ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142801 topics in this forum
-
08 JUL, 2024 | 06:35 PM (நா.தனுஜா) இலங்கை தமிழரசுக்கட்சி தலைவர் எஸ்.சிறிதரன் தலைமையிலான குழுவினருக்கும், பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவர் அண்ணாமலைக்கும் இடையில் நேற்று முன்தினம் நடைபெற்ற சந்திப்பின்போது தமிழர்களுக்கான அரசியல் தீர்வு மற்றும் வடக்கு - கிழக்கு இணைப்பு ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்துக் கலந்துரையாடப்பட்டது. திருகோணமலையில் ஞாயிற்றுக்கிழமை (7) இடம்பெற்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனின் இறுதிக்கிரியை நிகழ்வுகளில் இந்தியாவின் ஆளுந்தரப்பான பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவர் அண்ணாமலையும் கலந்துகொண்டிருந்தார். அதன்படி இலங்கைத் தமிழரச…
-
- 0 replies
- 159 views
- 1 follower
-
-
யாழில் நிர்க்கதியாய் விடப்பட்ட சம்பந்தனின் உடல்! சுமந்திரனின் பிடிவாதத்தால் ஏற்பட்ட தர்மசங்கடம் தமிழரசுக் கட்சியின் மூத்த பெரும் தலைவர் இரா.சம்பந்தன் (Rajavarothiam Sampanthan) கடந்த 30ஆம் திகதி இரவு உடல் நலக் குறைவு காரணமாக காலமானார். அதனையடுத்து கொழும்பில் தனியார் மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட அவருடைய உடல். கடந்த புதன்கிழமை நாடாளுமன்றத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர் உலங்கு வானூர்தி மூலம் யாழ்ப்பாணத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. சம்பந்தனின் இறுதி கிரியைகளிலும் அரசியல் அதன் பின்னர், இன்று காலை உலங்கு வானூர்தி மூலம் திருகோணமலைக்கு சம்பந்தனின் உடல் எடுத்துச் செல்லப்பட்டு மக்களது அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், இடைப்பட்ட …
-
-
- 50 replies
- 4.1k views
-
-
நாட்டைப் பற்றி சிந்தித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் அரசியல் வாழ்க்கையின் 27வது ஆண்டு நிறைவை முன்னிட்டு களுத்துறையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். “இந்தக் கட்சியை முன்னோக்கி நகர்த்துவதற்கு நாங்கள் அரசாங்கத்தின் அங்கமாகச் செயற்படும் போதெல்லாம், எவ்வித பயமுமின்றியே ஜனாதிபதிக்கு உதவி செய்தோம். அதேபோன்று எங்களுக்கு அச்சமும் இல்லை, கடனும் இல்லை என்பதை நாங்கள் பெருமிதத்துடன் கூறுகிறோம். எங்கள் கட்சியில் உள்ள அனைவரும் அந்த நேரத்தில் இந்த நாட்டைக் காப்பாற்றும் திறன் உங்களிட…
-
- 1 reply
- 312 views
- 1 follower
-
-
Mayu / 2024 ஜூலை 08 , மு.ப. 11:10 - 0 - 73 ஏ எம் கீத் கிழக்குமாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மற்றும் இந்திய தமிழ்நாடு மாநில பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் கே.அண்ணாமலை இலங்கை தமிழரசுக்கட்சி யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் மற்றும் திருகோணமலை தமிழரசு கட்சி நகரசபை பிரதேசசபை தலைவர் உறுப்பினர்களுக்கிடையை கலந்துரையாடல் ஞாயிற்றுக்கிழமை (07) திருகோணமலையில் உள்ள ஆளுனர் செயலகத்தில் நடைபெற்றது. இதன்போது, எதிர்கால அரசியல் களநிலவரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. Tamilmirror Online || அண்ணாம…
-
- 0 replies
- 234 views
-
-
வ.சக்தி ஜனாதிபதியின் பதவி நீடிக்கப்படா விட்டாலும் இந்த நாட்டில் உள்ள பெரும்பான்மையான மக்கள் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்க தீர்மானித்துள்ளனர் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இன்று தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் ஏற்பாட்டில் முன்னாள் போராளிகளுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதன் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு இந்த வாழ்வாதார உதவி வழங்கி வைக்கப்பட்டன. தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் உபதலைவர் ஜெயா.சரவணன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமை…
-
- 0 replies
- 218 views
-
-
