Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணை அரசியல் நோக்கம் கொண்டது! – ஐ.நாவில் மகிந்த சீற்றம். [Thursday 2014-09-25 08:00] இலங்கை மீது மேற்கொள்ளப்படும் போர்க்குற்ற விசாரணை ஒழுங்கற்ற வகையிலும் அரசியல் நோக்கிலும் மேற்கொள்ளப்படுவதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஐ.நாவில் குற்றம்சுமத்தினார். ஐ.நா பொதுச்சபை அமர்வில் இலங்கை நேரப்படி இன்று அதிகாலையில் உரையாற்றிய ஜனாதிபதி மகிநத ராஜபக்ச, போருக்கு பின்னர் இலங்கை துரதிஸ்டவசமான தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளது. அத்துடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் சில தேவையற்ற நிகழ்ச்சித் திட்டங்களுக்கு இலங்கை உள்ளாகியுள்ளது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். தமது நாடு இன்று குறைபாடான சமநிலை அடிப்படையில் நடத்தப்படுவதாகவும் ஜனாதிபதி…

  2. -எம்.றொசாந்த், பொ.சொபிகா, யோ.வித்தியா முஸ்லிம் தலைமைகளின் மீது முஸ்லிம் மக்கள் நம்பிக்கை இழந்திருப்பதை ஊவா மாகாண சபை தேர்தலில் தெளிவாக வெளிக்காட்டியுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் அயூப் அஸ்வின் தெரிவித்தார். வடமாகாண சபையின் மாதாந்த கூட்டத்தொடர், கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபை கட்டிடத் தொகுதியில் வியாழக்;கிழமை (25) இடம்பெற்று வருகின்றது. இந்த அமர்வில் முஸ்லிம்களுக்கு ஆதரவாக தமிழ் மக்கள் குரல்கொடுக்கின்ற போதும், முஸ்லிம்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்காக குரல் கொடுப்பதில்லை என உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன் சுட்டிக்காட்டினார். இதற்கு பதிலளிக்கையிலேயே அஸ்மின் மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்து கூறியதாவது, 'முஸ்லீம் தலைமைகள் மீது எனக்கும் நம்பிக…

  3. வடகிழக்கு மாகாணங்களில் நடைபெற்ற, நடைபெற்றுக்கொண்டிருக்கும் தமிழ் மக்கள் மீதான இன அழிப்பு நடவடிக்கையிலிருந்து தமிழ் மக்களை பாதுகாக்குமாறு முன்வைத்த தமது பிரேரனை வடமாகாண சபை நிகழ்ச்சி நிரலிலிருந்து நீக்கப்பட்டதால் கறுப்பு பட்டி அணிந்து சபைக்கு எதிர்ப்பை தெரிவித்தள்ளார் எம்.கே.சிவாஜிலிங்கம். கடந்த மே மாதம் மேற்படி பிரேரணையிணை மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் முன்மொழிந்திருந்தார். எனினும் குறித்த பிரேரணை சமகாலத்தில் ஐ.நா சர்வதேச விசாரணையினை பாதிக்கும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு சுட்டிக்காட்டியிருக்கின்றது. இதனால் வடமாகாண சபை அமர்வில் மேற்படி பிரேரணை இன்றைய தினம் எடுத்துக் கொள்ளப்படவில்லை. இதனையடுத்து சிவாஜிலிங்கம் இன்றைய தினம் சபைக்கு கறுப்பு பட்டி அணிந்து எ…

  4. படகுமூலம் தஞ்சம் கோரி அவுஸ்திரேலியாவுக்குச் செல்லும் அகதிகளை கம்போடியாவிற்கு அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கம்போடிய அரசாங்கத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டதை அவுஸ்திரேலியா உறுதி செய்துள்ளது. படகுகள் மூலம் விசா இல்லாமல் வந்தவர்களையும் நௌரு, மனுஸ், பப்புவா நியூகினியா தீவுகளில் உள்ளவர்களை கம்போடியாவுக்கு அனுப்புவதற்க்கான ஒப்ந்தந்தம் செய்துள்ளதாக அவுஸ்திரேலியா குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை மிக விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நடவடிக்கைக்கு எதிர் கட்சிகள் தமது எதிர்ப்பை தெரிவித்துள்ளன. ஆனால் கிலாரட் பதவியில் இருந்த போது புகலிடம் கோரியவர்களை மலேசியா அனுப்பியது போன்ற நடைமுறைதான் இதுவும் என …

