ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143554 topics in this forum
-
அநியாயமான முறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கிளிநொச்சி ஜெயக்குமாரியின் விடுதலைக்காக இன்று கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தின் முன்பாக மாலை நான்கு மணியவில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடை பெற்றது. கிளிநொச்சியைச் சேர்ந்த ஜெயக்குமாரி என்பவர் காணாமல் போன தனது மகனை கண்டுபிடித்துத் தருமாறு கோரி போராட்டங்களை மேற்கொண்டிருந்தார். இந்நிலையில் அவரும் அவரது மகள் விபூசிகாவும் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இந்த வருட ஆரம்பத்தில் கைது செய்யப்பட்டிருந்தனர்.பின்னர் ஜெயக்குமாரி பூசா தடுப்பு முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரது மகள் விபூசிகா வவுனியா சிறுவர் கண்காணிப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார். ஜெயக்குமாரி கைது செய்யப்பட்டு தற்போது 200 நாட்கள் கடந்துவிட்டன. பயங்கரவாத செயற்பாடுகளு…
-
- 2 replies
- 1.9k views
-
-
இராணுவத்திற்கு எதிரான விசாரணைகள் சரியான நேரத்தில் மேற்கொள்ளப்படும் என காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணையை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆணையாளர் மக்ஸ்வெல் பராக்கிரம பரணகம தெரிவித்துள்ளார். காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணையை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் 4ம் நாள் அமர்வு இன்று காலை பூநகரி பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. இன்றைய அமர்வில் 35 பேர் கடிதம் மூலம் அழைக்கப்பட்டனர் அதில் 23 பேர் வருகை தந்து சாட்சியம் அளித்திருந்தனர். 12 பேர் புதிதாக பதிவு செய்தனர். இன்றைய அமர்வு நிறைவடைந்த பின்னர் ஆணையாளரிடம் ஊடகவியலாளர்கள் சாட்சியத்தின் போது இராணுவத்திற்கு எதிராக முன் வைக்கப்பட்ட குற்றசாட்டுக்கள் தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்படுமா? என கேட்ட போதே அவ்வாறு பதில்…
-
- 0 replies
- 422 views
-
-
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனை சந்திக்கவுள்ளார். இன்று ரணில் விக்ரசிங்க லண்டன் நோக்கி புறப்பட்டார். அங்கு நடைபெறும் கன்சர்வேடிவ் கட்சியின் மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக அவர் இந்த விஜயத்தை மேற்கொண்டிருக்கிறார். இதன் போது பிரித்தானிய பிரதமரை சந்தித்து அவர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சிறிலங்காவின் யுத்தத்தின் பின்னரான நிலைமைகள், தமிழ் மக்களின் பிரச்சினைகள், யுத்தக் குற்ற விசாரணை போன்ற விடயங்கள் தொடர்பில் இதன் போது பேசப்படும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.pathivu.com/news/34228/57//d,article_full.aspx
-
- 0 replies
- 480 views
-
-
