Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இனப்பிரச்சினைத் தீர்வு குறித்து ஐந்து யோசனை! - கூட்டமைப்புக்கு சமர்ப்பிப்பு. [sunday, 2014-06-08 08:14:14] இனப்பிரச்சினை தீர்வு குறித்து தமக்கு ஐந்து யோசனைகள் கிடைத்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. தனிப்பட்டவர்கள் மற்றும் அமைப்புகளிடம் இருந்தே இந்த தீர்வு யோசனைகள் கிடைத்துள்ளதாக கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது. அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றின்போது நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் இனப்பிரச்சினை தீர்வுக்கான யோசனைகளை தாம் வரவேற்பதாக அறிவித்திருந்தார். இதன்மூலம் தமிழ் தேசியக்கூட்டமைப்பு புதிய முனைப்புக்களை மேற்கொள்ள முடியும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார். இந்தநிலையில் கடந்த வெள்ளிக்கிழமை வரை ஐந்து யோசனைகள் கி…

  2. கோத்தாவின் அரசியல் கனவு ஈடேறுகிறது! பாதுகாப்பமைச்சராவாராம்?! சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச அரசியலில் குதிக்கலாம் என்று உள்ளூர் ஊடகம் ஒன்றை மேற்கொள்காட்டி, ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சிறிலங்கா அதிபரின் வேண்டுகோளின் பேரில், பாதுகாப்புச் செயலர் பதவியை விட்டு விலகி, அவர் அரசியலில் குதிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர், கொழும்பு மாவட்டத்தில் கோட்டே தொகுதியின் சிறிலங்கா சுதந்திரக்கட்சி அமைப்பாளராக நியமிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. அதேவேளை, கோத்தாபய ராஜபக்ச தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படவுள்ளதாகவும், தற்போது சிறிலங்கா அதிபர் வசமுள்ள பாதுகாப்பு அமைச்சு அவரிடம் கையளிக்கப்படவுள்ளதாகவும், வேறு அரசியல…

  3. ஆடைத்தொழிற்சாலை ஆட்சேர்ப்புக்கு சிறிலங்கா இராணுவ முகாமில் நடத்தப்பட்ட நேர்முகத் தேர்வு [ வியாழக்கிழமை, 05 யூன் 2014, 15:22 GMT ] [ கி.தவசீலன் ] ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றுவதற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கு முல்லைத்தீவு இராணுவ முகாமில் வைத்து, இளம்பெண்களுக்கு நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டுள்ளது. ஹிர்தாரமணி என்ற தனியார் ஆடை தயாரிப்பு நிறுவனத்துக்காகவே, 68-3வது பிரிகேட் தலைமையகத்தில், கேடந்த திங்கட்கிழமை நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தில் பணியாற்றுவதற்காக- சிறிலங்கா இராணுவத்தினரே நேர்முகத் தேர்வுகளை நடத்தியுள்ளனர். முல்லைத்தீவைச் சேர்ந்த சுமார் 160 தமிழ்ப் பெண்கள் இந்த நிறுவனத்துக்காக ஆட்சேர்ப்புச் செய்யப்படவுள்ளதாக சிறிலங்கா இராணுவம் தெரிவித்துள…

  4. 'இரண்டாவது தடவையாக இந்த பயிலரங்கு தடுக்கப்பட்டுள்ளது- ஏற்பாட்டாளர்கள் இலங்கையின் வடக்கு கிழக்குப் பிரதேசங்களைச் சேர்ந்த தமிழ் ஊடகவியலாளர்கள் நீர்கொழும்பில் கலந்து கொண்டிருந்த பயிலரங்கு ஒன்று ஆர்ப்பாட்டக்காரர்களினால் இன்று சனிக்கிழமை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை பரிந்துரையின் அடிப்படையில் புலனாய்வுச் செய்தியாக்கம் தொடர்பில் ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நேஷனல் நிறுவனத்தின் இலங்கைக் கிளை நடத்தியிருந்த நான்காவது பயிலரங்கே தடுக்கப்பட்டுள்ளது. பொலன்னறுவை மாவட்டத்தில் உள்ள மின்னேரியா என்ற இடத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் கடந்த மே மாதம் நடத்தப்பட்ட இப்படியான பயிலரங்கின்போதும். அங்கு வந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷமெழுப்பி, 'பயங்கரவாதத்தை மீண்டும் உருவாக்கு…