  5. திருகோணமலை, கந்தளாய் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் பலியாகியுள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்த நிலையில் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கந்தளாயிலிருந்து ஹபரண நோக்கிச் சென்ற இராணுவ பஸ்ஸும் திருகோணமலையிலிருந்து கந்தளாய் நோக்கி வந்த முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த, கந்தளாயைச் சேர்ந்த ராணி (55 வயது) என்றே பெண்ணே பலியாகியுள்ளார். முச்சக்கர வண்டியின் சாரதி படுகாமயடைந்த நிலையில் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்விபத்து தொடர்பில் இராணுவ பஸ் வண்டியின் சாரதியை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். http://www.pat…

  6. 24 வருடங்களின் பின்னர் யாழ்தேவி ரயில் மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது. அறிவிக்கப்பட்டபடி பரீட்சார்த்தமாக இன்று ஞாயிற்றக்கிழமை பிற்பகல் 3.45 மணியளவில் பளையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு ரயில் வெள்ளளோட்டம் இடம்பெற்றது. கடந்த 15ஆம் திகதி முதல் யாழ்ப்பாணத்திற்கு ரயில்சேவை இடம்பெறும் என்று போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம ஏற்கனவே அறிவித்திருந்தார். யாழ்ப்பாணம் வரையான ரயில் பாதை நிர்மாணப் பணிகள் பூர்த்தியடையாததால் அறிவிக்கப்பட்டபடி ரயில் சேவை ஆரம்பிக்கப்படவில்லை. இந்நிலையில் தற்போது புனரமைப்பு பணிகள் முடிவுற்று பரீட்சார்த ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அடுத்தமாத முற்பகுதியில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ கொழும்பு - யாழ்ப்பாணம் இடையிலான ரயில்சேவையை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்த…

  7. ஐக்­கிய அரபு இராச்­சி­யத்தில் பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்­குட்­ப­டுத்­தப்­பட்ட 18 வய­தான இலங்கை யுவ­திக்கு மூன்­றரை இலட்ச ரூபா நஷ்­ட­ஈடு பெற்றுக் கொடுப்ப­தற்­கு இலங்கை தூத­ரகம் நட­வ­டிக்கை எடுத்­த­தாக இலங்கை வெளி­நாட்டு வேலை­வாய்ப்புப் பணி­யகம் தெரி­வித்­துள்­ளது. ஐக்­கிய அரபு இராச்­சி­யத்­துக்கு பணிப் பெண்­ணாக சென்­றி­ருந்த போதே இந்த யுவதி துஷ்­பி­ர­யோ­கத்­துக்­குட்­ப­டுத்­தப்­பட்­டுள்ளார். தொழில் நிமித்தம் அந்­நாட்­டுக்கு அழைத்த முகவர் நிலை­யத்தை கறுப்பு பட்­டி­ய­லிட்­ட­தா­கவும் இலங்கை வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு பணி­யகம் தெரி­வித்­துள்­ளது. துஷ்­பி­ர­யோ­கத்­துக்­குட்­ப­டுத்­தப்­பட்ட இந்த யுவதி பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்ய விரும்­பா­ததால் இலங்கை தூத­ரகம்…

  8. தேசிய சபையை உருவாக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அரசியல் செயற்பாடுகளை வலுவுள்ள வகையில் முன்னெடுத்துச் செல்வதற்காக தேசிய சபையொன்றை உருவாக்குவதென்று, அதன் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமாகிய சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் செயற்குழுத் தலைவருமாகிய ஆர்.சம்பந்தன் தலைமையில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழு கூடி முக்கிய தீர்மானங்களை மேற்கொண்டிருக்கின்றது. தமிழ்த்தேசிய கூட்டமைப்பை ஒரு கட்டுக்கோப்பான அமைப்பாக மாற்றுவதற்குரிய யாப்பு ஒன்றைத் தயாரிப்பது, பலதரப்பட்ட மக்கள் அமைப்புக்களை ஒன்றிணைத்து ஒ…

