ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143550 topics in this forum
-
"ஐ.நா. மனித உரிமைகள் சபையின் நடவடிக்கையில் எமக்கு உடன்பாடு இல்லை என்று ஏற்கனவே நாம் அறிவித்துவிட்டோம். ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக் குழுவின் கூட்டத்தொடரில் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நடவடிக் கைகள் பக்கச்சார்பானவை, அநீதியானவை என்றும் சுட்டிக்காட்டியிருந்ததுடன், அதன் அறிக்கையையும் நிராகரித்திருந்தார். இவ்வாறாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக் குழுவின் நடவடிக்கையை ஆரம்பம் முதலே நாம் எதிர்த்து வருகின்றோம். அந்த நிலைப் பாட்டில்தான் இன்னமும் உறுதியாக இருக்கின்றோம். இந்தநிலையில், இலங்கை விவகாரம் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவால் மேற்கொள்ளப்படும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னவென்பது எமக்குத் தேவையில்லை. எமக்கெ…
-
- 1 reply
- 287 views
-
-
(Hafeez) பௌத்த மதகுரு ஒருவருக்குச் சொந்தமான 30 இலட்ச ரூபா பெறுமதியான ஜீப் வண்டியை தீயிட்டுக் கொளுத்திய சம்பவம் தொடர்பாக விகாரையின் உதவியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்ட்டுள்ளார். மேற்படி சம்பவத்தில் விகாரை உதவியாளரைத் தாக்கியதாகக் கூறப்படும் மதகுருவை இரண்டு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் செல்ல நிக்கவரெட்டிய பதில் நீதிவான் டி.பி.தென்னகோன் உத்தரவிட்டார். மேற்படி பிணக்கு கலனி பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயது இளைஞர் ஒருவருக்கும் நெகெத்வெவே விமலதர்ம என்ற மதகுருவிற்குமிடையில் ஏற்பட்டுள்ளது எனப் பொலிசார் தெரிவித்தனர். கொட்டவெஹெர பொலிஸ் பிரிவில் உள்ள புகுல்கொட என்ற இடத்தில் மேற்படி மதகுருவிற்கு காணியும் வீடும் காணப்படுகிறது. மேலும் மேற்படி காணியில் ஆலயம் ஒன்ற…
-
- 0 replies
- 276 views
-
-
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவில் பதற்றம் செவ்வாய்க்கிழமை, 12 ஓகஸ்ட் 2014 23:25 மட்டக்களப்பு மாவட்டம் கொக்கட்டிச்சோலைப் பொலிஸ் பிரிவில் இன்று மாலை பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் பொலிஸ் ஜீப் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளதோடு 3 பொலிஸாரும் 2 பொதுமக்களும் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று மாலை எட்டு மணியளவில் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள காஞ்சிரங்குடா பனையறுப்பான் எனுமிடத்தில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. கள்ளச்சாராய விற்பனையாளர்களைக் கைது செய்வதற்காக அங்கு சென்ற பொலிஸார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எட்டுப் பேர் சென்ற பொலிஸ் அணியில் மூவர் கிராமவாசிகளால் தாக்கப்பட்டு படுகாயமடைந்துள்ளனர். போலிஸ் உத்தியோகத்தர் வீரச…
-
- 5 replies
- 736 views
-
-
கடற்றொழில் அமைச்சரை கட்டுப்படுத்தவேண்டிய நிலைமை ஏற்படும் – பொதுபலசேனா எச்சரிக்கை! “கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரட்னவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கட்டுப்படுத்தாவிடின் நாங்களே கட்டுப்படுத்த வேண்டிய நிலைமை ஏற்படும்” என்று பொதுபலசேனா அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேநேரத்தில், “ராஜித சேனாரட்ன அளவுக்கு மீறி செயற்பட்டால் அவருக் கெதிராக தம்வசமுள்ள மேலும் பல ஆவணங்கள் வெளியிடப்படும்” என்றும் அவ்வமைப்பு தெரிவித்துள்ளது. கொழும்பு, கிருலப்பனையில் அமைந்துள்ள போதி பெளத்த நிலையத்தில் நேற்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற பொதுபலசேனாவின் விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவ்வமைப்பின் பொதுச் செயலாளரான கலகொட அத்தே ஞானசார தேரரால் இக்கருத்துகள் வெளியிடப்பட்டன. அங்கு அவர் மேலும் தெரிவித…
