ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143516 topics in this forum
-
காணாமல் போனவர்கள் கண்டுபிடிக்கப்படாவிட்டால், அவர்களின் உறவினர்களுக்கு இழப்பீடு வழங்குமாறு அரசாங்கத்திடம் பரிந்துரை செய்யவுள்ளதாக வடக்கு கிழக்குப் பிரதேசத்தில் காணாமல்போனவர்கள் தொடர்பாக ஆராய்ந்து வரும் ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 'காணாமல்போனவர்களை கண்டுபிடிக்க முடியாமல் போனால், அவர்களின் உறவினர்களுக்கு, அவர்களில் தங்கி வாழ்ந்தவர்களுக்கு இழப்பீடு கொடுக்குமாறு நாங்கள் அரசாங்கத்திடம் பரிந்துரை செய்வோம். சிலர் தகவல்களை வழங்க அச்சப்படுவதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. அப்படியான அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டால் எங்களிடம் மக்களை முறைப்பாடு செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றோம்' என்றார் ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம. http://www.seithy.com/breifNews.php?newsID=9903…
-
- 0 replies
- 207 views
-
-
துக்ளக் கேள்வி பதில்கள் கே : விடுதலைப் புலிகள் குறித்த உங்கள் கருத்து ஒருபுறம் இருக்கட்டும்! இலங்கையில் ராணுவத்தினரால் போர்க் குற்றம் நடந்ததா, இல்லையா - உண்மையைக் கூறுங்கள்? ப : இலங்கையில் நடந்தது போர் அல்ல; உள்நாட்டுக் கலகங்களை ஒடுக்க அரசு முனைந்தபோது அரசின் படைகளுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதல். இதில் தீவிரவாதிகள் சிவிலியன்களைக் கேடயமாகப் பயன்படுத்தியதாலும், ஆஸ்பத்திரி போன்ற இடங்களில் புகுந்து கொண்டதாலும், பலத்த சிவிலியன் உயிரிழப்பு நேர்ந்தது. இது தவிர்க்கக் கூடியது அல்ல. ஆனால் இதில் சேராமல், வேண்டுமென்றே ராணுவத்தினர் சிவிலியன்களைக் குறி வைத்துத் தாக்கியிருந்தால் - அது மனித உரிமை மீறல்; விசாரணைக்கும் நடவடிக்கைக்கும் உரியது. கே : இலங்கை வடக்கு மாகாண மு…
-
- 16 replies
- 2k views
-
-
மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் மக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வாவின் இரட்டை நிலைப்பாட்டைக் கண்டு இந்தியத் தூதரக அதிகாரிகள் ஆத்திரமடைந்துள்ளனர். கொழும்பிலுள்ள சீனத் தூதரகத்திடம் இரகசியமாக மூன்று லட்சம் அமெரிக்க டொலர்கள் பெற்றுக்கொண்டதை வேவுபார்த்துள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் மக்கள் தொடர்பு அதிகாரியை துரத்தியடித்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது; மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் மக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வா, கொழும்பு 'பார்க்' வீதியில் அதிசொகுசு வீடொன்றை நிர்மாணித்து வருகிறார். இதற்காக சீனத் தூதரகத்தில் இருந்து 3 லட்சம் அமெரிக்க டொலர்களை நன்கொடையாக பெற்றுக்கொண்டுள்ளார். இந்த பணத்தில் வீட்டின் நிர்மாணப் பணிகளுக…
-
- 4 replies
- 1.2k views
-
-
ஜெர்மனியினில் வசித்து வரும் புலம்பெயர் சொந்தங்களான சிவகுமார் - பேரின்பவதனி தம்பதியினர் தமது 50 ஆவது பிறந்த தினத்தினை வன்னியினில் யுத்த அவலங்களுடன் வாழ்ந்த குடும்பமொன்றிற்கு கைகொடுத்து உதவியுள்ளனர் . . கால்கள் இரண்டும் செயலிழந்த நிலையினில் தள்ளுவண்டில் மூலமே தமது வாழ்வை தொடரும் இம்முன்னாள் போராளிக்கு கைகொடுக்கும் வகையினில் அவர்கள் தமது அன்பளிப்பினை ஹெல்பிங் ஹேட்ஸ் அமைப்பினூடாக வழங்கியிருந்தனர் . அவ்வுதவியினை பொறுப்பேற்று கைகளினில் சேர்ப்பித்திருந்தார் வலி . வடக்கு மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு குழுவின் தலைவரான ச . சஜீவன் . தமது பிறந்த நாளிற்கென நட்சத்திரவிடுதிகளினில் தண்ணீராக அள்ளிக்கொட்டும் தாயகம் மற்றும் புலம்பெயர் சொந்தங்களிற்கு இதுவோர் நல்லுதாரணம் .…
-
- 2 replies
- 1.1k views
-
-
