ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143554 topics in this forum
-
பொன்சேகாவின் வாக்குரிமையும் பறிபோனது; தேர்தலில் போட்டியிடவும் முடியாது! ஜனநாயகக் கட்சியின் தலைவரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகாவால் தேர்தல்களில் போட்டியிட முடியாது என்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார். நேற்றுமுன்தினம் 15 ஆம் திகதி ஓய்வு பெற்றுச்சென்ற முன்னாள் சட்டமா அதிபர் பாலித்த பெர்னாந்து, தனது சட்டமா அதிபர் பதவிக்காலத்தின் கடைசி கருமமாக சரத் பொன்சேகாவிற்கு தேர்தல்களில் போட்டியிட முடியாது என்பதை சட்டரீதியாக உறுதிசெய்துவிட்டுச் சென்றுள்ளார். இதனையடுத்து சரத் பொன்சேகாவின் பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கிய தேர்தல் ஆணையாளர், அவருக்கு எதிர்வரும் காலங்களில் தேர்தல்களில் போட்டியிடவும் முடியாது என்பதையும் உறுதிசெய்துள்ளார்.…
-
- 5 replies
- 462 views
-
-
பங்களாதேஷ் கடற் பரப்பில் மீன் பிடியில் ஈடுபட்ட 24 இலங்கை மீனவர்களை அந்த நாட்டு கரையோரப் பாதுகாப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர். குறித்த மீனவர்கள் பயணித்த இரு படகுகளும்கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. கைதான இலங்கை மீனவர்கள் தொடர்பில் பங்களாதேஷ் அதிகாரிகள் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. http://www.virakesari.lk/articles/2014/10/18/24-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81
-
- 0 replies
- 262 views
-
-
யாழ் தேவியும் மகிந்தவின் பிரமாண்ட பயணமும் மறைந்து கிடக்கும் சோகங்களும்..... குளோபல் தமிழ்ச் செய்தியாளர் - கொழும்பு:- யாழ் ரயில் நிலையம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் கடந்த 13 ஆம் திகதி ஆடம்பரமாக திறந்து வைக்கப்பட்டது. ஆனால் ரயில் நிலைய அதிபர் மற்றும் உழியர்களுக்கான தளபாடங்கள் இல்லை என்றும்; ஆளணி பற்றாக்குறை நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. நாவற்குழி, சாவகச்சேரி, பளை ரயில் நிலையங்களிலும் இவ்வாறான நிலை காணப்படுவதாகவும் முன்கூட்டிய ரிக்கற் பதிவுகள் இன்னமும் இல்லை எனவும் பயணிகள்; விசனம் தெரிவிக்கின்றனர். வடபகுதி ரயில் நிலையங்களுக்கு தேவையான ஊழியர்கள் போதாது என்றும் அதற்கான நியமனங்கள் கூட இன்னமும் செய்யப்படவில்லை என்றும் கூறுகின்ற பயணிகள் இதனால் பெரும் சிரமங்களை எதி…
-
- 0 replies
- 312 views
-
-
அம்புலன்ஸ் வண்டி விபத்தில்: வைத்தியர் உட்பட இருவர் பலி சனிக்கிழமை, 18 ஒக்டோபர் 2014 09:01 -எம். எஸ். முஸப்பிர் புத்தளம்-சிலாபம் பிரதான வீதியின் பத்துளுஓயா 61 ஆவது மைல் கல் பகுதியில் இன்று சனிக்கிழமை அதிகாலை 4.00 மணியளவில் அம்புலன்ஸ் வண்டியொன்று லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த வைத்தியர் ஒருவரும் வைத்தியசாலை சிற்றூழியர் ஒருவரும் மரணமானதுடன் அதன் சாரதி உட்பட இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர். புத்தளம் ஆதார வைத்தியசாலையில் இருந்து நோயாளி ஒருவரை சிலாபம் ஆதார வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுமதித்து விட்டு திரும்பி வரும்வழியில் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றுடன் அம்புல…
-
- 0 replies
- 372 views
-
-
