ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142803 topics in this forum
-
பொன்சேகாவின் அறிவிப்பு தனிப்பட்டதே எந்தவொரு படையினரையும் அரசு சிறைக்குள் தள்ளாது; சபை முதல்வர் திட்டவட்டம் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜெகத் ஜயசூரிய தொடர்பில் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா வெளியிட்டுள்ள கருத்து அரசின் நிலைப்பாடு அல்ல. எந்தவொரு படைத் தளபதியையும் கூட்டு அரசு சிறையில் அடைக்காது என்றும் சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஸ்மன் கிரியெல்ல நேற்று நடாளுமன்றில் தெரிவித்தார். “முன்னாள் இராணுவத் தளபதியும், பிரேசில் உள்ளிட்ட இலத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு தூதுவராகப் பணியாற்றியவருமான ஜெனரல் ஜெகத் ஜயசூரியவுக்கு எதிராகப் போர்க்குற்ற வழக்கு தாக்கல…
-
- 0 replies
- 390 views
-
-
(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) 'பறிக்காதே பறிக்காதே காணிகளை பறிக்காதே ' என சபைக்குள் கோஷல் எழுப்பியும், பதாகைகளை ஏந்தியவாறும் வடக்கு,கிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் பறிக்கப்படுவதற்கு எதிராக தமிழ் தேசியக்கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் சபைக்குள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாராளுமன்றத்தில்இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற வன ஜீவராசிகள் சட்ட ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தின் போதே தமிழ் தேசியக்கூட்டமைப்பு எம்.பி.க்கள் சபைக்குள் பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவாதத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான சார்ள்ஸ் நிர்மலநாதன் உரையாற்றிய பின்னரே பதாகைகளுடன் எழுந்த தமிழ் தேசியக்கூட்…
-
- 1 reply
- 304 views
-
-
குடியேற்றவாசிகளுக்கு பிரஜாவுரிமை வழங்கும் பரீட்சையின் ஒரு பகுதியாக வரிசையில் நிற்பது எப்படி என்பதைக் கற்பிப்பதற்குப் பிரிட்டன் திட்டமிடுகிறது.இத்திட்டத்தை அந்நாட்டின் சிரேஷ்ட அமைச்சரே வெளியிட்டிருக்கிறார். பஸ்களில் ஏறுவது முதல் பாண்துண்டுகளைப் பெற்றுக் கொள்வது வரை ஒவ்வொன்றுக்குமே வரிசையாக நிற்பது எவ்வாறு என்பதைப் பிரஜாவுரிமைக்கு விண்ணப்பிக்கும் வெளிநாட்டவர்கள் கற்றுக்கொள்ளவேண்டும்."இந்தத் திட்டம் பகிடியான விடயமாக தோன்றினாலும் இதில் தாங்கள் தீவிரமாக இருப்பதாக அமைச்சர்கள் வலியுறுத்திக் கருத்துத் தெரிவித்திருக்கின்றனர். பிரிட்டிஷ் வாழ்க்கை முறையை அதிகளவுக்குக் குடியேற்றவாசிகள் உள்வாங்கிக் கொள்ளவேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றனர் என்று ரெலிகிராப் பத்திரிகை குறிப்பிட்…
-
- 4 replies
- 1k views
-
-
Published on 2022-03-05 18:46:28 கிளிநொச்சி மாவட்டத்தில் கடல் உணவுகளின் விலைகள் மிக மோசமாக அதிகரித்து காணப்படுகின்றமையால் நுகர்வோர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது நாட்டில் நிலவுகின்ற எரிபொருள் பற்றாக்குறை மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக கடல் உணவுகளின் விலைகள் இன்றைய தினம் சடுதியாக அதிகரித்த நிலையில் காணப்பட்டது. குறிப்பாக கிளிநொச்சி பொதுச்சந்தை பகுதியில் பெரிய மீன் வகைகள் ஒரு கிலோ 800 ரூபா முதல் 1200 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டது. அத்துடன் இறால் கணவாய் ஆகியனவும் 1200 ரூபாவிற்கு மேல் விற்பனை செய்யப்பட்டது. அதேபோல சிறிய வகை …
-
- 11 replies
- 485 views
-
-
'கிழக்கில் முதலிடுவோம்' எனும் தொனிப்பொருளிலான மாநாடொன்று எதிர்வரும் வெள்ளிக் கிழமை காலை 8.30 மணிக்கு கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் இடம்பெறவுள்ளது. கிழக்கு மாகாண அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தலைமையில் இடம்பெறவுள்ள இந்த மாநாட்டில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, அமைச்சர் லக்ஷ்மன் யாப்ப, கிழக்கு மாகாண ஆளுநர் ரியல் அட்மிரல் மொஹான் விஜேயவிக்ரம மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் உள்ளிட்ட பலர் பங்கேற்கவுள்ளனர். இந்த நிகழ்வில் சுமார் 300 இற்கும் மேற்பட்ட வெளிநாட்டு மற்றும் உள்நாட்: முதலீட்டாளர்கள் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகின்றது.
