ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143530 topics in this forum
-
வணிக ரீதியான வனவியல் முகாமைத்துவ செயற்பாடுகளை முன்னெடுப்பதனூடாக சூழலை பாதுகாப்பதுடன், மக்களின் வாழ்வை மேம்படுத்தும் நடவடிக்கைகளிலும் சதாஹரித பிளான்டேஷன் லிமிடெட் ஈடுபட்டு வருகிறது. காடுகளை அழிக்கும் செயற்பாடுகளிலிருந்து சூழலை பாதுகாக்கும் நோக்கிலும், மக்களுக்கு வருவாயை பெற்றுக்கொடுக்கும் வகையிலும் வணிக ரீதியான வனவியல் முகாமைத்துவ நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் நோக்கில் 11 வருடங்களுக்கு முன்னர் இந் நிறுவனம் தனது செயற்பாடுகளை ஆரம்பித்தது. சதாஹரித பிளான்டேஷன் லிமிடெட்டின் சமீபத்திய புதிய கண்டுபிடிப்பான அகர்வுட் செய்கையானது மிகக் குறுகிய காலத்தில் பிரபல்யம் அடைந்துள்ளது. இப் பெறுமதி வாய்ந்த செய்கையின் மூலம் கம்பளை வெலிவேரியவை வசிப்பிடமாகக் கொண்ட விமல் விக்ரமஆரச்சி தனது வாழ்க்கை…
-
- 1 reply
- 1.3k views
-
-
முழுமையான போர்க் காலப் பகுதி தொடர்பில் விசாரிக்க வேண்டும் என்கிறது அமெரிக்கா! சிறிலங்காவில் போரின் முழுக்காலப் பகுதியிலும், எல்லாத் தரப்பினராலும், மேற்கொள்ளப்பட்ட எல்லா நடவடிக்கைகள் தொடர்பாகவும், நம்பகமான- சுதந்திரமான விசாரணைகள் மேற்கொள்ளப்படுவது நாட்டுக்கு நன்மையளிக்கும் என்று அமெரிக்கா உணர்வதாக, அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே சிசன் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று வெளிநாட்டுச் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட அமெரிக்கத் தீர்மானத்தில், 2002 தொடக்கம் 2009 வரையான காலப்பகுதி குறித்து விசாரணை மட்டுப்படுத்தப்பட்டது ஏன் என்று கேள்விகள் எழுப்பப்படுகின்றன. இதற்காக, 2002 தொடக்கம், 2009 வரையான காலப்பகுதியில் என்ன நடந்தது என்பது…
-
- 1 reply
- 493 views
-
-
(ஆதவன்) இலங்கை அரசாங்கமானது வடக்கு மாகாண சபையை இயங்கவிடாது பல முட்டுக்கட்டைகளை போட்டுவருகின்றது என சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சரிடம் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார். சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் கே.சண்முகம் யாழ்ப்பாணத்திற்கு இன்று காலை விஜயம் செய்து பல தரப்பினருடனும் சந்திப்புக்களை மேற்கொண்டிருந்தார். முன்னதாக வடமாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறியை காலை 9 மணிளவில் ஆளுநர் அலுவலகத்தில் சந்தித்த அவர் வட மாகாண முதலமைச்சரை யாழ். கோவில் வீதியிலுள்ள முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் முற்பகல் 10 மணியளவில் சந்தித்து கலந்துரையாடினார். இச்சந்திப்பு குறித்து வடக்கு மாகாண முதலமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், அரசியல் ரீதியாக எதனையும…
-
- 1 reply
- 463 views
-
-
2013 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு முடிவுகள் சற்று முன்னர் வெளியானது. இந்நிலையில், பரீட்சை பெறுபேறுகளை http://www.doenets.lk/exam/ என்ற இணையத்தளத்தின் ஊடாக பார்வையிட முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். http://www.virakesari.lk/articles/2014/04/03/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81
-
- 10 replies
- 3.5k views
-
-
