Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. எமது ஆட்சியின் கீழ் திருட்டுக்கு இடமில்லை – எதிர்கட்சி தலைவர். எமது அரசாங்கத்தின் கீழ் திருட்டுக்கு இடமில்லை எனவும் அவ்வாறானவர்களை மன்னிக்க முடியாது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கம்பஹாவில் இன்று (03) நடைபெற்ற ரணவிரு மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு போர்வீரர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், திருட்டு, மோசடி, பொய், நிதிப் பயங்கரவாதிகளிடம் இருந்து நாட்டைக் காப்பாற்றும் வேலைத்திட்டத்தின் முன்னோடிகளாக மாறுமாறு கூறினார். அத்துடன், ஜனாதிபதித் தேர்தலின் பின்னர், திருடர்களைப் பிடிக்கவும், திருடர்களை விரட்டவும், திருடப்பட்ட பொருட்களை நாட்டுக்குத் திருப்பியனுப்பும் பாரிய மனிதாபிமானப…

  2. அடுத்த வருடம் முதல் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு – ஜனாதிபதி. இளைஞர்களுக்கு தொழில் வழங்கும் வேலைத்திட்டம் அடுத்த வருடம் முதல் ஆரம்பிக்கப்படும் எனவும், அதற்காக அரச மற்றும் தனியார் துறைகளில் புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதே தமது நோக்கமாகும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கொவிட் தொற்றுநோய் மற்றும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக கடந்த 4 வருடங்களாக இலங்கையின் இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்பை வழங்க முடியவில்லை என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நாடு வங்குரோத்து நிலையில் இருந்து விடுபட்டிருப்பதால் தற்போது அதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது என்றும், அதனால் புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்கும் திட்டங்களை செயல்படுத்தி நாட்டை முன்னேற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார். …

  3. கல்முனை வடக்கு பிரதேசசெயலகம் ஹரிஸுடன் பேசாமல்……. ஜனாதிபதி சொன்னவிடயம். நூருல் ஹுதா உமர் ஜனாதிபதி செயலகத்தில் சில தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் சேர்ந்து சென்று கல்முனை பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தி கடற்கரை பள்ளிவாசல் வீதியால் பிரித்து கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தைப் பிரித்து தர வேண்டும் என்று கோரிய போது ஜனாதிபதி சொன்ன விடயம் என்னவென்று தெரியுமா? இதை கல்முனை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஹரிஸுடன் பேச வேண்டும். அவருடன் பேசாமல் எந்த உத்தரவாதத்தையும் உங்களுக்கு தர முடியாது என்று. கல்முனை உப பிரதேச செயலகத்தில் நிதி பிரிவை தர வேண்டும், கணக்காளரை நியமிக்க வேண்டும் எ…

    • 6 replies
    • 452 views
  4. இந்திய பிரதமர் நரேந்திர மோடி இம்மாதம் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்வதாக இருந்த நிலையில், இந்த விஜயம் ரத்து செய்யப்பட்டிருப்பதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கடந்த ஜூன் மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு இந்திய பிரதமரின் விஜயத்துக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தார். எனினும் தற்போது இலங்கையில் நடைபெற இருக்கின்ற தேர்தல் மற்றும் அரசியல் சூழ்நிலைகள் காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. https://thinakkural.lk/article/307290

  5. மலையக தமிழர் அபிலாஷை ஆவணத்துக்கு தமுகூ அரசியல் குழு அங்கீகாரம் ஐக்கிய மக்கள் கூட்டணி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிடம் செய்ய பட உள்ள புரிந்துணர்வு உடன்படிக்கைக்காக, தன்னால் முன் வைக்க பட்ட மலையக தமிழர் அபிலாஷை ஆவணத்தை ஐந்து திருத்தங்களுடன், தமிழ் முற்போக்கு கூட்டணி அரசியல் குழு ஏக மனதாக ஏற்றுக் கொண்டு உள்ளது என கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார். இது தொடர்பில், பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் மேலும் கூறி உள்ளதாவது; சஜித் பிரேமதாச தலைமையில் அரசாங்கம் உருவாகின்ற போது, நிறைவேற்ற பட வேண்டிய வேலைத்திட்டங்களில் இந்திய வம்சாவளி மலையக தமிழரின் அபிலாஷை கோரிக்கைகள் அடங்கிய ஆவணம், கொழும்பில் கூடிய கூட்டணி அரசியல் குழுவினால் தீவிரமாக ஆராய பட்டது…

