ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143540 topics in this forum
-
தென்னிலங்கையைத் தளமாகக் கொண்டியங்கும் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் யாழ். நகரத்தில் எதிர்வரும் 15ம் திகதி நடத்தவுள்ள போராட்டத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா வெளியிட்டுள்ள அறிக்கையில் இலங்கையில் ராஜபக்ஷ அரசாங்கம் தனது இராணுவத்தினரைப் பயன்படுத்தி தமிழ் மக்களுக்கு உரித்தான காணிகளைத் இராணுவத் தேவைகளுக்காகவும் சிங்களவர்களை குடியேற்றி தமிழ் மக்களின் குடிப்பரம்பலைக் குலைத்துவிடவும் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலின்படி வேலை செய்து வருகின்றது. இதனால் வடக்குக் கிழக்குத் தமிழ்ப் பிரதேசங்களிலும் இந்தியாவிலும் அகதி முகாம்களில் அகதிகளாக எம் மக்கள் சீரழிகிறார்கள். அந்த மக்கள் வ…
-
- 0 replies
- 161 views
-
-
தமிழகத்தில் சர்ச்சையை ஏற்றபடுத்தியுள்ள பிரசன்னா விதானகேவின் சிங்கள With you without you திரைப்படம் நேற்று தமிழ் உணர்வாளர்களுக்கும், மாணவர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் பிரத்தியோக் காட்சி மாலை 7 மணிக்கு சென்னை வடபழனியில் உள்ள RKV ஸ்டுடியோவில் திரையிடப்பட்டது. இதில் இரண்டு இடங்களில் பயங்கரவாதிகள் என்று சொல்லபட்டதிற்கு கடும் எதிர்ப்பினை தமிழ் உணர்வாளர்கள் தெரிவித்திருந்தார்கள். ஆனால் அங்கு சில நபர்களுடனும் குடும்பத்தினருடனும் வந்திருந்த கவிஞர் ஜெயபாலன் சிங்கள இயக்குனர் பிரசன்னா விதானகேவையும் அவருடைய படத்தையும் பாராட்டியும் ஆதரித்தும் பேசினார். இதனால் ஆத்திரமடைந்த தமிழ் உணர்வாளர்கள் கவிஞர் ஜெயபாலனைத் தாக்க முயன்றனர். ஆனால் ஜெயபாலனுடன் வந்த நபர்கள் அ…
-
- 81 replies
- 7.1k views
-
-
வடக்கு மாகாண ஆளுநராக ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி மீண்டும் நியமிக்கப்பட்டமை தொடர்பில் கடும் விசனமடைந்திருக்கிறார் மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன். வடக்கு மாகாண சபை தனியாக உருவாக்கப்பட்டமையை அடுத்து 2009 ஆம் ஆண்டு ஜூலையில் அதன் முதலாவது ஆளுநராக ஐந்து வருடங்களைக் கொண்ட பதவிக் காலத்துக்கு ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி நியமிக்கப்பட்டிருந்தார். மீண்டும் இரண்டாவது தடவையாக அடுத்த ஐந்து வருடங்களுக்கு அவர் அந்தப் பதவிக்கு தற்போது நியமிக்கப்பட்டுள்ளார். இந்த விடயம் குறித்து மின்னஞ்சலில் கருத்து வெளியிட்ட முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்தவை வருமாறு:- "நான் விசனமுற்றுள்ளேன். சந்திரசிறியின் பதவிக்காலம் முடிந்ததும், இராணுவப் பின்புலம் இல்லாத சிவிலியன் ஒருவரைத் தாம் புதிய ஆளுந…
-
- 0 replies
- 409 views
-
-
சனி, ஜூலை 12, 2014 - 05:02 மணி தமிழீழம் | தமிழ்நாடன், பதிவு நிருபர் அடுத்தது வடமராட்சி கிழக்கு! 700 ஏக்கர் நிலம் பறிபோகின்றது!! வடக்கில் இராணுவத்திற்கும் கடற்படைக்கும் நிலம் பிடிக்கும் இலங்கை அரசினது நடவடிக்கை முனைப்புப் பெற்றுள்ள நிலையில் அடுத்ததாக வடமராட்சி கிழக்கில் மருதங்கேணிப்பகுதியில் சுமார் 700 ஏக்கர் நிலம் சுவீகரிக்கப்படவுள்ளமை தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் பிரகாரம் மருதங்கேணியில் நிலை கொண்டுள்ள இலங்கைக் கடற்படையின் தளத்தினை விஸ்தரிப்பதற்கு ஏதுவாகவே குறித்த 700 ஏக்கர் பொதுமக்களிற்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து கையகப்படுத்த முயற்சிகள் ஆரம்பமாகியுள்ளது. சுவீகரிக்கப்படவுள்ள காணிகளிற்கான அளவீட்டுப்பணிகள் விரைவில் நில அளவைத்திணைக்கள அதிகாரிகளினால் செய்யப்…