ராஜபக்ஷ ஆட்சியாளர்கள் ராஜதந்திர ரீதியிலான செயற்பாடுகளை புறக்கணித்து விட்டு, தொடர்ந்தும் முரண்டுபிடிக்கும் வகையில் செயற்பட்டு வருவதால், இலங்கை எதிராக பொருளாதார தடைகளை விதிப்பது தொடர்பான முனைப்புகளை அமெரிக்க மேற்கொண்டு வருவதாக தெரியவருகிறது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் அளவில் இலங்கைக்கு எதிரான இந்த பொருளாதார தடைகளை ஏற்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகளில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளதாக ராஜதந்திர வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையின் இறுதிக்கட்டப் போரில் இடம்பெற்றதாக கூறப்படும் போர் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச நாடுகள் இலங்கை மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றன. இதனை விட இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் விசாரணைகளை ந…
-
- 2 replies
- 504 views
-
-
சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு திருகோணமலை பஸ் நிலையத்துக்கு முன்பாக காணாமல் போனோரது உறவினர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது இனந்தெரியாதோரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. காணாமல்போனோரை தேடியறியும் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த ஆர்ப்பாட்டத்தின்போது முகத்தை மறைத்துக்கொண்டு வந்த சிலர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். "யுத்தத்தின்போது எமக்கும் இழப்புகள் ஏற்பட்டன. ஏன் அதைப்பற்றி நீங்கள் கதைக்க மறுக்கிறீர்கள்? உங்களது ஆர்ப்பாட்டத்தை யாழ்ப்பாணத்தில் நடத்துங்கள். இது எங்களது இடம். இங்கு ஆர்ப்பாட்டம் நடத்த விடமாட்டோம்" என்று கூறி தாக்குதல் நடத்தியதுடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்த பதாகைகள் மற்றும் காணாமல்போனோரின் புகைப்படங்களையும் கிழித்து வீசியுள்ளனர். …
-
- 3 replies
- 461 views
-
-
ஒரு நாள் வீட்டின் கதவு தட்டும் ஓசை கேட்டது. கதவை திறந்ததும், முன்பின் தெரியாத இரண்டு பேர் நின்றிருந்தார்கள். அவர்கள் தங்களை எனது கணவரின் நண்பர்கள் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்கள். உள்ளே அழைத்து உட்கார வைத்த போது அவர்களை என்னை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றனர். நான் கத்தியதால் தப்பியோடினர். ஆனால், போவதற்கு முன்பு மீண்டும் வருவோம் என்று மிரட்டியபடியே சென்றனர். இந்த சம்பவத்தை அடுத்து, பயத்துடனும், எந்த ஆதரவும் இல்லாத நிர்கதியான தமிழ் பெண் என்ன செய்வது என்று தெரியாமல், தனது இரண்டு பிள்ளைகளை கூட்டிக் கொண்டு, தனது உடமைகளை எடுத்துக் கொண்டு போர் நடந்த வடக்குப் பகுதிக்கு சென்றுவிட்டாள். இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் எதிரான போர் வேண்டுமானால் ஓய்ந்திருக்கலாம…
-
- 1 reply
- 720 views
-
-
கடந்த கால போர் நடவடிக்கைகள் காரணமாக இடம்பெயர்ந்து தற்போது சொந்தக் கிராமத்தில் குடியமர்ந்த பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட மாசார் கிராமத்தில் குடியமர்ந்துள்ள சில குடும்பங்கள் தங்களுக்கு நிரந்தர வீடுகள் அமைத்துத்தரப்படாத நிலையில் மழை ஆரம்பித்துள்ளதால் பிள்ளைகளுடன் சிறுகுடிசைகளிலேயே தங்கியிருப்பதாக கவலை தெரிவிக்கின்றனர் . இப் பகுதியில் மீளக்குடியமர்ந்த குடும்பங்களில் சிலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகள் கிடைத்துள்ளன . வன்னிக்கு இடம்பெயர்ந்து செல்லாமல் குடாநாட்டினுள் தங்கியிருந்தவர்களுக்கும் நிரந்தர வீடுகள் கிடைத்துள்ளன . நிரந்தர வீடுகள் கிடைத்து வீடுகள் கட்டி முடித்தவர்கள் வேறு இடத்தில் தங்கியிருப்பதால் சில வீடுகள் பூட்டப்பட்ட நிலையிலும் உள்ளன . இந்த நில…
-
- 0 replies
- 366 views
-
-
