ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142801 topics in this forum
-
இந்திய இராணுவம் இலங்கைக்கு வருகை! மித்ரசக்தி கூட்டு இராணுவப் பயிற்சியில் பங்கேற்பதற்காக இந்தியப் படையினர் நேற்று நாட்டை வந்தடைந்துள்ளனர். இலங்கைக்கும் இந்தியாவிற்குமிடையே பரஸ்பர நட்புறவை மென்மேலும் விருத்தி செய்யும் முக்கிய படிமுறையாக, வருடந்தோறும் ஏற்பாடு செய்யப்படுகின்ற இந்த மித்ரசக்தி போர்ப் பயிற்சியானது, எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதிவரை மாதுரு ஓயா பிரதேசத்தில் நடைபெறவுள்ளன. இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவிருக்கும் இந்திய இராணுவ வீரர்களே நேற்று மத்தள விமான நிலையத்தின் ஊடாக நாட்டை வந்தடைந்தனர். இந்திய இராணுவ படையினரை காலாட்படை பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் வஜிர வெலகெதர, மித்ர சக்தி இராணுவ பயிற்சி பணிப்பாளர் மேஜர் ஜெனரல் தினேஷ் உடுகம, இலங்கை…
-
-
- 8 replies
- 846 views
- 1 follower
-
-
Published By: VISHNU 13 AUG, 2024 | 03:20 AM (நா.தனுஜா) எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச புதன்கிழமை (14) தமிழ் பொதுக்கட்டமைப்பினரைச் சந்தித்துக் கலந்துரையாடுவதற்கு அழைப்புவிடுத்துள்ளார். ஒன்பதாவது ஜனாதிபதித்தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், தமிழ் பொதுக்கட்டமைப்பினால் தமிழ்மக்கள் சார்பில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் பொதுவேட்பாளராகக் களமிறக்கப்பட்டிருக்கின்றார். தமிழ் மக்களின் கோரிக்கைகள் மற்றும் அபிலாஷைகளுக்கான குறியீடாகவே இப்பொதுவேட்பாளர் களமிறக்கப்படுவதாகத் தெரிவித்திருக்கும் தமிழ் பொதுக்கட்டமைப்பு, இம்முறை ஜனாதிபதித்தேர்தலில்…
-
- 1 reply
- 297 views
- 1 follower
-
-
சமஷ்டி முறையான அரசியல் தீர்வுக்கு ஆதரவான, பலம் மிக்க நாடாளுமன்றம் ஒன்று அமையும் பட்சத்தில் அது சம்பந்தமாகப் பரிசீலித்து முன்னேற்றகரமான முடிவுகளை எதிர்காலத்தில் எட்ட முடியும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார். தம்மை நேற்று (12.08.2024) திங்கட்கிழமை சந்தித்த மூன்று தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளிடமே அவர் இதனைக் கூறியுள்ளார். தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ரெலோ, புளொட் மற்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சி ஆகிய மூன்று கட்சிகள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பை ஏற்று அவரைச் சந்தித்தன. இந்தச் சந்திப்பு தொடர்பில் ரெலோவின் பேச்சாளர் குருசுவாமி சுரேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்படி விடயம் தெரிவிக்…
-
- 0 replies
- 209 views
- 1 follower
-
-
யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்கு சென்ற தன்னை வைத்தியசாலை பணிப்பாளர், சட்ட மருத்துவ அதிகாரி, வைத்தியசாலை காவல்துறை உத்தியோகத்தர் உள்ளிட்ட சிலர் அச்சுறுத்தியதாக பாதிக்கப்பட்டவர் காவல்நிலையத்தில் முறையிட்டுள்ளார். யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் இது தொடர்பிலான முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த நிலையில், பாதிக்கப்பட்டவரான தம்பி ஐயா கிருஷ்ணானந்த் யாழ்.ஊடக அமையத்தில் இன்று (12) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போது குறித்த விடயத்தை வெளிப்படுத்தியுள்ளார். பதிவுத் தபாலில் மகஜர் இதேவேளை, சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி செயலகம், சுகாதார திணைக்களம், காவல்துறை திணைக்களம் உள்ளிட்ட பல்வேறு தரப்புகளும் பதிவுத் தபாலில் மகஜரை கையளித்து…