08 JUL, 2024 | 04:43 PM மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளிவெட்டி கிராமத்தில் உள்ள பாழடைந்த கிணறு ஒன்றில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட தங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த யுவதியின் காதலனான பிரதான சந்தேக நபர் மூதூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இன்று (8) மூதூர் நீதிமன்றின் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, நாளை வரை (9) பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இப்படுகொலைச் சம்பவம் தொடர்பில் கடந்த வெள்ளிக்கிழமை (5) ஆறு சந்தேக நபர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, கடந்த சனிக்கிழமை (6) மூதூர் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது எதிர்வரும் 19ஆம் திகதி வரை அந்த ஆறு பேருக்கும…
-
- 0 replies
- 407 views
- 1 follower
-
-
இலங்கையிலுள்ள மத்திய கல்லூரிகள் மற்றும் தேசியப் பாடசாலைகள் செயற்கை நுண்ணறிவு பாடசாலைகளாக மேம்படுத்தப்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். காலி ஹால் டி கோல் விடுதியில் நேற்று (06) நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். தற்போது உலகம் நவீனத் தொழில்நுட்பத்துடன் முன்னேறி வருகிறது அதற்கமைய, இலங்கையின் கல்வி முறையும் நவீனத் தொழில்நுட்பத்துடன் நடத்தப்பட வேண்டும். அதற்குத் தேவையான கல்விச் சீர்திருத்தங்கள் அமைச்சினால் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. தற்போது பாடசாலைகளில், செயற்கை நுண்ணறிவுக் கழகங்களை உருவாக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப கல்…
-
- 0 replies
- 222 views
- 1 follower
-
-
மலையக பெருந்தோட்டங்களில் உள்ள 3,000 கர்ப்பிணிப் பெண்களுக்கு 20,000 ரூபாய் பெறுமதியான போஷாக்கு உணவுப் பொருட்களை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். கொட்டகலையில் நேற்று (06) இடம் பெற்ற கூடத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டார். சுமார் 1,500 சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் உள்ள 26,000 சிறுவர்களுக்கு ஊட்டச்சத்துள்ள காலை உணவு வழங்கும் புதிய வேலைத்திட்டமும் விரைவில் நடைமுறைக்கு வரும் எனவும் அமைச்சர் தெரிவித்தார். நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சு ஊடாக இவை வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார். https://thinakkural.lk/article/305474
-
- 0 replies
- 155 views
- 1 follower
-
-
யாழ்ப்பாணத்தில் (Jaffna) இடம்பெறும் வாள்வெட்டு வன்முறை செயற்பாடுகளில் ஈடுபடுவோர் தொடர்பில் தெரிந்த போதும் அவர்களை கைது செய்ய முடியவில்லை என யாழ். பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற அபிவிருத்திக் குழு கூட்டத்தின் போது யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்று வரும் வாள்வெட்டு வன்முறை தொடர்பாக பொலிஸ் தரப்பிடம் வினவப்பட்டது. இதன்போது, ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனை மிரட்டிய வன்முறை கும்பல் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வீட்டிற்கு முன்னால் வாள்களுடன் பயணித்த வன்முறைக் கும்பல் தொடர்பில் ஏன் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என அபிவிருத்தி குழுவினரால் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. பொலி…
-
- 0 replies
- 228 views
- 1 follower
-
-
2022ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு அரச சார்பற்ற உயர்கல்வி நிறுவனங்களில் கற்கைநெறிகளை தொடர்வதற்கு வட்டியில்லாக் கடன் வழங்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அரச பல்கலைக்கழகங்களுக்கு நுழைவதற்கு வாய்ப்பு கிடைக்காத உயர்தரம் சித்தியடைந்த மாணவர்களுக்காக இந்த வட்டியில்லாக் கடன் திட்டம், 2017ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் முன்மொழிவுகளின்படி நடைமுறைப்படுத்தப்படவுள்ளதுடன், அதிகபட்சமாக 8 இலட்சம் ரூபாய் வரை வட்டியில்லாக் கடன் பெற்றுக் கொடுக்கப்படவுள்ளது. கல்வி அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட 17 அரச சார்பற்ற உயர்கல்வி நிறுவனங்களில் 100 பட்டப்படிப்புகளை கற்பதற்கு 7 மாணவர் …
-
- 0 replies
- 84 views
- 1 follower
-
-