-
- 1 reply
- 448 views
-
-
புளொட் தலைவர், சுவிஸ் கிளை முக்கியஸ்தர் ஆகியோர் சுவிஸ் அதிகாரிகளுடன் கலந்துரையாடல்..!! [Friday 2014-07-11 20:00] புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன், புளொட்டின் சுவிஸ் கிளை முக்கியஸ்தர்களுள் ஒருவரான சுவிஸ்ரஞ்சன் ஆகியோர்க்கும், சுவிஸ் நாட்டின் அரசியல் விவகாரங்களுக்கான மூத்த ஆலோசகரும், சமாதானம், மனித உரிமைகள், மனித உரிமைகளுக்கான கொள்கைகள், குடிவரவு, குடியகல்வுகளுக்கான பிரதம ஆலோசகர் மார்ட்டின் சுக்த்ஸ்சிங்கர் மற்றும் சுவிஸ் அரசின் இலங்கை விவகாரங்களுக்கான செயற்திட்ட நிபுணர் லைலா கிளெமெண்ட் ஆகியோர்க்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று செவ்வாய்க்கிழமை (08.07.2014) ப…
-
- 4 replies
- 559 views
-
-
ஆந்திர முதல்வருடன் பீரிஸ் சந்திப்பு! - நேரடி விமான சேவை குறித்து கலந்துரையாடல் [Friday 2014-07-11 09:00] இலங்கை, இந்திய உறவை பலப்படுத்தும் நோக்கில் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றிருக்கும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல்.பீரிஸ், ஆந்திர மாநிலத்திற்கு சென்று அந்த மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவைச சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். ஆந்திர பிரதேசத்தின் நாகர்ஜுனா சாகர் என்னும் இடத்திலுள்ள பரவதர்ம பெளத்த பூங்காவில் தற்போது முடிவடையும் தறுவாயிலுள்ள பெளத்த சிலையின் நிர்மாணப் பணிகள் இலங்கைக்கும் ஆந்திராவுக்குமிடையிலான உறவிற்குரிய சான்றாகுமென முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, அமைச்சர் பீரிஸிடம் தெரிவித்தார். இதேவேளை இலங்கை- ஆந்திர உறவு…
-
- 1 reply
- 286 views
-
-
கடற்படைக்கு சுவீகரிப்பதற்கான காணி அளவீடு கீரிமலையிலும் தடுத்து நிறுத்தப்பட்டது! [Friday 2014-07-11 18:00] கீரிமலை நகுலேஸ்வரத்துக்கு முன்பாக உள்ள பொதுமக்களின் காணியை சுவீகரிக்கும் நோக்கில் அளவீடு செய்ய வந்த அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையில் இன்று முரண்பாடு ஏற்பட்டுள்ளது. மக்களின் எதிர்ப்பை அடுத்து அளவீட்டுப் பணிகளை அதிகாரிகள் இடைநிறுத்தியுள்ளனர். பொதுமக்கள் 21 பேருக்கு சொந்தமான 183 ஏக்கர் காணியை கடற்படையினரின் தேவைகளுக்காக சுவீகரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கென காணி அளவீடு செய்ய இன்று அந்தப் பகுதிக்கு அதிகாரிகள் சென்றுள்ளனர். அதனை அறிந்த காணி உரிமையாளர்கள் அங்கு கூடி தமது எதிர்பபை வெளிப்படுத்தியதுடன் நாடாளுமன்ற, மாகாண சபை, …
-
- 0 replies
- 369 views
-
-
