Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. செவ்வாய்க்கிழமை, 14 ஒக்டோபர் 2014 16:53 0 COMMENTS –வடிவேல் சக்திவேல் தமிழ் மக்களோ, முஸ்லிம் மக்களோ வாக்களிக்காவிட்டாலும், நிட்சயம் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்கஷவே மீண்டும் ஜனாதிபதியாக வருவார் என மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். ஏனெனில், 90 சதவீதமான சிங்கள மக்கள் அவர் பக்கமே நிற்கின்றார்கள் எனவும் அவர் கூறினார். போரதீவுப்பற்று பிரதேசத்துக்கு உட்பட்ட 27 மாதர் கிராம அபிவிருத்திச் சங்கங்களுக்கும் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் விசேட நிதி ஒதுக்கீட்டின் மூலம்; 27 இலட்சம் ரூபாய் நிதி அந்தப் பிரதேச செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (14) வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூ…

  2. ஒக்டோபர் 22ஆம் திகதி தீபாவளித் திருநாள் முதல் ஒருமாத காலத்திற்கு பௌத்த - இந்து மாதமாக பிரகடனப்படுத்தி பல்வேறு நிகழ்வுகளை நடத்துவதற்கு பொதுபல சேனா என்ற அமைப்பும், அகில இலங்கை இந்து சம்மேளம் என்ற அமைப்பும் தீர்மானித்துள்ளன. கிருலப்பனையில் அமைந்துள்ள பொதுபல சேனாவின் அலுவலகத்தில் நடைபெற்றக் கூட்டத்தில் இந்த அறிவிப்பு நேற்று (14) வெளியிடப்பட்டது. இதற்கமைய சிங்கள பௌத்தர்களினதும், இலங்கையில் வாழும் தமிழ் இந்துக்களினதும் கலாசாரங்கள் உள்ளிட்ட ஏனைய உரிமைகளைப் பாதுகாப்பதற்கு பணியாற்றுவோம் என பொதுபல சேனா அமைப்பும், இலங்கை இந்து சம்மேளனம் என்ற அமைப்பும் அறிவித்துள்ளன. தீபாவளித் திருநாளில் இருந்து ஒரு மாத காலத்திற்கு அனைத்து மாவட்டங்களிலும் தெரிவுசெய்யப்பட்ட பௌத்த விகாரைகளில் இந்…

  3. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அரசாங்கத்தின் வெற்றியை உறுதிப்படுத்துவதில் சீனா அக்கறை காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சீன அரசாங்கத்தின் பெருமளவான முதலீடுகள் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், புதிய அரசாங்கமொன்று அமையும் பட்சத்தில் இந்த முதலீடுகளுக்குப் பாதிப்பு ஏற்படலாம் என்று சீனா அஞ்சுகின்றது. இதனால் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான அரசாங்கம் பதவியில் தொடர்ந்திருப்பதை விரும்பும் சீன அரசாங்கம், எதிர்வரும் தேர்தலில் அவரது வெற்றிக்கான பின்புல பங்களிப்பை வழங்கத் தயாராகியுள்ளது. இதன் ஒரு கட்டமாக இணையத்தளங்கள், சமூக வலைத்தளங்கள் ஊடாக அரசாங்கத்துக்கு எதிரான பிரச்சாரங்களைக் கட்டுப்படுத்துவதற்கு உதவ சீனா தயாராகியுள்ளது. இதன் ஒரு கட்டமாக சைபர் தாக்குதல்கள் மற்று…

    • 0 replies
    • 361 views
  4. ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்டால் ஆளும் கட்சிக்கு பாதக நிலைமை ஏற்படும் என்பதே தனது தனிப்பட்ட நிலைப்பாடாகும் என ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார். அடுத்த வருட முற்பகுதியில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படக்கூடும் என்ற தகவல்கள் தற்போது பரவலாக பேசப்படுகின்ற நிலையில், இதுகுறித்து அவரிடம் கேட்கப்பட்டபோதே விதுர விக்ரமநாயக்க இவ்வாறு தெரிவித்தார். ஜனாதிபதித் தேர்தல் குறித்து அவர் மேலும் கருத்து வெளியிட்டபோது, 'ஊவா மாகாணசபைத் தேர்தலின் மூலம் எதிர்க்கட்சிகளினால் வெற்றியீட்ட முடியும் என்ற நிலைப்பாடு உருவாகியது. ஆளும் கட்சியின் காலம் முடிவடைந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலைப்பாடுகள் உறுதியாவதை மாற்றியமைத்த பின்னரே அரசாங்கம் தேர்தல்க…