-
- 0 replies
- 543 views
-
-
பார்த்திபன் இராசையா என்னும் இயற்பெயர்கொண்ட திலீபன், நவம்பர் 27,1963-ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் உள்ள ஊரெழு கிராமத்தில் பிறந்தவர். இவர், விடுதலைப்புலிகள் இயக்கத்தில் உறுப்பினராக இருந்தவர். பிராந்திய அரசியல்துறை பொறுப்பாளராகவும் இருந்தவர். இவர், கடந்த 1987-ம் ஆண்டு, இலங்கையில் மையம்கொண்டிருந்த இந்திய அமைதிப்படையினரிடம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் தொடங்கிய நாள் இன்று. பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு, இன்னமும் தடுப்புக்காவலில் அல்லது சிறைகளில் உள்ளோர் விடுவிக்கப்பட வேண்டும். புனர்வாழ்வு என்ற பெயரில் தமிழர் தாயகத்தில் நடத்தப்படும் சிங்களக் குடியேற்றங்கள், உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இடைக்கால அரசு நிறுவப்படும் வரை புனர்வாழ்வ…
-
- 0 replies
- 492 views
-
-
தன்னை முறையற்ற முறையில் பந்தை வீசுவதாகக் குற்றம் சாட்டியிருந்த அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் ஜோன் ஹொவார்டை தான் மன்னித்து விட்டதாகவும் எனினும் இந்தியக் துணைக் கண்டத்தைச் சேர்ந்தவர்களின் நன்மதிப்பை அவர் பெறுவது அவ்வளவு இலகுவானதல்ல என்றும் முத்தையா முரளிதரன் தெரிவித்திருக்கிறார். ஜோன் ஹொவார்ட் 2012ம் ஆண்டில் உலக கிறிக்கெற் சபைத் தலைவர் பதவியை பெற இருப்பது குறித்துக் கருத்துத் தெரிவித்த போதே முரளிதரன் இந்தக் கருத்தைத் தெரிவித்திருக்கிறார். முரளீதரன் பந்தை வீசியெறிவதாக அவுஸ்திரேலியாவில் வைத்து பல முறை அறிவிக்கப்பட்டிருந்ததும் அதைத் தொடர்ந்து 2004ம் ஆண்டில் முரளீதரன் அவுஸ்திரேலியத் தொடரைத் தவிர்த்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. SOURCE: http://eelamweb.com…
-
- 5 replies
- 1.2k views
-
-
விடுதலைப் புலிகளை அழித்தபோதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினையும் அரசாங்கம் தடை செய்திருக்க வேண்டும் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக்கூட்டமைப்பே அரசாங்கத்திற்கு அழுத்தங்களைக் கொடுக்கின்றது .அரசாங்கத்திற்கு பிரச்சினைகள் ஏற்படுமாயின் அது முழு நாட்டையும் பாதிக்கும். இதை அனைத்துக் கட்சிகளும் புரிந்துக்கொள்ள வேண்டும். ஜெனீவா அழுத்தங்களையும் நாட்டில் பிரிவினை வாதத்தினையும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பே ஏற்படுத்துகின்றது. சர்வதேச பிரச்சினைகளைத் தூண்டி இலங்கையில் தனித்தமிழ் ஈழத்தினை உருவாக்கவே சம்பந்தன் கூட்டணி முயற்சி செய்து வருகின்றது என அவர் குற்றஞ…
-
- 1 reply
- 322 views
-
-