முறிகண்டி - செல்வபுரம் பகுதியில், 70 அடி உயரமான மின்கம்பத்தில் ஏறி கீழே குதித்து தற்கொலை செய்யப் போவதாக மிரட்டிய ஒருவரை மாங்குளம் பொலிசார் கைது செய்துள்ளனர். நேற்று மாலை செல்வபுரத்தைச் சேர்ந்த 5 பிள்ளைகளின் தந்தையான நடராசா வசந்தன் என்பவரை, குடும்ப தகராறு காரணமாக விசாரணை மேற்கொள்வதற்கு பொலிஸார், அழைத்து செல்ல முற்பட்டனர். அதன்போது அவர்களிடம் இருந்து தப்பித்த, குறித்த நபர் மின்கம்பத்தில் ஏறி இருந்து கொண்டு கீழே குதித்து தற்கொலை செய்யப் போவதாக மிரட்டியுள்ளார். அதனை அடுத்து அங்கு கூடிய பொதுமக்கள் தற்கொலை முயற்சியை கைவிட்டு கீழே இறங்கி வருமாறு கோரியுள்ளனர். அச் சமயம் அங்கு வந்த இராணுவத்தினர் அவருடன் சமரச பேச்சுக்களை நடாத்தி எவ்வித பாதிப்பும் இல்லாமல் கீழே இறக்கினர…
-
- 1 reply
- 612 views
-
-
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தமது வெற்றி நிச்சயம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலில் எனது வெற்றி குறித்து எவரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. வெற்றி தொடர்பில் எவ்வித பிரச்சினையும் கிடையாது. வாக்குகளை மேலும் அதிகரித்துக் கொள்வதற்கான முயற்சிகளை தொகுதி அமைப்பாளர்கள் எடுக்க வேண்டும்.எதிர்வரும் ஜனவரி மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. ஜனாதிபதி தேர்தலில் விருப்பு வாக்குப் பிரச்சினை இல்லாத காரணத்தினால் அனைத்து தொகுதி அமைப்பாளர்களும் வெற்றிலைச் சின்னத்திற்கு வெற்றியைப் பெற்றுக்கொடுக்க முயற்சிக்க வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். http://onlineuthayan.com/News_More.php?id=480903556418545841
-
- 0 replies
- 343 views
-
-
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் வருகையின் போது புனிதமான புல்லுக்குளம் தற்போது மீண்டும் அசுத்தமாகியுள்ளது. கடந்த வாரம் ஜனாதிபதியின் யாழ் வருகையை முன்னிட்டு புல்லுக்குளம் சுத்தமாக்கப்பட்டது. ஆனால் தற்போது மீண்டும் அசுத்தமாகியுள்ளதோடு துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அப்பகுதியால் செல்லும் பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர். இதேவேளை தற்போது யாழில் டெங்கு அதிகரித்து வரும் நிலையில், நுளம்புகளின் இருப்பிடமாக புல்லுக்குளம் மாறிவருகிறது. http://onlineuthayan.com/News_More.php?id=564853557518392635
-
- 0 replies
- 459 views
-
-
ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையை நீக்கிய போதிலும், அந்த அமைப்பின் மீதான தடையை இந்தியாவில் நீக்குவது குறித்து மத்திய அரசு இதுவரை ஆலோசிக்கவில்லை என்று மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் இதனை கூறியுள்ளார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/130341-2014-10-18-05-24-14.html
-
- 0 replies
- 282 views
-
-
ஓமந்தையில் தடுத்து திருப்பி அனுப்பப்பட்ட ஐ.நாவின் உயர் அதிகாரி! உலக உணவு தின நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக கிளிநொச்சி நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஐ.நா உயர் அதிகாரி ஒருவர் பாதுகாப்புப் படையினரால் ஓமந்தையில் வைத்து நேற்று வியாழக்கிழமை திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார், என வடக்கிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐ.நா வின் உணவு மற்றும் விவசாய ஸ்தாபனத்தின் இலங்கைக்கும் மாலைதீவுக்குமான வதிவிடப்பிரதிநிதி குரோபோர்ட் பேர்த் அம்மையார் அவர்களே இவ்வாறு திருப்பி அனுப்பபட்டவராவார். இலங்கையில் வடமாகாணத்திற்குச் செல்வதற்குப் பாதுகாப்பு அமைச்சின் முன் அனுமதி தேவை என்று நேற்று முந்தினம் புதன்கிழமை பாதுகாப்பு அமைச்சு தெரிவித்திருந்தது. இதன் எதிரொலியாகவே இந்தச் சம்பவம் இடம்…