-
- 1 reply
- 473 views
- 1 follower
-
-
12 AUG, 2024 | 08:59 PM ஜனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பின் பொது வேட்பாளராக இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய குழு உறுப்பினர் அரியநேத்திரன் தெரிவு செய்யப்பட்டமை தமிழரசு கட்சியை பொது வேட்பாளர் விடயத்தில் எமது வழிக்கு கொண்டு வரும் ஒரு உத்தியே என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். பொது வேட்பாளராக அரசியல் கட்சி சார்பற்ற ஒருவர் நியமிக்கப்படுவார் என ஆரம்பத்தில் கூறப்பட்டது. ஆனால், இறுதியில் தமிழரசு கட்சியின் உறுப்பினர் தெரிவு செய்யப்பட்டமை தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்கள் தமிழ் அரசியல் கட்சி பிரதிநிதிகளிடம் ஒற்றுமையினை எ…
-
-
- 5 replies
- 550 views
- 1 follower
-
-
Published By: VISHNU 12 AUG, 2024 | 10:16 PM சுஷ்மா ஸ்வராஜ் வெளிநாட்டுச் சேவை நிறுவனத்தில் இலங்கை இராஜதந்திரிகள் மற்றும் அதிகாரிகளுக்கான முதலாவது சிறப்புப் பாடப் பயிற்சித் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியின் வேண்டுகோளின் பேரில் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் சிறப்புப் பாடப் பயிற்சித் திட்டத்தை முன்னெடுத்தார். இது அவர்களின் தனிப்பட்ட வளர்ச்சிக்கு மாத்திரமன்றி இலங்கைக்கும் பிராந்தியத்திற்கும் நன்மை பயக்கும் விடயமாக அமையும். இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் இது குறித்து அவரது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, சுஷ்மா…
-
-
- 1 reply
- 202 views
- 1 follower
-
-
இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையே 1952ஆம் ஆண்டு இறப்பர் - அரிசி உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. இதற்கு அமைவாக, இலங்கை சீனாவுக்கு இறப்பரை ஏற்றுமதி செய்து, அதற்குப் பதிலாக அங்கிருந்து அரிசியை இறக்குமதி செய்து வந்துள்ளது. இலங்கையில் 1952ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதாரச் சரிவு இறப்பர் - அரிசி உடன்பாட்டுக்கு வழி சமைத்ததைப்போன்றே தற்போது நிலவுகின்ற பொருளாதார நெருக்கடி சீனாவில் இருந்து அவ்வப்போது நன்கொடையாக அரிசியை கையேந்துவதற்கு வழிகோலியுள்ளது. அண்மையில் வடக்கு, கிழக்குக் கடற்றொழிலாளர்களுக்கு சீனாவின் நன்கொடையாக அரிசி விநியோகப்பட்டுள்ளது. இந்நன்கொடையில் மனிதாபிமானத்தை விட பிராந்திய அரசியல் மேலோங்கியிருப்பது வெளிப்படையானது. ஆனால், சீன அரிசியில் மறைந்திருக்கும் அரசியலை விட…
-
- 1 reply
- 543 views
-
-
Published By: Vishnu 12 Aug, 2024 | 07:01 PM (நா.தனுஜா) வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இந்தியாவுடன் தமக்கு எந்தவொரு போட்டியும் இல்லை என தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களிடத்தில் தெரிவித்திருக்கும் சீனத்தூதுவர் சி சென்ஹொங் இந்தியாவுடன் மிகநெருக்கமாகப் பணியாற்றுவதற்கான காரணத்தைக் கேட்டறிந்திருக்கிறார். இலங்கைக்கான சீனத்தூதுவர் சி சென்ஹொங் மற்றும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியனுக்கும் இடையிலான சந்திப்பொன்று திங்கட்கிழமை (12) கொழும்பிலுள்ள சீனத்தூதரகத்தில் நடைபெற்றது. நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித்தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள…