    • 1 reply
    • 497 views
  5. -அஷ்ரப் ஏ சமத்- தென்கொரியாவில் பணியாற்றும் இலங்கையர்களால் அதிக பொருளாதார முன்னேற்றத்தை தமது நாடு அடைந்து வருவதாக இலங்கைக்கான தொன்கொரிய தூதுவர் தெரிவித்துள்ளார். கைத்தொழில் – வாணிபத்துறை அமைச்சர் றிஷாத் பதியுதீனை அமைச்சில் வைத்து சந்தித்து உரையாடும்போதே தென்கொரிய தூதுவர் மேற்படி கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். இரு நாடுகளுக்குமிடையிலான வர்த்தக உறவு குறித்து இச்சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டது. தென்கொரியாவில் பணியாற்றும் இலங்கையர்களின் உழைப்பு எமது நாட்டுக்கு அதிக வருமானத்தையும் பொருளாதார ரீதியாக முன்னேற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவர்களது பனி பாராட்டுக்குரியது. அதற்காக விசேடமாக இலங்கைக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன் என்றார் தூதுவர். இரு நாடுகளுக்குமிடையில் வர்த்தக…

    • 2 replies
    • 580 views
  6. யாழ். பருத்தித்துறை பகுதியில் விநாயகர் முதலியார் வீதியில் உள்ள வீடொன்றின் சமயலறையின் புகைக்கூட்டின் கீழ் இரகசியமான முறையில் அமைக்கப்பட்ட பதுங்குகுழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இராணுவத்தினருக்கு நேற்று மாலை கிடைத்த தகவலை அடுத்து பொலிசாரும், இராணுவத்தினரும் இணைந்து குறித்த வீட்டில் மேற்கொண்ட சோதனையின் போது 8 அடி ஆழம் 6 அடி அகலமும் கொண்ட பதுங்குகுழியினை கண்டுபிடித்துள்ளனர். குறித்த வீடானது கடந்த 95ம் ஆண்டு காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகளின் பயன்பாட்டில் இருந்த காரணத்தினால் இந்த பதுங்கு குழி தமிழீழ விடுதலைப்புலிகளால் அமைக்கப்பட்டிருக்கலாம் என இராணுவத்தினர் கருதுகின்றனர். குறித்த வீட்டில் தற்போது குடியிருப்பவர்கள் வாடகைக்கு குடியிருப்பவர்கள் எனவும் வீட்டின் …

    • 0 replies
    • 648 views
  7. இலங்கை கடல் எல்லையினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள் 42 பேரை தலைமன்னார் கடற்பரப்பில் இன்று(07) சனிக்கிழமை மாலை கடற்படையினர் கைது செய்துள்ளதாக மன்னார் மாவட்ட கடற்தொழில் உதவிப்பணிப்பாளர் வி.எஸ்.மெராண்டா தெரிவித்தார். தலைமன்னார் கடற்பரப்பினுள் 8 படகுகளில் மீன்பிடியில் ஈடுபட்ட 42 தமிழக மீனவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார். கைது செயய்ப்பட்ட மீனவர்கள் தற்போது தலைமன்னார் கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் நாளை ஞாயிற்றுக்கிழமை(8) மன்னார் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக அவர் கூறினார். http://www.pathivu.com/news/31544/57/42/d,article_full.aspx