-
- 1 reply
- 631 views
-
-
கூட்டமைப்பை பதிவுசெய்யத் தயார், தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடைநீக்கத்தின் பின்னர் மாவை. சேனாதிராசா திடீர் அறிவிப்பு ஐரோப்பிய நீதிமன்றம் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கியுள்ள நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பதிவுசெய்வது தொடர்பாக கூட்டமைப்பிலுள்ள ஏனையகட்சிகளுடன் கலந்துரையாடவுள்ளதாக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை. சேனாதிராசா அறிவித்துள்ளார். ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரித்தானியாவில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் கிளைத்தேர்வுக் கூட்டத்தில் மாவை. சேனாதிராசாவும் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பதிய முடியாது எனத் தெரிவித்திருந்தமை குறிப்பிட்டிருந்தக்கது. http://seithy.com/breifNews.php?newsID=118917&…
-
- 0 replies
- 364 views
-
-
மனித உரிமைப் பேரவையின் தீர்மானத்தை எதிர்ப்பதனால் வரும் பின் விளைவுகளை சந்திக்க தயார்: பிரசாத் காரியவசம் - குளோபல் தமிழ் செய்தியாளர்:- அமெரிக்காவிற்குச் சென்றுள்ள இந்த மூன்று மாத காலத்தில் ஐ.நாவின் மனித உரிமைப் பேரவையில் இலங்கை எதிர்கொள்ளவுள்ள மனித உரிமை விடயங்கள் குறித்த அழுத்தங்களை குறைக்கும் பரந்துபட்ட செயற்பாட்டில் தான் ஈடுபட்டு வருவதாக அமெரிக்காவுக்கான இலங்கைக்கான தூதுவர் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளார். இலங்கையில் உள்ள தொலைக்காட்சிக்கு ஒன்று வழங்கிய செவ்வியிலேயே இந்த வியடத்தை அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் 40பேரை இதுவரையில் தான் சந்தித்துள்ளதாகவும் பிரசாத் காரியவசம் தெரிவித்தார். அமரிக்கா காங்கிரஸ், இராங்கத் திண…
-
- 0 replies
- 281 views
-
-
யாழ். மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களில் சிறுமிகள் மூவர் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மற்றும் காங்கேசன்துறை பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் பெரேரா தெரிவித்தார். யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் நிலையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், கோப்பாய் பொலிஸ் பிரிவில் 15வயது சிறுமியொருவர் உறவினர் ஒருவரால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் என பெற்றோரால் கடந்த 6 ஆம் திகதி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. முறைப்பாட்டினையடுத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். எனினும் சந்தேக நபர் தலைமறைவாகியுள்ளதனா…
-
- 5 replies
- 652 views
-
-
தனக்கு வந்தால் இரத்தம் - எங்களுக்கு வந்தால் தக்காளிச் சம்பல்! யாழ்ப்பாணத் தம்பி உவர் முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவின்ட கதையைக் கேட்டுத்தான் உப்பிடி புசத்திக் கொண்டு வாறன்.. ஓ.. அவரின்ட வாக்குரிமையை பறிச்சுப் போட்டினமாம். போன வருசம் இருந்தத இந்த வருசம் இல்லை எண்டு சொல்லிப் போட்டினமாம்.. மனுசன் உந்த நியாயத்த தேடி ஆரிட்ட போறது... பாவம்தான்... ஓ.. அதால ஐ.நாவின்ட மனித உரிமை ஆணையகத்தில போய் முறைப்பாடு செய்யப் போறராம். இலங்கையில நம்பகமான அமைப்பு ஒண்டும் இல்லையாம். அது எல்லாம் உண்மைதான். முதலாவது ஒரு முன்னாள் இராணுவத் தளபதிக்கே அதுவும் ஈழத் தமிழன அழிக்க ராஜபக்சவோட தோளோட தோள் குடுத்த பொன்சேகாவுக்கே உந்த நிலமை எண்டால் தமிழனுக்கு எந்த நிலமை எண்டு ய…