-
- 0 replies
- 372 views
-
-
Published By: DIGITAL DESK 7 12 AUG, 2024 | 05:20 PM வவுனியா செட்டிக்குளம் ஆண்டியாபுளியங்குளம் பீகிடியா பாம் கிராம மக்கள் இன்று திங்கட்கிழமை (12) எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். செட்டிக்குளம் பீகிடியா பாம் கிராமத்தில் தனி நபரொருவர் சட்டவிரோதமாக குளம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இவ் ஆர்ப்பாட்டம் பிரதேச மக்களால் முன்னெடுக்கப்பட்டது. தனிநபர் ஒருவர் எந்தவித அனுமதியுமின்றி புதிதாக அணைக்கட்டு போடப்பட்டு குளம் அமைப்பதனால் அதற்கு கீழ் வாழுகின்ற 80க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இதனால் பாதிக்கப்படுவதாகவும் குளக்கட்டு உடைப்பெடுக்குமாயின் தமது வீடுகள் வெள்ளநீரில் மூழ்கிவிடும் எனவும் இதனை தடுத்து நிறுத்துமாறு கோரியே ஆ…
-
- 0 replies
- 301 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 12 AUG, 2024 | 02:22 PM இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரனும், இரா.சாணக்கியனும் இலங்கைக்கான சீனத் தூதுவர் சீ சென்கொங்கை சந்தித்து கலந்துரையாடினர். சீனத் தூதுவரின் அழைப்பின் பேரில் கொழும்பிலுள்ள சீனத் தூதராலயத்தில் இன்று திங்கட்கிழமை (12) குறித்த சந்திப்பு நடைபெற்றது. தற்போதைய முக்கிய நிகழ்வுகள் சம்பந்தமாகவும் வடகிழக்கில் வாழும் தமிழ் மக்களின் அபிலாஷைகள் சம்பந்தமாகவும் சினேகபூர்வமாக கலந்துரையாடினோம் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/190893
-
- 0 replies
- 244 views
- 1 follower
-
-
இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கும் ஏனையவர்களுக்கும் நிகழ்நிலை விசா வழங்கப்படாமை காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் வருகைக்கான விசாவைப் பெறுவதற்கு நீண்ட வரிசைகள் உருவாகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, இலங்கைக்குள் நுழைவதற்கான விசா வழங்குவதில் இருந்து VFS Global நிறுவனத்தை நீக்கி, பழைய முறைப்படி விமான நிலையத்தில் விசா வழங்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஒன் அரைவல் விசா எனினும், அரசாங்கமும் குடிவரவு திணைக்களமும் பழைய முறைப்படி நிகழ்நிலை விசா வழங்குவதை ஆரம்பிக்காததால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசா பெற நீண்ட வரிசைகள் உருவாகியுள்ளன. இந்த நிலையில், இலங்கைக்கு வரும் அனைத்து ச…
-
- 1 reply
- 262 views
- 1 follower
-
-
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான நாளாந்த சம்பளம் 1700 ரூபாய் நிறைவேற்றம்! பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான நாளாந்த சம்பளமாக 1700 ரூபாவை வழங்கும் தீர்மானம், சம்பள நிர்ணய சபையில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. சம்பள அதிகரிப்பு தொடர்பில் சம்பள நிர்ணய சபையில் இன்று வாக்கெடுப்பொன்று நடத்தப்பட்டுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். இதன்படி, பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான நாளாந்த அடிப்படை சம்பளமாக 1,350 ரூபாவும், உற்பத்தி ஊக்குவிப்பு விசேட கொடுப்பனவாக 350 ரூபாவும் வழங்க இணக்கம் எட்டப்பட்டுள்ளது . இதேவேளை, சம்பள விடயம் உயர் நீதிமன்றத்திற்கு எடுத்து செல்லப்பட்ட நிலையில், நீதிமன்றத்தால் குறிப்பிடப்பட்ட தவறுகளை த…
