ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143554 topics in this forum
-
இரணைமடு குளத்தில் மீன்பிடிப்பதை தடுக்கவில்லை : இராணுவம் இரணைமடு குளத்தில் மீனவர்களின் மீன்பிடி நடவடிக்கைகளுக்கு இராணுவத்தினரால் தடை விதிக்கப்பட்டதாகவும் இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் வெளியான செய்திகளில் எதுவித உண்மைகளும் இல்லை என இராணுவ பேச்சாளரும் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மைய பணிப்பாளருமான பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார். பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தில் புதன்கிழமை (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, அவர் இதனை கூறினார். இரணைமடு வாவி பிரதேசத்தில் மீன்பிடி சங்கம் ஒன்று உள்ளது. அதில் அப்பிரதேசத்தில் வசிக்கும் 120ற்கும் அதிகமான மீனவ குடும்பங்கள் அங்கம் வகிக்கின்றன. இவர்களின் மீன்பிடி நடவட…
-
- 0 replies
- 268 views
-
-
கலைமகள் தமிழ்ப் பிரிவின் தலைவர் பணியில் சேர்ந்தது:1999 கேள்வியும் பதிலும் நிகழ்ச்சி அறிவிப்பாளர் வாணி தமிழ்ப் பிரிவின் துணைத் தலைவர் பணியில் சேர்ந்தது:1995 அறிவியல் மற்றும் நலவாழ்வு பாதுகாப்பு நிகழ்ச்சி அறிவிப்பாளர் மீனா பணியில் சேர்ந்தது:2003 சீனப் பண்பாடு நிகழ்ச்சி தயாரிப்பாளர் வான்மதி பணியில் சேர்ந்தது:2003 சீனாவில் இன்பப் பயணம் நிகழ்ச்சி அறிவிப்பாளர் மேலும் அறியhttp://tamil.cri.cn/301/2013/01/25/1s124840_3.htm
-
- 2 replies
- 651 views
-
-
பாதாளத்தை நோக்கி… போருக்குப்பின்னரான இலங்கையில் நல்லிணக்கத்தை அடைவதற்காக பல்வேறு முன்னேற்றகரமான நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன என்று இலங்கை அரசு அடிக்கடி கூறிவருகின்றது. ஆனால் நல்லிணக்க நடவடிக்கைகளாக அரசு குறிப்பிடுபவையயல்லாம் இலங்கையிலுள்ள சிறுபான்மையின மக்களின் மத்தியில் காணப்படும் அச்சங்களைப் போக்குகின்ற விடயங்களாகக் காணப்படவில்லை. மாறாக சிறுபான்மையின மக்களின் நம்பிக்கை யீனத்தை அதிகரிக்கின்றதும் ஸ்திரநிலைப்பாட்டைக் கேள்விக்குட்படுத்துவதுமான செயற்பாடுகளே தற்போது அதிகளவில் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. வடக்குக் கிழக்கிலே பொதுமக்களுக்குச் சொந்தமான நிலங்களை பலவந்தமாக கையகப்படுத்துதல், பெளத்த மக்களே இல்லாத இடத்தில் விகாரைகளை நிர்மாணித்தல், பொருளாதார வளங்களை சூறையாடல் போன…
-
- 0 replies
- 696 views
-
-
அப்பாவித் தமிழ் இளைஞர், யுவதிகளை விடுவிக்க உடன் நடவடிக்கை எடுங்கள்! ஜனாதிபதியிடம் சிறீரெலோ கட்சி கோரிக்கை சிறைச்சாலைகளில் வாடித் தவிக்கும் அப்பாவி தமிழ் இளைஞர், யுவதிகள் மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யப்படவேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளளது சிறீரெலோ கட்சி. வடக்கு மாகாணத்துக்கு அடுத்த வர இறுதியில் வரவிருக்கும் ஜனாதிபதியிடம் தாம் இந்த கோரிக்கையை முன்வைக்கின்றனர் என்று அந்தக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் எஸ்.செந்தூரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு:- கடந்த 3 தசாப்தகாலமாக அவசரகாலச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த போது எந்தவித குற்றமும் செய்யாத எம் தமிழ் இளைஞர், யுவதிகள் ஆயுதப் போராட்டத்தி…
-
- 0 replies
- 595 views
-
-