சிறிலங்காவின் சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஸ்டிக்குமாறு யாழ்.மாவட்ட தமிழ் மக்கள் பேரவை தாயகத்திலும் தமிழகத்திலும் பன்னாடுகளிலும் உள்ள தமிழ் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. சிறிலங்காவின் சுதந்திர தினமானது சிங்கள மக்களுக்கு மட்டுமானது. தமிழ் மக்களுக்கு இதுவரை சுதந்திரம் கிடைக்கவில்லை. விரைவில் எங்களுக்கு சுதந்திரம் வழங்குவதற்கு பன்னாட்டு அரசுகள் ஆவன செய்யவேண்டும் என்று இன்றைய கரிநாள் மூலமாக அனைத்து தமிழ் மக்களும் வேண்டுகோள் விடுக்கவேண்டும் என்றும் யாழ்.குடாநாட்டு தமிழ் மக்கள் பேரவை வலியுறுத்தியுள்ளது. தமிழ் மக்களைக் கொன்றொழித்து அடிமைகொள்ளத் துடிக்கின்ற சிறிலங்காவின் சுதந்திர தினமாக இன்று செவ்வாய்க்கிழமையை தமிழ் மக்கள் கரிநாளாக அனுஸ்டிக்க வேண்டும். தாயகத்…
-
- 0 replies
- 246 views
-
-
புதிய அரசமைப்பு தமிழருக்கு வெற்றி சிங்களவர், முஸ்லிம்களுக்கு ஏமாற்றம் கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவரின் நிலைப்பாடு இது 1 வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தமிழ் மக்களுக்கு ஓரளவு வெற்றியாகவும் முஸ்லிம்களுக்கும், சிங்களவருக்கும் எந்த நன்மையையும் வழங்காமல் பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு கிழக்கு மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவரும், முஸ்லிம் உலமா கட்சியின் தலைவருமான முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது: இடைக்கால அறிக்கையில் வடக்கும் – க…
-
- 2 replies
- 654 views
-
-
சிரேஷ்ட அமைச்சர்கள் பலர் பதவிகளை துறந்து சுயாதீனமாக செயற்பட தீர்மானம் (லியோ நிரோஷ தர்ஷன்) அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடுகள் மற்றும் அவற்றை பெற்றுக்கொள்வதற்கு நீண்ட வரிசையில் காத்திருப்புகள் போன்ற நெருக்கடிகளினால் ஏற்பட்ட மக்கள் எதிர்ப்புகள் இன்று நாட்டை ஆபத்தான நிலைமைக்கு கொண்டு சென்றுள்ளது. இதன் விளைவாக அரசாங்கத்தின் அமைச்சர்களுக்கு பொது நிகழ்வுகளில் பங்குப்பற்றுவது என்பது சவால் மிக்கதாகியுள்ளதுடன் ராஜபக்ஷ குடும்பத்தினரை இலக்கு வைத்த எதிர்ப்பு நடவடிக்கைகளும் தீவிரம் கண்டு வருகின்றன. ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ ஆட்சி குறுகிய காலத்திற்குள் இவ்வாறானதொரு பாரிய மக்கள் எதிர்ப்பை சந்திக்கும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் என தெரிவித்த ஆளு…
-
- 2 replies
- 327 views
-
-
