Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. Published By: VISHNU 30 SEP, 2024 | 09:44 PM மாதாந்த விலை சூத்திரத்தின் பிரகாரம், திங்கட்கிழமை (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் செய்ய இலங்கை பெற்றோலியம் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. இதன்படி, ஒக்டேன் 92 பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 21 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை 311 ரூபாவாகும். 95 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை என பெற்றோலிய சட்டக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. லங்கா ஒயிட் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 24 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதுடன் அதன் புதிய விலை 283 ரூபாவாகும். லங்கா சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் வி…

  2. மீண்டும் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ள தரமற்ற இம்யுனோகுளோபுளின் மருந்துகள்? ”தரமற்ற இம்யுனோகுளோபுளின் மருந்துகள், நாட்டுக்கு மீண்டும் இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்” என்றும் விசேட வைத்திய நிபுணர், சமன் சன்ஜீவ இன்று குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் முறைப்பாடு செய்துள்ளார். தரமற்ற மருந்து மற்றும் தடுப்பூசிகள் சந்தையில் விநியோகிக்கப்பட்டு, மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்திய சம்பவங்கள் கடந்த காலங்களில் நாட்டில் நிகழ்ந்திருந்தன. இந்த சம்பவம் தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் விசாரணைகளை நடத்தியிருந்த நிலையில், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட சுகாதார அமை…

  3. Published By: DIGITAL DESK 3 30 SEP, 2024 | 12:54 PM முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தனிப்பட்ட பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட கைத்துப்பாக்கிகளை பாதுகாப்பு அமைச்சிடம் தாமதமின்றி திரும்ப ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் துப்பாக்கிகளைப் பெற்ற முன்னாள் எம்.பி.க்களுக்கு, கைத்துப்பாக்கிகளை ஒப்படைக்குமாறு பாராளுமன்ற அதிகாரிகள் தனித்தனியாக கடிதம் அனுப்பியுள்ளதாக, மூத்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அண்மையில் கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தில் உள்ள 225 உறுப்பினர்களில் 100க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தனிப்பட்ட பாதுகாப்பிற்காக கைத்துப்பாக்கிகளை பெற்றுள்ளதாக புள்ளிவிபரங்கள் சுட்டிக…

  4. 2050 ஆண்டளவில் இலங்கையின் கடல் மட்டம் 0.2 முதல் 0.6 மீற்றர் வரை உயரும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், கரையோர சமூகங்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடல் மட்ட உயர்வினால் ஏற்படும் இருத்தலியல் அச்சுறுத்தல்களை நிவர்த்தி செய்வதற்கான உயர்மட்டக் கூட்டம் கடந்த புதன் கிழமை ஐ.நா. பொதுச் சபையில் இடம்பெற்றிருந்தது. இதில் கலந்துகொண்டுப் பேசிய ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ், வரவிருக்கும் நெருக்கடி குறித்து கடுமையான எச்சரிக்கைகளை வெளியிட்டிருந்தார். இதனை தொடர்ந்து உலகெங்கிலும் உள்ள நாடுகள் நடவடிக்கை எடுப்பதற்கான தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தின. “எங்கள் உ…

  5. 30 SEP, 2024 | 10:24 AM தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மக்கள் மத்தியில் ஒவ்வொரு தேர்தலிலும் குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர். ஏதாவது ஒரு கருப்பொருளை கொண்டு வந்து தமிழர்களை குழப்புவார்கள். இல்லாவிட்டால் சர்வதேசம் பார்த்துக்கொண்டு இருக்கின்றது வாக்களியுங்கள் என கூறுவார்கள். இவ்வாறாக குழப்பங்களை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி சுமார் 62 வருடங்களாக தமிழர்களின் வாக்குகளை தமிழரசுக்கட்சியினர் பெறுகின்றார்கள். தற்போது அம்பாறை மாவட்ட தமிழர்கள் படுகின்ற இன்னல்களை உதாரணமாக கூற முடியும். ஆகவே இவ்வாறான விடயங்களை தமிழ் மக்கள் உணர்ந்திருக்கின்றார்கள் என தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொது செயலாளரும், கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான பூபாலப்…

