்கு எதிராக அரசாங்கம் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்ற பல்வேறு நடவடிக்கைகளின் மூலம் இங்கு இனப்படுகொலை நடைபெற்றுள்ளது என்பதைத் தெரிந்து கொண்டும், வட மாகாணசபை அது தொடர்பான தனது பிரேரணையை கடந்த ஐந்து மாதங்களாக ஏற்றுக்கொள்ள மறுத்து வருகிறது என்று சிவாஜிலிங்கம் குற்றம் சுமத்தியிருக்கின்றார். 'இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐநா மனித உரிமைகள் பேரவை நடத்திவ…
-
- 1 reply
- 779 views
-
-
ஓமந்தை சோதனைச்சாவடியும் வெளிநாட்டவர்களின் பயணப் பிரச்சனையும் - நவ கபில்:- 21 அக்டோபர் 2014 இலங்கையில் பாதுகாப்பு தோரணைகள் காலத்திற்கு காலம் மாற்றமடைந்து வருகின்றமை பல்வேறு வழிகளிலும் இடையுறுகளையும் விசனங்களையும் பொது மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது என்பது மறுப்பதற்கில்லை. எனினும் நாட்டின் பாதுகாப்பிற்கு பாதுகாப்பு வியூகங்கள் இன்றியமையாத ஒரு விடயமாக காணப்பட்ட போதிலும் அதனூடாக சாதிக்கப்பட்டவை என்ன என்பது கருத்தில் எடுக்கப்பட வேண்டிய விடயமாகவே உள்ளது. அந்த வகையில் இலங்கையில் இடம்பெற்ற யுத்தங்களின் போது ஓமந்தை இராணுவ சோதனைச்சாவடி முக்கிய பங்கை வகித்திருந்தமை மறுக்க முடியாத விடயமாகும். இவ்வாறான நிலையில் காலத்திற்கு காலம் ஓமந்தை சோதனை சாவடியிலும் பாதுகாப்பு நிலையை க…
-
- 0 replies
- 352 views
-
-
குளோபல்தமிழ்ச்செய்தியாளா் கொழும்பு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவும் புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அமை;சசர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டும் நோக்கில் ஜனாதிபதி மஹிந்த இவ்வாறு புலம்பெயர் தமிழ் சமூகத்துடன் இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக்கொள்ள முயற்சிப்பதாக சம்பிக்க குற்றம் சுமத்தியுள்ளார். நேற்று கொழும்பில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தென் ஆபிரிக்காவின் ஒத்துழைப்புடன் அவர் இவ்வாறு பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளார். எனினும் எவ்வாறான பேச்சுவார்த்தை யார் இதில் பங்கேற்றார்கள் எவ்வாறான இணக்கப்பாடு காண முயற்சிக்கப்பட்டது போன்ற விடயங்களை அவர…
-
- 2 replies
- 546 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் மீது ஐரோப்பிய ஒன்றியம் விதித்திருந்த தடையை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் கடந்த வாரம் இரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது. தடை விதிப்பதற்காக முன்வைக்கப்பட்ட காரணங்கள் பொருத்தமில்லாத காரணத்தினாலேயே புலிகள் மீதான தடை இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் செயற்பாட்டு நிலையில் இருந்து முற்றுமுழுதாக அழிக்கப்பட்டு 5 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலேயே அவர்கள் மீதான தடை இரத்தாகியுள்ளது. இந்த தடை மீதான இரத்தினால் செயற்பாட்டு நிலையில் இல்லாத விடுதலைப் புலிகளுக்கு என்ன பயன்? புலிகளை முன்னிறுத்திய போராட்டங்கள் முடிந்துவிட்ட நிலையில், அது மக்களுக்கு என்ன மாதிரியானை பயனைத் தரும் என்கிற மாதிரியான வாதப்பிரதி வாதங்கள் த…
-
- 3 replies
- 723 views
-
-
http://thinakkural.lk/supplement.html
-
- 0 replies
- 305 views
-
-