  9. வடமாகாண சபையின் இன்றைய அமர்விலும் வடமாகாண சபையின் திணைக்களங்களின் கீழுள்ள அதிகாரிகள் சமூகமளிக்கவில்லை. வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு, கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபைக் கட்டிட தொகுதியில் வியாழக்கிழமை (25) இடம்பெற்று வருகின்றது. வடமாகாண நிறுவனங்களின் கீழுள்ள திணைக்களங்களைச் சார்ந்த அதிகாரிகள் மற்றும் அமைச்சின் செயலாளர்கள், வடமாகாண சபை அமர்வுகளில் கட்டாயமாக கலந்துகொள்ள வேண்டும் என வடமாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் கடந்த அமர்வுகளில் வலியுறுத்தியிருந்தார். அதாவது, வடமாகாண சபையினால் அழைப்பு விடுக்கப்பட்டும் அமர்விற்கு வருகை தராமல் சபையையும் முதலமைச்சரையும் உதாசீனம் செய்யும் அமைச்சின் செயலாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வடமாகாண அவைத் தலைவர் சி.வி.க…

  10. நாட்டில் எதிர்காலங்களில் நடைபெறவுள்ள தேர்தல்களில் இ.தொ.கா., ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐ.தே. கட்சியுடன் இணைய விரும்பினால் நிபந்தனைகளுடனேயே இணைத்துக்கொள்ள வேண்டும் என தெரிவித்த ஊவா மாகாணசபைக்குத் தெரிவான உறுப்பினர் ஹரீன் பெர்ணான்டோ, ஊவா மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கம் நான்கு தமிழ் கட்சிகளை இணைத்துக் கொண்டே மயிரிளையில் வெற்றி பெற்றது. ஆனால், ஐ.தே. கட்சி தனித்துப் போட்டியிட்டு மக்களின் அமோக ஆதரவை பெற்றுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். பிட்டகோட்டேயிலுள்ள சிறிகொத்தாவில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே ஊவா மாகாணசபை ஐ.தே.கட்சி உறுப்பினர் ஹரீன் பெர்ணான்டோ இவ்வாறு தெரிவித்தார். இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்; எனது எம்.பி. பதவிய…

  11. சர்வதேச விசாரணைக்கு அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும் நாட்டில் உண்மையான நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட வேண்டுமாயின் அது உண்மையினை கண்டறிவதன் மூலமாக மட்டுமே முடியும். நடந்த உண்மைகளை மூடிமறைத்து நாட்டில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்த முடியாது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். அதிகாரப் பகிர்வினை மேற்கொள்வதற்கான நடவடிக்கை எடுப்பதுடன் உண்மையினை கண்டறிவதற்கான பொறிமுறையினை அரசாங்கம் ஏற்றுக்கொண்டு சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். இல்லையேல் தமிழ் மக்களின் உரிமைகளை பெற்றுக்கொள்வதற்காக சாத்வீக போராட்டத்தினை முன்னெடுப்போம். முடிவு அரசாங்கத்தின் கையிலேயே உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். அதிகாரத்தினைப் பகிர்ந்து ஐக்கியப்படுத்து…

  12. இலங்கைக்கான அனைத்து விமான சேவைகளையும் நிறுத்தியது பிரித்தானிய விமான நிறுவனம்!? சிறிலங்காவுக்கான அனைத்து விமான சேவைகளையும் பிரிடிஸ் எயார் வேய்ஸ் நிறுவனம் இடைநிறுத்திக் கொண்டுள்ளது. அடுத்த வருடம் மார்ச் மாதத்துடன் இந்த சேவைகள் அனைத்தும் இடைநிறுத்தப்படுவதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. சிறிலங்காவுக்கான விமான சேவை போதிய வருமான பங்களிப்பை வழங்காத நிலையிலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரிடிஸ் எயார் வேய்ஸ் தெரிவித்துள்ளது. எனினும் இதன் பின்னணியில் மிஹின்லங்கா விமான சேவையின் சொந்த காரரான மகிந்தராஜபக்ஷவின் அழுத்தங்கள் இருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. http://tamilleader.com/?p=41808