      • Like
    • 1 reply
    • 362 views
  6. Published By: DIGITAL DESK 3 03 AUG, 2024 | 02:17 PM ஐக்கிய மக்கள் கூட்டணி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிடம் செய்யப்படவுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கைக்காக, தன்னால் முன் வைக்கப்பட்ட மலையக தமிழர் அபிலாஷை ஆவணத்தை ஐந்து திருத்தங்களுடன், தமிழ் முற்போக்கு கூட்டணி அரசியல் குழு ஏகமனதாக ஏற்று கொண்டுள்ளது என கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மனோ கணேசன் எம்பி மேலும் தெரிவித்துள்ளதாவது, சஜித் பிரேமதாச தலைமையில் அரசாங்கம் உருவாகின்றபோது, நிறைவேற்றப்பட வேண்டிய வேலைத்திட்டங்களில் இந்திய வம்சாவளி மலையக தமிழரின் அபிலாஷை கோரிக்கைகள் அடங்கிய ஆவணம், கொழும்பில் கூடிய கூட்டணி அரசியல் குழுவினால் தீவிரமாக ஆராயப்பட்டது. …

  7. தமிழர்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படும்! தமிழர்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சியின் முக்கியஸ்தருமான ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்தார். நேற்று (02) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க ஒருவர் தான் அனுபவம் உள்ள அரசியல்வாதி எனவும் ஆனால் இங்கு வரும் அரசியல்வாதிகள் அனைவரும் தமிழர்களுக்கு அதை செய்வோம், இதை செய்வோம் என சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். தமிழர்களுக்கு எந்த உரிமையை வழங்கப்போகிறார்கள் எனவும் எந்த அதிகாரங்களை வழங்க போகிறார்கள் என தேர்தல் விஞ்ஞாபனத்தில் தௌிவாக இருந்தால் தான் தமிழர்களின் வாக்குகள…

    • 2 replies
    • 295 views
  8. 03 AUG, 2024 | 11:41 AM பெண்களிடம் இருந்து ஆண்கள் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளானால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்க முடியும் என இலங்கை பொலிஸ்துறை தெரிவித்துள்ளது. 1995 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்க தண்டனைச் சட்ட திருத்தச் சட்டத்தின் 345 ஆவது பிரிவின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடியும் என தெரிவித்துள்ளது. குறித்த குற்றச் செயல் தொடர்பில் சட்டத்தை அமுல்படுத்துவதில் ஆண் , பெண் என்ற பாகுபாடு காட்டப்படவில்லை எனவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர். இதன்படி ஒரு ஆணோ அல்லது ஆண் சிறுவனோ ஏதேனும் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளானால், அவர் தயக்கமின்றி அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யலாம். …

  9. Published By: DIGITAL DESK 3 03 AUG, 2024 | 02:53 PM மன்னார் வைத்தியசாலை வைத்தியர்கள் மேற்கொண்ட முறைப்பாட்டை தொடர்ந்து வைத்தியர் அர்ச்சுனா இன்று சனிக்கிழமை (3) மதியம் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்றைய தினம் (2) இரவு மன்னார் பொது வைத்தியசாலைக்குள் நுழைந்து குழப்பத்தை ஏற்படுத்தியதாக மன்னார் வைத்தியசாலை நிர்வாகம் மன்னார் பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டை தொடர்ந்து இன்றைய தினம் காலை வைத்தியர் அர்சுனா மன்னார் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அண்மையில் மன்னார் தம்பன்னை குளத்தை சேர்ந்த இளம் தாய் ஒருவர் மரணம் அடைந்த சம்பவம் தொடர்பில் தகவல் சேகரிக்க வந்த நிலையில், வைத்திய செயற்பாட்டு வைத்தியர்கள் மற்றும் சுகாதர ஊழியர்களின் ச…

  10. 03 AUG, 2024 | 10:41 AM ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க இன்று (03) மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்துக்கு விஜயம் செய்து வழிபாடுகளில் ஈடுபட்டார். இன்று நடைபெறுகிற மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த இரதபவனி உற்சவத்தின்போதே அவர் ஆலயத்துக்கு விஜயம் செய்துள்ளார். https://www.virakesari.lk/article/190155