மஹிந்தவின் யாழ்ப்பாணம் விஜயத்தை அடுத்து உள்ளுர் அதிகாரிகள் தங்கள் தூக்கத்தை தொலைத்துள்ளனர். இலவச பாடநூல் திட்டத்தை அமுல்படுத்தியமை தொடர்பான தேசிய நிகழ்வை யாழ்ப்பாணத்தினில் நடத்த இறுதி நேரத்தினில் அரசு முடிவு செய்துள்ளது. 12 ம் திகதி நடைபெறும் இந்நிகழ்வினில் மஹிந்த மற்றும் தேசிய பாடசாலை அதிபர்கள் மற்றும் பரிவாரங்களென சுமார் 650 பேர் பங்கெடுக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களிற்கான வதிவிடம் மற்றும் உணவு ஏற்பாட்டிற்கென அதிகாரிகள் திண்டாடி வருகின்றனர். விடுதலைப்புலிகளது முதல் கரும்புலி தாக்குதல் நடத்தப்பட்ட நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தினில் இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது.அதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக ஆளுநர் தலைமையினில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 13ம திகதி யாழ்.பு…
-
- 0 replies
- 541 views
-
-
http://www.intertam.net/
-
- 1 reply
- 1k views
-
-
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதன் மூலம் இந்திய- இலங்கை உறவில் பொற்காலம் தோன்றியிருப்பதாக ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது. ஜாதிக ஹெல உறுமயவின் முக்கியஸ்தரும், மேல் மாகாண சபை அமைச்சருமான உதய கம்மன்பில நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் இந்த குதூகலத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஜெயலலிதா இருக்கும் வரை இலங்கை தொடர்பான விடயங்களில் அநாவசியமாகத் தலையிட்டுக் கொண்டே இருந்தார். இலங்கை தொடர்பான விடயங்களில் மத்திய அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்துக் கொண்டிருந்தார். இலங்கை தொடர்பாக அவர் அளித்த ஆலோசனைகள் தற்போது அவருக்கு எதிராகவே திரும்பியுள்ளன. இங்குள்ளவர்களை சிறையில் தள்ள அவர் குரல் கொடுத்தார். ஆனால் தற்போது அவரே சிறைக்க…
-
- 0 replies
- 615 views
-
-
அளவெட்டியில் நேற்றிரவு வாள்வெட்டுக்கு மூன்று இளைஞர்கள் படுகாயம்! [Monday 2014-09-29 08:00] அளவெட்டியில் நேற்று இரவு 8 மணியளவில் தாச்சி விளையாட்டை பார்த்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர்கள் மூவர், இனந்தெரியாதோரின் வாள்வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்தனர். மல்லாகம் நீதிமன்ற வீதியைச் சேர்ந்த சந்திரசேகரம் கொலின்ஸ் (வயது 20), தேவராசா ஜெகநாதன் (வயது23), ஆகியோர் படுகாயமடைந்து முதலில் தெல்லிப்பழை வைத்தியசாலையிலும் பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். மற்றொரு இளைஞரான சுன்னாகம் சபாபதிப்பிள்ளை வீதி கண்ணகி முகாமைச் சேர்ந்த சின்னராசா யூட் அன்ரனி (வயது 23) தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். …
-
- 3 replies
- 602 views
-
-
விராது தேரருக்கு கொமாண்டோ பாதுகாப்பு! – ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவு அதிகாரியே ஒருங்கிணைத்தார். [Monday 2014-09-29 17:00] இலங்கைக்குப் பயணம் மேற்கொண்ட மியான்மாரின் சர்ச்சைக்குரிய விராது தேரருக்கு ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவினரால் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தாக சிங்கள ஊடகங்கள் தெரிவிக்கின்றன. விராது தேரரின் தங்குமிடம், அதனைச் சுற்றிய பகுதிகள், அவர் செல்லும் பாதைகளில் பாதுகாப்புக்கென சுமார் ஆயிரம் பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இவர்களுக்கு மேலதிகமாக விசேட கொமாண்டோ படையினரில் ஐம்பது பேர் விராது தேரரின் பயணங்களின் போதும், பொது பல சேனா கூட்டத்தில் அவர் உரையாற்றிய போதும் பாதுகாப்பு வழங்கியிருந்தனர். இந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஜனாதிப…