ஜெனீவாத் தீர்மானம்; ஒவ்வொருவர் ஒருகதை – இந்தியாவின் நிலைப்பாடு! ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் இந்தியா பங்கெடுக்காமல் ஒதுங்கியது அரசியல் மட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவே என்று இந்திய வெளிவிவகாரச் செயலர் சுஜாதா சிங் தெரிவித்துள்ளார்.ஜெனிவா தீர்மானத்தில் இந்தியாவினது நிலைப்பாடு குறித்து கருத்து வெளியிட்டிருந்த மத்திய நிதி அமைச்சர், ப.சிதம்பரம், தீர்மானத்தில் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் விடும் முடிவை இந்திய வெளிவிவகார அமைச்சு அதிகாரிகளே எடுத்திருக்கக் கூடும் என்று தெரிவித்திருந்தார். 23 நாடுகள் தீர்மானத்தை ஆதரித்திருந்த நிலையில், இந்தியாவும் ஆதரித்திருக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார். இதுகுறித்து புதுடெல்லியில் இன்று …
-
- 1 reply
- 514 views
-
-
ஆஸி.யின் நிலைப்பாட்டில் அவசர பரிசீலனை வேண்டும் – இலங்கை தொடர்பில் கோடன் வைஸ்! அவுஸ்திரேலியாவில் வீதிகளையும் பாலங்களையும் கட்டுவதன் மூலம் இங்கு வாழும் பூர்விகக்குடிகளுக்கும் [Aboriginals] அவுஸ்திரேலியாவின் வெள்ளையினத்தவர்களுக்கும் இடையில் மீளிணக்கப்பாட்டை ஏற்படுத்த முடியும் என்பதை அவுஸ்திரேலிய அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் இதனை சிறிலங்காவில் மேற்கொள்ள முடியும் எனக் கூறுகின்றது. இவ்வாறு சிறிலங்காவில் போரின் இறுதி மூன்றாண்டுகள் ஐநாவின் பேச்சாளராக பணியாற்றியவரும், சிறிலங்காவின் போரை விபரிக்கும் The Cage என்னும் நூலின் ஆசிரியருமான Gordon Weiss* தனது கருத்தை The Newcastle Herald என்னும் ஊடகத்தில் பதிவு செய்துள்ளார். 2009ல் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட சிறிலங்காவின…
-
- 0 replies
- 385 views
-
-
அமெரிக்காவை தளமாக கொண்ட இலாப நோக்கற்ற 'சமூக வளர்ச்சித் தேவை' ( Social progress Imperative) எனும் அமைப்பு 2014 ஆண்டுக்கான வெளியிட்ட சமூக வளர்ச்சி சுட்டியில் 132 நாடுகளில், இலங்கை 85வது இடத்தை பிடித்துள்ளது. இந்த சுட்டியில் இந்தியா 102ஆம் இடத்தில் இருக்கின்ற அதே வேளை, சீனா 90வது இடத்திலும், பிரேசில் 46வது இடத்திலும் உள்ளது. இந்த பட்டியலில் நியூசிலாந்து முதலிடத்திலும் அடுத்த இடங்களில் சுவிட்லாந்து, ஐஸ்லாந்து,நெதர்லாந்து ஆகியவை உள்ளன. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/105826--85-.html
-
- 1 reply
- 661 views
-
-
1972ஆம் ஆண்டில் இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற முதலாவது படைவீரரிலிருந்து இதுவரையில் 50 ஆயிரம் படைவீரர்கள் தப்பிச் சென்றுள்ளனர் என்று இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்துள்ளார். இவர்களில் 30 ஆயிரம் பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் எஞ்சியுள்ள 20 ஆயிரம் பேரை கைது செய்ய சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். http://www.onlineuthayan.com/News_More.php?id=805532828104554987
-
- 3 replies
- 451 views
-
-
இலங்கையிலிருந்து வெளிவரும் 'திவயின' என்ற பத்திரிக்கை பரபரப்பு செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் விடுதலைப்புலிகளை பழிவாங்குவதில் சோனியா காந்தி தீவிரம் காட்டினார் என்று கூறப்பட்டுள்ளது. அந்த செய்தியின் விவரம் வருமாறு: ‘‘முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியை விடுதலைப் புலிகள் படுகொலை செய்தனர். தனது கணவரான ராஜீவ் காந்தியை படுகொலை செய்த விடுதலைப்புலிகளை பழி தீர்த்துக் கொள்ள காங்கிரஸ் கட்சி தலைவி சோனியா காந்தி விரும்பினார். எனவே, அவர்களை பழிவாங்குவதில் தீவிரம் காட்டினார். இலங்கை தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஏற்படுவதற்கு முன்னதாக விடுதலைப் புலிகளை முழுமையாக ஒழிக்க வேண்டும் என அவர் விரும்பினார். குறிப்பாக விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் மற்றும் பொட்டு அம்மான…