-
- 3 replies
- 420 views
-
-
மஹிந்தவுக்கு எதிராகச் செயற்பட்டவர்கள் அரசியல் ரீதியாக இனிமேல் தலை தூக்க முடியாது! பொதுஜன பெரமுனவின் முதலாவது கன்னி தேர்தல் பிரசாரம் எதிர்வரும் 21ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு அனுராதபுரத்தில் நடைபெறவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். நேற்றையதினம் ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ” எதிர்வரும் 21ஆம் திகதி அதிகளவான மக்கள் எமது கூட்டத்தில் கூடுவார்கள். எனவே அதற்காக நாம் எல்லா வகையிலும் தயாராக உள்ளோம். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக செயற்பட்டவர்கள் அரசியல் ரீதியாக இனிமேல் தலை தூக்க முடியாது. அதேபோன்றதொரு விடயம் இன்று ஸ்ரீ…
-
- 0 replies
- 140 views
-
-
நீதி அமைச்சராக அலி சப்ரி நியமனம்! வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார் இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷவின் இராஜிநாமாவை அடுத்து ஜனாதிபதியால் இந்த பதவிப் பிரமாணம் வழங்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1395444
-
-
- 1 reply
- 382 views
-
-
Published By: VISHNU 12 AUG, 2024 | 03:44 AM (இராஜதுரை ஹஷான்) பொருளாதார ரீதியில் நாடு தற்போது அடைந்துள்ள ஒப்பீட்டளவிலான முன்னேற்றத்தை சீர்குலைக்கும் வகையில் ஜனாதிபதி தேர்தலின் போது செயற்படமாட்டோம். அரச கட்டமைப்பு டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டால் தமிழர்களுக்கு டிஜிட்டல் முறைமை ஊடாக சுயநிர்ணயத்தை வழங்கலாம் என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். கொழும்பு பிலியந்தல பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (11) இடம்பெற்ற ஐக்கிய குடியரசு முன்னணியின் கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி இட…
-
- 2 replies
- 410 views
- 1 follower
-
-
தமிழ் மக்களின் சமூகப் பிரச்சினைகளை ஆராய்வதற்கு நடவடிக்கை. - ரணில் - அரசாங்கத்தினால் புதிதாக உருவாக்கப்படவுள்ள சமூக மற்றும் நீதிக்கான ஆணைக்குழுவில் தமிழ் மக்களின் சமூகப் பிரச்சினைகளை விரிவாக ஆராய்வதற்கு சந்தர்ப்பம் கிடைக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் நுவரெலியா மாவட்ட கல்விசார் நிபுணர்கள் மற்றும் தொழில் வல்லுனர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்றும் நேற்று நுவரெலியாவில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளதாவது” நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு நாம் நடவடிக்கை எடுத்து வருகின்றோம். என…
-
- 4 replies
- 381 views
-
-
ஜனாதிபதியின் அழைப்பை நிராகரித்த தமிழ் பொதுக்கட்டமைப்பு 11 AUG, 2024 | 05:01 PM ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான பேச்சுவார்த்தையில் பங்கேற்காதிருக்க தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பு தீர்மானித்துள்ளது. தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களுக்கும் சிவில் சமூக தலைவர்களுக்கும் நாளைய தினம் திங்கட்கிழமை (12) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்புக்கு ஜனாதிபதி செயலக பிரதிநிதிகளால் தொலைபேசி மூலம் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த சந்திப்பில் தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பு என்ற அடிப்படையில் 14 உறுப்பினர்களும் சந்திப்பில் கலந்துகொள்ள மாட்டார்கள். தேர்தல் வேலைகளில் மூழ்கியி…