அவுஸ்ரேலியா - அகதி அந்தஸ்து மறுக்கப்பட்ட இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களின் தொழில் செய்யும் அனுமதி பத்திரத்தினை ரத்து செய்தது! [Friday 2014-07-11 21:00] அவுஸ்ரேலியா அரசாங்கம் தற்போது அகதி அந்தஸ்து மறுக்கப்பட்ட இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களின் தொழில் செய்யும் அனுமதி பத்திரத்தினை ரத்து செய்து வருகின்றது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர் தெரிவிக்கையில்... குடிவரவு திணைக்களத்தால் அழைக்கப்பட்டு இரண்டு கேள்விகள் கேட்டதாகவும் அவை நிங்கள் சுய விருப்பத்துடன் சொந்த நாட்டுக்கு போகும் படியும், இல்லையெனின் தடுப்பு காவலுக்கு செல்ல வேண்டும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. என்று தெரிவித்தார். இவர்கள் தனியாக பணம் கொடுத்து வழக்கறிஞர் வைத்து இருந்…
-
- 0 replies
- 276 views
-
-
யாழில் மாபெரும் போராட்டம்; அனைவரையும் அழைக்கிறது தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் தேசிய மீனவ ஒத்துழைப்பின் இயக்கத்தின் ஏற்பாட்டில் காணி சுவீகரிப்பு , மீள்குடியேற்றம், காணாமல் போனோர் தொடர்பில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று எதிர்வரும் 15ஆம் திகதி யாழ். பேரூந்து நிலையத்தில் காலை 10 மணிக்கு இடம்பெறவுள்ளது. போராட்டம் தொடர்பில் தேசிய மீனவர் இயக்கம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையிலேயே போராட்டம் தொடர்பில் அறிவித்துள்ளது. மேலும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படும் இப்போராட்டத்தில் வடக்கு கிழக்கு மற்றும் தெற்கில் இருந்தும் மக்கள் கலந்து கொள்கின்றனர். அரசியல் கட்சிகள் , அரசியல் பிரம…
-
- 1 reply
- 338 views
-
-
வியாழன், ஜூலை 10, 2014 - 19:56 மணி தமிழீழம் | தமிழ்நாடன், பதிவு நிருபர் ஒதுக்கப்பட்டது இந்தியாவின் வரவு செலவுத் திட்டத்தில் இலங்கைக்கு 500 கோடி ரூபாய்கள் இந்தியாவின் 2014-2015ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இலங்கைக்காக 500 கோடி இந்திய ரூபாய்கள் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பாரதீயே ஜனதா கட்சி ஆட்சி ஏற்றதன் பின்னர் முதல் தடவையாக இன்று அதன் வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்திருந்தது. இதில் இலங்கைக்கு 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்கான ஒதுக்கங்களின் கீழ் இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதேவேளை இந்தியாவின் வெளிவிவகார அமைச்சுக்கான ஒதுக்கம் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 25 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வெளிவிவகார அமைச்சுக்கு 11793 கோ…
-
- 2 replies
- 807 views
-
-
அரச வானொலியின் பொய்ப்பிரசாரத்துக்கு, முதலமைச்சர் விக்னேஸ்வரன் பதிலடி! [Friday 2014-07-11 09:00] வடக்கு மாகாண சபையின் நிர்வாகத்தைக் கொண்டு நடத்துவதில் தமக்குள்ள நெருக்கடிகளைச் சுட்டிக்காட்டி, அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன். இதுதொடர்பாக முதலமைச்சரின் சார்பில் அவரது பிரத்தியேகச் செயலாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், அண்மைக்காலத்தில் வடமாகாண சபையை விமர்ச்சிக்கும் வகையில் தேசிய வானொலியில் விளம்பர வடிவில் சில செய்திகள் ஒலிபரப்பட்டு வருகின்றமை யாவரும் அறிந்ததே. அதனைச் செய்பவர் யாரென்று வெளிப்படுத்த திராணியில்லாது - உரிமை கோராமல் - வெளியிடப்படும் இத்தகைய விஷமத்தனமான பிரச்சாரங்களால் நாம் தளர்ந்…