-
- 5 replies
- 1.2k views
-
-
புலம்பெயர் அமைப்புகளை தமழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டுப் பயங்கரவாத நிறுவனங்கள் என அவற்றைத் தடை செய்வதற்கு இலங்கை அரசு எடுத்த முடிவு வெட்கக்கேடானது என உலக தமிழர் பேரவை கண்டனம் தெரிவித்துள்ளது. இவ் நடவடிக்கை இலங்கையில் யுத்தத்தின் போதும் மனித உரிமை மீறல்,நீதி, பொறுப்புக் கூறல் ஆகியவற்றை நிலைநாட்டுவதற்கு முயற்சிப்போரை அச்சுறுத்தி மௌனிக்கச் செய்யும் முயற்சியாகவே இது அமைவதாக உலகத் தமிழர் பேரவையின் கொள்கை வகுப்பு ஆலோசகர் ஜோன் ரியன் தெரிவித்துள்ளார். தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு, கிழக்கில் புலிகளை மீளக் கட்டியெழுப்பும் முயற்சியைத் தடுப்பதற்காகவே இந்தத் தடை நடவடிக்கை என்கிறது அரசு. ஆனால், யாருமே மீண்டும் ஆயுதப் பிணக்குக்குச் செல்ல விரும்பவில்லை. அப்படிச் செய்கிறார்கள்…
-
- 20 replies
- 1.5k views
-
-
சிறிலங்காப் படையினர் மற்றும் விடுதலைப் புலிகளின் போர்க்குற்றங்கள் தொடர்பாக, அனைத்துலக விசாரணைகளை நடத்துவதற்குப் பதிலாக, விரிவான, சுதந்திரமான, நம்பகமான தேசிய விசாரணை (உள்நாட்டு) ஒன்றை சிறிலங்கா நடத்துவதற்கு ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை ஊக்கமளிக்க வேண்டும் என்று இந்தியா தெரிவித்துள்ளது. கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு இந்தியத் தூதுவர் யஸ்வந்த் குமார் சின்கா, அளித்துள்ள செவ்வியிலேயே இந்தியாவினது இந்த நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார். ஒவ்வொரு நாடும் மனிதஉரிமை மீறல்கள் குறித்து தேசியப் பொறிமுறை மூலம் பதிலளிக்க வேண்டும் என்று இந்தியா நம்புவதால் தான், அனைத்துலக விசாரணை கோரும் ஜெனிவா தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு அளிக்கவில்லை. மனிதஉரிமைகளைப் பாதுகாக்கும் அடிப்படை பொறுப்பு தேசி…
-
- 4 replies
- 586 views
-
-
புத்த பெருமானின் உருவத்தினை உடலில் பச்சை குத்திக் கொண்டு நாட்டுக்குள் பிரவேசித்த பிரான்ஸ் நாட்டு பெண்கள் இருவரை நாடுகடத்துமாறு நீர்கொழும்பு மாவட்ட நீதவான் உத்தரவிட்டுள்ளார். அந்த பெண்கள் இருவரையும் நீதிமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை(03) ஆஜர் படுத்திய போது நீதவான் இவ் உத்தரவை பிறப்பித்தார். மூன்று நாட்களுக்கு முன்னர் குறித்த பெண்கள் விமான நிலையத்தில் வந்திறங்கிய போது விமான நிலைய பொலிஸாரால் இவ்விருவரும் கைது செய்யப்பட்டிருந்தனர். இலங்கைக்கு சுற்றுலா விசாவில் இந்த பெண்கள் வருகை தந்திருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/105800-2014-04-04-08-43-51.html
-
- 2 replies
- 593 views
-
-
175 ம் ஆண்டு நிறைவிலே இதுவரை காலத்திலும் இல்லாத இந்த வெற்றி எமக்கு கிடைத்திருப்பது மகிழ்ச்சிக்குரிய விடயம் என வேம்படி பெண்கள் உயர் தர பாடசாலை அதிபர் வேணுகா சண்முகரட்ணம் தெரிவித்தார். வெளியாகியுள்ள க.பொ.த சாதாரண தர பரீட்சைப் பெறுகள் தொடர்பாக உதயன் ஒன்லைன் கல்லூரி முதல்வரிடம் கேட்டபோது மேற்கண்டவாறு தெரிவித்தார். யாழ் மாவட்ட பாடசாலைகளில் எமது மாணவிகளே முன்னிலை பெற்றுள்ளனர் என்பது விசேட அம்சமாகும். கடந்த 2013 ம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் 28 மாணவிகள் 9 பாடங்களிலும் ஏ சித்தி பெற்றுள்ளமை மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். 8 ஏ சித்தியை 80 மாணவர்களும் 7 ஏ சித்தியை 60 வீதமான மாணவிகளும் பெற்றுள்ளனர். இதேவேளை கடந்த வருடம் பரீட்சைக்குத் தோற்றிய சகல மாணவர்களும் சாதாரண தரத்தி…