  6. 28 SEP, 2024 | 11:22 AM வரி செலுத்தத் தகுதியான அனைவரும் 2023/2024 ஆண்டுக்கான வருமான வரியை செப்டம்பர் 30ஆம் திகதிக்கு முன்னர் செலுத்த வேண்டும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. குறித்த கால அவகாசத்துக்குள் வரி செலுத்தத் தவறினால் அபராதம் மற்றும் வட்டி அறவிடப்படுவதோடு, தள்ளுபடி செய்யப்படவோ குறைக்கப்படவோ மாட்டாது என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்தோடு, நிலுவையில் உள்ள அனைத்து இயல்புநிலை வரிகளையும் எதிர்வரும் ஒக்டோபர் 30ஆம் திகதியன்று அல்லது அத்திகதிக்கு முன்னர் செலுத்த வேண்டும் என்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் நினைவூட்டியுள்ளது. இது தொடர்பான மேலதிக தகவல்களை பெற விரும்புவோர் 1944 என்ற இலக்க…

  7. யாழின் முக்கிய வீதிகளை மீண்டும் திறக்குமாறு ஜனாதிபதியிடம் அங்கஜன் இராமநாதன் வலியுறுத்தல் யாழ்ப்பாணத்தின் முக்கிய வீதிகளை மீண்டும் திறக்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிடம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் வலியுறுத்தியுள்ளார். வலி வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தில் வீதிகள் திறப்பது நல்லிணக்கத்தையும் பிராந்திய அபிவிருத்தியையும் பலப்படுத்தும் என இராமநாதன் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். “கொழும்பின் சமீபத்திய வீதி அணுகல் சீர்திருத்தங்களுக்கு இணங்க, யாழ்ப்பாணத்தின் முக்கிய வீதிகளை மீண்டும் திறக்குமாறு ஜனாதிபதி @அனுரா திசநாயக்கவிடம் நான் வலியுறுத்த விரும்புகிறேன்,” என்று அவர் கூறினார். கொழும்பில் உள்ள முக்கிய வீதிகளை இன்று முதல் பொதுமக்கள…

  8. இலங்கையில் முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை குறிப்பிட்டளவில் சீரமைக்க, அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக, தனது தேர்தல் பிரசாரத்தின் போது, முன்னாள் ஜனாதிபதிகளின் ஓய்வூதிய சலுகைகள் குறித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதியளித்திருந்தார். சட்டத்தின்படி,ஒவ்வொரு முன்னாள் ஜனாதிபதியும் அவரின் வாழ்நாளில் வாடகையின்றி பொருத்தமான குடியிருப்பைப் பயன்படுத்த உரிமை உண்டு. மாதாந்த கொடுப்பனவு பொருத்தமான குடியிருப்பு வழங்கப்படாவிட்டால், மாதாந்த ஓய்வூதியத்தில் மூன்றில் ஒரு பங்கிற்கு இணையான மாதாந்த கொடுப்பனவு அவருக்கு வழங்கப்பட வேண்டும். ஒவ்வொரு முன்னாள் ஜனாதிபதிக்கும், ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் பதவியை வகிக்கும் ஒருவரு…

  9. Published By: VISHNU 30 SEP, 2024 | 03:41 AM மன்னார் போக்குவரத்து பிரிவு பொலிஸ் சார்ஜன்ட் மலலசேகர (41308) வின் துரித நடவடிக்கையின் காரணமாக மன்னார் பிரதான பாலத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (29) காப்பாற்ற பட்டதாக தெரிய வருகிறது. ஞாயிற்றுக்கிழமை (29) காலை மன்னார் நகருக்குள் நுழையும் பிரதான பாலத்திற்கு அருகில் உள்ள அலுவலகத்தில் பிரதேச போக்குவரத்து பிரிவுக்கு பொறுப்பான பொலிஸ் சார்ஜன்ட் மலலசேகர பணிபுரிந்து கொண்டிருந்த போது பெண் ஒருவர் கையில் கடிதம் போன்ற ஒன்றை எடுத்துக் கொண்டு வந்துள்ளார். பின்னர் குறித்த யுவதி குறித்த பொலிஸ் அதிகாரியிடம் தமிழ் தெரியுமா? என கேட்டுள்ளார். அதற்கு சார்ஜன்ட் …