காலத்துக்கு ஏற்றவகையில் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்கிறார் முதலமைச்சர் விக்னேஸ்வரன்! [Wednesday 2014-10-01 21:00] காலத்துக்கு ஏற்றவகையில் மக்களின் பிரச்சினைகளை தீர்த்துவைப்பதற்கு தயாராக இருப்பதாக வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மன்னார் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட ஈச்சலவக்கை கிராம மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கண்டறிவதற்காக வடமாகாண முதலமைச்சர் தலைமையிலான அமைச்சர்கள் குழுவொன்று நேற்று அங்கு சென்றிருந்தனர். குறித்த பிரதேசத்தில் உள்ள வீதிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான பொறுப்புகளை தாம் ஏற்றுக்கொள்வதாக முதலமைச்சர் தெரிவித்தார். மக்கள் எதிர்நோக்கும் கல்வி போக்குவரத…
-
- 0 replies
- 463 views
-
-
வடக்கில் ஜனாதிபதி பங்கேற்கும் நிகழ்வுகள் - கூட்டமைப்புக்கு அழைப்பு இல்லை! [Wednesday 2014-10-01 17:00] ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வரும் 12ம் திகதி வடக்கிற்குப் பயணம் செய்யவுள்ள நிலையில் அவருடைய நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்கான அழைப்பு இன்னமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குக் கிடைக்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். எதிர்வரும் 12, 13, 14 ஆகிய நாட்களில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வடக்கிற்கு பயணம் செய்யவுள்ளனர். இந்நிலையில் இந்தப் பயணத்தின் போது இடம்பெறவுள்ள நிகழ்வுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கலந்து கொள்ளுமா எனக் கேட்டபொழுதே அவர் இவ்வாறு தெரிவித்தார். ஜனாதிபதியின் வடபகுதிப் பயணத்தின் போது கிளிநொச்சி, ய…
-
- 0 replies
- 475 views
-
-
யாழ். ஊடகவியலாளர் தயாபரனிடம் மூன்றரை மணிநேரம் விசாரணை! [Wednesday 2014-10-01 17:00] யாழ்ப்பாண ஊடகவியலாளர், இரத்தினம் தயாபரன் இன்று காங்கேசன்துறையில் இயங்கிவரும் வடமாகாண விசேட குற்றப்புலனாய்வுப் பிரிவில் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டார். சுமார் மூன்றரை மணி நேரம் இந்த விசாரணை இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த இரு மாதங்களாக பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள், பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர், காவல்துறை விசாரணைகளை அவர் தொடர்ச்சியாக எதிர்கொண்டிருந்ததாக தெரியவருகிறது. இந்தநிலையில் இன்று அவர் வடமாகாண விசேட குற்றப்புலனாய்வு பிரிவிற்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. காலை பத்து மணிக்கு அவரிடமிருந்து வாக்குமூலம் ப…
-
- 0 replies
- 697 views
-
-
மன்னார் ஆயருடன், வடமாகாண முதல்வர், அமைச்சர்கள் சந்தித்துப் பேச்சு! [Wednesday 2014-10-01 17:00] மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகையை, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான வடமாகாண அமைச்சர்கள், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு நேற்று மாலை மன்னார் ஆயர் இல்லத்திற்குச் சென்று மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகையுடன் நீண்ட நேரம் கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இதன் போது மன்னார் மாவட்ட மக்கள் மற்றும் வடமாகாண மக்கள் எதிர் நோக்கும் சகல வித பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த கலந்துரையாடலில் வடமா…
-
- 0 replies
- 426 views
-
-