-
- 3 replies
- 667 views
-
-
கல்விப்பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளில் முதல் 10 மாணவர்களுள் தமிழ் மொழியில் தோற்றிய மாணவ,மாணவிகள் எவரும் தெரிவாகவில்லை என்று பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. இதனடிப்படையில் கம்பஹா ரத்னாவலி மகளீர் வித்தியாலய மாணவி மெனுஷிகா ஜயந்தி காரியவசம் மற்றும் கொழும்பு விசாகா வித்தியாலய மாணவி தபோதா ஹரிந்திரி கங்கொடவில சிறப்புச் சித்திகளை பெற்று அகில இலங்கை ரீதியாக முதலாம் இடத்தைபெற்றுள்ளனர். இதேவேளை, இரண்டாவது இடத்தை மாத்தறை ராகுல வித்தியாலயத்தின் உச்சித தேஷான் என்ற மாணவனும், மூன்றாவது இடத்தை கொழும்பு ஆனந்தா கல்லூரியின் ரவீன் லசிந்து தென்னகோன் என்ற மாணவனும் பெற்றுக்கொண்டுள்ளனர். நான்காவது இடத்தை காலி சவுத்லன்ட் வித்தியாலயத்தின் டி.எஸ்.ரொஷானா தரிந்தி மற்றும் க…
-
- 1 reply
- 424 views
-
-
அவுஸ்திரேலியாவில் வீதிகளையும் பாலங்களையும் கட்டுவதன் மூலம் இங்கு வாழும் பூர்விகக்குடிகளுக்கும் [Aboriginals] அவுஸ்திரேலியாவின் வெள்ளையினத்தவர்களுக்கும் இடையில் மீளிணக்கப்பாட்டை ஏற்படுத்த முடியும் என்பதை அவுஸ்திரேலிய அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் இதனை சிறிலங்காவில் மேற்கொள்ள முடியும் எனக் கூறுகின்றது. இவ்வாறு சிறிலங்காவில் போரின் இறுதி மூன்றாண்டுகள் ஐநாவின் பேச்சாளராக பணியாற்றியவரும், சிறிலங்காவின் போரை விபரிக்கும் The Cage என்னும் நூலின் ஆசிரியருமான Gordon Weiss* தனது கருத்தை The Newcastle Herald என்னும் ஊடகத்தில் பதிவு செய்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. 2009ல் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட சிறிலங்காவின் உள்நாட்டுப் போர் தொட…
-
- 1 reply
- 417 views
-
-
அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் கிளர்ச்சிகளை அடக்க வழிதேடும் படலங்களா தொடர்கிறது? குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக -ஹரேந்திரன் இலங்கையிலிருந்து நாளாந்தம் வெளிவந்து கொண்டிருக்கும்செய்திகள் இலங்கையிலுள்ள தமிழ், முஸ்லிம்சிறுபான்மையினர் மீண்டும் இலக்குவைத்து பகிரங்கமாகபழிவாங்கப்படுவதற்கான ஆயத்தங்களா என்ற அச்ச நிலையைஉருவாக்குகிறது. இதற்கு வசதியாக அவசரகாலச் சட்டத்தைஇலங்கையில் மீண்டும் வெகுவிரைவில் அமுல்படுத்துவதற்குஅரசாங்கம் திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றதா என்றசந்தேகமும் எழுந்துள்ளது. தமிழ் அமைப்புக்களைத் தடைசெய்துள்ளன. அந்தஅமைப்புக்கள் தொடர்புடைய சுமார் 400 பேரின் பெயர்விபரங்களையும் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.அந்தத் தரப்பினருடன் தொடர்புடையவர்கள் தண…
-
- 2 replies
- 468 views
-
-
சிறிலங்காவில் போரின் முழுக்காலப் பகுதியிலும், எல்லாத் தரப்பினராலும், மேற்கொள்ளப்பட்ட எல்லா நடவடிக்கைகள் தொடர்பாகவும், நம்பகமான- சுதந்திரமான விசாரணைகள் மேற்கொள்ளப்படுவது நாட்டுக்கு நன்மையளிக்கும் என்று அமெரிக்கா உணர்வதாக, அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே சிசன் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று வெளிநாட்டுச் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட அமெரிக்கத் தீர்மானத்தில், 2002 தொடக்கம் 2009 வரையான காலப்பகுதி குறித்து விசாரணை மட்டுப்படுத்தப்பட்டது ஏன் என்று கேள்விகள் எழுப்பப்படுகின்றன. இதற்காக, 2002 தொடக்கம், 2009 வரையான காலப்பகுதியில் என்ன நடந்தது என்பது குறித்து மட்டுமே அனைத்துலக சமூகம் கவனம் செலுத்துகிறது என்று அர்த்தமில்லை. உண…
