Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஊர்காவற்துறை தம்பாட்டி காந்திஜி விளையாட்டு கழகம், கடற்தொழிலாளர் சங்கங்கள், காந்திஜி சனசமூக நிலையமும் இணைந்து 64வது ஆண்டு நிறைவையொட்டி நடாத்தி வரும் விளையாட்டுப் போட்டிகளில் இன்று கடல்சார் போட்டியான பாய் விரித்து படகோட்டும் போட்டி தீவக படகுகளுக்கு இடையே நடைபெற்றுள்ளது. இதில் இரு அணிகள் பங்குபற்றியிருந்தன. போட்டிக்குரிய படகுகள் யாவும் தம்பாட்டியிலிருந்து புறப்பட்டு அராலி துறைக்கு சென்று அங்கிருந்து போட்டிகள் ஆரம்பமாகின. போட்டியை பிரதம விருந்தினராக கலந்து கொண்ட கே.என்.விந்தன் கனகரத்தினம் மற்றும் கூட்டமைப்பின் முக்கியஸ்தரான ஹென்றி மகேந்திரன் ஆகியோர் ஆரம்பித்து வைத்திருந்தனர். http://www.pathivu.com/news/33581/57//d,article_full.aspx

  2. வடமாகாணத்தின் அரசாங்க நிறுவனங்களில் சிங்கள அதிகாரிகளை நியமிக்கும் நடவடிக்கைகள் துரிதப்பட்டு வருகின்றன. இதன்படி வடமாகாணத்தில் உள்ள அரச காரியாலயங்கள், திணைக்களங்கள் போன்றவற்றில் பணியாற்றும் தமிழ் அதிகாரிகளுக்கு திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்களின் பதவிகளுக்கு துரிதமாக தென்னிலங்கையில் இருந்து சிங்கள அதிகாரிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். வடமாகாணத்தை சிங்களவர்களின் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே கிழக்கு மாகாணத்தின் அரச காரியாலயங்களில் இவ்வாறு அதிக அளவில் சிங்கள அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.http://www.pathivu.com/news/33582/57//d,article_full.aspx

  3. ஐக்கிய நாடுகள் சபையின் புதிய மனித உரிமைகள் ஆணையாளர் பக்கச் சார்பின்றி செயற்படுவார் என இலங்கை நம்பிக்கை வௌியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் புதிய மனித உரிமைகள் ஆணையாளராக ஜோர்தான் இளவரசர் ஸெய்ட் ராட் ஸெய்ட் அல் ஹூசெய்ன் நேற்று பதவியேற்றார். இந்தநிலையில் இவர் பக்கச்சார்பின்றி செயற்படுவார் என நம்புவதாகவும், நவனீதம் பிள்ளை பற்றிய அரசாங்கத்தின் நிலைப்பாடு இரகசியமானதல்ல எனவும், நேற்று கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போது தகவல் தொழிநுட்ப அமைச்சர் மற்றும் அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். மேலும் ஐ.நா.வின் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை தொடர்பில் பக்கச்சார்புடன் செயற்பட்டதாக, அவர் இதன்போது கூறினார். அத்துடன் அல் ஹூசெய்னை இலங…

  4. l தமிழினத்தைக் கடவுள் தான் காப்பாற்ற வேண்டுமென்று 1970 யூலையில் பாராளுமன்ற பொதுத்தேர்தல் முடிவடைந்த பின் தமிழரசுக் கட்சித் தலைவராயிருந்த எஸ்.ஜே.வி.செல்வநாயகம் கூறினார். இன்று அதை, அக்கூற்றைப் பலர் பலவாறு பயன்படுத்துகின்றனர். இனிமேல் தமிழினத்திற்கு விமோசனம் இல்லை என்ற கருத்தில் அவர் கூறியதாகவே பலரும் நம்புகின்றனர். அப்படியிருக்க முடியாது. ஒரு இனம் தனது மொழியை, மதத்தை, பாரம்பரிய பண்பாடுகளைக் கைவிட்டு தற்கொலை செய்து கொண்டால் மட்டுமே அழிவடைய வழியுண்டு. மொழியில், மதத்தில், பாரம்பரிய பண்பாட்டில், அதன் மேன்மையில் பற்றுறுதியுடன் உள்ள எந்தவொரு இனமும் அழியாது. அழிக்கப்படவும் முடியாது. நாம் இன்று அழிவை நோக்கிச் செல்கின்றோம் என்றால் அதற்கு நாமே பொறுப்பாளிகள் என்பதை மறக்கக்க…