டேவிட் கோர்லட் - தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்:- அவுஸ்திரேலியாவில் இருந்து நாடுகடத்தப்பட்ட இலங்கையர்கள் பலர் தாங்கள் துன்புறுத்தலிற்க்கும், பாலியல் சித்திர வதைகளுக்கும் உள்ளானதாக தெரிவித்ததாக அவுஸ்திரேலிய ஊடகமொன்று தெரிவித்துள்ளது. தாங்கள் இலங்கை பாதுகாப்பு படையினராலேயே துன்புறுத்தப்பட்டதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். டேவிட் கோர்லட் என்ற செய்தியாளர் கடந்த மாதம் உல்லசாப்பயணி என்ற போர்வையில் இலங்கைக்குள் நுழைந்து அவுஸ்திரேலியாவினால் நாடுகடத்தப்பட்ட பலரை சந்தித்துள்ளார். அதன் போதே இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன. விடுதலைப்புலிகளுடன் தொடர்புபட்டவர்கள் என சந்தேகிக்கப்படுவபவர்கள் தாங்கள் திருப்பி அனுப்பப்பட்ட பிறகு இலங்கையில் நரகத்தை அனுபவிப்பதாக தெரிவித்துள்ளனர்…
-
- 7 replies
- 779 views
-
-
அழிவை எதிர்நோக்கியுள்ள குடாநாட்டின் கடல்வளம்! யாழ்.மாவட்டத்திலுள்ள கடற்பரப்பில் தங்கூசி வலைகளைப் பயன்படுத்தி தொழில் மேற்கொள்ளப்படுவதால் கடல் வளம் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடல் வளம் அழியும் பட்சத்தில் யாழ்.மாவட்டத்திலுள்ள கடற்றொழில் குடும்பங்கள் பெரும் நிர்க்கதிக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது என்று பொதுநலன்விரும்பிகள் கவலை வெளியிட்டுள்ளனர். அத்துடன் யாழ்ப்பாண மக்களின் போசணையிலும் இது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும். கடலுணவுகள் மூலம் கிடைக்கும் போசணை மட்டம் இழக்கப்பட்டால் தற்போதைய சூழல் மாற்றத்திற்கேற்ப வேகமாகப் பரவி வருகின்ற நோய்களின் தாக்கத்திற்கும் யாழ்ப்பாண மக்கள் உள்ளாகவேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்படும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இது தொடர்பாக கடல்ச…
-
- 1 reply
- 586 views
-
-
கேப்பாபிலவில் 15 ஏக்கர் காணியை ஒருகையால் கொடுத்து மறுகையால் பறித்தது விமானப்படை! [Wednesday 2014-10-01 08:00] முல்லைத்தீவு- கேப்பாப்பிலவு பகுதியில் அண்மையில் பொதுமக்களிடம் கையளித்த காணிகளை மீண்டும் பறிக்கும் நடவடிக்கையில் விமானப் படையினர் இறங்கியுள்ளார். சுமார் 15 ஏக்கர் காணி நேற்று மீளப்பறிக்கப்பட்டு புதிய எல்லைகள் போடப்பட்டுள்ளதாக வடமாகாணசபையின் பிரதி அவைத்தலைவர் அன்டனி ஜெயநாதன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், கடந்த 8ம் திகதி மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் படைத்தளபதிகள் கூடி பெருவிழா எடுத்து 264 ஏக்கர் மக்களுடைய நிலத்தை மக்களிடம் மீண்டும் விவசாயத்திற்காக கையளித்தார்கள். இந்நிலையில் ஐந்து குடும்பங்களுக்குச் சொந்தமான 15ஏக்கர…
-
- 0 replies
- 651 views
-
-
ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட தண்டனை: இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்று நழுவுகிறது இலங்கை அரசு! [Wednesday 2014-10-01 09:00] தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளமை இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்றும், அது தொடர்பாக இலங்கை அரசாங்கம் எவ்வித கருத்துக்களையும் கூறமுடியாது என்றும் தெரிவித்துள்ளார் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல. கொழும்பில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.இலங்கை அரசாங்கம் எப்போதும் இந்திய மத்திய அரசாங்கத்துடனேயே தொடர்புகளை பேணி வருகிறது. எனவே இலங்கை அரசாங்கம் மாநில அரசாங்கங்களின் செயற்பாடுகள் குறித்து கவனத்தில் கொள்வதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். அதேவேளை, அம…