-
- 2 replies
- 514 views
-
-
போரின் இறுதிக்கட்டத்தில் சிறிலங்கா படையினரிடம் சரணடைந்து காணாமல்போனவர்கள் தொடர்பாக வவுனியா மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுக்கள் மீதான விசாரணையின் ஒரு பகுதியாக, அத்தகைய சம்பவங்கள் இடம்பெற்ற சூழல் தொடர்பாக முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று விசாரணை ஆரம்பமாகியுள்ளது. போரின் இறுதிக்கட்டத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான உறுப்பினர்கள், சிறிலங்கா அரசாங்கத்தின் பாதுகாப்பு உத்தரவாதத்தை அடுத்து, சிறிலங்காப் படையினரிடம் சரணடந்தனர். முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் அவர்கள் சரணடைந்ததை பல்லாயிரக்கணக்கான மக்கள் நேரடியாகக் கண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், அவ்வாறு சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது, எங்கே வைக்கப்பட்டிரு…
-
- 4 replies
- 815 views
-
-
ஈழத்தமிழர்களிடத்தில் உள்ள பிரச்சனைகளை நாம் உணர்வு ரீதியாக புரிந்து கொண்டுள்ளோம் என்று சிங்கப்பூர் அமைச்சர் சண்முகம் தெரிவித்தார். இன்று காலை 12.30 மணியளவில் யாழ் பொதுநூலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போது தமிழ் மக்களின் நிலைப்பாடுகள் குறித்து சிங்கப்பூர் நாட்டின் தீர்மானம் என்ன என்பது பற்றி ஊடகவியாளனின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். மேலும் தமிழ் மக்களின் சுவீட்சமான வாழ்க்கைக்கு தம்மால் இயன்றளவு சேவையை ஆற்ற நம் நாடு முன்வரும் எனவும் அவர் தெரிவித்தார். http://www.onlineuthayan.com/News_More.php?id=843662827204720624
-
- 0 replies
- 423 views
-
-
ஐ.நா. பாதுகாப்புச் சபையில் 2001ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 28ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட 1373 தீர்மானத்துக்கு அமைவாக, வெளிநாடுகளில் செயற்படும் விடுதலைப் புலிகள் மற்றும் அவர்கள் சார்பு புலம்பெயர் தமிழர் அமைப்புகளான 16 அமைப்புக்களை அரசாங்கம் வெளிநாட்டுப் பயங்கரவாத அமைப்புகளாக பிரகடனம் செய்துள்ளது. ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் கொண்டுவரப்பட்ட பின்னணியில் தான் இந்த எதிர் நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. ஆனால், அரசாங்கம் சொல்லும் காரணம் அதற்கு முரணானது. இலங்கையில் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு மீள உயிர் கொடுக்க வெளிநாடுகளில் உள்ள புலிகள் சார்பு அமைப்புகள் முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டியே அரசாங்கம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. ஜெனீவாவில் இலங்கைக்கு எதிர…
-
- 2 replies
- 682 views
-
-