-
- 2 replies
- 435 views
-
-
சிறீலங்கா விவகாரம் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக் குழு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பக்கச்சார்பானவை, அநீதியானவை. அதை ஒருபோதும் ஏற்கமாட் டோம் என பேரவையின் கூட்டத்தொடரிலேயே நாம் உறுதிபடத் தெரிவித்துவிட்டோம் என்று சிறீலங்கா அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், சிறீலங்கா விவகாரம் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் எமக்குத் தேவையற்றவை என்றும் மேலும், சிறிலங்காவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐ.நா. விசாரணைக் குழு மேற்கொள்ளும் விசாரணைகளையும், அதன் அறிக்கையையும் தாம் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் அரசு திட்டவட்டமாகக் கூறியுள்ளது. சிறிலங்காவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கைக்கு வெளியில…
-
- 0 replies
- 426 views
-
-
புதன், ஆகஸ்ட் 13, 2014 - 02:51 மணி தமிழீழம் | தமிழ்நாடன், யாழ்ப்பாணம் தமிழக மீனவர்களிற்கு விடுதலையில்லை!! இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 69 இந்திய மீனவர்களது விளக்கமறியல் ஊர்காவற்றுறை மற்றும் பருத்தித்துறை நீதிமன்றங்களால் நீடிக்கப்பட்டுள்ளன. ஜுலை மாதம் 29 ஆம் திகதி நெடுந்தீவிற்கு அண்மித்த கடற்பரப்பில் வைத்து 7 படகுகளுடன் கைது செய்யப்பட்ட 51 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 25 ஆம் திகதி வரையிலும் விளக்கமறியல் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் பொன்னம்பலம் குமாரசாமி நேற்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டிருந்தார். அதேவேளை, ஜுலை 22 ஆம் திகதி எழுவைதீவுக் கடற்பரப்பில் வைத்து 5 படகுகளுடன் கைது செய்யப்பட்ட 18 இந்திய மீனவர்களையு…
-
- 0 replies
- 286 views
-
-
யாழில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற தனியார் பஸ் மீது தாக்குதல் ஆக 13, 2014 யாழ்ப்பாணத்திலிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு கொழும்பு நோக்கிச் சென்ற தனியார் சொகுசு பஸ் மீது முகமாலையில் வைத்து இனந்தெரியாதவர்கள் கல்வீச்சுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர் செவ்வாய்க்கிழமை இரவு 9.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த கல்வீச்சுத் தாக்குதலால் பஸ்ஸின் கண்ணாடி சேதமடைந்ததுடன் அந்த பஸ்ஸில் பயணம் செய்த பெண் ஒருவர் சிறுகாயங்களுக்குள்ளானார். இவர் பளை வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றார். அதன் பின்னர் அவரையும் ஏற்றிக்கொண்டு வழமைபோல அந்த பஸ் கொழும்பு நோக்கி பயணத்தை மேற்கொண்டது.http://www.sankathi24.com/news/45298/64//d,fullart.aspx
-
- 0 replies
- 500 views
-
-
கொழும்பில் போராட்டங்களை நடாத்த மூன்று அமைப்புக்களுக்கு தடை:-13 ஆகஸ்ட் 2014 கொழும்பில் இன்றைய தினம் (13.08.14) போராட்டங்களையோ ஆர்ப்பாட்டங்களையோ நடத்தக் கூடாது என மூன்று அமைப்புக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்ட நீதிமன்றினால் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுபல சேனா, சிஹல ராவய மற்றும் தௌஹீத் ஜமாத் ஆகிய மூன்று அமைப்புக்களும் இவ்வாறு ஆர்ப்பாட்டங்கனையோ போராட்டங்களையோ நடத்தக் கூடாது என தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. புறக்கோட்டை காவல்துறையினர் நீதிமன்றில் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பின் கோட்டே மற்றும் புறக்கோட்டைப் பகுதியில் இன்று நடத்தப்படவிருந்த குறித்த அமைப்புக்களின் போரட்டங்களுக்க…
-
- 1 reply
- 336 views
-
-