-
- 0 replies
- 484 views
-
-
இலங்கை தமிழரசு கட்சியின் அரசியல் துறை பொறுப்பாளராக இரா.சம்பந்தன் நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் தலைவராக ஏற்கனவே மாவை சேனாதிராஜா நியமிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் அவர் தலைமையில் திருகோணமலையில் இலங்கை தமிழரசு கட்சியின் செயற்குழுகூட்டம் நடைபெற்றிருந்தது. இதன் போது அரசியல் விவகாரங்களுக்கான பொறுப்பாளராக இரா.சம்பந்தன் நியமிக்கப்பட்டார். அவர் உள்நாட்டு மற்றும் சர்வதேச அரசியல் விடயங்களை பார்த்துக் கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை இலங்கை தமிழரசு கட்சியின் பேச்சாளராக, எம்.ஏ.சுமந்திரன் நியமிக்கப்பட்டிருக்கிறார். http://www.pathivu.com/news/34209/57//d,article_full.aspx
-
- 4 replies
- 548 views
-
-
இனையத்தள ஊடகவியலாளர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செயலமர்வொன்று பொலிஸாரின் தலையீட்டினால் நிறுத்தப்பட்டுள்ளதாக ஊடக உரிமைகளுக்கான அமைப்புக்களை மேற்கோள்காட்டி ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த செயலமர்வு கடந்த வார இறுதியில் நீர்கொழும்பிலுள்ள ஹோட்டல் ஒன்றில் நடைபெறவிருந்ததாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. பொலிஸார் குறித்த ஹோட்டலின் உரிமைகயாளருக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளதாகவும் ஊடக சுதந்திரத்திற்கான செயற்பாட்டுக் குழுவை மேற்கோள்காட்டி ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.http://www.pathivu.com/news/34255/57//d,article_full.aspx
-
- 0 replies
- 287 views
-
-
ஐக்கிய தேசியக் கட்சியை மீளமைக்கும் வகையிலான தேர்தல் தொகுதி கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நாவலபிட்டி பகுதி வீடொன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த வீட்டின் மீது நேற்று கல்வீச்சுத் தாக்குதல் இடம்பெற்றதாகவும் அதன் பின் பெற்றோல் குண்டும் வீசப்பட்டதாகவும் கபே இயக்கம் தெரிவித்துள்ளது. கடந்த ஐந்து நாட்களில் எதிர்கட்சி உறுப்பினர்கள் அல்லது ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட மூன்றாவது சந்தர்ப்பம் இதுவென கபே இயக்கம் இன்று விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படும் செயற்திட்டங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எதிர்கட்சி உறுப்பினர்களை இலக்கு வைத்து …
-
- 0 replies
- 549 views
-
-
நேரம் வரும் போது இராணுவத்தினரையும் விசாரிப்போம்! - என்கிறார் ஆணைக்குழுத் தலைவர். [Wednesday 2014-10-01 09:00] காணாமல்போனவர்கள் தொடர்பாக இராணுவத்தினருக்கு எதிராக அளிக்கப்பட்டுள்ள முறைப்பாடுகளுக்கு அமைய அவர்களும் விசாரணைக்கு உட்படுத்தப்படுவர் என்று ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பராக்கிரம பரணகம தெரிவித்தார். ஜனாதிபதி ஆணைக்குழுவின் காணாமல் போனவர்கள் தொடர்பிலான சாட்சியப் பதிவுகள் கடந்த நான்கு நாட்களாக கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரி மற்றும் கரைச்சி பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றது.இறுதிநாளான நேற்று சாட்சியப்பதிவுகளை அடுத்து சர்வதேச நிபுணர் குழு குறித்தும், இராணுவம் மீதான குற்றச்சாட்டிற்கு ஆணைக்குழுவின் நடவடிக்கை குறித்தும் ஊடகவியலாளர்கள் கேள்வ…
-
- 1 reply
- 982 views
-
-
http://www.intertam.net/