  10. ஜனாதிபதியின் தீர்மானத்த‍ை இடைநிறுத்திய தேர்தல்கள் ஆணைக்குழு! நெற்செய்கையாளர்களுக்கு உயர் பருவத்தில் 25,000 ரூபா கொடுப்பனவும், மீனவ மக்களுக்கு எரிபொருள் மானியமும் வழங்குவதற்கான ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தீர்மானத்தை தேர்தல்கள் ஆணைக்குழு இடைநிறுத்தியுள்ளது. பொதுத்தேர்தல் அறிவிக்கப்படும் போது இவ்வாறான மானியத்தை வழங்க தீர்மானித்ததன் மூலம் ஏனைய வேட்பாளர்களின் பாதகத்தை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்தார். இதன்படி, பொதுத் தேர்தலின் பின்னர் உரிய பொதுக் கொள்கைத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழு ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளது. ஆணைக்குழு நேற்று கூடிய போது…

  11. ரணில் – சஜித் கூட்டணி முயற்சி இழுபறி நிலை! எதிர்வரும் பொதுத் தேர்தலை இலக்காகக் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளுக்கு இடையிலான கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை முறிவடையும் நிலையை எட்டியுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்த இரண்டு பிரதான நிபந்தனைகளே இதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது. பொதுத் தேர்தலில் இணைந்து போட்டியிடுவது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையில் அண்மையில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. இதுவரையில் சுமார் எட்டு கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ள போதிலும், ஐக்கிய மக்கள் சக்தியின் இரண்டு பிரதான நிபந்தனைகள் காரணமா…

  12. அரசியலமைப்பு சபையில் புதிய மாற்றம்! அரசியலமைப்பு சபைக்கான ஜனாதிபதியின் பிரதிநிதியாக அமைச்சர் விஜித ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் குறித்த நியமனம் செய்யப்பட்டதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன குறிப்பிட்டுள்ளார். இதன்படி, முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அரசியலமைப்பு சபையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். மேலும், பிரதமராக நியமிக்கப்பட்ட கலாநிதி ஹரிணி அமரசூரிய புதிய அரசியலமைப்பு சபை உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாராளுமன்றம் கலைக்கப்பட்டாலும், புதிய பாராளுமன்றம் அமைக்கப்படும் வரை அரசியலமைப்பு சபைய…

  13. அநுரவின் ஆட்சியில் தமிழுக்கு முக்கியத்துவம் - தமிழில் பேசிய கிழக்கு ஆளுநர்!

  14. 29 SEP, 2024 | 03:03 PM (நமது நிருபர்) கல்வித்துறை அரசியலாகிவிட்டது. தற்போது சமூகத்தில் கல்வியின் மீது நம்பிக்கை இல்லை. கல்வியின் மீதான நம்பிக்கையை கட்டியெழுப்புவது மிகவும் முக்கியமானது. இலங்கையை உலகில் அங்கீகரிக்கப்பட்ட நாடாக மாற்றும் கல்வி முறையை தயார் செய்ய வேண்டும் என பிரதமரும் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். நாட்டில் நிலவும் நெருக்கடிகளுக்கு விரைவான தீர்வுகளைத் தேடும் அதே வேளை சிறந்த கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த விரும்புகிறோம். இது ஒரு கூட்டுப் பயணம். ஒரு கட்சியோ, ஒரு அரசாங்கமோ மாத்திரம் அதை செய்ய முடியாது. அதற்கு மக்களின் ஆதரவை எதிர்பார்க்கிறேன் என்றும் அவர் தெரிவித்தார். ஐந்து வருடங்க…

  15. 29 SEP, 2024 | 07:06 PM இலங்கை கடற்படையையும் அரசாங்கத்தையும் குற்றம் சாட்டுவதை தமிழக முதலமைச்சர் கைவிட வேண்டும் என அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் என்.வி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று சனிக்கிழமை (28) ஊடகங்களை சந்தித்தபோதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில், தமிழக முதலமைச்சருக்கு நான் ஒரு கோரிக்கையை முன்வைக்கின்றேன். 2016ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் எடுக்கப்பட்ட உடன்படிக்கையை படித்துப் பாருங்கள். அதன் பின்னர் நீங்கள் இழுவை மடி தொழிலை செய்வதாக நிறுத்துவதா என்ற நிலைக்கு வர முடியும். எமது நாட்டிலே உள்ள க…