-
- 0 replies
- 529 views
-
-
1 வடமாகாணசபையால் நடாத்தப்படும் நடமாடும் சேவை வவுனியா வடக்கு புளியங்குளம் இந்துக் கல்லூரியில் 17.10.2014, 18.10.2014 ஆகிய தினங்களில் காலை 9 மணி தொடக்கம் மாலை 4 மணி வரையில் தொடக்க நாள் முதலமைச்சர் உரை குருர் ப்ரம்மா ................... அன்புள்ள அமைச்சர்களே, அலுவலர்களே, சகோதர சகோதரிகளே. இன்று ஒரு முக்கியமான தினம். நடமாடும் சேவை ஒன்றை நடத்தி மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டும் என்று பல மாதங்களாக எண்ணிக் கொண்டிருந்தோம். ஆனால் பல காரணங்களால் இதனைத் தள்ளிப்போட்டுக் கொண்டே வர வேண்டிய அவசியம் எழுந்தது. இன்று இங்கு நடத்த நாம் எத்தனிக்கும் போதும் பல சிக்கல்களையும் புறக்கணிப்புக்களையும் எதிர் கொண்டே நடத்த வேண்டியுள்ளது. இன்று பிரதம செயலாளர் சமூகமளிகவில்…
-
- 1 reply
- 684 views
-
-
மகிந்தவை 2005 ஆம் ஆண்டு சிறையிலடைத்திருக்க வேண்டும் : சரத் என். சில்வா news ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை 2005-ம் ஆண்டில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னர் சிறையில் அடைக்காமல் விட்டமைக்காக மக்களிடம் மன்னிப்பு கோருவதாக முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னதாக, ஹெல்பிங் ஹம்பாந்தோட்டை என்ற சுனாமி நிதி ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகள் உள்ளூர் ஊடகம் ஒன்றில் வெளியாகியிருந்தது. அப்போது, அவரது வேட்பாளர் அந்தஸ்து கேள்விக்குறியானபோது, அவர் மீதான குற்ற விசாரணையை நிறுத்தி சரத் என்.சில்வா தலைமையிலான உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த நிலையில் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான ஆதரங்கள் மீதான சந்தேகத…
-
- 0 replies
- 387 views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்புடனான இரு தரப்பு பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளும் துரித முயற்சியினை ஐக்கிய தேசிய கட்சி மேற்கொண்டு வருகின்றது. வெகு விரைவில் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம் எனவும் ஐக்கிய தேசிய கட்சி தெரிவிக்கின்றது. அடுத்த ஆண்டில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு வருகின்ற நிலையில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி ஏனைய எதிரணிகளை சந்திக்கும் முயற்சிகளையும் பொது எதிரணிக்கான ஆட்களை ஒன்று திரட்டும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில் தற்போது தமிழ் மக்களின் ஆதரவினை பெறும் நோக்கில் தமிழ் தேசியக்கூட்டமைப்புடனான சந்திப்புக்களுக்கான முயற்சிகளை தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஏற்கனவே ஐக்கிய தேசிய கட்சியின் …
-
- 1 reply
- 484 views
-
-
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனைப் பெற்றுள்ள முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு உச்ச நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதி வழங்கியுள்ளது. http://www.tamil.srilankamirror.com/news/2666-2014-10-17-07-01-00
-
- 5 replies