  11. யாழில் நல்லை ஆதீன முதல்வரை ஜனாதிபதி சந்தித்து ஆசி பெற்றார் Published By: VISHNU 03 AUG, 2024 | 03:12 AM யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை சந்தித்து ஆசிபெற்றுக்கொண்டார். இந்நிகழ்வில் சமயப் பெரியார்கள், அரச உயரதிகாரிகள், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்கள உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். இதேவேளை யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பின்போது இலங்கையின் தற்போதைய…

  12. 02 AUG, 2024 | 05:29 PM (இராஜதுரை ஹஷான்) பொதுஜன பெரமுன பிளவடைந்துள்ளமைக்கான பொறுப்பை பொதுச்செயலாளர் சாகர காரியவசம் ஏற்க வேண்டும்.இவரை பதவி நீக்கி அமைச்சர் ரமேஷ் பதிரனவை பொதுச்செயலாளராக நியமிக்கும் யோசனையைக் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் முன்வைப்பேன் என மின்சாரத்துறை மற்றும் சக்தி வலு அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். கொழும்பில் வெள்ளிக்கிழமை (02) இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, பொதுஜன பெரமுனவின் வேட்பாளரைக் களமிறக்குவதாக எடுக்கப்பட்ட தீர்மானத்தை ஏற்கப் போவதில்லை. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கும்…

  13. Published By: VISHNU 02 AUG, 2024 | 08:12 PM மன்னார் காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்தின் நிர்மாணிப்பணிகளை அதானி நிறுவனத்திற்கு வழங்குவதற்கு எடுக்கப்பட்ட அமைச்சரவை தீர்மானத்தை வலுவிழக்கச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட 5 அடிப்படை உரிமை மனுக்களை எதிர்வரும் ஒக்டோபர் 14 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (2) உத்தரவு பிறப்பித்துள்ளது. https://www.virakesari.lk/article/190132

  14. கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பங்களிப்புடன் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஏற்பாட்டில் உலக தமிழ் கலை இலக்கிய மாநாடு இன்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பில் இன்று ஆரம்பமானது. உலக தமிழ் கலை இலக்கிய மாநாடு இன்றும் நாளையும் மட்டக்களப்பில் இடம்பெறும். இம்மாநாட்டின் ஆரம்ப நிகழ்வாக கல்லடியில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை ஆளுநர் செந்தில் தொண்டமான், மலேசியா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ சரவணன் ஆகியோர் திறந்துவைத்தனர். இதனைத் தொடர்ந்து அங்கிருந்து 1000 இற்கும் மேற்பட்ட தமிழ் கலைஞர்களின் பங்குபற்றலுடன் ஊர்தி பவனி மற்றும் கலை நிகழ்வுகளுடன் வெபர் மைதானத்தை நோக்கி விழாவில் பங்குபற்றுவோரும், பொது மக்களும் நடைபவணியாக வந்தடைந்தனர். வெபர் மைதான…

  15. ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கும் இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சுங்கிற்கும் இடையிலான சந்திப்பு கொழும்பில் இன்று இடம்பெற்றது. குறித்த சந்திப்பு தொடர்பில் அமெரிக்க தூதர் தனது எக்ஸ் பக்கத்தில், ‘பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை சந்திப்பதில் மகிழ்ச்சி. ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார சூழல் குறித்து நாங்கள் விவாதித்தோம்’ என குறிப்பிட்டுள்ளார். அதேவேளை குறித்த சந்திப்பு தொடர்பில் சரத் பொன்சேகா வெளியிட்ட எக்ஸ் பக்க பதிவில், தூதர் ஜூலி சுங், இன்று எனது இல்லத்தில் உங்களுக்கு விருந்தளிப்பதில் மகிழ்ச்சி. இலங்கையில் ஊழலை எவ்வாறு நசுக்க முடியும் என்பது பற்றிய நுண்ணறிவ…