  5. யுத்த அவலத்தை தாங்கி நிற்கும் மக்களிடையெ தனது மலின அரசியலை முன்னெடுத்து வரும் அரச அமைச்சர் டக்ளஸ் இலங்கை அரசினால் சர்வதேச நிதி உதவியினில் வழங்கப்படும் ஒதுக்கீடுகளை தனது பிரச்சாரங்களிற்கே பயன்படுத்தி வருகின்றார்.அவ்வகையினில் விதவைகள் மற்றும் வறுமை கோட்டின் கீழ வாழ்பவர்களை கூட அவர் விட்டு வைப்பதில்லை. இதனிடைய அத்தகைய நிகழ்வொன்றினில் இன்று கலந்து கொண்டு உரையாற்றிய அவர் வடமாகாண அபிவிருத்திக்கு அரசும், ஆளுநரும் தடையாக இருப்பதாக கூட்டமைப்பினர் கூறிவருகின்றமை ஆடத் தெரியாதவனுக்கு மேடை கோணலாக இருப்பது போன்று நகைப்பாக உள்ளது என தெரிவித்துள்ளார். கைதடியில் அமைந்துள்ள வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை வங்கியில் இன்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ…

  6. மக்களின் நலன்கருதி மத்திய, மாகாண அரசுகளை இணைந்து செயற்படுமாறு யாழ். ஆயர் அழைப்பு! [Tuesday 2014-09-02 11:00] மக்களின் நலனைக் கருத்திற் கொண்டு மத்திய அரசும், வடக்கு மாகாணசபையும் உடனடியாக இணைந்து செயற்பட வேண்டும் என யாழ். மாவட்ட ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் ஆண்டகை வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த வாரம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவையும் , வடமாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரனையும் தனித்தனியாக சந்தித்து கலந்துரையாடிய பின்னரே, ஆயர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். அண்மையில் நடைபெற்ற இலங்கை ஆயர் பேரவையின் கூட்டத்தொடரின் இறுதியில் இலங்கை ஆயர்கள் இணைந்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை அலரி மாளிகையில் சந்தித்தோம். அங்கு ஆயர்களாகிய நாம் தற்போதைய நாட்டின் நெருக்கட…

  7. இலங்கைக்கு ஆலோசனை வழங்கியதாக தனியார் தொலைக்காட்சி பேட்டியில் ஒப்புக்கொண்ட சுப்பிரமணியன் சுவாமியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மீனவர் பிரதிநிதிகள் வலியுறுத்தினர். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு பதவி யேற்று 100 நாள்கள் கடந்துவிட்டன. இந்த மூன்றரை மாதங்களில் மட்டும் 350-க்கும் அதிகமான தமிழக மீனவர்களை கைது செய்ததுடன், அவர்களது 63 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர். பின்னர், மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டாலும் விசைப்படகுகள் விடுவிக்கப்படவில்லை. இதனால் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு செய்வதறியாது தவித்து, பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்நிலையில், பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி…

  8. யாழ்ப்பாணம், வரணி பகுதியைச் சேர்ந்த சண்முகநாதன் ஜெயரஞ்சன் (வயது 31) என்ற குடும்பஸ்தரை காணவில்லையென அவரது மனைவி, நேற்று திங்கட்கிழமை கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளார். கடந்த ஓகஸ்ட் 21ஆம் திகதி, பளையிலுள்ள இரும்பு ஒட்டும் வர்த்தக நிலையமொன்றுக்கு வர்ணப்பூச்சு வேலைக்காகச் சென்ற அவர், இதுவரையில் வீடு திரும்பவில்லை என முறைப்பாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். http://www.pathivu.com/news/33575/57//d,article_full.aspx

  9. கொழும்பு செல்லக் காத்திருந்த பஸ் மீது நேற்றுமாலை கல்வீச்சு! - கண்ணாடிகள் நொருங்கி, பயணிகள் மூவர் காயம். [Tuesday 2014-09-02 07:00] யாழ். பண்ணை தனியார் பஸ் நிலையத்தில் இருந்து கொழும்பு செல்லத் தயாராக இருந்த பஸ் மீது நேற்றுமாலை கல் வீசித் தாக்குதல் நடத்தப்பட்டதில், பஸ்ஸின் கண்ணாடிகள் உடைந்ததுடன் அதில் பயணம் செய்வதற்காக ஏறியிருந்த பயணிகள் மூவரும் காயமடைந்தனர். அவர்கள் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். கடந்த மூன்று நாள்களாக தொடரும் தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு இடையிலான தொழில் போட்டி காரணமாக இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சனிக்கிழமை தனியார் பஸ் ஒன்றின் மீது இடம்பெற்ற கல்வீச்சில் பெண் ஒருவர் காயம் அடைந்தார். அத்துடன் பஸ் வண்டியின் கண்ணாடிகளும் உ…