- 632 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிளுக்கு எதிரான தடையை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் நீக்கிய போதிலும் சொத்து முடக்கம் தொடர்பிலான உத்தரவுகள் தளர்த்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத பட்டியலிலிருந்து நீக்குவதற்கு தீர்மானித்த ஐரோப்பிய நீதிமன்ற நீதவான்கள், புலிகளின் சொத்து முடக்கம் குறித்த உத்தரவு தற்போதைக்கு தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என தெரிவித்துள்ளனர். ஊடகங்கள் மற்றும் இணைய தளங்களில் குறிப்பிடப்பட்ட விடயங்களின் அடிப்படையிலேயே தமிழீழ விடுதலைப் புலிகள் தடை செய்யப்பட்ட இயக்கங்களின் பட்டியலில் 2006ம் ஆண்டு இணைக்கப்பட்டதாகவும், புலிகள் தொடர்பில் நேரடியான விசாரணைகள் நடத்தப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர். தற்காலிக அடிப்படையில் சொத்து முடக்கம் த…
-
- 8 replies
- 857 views
-
-
17 அக்டோபர் 2014 கடைசியாக தரவேற்றப்பட்டது 14:43 ஜிஎம்டி புலம்பெயர் தமிழர்கள் மற்றும் அமைப்புக்களை தடை செய்வதற்காக இலங்கை அரசாங்கம் ஐநாவின் பாதுகாப்புச் சபையின் 2001 ஆம் ஆண்டின் தீர்மானத்தை துஷ்பிரயோகம் செய்வதாக குற்றஞ்சாட்டியுள்ள உலக தமிழர் பேரவை அது குறித்து பாதுகாப்புச் சபையின் கவனத்துக்கு கொண்டு செல்லுமாறு பிரித்தானிய அரசாங்கத்தை கோரியுள்ளது. இந்த விடயம் குறித்து உலக தமிழர் பேரவையின் தலைவர் வண. டாக்டர் எஸ்.ஜே. இமானுவல் அவர்கள், பிரித்தானிய பிரதமருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அமெரிக்காவின் செப்டம்பர் 11 தாக்குதலை அடுத்து ஐநாவின் பாதுகாப்புச் சபையில் கொண்டுவரப்பட்ட 1373 ஆம் இலக்க தீர்மானத்தை அடிப்படையாகக் கொண்டு இலங்கை அரசாங்கம் 16 புலம்பெயர் அமைப்புக்களையும்,…
-
- 1 reply
- 375 views
-
-
அரசாங்கம் பைத்தியக்காரர்களின் கூடாரம் என்றும், புலனாய்வுப் பிரிவினர் முற்றிப் போன பைத்தியங்கள் என்றும் ராவய ஆசிரியர் விக்டர் ஐவன் கடுமையாக திட்டியுள்ளார். புpபிசி சிங்களசேவையான சந்தேசியவுக்கு வழங்கிய செவ்வியில்... ஆக்கிரோசமான பதில்களை முன்வைத்துள்ளார். ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் அமைப்பு அண்மையில் ஊடகவியலாளர்களுக்கான கருத்தரங்கொன்றை ஏற்பாடு செய்திருந்தது. எனினும் இந்த கருத்தரங்கை நடத்தவிடாமல் தடுப்பதற்கு அரசாங்கம் கடுமையான பிரயத்தனங்களை மேற்கொண்டிருந்தது. புலனாய்வுப் பிரிவினரைப் பயன்படுத்தி கருத்தரங்கு ஏற்பாட்டாளர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. ஆத்துடன் புலிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும், கருத்தரங்கில் கலந்து…
-
- 0 replies
- 361 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை ஐரோப்பிய ஒன்றியம் தடைவிதித்த வேளையில் தவறான நடைமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளன என்றும் அதன் அடிப்படையில் விதிக்கப்பட்டுள்ள தடை தவறானது என்றும் ஐரோப்பிய நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளைப் பின்பற்றி வேறு காரணங்களை முன்வைக்காது ஐரோப்பிய ஒன்றியம் விதித்த தடை தவறானது என்றும் இது நடைமுறை சட்டத்திற்குப் புறம்பானது என்றும் அத்தீர்ப்பு தெரிவிக்கின்றது. தமிழீழ விடுதலைப் புலிகள் தடைசெய்யப்பட வேண்டிய அமைப்பா இல்லையா என்பதை ஆராயாமல் ஏனைய நாடுகளின் முடிவைப் பின்பற்றி ஐரோப்பிய ஒன்றியம் முன்வைத்த முடிவில் சட்டச்சிக்கல்கள் உள்ளதால் மட்டுமே இத்தடை நீக்கத்தை ஐரோப்பிய நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. வெறுமனே சட்டம் …
-
- 6 replies