-
- 0 replies
- 564 views
-
-
வடமாகாண முதலமைச்சர், அமைச்சர்கள் குழு மன்னார் கிராமங்களில் மக்களின் பிரச்சினைகள் குறித்து அராய்வு! [Wednesday 2014-10-01 08:00] வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான வடமாகாண அமைச்சர்கள் மற்றும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு ஒன்று நேற்றுக்காலை யுத்தத்தினால் இடம்பெயர்ந்து மீள் குடியேற்றம் செய்யப்பட்ட மன்னார், மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஈச்சலவக்கை மற்றும் சன்னார் ஆகிய கிராமங்களுக்குச் சென்று அங்குள்ள மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டனர். வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் மீன்பிடி, போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன், விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம், …
-
- 0 replies
- 443 views
-
-
உலக சிறுவர்கள் தினம் இன்று ஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் மாதம் 01 ஆம் திகதி உலக சிறுவர்கள் தினம் கொண்டாடப்படுகிறது . இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள். நாளைய எதிர்காலம் நன்றாக அமைய இன்றைய சிறுவர்களை நல்ல ஒரு பிரஜையாக உருவாக்க வேண்டும். இன்று அதிகமாக உலகில் கஷ்டப்படுபவர்கள் சிறுவர்கள் தான். பல சிறுவர்கள் பட்டினியால் வாடுகிறார்கள். தாய், தந்தையை இழந்து அனாதைகளாக நிற்கும் சிறுவர்கள் ஏராளம். அன்றாடம் உணவுண்ண பிச்சை ஏந்தி பிழைக்கும் நிலைமை. அடியாட்கள் சொல்லும் வேலைகளை செய்து அவர்கள் கொடுப்பதை உண்ணும் நிலைமை இப்படி நீண்டு கொண்டே செல்கிறது சிறுவர்களின் இன்றைய நிலைமை. சிறுவர்கள் துன்புறும் சம்பவங்கள் எல்லா நாடுகளிலும் நடக்கிறது தான். ஆனால், சில வெளிச்சத்துக்கு வருகின்றன. …
-
- 0 replies
- 501 views
-
-
எம் கனவுகளை நனவாக்க நாம் எம் மக்களையும் பிற இனத்தவரையும் பலி கொண்டோம் என்கிறார் முதல்வர் Posted: 2014-09-29 13:34:56 | Last Updated: 2014-09-30 02:21:08 எம் கனவுகளை நனவாக்க நாம் எம் மக்களையும் பிற இனத்தவரையும் பலி கொண்டோம் என்கிறார் முதல்வர் New 0 0 0 0 0 ஆஸியில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டோர் சித்திரவதைகளுக்கு உள்ளாகின்றனரா? அடியோடு மறுக்கின்றது இலங்கை! தந்தையை சிகிச்சைக்காக அழைத்துச் சென்ற தனயன் விபத்தில் பலி! இருவர் படுகாயம்!! ஜெயலலிதா பிணை மனு மீதான வழக்கு விசாரணை இன்று! இந்திய கடல் எல்லைக்குள் 12 இலங்கை மீனவர்கள் கைது! Related Stories மத்திய அரசின் புத்தாண்டு பரிசு இந்தியப்பெருங்கடல் சோகம் இனியாவது நிற்குமா? அதிமுக தேர்தல் அறிக்கை: அணு உலை கதிர்வீச்சில் 13…
-
- 0 replies
- 511 views
-
-
ஜெயாவின் கைதையடுத்து இந்திய மீனவர்களின் அத்துமீறல் குறைந்துள்ளது: டக்ளஸ் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் கைதினையடுத்து, எல்லைதாண்டிய இந்திய மீனவர்களது தொழில் நடவடிக்கைகள் குறைவடைந்துள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். யாழ்;ப்பாணம், பழைய பூங்கா வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள தேசிய ரீதியிலான வலைப்பந்து, கரப்பந்து, கூடைப்பந்தாட்ட மைதானங்களுக்கான சிரமதானப் பணியை ஆரம்பித்து வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர், 'தமிழ் நாட்டு மக்களுக்கு ஜெயலலிதா அதிகமான சேவைகளை செய்துள்ள போதிலும், அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளபடியால் அந்த மக்களுக்கான முன்னேற்றங்கள்…