Published By: VISHNU 07 JUL, 2024 | 07:42 PM மறைந்த இரா.சம்பந்தன் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக மாத்திரமன்றி ஒட்டுமொத்த இலங்கை மக்களின் உரிமைகளுக்காகவும் முன் நின்ற தலைவர் என்றும் சம்பந்தனும் தானும் எப்போதும் பிரிக்கப்படாத இலங்கைக்காக தம்மை அர்ப்பணித்தவர்கள் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இரா.சம்பந்தனுடன் உடன்பாட்டுடன் முன்நோக்கி கொண்டு வந்த அந்தக் கலந்துரையாடல்களை வெற்றிகரமாக நிறைவு செய்ய அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். திருகோணமலையில் அன்னாரது இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை (07) பிற்பகல் நடைபெற்ற சம்பந்தனின் இறுதி கிரியையில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி ரணில் விக்…
-
-
- 5 replies
- 513 views
- 2 followers
-
-
ஜனாதிபதியின் பதவிக்காலம் 05 வருடங்கள்-சட்டமா அதிபர் உச்ச நீதிமன்றத்திற்கு அறிவிப்பு! அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதியின் பதவிக்காலம் 05 வருடங்கள் என்பது தெளிவாக உள்ளதாக சட்டமா அதிபர் உச்ச நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளார் ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பான மனு இன்று அழைக்கப்பட்ட போதே சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் கனிஷ்க டி சில்வா இதனைத் தெரிவித்தார். மேலும் சம்பந்தப்பட்ட மனுவை தள்ளுபடி செய்யக் கோரி பூர்வாங்க ஆட்சேபனைகள் எழுப்பப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். இவேளை இந்த மனுவை பரிசீலிப்பதற்காக பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, விஜித் மலல்கொட, முர்து பெர்னாண்டோ, பிரீத்தி பத்மன் சூரசேன மற்றும் எஸ்.துரைராஜா ஆகிய ஐந்து பேர் கொண்…
-
- 0 replies
- 285 views
-
-
08 JUL, 2024 | 10:59 AM சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் ஏ9 வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டது. இதன்போது ஏ9 வீதியூடான போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட்டது. வீதியை மறித்து போராடுவது சட்டவிரோதமானது என பொலிஸார் வேண்டுகோள் அறிவித்தல் விடுத்தமைக்கு இணங்க, பொதுமக்கள் வீதியை விட்டு விலகி வீதியோரமாக தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பொலிஸாருடன் இணைந்து கலகமடக்கும் பொலிஸார், விசேட அதிரடிப்படையினரும் வைத்தியசாலையில் குவிக்கப்பட்டுள்ளனர். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் அத்தியட்சகர் பதவியில் இருந்து வைத்தியர் இராமநாதன் அர்ச்…
-
- 0 replies
- 203 views
- 1 follower
-
-
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடும் சுகவீனம் கட்சிப் பொறுப்புகளை ஒப்படைத்தார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் புற்றுநோய் காரணமாகக் கடும் சுகவீனமுற்றிருப்பதாகத் தெரியவருகிறது. கடந்த சில மாதங்களாக அவர் வெளிநாடொன்றில் சிகிச்சை பெற்று வருவதாகவும் இருப்பினும் உடல்நிலையில் முன்னேற்றம் எதுவும் காணப்படவில்லை எனவும் அவருக்கு நெருங்கிய வட்டாரங்களின் மூலம் அறியமுடிந்தது என தென்னிலங்கை பத்திரிகையான லங்கா சார செய்தி வெளியிட்டுள்ளது. இதன் காரணமாக அவர் தனது கட்சிப் பதவிகளை அடுத்தவர்களிடம் கையளித்துள்ளதாகவும் அதே வேளை பாராளுமன்ற அலுவ…
-
- 7 replies
- 1.1k views
-
-
மறைந்த முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனின் பூதவுடலை இறுதி மரியாதைக்காக 3ஆம் திகதி புதன்கிழமை பி.ப 2.00 மணி முதல் பி.ப 4.00 மணிவரை பாராளுமன்ற வளாகத்தில் அஞ்சலிக்காக வைப்பதற்கு பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 03ஆம் திகதி நடைபெறவிருந்த பாராளுமன்ற அமர்வை நடத்தாதிருக்கவும் ஆளும் கட்சி எதிர்க்கட்சியின் இணக்கப்பாட்டுடன் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு படுகடன் மறுசீரமைப்பு உடன்படிக்கை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதியின் விசேட உரை நாளை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது. நாளை (02) விவாதத்திற்கு எடுக்கப்படவிருந்த குறித்த தீர்மானம் பற்றிய விவாதத்தை நடத்தாதிருக்கவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்…
-
- 10 replies
- 739 views
- 1 follower
-
-