  16. 29 SEP, 2024 | 05:31 PM நாட்டில் புரையோடிப் போயிருக்கின்ற இனப்பிரச்சினைக்கு யுத்தத்துக்குமான காரணகாரியங்களை கண்டறிந்து, நாட்டில் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் பட்சத்தில், இந்நாட்டின் மீதான இதர தலையீடுகளை இல்லாமற்செய்து, தேசத்தை அபிவிருத்தி நோக்கி கட்டியெழுப்ப முடியும் என குரலற்றவர்களின் குரல் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதியிடம் எட்டு கோரிக்கைகளை கடிதம் மூலம் குரலற்றவர்களின் குரல் அமைப்பினர் முன்வைத்துள்ளனர். அந்த கடிதத்திலேயே மேற்படி குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இலங்கைத் தீவில் நடைபெற்று முடிந்துள்ள ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தல் முடிவானது, மரபு கடந்த ஒரு ஆட்சிக்கு வித்திட்டுள்ளது…

  17. 29 SEP, 2024 | 12:08 PM எதிர்வரும் பொதுத் தேர்தலிலும் மாகாண சபைத் தேர்தலிலும் அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து ஒரே சின்னத்தின் கீழ் போட்டியிட முயற்சி செய்யுங்கள் என திருகோணமலை மாவட்ட தமிழ் மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். எமது அபிலாசைகளை வென்றெடுக்க நாம் பாடுபட வேண்டும். ஒரே இனம் ஒரே கொள்கை ஒரே சின்னம் என்ற அடிப்படையில் இணைந்து செயற்பட அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளையும் கரம் கூப்பி மிகத் தாழ்மையுடன் அழைக்கின்றோம். இந்நிகழ்வானது மிக விரைவில் இடம்பெற வேண்டும் என்றும் தமிழ் மக்களின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/195041

  18. இரண்டு மில்லியன் ரூபாவிற்கும் மேல் மோசடி செய்த உக்ரைன் (Ukraine) பிரஜைகள் இருவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேபர்கள் இருவரும் தனியார் வங்கி ஒன்றின் ஆண்டு நிறைவுக்கு பரிசுகள் தருவதாக முகப்புத்தகத்தில் விளம்பரம் செய்து இந்த பண மோசடியில் ஈடுபட்டுள்ளனர். குறித்த விளம்பரத்தைப் பார்த்து இணைப்பை உள்ளிடுபவர்களின் வங்கிக் கணக்குத் தகவல் உட்பட பல தனிப்பட்ட தகவல்கள் அதில் சேர்க்கப்பட வேண்டும். கைது நடவடிக்கை இவ்வாறு பிரவேசிக்கும் நபர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்ட பணத்தை ஒரு குழுவினர் மோசடி செய்து செல்வதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு தகவல்…

  19. 27 SEP, 2024 | 05:11 PM மாற்றத்திற்கான மாற்று வழி தொடர்பாக திறந்த உரையாடல் நாளை சனிக்கிழமை (28) வவுனியா வாடி வீட்டில் இடம்பெற உள்ள நிலையில் வடகிழக்கு பகுதியில் உள்ள பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், கல்வியலாளர்கள், சமூக சிந்தனையாளர்கள், அரசியல் ஆர்வலர்கள், குறிப்பாக மாற்றத்தை விரும்பும் இளையோர்கள் அனைவரையும் கருத்து பகிர்வில் கலந்து கொள்ளுமாறு தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ். சிவகரன் கோரிக்கை விடுத்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் இன்று வெள்ளிக்கிழமை (27) அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில், கடந்த பல தசாப்தமாக தொழில் முறை அரசியல் வாதிகளால் தமிழ்த்தேசிய…