-
-
- 18 replies
- 1.2k views
- 3 followers
-
-
11 AUG, 2024 | 11:58 AM இலங்கைக்கு சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட 36 கையடக்க தொலைபேசிகள் மற்றும் 06 மடிக்கணினிகள் ஆகியவற்றுடன் மூவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். தைானவர்கள் கொழும்பு தெமட்டகொடை பிரதேசத்தில் வசிக்கும் 40 - 45 வயதுக்குட்பட்ட வர்த்தகர்கள் ஆவர். இந்த சந்தேக நபர்கள் நேற்று (10) நள்ளிரவு 12.30 மணியளவில் துபாயிலிருந்து எமிரேட்ஸ் எயார்லைன்ஸின் EK-649 விமானத்தின் ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். இவர்கள் விமான நிலையத்தை விட்டு வெளியேறும்போது, அவர்களது பயணப்பைகள் அதிகாரிகளால் சோதனையிடப்பட்டது. அவ்வேளை மறைத்து வைக்கப்பட்டிருந்த கையடக்க தொலைபேசிகள் மற்றும் …
-
- 0 replies
- 190 views
- 1 follower
-
-
அனைத்துக் கிளைப்பொறுப்பாளர்கள்> உபகட்டமைப்புப் பொறுப்பாளர்கள்> செயற்பாட்டாளர்களிற்கும்! வணக்கம் தமிழ்த்தேசியச் செயற்பாடுகளிலிருந்து ரகுபதி நீக்கப்பட்டுள்ளார். தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களினால் உருவாக்கப்பட்டுக் கட்டமைக்கப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மரபுரீதியான நிர்வாக ஒழுங்கு விதிகளை மீறி> சுவிஸ் கிளையின் துணைப்பொறுப்பாளர் வி.ரகுபதி அவர்கள்> தேசியத்தலைவர் தொடர்பான உண்மைக்குப் புறம்பான தகவல்களைச் செயற்பாட்டாளர்கள் மத்தியில் பரப்பிவருகிறார். ஏற்கனவே கடந்த 2023 மாவீரர்நாளில்> தேசியத்தலைவரைச் சந்தித்தோமென்று கூறும் விடுதலைப்போராட்டத்தினைச் சிதைக்கும் குழுவொன்று> தேசியத்தலைவரின் மகள்…
-
- 0 replies
- 678 views
-
-
10 AUG, 2024 | 04:12 PM ஆர்.ராம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை எதிர்வரும் புதன்கிழமையன்று (14) இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் சுமந்திரனுக்கும் இடையில் நேற்று சனிக்கிழமை (10) இந்தச் சந்திப்புக்கான நேர ஒதுக்கீடு குறித்த தொலைபேசி உரையாடலொன்று நடைபெற்றுள்ளது. இதன்போது மாகாண சபைகள் தேர்தல் திருத்தச்சட்டத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மற்றும் மாகாண சபைகளின் அதிகாரங்களை உறுதிப்படுத்துவதற்கான சட்ட திருத்தங்கள் பற்றி ஆராயப்படவுள்ளதாக ஜனாதிபதிக்கு நெருக்கமான தரப்…
-
-
- 9 replies
- 676 views
- 2 followers
-
-
11 AUG, 2024 | 10:37 AM ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் பொதுஜன பெரமுன எடுத்துள்ள தீர்மானம் காரணமாக ராஜபக்ச குடும்பத்திற்குள் கருத்துவேறுபாடுகள் எழுந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மகிந்த ராஜபக்ச குடும்பத்தவர்கள் உட்பட ராஜபக்ச குடும்பத்தவர்கள் பலர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டை கொண்டுள்ளனர். முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்சவும், இராஜாங்க அமைச்சர் சசீந்திர ராஜபக்சவும் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதுடன் அவருக்கே கட்சி ஆதரவளிக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டை கொண்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மகிந்த ராஜபக்சவின் ஏனைய புதல்வர்களும் இதே நிலைப்பாட்டை கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியா…