  13. யுத்த வெற்றியின் மீதான கவர்ச்சி குறைந்துவருகிறது – மனோ யுத்த வெற்றி என்ற கோஷத்தின் மீதான கவர்ச்சி குறைந்து வருவது இப்போது கண்கூடாக தெரிகிறது என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ஊவா மாகாணசபை தேர்தல், எதிர்காலத்தில் நடைபெறவுள்ள தேசிய மட்ட தேர்தல்களின் முன்னோடி என்று தேர்தலுக்கு முன்னேரே நாம் சொன்னோம். அது இன்று சரியாக நடந்து விட்டது. இந்த தேர்தலில் மக்கள், குறிப்பாக சிங்கள மக்கள், அரசாங்கத்துக்கு ஒரு செய்தியை கூறியுள்ளார்கள். யுத்த வெற்றி என்ற கோஷத்தை அரசியல் சந்தையில் விலைக்கு வாங்க இனிமேலும் நாங்கள் தாயரில்லை என்று அரசாங்கத்துக்கு அவர்கள் சொல்லியுள்ளார்கள். யுத்த வெற்றி என்ற கோஷத்தின் மீதான கவர்ச்சி குறைந்து வருவது இப்போது கண்கூடாக தெரிகி…

  14. போர் ஏற்பட்டால் காணிகளைக் கையளிப்போம் - கையெழுத்து பெற்றுக்கொண்டே காணிகள் ஒப்படைப்பு. [Wednesday 2014-09-24 13:00] மீண்டும் போர் ஏற்பட்டால் தாம் கையளிக்கும் காணிகள் தமக்கு மீளவும் கையளிக்கப்பட வேண்டும் என்று தம்மிடம் பத்திரத்தில் கையொப்பம் வாங்கிய பின்னரே, தமது காணிகள் படையினரால் கையளிக்கப்பட்டுள்ளதாக, கேப்பாபிலவில் விமானப்படையினரிடம் இருந்து காணி களை மீளப்பெற்ற மக்கள் தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில், கேப்பாபிலவில் தமிழ் மக்களின் பெருமளவான உறுதிக்காணிகள் போரின் பின்னர் இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டிருந்தன. அவற்றுள் அந்த மக்களின் வாழ் வாதாரமாக விளங்கிய வயற் காணிகளும் அடங்கியிருந்தன. கடந்த 18 ஆம் திகதி கேப்பாபிலவு மற்றும் இயன்கன்…

  15. சித்திரவதை சம்பவங்கள் தொடர்பிலான ஆதாரங்களை கருத்திற் கொள்ளாது பிரித்தானிய அரசாங்கம் இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அரசியல் புகலிடம் கோரும் இலங்கைத் தமிழர்களை பிரித்தானியா தொடர்ச்சியாக நாடு கடத்தி வருவதாக சித்திரவதைகளிலிருந்து சுதந்திரம் என்ற அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள் மாற்றுச் சிந்தனையாளர்கள் மீது இலங்கை பாதுகாப்பு தரப்பினர் திட்டமிட்ட வகையில் சித்திரவதைகளை மேற்கொண்டு வருவதற்கான திடமான ஆதாரங்கள் காணப்பட்ட போதிலும், பிரித்தானியா தொடர்ச்சியாக புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்தி வருவதாகத் தெரிவித்துள்ளது. மூன்றில் இரண்டு புகலிடக் கோரிக்கையாளர்கள் பாலியல் ரீதியாக து…

  16. இரணைமடுவில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு குடிதண்ணீர் கொண்டுவரும் திட்டத்துக்கு மாற்றீடாக கடல் நீரைக் குடிதண்ணீராக்கும் திட்டம் குறித்து உயர்மட்டக் குழு இன்று செவ்வாய்க்கிழமை கூடி ஆராய்ந்தது. வட மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு இடம்பெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் திட்ட நிதி வழங்குநர்களான ஆசிய அபிவிருத்தி வங்கி, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சு, நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அதிகாரிகள் மற்றும் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, வட மாகாண கல்வி மற்றும் சுகாதார அமைச்சர்களான குருகுலராஜா, சத்தியலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர். இரணைமடுவில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு குடிதண்ணீர் எடுத்துவரும்…

    • 28 replies
    • 1.8k views
  17. தனி நாடு அமைக்கும் நோக்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கோ தமிழரசுக் கட்சிக்கோ கிடையாது என உச்ச நீதிமன்றில் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா சத்தியக்கடதாசி மூலம் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தனிநாடு ஒன்றை அமைக்கும் நோக்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், இலங்கைத் தமிழரசுக் கட்சியும் செயற்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ், நிதியரசர்களான ரோஹினி மாரசிங்க, சந்திர ஏக்கநாயக்க ஆகியோர் இந்த மனுக்களை விசாரணை செய்தனர். தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் அரசியலமைப்பிற்கு முரணானது என்றும் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரி, உயர் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. …