"இராணுவத்தினரிடம் சரணடைந்த எனது மகள், மருமகள், பேரப்பிள்ளைகள் பஸ் ஒன்றில் ஏற்றிச் செல்லப்பட்டனர். அவர்களை இராணுவத்தினர் கொண்டு சென்றதை நான் நேரடியாகக் கண்டேன்'' இவ்வாறு முல்லைத் தீவு மாஜிஸ்ரேற் நீதிவான் நீதிமன்றில் சாட்சியமளித்தார் தாய் ஒருவர். நேற்று நடை பெற்ற காணாமற் போனவர்கள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆள்கொணர்வு மனு மீதான விசாரணையின் போதே அவர் இவ்வாறு சாட்சியமளித்துள்ளார். இறுதிப் போரில் இராணுவத்தினரிடம் சரணடைந்து, அதன் பின்னர் காணாமற்போனவர்கள் தொடர்பில் அவர்களது உறவினர்களால் வவுனியா மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 12 வழக்குகள் தனித்தனியாக தாக்கல் செய்யப்பட்டிருந்தன. விடுதலைப் புலிகள் அமைப்பில் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப்…
-
- 1 reply
- 4.2k views
-
-
விடுதலைப் புலிகள் அமைப்பில் எழிலன் இருந்த காலத்தில் அவரால் மேற்கொள்ளப்பட்டு வந்த குற்றச்செயல்கள் குறிப்பிட்ட சுவரொட்டி ஒன்று யாழ்.மாவட்டத்தின் ஏனைய பகுதிகளிலும் ஒட்டப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது, எழிலன் விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்த காலத்தில் பெரும் பகுதியை ஆட்சேர்ப்பிலேயே செலவிட்டார். யுத்தத்தின் இறுதிநாட்களில் மாபெரும் போர் குற்றங்களில் ஈடுபட்ட விடுதலைப்புலிகளின் ஒருசில பெயர்களை சொல்லும்படி கேட்டால் அதில் நிட்சயம் எழிலனது பெயரும் இருக்கும். சிறார்கள் பெண்கள், இளைஞர்ளை கட்டாயமாக படைக்கிணைத்து சனங்களை தப்பிச் செல்ல விடாமல் தடுத்தும் தப்பிச் செல்ல முற்பட்டவர்களை சுட்டுக் கொன்றது போன்ற மூன்று குற்றச்சாட்டுக்களை என்னால் தயக்கமில்லாது எழிலன் மீது மேற்கொ…
-
- 6 replies
- 1k views
-
-
கொலை, கொள்ளையில் பிள்ளையான் குழு - 18 வயதுப் பெண்ணை மணக்க மன்மதலீலை ஏப் 4, 2014 கொலையுடன் தொடர்புபட்ட பிள்ளையான் குழுவைச் சேர்ந்த இருவர் பல கொள்ளைச் சம்பவங்களுடனும் தொடர்புபட்டுள்ளதாகவும் அவர்களிடம் இருந்து கொள்ளையிடப்பட்ட பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கொள்ளைக்கு துணைபுரிந்து மேலும் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பில் நிலைகொண்டுள்ள சிறீலங்காக் காவல்துறையினர் தெரிவித்தனர். மட்டக்களப்பு ஏறாவூர் தன்னாமுனையில் 21.01.2010 அன்று பிள்ளையான் குழுவைச் சேர்ந்த ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பிள்ளையான் குழு முக்கிஸ்தர் உட்பட நான்கு பேரை கைதுசெய்திருந்தனர். இவர்களில் இருவர் கொள்ளையுடன் தொடர்புபட்டுள்ளது கண்டறியப்ப…
-
- 0 replies
- 782 views
-
-
பயங்கரவாதச் செயல்களில் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் ஈடுபடுவதற்கான ஆதாரங்கள் இருந்தால் அவற்றை நிரூபிப்பது சிறீலங்கா அரசாங்கத்தின் பொறுப்பு என்று பிரித்தானியா சவால் விடுத்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் மறு முக அமைப்புக்கள் என முத்திரை குத்திப் புலம்பெயர் தேசங்களில் இயங்கும் பதினைந்து அமைப்புக்களை தடைசெய்வதற்கான வர்த்தமானி அறிவித்தலை சிறீலங்கா அரசாங்கம் தயாரித்து வரும் பின்புலத்தில் இன்று இது தொடர்பாக இலண்டனில் இருந்து வெளிவரும் தமிழ் கார்டியன் இணைய இதழிற்கு கருத்துரைத்த பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சின் பேச்சாளர் ஒருவர், புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் பலவற்றுடன் தமது அரசாங்கம் தொடர்பைப் பேணி வருவதாகவும், கருத்துச் சுதந்திரத்தையும், நியாயபூர்வமான விமர்சன உரிமையையும…
-
- 0 replies
- 646 views
-
-
சிறிலங்கா இராணுவததினரின் மிக மோசமான மனித உரிமை மீறல் இவர்கள் தமிழர்களா சரத்பொன்சேகாவின் ஆதரவாளர்கள என்று உறுதிப்படுத்த முடியவில்லை.tps://www.youtube.com/watch?v=F2vAER7kcxs
-
- 1 reply
- 796 views
-