கொழும்பு புறக்கோட்டையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிய ரயில் சேவையின் மூலம் முதல் ஐந்து நாட்களில் மாத்திரம் 30 லட்சம் ரூபா வரை வருமானம் கிடைத்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த 13ஆம் திகதி யாழ்தேவி ரயில் சேவை 24 வருடங்களின் பின்னர் பளை முதல் யாழ்ப்பாணம் வரை ஆரம்பிக்கப்பட்டது. இதற்கமைய கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கும், யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பிற்கும் நாளாந்தம் எட்டு ரயில் சேவைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த சேவைகள் ஆரம்பிக்கப்பட்டு 5 நாட்களுக்குள் (18ஆம் திகதி வரை) 30 லட்சம் ரூபா வரை வருமானம் கிடைத்துள்ளதாகவும், இந்த அனைத்துச் சேவைகளிலும் பெருமளவிலானோர் பயணம் செய்வதாகவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, யாழ்ப்பாணத்த…
-
- 4 replies
- 778 views
-
-
எதிர்வரும் ஜனவரி மாதம் ஜனாதிபதித் தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று அரசு இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. எனினும் தேர்தலுக்கான திகதி இன்னமும் முடிவுசெய்யப்படவில்லை என்றும் அது தெரிவித்துள்ளது. கண்டியில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடக அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:- "ஜனாதிபதித் தேர்தல் ஜனவரி மாதம் நடைபெறவுள்ளது. தேர்தல் நடைபெறும் திகதி உத்தேசிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதை இப்போது நான் உறுதியாகக் கூறமாட்டேன்." பொதுத்தேர்தலின் போது இன, மத வேறுபாடுகளை ஒதுக்கி தேசிய நலனை முன்னுரிமைப்படுத்தி மக்கள் தமது முடிவை எடுக்கவேண்டும். தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜ…
-
- 0 replies
- 380 views
-
-
நீண்ட கால இடைவெளியின் பின்னர் கடந்த 13ம் திகதிதான் யாழ்ப்பாணத்துக்கான தொடருந்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பித்து பத்து நாட்களுக்குள்ளாகவே யாழ்ப்பாணத்தில் இன்று காலை புகையிரத தொடருந்து தடம்புரண்டுள்ளது யாழ்ப்பாணம் தொடருந்து நிலையம் அருகில் தடம்புரண்டுள்ளதுடன் புகையிரத திணைக்கள தொழில்நுட்பவியலாளர்கள் தற்போது அதனை அகற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் இந்த சம்பவத்தில் .யாழ். தேவி புகையிரத தொடருந்து சேவைக்கு பாதிப்பில்லை என்றும் தெரியவருகின்றது மேலும் யாழ்ப்பாணத்துக்கான தபால் புகையிரத தொடருந்து சேவை இவ்வாறு தடம்புரண்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது http://www.pathivu.com/news/34726/57//d,article_full.aspx
-
- 1 reply
- 676 views
-
-
வடமாகாண சபை உறுப்பினர் கஜதீபனை விழாக்களில் கலந்துகொள்ள அழைப்பதற்காகவே அவரது விபரங்களை திரட்டினோம் என்று யாழ்.மாவட்ட படைகளின் ஊடகப்பேச்சாளர் மேஜர் ரஞ்சித் மல்லவாரச்சி தனக்கு தெரிவித்ததாக இராணுவ புலனாய்வு பிரிவினரால் இயக்கப்படும் நபரான செல்வநாயகம் கபிலன் சப்புக்கொட்டியுள்ளார். வடமாகாண சபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபனின் ஏழாலையில் அமைந்துள்ள வீட்டிற்கு கடந்த சனிக்கிழமை காலை சென்ற இராணுவத்தினர் மூவர் அச்சுறுத்தலை விடுத்திருந்தனர். வீட்டுக்கு சென்ற இராணுவத்தினர், வசாவிளான் இராணுவ முகாம் பொறுப்பதிகாரி மற்றும் இராணுவ வீரர்கள் என தங்களை அடையாளப்படுத்திக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, உங்களுக்கு திருமணமாகிவிட்டதா, எத்தனை குழந்தைகள்?, உங்கள் கிராமஅலுவலர் பிரிவு என்ன? ப…
-
- 0 replies
- 700 views
-
-
வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் எதிர்வரும் 05 ஆம் திகதி இந்தியாவுக்கு செல்லவுள்ளார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியா செல்லும் அவர்இ ஒருவார காலம் தங்கியிருப்பார் எனவும் அவர் அங்கு அரசியல் பிரமுகர்கள் பலரைச் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை தமிழ்நாட்டில் நடைபெறும் நிகழ்வொன்றிலும் உரையாற்றுவார் எனவும் தெரியவருகிறது. http://www.pathivu.com/news/34724/57/5/d,article_full.aspx
-
- 0 replies
- 487 views
-
-
18ம் திருத்தச் சட்டம் தவறான முறையில் அமுல் படுத்தப்பட்டுள்ளது – பேராசிரியர் சூரி ரட்னபால:- 20 அக்டோபர் 2014 தவறான முறையிலேயே 18ம் திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழக சட்ட பேராசிரியரும், அரசியல் சாசன சட்ட வல்லுனருமான பேராசிரியர் சூரி ரட்னபால தெரிவித்துள்ளார். சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடாத்தியதன் பின்னரே 18ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தியிருக்க வேண்டுமென அவர் கோரியுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மூன்றாம் தவணைக்காக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியுமா என்பதனை தெளிவுபடுத்துமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், பேராசிரியர் சூரி ரட்னபாலவிடம் கோரியிருந்தது. இந்தக் கோரிக்கைக்கு அமைய பேராசிரியர் ஜனாதிபதி தேர்தல் மற்றும…
-
- 0 replies
- 472 views
-
-
விழிப்புணர்வுக் கூட்டங்களை நடத்தி நிலைப்பாட்டை தொளிவுபடுத்த வேண்டும். இல்லையேல் சிங்கள கட்சிகள் அல்லது அமைச்சர் டக்ளஸ் தேவானந்த செய்வது பேன்று ஏன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினால் முடியாது என்ற சாதாரண மக்களின் கேள்விகள் உண்மையாகி சரணாகதி அரசியலுக்கு வழிவகுக்கும் ஆபத்து ஏற்படலாம். -அ.நிக்ஸன்- 1994ஆம் ஆண்டில் இருந்து எதிர்க்கட்சியாக இருப்பதால் இம்முறை எந்த வழியிலாவது ஜனாதிபதி தேர்தலில் வெற்றியடைய வேண்டும் என்றும் என்ற எதிர்ப்பார்ப்பு ஐக்கியதேசிய கட்சிக்கு அதிகமாகவே இருக்கின்றது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும் ஐக்கியதேசிய கட்சியும் தற்போது விடுதலைப் புலிகள் குறித்த கருத்துக்களையே முன்வைக்க ஆரம்பித்துள்ளனர். இனவாதத்தின் அளவுக…
-
- 0 replies
- 414 views
-
-
2016ஆம் ஆண்டில் மின்சார ரயில் சேவை ஆரம்பிக்கப்படுமென ரயில் திணைக்களத்தின் புதிய பொது முகாமையாளராக அண்மையில் பதவியேற்றுள்ள விஜய அமரத்துங்க குறிப்பிடுகிறார். கடந்த வெள்ளிக்கிழமை திணைக்களத்தில் கடமையைப் பொறுப்பேற்றுக் கொண்ட பொது முகாமையாளர், அரசாங்கம் மக்களின் பொதுப் போக்குவரத்துக்கான வசதிகளை மேம்படுத்தும் பொருட்டு போக்குவரத்துத்துறையை அபிவிருத்தி செய்வதற்கான பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளது. அதன் ஒரு கட்டமாகவே இன்னும் இரு வருடங்களில் மின்சாரத்தின் மூலம் இயங்கும் மின்ரயில் சேவையை ஆரம்பிக்கப்படவுள்ளது. ரயில் சேவையின் தரத்தை மேலும் அதிகரிக்கும் பொருட்டு ரயில் இன்ஜின்கள், ரயில் பெட்டிகள் மற்றும் ரயில் ஓடு பாதைகள் மேம்படுத்தப்படவுள்ளன. அரசாங்கம் 1.200 மில்லியன் அமெரிக்க …
-
- 0 replies
- 350 views
-
-
விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த முக்கிய உறுப்பினர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். போரின் பின்னர் இராணுவத்தினரிடம் சிக்காது யாழ்ப்பாணம், மல்லாவி பிரதேசங்களில் வசித்து வந்தவரே கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் விடுதலைப் புலிகளின் ஆயுத மற்றும் புலனாய்வுப் பிரிவுகளின் முக்கிய பதவிகளை வகித்தவர் என்று கூறப்படுகிறது. கடந்த 18ம் திகதி கட்டாருக்கு தப்பிச் செல்ல முயற்சித்த போது விமான நிலையத்தில் குறித்த நபரை புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். சந்தேக நபர் பயங்கரவாத தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர். இதேவ…
-
- 1 reply
- 478 views
-
-
தமிழீழ எண்ணத்திலிருந்து விடுபட்டால் மட்டுமே நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிப்பேன் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளது மிகவும் கீழ்த்தரமானது என்று ஜே.வி.பியின் தலைவர், அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். "சட்டவிரோத தேர்தலில் போட்டியிட்டாவது ஆட்சியைக் கைப்பற்றி விடுவோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தப்புக் கணக்கு போடக்குகூடாது. ஏற்கனவே இழைத்த தவறை ரணில் மீண்டும் மீண்டும் இழைக்கக்கூடாது. குடும்ப ஆட்சியை நிலைநிறுத்தப் போராடும் மஹிந்தவை தனிமைப்படுத்த ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி முதலான அரசியல் கட்சிகளுக்கும், சிவில் அமைப்புகளுக்கும் நான் அழைப்பு விடுக்கிறேன். ஜனாதிபதித் தேர்தலை நடத்துமாற…
-
- 0 replies
- 460 views
-
-
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் கடுமையான போட்டி இருக்கும் என்றும், கடந்த இரண்டு தேர்தல்களை போன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பெரும்பான்மை வெற்றியை பெறக்கூடிய வாய்ப்பு இல்லையென்றும் கொழும்பு ஞாயிறு வாரஇதழ் ஒன்றில் வெளியான செய்தி ஆய்வில் கூறப்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்ச மூன்றாம் முறை ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட வேண்டுமானால் அவருக்கு 50.1வீத வாக்குகள் அவசியம். ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க தகுதிப்பெற்றுள்ள 11 மில்லியன் வாக்காளர்களில் இருந்து இந்த தொகை அவருக்கு கிடைக்க வேண்டும். அதாவது குறித்த 11 மில்லியன் வாக்குகளில் மஹிந்த ராஜபக்ச வெற்றிபெற வேண்டுமானால் அதிஸ்டவசமாக அல்லது துரதிஸ்டவசமாக சிங்கள பௌத…
-
- 0 replies
- 250 views
-
-
வடக்கில் எங்கு சென்றாலும் இராணுவ பிரசன்னத்தையும் அவர்கள் முகாம்களையுந்தான் பார்க்க வேண்டிய ஒரு நிர்ப்பந்தத்தை அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது என்று தெரிவித்துள்ளார் வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன். மன்னார், முள்ளிக்குளத்தில் போரால் பாதிக்கப்பட்டு, மீளக்குடியமர்ந்துள்ள 82 குடும்பங்களுக்கு தற்காலிக வீடுகளை அமைத்துக் கொடுக்கும் நோக்கில் வீட்டுத் திட்டத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது. இந்த நிகழ்வில் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் உரையாற்றிய போது- வடகிழக்கு மாகாணங்களில் படையினர் தொடர்ந்து பெருவாரியாக அரசாங்கத்தால் நிலை நிறுத்தப்பட்டுள்ளதால் எமது மக்கள் படும் அவலத்தையும் அவதியையும் எடுத்தியம்பும் ஒரு நிகழ்வாக இன்றைய இந்த நிகழ்வு அமைந்துள்ளது.…
-
- 0 replies
- 331 views
-
-