-
- 1 reply
- 465 views
-
-
சாட்சியங்கள் மீதான அச்சுறுத்தல்களை அரசு மேற்கொள்வது உண்மைகளை மூடிமறைக்கும் செயல் யுத்த குற்றங்கள் தொடர்பிலான விசாரணைகள் கோரப்படும் போதே நாட்டின் உள்ளக செயற்பாடுகளை மிகச்சரியாக கையாண்டிருந்தால் அழுத்தங்களில் இருந்து தப்பியிருக்க முடியும். சர்வதேசத்திற்கு சவால் விடுத்தமையே அரசாங்கம் செய்த மிகப்பெரிய தவறு என தெரிவிக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல சாட்சியங்கள் மீதான அச்சுறுத்தல்களை அரசு மேற்கொள்வது உண்மைகளை மூடி மறைக்கும் செயலாகும் எனவும் குறிப்பிட்டார். இலங்கையில் இடம்பெறும் அச்சுறுத்தல்களும் பயமுறுத்தல்களும் சர்வதேச விசாரணைக்கு பாரிய சவாலாக அமைந்துள்ளது என ஐ.நா. பிரதி மனித உரிமைகள் ஆணையாளர் குற்றம் சு…
-
- 0 replies
- 422 views
-
-
பிள்ளைகள் உயிர் வாழ்கிறார்களென இன்னும் நம்புகிறீர்களா என சாட்சியங்களிடம் கேள்வி உங்கள் பிள்ளைகள் இன்னும் உயிரோடு இருக்கின்றார்கள் என்று நீங்கள் இன்னமும் நம்புகின்றீர்களா? என்று காணாமற் போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவினர், தங்களிடம் சாட்சியங்களைப் பதிவு செய்ய வந்திருந்த சாட்சியங்களிடம் கேள்வி எழுப்பினர். காணாமற் போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சியங்களைப் பதிவு செய்யும் நடவடிக்கை ஞாயிற்றுக்கிழமை (28) முழங்காவில் மத்திய மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. இதன்போதே, சாட்சியங்களிடம் மேற்படி கேள்வி எடுப்பப்பட்டது. அத்துடன், புலிகள் உங்களை சுட்டார்களா?, பிள்ளைகளை புலிகளா கடத்தினர்?, இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்குள் மக்களைச் செல்ல விடாது புலிக…
-
- 1 reply
- 495 views
-
-
புதிய முதல்வரும் இலங்கைத் தமிழர் பிரச்சினையில் கவனம் செலுத்த வேண்டும்! – சுரேஸ் பிறேமச்சந்திரன் [Monday 2014-09-29 17:00] இலங்கை தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பாக, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போன்று அடுத்து வரும் தமிழக முதல்வரும் கூடிய கவனம் செலுத்த வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரமேச்சந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழக முதல்வர் ஜெலலிதா ஜெயராம் மீதான ஊழல் வழக்கின் குற்றம் நிரூபிக்கப்பட்டு இந்திய சிறப்பு நீதிமன்றம் சில முடிவுகளை எடுத்துள்ளது. இவ்வழக்கின் முடிவானது வெறுமனே தமிழகத்தினை மட்டுமல்லாது முழு இந்தியாவின் நல்லாட்சியின் தேவையினையும் வெளிப்படுத்தும் வகையிலேயே அமைந்துள்ளத…
-
- 2 replies
- 713 views
-
-
Free jeyakumari and others detained without charges Public protest 29.09.2014 4.00 pm Colombo fort railway station https://m.facebook.com/photo.php?fbid=10152400478203354&id=507153353&set=a.307597678353.144922.507153353&source=48&ref=bookmark
-
- 1 reply
- 467 views
-
-