    • 0 replies
    • 615 views
  5. புலனாய்வு செய்தி சேகரிப்பு தொடர்பான பயிற்சிப் பட்டறைக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் கலந்துகொள்ளும் ஊடகவியலாளர்களுக்கு திட்டமிட்ட கும்பல் ஒன்று அச்சுறுத்தல் விடுத்துள்ளது. ட்ரான்பெரன்ஸி இன்டர்நெஷனல் - இலங்கை அமைப்பினால் ஊடகவியலாளர்களுக்கு இந்தப் பயிற்சிப் பட்டறை வெற்றிகரமாக நடத்தப்பட்டிருந்தது. ஒன்றுகூடலும், சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் இன்று (15) புதன்கிழமை காலை 10 மணிக்கு கொழும்பு தனியார் ஹோட்டல் ஒன்றில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. எனினும், இந்த நிகழ்வில் கலந்துகொள்ளக்கூடாது என்று குறித்த கும்பல் அச்சுறுத்தியுள்ளது. இந்த நிகழ்வு இரத்துச் செய்யப்படாவிடின் பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும் அல்லது உயிரைவிட வேண்டி வரும் என்று தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்…

    • 0 replies
    • 510 views
  6. விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட வடபகுதி மக்களின் நகைகளை உரிமையாளர்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புப் படைத் தரப்பு அறிவித்துள்ளது. இதுவரை 2377 சட்டபூர்வ உரிமையாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். புலிகளின் நிர்வாகத்தில் இருந்த வங்கிகளிலும், அடகு நிலையங்களிலும் தமது நகைகளை அடகு வைத்த ஏனைய மக்களும் உரிய ஆதாரங்ளுடன் விண்ணப்பிக்குமாறு பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். வட பகுதிக்கு பயணித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சம்பிரதாயபூர்வமாக 25 உரிமையாளர்களுக்கு அவர்களது தங்க நகைகளை கிளிநொச்சியில் வைத்து கையளித்தார். புலிகள் இயக்கத்தினால் நிர்வகிக்கப்பட்ட தமிழீழ வங்கி மற்றும் ஈழ அடகு நிலையங்கள் என்பவற்றில் யுத்த காலத்தில் வடபகுதி மக்கள் தம…

    • 0 replies
    • 461 views
  7. 24 வருடங்களின்பின் யாழ் ரயில் நிலையத்தை யாழ் தேவி அடைந்தது 2014-10-13 11:14:59 யாழ் தேவி ரயில் சற்றுமுன் யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தை அடைந்தது. கடந்த 24 வருடங்களின்பின் யாழ் தேவி ரயில் உத்தியோகபூர்வமாக யாழ்ப்பாணத்தை அடைந்தமை இதுவே முதல் தடவையாகும். பளையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு இன்று விஸ்தரிக்கப்படும் இந்த ரயில் சேவையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆரம்பித்து வைத்து அதில் பயணம் செய்தார். வவுனியாவுக்கு அப்பாலான வடபகுதி ரயில் சேவையானது யுத்தம் காரணமாக 1990 ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டிருந்தன. 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிடைவந்தபின் இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் வடபகுதி ரயில் பாதைகள் மீண்டும் நிர்மாணிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. யாழ் தேவியின் ஆரம்பம் இலங்…