  16. 02 AUG, 2024 | 05:24 PM இயற்கை அனர்த்தங்கள் மற்றும் மனிதா்களால் உருவாக்கப்படும் பேரழிவுகரமான நிகழ்வுகளை எதிர்கொள்வதற்கான தயார்படுத்தல்கள் மற்றும் அவற்றுக்கான பதிலளிப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றை தரமுயர்த்தும் நோக்குடன், Montana National Guardஉம், அமெரிக்க பசிபிக் விமானப்படைகளும், இலங்கை விமானப் படை மற்றும் மாலைதீவு தேசிய பாதுகாப்புப் படை ஆகியவற்றுடன் இணைந்து 'Atlas Angel' எனும் ஒரு கூட்டு இராணுவப் பயிற்சியினை மேற்கொள்கின்றன. மீண்டெழும் தன்மையுடைய, செழிப்பான ஒரு இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை பேணிப் பாதுகாப்பதில் அமெரிக்கா கொண்டுள்ள உறுதியான நிலைப்பாடு மற்றும் அனர்த்தங்களுக்கான பதிலளிப்பு நடவடிக்கைகளில் சர்வதேச ஒத்துழைப்பின் முக்கியத்துவம் ஆகியவற…

  17. தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கு ஆக்கபூர்வமான தீர்வு காண்பதற்கான முன் ஆயத்தமாக சில நடவடிக்கைகளை உடனடியாக எடுப்பதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் நடத்திய சந்திப்பில் இணக்கம் காணப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இருவரும் பேசி இணக்கம் கண்ட ஏற்பாடுகளின்படி, * மாகாண சபைத் தேர்தல் சட்டமூலம் உடனடியாக நாடாளுமன்றத்துக்குக் கொண்டு வந்து நிறைவேற்றப்படும். இது தொடர்பில் சுமந்திரன் தனிநபர் பிரேரணையாகச் சமர்ப்பித்துத் தயாராக இருக்கும் சட்டமூலம் வரும் ஓகஸ்ட் 22, 23ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படும். * சுமந…

  18. Published By: DIGITAL DESK 3 02 AUG, 2024 | 03:21 PM அரச சேவையில் அனைத்து ஓய்வூதியர்களுக்கும் தற்போது வழங்கப்படும் 2,500 ரூபா கொடுப்பனவுக்கு 3,000 ரூபாவும் சேர்த்த, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் மொத்தம் 5,500 ரூபா இடைக்கால கொடுப்பனவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். அரசு ஊழியர் சம்பளத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை கவனமாக பரிசீலித்து தொடர்புடைய எதிர்கால திருத்தங்களைச் செய்வதற்கு அதிமேதகு ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் படி, யு. ஆர். செனவிரத்ன தலைமையில் நிபுணர் குழுவொன்று அண்மையில் நியமிக்கப்பட்டதாகவும், மீளாய்வுகளின் அடிப்படையில் 2025ஆம் ஆண்டு முதல் திருத்தப்பட்ட சம்பளக…

  19. 02 AUG, 2024 | 02:15 PM முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஐங்கன்குளம் பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் யானையின் சடலம் ஒன்று இன்று வெள்ளிக்கிழமை (02) அதிகாலை மீட்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு ஐங்கன்குளம் பகுதியில் யானையின் சடலம் இருப்பதாக விவசாயிகள் அவதானித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதனையடுத்தே குறித்த யானையின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த யானையின் இறப்புக்கான காரணம் இதுவரை தெரியவவில்லை. யானையின் இறப்பு தொடர்பில், வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸார் இணைந்து விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். வனஜீவராசிகள் திணைக்களத்தினர் குறித்த யானையின் மரணம் தொடர்பான க…

  20. கந்தளாயில் நாற்பது கிலோ எலி இறைச்சிகளுடன் இருவர் கைது! வனவிலங்குகளை கொன்று இறைச்சிக்காக விற்பனை செய்த இருவர் சந்தேகத்தின் பேரில் நாற்பது கிலோ எலி இறைச்சிகளுடன் நேற்று(28) கைது செய்யப்பட்டுள்ளனர் கந்தளாய் நீர்த்தேக்கப் பகுதியில் உள்ள வனவிலங்குகளை நீண்ட காலமாக சுட்டு கொன்று இறைச்சிக்காக விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் சீகிரியாவை சேர்ந்த வனவிலங்கு அதிகாரிகள் குழு ஒன்று கந்தளாய் நீர்த்தேக்கத்திற்கு முன்பாக ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டபோதே குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். வனவிலங்குகளை கொன்று இறைச்சிக்காக விற்பனை செய்த இருவர் சந்தேகத்தின் பேரில் நாற்பது கிலோ எலி இறைச்சிகளுடன் நேற்று(28) கைது செய்யப்பட்டுள்ளனர் கந்தளாய் நீர்த்தேக்கப் பகுதியில்…