கிழக்கில் தமிழ் மக்கள் 34 வீதமாக குறைவடைந்துள்ளனர்: அருண் 'கடந்த, 1976ஆம் ஆண்டு வட்டுக்கோட்டை தீர்மானம் பிரகடனப்படுத்தப்பட்டபோது கிழக்கு மாகாணத்தில் 50 வீதமாக வாழ்ந்த தமிழ் மக்களின் நிலை 1987ஆம் ஆண்டு 44 வீதமாகவும் தற்போது 34 வீதமாகவும் குறைவடைந்துள்ளது' என மட்டக்களப்பு மாவட்ட சுதந்திர கட்சியின் அமைப்பாளரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான அருண் தம்பிமுத்து தெரிவித்தார். 'இதற்கு பிரதான காரணம் கடந்தகால யுத்தமும் தமிழர்களின் நாடுகடந்த வெளியேற்றமும்தான்' என்றும் அவர் தெரிவித்தார். அக்கரைப்பற்று, விபுலாநந்த சிறுவர் அபிவிருத்தி நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை(28) மாலை இடம்பெற்ற விவசாயப் பிரதிநிதிகளினுடனான சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும்…
-
- 0 replies
- 471 views
-
-
புலோப்பாளை பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் காற்றலையில் மின்சாரம் பெறும் பணிகள் நிறைவடையும் நிலையை அடைந்துள்ளது. காற்றலையின் மூலம் மின்சாரத்தினை பெறும் நோக்கில் மொத்தம் 16 காற்றாடிகள் அமைக்கப்படவுள்ளன. தற்போது 12 காற்றாடிகளின் பணிகள் நிறைவடைந்துள்ளன. இதன் நிர்மாணப்பணிகளை இலங்கை மின்சாரசபையும், இலங்கை தனியார் நிறுவனமும், இந்திய நிறுவனமும் இணைந்து மேற்கொண்டுள்ளன. இங்கு அமைக்கப்படும் காற்றாடிகளில் ஒரு காற்றாடி மூலம் ஒரு மணித்தியாலத்திற்கு 1.5 மெகா வாட்ஸ் என்ற விகிதத்தில். 16 காற்றாடிகளிள் இருந்தும் ஒரு மணித்தியாலத்திற்கு 24 மெகா வாட்ஸ் மின்சாரத்தினை பெற்றுக்கொள்ள முடியுமென பொறியியலாளர் ஒருவர் தெரிவித்தார். மேலும் அடுத்த மாதம் நடுப்பகுதியினுள் 8 காற்றா…
-
- 1 reply
- 895 views
-
-
29 செப்டம்பர் 2014 காணாமல் போனவர்களை கண்டறியும் ஆணைக்குழுவின் 3ஆம் நாள் சாட்சியப் பதிவு இன்று காலை 9 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. கிளிநொச்சி மாவட்டத்திற்கான 2ஆம் கட்ட சாட்சியப் பதிவுகள் நேற்று முன்தினம் முதல் ஆரம்பமாகியது. அதன்படி இன்றைய பதிவுகள் பூநகரி பிரதேச செயலகத்தில் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. பூநகரி பிரதேச செயலகத்தை சேர்ந்த 8 கிராமசேவகர் பிரிவுகளை உள்ளடக்கிய 50 பேர் ஆணைக்குழுவினால் சாட்சியப்பதிவுகளுக்காக அழைக்கப்பட்டுள்ளனர். இதன்போது இறுதிக் கட்டத்தில் இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் நந்திக் கடலால் செல்லும் போது எனது மகளும் கரை வரை வந்தார் 2009.05.13 ஆம் திகதி இரவு காணாமல் போய்விட்டார் என்று தாயொருவர் சாட்சியமளித்தார். மேலும் ந…
-
- 0 replies
- 472 views
-
-
அண்ணா சிறையில் இருக்கின்றார் என புகைப்படம் வெளியாகி இருந்தது; சகோதரி சாட்சியம் காணாமல் போன எனது அண்ணாவின் புகைப்படம் ஒன்று தென்னிலங்கை சிறையில் உள்ளவர்கள் என்ற தலைப்புடன் இணையத்தளம் ஒன்றில் வெளியாகியிருந்தது ஆனால் இன்று வரை தகவல் எதுவும் இல்லை என ஆணைக்குழு முன் சகோதரி ஒருவர் சாட்சியமளித்தார். ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சியப் பதிவுகள் மூன்றாவது நாளாக இன்று பூநகரி பிரதேச செயலகத்தில் நடைபெற்று வருகின்றது. அதன்போதே சகோதரி ஒருவர் மேற்கண்டவாறு சாட்சியமளித்தார். அவர் மேலும் சாட்சியமளிக்கையில், நாங்கள் பூநகரியில் இருந்து இடம்பெயர்ந்து முல்லத்தீவு வரைக்கும் சென்று அங்கு இருந்தோம். 19.04.2009 ஆம் திகதி அண்ணா வட்டுவாகலில் உள்ள எங்களது சித்தி வீட்டிற்கு சென்றுவிட்டார். அப்போத…
-
- 0 replies
- 741 views
-
-
பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர்! http://www.intertam.net/
-
- 0 replies
- 394 views
-
-
மதுபோதையில் பிரிட்டனுக்கான தூதுவர் கிறிஸ் நோனிசைத் தாக்கினார் சஜின் வாஸ் குணவர்த்தன! [Monday 2014-09-29 17:00] நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தனவினால் மோசமாக தாக்கப்பட்டதை தொடர்ந்து பிரித்தானியாவிற்கான இலங்கை தூதுவர் கிறிஸ் நோனிஸ் பதவி விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நியுயோர்க்கிலிருந்து நாடு திரும்பியுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்த சம்பவத்தை இருட்டடிப்பு செய்யுமாறு அரச ஊடகங்களுக்கு உத்தரவிட்டுள்ள அதேவேளை சம்பவங்களுடன் தொடர்புடையவர்களுடன் நேரடியாக பேச்சுக்களை மேற்கொண்டுள்ளார். இந்த தாக்குதல் சம்பவம் நியுயோர்க்கில் உள்ள டிலான் ஆரியவன்ச என்பவருடைய இல்லத்திலேயே இடம்பெற்றுள்ளது. டிலான் சிறிலங்கன் எயர்லைன்சின் நியுயோர்க் இயக்குந…
-
- 1 reply
- 625 views
-
-
வலி.வடக்கில் வீடுகளின் வேலிகளை அகற்றும் படையினர்! - மகிந்தவின் வருகைக்காக கெடுபிடிகள் அதிகரிப்பு. [Monday 2014-09-29 17:00] இரண்டு நாள் பயணமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வரும் 12ம் திகதி யாழ்ப்பாணம் செல்லவுள்ளார். ஜனாதிபதியின் வருகையை ஒட்டி ஏற்கனவே வலி.வடக்கு பகுதிகளில் வீட்டு வேலிகள் இராணுவத்தினரால் அற்றப்பட்டுள்ளன. இந்த நிலையில் தற்போது பரவலாக பொலிஸார் ஆட்பதிவு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சிவில் உடையில் வீடுகள், கடைகள், நிறுவனங்களுக்கு செல்லும் பொலிஸார் அங்குள்ளவர்களது விபரங்களை பெற்று வருகின்றனர். முன்னறிவிப்பற்ற இந்த செயற்பாடுகள் காரணமாக மக்கள் அச்சமடைத்துள்ளனர். எனினும் ஜனாதிபதியின் வருகையை ஒட்டி பாதுகாப்பு காரணங்களுக்காகவே தாம்…
-
- 0 replies
- 478 views
-
-
பூநகரியில் சாட்சியப் பதிவின் போது பெருமளவு படையினர் குவிப்பு! – ஆணைக்குழுவினர் வெளியேற்றினர். [Monday 2014-09-29 17:00] கிளிநொச்சி, பூநகரி பிரதேச செயலகத்தில் இன்று இடம்பெற்ற காணாமற்போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சியப் பதிவின் போது, செயலகத்தை சூழ நின்ற இராணுவத்தினரை அங்கிருந்து விலகிச் செல்லுமாறு ஆணைக்குழு அதிகாரிகள் உத்தரவிட்டனர். இன்று பூநகரி பிரதேச செயலக வளாகத்தைச் சூழ, இராணுவத்தினரும் இராணுவ புலனாய்வாளர்களும் அதிகளவில் நடமாடித் திரிந்தனர். இதனால் அச்சம் கொண்ட மக்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளிடம் இது தொடர்பில் முறையிட்டனர். இதனையடுத்து, துரித நடவடிக்கை மேற்கொண்ட ஆணைக்குழுவின் அதிகாரிகள், அங்கு நின்றிருந்த இராணுவத்தினருடன் கலந…
-
- 0 replies
- 420 views
-
-
திருகோணமலை மாவட்ட அரச அதிபருக்கு எதிராகவும், ஆதரவாகவும் இருவேறு ஆர்ப்பாட்டங்கள்! [Monday 2014-09-29 17:00] திருகோணமலை மாவட்ட, அரசாங்க அதிபரை சேவையிலிருந்து இடைநிறுத்துமாறு கோரி, திருகோணமலை நகரிலுள்ள மணிக்கூட்டு கோபுரத்துக்கருகில், மாவட்ட மக்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது. கடந்த 2006ஆம் ஆண்டு திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற மேஜர் ஜெனர்ல் டி.டி.ஆர்.டி சில்வாவுக்கு எதிராகவே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. திருகோணமலை பிரதேச செயலாளர்களின் அரச கடமைகளை செய்வதற்கு, அரசாங்க அதிபர் தடையாக இருப்பதாகவும் அவரை உடனடியாக இடம்மாற்ற கோரியும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 'அரசாங்க அதிபரை இடமாற்றம் செய்…