சர்வதேச சட்டத்தை மீறி செயற்படுகிறது இலங்கை- ஐ.நா சுட்டிக்காட்டு news பாகிஸ்தான் புகலிடக் கோரிக்கையாளர்களை பலவந்தமாக நாடு கடத்தியதன் மூலம் இலங்கை சர்வதேச சட்டத்தை மீறியுள்ளதாக ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான முகவர் நிலையம் தெரிவித்துள்ளது. இம்மாதம் முதலாம் திகதி தொடக்கம் இதுவரையான காலப் பகுதியில் இலங்கையிலிருந்து 88 பாகிஸ்தான் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக அகதிகளுக்கான முகவர் நிலையத்தை மேறடகோள்காட்டி தகவல் வெளியாகியுள்ளது. புகலிடம் கோரி வருவோரை பலவந்தமாக திருப்பி அனுப்புவதில்லை என்ற கொள்கையுடன் அனைத்து நாடுகளும் இணங்கியுள்ளதாகவும் ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான முகவர் நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த நிலையில் புகலிடக் கோரிக்கையாளர்களை அவர்களது …
-
- 0 replies
- 332 views
-
-
கைதுசெய்ய கோர முன்னர் பல விடயங்கள் குறித்து தம்முடன் பேச வருமாறும், அவ்வாறு பேச வந்தால் தான் தமிழர்கள் நிலை குறித்து விளக்கமளிப்பதாகவும் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
-
- 0 replies
- 419 views
-
-
நவ்ரு தீவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அகதிச் சிறுவன் ஒருவர் தற்கொலை முயற்சி! நவ்ரு தீவில் அகதிகள் தடுத்துவைக்கப்பட்டுள்ள முகாம் ஒன்றில் உள்ள சிறுவன் ஒருவன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அகதிகளின் அமைப்பு ஒன்றின் பேச்சாளர் இயன் ரிண்டோல் தெரிவித்துள்ளார். மிகவும் மோசமான நிலையில் நவ்ரு தீவில் இருந்து பிரிஸ்பேன் வைத்திய சாலைக்கு அழைத்து வரப்பட்ட சிறுவன் தற்போது என்ன நடந்துள்ளது என்பதை அறிய முடியாமல் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார் . நவ்ரு முகாம் சிறுவர்களுக்கு உகந்த ஒரு தடுப்பு காவல் முகாம் இல்லை என்று மருத்துவர்கள் கூரிய போதும் இந்த அரசின் கடும் போக்கு தன்மையால் சிறுவர்களின் எதிர் காலம் மிகவும் மோசமடையலாம் என தெரிவித்துள்ளார் http://tamilleader.com/?p=39213
-
- 0 replies
- 337 views
-
-
-எம்.எஸ்.எம்.நூர்தீன், எஸ்.பாக்கியநாதன் அவுஸ்திரேலிய நாட்டின் பிரபல முறிவு வைத்திய நிபுணரும் பியப் அமைப்பின் தலைவருமான டாக்டர் டேவிட் ஐங்கின் தலைமையிலான குழுவினர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இன்று செவ்வாய்க்கிழமை (12) விஜயம் மேற்கொண்டனர். இந்த நிலையில், சுமார் 06 மில்லியன் ரூபாய் அமெரிக்க டொலர் நிதியுதவியில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அவசர மற்றும் விபத்துப் பிரிவு கட்டடத்தை நிர்மாணிப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்திலும் இவர் கலந்துகொண்டார். இந்தக் கட்டடம் டாக்டர் டேவிட் ஐங்கின் நிதியுதவிடனும் அவரது அனுசரணையுடனும் சுகாதார அமைச்சின் அனுமதியுடனும் நிர்மாணிக்கப்படவுள்ளது. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் கூட்ட மண்டபத்தில் வைத்தியசாலைப் பணிப்பாளர் டாக…
-
- 2 replies
- 462 views
-
-
இனத்தின் விடுதலைக்காக போராடியவர்களுக்கு சிலையெழுப்புவதற்கு யாருக்குத்தகுதி இருக்கிறதென்பதைத் திறக்கின்றவர்கள் சிந்திக்க வேண்டுமெனத்தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன். தனது இனத்தைக் காட்டிக் கொடுத்தவர்களுக்கும் சிதைப்பவர்களுக்கும் அந்தத்தகுதியில்லை என்றும் அவர் ஈபிடிபியையும் அரச அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவையும் அவர் சாடியுள்ளார். தீவுப் பகுதிக்கு விஐயம் மேற்கொண்டு கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினத்தின் ஏற்பாட்டில் நேற்று தீவுப் பகுதி விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. இதன் போது அங்குள்ள மக்களின் தேவைகள் மற்றும் பிரச்சனைகள் தொடர்பிலும் கலந்துரையாடியதுடன் இந்த உதவிக…
-
- 1 reply
- 356 views
-
-