-
- 12 replies
- 1.3k views
-
-
பாப்பரசர் பிரான்ஸிசின் சிறிலங்காவுக்கான பயணத்தை அரசாங்கம் அரசியல் மயப்படுத்த முயற்சிக்கிறது. பாப்பரசர் வருகின்ற அதே மாதத்திலேயே சிறிலங்காவின் ஜனாதிபதித் தேர்தலும் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவரின் வருகையை வைத்து, கிறிஸ்த்தவ மக்களின் ஆதரவைப் பெற்றுக் கொள்ளும் முயற்சியில் மகிந்தராஜபக்ஷவின் குடும்பத்தார் இறங்கியுள்ளனர். இதற்கிடையில் மகிந்தராஜபக்ஷ இந்த வாரம் வத்திக்கான் சென்று, பாப்பரசரை நேரிடில் அழைத்து அழைப்பிதழை கையளிக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.pathivu.com/news/34238/57//d,article_full.aspx
-
- 3 replies
- 498 views
-
-
காணாமல் போனவர்களை கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி நாள் சாட்சியப்பதிவுகள் இன்று பூநகரி பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. இன்று கலை முதல் மாலை வரை சாட்சியமளிக்கும் பகுதிகளில் பொலிஸ் , புலனாய்வுத்துறை மற்றும் இராணுவத்தினர் அதிகளவில் காணப்பட்டனர். சாட்சியப்பதிவுகள் முடியும் வரை வெளியில் மக்களை அச்சுறுத்தும் வகையில் காத்திருந்தனர் புலனாய்வுத்துறையினர். இராணுவத்தினரால் வற்புறுத்தி சில மக்கள் அழைத்துவரப்பட்டிருந்தனர். சிறீலங்கா புலனாய்வுத்துறையின் பிரசன்னத்தினால் அச்சத்துடனேயே மக்கள் சாட்சியமளித்தனர். கரைய்ச்சி பிரதேச செயலகத்தை சேர்ந்த ஸ்கந்தபுரம் கிராமசேவகர் பிரிவுக்கு உட்பட்ட 35பேர் ஆணைக்குழுவினால் அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 23பேர் வருகை தந்து தமது உறவுகள் காணாமல் போன…
-
- 0 replies
- 758 views
-
-
இலங்கைக்கான பிரதி உயர்ஸ்தானிகர் லவுரா டேவிஸ் கண்காணிக்கப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்திற்கு தாம் விஜயம் செய்திருந்த போது சிலர் தொடர்ச்சியாக தம்மை கண்காணித்தனர் என லவுரா டேவிஸ் குற்றம் சுமத்தியுள்ளார். பிரித்தானிய உயர்ஸ்தானிகராலய இணைய தளத்தின் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்திற்கு தாம் விஜயம் செய்திருந்த போது சந்தித்தவர்கள் பின் தொடரப்பட்டுள்ளதாகவும் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தம்மை சிலர் பின்தொடர்ந்து கண்காணிக்கின்றார்கள் என்பதனை நிராகரிக்க முடியாத அளவிற்கு உணர்ந்துகொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார். தாம் சந்தித்தவர்களிடம் தொலைபேசி அழைப்பின் மூலமும் நேரடியாகவும் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்…
-
- 0 replies
- 358 views
-
-
பொதுபல சேனா இயக்கத்தின் கருத்துக்களை அரசாங்கம் அங்கீகரிக்கவில்லை என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். அனைத்து இன மற்றும் மதச் சமூகங்களும் சகவாழ்வுடன் வாழ வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடு என அவர் குறிப்பிட்டுள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை பொதுபல சேனா இயக்கத்தின் மாநாட்டில் வெளியிடப்பட்ட கருத்துக்களை அரசாங்கம் அங்கீகரிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். எதேனும் ஓர் தரப்பு மற்றுமொரு தரப்பபையோ அல்லது தனிப்பட்ட நபர்களையோ அச்சுறுத்தினால் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு அமைவாக முறைப்பாடு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட முடியும் என அவர் குறிப்பிட்…
-
- 0 replies
- 444 views
-