    • 0 replies
    • 313 views
  8. 13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்யுமாறு அஸ்கிரி பீடம் கோரிக்கை 06 ஜூன் 2014 13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்யுமாறு அஸ்கிரி பீடம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்திய அழுத்தங்களுக்கு அடிபணிந்து விடாது 13ம் திருத்தச் சட்டத்தை உடனடியாக அரசாங்கம் ரத்து செய்ய வேண்டுமென அஸ்கிரி பீடத்தின் சிரேஸ்ட உறுப்பினர் மெதகம தம்மானந்த தேரர் தெரிவித்துள்ளார். சர்வதேச ரீதியில் இலங்கை எதிர்நோக்கி வரும் அழுத்தங்களுக்கு 13ம் திருத்தச் சட்டமே முக்கிய ஏதுவெனத் தெரிவித்துள்ளார். 13ம் திருத்தச் சட்டத்தின் ஊடாக தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்திவிட முடியாது னஎ அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மாகாணசபை முறைமையினால் பணம் விரயமாவதனைத் தவிர வேறும் எந்த நன்மைகளும் ஏற்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியா…

  9. புலிகளின் பத்து தலைவர்களை கைது செய்து இலங்கையிடம் ஒப்படைக்கவுள்ளதாம் மலேசியா! [saturday, 2014-06-07 08:35:46] விடுதலைப் புலித் தலைவர்கள் பத்துப் பேரை கைது செய்து இலங்கை அதிகாரிகளிடம் ஒப்படைக்க மலேசிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாக திவயின என்ற சிங்களப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. ஜெயா என்ற ஜெயலக்ஷ்மி கோவிந்தசாமி, பொன்குளி வீரமன், கரிகாலன் என்ற சிவலிங்கம் சரவணன், பெருமாள் சின்னத்தம்பி, மொஹான் பெரியசாமி, குமார் என்ற ஜெயகுமார் வையாபுரி, பெருமாள் என்ற ராமையா திருமாவளவன், மதிநாராயணன் என்ற செல்வமலர் ஐயாத்துரை, காந்தன் என்ற தவராஜா லக்ஷ்மி ஆகியோரே மலேசியாவில் மறைந்திருப்பதாக அந்த பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. இந்த உறுப்பினர்களை கைது செய்யும் நடவடிக்கைகளை மலேசிய அதி…

  10. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமைப்பின் புதிய ஆணையாளர் பதவிக்கு ஜோர்தான் இளவரசர் ஷெயிட் அல் ஹூசைனை ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூன் முன்மொழிந்துள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பின் ஆணையாளர் நவநீதம் பிள்ளையின் பதவிக்காலம் முடிவடைவதை அடுத்து, அல் ஹூசைன் புதிய ஆணையாளர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். ஜோர்தான் நாட்டுக்கான ஐ.நா.வின் நிரந்தர தூதராக செயற்படும் அல் ஹூசைன் (50), கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் பி.எச்.டி பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. http://tamil.dailymirror.lk/pirasitta-seithi/113350-2014-06-07-07-55-47.html இலங்கை விசாரணைகளுக்கான இணைப்பாளராக சன்டரா பெய்டாஸ் தெரிவு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்த…

    • 0 replies
    • 576 views
  11. மின்னஞ்சல் கண்டுபிடித்த தமிழர் சிவா ஐயாதுரை அவர்களின் துணிச்சலான பதிவு !! அவருக்கு நம் வாழ்த்துகள் ! // If Rajapaksa can enter India, then it's time for Tamilians to exit India. Death to Rajapaksa --- butcherer of Tamilians! // - Message from the inventor of Email. ராஜபக்சே இந்தியாவிற்குள் நுழையமுடியும் என்றால் , தமிழர்கள் இந்தியாவை விட்டு வெளியேறும் நேரம் வந்து விட்டது. தமிழினக் கொலைகாரன் ராஜபக்சேவிற்கு மரணம் உரித்தாகட்டும். V.A. Shiva Ayyadurai Yes, we unite now around ONE cause: A FREE TAMIL NATION, Period. FREE --- means as starters: 1. No caste system, 2. Liberation of woman, 3. Freedom of expression for all religions . And those "tamilians" who aided in but…