  18. இனியும் அரசுடன் தானா? 2009ஆம் ஆண்டுக்குப் பிறகு இடம்பெற்ற அனைத்துத் தேர்தல்களும் ஒரே மாதிரியான முடிவுகளையே தந்தன. அரசுக்கு அமோக வெற்றி; எதிர்க்கட்சிகள் படுதோல்வி. ஆனால், அந்த நிலைமை இப்போது மாறத் தொடங்கியுள்ளது. மெல்ல மெல்ல வெற்றியை எட்டிப்பிடிக்கும் அரசு வீழ்ச்சியடையும் நிலை ஏற்படத் தொடங்கியுள்ளது. மேல் மற்றும் தென் மாகாணசபைத் தேர்தலில் இந்த நிலை ஆரம்பமானது. ஊவா தேர்தலும் அவ்வாறுதான். இருந்தாலும் மேல் மற்றும் தென் மாகாணசபைத் தேர் தலைவிட ஊவா தேர்தல் பல செய்திகளை எமக்குக் கூறியுள்ளது. அச்செய்தியில் முக்கியமானது தான் முஸ்லிம்களின் நிலைப்பாடு. முஸ்லிம்களுக்கு எதிரான இன வாதத்தை ஊட்டி வளர்க்கும் அரசுடன் இணைந்திருக்கும் முஸ்லிம் கட்சிகளுக்கு முக்கியமான செய்தி யொன்றை முஸ்லிம…

  19. பளையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த யாழ்தேவி ரயில் மஹவ பிரதேசத்தில் தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியதாக மத்திய ரயில் கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. இந்த விபத்து இன்று மாலை 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதனால் வட பகுதிக்கான ரயில் சேவை மஹவ வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன் அதிஸ்டவசமாக ரயிலில் பயணித்த பயணிகளுக்கு எதுவித ஆபத்துக்களும் ஏற்படவில்லை எனவும் மத்திய ரயில் கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. (படங்கள் உதவி அத இணையதளம்) - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=145873475325727354#sthash.dwrYx428.dpuf

  20. கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட ஆனையிறவு பகுதியில் இராணுவத்தினருக்கென காணி அளவியிடும் செயற்பாடு அரசியல்வாதிகளாலும், காணி உரிமையாளர்களாலும் தடுத்து நிறுத்தப்பட்டது. சுமார் 1 ஏக்கர் காணியை 66 வது படைப்பிரிவின் தலைமை அலுவலகம் அமைப்பதற்கான நிலத்தினை அளவீடு செய்வதற்காக வருகை தந்திருந்த நில அளவையாளர்களை அப்பகுதியில் திரண்ட மக்கள் எதிர்த்து குறித்த செயற்பாட்டை நிறுத்தினர். நேற்றுக் காலை (23.09.24) 9 மணியளவில் ஆனையிறவு பகுதியில் அமைந்துள்ள நினைவு சிலைக்கு முன்பாக அமைந்துள்ள குறித்த காணியினை தமது தேவைக்காக இராணுவத்தினர் சுவீகரிக்க முட்படுவதாக அறிந்த காணி உரிமையாளர்கள் திரண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர். குறித்த காணி உரிமையாளர்களுடன் பேச்சு நடத்த…

  21. நகர அபிவிருத்தி அதிகார சபை வேலைத்திட்டத்தின் கீழ் பண்ணை கடற்கரையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில் பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் வடமாகாண பணிப்பாளர் வை.ஏ.ஜி.ஏ.குணதிலக தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், பண்ணை கடற்கரை பகுதி 23 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி செய்யப்பட்டுவருகிறது. கடற்கரைப் பகுதியில் தற்போது பூங்காவொன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்த பூங்காவையொட்டியதாக இந்த வேலைத்திட்டங்கள் 2013 ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வேலைத்திட்டங்கள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, பண்ணை வீதிக்கு கிழக்கு பக்கமாக ஒரு கிலோ மீற்றர் பகுதியில் ஒரு வேலைத்திட்டமும் பண்ணை வீதிக்கு ம…