  10. பிக்குகளின் வற்புறுத்தலினால் 4 முஸ்லிம் இளைஞர்கள் கைது பிக்குகளின் வற்புறுத்தலை அடுத்து தர்ஹா நகர், வெல்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு முஸ்லிம் இளைஞர் களை அளுத்கம பொலிஸார் கைது செய்துள்ளனர். சிங்கள மற்றும் முஸ்லிம் இளைஞர் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பை அடுத்தே இவர்கள் நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: முஸ்லிம் இளைஞர்கள் சிலர் கால்பந்தாட்ட போட்டியயான்றில் கலந்து கொண்டுவிட்டு தமது பிரதேசத்தை நோக்கி வந்துள்ளனர். இவர்களுடன் அண்மையில் அளுத்கமவில் நடந்த கலவரத்தில் காலை இழந்த அஸ்கர் என்பவரும் இருந்துள்ளார். இவர்கள் வரும் வழியில் வத்திராஜகொடை என்னும் இடத்தில் வைத்து சிங்கள இளைஞர்கள் சிலர் கால் இழந்த நிலைய…

    • 0 replies
    • 419 views
  11. தலைமைத்துவத்தை பொறுப்பேற்குமாறு தமிழரசுக் கட்சி விடுத்த வேண்டுகோளுக்கு தாம் சம்மதம் தெரிவித்ததாத பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா நேற்று தெரிவித்துள்ளார். http://www.pathivu.com/news/33569/57//d,article_full.aspx

  12. காரசாரமான கேள்விகளும் காத்திரமான பதில்களும்

  13. ஜனாதிபதி மகிந்த-புஷ் இரகசிய சந்திப்பு? 2014-09-01 10:37:57 முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டப்ளியூ.புஷ்சை சந்திக்கவே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஊடகங்களுக்கு தெரியாமல் அமெரிக்காவின் வூஸ்டன் நகருக்கு சென்றதாக இராஜதந்திர தரப்புக்களில் பேசப்பட்டு வருகிறது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கடந்த வாரம் எவருக்கும் அறிவிக்காமல் அவசரமாக அமெரிக்கா புறப்பட்டுச் சென்றதுடன் இது குறித்து அவரது செயலகம் முன்கூட்டியே அறிவித்திருக்கவில்லை. ஜனாதிபதி நாட்டில் இருந்து வெளியேறியுள்ளதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியானதை தொடர்ந்தும் வூஸ்டனில் உள்ள அவரது சகோதரர் டட்லி ராஜபக்ஷவை சந்திக்கும் நோக்கில் அமெரிக்காவுக்கு தனிப்பட்ட விஜயத்தை மேற்கொண்டுள்ளதாக அவரது செயலகம் அறிவித்தது. 2011 ஆம் ஆண்டு ஜனாதிப…

    • 1 reply
    • 630 views
  14. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் குறித்து கவனம் செலுத்துமாறு கோரிக்கை:- 04:54Am பாலேந்திரன் ஜெயக்குமாரி உட்பட பலர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளதை சுட்டிகாட்டியுள்ள தேசிய சமாதானப்பேரவை இது குறித்து கவனம் செலுத்துமாறு தேசிய மனித உரிமை ஆணைக்குழுவை கோரியுள்ளது. பாலேந்திரன் ஜெயக்குமாரியின் சர்ச்சைக்குரிய விதத்திலான கைதும், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படாததும் பாதிக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுப்பவர்கள் கண்மூடித்தனமான தண்டைனைக்காக இலக்கு வைக்கப்படுகிறார்களா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு புத்துயுர் கொடுக்கும் முயற்சியின் போது கொல்லப்பட்டவர்களு…

  15. மஹிந்தவை கட்டுப்படுத்த முடியும் என பிரபாகரன் கருதினார்– கே.விக்னேஸ்வரன் - குளோபல்தமிழ்ச் செய்தியாளர் 01 செப்டம்பர் 2014 ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கட்டுப்படுத்த முடியும் என தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளைப் பிரபாகரன் கருதினார் என முன்னாள் ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் கே. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். துரித கதியில் ஈழத்தை எட்டுவதற்கு தேவையான சூழலை அப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஏற்படுத்துவார் என்ற எதிர்பார்ப்பின் அடிப்படையில், பிரபாகரன் 2005ம் ஆண்டு நவம்பர் மாதம் 17ம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு ஆதரவளித்திருந்தார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். புதிய ஜனாதிபதியினால் ஏற்படக்…