-
- 0 replies
- 365 views
-
-
புலிகளுக்கு அடையாள அட்டை வழங்கிய ஐ.நா எப்படி நீதியான விசாரணை நடத்தும்? - கேள்வி எழுப்புகிறார் பிரதமர் ஜெயரட்ன. [Friday 2014-07-11 10:00] விடுதலைப்புலிகள் அமைப்பின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளராக இருந்த பொட்டம்மானின் நெருங்கிய சகாவுக்கு தமது அடையாள அட்டையை வழங்கியுள்ள ஐ.நாவால் இலங்கையில் எப்படி நீதியான விசாரணையை நடத்தமுடியும் என்று நேற்று நாடாளுமன்றில் கேள்வி எழுப்பியுள்ளார் பிரதமர் டி.எம்.ஜயரட்ன. இலங்கை மீதான ஐ.நா. விசாரணை, அரசுக்கு எதிரான பெரும் சூழ்ச்சி என்றும் அவர் இதன்போது தெரிவித்தார். நாடாளுமன்றில் நேற்று இடம் பெற்ற சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றிய போது இதனைத் தெரிவித்தார். தமிழீழ …
-
- 0 replies
- 377 views
-
-
மலேசியாவில் கைதான தமிழர்கள் நால்வரும் விரைவில் இலங்கையிடம் ஒப்படைப்பு! [Friday 2014-07-11 09:00] மலேசியாவில் அண்மையில் கைது செய்யப்பட்ட இலங்கைத் தமிழர் நால்வரும் விரைவில் இலங்கைக்கு நாடு கடத்தப்படலாம் என்று மலேசியாவில் இயங்கும் மனித உரிமைகள் அமைப்பான சூரம் ரக்யார்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் கைது செய்யப்பட்ட மூன்று இலங்கையர்களும் உடனடியாகவே திருப்பியனுப்பப்பட்டிருந்தனர். அதேபோன்ற நிலைமையே தற்போது கைதாகியுள்ள நான்கு பேருக்கும் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்பு கொண்டிருந்ததாக தெரிவித்தே இந்த நான்கு பேரும் கடந்த 4ம் திகதி கைது செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ht…
-
- 0 replies
- 217 views
-
-
வலி.வடக்கு இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்தில அமைந்துள்ள மயிலிட்டி நாகதேவன்துறையில் அமைந்துள்ள மூன்று இந்து ஆலயங்களுக்குச் செல்ல இராணுவத்தினர் அனுமதி வழங்கியமையால் இன்று வெள்ளிக்கிழமை ஐநூறுக்கும் மேற்பட்ட மக்கள் அந்த ஆலயங்களுக்குச் சென்று வழிபாடுகளை மேற்கொண்டுவிட்டுத் திரும்பினர். 30 வருடங்களின் பின்னர் இன்று அந்த ஆலயங்களுக்குச் சென்ற பொதுமக்கள் வழிபாட்டில் ஈடுபட்டனர். காலையில் காங்கேசன்துறை சிமெந்துத் தொழிற்சாலைக்கு அருகில் உள்ள இராணுவத்தினரின் சோதனைச் சாவடியில் ஆலயத்துக்குச் செல்லும் பொதுமக்கள் சோதனை நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டனர். பின்னர் அவர்களின் தேசிய அடையாள அட்டைகள் மற்றும் விவரங்களைப் பதிவு செய்த இராணுவத்தினர் தமது பஸ் வண்டிகளில் அந்தப் பொது மக்களை ஆலயங்களுக்க…
-
- 0 replies
- 933 views
-
-
அவுஸ்திரேலியாவுக்கு அகதி அந்தஸ்த்து கோரி சென்ற இலங்கையர்களை மீண்டும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று இந்திய அறிவித்திருப்பதாக அவுஸ்திரேலியா ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது . 153 இலங்கையர்களுடன் அவுஸ்திரேலியா சென்றுள்ள படகு தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. எவ்வாறாயினும் குறித்த 153 பேருடனான படகு, தமிழ் நாட்டில் இருந்தே அவுஸ்திரேலியா சென்ற நிலையில், அவர்களை இந்தியாவுக்கே திருப்பி அனுப்புவது தொடர்பில் அவுஸ்திரேலிய அரசாங்கம் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த முற்பட்டதாக கூறப்படுகிறது. எனினும் இவ்வாறான பேச்சுவார்த்தைக்கு இந்தியா இணங்கவில்லை என்று. ஏற்கனவே இந்த படகில் உள்ள அகதிகளை நாடுகடத்துவதற்கு 72 மணித்தியாலத்துக்கு முன்னர் முன்னறிவிப்பு வழங்க வேண்டும் என்ற…