ஊழல் - மோசடிமிக்க இவ்வரசின் சர்வாதிகார போக்கு ஆட்சிக்கு ஐக்கிய தேசியக் கட்சியும் மக்களுமே பொறுப்பு கூற வேண்டும் . தற்போது உலகில் மோசடி மிக்க ஆட்சிக்கெதிராக புரட்சிகள் நடைபெற்று வரும் நிலையில் இலங்கையில் அவ்வாறான நிலைமை ஏற்படாமை வேதனைக்குரியது என ஐக்கிய தேசிய பிக்குகள் முன்னணியின் செயலாளர் திப்பிலியாவே பாலித தேரர் தெரிவித்தார் . மோசடிமிக்க ஆட்சிக்கு எதிராக போராட துணிந்த இலங்கையர்கள் சர்வாதிகாரம் மிக்க குடும்ப ஆட்சிக்கெதிராக பொறுமையாக இருப்பது வேதனைக்குரிய விடயமாகும் . ஆகையால் இவ்வாட்சிக்கெதிராக இலங்கையர்கள் போராட முன்வர வேண்டுமெனவும் அவர் கோரினார் . ஸ்ரீகொத்தாவில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இக்கருத்தை வெளியிட்டார் . இது தொடர்ப…
-
- 0 replies
- 458 views
-
-
மகிந்த ராஜபக்ஷவின் சகோதரரும், பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பசில் ராஜபக்ஷ புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் தற்போது அமெரிக்காவின் Houston மருத்துவனையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தெரியவருகிறது. இதனால், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மூத்த புதல்வரும், ஜனாதிபதியின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷவும் திருப்தியடைந்துள்ளதாக அரசின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2014ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் வரையில் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் வெளிநாடு செல்லக் கூடாது என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். எனினும், பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதம் நிறைவடைந்த அன்றைய தினம் இரவே, அமைச்சர் பசில் ர…
-
- 2 replies
- 596 views
-
-
கத்தோலிக்க திருச்சபை கொழும்பு போராயர் வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் செய்ததை செய்வதாக அமைச்சர் விமல் வீரவன்ஸ குற்றம் சுமத்தியுள்ளார். இலங்கையின் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் பாரம்பரிய வாழ்விடபூமி என மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்திருந்தமை தொடர்பில் வீரவன்ஸ கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்; தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொடுத்த விஷத்தை கொழும்பு பேராயர் பருக்க முயற்சித்து வருகிறார். பேராயர்கள் நாட்டின் நீண்ட காலமாக பொது சமூகத்துடன் வாழ்ந்து வரும் சமய தலைவர்கள் என்ற வகையில் பாரம்பரிய வாழ்விடபூமி என்ற எண்ணக்கரு விஷமானது என்பதை தாழ்மையுடன் கூறிக்கொள்ள விரும்ப…
-
- 4 replies
- 539 views
-
-
தேசப்பற்றாளர் என தன்னை அடையாளப்படுத்தி அரசியல் நடத்திவரும் தேசிய சுதந்திர முன்னிணயின் தலைவரும், வீடமைப்புத்துறை அமைச்சருமான விமல் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்ச, 150 மில்லியன் ரூபா பணத்தை கசினோ சூதாட்ட மையத்தில் முதலீடு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வஜிரா ஜானகி நெத்திகுமார என்ற பெண் ஊடாகவே இந்த முதலீடு செய்யப்பட்டுள்ளது. கொழும்பு சலாகா கசினோ மையத்தில் இந்த பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை எவ்விதவொரு தொழிலையும் செய்யாத, பெற்றோரிடம் எந்தவொரு சொத்தும் இல்லாத சசி வீரவன்ச, இவ்வளவு பாரிய தொகை பணத்தை எவ்வாறு, எங்கிருந்து, முதலீடு செய்தார் என்பது தற்போது தெற்கு அரசியலின் ஆளும் கட்சிக்குள் முணுமுணுக்கப்படும் கேள்வியாகும். எனினும், சசி வீரவன்ச, வஜிர ஜானக…
-
- 1 reply
- 679 views
-
-