  16. TNAக்கு எதிராக புதிய கூட்டமைப்பு ஒன்றை உருவாக்க ஆனந்தசங்கரி திட்டம் - 4ஆம் திகதி முதலாவது கூட்டம்:- குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு உறுதிப்படுத்தினார் சங்கரி:- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக புதிய கூட்டணி ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிவித்துள்ளார். தமிழ் அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிரான மாற்று கட்சியொன்றை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த புதியக் கூட்டணியில் ஏற்கனவே மூன்று கட்சிகள் உள்வாங்கப்பட்டு உள்ளதாகத் தெரிவித்துள்ளார். குறிப்பாக பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியையும் ஏனைய சில கட்சிக…

  17. ஆடத் தெரியாதவனுக்கு மேடை கோணலான TNAயின் நிலை என்கிறார் 2தசாப்பதம் ஆட்சிமேடையில் இருக்கும் டக்ளஸ் வடமாகாண அபிவிருத்திக்கு அரசும், ஆளுநரும் தடையாக இருப்பதாக கூட்டமைப்பினர் கூறிவருகின்றமை ஆடத் தெரியாதவனுக்கு மேடை கோணலாக இருப்பது போன்று நகைப்பாக உள்ளது என இலங்கை அமைச்சரான டக்ளஸ் தேவானந்தர் தெரிவித்துள்ளார். கைதடியில் அமைந்துள்ள வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை வங்கியில் இன்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்.மாவட்டத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் வடக்கு மாகாண முதலமைச்சர் உரையாற்றும் போது ஹெலியில் வருபவர்களால் அபிவிருத்தியை முன்னெடுக்க முடியாது என தெரிவித்திர…

  18. இராணுவத்திற்கு இயந்திரத்தை வழங்க நல்லூர் பிரதேச சபைத்தவிசாளர் மறுப்பு 2014-09-01 10:12:46 யாழ். நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்களிலுள்ள கழிவுகளை அகற்றுவதற்கு, நல்லூர் பிரதேச சபையின் கழிவகற்றும் உழவு இயந்திரத்தைத் தரும்படி இராணு வத்தினர் கோரிய போதும் தான் அதனை மறுத்து விட்டதாக, நல்லூர் பிரதேச சபை தவிசாளர் பா.வசந்தகுமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, நல்லூர்ப் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் அகற்றப்படும் கழிவுகள் இதுவரைகாலமும், கோண்டாவில் டிப்போவிற்கு அருகிலுள்ள தனியாருக்கு சொந்தமான காணி ஒன்றிலேயே போடப்பட்டு வந்தன. இந்நிலையில், மேற்படி காணியில் கழிவுகள் நிரம்பியதாலும், மேலும் கழிவுகள் போடுவதற்கு காணி உரிமையாளர் மறுத்தமையால் அங்கு கழிவ…

  19. புதிய மனித உரிமைப் பேரவை ஆணையாளர் மீது இலங்கை அரசாங்கம் நம்பிக்கை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் புதிய ஆணையாளர் இளவரசர் ஸெய்ட் ராட் ஸெய்ட் அல் ஹூசெய்ன் மீது இலங்கை அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளது. இளவசரர் ஹூசெய்ன் பக்கச்சார்பின்றி செயற்படுவார் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதுவரை காலமும் பதவி வகித்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையின் நடவடிக்கைகள் குறித்து இலங்கை அரசாங்கம் விமர்சனங்களை வெளியிட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. நவனீதம் பிள்ளை பற்றிய அரசாங்கத்தின் நிலைப்பாடு இரகசியமானதல்ல என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இன்றைய தினம் கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் பங்கேற்ற போது அ…

  20. ஈழத்தமிழர்களுக்கு மோடி அரசு தீர்வைப் பெற்றுத் தரும் என்பதில் கூட்டமைப்பு நம்பிக்கையுடன் உள்ளது. இவ்வாறு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் நேற்றிரவு 'மலரும்' இணையத்துக்குத் தெரிவித்தார். கடந்த வாரம் இந்தியா சென்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக் குழுவினர் இந்தியப் பிரதமர் உட்பட பா.ஜ.க. முக்கிஸ்தர்களை புதுடில்லியில் சந்தித்து பேச்சுக்களை நடத்தினர் இந்தச் சந்திப்பின் பின் தமிழகம் சென்ற கூட்டமைப்புக் குழுவினர் சென்னையில் பா.ஜ.க.வின் முக்கிய தலைவர்களையும் சந்தித்தனர். கூட்டமைப்பு நாடாளுமன்றக் குழுவினர் சிலதினங்களுக்கு முன்னர் நாடு திரும்பிய போதிலும் கூட்டமைப்பினர் தலைவர் சம்பந்தன் நேற்று ஞாயிற்றுக்கிழமை பகலே கொழும்பு திரும்பினார். இந்தி…