-
- 8 replies
- 700 views
-
-
கடந்த 05 ம் திகதி தென்மராட்சியின் சாவகச்சேரியில் வைத்தியசாலையில் குண்டர் படையால் அப்பாவி இளைஞனொருவன் செய்யப்பட்ட சம்பவத்தில் வடமாகாணசபையின் கூட்டமைப்பு உறுப்பினரான சயந்தனின் குண்டர் படையே உள்ளமை அம்பலமாகியுள்ளது. வடமாகணசபை உறுப்பினர் கேசவன் சயந்தனின் தனிப்பட்ட மெய் பாதுகாவலர் என தன்னைதானே கூறிக்கொள்ளும் மகேந்திரன் நிதர்சன் உட்பட சயந்தனின் அடியாட்களே இத்தாக்குதலை நடத்தியுமுள்ளனர். இத்தாக்குதலில் ஒரு அப்பாவியின் உயிர் பறிக்கப்பட்டிருந்தது. எனினும் தலைமறைவாக இருந்த குற்றவாளிகளுள் ஒருவர் நடந்த மாகாணசபை தேர்தலில் அரச தரப்பினில் போட்டியிட்டு படுதோல்வி அடைந்த பிரதேசசபை உறுப்பினர் குமார் சர்வானந்தனின் (சர்வா) உதவி மூலம் பொலிசாரிடம் சரணடைந்திருந்தார். எனினும் சயந்தனின் மெ…
-
- 0 replies
- 391 views
-
-
கோத்தாபே ராஜபக்ஷ என்றொருவர் இலங்கை அரசியலினுள் இணைந்தது மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்ததைத் தொடர்ந்தாகும். அவர் இராணுவ சேவையிலிருந்து விலகிய பின்னர் ஒன்றரை தசாப்த காலம் அமெரிக்காவில்தான் வாழ்ந்து வந்தார். அவர் பிரபல அல்லது பலம் பொருந்திய ஒருவராக அறியப்படுவது தனது சகோதரர் ஜனாதிபதியாக ஆகியதன் பின் இந்நாட்டுக்கு வருகை தந்ததன் பின்னணியிலாகும். அப்போது அவருக்கு மிகவும் அதிகாரமிக்க பதவியாக கருதப்படக்கூடிய பாதுகாப்புச் செயலாளர் என்ற அந்தஸ்தும், பதவியும் கிடைக்கப் பெற்றதோடு அதனைத் தொடர்ந்து ஆரம்பித்த நான்காவது ஈழப்போரின் பாதுகாப்பு படைக்கான இணைப்பாளராகவும் அவரே நியமிக்கப்பட்டார். மேலும் அவர் தனக்கிருந்த ஆபத்துக்களைக் கூட பொருட்படுத்தாமல் யுத்தத்தை தர்க்கரீதி…
-
- 10 replies
- 1.3k views
-
-
யாழ்ப்பாணம், வலி.வடக்கு பிரதேசத்தில் இராணுவத்தினரின் அதி உயர் பாதுகாப்பு வலயப் பகுதியில் 30 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்ட மயிலிட்டி கண்ணகி அம்மன் கோயிலில் வழிபாடு செய்வதற்கு இன்று மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது:- மயிலிட்டிப் பகுதியில் மீள்குடியேற்றத்திற்கு அனுமதி மறுத்துவந்த படைத்தரப்பு இன்று அந்தப் பகுதியில் உள்ள கண்ணகி அம்மன் கோயிலில் வழிபாடு செய்வதற்கு மக்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. அவ்வாறு வழிபாட்டுக்குச் செல்லும் மக்கள் காங்கேசன்துறைக்கு அண்மையில் உள்ள உயர் பாதுகாப்பு வலய எல்லைப் பகுதியில் படையினரின் பதிவு நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் படை வாகனங்களில் ஏற்றி ஆலயப் பகுதிக்கு கொண்டுசென்று விடப்பட்ட…
-
- 0 replies
- 433 views
-
-