07 JUL, 2024 | 10:05 AM இஸ்ரேலின் வடபகுதியில் ஹெஸ்புல்லா அமைப்பின் தாக்குதல்கள் அதிகரிப்பது குறித்து அப்பகுதியில் வசிக்கும் இலங்கையர்களிற்கு இஸ்ரேலிற்கான இலங்கை தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இஸ்ரேலின் வடபகுதியில் ஹெஸ்புல்லா அமைப்பின் தாக்குதல்கள் அதிகரிப்பதால் அப்பகுதியில் உள்ள இலங்கையர்கள் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கவனம் செலுத்தவேண்டும் என இஸ்ரேலிய தூதரகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. ஹெஸ்புல்லா அமைப்பின் தளபதியொருவர் இஸ்ரேலின் தாக்குதல் காரணமாக கொல்லப்பட்டதை தொடர்ந்து ஹெஸ்புல்லா அமைப்பு மேற்கொண்ட தாக்குதல் காரணமாக 150000 ஏக்கர் வறண்ட புல்வெளியும் விளைநிலமும் முற்றாக கருகி அழிந்துள்ளதாக இஸ்ரேலிய அதி…
-
- 0 replies
- 384 views
- 1 follower
-
-
கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகளுடன் இணைந்ததாக இருதரப்புக் கடன் வழங்குநர்களிடமிருந்து 05 பில்லியன் டொலர் கடன் வட்டி நிவாரணம் கிடைக்க இருப்பதோடு வர்த்தகக் கடன் வழங்குநர்களின் இணக்கப்பாட்டின் பிரகாரம் 03 பில்லியன் டொலர் கடனை வெட்டிவிடப்பட இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இதன் ஊடாக நாட்டு மக்களுக்கு 08 பில்லியன் டொலர் நிவாரணம் கிடைப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். 20 இலட்சம் முழுமையான காணி உறுதிகளை வழங்குவதற்கான ‘உறுமய’ தேசிய வேலைத் திட்டத்தின் கீழ், குருணாகல் மாவட்டத்தில் 73,143 பேருக்கு காணி உறுதிகள் வழங்கப்படவுள்ளன. அதன்படி நேற்று குருணாகல் வடமேல் மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் 463 பேருக்கு காணி உறுதிகளை அடையாள ரீதியாக வழங்கும் நிகழ்வில் கலந்துகொ…
-
-
- 2 replies
- 336 views
- 2 followers
-
-
06 JUL, 2024 | 06:47 PM (நா.தனுஜா) பிரிட்டன் பொதுத்தேர்தலில் தொழிற்கட்சியின் அமோக வெற்றி ஈழத்தமிழர் நலனில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும், எதிர்வருங்காலங்களில் இனப்படுகொலை, மனித உரிமை மீறல்கள் தொடர்பான நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பன முன்னேற்றகரமான மட்டத்தை நோக்கி நகரும் எனவும் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். சர்வதேச மட்டத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த பிரிட்டன் பொதுத்தேர்தலில் கெய்ர் ஸ்டார்மர் தலைமையிலான தொழிற்கட்சி அமோக வெற்றியீட்டியிருக்கும் நிலையில், இவ்வெற்றி இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதிலும…
-
- 0 replies
- 167 views
- 1 follower
-
-
நெதர்லாந்தில் இருந்து 35 மோப்ப நாய்கள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டது. பொலிஸ் மோப்ப நாய்கள் பிரிவுக்கு நெதர்லாந்திலிருந்து 35 நாய்கள் நேற்று (5) வெள்ளிக்கிழமை கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த நாய்கள் நெதர்லாந்திலிருந்து நேற்று (5) அதிகாலை 02.05 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. இதனையடுத்து இந்த நாய்கள் கட்டுநாயக்க விமான நிலைய விலங்குகள் தனிமைப்படுத்தல் நிறுவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. நாய்களின் மொத்த மதிப்பு 5 கோடியே 80 இலட்சம் ரூபா ஆகும். இந்த நாய்களில் 21 பெண் நாய்களும் 14 ஆண் நாய்களும் உள்ளன. இந்த நாய்களை ஏற்றுக்கொள்வதற்காக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ ஆகியோர் கட்டுநாயக்க விமான நில…
-
- 1 reply
- 205 views
-
-
06 JUL, 2024 | 06:21 PM முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்டவிரோத மீன்பிடித்தலை கட்டுப்படுத்துதல் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் இன்றைய தினம் (06) காலை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. முல்லைத்தீவு மாவட்ட கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் பல படகுகள் மின்விளக்கினை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுவதனால் பல ஆயிரம் கிலோகணக்கில் மீன்களை பிடிக்கின்றார்கள். இதனால் சாதாரண மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் மீன்வளம் அழிக்கப்படுவதாகவும் இதனை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் கடற்றொழில் திணைக்களத்தின் மாவட்ட பணிப்பாளர் ஆகி…