    • 14 replies
    • 4k views
  12. தங்களது கைதுக்கு இலங்கை மீனவர்களே காரணம் என இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டு பின்னர் நல்லெண்ண நடவடிக்கையால் நாடு திரும்பியுள்ள தமிழக மீனவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதுகுறித்து அவர்கள் மேலும் தெரிவிக்கையில், நாங்கள், அனுராதபுரம் சிறையில் 2 நாட்கள் இருந்தோம். அதற்கு பிறகு விடுதலை செய்யப்படுவதாகக்கூறி மீண்டும் நீதிமன்றில் ஆஜர்படுத்தினர். அப்போது நீதிபதி, மீனவர்களை மட்டும் விடுதலை செய்வதாகவும் 6 படகுகள், மீன்பிடி சாதனங்களை விடுவிப்பது தொடர்பான விசாரணை ஜூலை 4-ஆம் திகதி நடைபெறும் என்றும் தெரிவித்தார். எங்களை விடுவித்தது மகிழ்ச்சி என்றாலும், எங்களையும், குடும்பத்தையும் காப்பாற்றும் படகுகளை விடுவிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது. இலங்கை கடற்படையினர் எங்களை ஒப்படைக்க …

  13. சிவா அய்யாதுறை – தமிழ்நாடு தனி நாட்டிற்கான முதல் இணையதள நேரலைக்கூட்ட தமிழாக்கம் இந்திய நேரப்படி இன்றிரவு (05-சூன்-2014) 8.30 மணிக்குத் தொடங்கவிருந்த அவரது நேரலை ஒரு மணி நேரம் தாமதமாகவே தொடங்கியது. இந்த நேரலையின் தொடக்கம் முதல் இறுதி வரை அவர் முழுதும் ஆங்கிலத்திலேயே அவரது உரையை தொடர்ந்தார். அதனால் எல்லா தமிழர்களையும் சென்றடைய வேண்டும் என்பதற்காக நாம் இதை மொழியாக்கம் செய்து இங்கு பதிவிட்டுள்ளோம். அவரது இந்த நேரலை நிகழ்ச்சியானது இரு பகுதிகளாக நடைபெற்றது. முதல் பாதி அவரது தமிழ்நாடு தனிநாடு என்பதற்கான அவசியத்தினையும் அதன் காரணங்களையும் எடுத்துரைத்தார். அதில் சில பின்வருமாறு. “உலகத்தில் எல்லாமும் ஒரு கூட்டாக இயக்கமாகத்தான் செயல்படுகிறது . அதன் கூறுகளாவன 1.இடமாற்றம் (T…

    • 0 replies
    • 2.1k views
  14. இந்­தியப் பிர­தமர் நரேந்­தி­ர­மோ­டியின் வெளி நாட்டுப் பய­ணத்தில் இலங்­கைக்கு முத­லி­ட­மில்லை என்­பது உறு­தி­யா­கி­யுள்­ளது. இந்­நி­லையில், பிர­தமர் மோடி தனது முதல் வெளி­ நாட்டுப் பய­ணத்தை பூட்­டா­னுக்கு மேற்­கொள்­ளவுள்ளார். இவ­ரது பய­ணத்­துக்­கான ஏற்­பா­டுகள் மற்றும் தங்­கு­மிட ஒழுங்­கு­களை மேற்­கொள்­வ­தற்­காக இந்­திய அதி­கா­ரி­களின் உயர்­மட்டக் குழு­வொன்று பூட்­டா­னுக்குப் பய­ண­மா­கி­றது. தற்­போது நடை­பெறும் இந்­திய பாரா­ளு­மன்ற அமர்­வுகள் முடிந்த பின்னர், இம்­மாதம் மூன்­றா­வது வாரத்தில் இந்தப் பயணம் இடம்­பெ­றலாம் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடியை தமது நாட்­டுக்கு வரு­மாறு இலங்கை உட்­பட சார்க் நாடு­களின் தலை­வர்கள் பத­வி­ய…