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஆட்சியதிகாரத்தின் கீழுள்ள வடமாகாண சபையின் செயற்பாடுகளை முன்னெடுக்கவிடாது வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி இடைஞ்சல்களை ஏற்படுத்திவருகின்றார் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிலையில் அவரது பதவிக்காலத்தை மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிப்பதற்கு அரசாங்கம் ஆலோசித்து வருவதாக மிகவும் நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது. இலங்கையின் அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளதன் பிரகாரம், ஆளுநர் ஒருவரின் பதவிக்காலம் அவரது நியமன நாளில் இருந்து ஐந்து ஆண்டுகளாகும். வடமாகாண ஆளுநராக மேஜர்ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி 2009 ஆம் ஆண்டு ஜூலை 12 ஆம் திகதி ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். அவருடைய ஐந்து ஆண்டு பதவிக்காலம் இன்று வெள்ளிக்கிழமை 11 ஆம் திகதியுடன் நி…
-
- 0 replies
- 446 views
-
-
யாழ்.நகரில் தனிநாயகம் அடிகளாருக்கு உருவச்சிலை! - அடுத்தமாதம் 2ம் திகதி திறப்பு விழா [Friday 2014-07-11 09:00] யாழ். நகரில் உள்ள மடத்தடிப் பகுதியில், திருக்குடும்ப கன்னியர்மட பாடசாலை அருகில் அரச மரத்தின் கீழ் தனிநாயகம் அடிகள் நினைவு முற்றம் அமைக்கப்படும் வேலைகள் துரித கதியில் இடம்பெற்று வருகின்றன. தனிநாயகம் அடிகளாரின் பிறந்த தினமாகிய எதிர்வரும் 02.08.2014 சனிக்கிழமை பிற்பகல் 4.30 மணிக்கு யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கமும் யாழ். மறை மாவட்டமும் இணைந்து முன்னெடுக்கும் விழாவில் யாழ்.மறை மாவட்ட ஆயர் அதிவண. தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகையும் நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனக் குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தரதேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளும் இணைந்து தனிநாயகம் அடிகளின் திருவுருவச் சிலையைத்…
-
- 1 reply
- 395 views
-
-
மலேசியாவில் பி.ராமசாமியை கைதுசெய்யகோரி காவல்துறையில் முறைப்பாடு! ஜூலை 11, 2014 மலேவியாவின் பினாங் மாநில துணைமுதலமைச்சர் பி.ராமசாமியை கைதுசெய்ய கோரி காவல்துறையில் முறையிடப்பட்டுள்ளது இவர் தமிழீழ விடுதலைப்புலிகளுடன் தொடர்புடையவர் என்ற குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகளுடன் தொடர்புகளை பேணிவரும் பி.ராமசாமி தையிரியமாக செயற்பட்டு வருகின்றார். மலேசியாவில் இயங்கும் அரச சார்பற்ற நிறுவனங்கள் இந்த முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளன. இரண்டு முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன இதன் அடிப்படையில் அவசரபுலன் விசாரணை செய்து அவரை கைதுசெய்யுமாறு காவல்துறை முறைப்பாட்டில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. http://www.sankathi24.com/news/43719/64//d,fullart.aspx
-
- 0 replies
- 364 views
-
-
குறிகாட்டுவானில் பிக்குவும், கடற்படையினரும் அடாவடித்தனம்! - நயினாதீவு திருவிழாவுக்குச் சென்ற பக்தர்கள் பாதிப்பு. [Friday 2014-07-11 07:00] நயினாதீவு நாகவிகாரையின் பௌத்த பிக்குவும் கடற்படையினரும் இணைந்து, நயினாதீவுக்கும் குறிகட்டுவானுக்கும் இடையில் நேற்று பலாத்காரமாக மேலதிக படகுப் போக்குவரத்துச் சேவையை நடத்தியதால், தனியார் படகுச் சேவைகள் பாதிக்கப்பட்டன. இதைக் கண்டித்து நேற்று மதியம் தொடக்கம் தனியார் படகு உரிமையாளர்கள் சேவையை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நயினாதீவுக்குச் சென்ற பக்தர்கள் பாதிப்பை எதிர்நோக்கினர். நயினாதீவு நாகபூசணி அம்மனின் வருடாந்த மகோற்சவ காலங்களில் வருடாந்தம் தனியார் படகு உரிமையாளர்கள் குறைந்த கட்டணத்தின் அடிப்படையில் சேவை நோக்கத்துடன் போக்கு…