  8. -பொ.சோபிகா, எம்.றொசாந்த், எஸ்.அரசரட்ணம் யாழ். கல்லுண்டாய்வெளி பகுதியில் திண்மக்கழிவுகளை கொட்டிவந்த யாழ். மாநகர சபை, கடந்த சில நாட்களாக கல்லுண்டாய்வெளியை அண்மித்த யாழ் - அராலி வீதியில் குப்பைகளை கொட்டி வருகின்றது. இதனால், அப்பகுதியில் பயணம் செய்வோர் மற்றும் பிரதேச மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இது தொடர்பில் யாழ். மாநகர ஆணையாளர் செல்லத்துரை பிரணவநாதன் கூறும்போது, கல்லுண்டாய்வெளியில் குப்பைகள் கொட்டி வந்த போதும், தற்போது பெய்த மழையால் கல்லுண்டாய்வெளிக்கு உழவு இயந்திரத்தை கொண்டு செல்ல முடியாத நிலை காணப்படுகின்றது. இதனால், அப்பகுதியில் பாதையொன்று போடவேண்டிய தேவை காணப்படுகின்றது. பாதை அமைப்பதற்கு வலி. தென்மேற்கு (மானிப்பாய்) பிரதேசசபையின் அனுமதி …

  9. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடந்துமுடிந்துள்ள இணை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புறக்கணித்திருந்த நிலையில், வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார். 13 காரணங்களை சுட்டிக்காட்டியே அவர், இந்த கடிதத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நேற்று செவ்வாய்க்கிழமை அனுப்பிவைத்துள்ளார். அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 1. மேன்மை தங்கிய உங்களின் பணியாளர் குழாமின் தலைவர் காமினி எஸ்.செனரத் அவர்களால் 2014 செப்டெம்பர் 23ஆம் திகதியிடப்பட்ட கடிதத்தின் உள்ளடக்கத்தைக் கீழே தருகின்றேன். 'மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களால் தலைமை தாங்கப்படும்; அட்டவணைப்படுத்தப்படும் விசேட மாவட்ட …

  10. "வடக்கு மாகாண முதலமைச்சரையும், வடக்கு மாகாண சபையையும் கண்டபடி விமர்சித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு உரிய நேரத்தில் பதில் வழங்குவேன். இந்தப் பதிலை நாடாளுமன்றில் வைத்துத் தெரிவிக்கத் திட்டமிட்டுள்ளேன்." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். வடக்கு மாகாணத்தில் சில அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனும், வட மாகாண சபையினரும் அரசுக்கு அனுமதி தரவில்லை. அவர்களும் அவற்றை செய்கிறார்கள் இல்லை. வட மாகாண சபை வைக்கோல் பட்டடை நாய் போல செயற்படுகின்றது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ நேற்றுமுன்தினம் பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியிருந்தார். வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 20 ஆயிரம் பேருக்கு காணி உற…

    • 1 reply
    • 466 views
  11. யாழ்.தேவியை அனுப்ப பளையில் நின்ற கோத்தாபாய இடையில் காணாமல் போனார்? குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- யாழ்.தேவியை யாழ்ப்பாணத்திற்கு அனுப்ப பளைக்கு சென்ற இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபாய பளையுடனே காணாமல் போயிருந்தார். அவரை யாழ்.தேவியின் பயணத்தினில் ஊடகவியலாளர்கள் பலரும் தேடித்திரிந்த போதும் அவர் காணப்படவில்லை. பளையிலிருந்து ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்ட போது அவர் தனது சகோதரரும் ஜனாதிபதியுமான மஹிந்தவுக்கு அருகில் நின்றிருந்தார். எனினும் அது ஒரு சில உள்ளுர் ஊடகவியலாளர்களால் படம்பிடிக்கப்பட்டிருந்தது. யாழ்ப்பாணம் நோக்கிய பயணத்திற்கென அவரும் யாழ்.தேவியில் ஏறியதாகவும் எனினும் பின்னர் அவரை காணவில்லை எனவும் அவர்கள் கூறுகின்றனர். தெற்கிலிருந்து …