  22. பௌத்தர்களைப் பார்த்து குரைத்தவர்களுக்கு இம்முறை ஊவா மாகாண சபைத் தேர்தல், நல்லதொரு பாடத்தை கற்பித்திருக்கிறது என்று பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். சிங்கள பௌத்தர்களைப் பார்த்து குரைத்துக்கொண்டிருப்பவர்களுக்கு நல்ல பாடம் கற்பிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பிறந்த மண்ணில் இன்று நாம் தேவையற்றவர்களாகி உள்ளோம். பௌத்த தர்மத்துக்கு ஏற்ப வாழும் நாடொன்று அவசியம். அந்த மாற்றத்துக்காக இந்த நாடு அணிவகுத்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். உலகிலுள்ள அனைத்து தலைவர்களும் தங்களது வரலாற்றின் அடி, நுனியைத் தேடிச் சென்றுகொண்டிருக்கிறார்கள். ஆனால், எமது நாட்டின் தலைவர்கள் அது தொடர்பில் வாயன் திறப…

  23. பெளத்தத்திற்கு அனைத்தும் மாறவேண்டும் ஏழாயிரம் பெளத்த தேரர்களுடன் பொது பல சேனா கொழும்பில் மாநாடு 2014-09-24 10:21:25 எதிர்வரும் 28-ம் திகதி நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஒரு நாளாக அமையும் என பொது பல சேனா தெரிவித்துள்ளது. நான்காயிரம் தேரர்களை ஓர் இடத்தில் குவித்து எமது பௌத்த தலைவர்கள் எவரும் மாநாடுகளை நடத்தவில்லை, இதை சவாலாக ஏற்று ஏழாயிரத்துக்கும் மேற்பட்ட பௌத்த தேரர்களை ஓர் இடத்துக்கு அழைத்து சுகததாச விளையாட்டரங்கில் மேற்படி தினத்தில் இந்த மாபெரும் மாநாட்டை நடத்த தீர்மானித்துள்ளோம் என அந்த அமை ப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். நேற்றுக் காலை கிருலப்பனை பொது பல சேனா தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்…

  24. முதல்வரால் வீடமைப்புத் திட்டம் கைதடியில் நேற்று ஆரம்பிப்பு 2014-09-24 11:04:02 வடக்கு மாகாண சபைக்கு மக்கள் பிரதிநிதிகள் தெரிவு செய்யப் பட்டு மாகாண சபை செயற்படத் தொடங்கிய பின்னர் முதல் தடவை யாக நேற்று வட மாகாண உள்ளூராட்சி அமைச்சின் வீடமைப்புத் திட்டத்தினை வடமாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் யாழ்ப்பாணத்தின் கைதடி மத்தியில் தெரிவு செய்யப்பட்ட முற்றாக கண் பார்வை இழந்த பயனாளி கந்தையா வரதரா சன் வீட்;டில் அடிக்கல் நாட்டி வீட்டுத்திட்டத்தை ஆரம்பித்து வைத்தார். இந்நிகழ்வில் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் சி.திருவாகரன், முதலமைச்சரின் இணைப்புச் செயலாளர் மற்றும் அலுவலர்கள், பொதுமக்கள் எனப்பலர் கலந்து கொண்டனர். வீடமைப்புத் திட்டத்திற்கான நிதியாக கட ந்த இரண்டு வருடங்களாக…

  25. ஐ.தே.க சார்பில் ரணிலே போட்டி 2014-09-24 11:48:42 எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் ரணில் விக்கிரமசிங்க போட்டியிடு வார் என அக்கட்சி நேற்று செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது. கட்சியின் நாடாளுமன்ற உறுப் பினர் அகிலா காரியவசம் நேற்று செய்தியாளர் மாநாட்டில் இதனை தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சி வேறு ஒரு வேட்பாளரையும் நிறுத்தாது, ஊழலற்ற, நாட்டை அபிவிருத்தி செய்யக் கூடிய அதன் தலைவரையே வேட் பாளராக நிறுத்தும் என அவர் தெரி வித்துள்ளார். ஊவா மாகாணத்தில் சில மூத்த அமைச்சர்களின் தொகுதிகளில் தோல்வி ஏற்படக் காரணம் அரசாங்கம் அபிவிருத்தி திட்டங்களுக் காக அவர்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யாததே. ராஜபக்ஷக்கள் ஊடாகவே நிதி ஒதுக்கீடு இடம்பெறுகின்றது. அரசாங்க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.