-
- 0 replies
- 163 views
- 1 follower
-
-
06 JUL, 2024 | 12:00 PM மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அடம்பன் பகுதியில் வசித்து வந்த முன்னாள் போராளி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (05) நள்ளிரவு இடம் பெற்றுள்ளது. உயிரிழந்தவர் பல் துறை ஆளுமை மிக்க 42 வயதுடைய குடும்பஸ்தரே மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று அடம்பன் வீதியில் உள்ள தனது வீட்டிற்கு முன் நின்று தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த இவரை வாகனமொன்று மோதிவிட்டு சென்றுள்ளது . இதன் போது குடும்பத்தினரின் உதவியுடன் உடனடியாக அடம்பன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மன்னா…
-
-
- 5 replies
- 475 views
- 1 follower
-
-
05 JUL, 2024 | 05:58 PM புதுடெல்லிக்கு வருமாறு இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெயசங்கரினால் தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தடைப்பட்டு இருக்கின்ற இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுக்களை மீண்டும் முன்னெடுத்து, இந்திய கடற்றொழிலாளர்கள் விவகாரத்தினை தீர்ப்பதற்கும் இந்திய வெளியுறவு அமைச்சர் இணக்கம் தெரிவித்திருப்பதாகவும் கூறியுள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இணைத் தலைவர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் ஆகியோர் தலைமையில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (05) நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மாவட்டத்தில் இடம்பெறும் ச…
-
-
- 6 replies
- 569 views
- 1 follower
-
-
06 JUL, 2024 | 12:46 PM வீரமுனை கிராமத்துக்கான நுழைவாயில் வரவேற்பு வளைவு அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மீண்டும் எதிர்வரும் ஒகஸ்ட் 21ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரமுனை கிராமத்துக்கான நுழைவாயிலில் வரவேற்பு வளைவு அமைப்பற்கான பணிகள் வீரமுனை மக்களினால் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கான தடை உத்தரவினை கடந்த 15ஆம் திகதி சம்மாந்துறை பொலிஸார் நீதிமன்றில் பெற்றிருந்தனர். இது தவிர, இரண்டாவது முறையாக சம்மாந்துறை பிரதேச சபையினால் சில தினங்களுக்கு முன்னர் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கு நேற்று …
-
- 0 replies
- 234 views
- 1 follower
-
-
தேர்தல்களின் போது விரலில் மை பூசும் முறை இனி அவசியமில்லை என ஆசிய தேர்தல் கண்காணிப்பு வலையமைப்பின் தலைவரும், Pafferal அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளருமான ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். தேர்தல் பணியில் 2010-ம் ஆண்டு முதல் ஆட்கள் பதிவு கணினி மயமாக்கப்பட்டு வருவதால், ஒருவர் இரு இடங்களில் வாக்களித்ததாகப் பதிவு செய்தால் அவர் அதிகாரிகளின் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுவார் என்றும் அதன்படி, விரலில் மை பூச வேண்டிய அவசியம் இல்லை அதற்கான செலவை குறைக்க வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஒரு வாக்காளர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்களிப்பதை தடுப்பதற்காகவே விரல் வண்ணம் பயன்படுத்தப்பட்டது தனி நபர்களின் பதிவை கணினிமயமாக்கி, இந்த தொழில்நுட்பத்தின் மூலம் ஒர…
-
-
- 3 replies
- 437 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 29 JUN, 2024 | 02:04 PM நாட்டுக்கு வருகை தந்த இஸ்ரேலிய பெண் சுற்றுலாப் பயணி ஒருவர் திருகோணமலையில் காணாமல் போயுள்ளார். இது தொடர்பில் பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாட்டுக்கு அமைய திருகோணமலை உப்புவெளி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கடந்த 22ஆம் திகதி நாட்டுக்கு வருகை தந்த 25 வயதுடைய டேமர் எமிடாய் (Tamar Amitai) என்ற இஸ்ரேலிய பெண் சுற்றுலாப் பயணியே திருகோணமலைக்கு சென்றிருந்த நிலையில் காணாமல் போயுள்ளார். அவர் இணையவழி ஊடாக திருகோணமலையிலுள்ள ஹோட்டலில் அறை ஒன்றை முன்பதிவு செய்து, 22ஆம் திகதி அங்கு சென்று தங்கியுள்ளார். இந்நிலையில், அவர் 26ஆம் திகதி முதல் காணாமல்…
-
- 2 replies
- 450 views
- 1 follower
-