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்ட மக்கள், மஹிந்த ராஜபக்ச அவர்களை மீண்டும் ஜனாதிபதியாக்குவதன் மூலம் இம்மாவட்டத்தினை மேலும் வளமான மாவட்டமாக மாற்றமுயுடிம் என மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பகுதியில் அமைந்துள்ள நவகிரி நகர் கிராமத்திற்ககு உத்தியோகபூர்வமாக மின்சாரம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்; எமது நாட்டிலே பலமான எதிர்க்கட்சி ஒன்று இல்லை. எதிர்க் கட்சியாகிய ஐக்கிய தேசியக் கட்சி பல வழிகழிலும் சிறந்த தலைமைத்துவமின்றி பலமிழந்து நிற்கின்றது. இதனால் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் ஜனாதிபதியாக வரமுடியாத நிலை இன்று க…
-
- 0 replies
- 535 views
-
-
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை விரைவாக செயற்படுத்தி நாட்டின் நல்லிணக்கத்திற்காக சர்வதேசத்துடன் இணைந்து செயற்படுவதற்கு இலங்கை அரசாங்கதிற்கு காலம் வந்து விட்டதாக இலங்கைக்கான ஜப்பானின் விசேட தூதுவர் யசூஷி அகாஷி தெரிவித்தார். கொழும்பிலுள்ள ஜப்பான் தூதுவரின் இல்லத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கம் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை காலம் கடத்தாது விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும். அதுவே நாட்டின் நீண்ட தூர இன ஐக்கியத்திற்கு சிறந்ததாக அமையும். இதனையே ஏனைய நாடுகளைப்போன்…
-
- 0 replies
- 299 views
-
-
கல்முனையில் தனியான தமிழ் பிரதேச செயலகம் ஒன்றை அமைக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முயற்சி தோல்வியடைந்துள்ளது.கல்முனையில் தமிழ் மக்களுக்கு என தனியான பிரதேச செயலகம் ஒன்றை அமைக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சித்தது. கல்முனை பிரதேச செயலகத்திற்கு மேலதிகமாக, உப பிரதேச செயலகமொன்று இயங்கி வருகின்றது. இந்த உப பிரதேச செயலகத்தை தமிழ் பிரதேச செயலகமாக மாற்றுவதற்கு கூட்டமைப்பு முயற்சித்தது. எனினும், இந்த முயற்சிக்கு ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். இன அடிப்படையில் பிரதேச செயலகங்களை நிறுவுவது ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.அமைச்சர் ஹக்கீமின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து புதிதாக பிரதேச செயலகம் அமை…
-
- 2 replies
- 426 views
-
-
இலங்கையில் நடந்த இறுதி கட்டப் போரை நிறுத்த, மத்திய அரசு முழு முயற்சிகளும் எடுத்தது. ஆனால், விடுதலைப் புலிகளும், இலங்கை அரசும் அதற்கு ஒத்து வராததால், போரை நிறுத்த முடியாமல், இனப்படுகொலை நடந்தது,'' என, மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் கூறினார்."இலங்கை தமிழர் வாழ்வுரிமையும், இந்திய அரசின் நிலையும்' என்ற கருத்தரங்கம் நேற்று சென்னையில் நடந்தது.இதில், சிதம்பரம் பேசியதாவது: இலங்கை பிரச்சினை குறித்து நாடாளுமன்றத்தில் பேசவேண்டும். இல்லையேல் தமிழகத்தில், பொதுக்கூட்டங்களில் பேச வேண்டும். நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த எதிர்க்கட்சிகள் அனுமதிப்பதில்லை. அதனால், அங்கு பேச முடிவதில்லை. தமிழகத்தில், பொதுக்கூட்டங்களை நடத்த வேண்டும். ஆனால், பொதுக்கூட்டங்களை, காங்கிரஸ் நடத்துவதி…
-
- 98 replies
- 5.2k views
-
-
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை சிறிலங்கா அரசாங்கம் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கோரும் தீர்மானத்தை, ஐரோப்பிய நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது சிறிலங்கா அரசாங்கத்துக்கு பெரும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து, ஐரோப்பிய நாடாளுமன்றத்துக்கு கண்டனம் தெரிவிக்க சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக, சிறிலங்காவின் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். “நல்லிணக்க ஆணைக்குழுவின் எந்த பரிந்துரைகளை எப்போது நடைமுறைப்படுத்துவது என்று சிறிலங்கா அரசாங்கம் தான் முடிவு செய்ய முடியும். வேறு எவருக்காகவேனும் நல்லிணக்க ஆணைக்குழு நியமிக்கப்படவில்லை. எமது மக்களின் சொந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவே சிறிலங்கா அதிபர் அந்த ஆணைக்குழுவை நியமித்தார்…