  20. சங்கா?,குத்துவிளக்கா?; தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பின் இழுபறி எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பாகப் போட்டியிடுவது தொடர்பில் அரசியல் கட்சியினருக்கும் சிவில் சமூகப் பிரதிநிதிகளுக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடல் இழுபறியில் முடிவு எட்டப்படாமல் முடிவுறுத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பில் தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளுக்கும் சிவில் சமூகப் பிரதிநிதிகளின் கூட்டான தமிழ் மக்கள் பொதுச் சபையினருக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று நேற்றையதினம்(26) யாழிலுள்ள தனியார் விருந்தினர் விடுதியொன்றில் இடம்பெற்றது. இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பில் அ…

  21. இலக்கிய மாதத்தையொட்டி 25 ஆவது தடவையாக கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடத்தப்படும் "கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சியை" ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பார்வையிட்டுள்ளார். இதன்போது இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் சமந்த இந்தீவர,சிறுவர் புத்தகங்கள் தொடர்பிலான தேசிய கொள்கைப் பத்திரத்தை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் வழங்கி வைத்தார். பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (28) நடைபெறும் கண்காட்சிக்கு வருகை தந்திருந்த மக்கள் ஜனாதிபதிக்கு விசேட வரவேற்பளித்தனர். 400 புத்தக கூடங்கள் இங்கு 400 புத்தக கூடங்கள் அமைக்கப்பட்டிருந்த நிலையில், அவற்றைப் பார்வையிட வந்திருந்த மக்களோடு ஜனாதிபதி சிநேகபூர்வமாக கலந்துரைய…

  22. தமிழரசு கட்சியின் மத்திய குழுக்கூட்டம். தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக்கூட்டம் இன்றைய தினம் வவுனியாவில் உள்ள விருந்தினர் விடுதியில் இடம்பெற்று வருகின்றது. மாவை சேனாதிராஜா தலைமையில் இடம்பெற்றுவரும் இக்கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் தமிழரசு கட்சியின் நிலைப்பாடு தொடர்பாக கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இக்கூட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், எம்.ஏ.சுமந்திரன், க.குகதாசன், ஈ.சரவணபவன்,இரா.சாணக்கியன், கலையரசன்,சாந்தி சிறீஸ்கந்தராஜா, சி.சிவமோகன்,அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், சட்டத்தரணி கே.வி தவராசா கட்சியின் செயலாளர் ப.சத்தியலிங்கம், உட்பட கட்சியின் பெரும்பாலான மத்திய குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். https:…

  23. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் (University of Jaffna) சிரேஷ்ட விரிவுரையாளர்கள் இருவர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிகபீடத்தின் வணிகவியல் துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவரையும், விஞ்ஞான பீடத்தின் பௌதிகவியல் துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவரையும் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்துவதற்குப் பல்கலைக்கழகப் பேரவை இன்று (28) ஒப்புதல் வழங்கியது. பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தக் கூட்டம் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா (S.Srisatkunarajah) தலைமையில் இன்று (29) நடைபெற்றது. பேராசிரியராக பதவி உயர்வு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுச் (UGC) சுற்றறிக்கை நியமங்களுக்கு அமைய, திறமை அடிப்படையில் …

  24. தமிழர் அபிலாசைகளை முன்கொண்டு செல்லக்கூடியவர்களை அரசியலில் களமிறக்க வேண்டும்; வவுனியா மாவட்ட உண்மை மற்றும் நல்லிணக்க மன்றம் தமிழ் அரசியல் தலைமைகளிடம் கோரிக்கை 28 SEP, 2024 | 05:04 PM சட்டவாக்க சபைக்கு செல்பவர்கள் குற்றச்செயலோடு சம்பந்தமற்றவர்களாகவும் சுயநலம் அற்றவர்களாகவும் ஊழல் மற்றும் அரசியலால் தனிநபர் முன்னேற்றம் போன்றவற்றை தவிர்த்து சமூகம் சார் அறிவுடன் அவை சார்ந்த சிந்தனையை மேலோங்கி கொண்டு செல்லக்கூடிய முற்போக்காளர்களையும் அரசியலில் களமிறக்க வேண்டும் என வவுனியா மாவட்ட உண்மை மற்றும் நல்லிணக்க மன்றம் கோரிக்கை விடுத்து கட்சித் தலைவர்களுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளது. இக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.