    • 0 replies
    • 532 views
  15. அர­சாங்­கத்தின் உறு­தி­யற்ற கருத்­துக்­களை நம்பி ஏமாறத் தயா­ரில்லை. அர­சாங்கம் குறிப்­பிடும் பொலிஸ் அதி­கா­ரத்­திற்கு இணங்­கவும் மாட்டோம்,ஏற்­றுக்­கொள்­ளவும் மாட்டோம் என தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் ஊடகப் பேச்­சாளர் சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் தெரி­வித்தார். மாகாண சபை­யை பல­வீ­னப்­ப­டுத்தும் எந்­த­வொரு செயற்­பாட்­டி­னையும் தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பு ஒரு­போதும் செய்­யாது எனவும் அவர் சுட்­டிக்­காட்­டினார். பொலிஸ் அதி­கா­ரத்­திலும் விட்­டுக்­கொ­டுப்­பிற்கு தயார் என்ற அர­சாங்­கத்தின் கருத்து தொடர்பில் வின­விய போதே சுரேஸ் பிரே­மச்­சந்­திரன் எம்.பி.மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்­பி­டு­கையில், நாட்டில் அதி­காரப் பகிர்­வி­னையும், மாகாண அத…

    • 0 replies
    • 504 views
  16. அவதூறு செய்யும் நோக்கில் செயற்படும் இணையத்தளங்கள் தடை செய்யப்படுமாம்! அவதூறு செய்யும் நோக்கில் செயற்பட்டு வரும் இணைய தளங்கள் தடை செய்யப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. தனிப்பட்ட நோக்கங்களுக்காக நபர்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி அவதூறு செய்யும் இணைய தளங்களை தடை செய்ய வேண்டுமென ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல பாராளுமன்றில் தெரிவித்துள்ளார். அரசாங்கம் இணைய தளங்களை தடை செய்யுமா என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பாராளுமன்றில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாகரீகமான சமூகத்திற்கு இடையூறாக அமைந்துள்ள இணைய தளங்களை தடை செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் குறித்து பேச்சுவார்த்தை நடாத்த ஐ…

    • 0 replies
    • 396 views
  17. ஈழத் தமிழர்களுக்கு மோடியால் நன்மை விளையும் ! டி.அருள் எழிலன் 'இனப் படுகொலை குற்றவாளிகள்’ என்று 12 பெயர்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டிருக்கிறது 'நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்’. இந்தியாவில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டு, மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்று இலங்கை திரும்பியிருக்கிறார் அதிபர் ராஜபக்ஷே. இனி, 'ஈழ விவகாரத்தில் முந்தைய காங்கிரஸ் அரசின் அணுகுமுறையையே இப்போதைய இந்திய அரசு கைக்கொள்ளுமா?’ என்பதுதான் இலங்கைத் தமிழர்களிடம் எழுந்திருக்கும் கேள்வி. இது தொடர்பாக, நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் உருத்திரகுமாரனிடம் பேசினேன்.. . ''2009-ல் போர் முடிந்தபோது இருந்த சர்வதேச சூழலுக்கும், இன்றைய உலக நாடுகளின் அணுகுமுறைக்கும் வேறுபாடு உள்ளதா?'' ''நிச்சயமாக! மாபெரும்…

    • 1 reply
    • 548 views
  18. ஜெனிவாக் கூட்டத் தொடரில் மீளவும் இலங்கை விவகாரம் news ஜெனிவாவில் அடுத்தவாரம் ஆரம்பமாகவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கூட்டத்தொடரிலும், இலங்கை நிலைமை குறித்து விவாதிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் 10ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 26ஆவது கூட்டத்தொடர் நடை பெறவுள்ளது. இந்தக் கூட்டத் தொடரில் ஆரம்ப உரை நிகழ்த் தும் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை, தமது பணியகத்தின் செயற்பாடுகளின் நிலை குறித்து விளக்கமளிக்கவுள்ளார். எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்துடன் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பதவியில் இருந்து ஓய்வு பெறவுள்ள நவநீதம்பிள்ளை, சமர்ப்பிக்கும் கடைசி அறிக்கையாக இது இருக்கும். நவநீதம்பிள்ளையின் அறிக்கையில், இலங்கையில் இடம்பெற்ற…