  21. தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்தைப் போன்றே அவர்களின் பிரச்சாரப் போராட்டமும் வலுவானது என பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் டொக்டர் கிறிஸ் நோனீஸ் தெரிவித்துள்ளார். ஆயுதப் போராட்டம் எவ்வாறு முனைப்புடன் முன்னெடுக்கப்பட்டதோ அதே தீவிரம் புலிகளுக்கு எதிரான பிரச்சாரப் போராட்டத்திலும் காண்பிக்கப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதே முனைப்பு அதே தந்திரோபாங்களைப் பயன்படுத்தி தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான பிரச்சாரப் போராட்டத்தையும் முறியடிக்க வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளினால் ஊடகங்களின் முன்னெடுக்கப்பட்டு வரும் பிரச்சாரத்தை சாதாரண விடயமாக கருதப்பட முடியாது எனவும் அதுவும் ஓர் யுத்தமேயாகும் எனவும் அவர…

  22. குளோபல் தமிழ்ச்செய்திகளின் விசேட செய்தியாளர் ` இலங்கையின் முப்படைகளையும் சேர்ந்த இராணுவத்தினர் மற்றும் வெளிநாட்டு இராணுவத்தினர் பங்குபற்றும் இணைந்த இராணுவ பயிற்சி நாளை செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகவுள்ளதாக இராணுவ ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. பாதுகாப்பு செயலாளர் கோதபாஜ ராஜபக்ச முதல்நாள் நிகழ்வில் சிறப்புரை ஆற்றுவார் எனவும் கூறப்பட்டுள்ளது. 6 நாடுகளைச் சேர்ந்த இராணுவ வீரர்களுடன் இலங்கையின் முப்படைகளையும் சேர்ந்த 2500க்கும் அதிகமானோர் இந்த பயிற்சியில் பங்கு பற்றவுள்ளனர். இலங்கை இராணுவத்தால் ஐந்தாவது தடவையாகவும் நடத்தப்படவுள்ள இந்த பயிற்சி நெறி மன்னார், வன்னி, மாத்தளை மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளில் உள்ள காட்டுப்பகுதிகளில் இந்த பயிற்சி நடைபெறவள்ளது. மூ…

  23. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் புதிய ஆணையாளர் இளவரசர் ஸெய்ட் ராட் ஸெய்ட் அல் ஹூசெய்ன் மீது இலங்கை அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளது. இளவசரர் ஹூசெய்ன் பக்கச்சார்பின்றி செயற்படுவார் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதுவரை காலமும் பதவி வகித்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையின் நடவடிக்கைகள் குறித்து இலங்கை அரசாங்கம் விமர்சனங்களை வெளியிட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. நவனீதம் பிள்ளை பற்றிய அரசாங்கத்தின் நிலைப்பாடு இரகசியமானதல்ல என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இன்றைய தினம் கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். புதிய மனித உரிமைப் பேரவை ஆணையாளர் பதவியேற்பினை சாதகமாக அர…

  24. திரு கருணாகரன் கிளீநொச்சியில் தாக்கப்பட்டதாக முகநூலில் செய்திகள் வெளீயாகி உள்ளான உண்மையா?

    • 5 replies
    • 2.3k views
  25. கிளிநொச்சி கிருஷ்ணபுரம் பகுதியில் உள்ள குளம் ஒன்றில் குளிக்கச் சென்ற மூன்று பெண்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இச்சம்பவம் இன்று சனிக்கிழமை நண்பகல் 3 மணியளவில் கிருஷ்ணபுரம் பகுதியில் உள்ள கந்தன்குளத்தில் இடம்பெற்றது. கிருஷ்ணபுரத்தைச் சேர்ந்த ச.தாட்சாயினி (வயது 17), இவரது சகோதரியான ச.நவதாரணி (வயது 11), விநாயகபுரத்தைச் சேர்ந்த எஸ்.நிசாந்தினி (வயது 19) ஆகியோரே குளத்தில் உள்ள சகதியில் சிக்கி உயிரிழந்தனர் எனத் தெரிவிக்கப்பட்டது. இவர்களது சடலங்கள் மீட்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வரட்சி காரணமாக இப்பகுதி வீடுகளிலுள்ள கிணற்று நீர் வற்றியதாலேயே இவர்கள் குளத்தில் குளிக்கச்சென்று உயிரிழந்த பரிதாபம் நிகழ்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. http://malarum.co…

    • 24 replies
    • 1.4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.