-
- 0 replies
- 465 views
-
-
இறைவனின் நீதி உங்களை அழிக்கும், இல்லையேல் நான் எரிப்பேன்! – ஆணைக்குழு முன் சாபமிட்ட தாய் [Monday 2014-09-29 08:00] காணாமல்போனவர்கள் குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் தனது பிள்ளை தொடர்பில் முறைப்பாடு கொடுக்க வந்த வயதான தாயிடம் ஆடு வேண்டுமா என்று ஆணைக்குழுவினர் கேட்டதால், அந்த தாய் சாபமிட்டுவிட்டு சென்ற சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி ஆணைக்குழுவின் 2ம் நாள் அமர்வு முழங்காவில் மகாவித்தியாலயத்தில் நேற்று நடைபெற்றது. இதன்போது ஜெயபுரம் பகுதியைச் சேர்ந்த வயதான பெண் ஒருவர், காணாமல்போன தன் மகன் தொடர்பாக சாட்சியம் அளிக்க வந்திருந்தார். அரசாங்க உதவிகள் கிடைத்துள்ளதா? என ஜனாதிபதி ஆணைக்குழு அவரிடம் கேள்வி எழுப்பியது. இதற்கு அந்தத் தா…
-
- 5 replies
- 678 views
-
-
கட்டைக்காட்டில் காணி அளக்கும் முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டது! [Monday 2014-09-29 17:00] வடமராட்சி கிழக்கு, கட்டைக்காட்டுப் பகுதியில் இராணுவத்தினருக்காக காணி சுவீகரிக்கும் நோக்கில் அளவீட்டுப் பணிக்காகச் சென்றிருந்த நில அளவைத் திணைக்கள அதிகாரிகள் பொதுமக்களின் எதிர்ப்பால் அந்த நடவடிக்கையைக் கைவிட்டுத் திரும்பிச் சென்றனர். இராணுவத்தின் 553 ஆவது படைப்பிரிவுக்கென கட்டைக்காட்டுப் பகுதியில் 700 ஏக்கர் காணியை சுவீகரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்படி இன்று நில அளவைத் திணைக்கள அதிகாரிகள் அந்தக் காணிகளை அளப்பதற்குச் சென்றிருந்தனர். எனினும், காணி உரிமையாளர்களும் பொதுமக்களும் அங்கு கூடியதால் அளவீட்டுப் பணிகளுக்கு எதிர்ப்பு வலுத்தது. இதனையடுத்…
-
- 0 replies
- 237 views
-
-
நெடுந்தீவில் கரையொதுங்கிய நான்கு இந்திய மீனவர்கள்! [Monday 2014-09-29 17:00] எரிபொருள் தீர்ந்த நிலையில் இந்திய மீனவர்கள் 4 பேர் படகுடன் யாழ். நெடுந்தீவு கடற்கரையில் நேற்று மாலை கரையொதுங்கியதாக நெடுந்தீவு பொலிஸார் தெரிவித்தனர். இராமேஸ்வரத்தை சேர்ந்த இம்மீனவர்களை கைது செய்த கடற்படையினர் தம்மிடம் ஒப்படைத்ததாக பொலிஸார் கூறினர். http://www.seithy.com/breifNews.php?newsID=117734&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 400 views
-
-
அமெரிக்காவில் இருந்து திரும்பினார் ஜனாதிபதி மகிந்த! [Monday 2014-09-29 17:00] ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ள நியூயோர்க் நகருக்கு சென்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று அதி காலை நாடு திரும்பினார். ஜனாதிபதி உட்பட பிரதிநிதிகளை ஏற்றிய விமானம் இன்று அதிகாலை 5.30 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்கா சென்றிருந்த ஜனாதிபதி இந்திய பிரதமர் நரேந்திரமோடி உட்பட வெளிநாடுகளின் தலைவர்களை சந்தித்து பேச்சு நடத்தினார். http://www.seithy.com/breifNews.php?newsID=117733&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 391 views
-