  19. சிறிலங்காவில் இடம்பெற்ற மனிதஉரிமை மற்றும் மனிதாபிமானச் சட்ட மீறல்கள் குறித்து விசாரிப்பதற்கான ஐ.நாவின் சிறப்பு விசாரணைக் குழுவின் இணைப்பாளராக மூத்த மனிதஉரிமை அதிகாரியாகப் பணியாற்றிய சன்ட்ரா பெய்டாஸ் என்ற மனித உரிமை நிபுணர் நியமிக்கப்பட்டுள்ளார். ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை, இந்த நியமனம் குறித்து நேற்றிரவு சிறிலங்கா அரசாங்கத்துக்கு அறிவித்துள்ளார். ஜெனிவாவில் உள்ள சிறிலங்கா வதிவிடப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்கவுக்கு இவரை ஐ.நா விரைவில் அறிமுகம் செய்து வைக்கவுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. விசாரணைக் குழுவைத் தெரிவு செய்யும் பணிகள் நடந்து வருவதாகவும் விரைவில் அது இறுதிப்படுத்தப்படும் என்றும் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெ…

    • 0 replies
    • 423 views
  20. வடக்கு மாகாணத்திலிருந்து இராணுவத்தினை வெளியேற்றுவதே எமது முக்கியமான குறிக்கோள். அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நாம் முன்னெடுத்து வருகின்றோம். வடக்கிலிருந்து இராணுவத்தினரை வெளியேற்றுவதன் மூலமே எமக்கு விமோசனம் கிடைக்கும். இல்லையேல் எமக்கு விமோசனம் இல்லை என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். நேற்றுக்காலை முல்லைத்தீவு மாவட்டத்தின் கிழக்குப் பிரதேச கிராமங்களுக்கு விஜயம் செய்த முதலமைச்சர், அப்பிரதேச மக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து கொள்ளும் சந்திப்பில் கலந்துகொண்டு மக்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். ஒட்டுசுட்டான்-வாவெட்டி, தட்டையான், கொக்குதொடுவாய் - கருநாட்டுக்கேணி, கொக்கிளாய் - புளியமுனை, நாயாறு ஆகிய பகுதிகளில் பொதுமக்க…

    • 35 replies
    • 2.1k views
  21. வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன்:- நீண்டபலகாலமாக மண்ணை மீட்பதற்காகவும், மீட்ட மண்ணைப்பாதுகாப்பதற்காகவும் தொடர்ச்சியாக போராடிவரும் ஓர் பரம்பரையைச்சார்ந்தவர்கள் நாங்கள். இன்றைக்கும் அந்தப்போராட்டம் பல்வேறு வகைகளிலும் தொடர்ச்சியாகத்தொடர்ந்துகொண்டே இருக்கின்றது. ஏற்கனவே நீர்வளம் குறைவான எமது தீவகப்பிரதேசத்திலே இன்று அதிகாரத்தரப்பினரது அனுசரணையுடன் சட்டவிரோத மண்ணகழ்வு, மரம் தறிப்பு என்பன தாராளமாக இடம்பெற்று வருகின்றன். இது கடலரிப்பு, கடல்நீர் ஊருக்குள் வருதல் முதலிய பல அழிவுகளுக்கு காரணமாக அமைந்து வருகின்றது எனத்தெரிவித்தார். உலக சூழல் தினத்தை முன்னிட்டு வடமாகாண விவசாய, கமநலசேவைகள்,கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சு நடத்திய உலக சூழ…