-
- 0 replies
- 433 views
-
-
கடற்கரைச்சேனையில் மயானத்தை ஆக்கிரமித்துள்ள கடற்படை! - திண்டாடும் ஐந்து கிராம மக்கள் [Friday 2014-07-11 07:00] திருகோணமலை சம்பூரை அண்மித்த கடற்கரைச்சேனை இந்து மயானத்தில் இறுதிக்கிரியைகளை நடத்த கடற்படை தொடர்ந்தும் அனுமதி மறுப்பதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினரான குமாரசாமி நாகேஸ்வரன் குற்றம்சாட்டியுள்ளார். கடற்கரைச்சேனை கடற்படை முகாமின் கட்டுப்பாட்டிலுள்ள இந்து மயானத்தை மக்கள் பாவனைக்கு விடுவிப்பது தொடர்பாக எதிர்வரும் செவ்வாய்கிழமை கூடவுள்ள கிழக்கு மாகாண சபை அமர்வின்போது சபையின் கவனத்திற்கும் அவர் கொண்டு வரவிருக்கிறார். அந்த பகுதியில் மீள்குடியேற்றத்தின் பின்னர் 4 வருடங்களுக்கு மேலாக சம்புக்கழி, கடற்கரைச்சேனை, சந்தோஷபுரம் உட்பட ஐந்து கிராமங்களை சேர்ந்த மக்கள் இது தொடர்பாக …
-
- 0 replies
- 370 views
-
-
தஞ்சக் கோரிக்கையாளர்கள் முறையாக நடத்தபபடுவதாக அப்பாட் வலியுறுத்துகிறார். ஆஸ்திரேலியாவுக்கு சொந்தமான கிறிஸ்துமஸ் தீவுகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தஞ்சக் கோரிக்கையாளர்களில் சிலர் தற்கொலைக்கு முயன்றதாக செய்திகள் வந்துள்ள நிலையில், "இப்படியெல்லாம் மிரட்டி" ஆஸ்திரேலிய தஞ்சக் கோரிக்கை கொள்கைகளை மாற்றிவிட முடியாது என ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அப்பாட் கூறியுள்ளார். கிறிஸ்துமஸ் தீவில் தாய்மார்கள் சுமார் ஒரு டஜன் பேர், தற்கொலைக்கு முயன்றதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் சில செய்திகள் வெளியிட்டிருந்தன. கிறிஸ்துமஸ் தீவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தஞ்சக் கோரிக்கையாளர்களில் தாய்மார்கள் சிலர், தாம் இறந்தால் தமது பிள்ளைக்காவது அகதித் தஞ்சம் கிடைக்கலாம் என்ற எண்ணத்தில் தற்கொலைக்கு முயன்றதாக ஆஸ…
-
- 7 replies
- 569 views
-
-
மன்னார் மாவட்டத்தில் சேதன முறையிலான பயிர்ச்செய்கையை ஊக்குவிக்கும் முகமாக செய்முறைத் துண்டங்கள் நானாட்டான் மற்றும் முருங்கன் விவசாயப் போதனாசிரியர் பிரிவுகளில் ஸ்தாபிக்கப்பட்டன. இதன் முதற் கட்டமாக முழுமையான சேதனப் பசளைகளைப் பயன்படுத்தி மடுக்கரை மற்றும் வெள்ளாளகட்டு கிராமங்களில் முளைக்கீரை பயிரிடப்பட்டுள்ளது. விவசாய இரசாயனங்களின் பாவனை காரணமாக நுகர்வோருக்கும் விவசாயி களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் ஏற்படும் தீங்குகளைத் தவிர்த்து, மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக இந்தச் செய்முறைத் துண்டங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. இதன்படி மடுக்கரைக் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள முளைக்கீரை பயிர்ச்செய்கை செய்முறைத் துண்டத்தில் நேற்று முன்தினம்செவ்வாய்கிழமை வயல் விழா நடைபெற்றது. இந்…
-
- 0 replies
- 415 views
-