-
- 2 replies
- 474 views
- 1 follower
-
-
11 AUG, 2024 | 09:59 AM ஆர்.ராம் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (11) வவுனியாவில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் தலைவர் மாவை. சோ.சேனாதிராஜா தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டம் இன்று முற்பகல் 10 மணியளவில் ஆரம்பமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் முதலாவது விடயமாக தமிழ் பொதுவேட்பாளராக பெயரிடப்பட்டுள்ள அரியநேத்திரனின் விடயம் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. அவர் மீது நடவடிக்கைகளை எடுப்பதா, இல்லையா என்பது தொடர்பில் ஆராயப்படவுள்ளது. எவ்வாறாயினும், அரியநேத்திரனும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுவதோடு, தான் தமிழ் அரசுக் கட்…
-
-
- 17 replies
- 1k views
- 1 follower
-
-
10 AUG, 2024 | 09:03 PM (நா.தனுஜா) பொறுப்புக்கூறல் சார்ந்த செயற்பாடுகளை அரசாங்கத்தின் ஓரங்கமாகவுள்ள சட்டமா அதிபரிடம் கையளிப்பதைவிட, சுயாதீன சட்டவாதி ஒருவரை நியமிப்பதானது ஆட்சி நிர்வாகத்தின் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதில் மிகமுக்கிய நகர்வாக அமையும் என மனித உரிகைள் கண்காணிப்பகத்தின் ஆசியப்பிராந்திய பிரதிப்பணிப்பாளர் மீனாக்ஷி கங்குலி சுட்டிக்காட்டியுள்ளார். எதிர்வரும் செப்டெம்பர் 21 ஆம் திகதி ஜனாதிபதித்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பொறுப்புக்கூறல் நிலைவரம் தொடர்பில் உள்நாட்டு சஞ்சிகையொன்றின் கட்டுரையில் மீனாக்ஷி கங்குலி மேலும் கூறியிருப்பதாவது, இலங்கையில் கடந்த 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டதன் …
-
- 0 replies
- 150 views
- 1 follower
-
-
நல்லுார் ஆலய வளாகத்திற்குள் நுழைந்த பிக்குமார்களின் வாகனங்களால் பரபரப்பு. நல்லூர் கந்தசுவாமி கோயில் ஆலய சுற்று வீதியில் வாகனங்கள் நுழைய தடை செய்யப்பட்டுள்ள நிலையில் சில பிக்குகள் வாகனத்துடன் நுழைந்தமையால் சர்ச்சை எழுந்துள்ளது. நல்லூர் கந்தசாமி கோவில் பெருந்திருவிழா காரணமாக வாகன போக்குவரத்துகளை தடை செய்யும் வீதி தடைகளையும் மீறி நல்லூர் கந்தசாமி ஆலய முன்பக்கம் வரை பௌத்த பிக்குகளின் வாகனம் உள் நுழைய அனுமதிக்கப்பட்டுள்ளது. சாதாரண பொது மக்களின் வாகனங்களை திருப்பி அனுப்புகின்ற பொலிஸார், பிக்குகளின் வாகனத்தை உள்நுழைய அனுமதித்தமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. https://athavannews.com/2024/1395312
-
- 5 replies
- 427 views
-
-
நாட்டின் மறுமலர்ச்சி திட்டங்களுக்குள் கல்வி மறுமலர்ச்சியும் ஏற்பட வேண்டும்; வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ்! 10 AUG, 2024 | 08:28 PM புதிய கல்வி சீர்திருத்தத்தில் முன் பள்ளிகளுக்கான செயற்பாடுகள் மற்றும் உங்களை சேவையில் இணைத்துக் கொள்வது தொடர்பான பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கின்றோம். நாட்டின் பல்வேறு மறுமலர்ச்சி திட்டங்களுக்குள் கல்வி மறுமலர்ச்சியும் ஏற்பட வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்தார். ரோட்டரி கழகத்தின் அனுசரணையுடன் ஆறுதல் அமைப்பினரால் பயிற்றுவிக்கப்பட்ட முன்பள்ளி ஆசிரியர்களுக்கான டிப்ளோமா சான்றிதழ் கள் வழங்கும் நிகழ்வு யாழ் பல்கலைக்கழகத்தின் கைல…
-
- 0 replies
- 143 views
- 1 follower
-