    • 4 replies
    • 846 views
  12. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைத் தோற்கடிப்போம் என்று ஆளும் கூட்டணிக் கட்சியில் அங்கம் வகிக்கும் ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினரான அத்துரலியே ரத்ன தேரர் சூளுரைத்துள்ளார். அத்துரலிய ரத்ன தேரரின் “தூய்மையான நாளை” அமைப்பின் மூலம் தயாரிக்கப்பட்ட உத்தேச அரசியல் யாப்பு தொடர்பான வரைபை அறிமுகப்படுத்தும் முக்கிய கூட்டம் ஒன்று தற்போது நடைபெற்று வருகின்றது. கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் தற்போது கடும் ஆவேசத்துடன் அத்துரலியே ரத்ன தேரர் உரையாற்றிக் கொண்டிருக்கின்றார். இரண்டு தடவைகள் வரை மட்டுப்படுத்தப்பட்டிருந்த ஜனாதிபதி பதவியை தொடர்ந்தும் வகிப்பதற்கு வசதியாக மஹிந்த 18வது திருத்தச் சட்டத்தை கொண்டுவ…

    • 0 replies
    • 372 views
  13. -பொ.சோபிகா யாழ். - கொழும்பு ரயில் சேவை கட்டண விபரங்களை யாழ். புகையிரத நிலைய பிரதம அதிபர் என்.தவானந்தன் இன்று செவ்வாய்க்கிழமை (14) வெளியிட்டார். கடுகதி (இன்ரசிற்றி) ரயிலுக்கு 2ஆம் வகுப்புக்கு 800 ரூபாவும் 3ஆம் வகுப்புக்கு 520 ரூபாவும் அறவிடப்படும். முதலாம் தரம் இன்ரசிற்றிக்கு இல்லை. தபால் புகையிரத முதலாம் வகுப்புக்கு 1,400 ரூபாவும் இரண்டாம் வகுப்புக்கு 700 ரூபாவும் மூன்றாம் வகுப்புக்கு 500 ரூபாவும் அறவிடப்படும். யாழ்தேவி புகையிரதத்துக்கு முதலாம் வகுப்புக்கு 750 ரூபாவும் இரண்டாம் வகுப்புக்கு 550 ரூபாவும் சுற்றுச்சூழலை பார்க்கக்கூடிய விதத்தில் இருக்கைகளில் இருந்து பயணிப்பதற்கு 900 ரூபாவும் அறவிடப்படும். மாத்தறை வரையான சாதாரண ரயில் சேவைக்கு முதலாம் வகுப்புக்கு 1,32…

  14. நாட்டுக்குள் நிலவும் குடும்ப அரசியலை இல்லாதொழிப்பதற்கும் அனைவரும் தயாராகுமாறு பொது பல சேனா அமைப்பின் தலைவர் கிரம விமலஜோதி தேரர் கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கையை ஆட்சி செய்யும் கருப்பு வெள்ளையர்களை விரட்டியடிக்கவும் இந்து – சிங்கள இனத்தவர்கள் ஒன்றிணைய வேண்டும். அதேபோன்று, இந்த நாட்டின் மீதும் இனத்தின் மீதும் பற்றுள்ள இந்து – சிங்கள இளைஞர், யுவதிகளை அரசியலில் அறிமுகப்படுத்த வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கிருளப்பனையில் அமைந்துள்ள பொது பல சேனா காரியாலயத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=412563543214390095#sthash.Kp6Hmp6G.dpuf

  15. புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வேலணை பிரதேச செயலக கட்டடத்தொகுதி மற்றும் மின்சார சபையின் கட்டடம் ஆகியவற்றை ஜனாதிபதி திறந்து வைத்தார். கேஜார் நிறுவன நிதித் திட்டத்தின் கீழ் 50 மில்லியன் செலவில் வேலணை பிரதேச செயலக கட்டடத்தொகுதி நிர்மாணிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=771683542314186357#sthash.B3S29aTG.dpuf

  16. யாழ்ப்பாணத்திற்கு நேற்று விஜயம் செய்த மகிந்த ராஜபக்சவுக்கு அரச திணைக்களங்களில் பணியாற்றுபவர்கள் புதிய வகையில் மரியாதை செலுத்தியுள்ளனர். மகிந்தவின் வருகைக்கு வந்தால் தான் சமுர்த்தி,மோட்டார் சைக்கிள்கள் போன்றவை வழங்கப்படும் என கட்டாயத்தின் பேரில் அழைத்து வரப்பட்டவர்களுக்கு பனை ஓலையில் மகிந்தவின் படங்கள் ஒட்டப்பட்ட பதாகை காலையிலேயே வழங்கப்பட்டது. மகிந்த வரும் போது அதனை மேலே தூக்கி அசைத்து காட்டுமாறு அறிவுறுத்தப்பட்டது. எனினும் காலை முதலே மகிந்தவின் வருகைக்கு காத்திருந்தவர்கள் மதியம் வரை வராததால் விசனமாகி மகிந்தவின் பதாகைகளை கீழே போட்டு விட்டு அவ்விடத்தினை விட்டு அகன்று விட்டனர். இதனால் மகிந்த வரும் போது திட்டமிட்டமிட்ட படி பனை ஓலை பதாகைகளை காட்டி ஆரவாரிக்கவில்லை குறித்…