-
- 3 replies
- 652 views
-
-
சிறிலங்கா அரசாங்கமானது நாட்டில் மீளிணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்கும், தமிழ்ப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது மேற்கொள்ளப்பட்ட மீறல்கள் தொடர்பிலும் பதிலளிக்கத் தவறினால் இந்த அரசாங்கத்தின் மீது அனைத்துலகத் தலையீடு இடம்பெறுவது தவிர்க்க முடியாது என புதனன்று சிறிலங்கா கத்தோலிக்கத் திருச்சபை எச்சரித்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு அரசியற் தீர்வொன்றை எட்டுமாறு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மற்றும் பிரதான தமிழ்க்கட்சி மீது கொழும்பு கத்தோலிக்கத் திருச்சபையின் கர்தினால் மல்கம் றஞ்சித் [Malcolm Ranjith, the archbishop of Colombo] வலியுறுத்தியுள்ளார். அரசியற் தீர்வொன்று எட்டப்படாவிட்டால் அனைத்துலக விசாரணைக்கு முகங்கொடுக்க வேண்டிய ஆபத்து ஏற்படும் எனவும் கர்தினால் மல…
-
- 1 reply
- 458 views
-
-
அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரிக் குடியேறிய சிறிலங்காப் பெண்மணியான றஞ்சினி தொடர்பில் அவுஸ்திரேலிய பாதுகாப்பு புலனாய்வு அமைப்பால் வழங்கப்பட்ட எதிர்மறையான பாதுகாப்பு மதிப்பீடுகளை அடிப்படையாகக் கொண்டு அவுஸ்திரேலிய குடிவரவுத் திணைக்களம் இந்த வழக்கை மிகவும் பிழையான முறையில் கையாண்டுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சிறிலங்காவைச் சேர்ந்த றஞ்சினி என்கின்ற இந்தப் பெண் 2010ல் படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்திருந்தார். இந்தப் பெண்ணுக்கு அவுஸ்திரேலியா தனது நாட்டின் அகதி நிலையை வழங்கிய போது இவர் மெல்பேர்னில் வசித்தார். இவர் அப்போது கர்ப்பிணியாக இருந்தார். இந்நிலையில் றஞ்சினி தொடர்பான பாதுகாப்பு மதிப்பீடுகள் நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளதாகக் காரணங…
-
- 0 replies
- 379 views
-
-
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை சிறிலங்கா அரசாங்கம் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கோரும் தீர்மானம், ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஸ்ராஸ்பேர்க்கில் நேற்று நடந்த ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றக் கூட்டத்திலேயே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, ஐரோப்பிய நாடாளுமன்றம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், அமைதியை மீளக் கொண்டு வந்து, வடக்கு மாகாணத்தில் முதல்முறையாக தேர்தலை நடத்தியிருப்பதை ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரவேற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், முன்னர் போர் நடந்த பகுதிகளில் தொடர்ந்தும், கணிசமானளவு அரசாங்க இராணுவப் படைகள் நிலைகொண்டிருப்பது குறித்து அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். அத்துடன், அங்கு இன…
-
- 0 replies
- 304 views
-
-
1987 இல் ஆட்சியிலிருந்த அரசு ஒழுங்கான வெளிநாட்டு கொள்கையை கடைப்பிடிக்காத நிலையிலேயே இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்தானது. எனினும் ராஜீவ் காந்திக்கும் ஜே.ஆர். ஜயவர்த்தனவுக்கும் இடையே கைச்சாத்தான அந்த ஒப்பந்தம் இன்றும் செல்லுபடியாகிறது என வெளிவிவகார பிரதி அமைச்சர் நியோமால் பெரேரா நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். விஜித பேருகொட எம்.பி. கேட்ட வாய்மொழி மூலமான விடைக்கான கேள்விக்கு பதிலளித்துப் பேசும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த ஒப்பந்தத்தின் மூலம் இரு நாடுகளும் பாதிக்கப்பட்டது மட்டுமல்ல இந்திய இராணுவம் இலங்கைக்குள் வருவதற்கும் வழிவகுத்தது.அதேபோன்று இந்திய இராணுவத்தினர் அதிகளவில் கொல்லப்பட்டது இலங்கையிலேயே. 1987 ஆம் ஆண்டு ஜுலை 29ம் திகதி இந்த ஒப…