- 856 views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் - கொழும்பு:- ஐரோப்பிய ஒன்றியத்தின் புலிகள் மீதான தடைகள் நீக்கப்பட்டால், சொத்துக்கள் முடக்கமும் நீக்கப்படும் என அரசாங்கம் எதிர்பார்த்தது, பல மில்லியன் யூரோக்கள் பெறுமதியான சொத்துக்கள் கே.பியிடமேயுள்ளன, பிரபாகரன் திரும்பி வந்து உரிமை கோரப்போவதில்லை என்பதும் அரசிற்க்கு தெரியும், கே.பி ஊடாக அந்த சொத்துக்களை தாங்கள் அனுபவிக்கலாம் என எதிர்பார்த்தே அரசு தடைநீக்க விவகாரத்தில் அலட்சியமாக இருந்தது எனஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர குற்றம்சாட்டியுள்ளார். ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப்புலிகளை தடைசெய்வதற்கான நடவடிக்கைகளை நானே முன்னெடுத்தேன், விடுதலைப்புலிகளுக்கு வெளிநாடகளில் பெருமளவு சொத்துக்கள் உள்ளது. இந்த சொத்துக்கள் இலங்…
-
- 1 reply
- 686 views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- பாப்பரசர் அதி வணக்கத்திற்குரிய முதலாம் பிரான்ஸ் ஆண்டகையின் இலங்கை விஜயம் தொடர்பிலான இறுதித் தீர்மானம் எதிர்வரும் நவம்பர் மாதம் 27ம் திகதியின் பின்னர் அறிவிக்கப்பட உள்ளது. பாப்பரசரின் விசேட பிரதிநிதிகள் குழுவொன்று எதிர்வரும் நவம்பர் மாதம் 27ம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளது. இந்தக் குழுவினர் பாப்பரசரின் இலங்கை விஜயம் தொடர்பிலான இறுதித் தீர்மானத்தை அறிவிப்பார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. தேர்தல் காலத்தில் இலங்கைக்கு விஜயம் செய்ய பாப்பரசர் விரும்பவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே இது குறித்து அரசாங்கத்திற்கு உத்தியோகபூர்வமாக பாப்பரசர் அறிவித்துள்ளார். குறிப்பாக ஜனவரி மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றால், பாப்…
-
- 0 replies
- 403 views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தின் செட்டிபாளையம் கடற்கரையில் நேற்று வியாழக்கிழமை மாலை இராட்சத திமிங்கிலமொன்று உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது. இந்தத் திமிங்கிலம் 60 அடி நீளமும் 12 அடி அகலமும் கொண்டதாகவுள்ளது. இந்தத் திமிங்கிலத்தை பகுப்பாய்வு செய்வதற்காக தேசிய நீரகவளங்கள் ஆராய்ச்சி அதிகாரசபை அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாக கடற்றொழில் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் எஸ்.டொமிங்கோ ஜோர்ஜ் தெரிவித்தார். (படங்கள்: எம்.எஸ்.எம்.நூர்தீன்,வடிவேல் சக்திவேல், எஸ்.பாக்கியநாதன்) http://tamil.dailymirror.lk/--main/130282-2014-10-17-03-39-20.html
-
- 0 replies
- 320 views
-
-
இந்தியா செல்லவுள்ள இலங்கை பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச டெல்லியில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்துப் பேசவுள்ளார். இந்தியா- இலங்கை இடையேயான பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கடந்த வாரம் கொழும்பில் நடைபெற்ற போது இந்திய- இலங்கை பாதுகாப்புத் துறை செயலர்கள் பங்கேற்றிருந்தனர். இந்த நிலையில் இலங்கை பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சே அடுத்த வாரம் இந்தியாவுக்கு செல்லவுள்ளார். இந்த பயணமானது பிரதமர் மோடி தலைமையிலான அரசு அமைந்த பின்னர் அவர் மேற்கொள்ளும் முதலாவது இந்திய பயணமென்பது குறிப்பிடத்தக்கது. http://onlineuthayan.com/News_More.php?id=648233554317663961
-
- 0 replies
- 279 views
-