  17. வவுனியா, பசார் வீதியில் வைத்து நேற்று (13) இரண்டு வயது சிறுமி ஒருவர் கடத்தபட்டிருந்த நிலையில் விரைந்து செயற்பட்ட பொலிசார் இரண்டரை மணிநேரத்தில் குறித்த சிறுமியை மீட்டுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலை குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஜெயதிலக தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வவுனியா, சமனங்குளம் பகுதியைச் சேர்ந்த கேதீஸ்வரன் தர்சினி என்பவர் தனது இரண்டு வயது மகளுடன் வவுனியா பசார் வீதியில் உள்ள அடைவுக்கடை ஒன்றிற்கு நேற்று மதியம் 11 மணியளவில் வந்துள்ளார். குறித்த பெண் அடைவுக் கடையில் நின்ற போது அவருடைய தொலைபேசிக்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது. தான் லோஜி பேசுவதாகவும் குறித்த பெண்ணின் கணவருடைய நண்பி எனவும், நானும் தங்கள் கணவரின் நாடாகிய துபாயில் இருந்தே…

  18. ஜனாதிபதி தேர்தல் பணிகளுக்காக 160 கணணிகளுடன் இரகசிய அலுவலகமொன்று அலரிமாளிகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து மேலும் தெரிவிக்கப்படுடவதாவது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எந்த வழிமுறையை பின்பற்றியாவது மூன்றாவது தடவை வெற்றிபெறவேண்டும் என்பதில் உறுதியாகவுள்ளார். இந்த நோக்கத்தை அடிப்படையாக கொண்டு தேர்தல் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்க்கு இரு அலுவலகங்கள் கொழும்பு 7 லிலும் அலரிமாளிகையிலும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பசில் ராஜபக்சவின் அமைச்சின் செயலாளரான கலாநிதி வில்லி கமகே கொழும்பு 7 அலுவலகத்தின் நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி தேர்தல் தொடர்பான சகல ஊடக நடவடிக்கைகளும்- இங்கிருந்தே மேற்கொள்ளப்படும்- சமூக ஊடக விசாரணை,ஆய்…

  19. -எஸ்.றொசேரியன் லெம்பேட் மன்னார் - தலைமன்னார் பிரதான வீதியில் உள்ள பேசாலை கிராமத்தை அடையாளப்படுத்தும் வீதியோர பெயர்ப்பலகை மீது நேற்று திங்கட்கிழமை இரவு (13) இனந்தெரியாத நபர்;களினால் கழிவு எண்ணெய் வீசப்பட்டுள்ளது. தலைமன்னாரில் இருந்து பேசாலைக்கு வரும் வீதியில் பேசலை கிராமத்தின் எல்லையை அடையாளப்படுத்தும் வகையில் சீமேந்தினால் குறித்த பெயர்ப்பலகை தயாரிக்கப்பட்டு வீதியோரத்தில் நாட்டப்பட்டுள்ளது. அதில் பேசாலை என மூன்று மொழிகளிலும் எழுதப்பட்டுள்ளது. இந்த நிலையிலே குறித்த பெயர்பலகை மீது கழிவு எண்ணெய் வீசப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் பேசாலை கிராம முக்கியஸ்தர்கள் தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். http://tamil.dailymirror.lk/2010-…