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் இறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரம் மாதுளுவாவே சோபித தேரரைச் சந்தித்து உரையாடிய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை அவரிடம் கையளித்துள்ளார். மாதுளுவாவே சோபித தேரர் மற்றும் முக்கிய மதகுருமார்களின் ஆலோசனையின் பின் குறித்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் சிறியளவிலான மாற்றங்கள் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி மாகாண சபைகளுக்குரிய அதிகாரத்தை வழங்குதல், சுயாதீன ஆணைக்குழுக்களை மீண்டும் உருவாக்குதல், தேர்தல் முறையில் சீர்திருத்தம், வாழ்க்கைச் செலவு குறைப்பு போன்ற விடயங்கள் இந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் இடம்பெற்றுள்ளன. …
-
- 0 replies
- 363 views
-
-
-செல்வநாயகம் கபிலன் வடமாகாண சபை உறுப்பினர் கஜதீபனை விழாக்களில் கலந்துகொள்ள அழைப்பதற்காகவே அவரது விபரங்களை திரட்டினோம் என்று யாழ்.மாவட்ட படைகளின் ஊடகப்பேச்சாளர் மேஜர் ரஞ்சித் மல்லவாரச்சி ஞாயிற்றுக்கிழமை (19) கூறினார். வடமாகாண சபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபனின் ஏழாலையில் அமைந்துள்ள வீட்டிற்கு சனிக்கிழமை (18) காலை சென்ற இராணுவத்தினர் மூவர் கஜதீபனிடம் விசாரணைகளை முன்னெடுத்தனர். வீட்டுக்கு சென்ற இராணுவத்தினர், வசாவிளான் இராணுவ முகாம் பொறுப்பதிகாரி மற்றும் இராணுவ வீரர்கள் என தங்களை அடையாளப்படுத்திக்கொண்டனர். தொடர்ந்து, உங்களுக்கு திருமணமாகிவிட்டதா, எத்தனை குழந்தைகள்?, உங்கள் கிராமஅலுவலர் பிரிவு என்ன? போன்ற கேள்விகளை கஜதீபனிடம் கேட்டுள்ளனர். விசாரணை செய்தமைக்கான காரண…
-
- 2 replies
- 427 views
-
-
விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகளே- இலங்கை news இலங்கை அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் என்பதனை தம்மால் நிரூபிக்க முடியும் என ஐரோப்பிய ஒன்றியத்திடம் அறிவித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் பாரியளவில் குற்றச் செயல்களில் ஈடுபட்டனர். அது தொடர்பான தகவல்களை சமர்ப்பிக்கத் தயார். தமிழீ விடுதலைப் புலிகள் 171 அரசியல்வாதிகளை படுகொலை செய்துள்ளனர். 12 பேரூந்துகள் மீது குண்டுத் தாக்குதல், 21 கிராமங்கள் மீது தாக்குதல் நடத்தி மக்களை கொலை செய்தல் உள்ளிட்ட 3000 ற்கும் மேற்பட்ட பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. குறிப்பாக இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாச உள்ளிட்டவர்களை படுகொலை செய்தல். இராணுவ அதிகாரிகள், பொ…
-
- 14 replies
- 1k views
-
-
திருகோணமலை மாவட்டத்தில் 15,157 பேருக்கு தேசிய அடையாள அட்டை இல்லை என கபே அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது. திருகோணமலை மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி, மாவட்டத்திலுள்ள பிரதேச செயலாளர்கள், ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர், இலங்கை மனித உரிமை அலுவலகத்தின் பிரதிநிதிகள் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று அண்மையில் நடைபெற்றது. இதன்போதே மேற்படி தகவல் வெளியிடப்பட்டது. அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு தேசிய அடையாள அட்டையை வழங்கும் நடமாடும் சேவையொன்றை ஆட்பதிவுத் திணைக்களமும், இலங்கை மனித உரிமை அலுவலகமும் இணைந்து அந்த மாவட்டத்தில் நடத்துவதற்கும் இதன்போது திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நடமாடும் சேவை எதிர்வரும் 15ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த நடமாடும் சேவை குறித்து பிரதேச செயலாளர்களைத் தெளிவு…
-
- 0 replies
- 386 views
-
-