  22. ஹைதராமனி தனியார் நிறுவனத்தினால் முல்லைத்தீவில் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ள தொழிற்சாலை ஒன்றில் முல்லைத்தீவு யுவதிகளுக்கும் தொழில் வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பான நேர்முகப்பரீட்சைகள் முல்லைத்தீவு பாதுகாப்புபடை 683ஆவது படைசேனை தலைமையகத்தில் நடைபெற்றபோது முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த 160 யுவதிகள் இந்த கலந்துக் கொண்டனர். முல்லைத்தீவு பாதுகாப்புபடை தளபதி மேஜர் ஜெனரால் ஜகத் டயஸ்சுக்கும், குறித்த தொழிற்சாலை உரிமையாளருக்கும் இடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளையடுத்தே, அவர்கள் இந்த நேர்முக பரீட்சைக்கு அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=468903084406276824#sthash.yOOIg5JN.dp…

  23. தன் வசம் நாக பாம்பு ஒன்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்த பாம்பு பெண் என அழைக்கப்படும் நிரோஷா விமலரத்ன (டிலானி) என்பவர் பிரசவத்திற்கான அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த பெண் கொள்ளுப்பிட்டி களியாட்ட விடுதியில் இரவு நேர நடனப் பெண்ணாகப் பணியாற்றியுள்ளார். இவர் கடந்த செவ்வாய்க்கிழமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த பெண் தங்கியிருந்த அநுராதபுரம் வைத்தியசாலைக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. பொலிஸ் அனுமதி இன்றி எவரும் இவர் தங்கியிருந்த அறைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இதேவேளை இவர் சிறிது காலம் சுல்த்தான் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்த நிலையில…

  24. ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் விசாரணைக் குழுவால் இலங்கைக்கு ஆபத்து ஏற்படும் என சிரேஸ்ட ராஜதந்திரியும், பிரான்ஸிற்கான முன்னாள் தூதுவருமான தயான் ஜயதிலக்க எச்சரிக்கை விடுத்துள்ளார். குறித்த சர்வதேச விசாரணைக் குழுவின் தலைவர் பதவியை சர்வதேசத்தில் நன்மதிப்பை பெற்ற ஒருவருக்கு வழங்க நவநீதம்பிள்ளை முயற்சித்து வருகிறார். ஐக்கிய நாடுகள் அமைப்பின் முன்னாள் செயலாளர் நாயகம் கொபி அனானை அதற்காக தெரிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. கொபி அனான் அதனை நிராகரித்துள்ளார் எனவும் தயான் ஜயதிலக்க சுட்டிக்காட்டியுள்ளார். இராஜதந்திர ரீதியில் முன்னாள் செயலாளர் நாயகத்திற்கு இருக்கும் வரவேற்பு காரணமாக அவரை தலைவர் பதவிக்கு தெரிவுசெய்ததாக கூறப்படுகிறது. இது அமெரி…

  25. -எஸ்.சசிக்குமார் மூதூர் கிழக்கு பிரதேசத்திலிருந்து கடந்த 2006ஆம் ஆண்டில் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களிலும் உறவினர் வீடுகளிலும் தங்கியுள்ள 162 குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள், வள்ளிக்கேணியில் மீள்குடியேற விருப்பம் தெரிவித்துள்ளனர். தங்களது பூர்வீகக் கிராமமான சம்பூரை விடுத்து, வள்ளிக்ணேயில் குடியேற அம்மக்கள் விருப்பம் தெரிவித்ததாக மூதூர் பிரதேச செயலாளர் நடராசா பிரதீபன் தெரிவித்தார். சம்பூரிலிருந்து இடம்பெயர்ந்த 825 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் இன்னமும் மீள்குடியேற்றப்படாத நிலையில் உள்ளனர். இம்மக்கள் வாழ்ந்த பகுதி, அதியுயர் பாதுகாப்பு வலயத்திற்குள் உள்வாங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இடம்பெயர்ந்தவர்களை பல சந்தர்ப்பங்களில் மீளக்குடியமரத்த முனைந்த போதும் அம்முயற்சி …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.