  20. அபிவிருத்தித் திட்டங்களுடன் பொருத்தப்-பட்டிருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவின் இரண்டு பாரிய விளம்பரப் பலகைகள் கழற்றி ஆற்றில் வீசிய இளைஞன் ஒருவரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். இந்தச் சம்பவம் அநுராதரபுரம், மிஹிந்தளை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இதனைச் செய்ததாக சந்தேகிக்கப்படும் 20 வயது இளைஞர் ஒருவரையே மிஹிந்தளை காவல்துறையினர் நேற்று (13) கைதுசெய்துள்ளனர். கைதுசெயப்பட்ட சந்தேக நபரை காவல்துறையினர் அநுராதரபுரம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளனர். எவ்வாறாயினும், பிரதேசத்தை சுத்தப்படுத்தும் நோக்கிலேயே தாம் இந்த விளம்பரப் பலகைகளை கழற்றியவீசியதாக குறித்த இளைஞன் தெரிவித்துள்ளார். http://www.tamil.srilankamirror.com/

  21. வடக்கு மக்களின் பிரச்சினைக்கும், சப்ரகமுவ மக்களின் பிரச்சினைக்கும் வித்தியாசம் இருக்கின்றது எனவும் எனவே அரசியல் கட்சிகளுடன் பேசி 13ஆவது திட்டத்தின் ஊடாக அதிகாரம் பகிரப்படும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இருந்தபோதிலும் வடக்கு, தெற்கு உள்ளிட்ட நாட்டின் அனைத்துப் பிரதேசங்களிலும் ஒரேமாதிரியான சட்டமே நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று (13) ஊடகவியலாளர்களைச் சந்தித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார். அத்துடன், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமயை ரத்து செய்து நாடாளுமன்றத்திற்குப் பொறுப்புக் கூறும் பிரதமர் மற்றும் அமைச்சரவை ஆட்சி முறை உடனடியாக அமுல்படுத்தப்படும் எனவும் ரணி…

  22. கொழும்பிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற எயார் லங்கா விமானம் விபத்திலிருந்து தப்பியுள்ளது. இந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை(14) காலை 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக சென்னை விமான நிலைய தகவல்களை மேற்கோள் காட்டி, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த விமானம் தரையிறங்கும் நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து விரைவாக செயற்பட்ட விமானிகள், விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கியுள்ளனர். இதனையடுத்து விமானத்தில் பயணித்த 122 பயணிகளும் உயிர் தப்பியுள்ளதுடன் பாதுகாப்பாக விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இதேவேளை, குறித்த விமானத்தின் ஊடாக இன்று பிற்பகல் கொழும்புக்கு பயணிக்கவிருந்த 244 பயணிகளும் அங்குள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளதா…

  23. 13ம் திருத்தச் சட்டத்திற்கு அப்பலான தீர்வுத் திட்டம் வழங்கப்பட மாட்டாது என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கமொன்றின் கீழ் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் முனைப்புக்களின் போது 13ம் திருத்தச் சட்டத்திற்கு அப்பாலான தீர்வுத் திட்டம் சாத்திமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறெனினும், 13ம் திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார். அதனை எவ்வாறு அமுல்படுத்துவது என்பது குறித்து எதிர்காலத்தில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்மானிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். பொது வேட்பாளர் ஒருவர் தொடர்பில் அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புக்கள் மற்றும் ம…

  24. மட்டக்களப்பு வாசிகள் மாதம் 40 கோடி ரூபாவுக்கு மதுபானத்தை குடித்துத் தள்ளுகின்றனராம் என மாவட்ட செயலர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்திருக்கிறார் . மட்டக்களப்பில் தற்போது 66 மதுபான விற்பனை நிலையங்கள் உள்ளன. மக்களிடையே அதிரித்திருக்கும் இந்த மது பாவனையால் பெரும்பாலான குடும்பங்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கவலை வெளியிட்டார். அத்துடன் மட்டக்களப்பின் பெரும்பாலான குடும்பங்கள் ஆண்களின் வருமானத்தை மட்டுமே நம்பியதான பாரம்பரியத்தையே கொண்டுள்ளன. இவர்களின் மதுப் பாவனையால் இந்தக் குடும்பங்கள் பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கியுள்ளன. மதுவுக்கு அடிமையானோரை அந்தப் பழக்கத்தில் இருந்து மீட்பதற்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் பரவலான செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அத்…

    • 0 replies
    • 1.7k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.