  21. சர்வதேச விமான இணைப்பை மேம்படுத்தும் வகையில் இண்டிகோ விமான நிறுவனம் யாழ்ப்பாணத்திற்கு புதிய விமான சேவையை அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, செப்டம்பர் முதலாம் திகதி முதல் சென்னை மற்றும் யாழ்ப்பாணம் இடையே நாளாந்த விமான சேவையை இண்டிகோ நிறுவனம் ஆரம்பிக்கவுள்ளது. இலங்கையில் இதுவரை கொழும்புக்கு மட்டுமே விமான சேவை காணப்பட்ட நிலையில் யாழ்ப்பாணத்துக்கான விமான சேவையும் ஆரம்பிக்கப்பட உள்ளது. சுற்றுலாப்பயணிகள் வருகை இதேவேளை இம்மாதம் முதலாம் திகதி முதல் விமானத்திற்கான முன்பதிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கைக்கு இந்தியாவிலிருந்து அதிகளவான சுற்றுலாப்பயணிகள் தொடர்ந்து வருகை தருகின்ற நிலையில் இவ் ஆண்டு ஜூன் மாதம் …

  22. சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ள இலங்கை அரசியல் – மோடியின் இலங்கை விஜயம் ரத்து. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இலங்கையில் தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலை காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகப் புதுடில்லியில் உள்ள தகவலறிந்த வட்டாரங்களை மேற்கோள்காட்டி இந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. நேற்றையதினம் இலங்கைக் கடற்படையினரின் படகு மோதியதால் இந்திய மீனவர் படகொன்று கடலில் மூழ்கியதில் ஒருவர் பலியான சம்பவம் பதிவாகியிருந்தது. இதனை அடுத்து டெல்லியில் உள்ள இலங்கை பதில் உயர்ஸ்தானிகர் இந்திய வெளியுறவு அமைச்சால் அழைக்கப்பட்டு இராஜதந்திர ரீதியிலான எதிர்ப்பு தெரிவிக்க…

    • 1 reply
    • 434 views
  23. விளம்பரங்களில் நடிக்க பெண்களுக்கு தடை ? – சுகாதார அமைச்சு. எதிர்வரும் ஜனவரி முதல், கைக்குழந்தைகள், சிறு குழந்தைகள், 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் முன்னிலைப்படுத்தப்பட்டு விளம்பரங்களை வெளியிட தடை விதிக்க தீர்மானித்துள்ளதாக, சுகாதார அமைச்சின் உணவு கட்டுப்பாட்டு பிரிவின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். உணவு சில நோய்களை குணப்படுத்தும் என்ற பிரச்சாரம் தவறானது என சுகாதார அமைச்சின் உணவு கட்டுப்பாட்டு பிரிவின் பிரதிநிதி பணிப்பாளர் தெரிவித்தார். ஒருவர் வருடத்திற்கு…

  24. ஜனாதிபதி இன்று யாழுக்கு விஜயம். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்றையதினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். மருதங்கேணி பகுதியில் கடல்நீரை நன்னீராக மாற்றும் திட்டத்தினை இன்றைய தினம் ஆரம்பித்து வைக்கவுள்ளது வைத்த பின்னர் , தொடர்ந்து ஜனாதிபதி பல்வேறு அமைப்புகளையும் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார் என்று தெரியவருகின்றது. யாழ்ப்பாணம் – தாளையடி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்டத்திற்கு விசேட விஜயம் செய்துள்ள ஜனாதிபதி இன்று இந்த நிலையத்தை திறந்து வைத்தார். யாழ்ப்பாண மக்களுக்கு சிறந்த குடிநீர் விநியோகத்தை வழங்கும் நோக்கோடு கடல் நீரை குடிநீராக்கும் இத்திட்…

  25. Published By: DIGITAL DESK 3 02 AUG, 2024 | 11:57 AM ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கை அரசாங்கத்தின் நிதி ஏற்பாடுகளின் கீழ் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு அமைச்சு, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் செயற்படுத்தப்பட்டும் யாழ்ப்பாணம் - கிளிநொச்சி நீர்வழங்கல் வேலைத்திட்டத்தின் கீழ் தாளையடி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை (02) திறந்து வைக்கப்பட்டது. இந்த கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் 266 மில்லியன் டொலர்கள் செலவில் அமைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/190076

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.