-
- 0 replies
- 435 views
-
-
தமிழ்லீடர் இணையத்துக்கான நேர்காணலின்போது தமிழீழத் தேசியத்தலைவர் அவர்கள் தொடர்பிலும் தமிழீழ விடுதலைப் போராட்டம் தொடர்பிலும் கருத்துத் தெரிவிக்க முடியாது கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தடுமாறினார். அவுஸ்திரேலியாவிற்கான பயணத்தினை மேற்கொண்டிருந்த கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவை தமிழ்லீடர் இணையக்குழுமத்தினர் நேர்காணல் ஒன்றிற்க்காக சந்தித்திருந்தனர். அதன் போது கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நாடாளுமன்றில் தமிழீழத் தேசியத்தலைவர் அவர்கள் தொடர்பிலும் தமிழீழ விடுதலைப் போராட்டம் தொடர்பிலும் ஆற்றிய உரை தொடர்பில் தலைவர் சம்பந்தன் தெரிவித்த கருத்துத் தொடர்பில் மாவை சேனாதிராஜாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது, அதற்…
-
- 3 replies
- 998 views
-
-
விடுதலைப் புலிகளை கொன்றமைக்கே சம்பந்தன் அரசாங்கத்தை பழிவாங்க நினைக்கின்றார். எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத் தொடரில் இலங்கை அரசுக்கு தூக்குக் கயிற்றினை மாட்டவே கூட்டமைப்பினர் செயற்படுகின்றனர் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். வெகுவிரைவில் வடக்கில் சிங்களக் கொடியினை வீழ்த்தி தமிழீழக் கொடியினை பறக்க விடும் முயற்சியிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சர்வதேசத்துடன் இணைந்து செயற்படுகின்றனர். அரசாங்கம் இனியாவது பிரிவினைவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து சிங்கள நாட்டினைக் காப்பாற்ற வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். பத்தரமுல்லையில் தேசிய சுதந்திர முன்னணியினால் இன்று வியாழக்கிழமை ஏற்பாடு…
-
- 9 replies
- 1.1k views
-
-
வடக்கு மாகாண சபை தமது முதலாவது வரவு செலவுத் திட்டத்தில், சில புதிய திணைக்களங்களை உருவாக்க முயன்றுள்ளதாகவும், இது அரசியலமைப்புக்கு விரோதமானது என்றும் வடக்கு மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி எச்சரித்துள்ளார். இது தொடர்பாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றிடம் கருத்து வெளியிட்டுள்ள அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் வடக்கு மாகாணசபை உறுப்பினர்களும், நாட்டின் அரசியலமைப்பையும், தேசிய கொள்கையையும் மதித்து செயற்பட வேண்டும். வடக்கு மாகாணசபை தமது முதலாவது வரவு செலவுத் திட்டத்தில் புதிய திணைக்களங்களை உருவாக்கும் திட்டங்களை முன்மொழிந்துள்ளமை அரசியலமைப்புக்கு எதிரானது. வடக்கு மாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டு சட்டமூலத்துக்கு நான் ஒப்புதல் வழங்கியிருந்தேன். அத்துடன், அரசியலமைப்புக்கு…
-
- 1 reply
- 783 views
-
-
வடக்கிலுள்ள தமிழ் மக்கள் கொழும்பில் தங்கியிருப்பது போல் சிங்கள மக்களும் யாழ்ப்பாணத்தில் குடியேற முடியாதா?. முடியாதாயின் சிங்கள மக்களை நாங்கள் எங்கே குடியேற்றுவது என வட மாகாண சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர் செனவிரத்ன எ.டி.தர்மபால கேள்வி எழுப்பினார். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு இன்று செவ்வாய்க்கிழமை கைதடியில் அமைந்துள்ள வட மாகாண சபைக் கட்டிடத்தில் நடைபெற்றது. வலி. வடக்கில் இடம்பெறுகின்ற வீடழிப்பினைக் கண்டித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் கோசங்களை எழும்பியுள்ளனர். இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே செனவிரத்ன எ.டி.தர்மபால மேற்கண்டவாறு கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து உரையாற்றிய வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், யாழ்ப்பாணத்திலுள…
-
- 16 replies
- 1.6k views
-