போருக்கு முந்திய காலத்தையும் போர் நடைபெற்ற காலத்தையும் விடவும் போர் முடிவுற்ற பின்னர் யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு மாகாணத்தில் மது மற்றும் சிகரெட் பாவனை பல மடங்காக அதிகரித்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பல சீரழிவுகளையும் பாதிப்புக்களையும் எதிர்நோக்க வேண்டி ஏற்பட்டுள்ளதாக யாழ்.வணிகர் கழகத்தலைவர் ஆர்.ஜெயசேகரம் தெரிவித்துள்ளார். குறிப்பாக கடந்த சமாதான காலமாக 2002 ஆம் ஆண்டு யாழில் 55கோடியே 30 இலட்சத்து 4715 லீற்றரும் இறுதியுத்தம் நடைபெற்ற 2009 ஆம் ஆண்டு 76கோடியே 26 இலட்சத்து 10ஆயிரம் லீற்றரும் கடந்த 2013 ஆம் ஆண்டு 55 கோடியே 56இலட்சத்து 99ஆயிரத்து 625லீற்றரும்; ஆக குடிக்கப்பட்டிருக்கின்றது. அதாவது கடந்த 2002 ஆம் ஆண்டுடன் கடந்த 2013 ஆம் ஆண்டை ஒப்பிட்டுப் பார்க்கின்றபோது …
-
- 1 reply
- 703 views
-
-
-எம். எஸ். முஸப்பிர் கன்னித்தன்மையை கடவுளுக்கு காணிக்கையாக்குமாறு கூறி மாணவிகள் இருவரை ஏமாற்றி, அவர்களை பாலியல் துஷ்பிரயோகபடுத்தியமை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட பாதிரியார், இன்று(19) அதிகாலை உயிரிழந்ததாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர். மாதம்பை இலஹமையைச்சேர்ந்த தனுஷ்க நீலகாந்த(வயது30) என்பவரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பாதிரியார் காக்கப்பள்ளி பம்மல பிரதேசத்தில் நற்செய்தி நிலையமொன்றை நடாத்தி வந்துள்ளார். அங்கு கல்வி பயில சென்ற மாணவிகள் இருவரிடம், கன்னித்தன்மையை கடவுளுக்கு காணிக்கையாக்குமாறு கோரிய பாதிரியார், அவர்களை பலமுறை துஷ்பிரயோகப்படுத்தியுள்ளார். இவ்விடயத்தை மாணவிகள் பெற்றோரிடம் தெரிவித்ததையடுத்து, அவர்கள் சிலாபம் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.…
-
- 12 replies
- 1.1k views
-
-
சுயநலங்கருதியே சும்மா இருந்த ஜனாதிபதி சுறுசுறுப்பாக வடக்கு வந்து சுற்றுலா மேற்கொண்டு விட்டு சென்றுள்ளார்; சி.வி.விக்னேஸ்வரன் வடகிழக்கு மாகாணங்களில் படையினர் தொடர்ந்து பெருவாரியாக அரசாங்கத்தால் நிலை நிறுத்தப்பட்டுள்ளாதால் எமது மக்கள் படும் அவலத்தையும் அவதியையும் எடுத்தியம்பும் ஒரு நிகழ்வாக இன்றைய இந்த நிகழ்வு அமைந்துள்ளது. முள்ளிக்குளம் பகுதியில் இருந்து கடந்த ஏழு வருடங்களுக்கு முன்னர் இடம் பெயர்ந்த எம்மக்கள் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பிச் சென்று குடியேற முடியாத ஒரு நிலையை ஏற்படுத்தியிருக்கின்றனர் படையினர்.என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவிதார். மன்னார் முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட முள்ளிக்குளம் கிராமத்தில் யுத்தத்தினால் பாதிக…
-
- 0 replies
- 284 views
-
-
விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கம்; இலங்கை அரசுக்கு ஏற்படவுள்ள பாதிப்புக்கள் தொடர்பில் அறிக்கை ஒன்றை ஐரோப்பிய யூனியனுக்கு அனுப்பி வைக்க அரசு நடவடிக்கை விடுதலைப் புலிகள் மீதான தடையை ஐரோப்பிய யூனியன் தளர்த்தியுள்ளமை தொடர்பில் இலங்கை அரசுக்கு ஏற்படவுள்ள பாதிப்புக்கள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை ஒன்றை ஐரோப்பிய யூனியனுக்கு அனுப்பி வைக்க அரச தரப்பு நடவடிக்கை எடுத்துள்ளது என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 16 ஆம் திகதி லக்ஸம் பேர்க் நீதிமன்றில் ஐரோப்பிய யூனியன் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என கூறியிருந்தது. இங்கு தமிழீழ விடுதலைப்புலிகள் சார்பில் ஆஜரான வீ.கூபீ ஏ.எம்.வென் எய்க் மற்றும் ரி.புருமா ஆகியோர் இந்தியா உள்ளிட்ட …
-
- 0 replies
- 512 views
-