சிங்களவன் தமிழ்நாட்டில் எந்தத் துறையில் நுழைந்தாலும் அது திரைப்படத்துறை என்றாலும் சரி, வியாபாரத்துறை என்றாலும் சரி அதனை தந்தை பெரியார் திராவிடர் கழகம் ஒருபோதும் அனுமதிக்காது. அதனை முளையிலேயே கிள்ளி எறியும் என தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் இராமகிருட்டிணன் கூறியுள்ளார். தமிழீழ மக்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள புதிய இளைஞர்கள் தமிழீழத்தை உணர்ந்து, புரிந்து, சரியான ஆதரவைக் கொடுப்பதற்கு இளைஞர்கள் முன்வந்திருக்கிறார்கள். கத்தி மற்றும் புலிப்பார்வை திரைப்படத்திற்கு எதிரான கடுமையான போராட்டங்களை தமிழ்நாட்டில் தொடங்குவோம். இத்திரைப்படங்களுக்கு எதிராக யார் போராடினாலும் அவர்களுக்கு ஆதரவை வழங்குவோம் என அவர் மேலும் கூறியுள்ளார். http://www.pathivu.com/news/33095/57//d,a…
-
- 0 replies
- 446 views
-
-
ஆட்சி அதிகாரத்தை தொடர்ந்தும் தக்கவைத்துக்கொள்ளும் நோக்கில் ஆட்சியாளர்களினால் தூண்டிவிடப்படும் இனவாதத்தின் ஒரு அங்கமாகவே சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவன் மீது தாக்குதல் மற்றும் தமிழ் மாணவர்களின் கைது சம்பவங்கள் அமைவதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் நஜித் இந்திக தெரிவிக்கையில், கடந்த 3 ஆம் திகதி சப்ரகமுவ பல்கலைக்கழக விடுதியில் வைத்து தாக்குதலுக்கு இலக்கான சந்திரகுமார் சுதர்சன் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். தாக்குதலுக்கு இலக்காகி வைத்திய சாலையில் சிகிச்சையை முடித்துக்கொண்டு வெளியேறியருந்த நிலையிலேயே இந்த மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தக் கைதுக…
-
- 0 replies
- 440 views
-
-
(மயூரன்) யாழ்ப்பாணத்திற்கான 'யாழ் தேவி' ரயில் சுமார் 3 தசாப்த காலங்களின் பின்னர் தனது பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது. உள்நாட்டு யுத்தம் காரணமாக சுமார் 3 தசாப்தங்களாக யாழ்ப்பாணத்திற்கான ரயில் சேவை நிறுத்தப்பட்டிருந்தது. யாழ்ப்பாணத்துக்கான ரயில் பாதைகளும் முற்றாக சேதமாகி இருந்தன. உள்நாட்டு யுத்தம் கடந்த 2009ஆம் ஆண்டு முடிவுக்கு வந்ததை அடுத்து யாழ்ப்பாணத்திற்கான ரயில் சேவையினை ஆரம்பிக்கும் நோக்குடன் சேதமான புகையிரத பாதைகள் மற்றும் புகையிரத நிலையங்கள் அனைத்தும் துரித கதியில் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இந்த புனரமைப்பு பணிகளுக்கு இலங்கை வங்கி 85 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளதுடன் இந்திய அரசாங்கமும் கடனுதவி மற்றும் தொழிநுட்ப உதவிகளையும் வழங்கியுள்ளது. …
-
- 3 replies
- 815 views
-
-
ஆட்சியாளரின் செயற்பாடுகளால் கடவுளின் சாபம்' இலங்கையை பாதித்துள்ளது: - ரணிலின் நக்கல் பேச்சு! [Tuesday 2014-08-12 20:00] ஆட்சியாளரின் செயற்பாட்டால் கடவுளின் சாபமே இலங்கையை பாதித்துள்ளதாக எதிர் கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க பகிரங்கமாக தெரிவித்துள்ளார். பிங்கிரிய பிரதேசத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட அவர் இவ்வாறு குறிப்பிட்டார். நாட்டின் நீர் முகாமைத்துவம் தொடர்பில் உரிய வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்த ஆளும் அரசாங்கம் தவறியுள்ளது. குருநாகல், பொலன்னறுவ, ஹம்பாந்தோட்டை ஆகிய பல பிரதேசங்களுக்கு இன்று கடுமையான வரட்சி காணப்படுகின்றது. இப்போது இங்கு சேற்று நீரையும் விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை காணப்படுகின்றது. மழை பெ…
-
- 1 reply
- 217 views
-
-
பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலின் கீழ், பிரித்தானியாவின் 450க்கும் மேற்பட்ட டக்ஸிகளில் இலங்கையில் காணப்படும் சுற்றுலாப் பகுதிகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விளம்பரங்கள் இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு அதிகார சபையின் மூலம் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மொத்தமாக 1200 டக்ஸிகளில் இந்த விளம்பரங்களை பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளை இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு அதிகார சபையின் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன. மென்செஸ்ட்டர், பேர்மிங்ஹம் மற்றும் லண்டன் ஆகிய நகரங்களில் முதற்கட்டமாக இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் எதிர்வரும் காலங்களில் பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து…
-
- 0 replies
- 399 views
-
-
ஒரே சூலில் நான்கு குழந்தைகள்! ஜப்பானிய வைத்தியா்களால் முடியாதததை இலங்கை வைத்தியர்கள் சாதித்தனர்! [Tuesday 2014-08-12 19:00] ஒரே சூலில் நான்கு குழந்தைகள் பிறந்த சம்பவம் ஒன்று நேற்றையதினம் நாரஹேன்பிற்ற தனியார் மருத்துவ மனையில் இடம்பெற்றுள்ளது. நேற்று காலை நான்கு ஆண் குழந்தைகளை 30 வயதான வரக்காபொலவைச் சேர்ந்த பெண் ஒருவர் பெற்றுள்ளார். குழந்தைகளை பெற்ற தாய், கடந்த 2011ஆம் ஆண்டு திருமணமாகி, கணவருடன் ஜப்பான் சென்றுள்ளார். ஜப்பானில் கர்ப்பமான இவர், ஜப்பானிய மருத்துவர்களால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது, நான்கு குழந்தைகளை பெறவிருப்பது தெரியவந்துள்ளது. இருப்பினும் இரு குழந்தைகளை மட்டுமே உயிருடன் காப்பாற்ற முடியும் என ஜப்பானிய மருத்துவர்கள் தெரிவித்…
-
- 1 reply
- 397 views
-
-
பனை வெல்ல உற்பத்திக்கு ஒவ்வாத இரசாயனம் பயன்படுத்தப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது ஆக 13, 2014 ஊர்காவற்றுறை பனை தென்னைவள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கத்தின் பனை வெல்ல உற்பத்தி நிலையத்தில் சுகாதாரப் பரிசோதகவர்கள் மேற்கொண்ட அதிரடி சோதனையின் Nபுhது பனை வெல்ல உற்பத்திக்காக மனித பாவகைக்கு ஒவ்வாத விவசாய நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படும் இரசாயனம் பயன்படுத்தப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஊர்காவற்றுi சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் பொதுச் சுகாதார பரிசோதகர் பாலச்சந்திரன் சஞ்சீவன் தலமையிலான குழுவினர் நேற்று மதியம் மேற்கொண்ட பரிசோதனை நடவடிக்கையிலேயே மேற்படி விடையம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இப் பரிசோதனையின் போது ஊர்காவற்றுபை னை தென்னைவள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தி…
-
- 0 replies
- 402 views
-
-
கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவரான பாப்பரசரின் சிறிலங்கா பயணத்துக்கு முன்பாக, அதிபர் தேர்தலை நடத்துவதற்கு மகிந்த ராஜபக்ச முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அதற்கு சட்டத்தில் இடமுள்ளதா என்று அறிந்து கொள்ள உயர்நீதிமன்றத்தை நாடவுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு நொவம்பர் 19ம் நாளுக்கு முன்னதாக, அதிபர் தேர்தலை நடத்த முடியுமா என்று உயர்நீதிமன்றத்தின் கருத்தை அறிய, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச முடிவு செய்துள்ளார். அதிபர் சட்டத்தின்படி, தேர்தலுக்கு 35 தொடக்கம் 65 நாட்களுக்குள், அழைப்பு விட வேண்டும். முன்னதாக, அடுத்த ஆண்டு துவக்கத்தில் அதிபர் தேர்தலை நடத்த திட்டமிட்டிருந்த சிறிலங்கா அரசாங்கம், தற்போது, அடுத்த ஆண்டு ஜனவரி 13ம் நாள் பாப்பரசர் ச…
-
- 1 reply
- 263 views
-
-
இலங்கையில் காணாமல் போனோரைத் தேடியறியும் ஜனாதிபதி ஆணைக்குழு மீது நம்பிக்கைகொள்ள முடியாது என கனடிய தமிழ்க் காங்கிரஸின் பேச்சாளர் டேவிட் பூபாலபிள்ளை தெரிவித்துள்ளார். ITNERTAM செய்திச் சேவைக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கும்போது...
-
- 0 replies
- 358 views
-
-
புலனாய்வு பிரிவினரின் அச்சுறுத்தலினாலேயே மக்கள் சாட்சியமளிக்க தயங்கினர்! - ஆணைக்குழுவிடம் செபமாலை அடிகளார் தெரிவிப்பு. [Tuesday 2014-08-12 17:00] பொலிஸ் புலனாய்வு பிரிவினரின் அச்சுறுத்தல் காரணமாகவே மக்கள் சாட்சியமளிக்க தயங்கினர் என்று மன்னார் பிரஜைகள் குழு தலைவர் அருட்தந்தை இ.செபமாலை அடிகளார் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் தெரிவித்தார். மன்னார் மாவட்டத்தில் காணாமல் போனோர் குறித்து கடந்த வெள்ளி, சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய நான்கு நாட்கள் சாட்சியப் பதிவுகள் அடம்பெற்றன. மாந்தை மேற்கு, மன்னார், மடு ஆகிய மூன்று பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் விசாரணைக்கென சுமார் 230 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால் 155 பேர் மட்டுமே ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியம் அளித்தனர். …
-
- 0 replies
- 253 views
-
-
தென்மராட்சியில் பணியில் இருந்த மருத்துவ மாது மயங்கி விழுந்து மரணம்! [Tuesday 2014-08-12 17:00] வெளிக் கடமையை முடித்துக் கொண்டு ஆரம்ப சுகாதார நிலையம் திரும்பிக் கொண்டிருந்த மருத்துவ மாது ஒருவர் வழியில் மயங்கி விழுந்து மரணமானார். இந்தச் சம்பவம் இன்று மட்டுவில் தெற்கு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த ஸ்ரான்லின் நிஷாந்தினி (வயது -27) என்பவரே உயிரிழந்துள்ளார். இன்று ஒரு மணியளவில் தனது வெளிக் கடமையை முடித்துக் கொண்டு ஆரம்ப சுகாதார நிலையம் திரும்பிய அவர் அங்கு மயங்கி விழுந்தார் என்றும், உடனடியாக சவகச்சேரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் உயிரிழந்துவிட்டார் என்று உறுதிப்படுத்தப்பட்டது. இதற்கிடையே, வீதி …
-
- 0 replies
- 444 views
-
-
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தன்னைத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, காணாமற்போனோர் குறித்து விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்கும் நிபுணர் குழுவில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்ததாக, இந்திய மனித உரிமை செயற்பாட்டாளர் அவ்டாஸ் கௌஷல் தெரிவித்துள்ளார். டேராடூனைத் தளமாக கொண்டு செயற்படும், அவ்டாஸ் கௌஷல், இந்தியன் எக்ஸ்பிரசுக்கு தொலைபேசி மூலம் அளித்த செவ்வியிலேயே இந்த தகவலை வெளியிட்டுள்ளார். “சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, காணாமற்போனோர் குறித்து விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்கும் நிபுணர் குழுவில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தார். எனினும், சிறிலங்கா அரசாங்கத்திடம் இருந்து இன்னமும் எழுத்து மூலமான எந்த வேண்டுகோளும்…
-
- 3 replies
- 428 views
-