மனிதக் கழிவு பொருள்களிலிருந்து பசளை தயாரிக்கும் திட்டம் வட மாகாணத்தில் மன்னார் மாவட்டத்திலேயே முதன் முதலாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 67 மில்லியன் ரூபா செலவில் இதற்கான பணிகள் இடம்பெற்று வருகின்றன. மனிதக் கழிவு நீரைச் சுத்திகரிக்கும் இயந்திரத் தொகுதி குறித்த செயற்பாட்டுக்காக பயன்படுத்தப்படவுள்ளது. உலர்வலய நகர் நீர் மற்றும் சுகாதார செயற்திட்டத்துக்கு அமைவாக நடைபெற்று வரும் குறித்த வேலைகளுக்கான நிதியை இலங்கை அரசு மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி என்பன இணைந்து வழங்கி வருகின்றன. இதற்கென 67 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டு அபிவிருத்திப் பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகின்றன. கடந்த வருடம் ஜூலை மாதம் ஆரம்பிக்கப்பட்ட குறித்த அபிவிருத்திப் பணிகள் எதிர் வரும் ஜூலை மாத…
-
- 8 replies
- 707 views
-
-
மொட்டுக் கட்சியும், சேவல் கட்சியும்... மலையக மக்களை ஏமாற்றியுள்ளது – வேலு குமார் மொட்டுக்கட்சி நாட்டை ஏமாற்றியது. சேவல் கட்சி மலையக மக்களை ஏமாற்றியது. இன்று இருவரும் சேர்ந்து நாடகம் ஆடுகின்றனர்.” என தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ர உறுப்பினர் வேலு குமார் தெரிவித்தார். கண்டியில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ”நாட்டு மக்கள் விரக்த்தியில் உள்ளனர். தாம் ஏமாற்றப்பட்டோம் என்ற வேதனையில் உள்ளனர். மலையக மக்கள் அதையும் தாண்டிய கோபத்தில் உள்ளனர். எந்த ஒரு அரசாங்கத்திலும் இடம்பெறாத பாராபட்சம், இந்த அரசாங்கத்தில் மலையக மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. மொட்டு கட்…
-
- 0 replies
- 89 views
-
-
வடக்கு கிழக்கு மாகாண சபையை தமிழர்கள் கை தவற விட்டிருக்கிறார்கள் வரதராஜப்பெருமாள் குளோபல் தமிழ் செய்திகளுக்கு வழங்கிய விசேட செவ்வி 03 April 10 01:30 am (BST) தமிழர்களின் 50 வருடக் கனவை நிறைவேற்றியதாக குறிப்பிடும் முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண சபை முதலமைச்சரும் பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர முன்னணியின் தலைவருமான வரதராஜப்பெருமாள் ஈழப்பிரகடனத்தை செய்து விட்டு இந்தியாவில் தஞ்சமடைந்திருந்தவர். இந்திய நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்றபடி இயங்குகிறார் எனக் குற்றங்கள் சாட்டபட்டடிருந்த நிலையில் இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில் நாட்டுக்கு மீள திரும்பியிருக்கிறார். வடக்கு கிழக்கு மாகாண சபையை தமழர்கள் கை தவற விட்டிருக்கிறார்கள் என்று குறிப்பிடும் வரதராஜப்பெரு…
-
- 0 replies
- 674 views
-
-
சிறுவர் இல்லத்தில் இருப்பதாக எனது மகனின் படத்தைப் பத்திரிகையில் பார்த்தேன்: - கண்ணீர் மல்கிய தாயார் [sunday, 2014-02-16 19:18:02] இறுதி யுத்தத்தின்போது கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம், 18 ஆம் திகதியன்று காணாமல் போன தனது மகன் இரத்மலானை சிறுவர் இல்லத்தில் இருப்பதாக வீரகேசரி பத்திரிகையில் புகைப்படத்துடன் பிரசுரிக்கப்பட்ட பின்னரும் தனது மகனைக் காணவில்லை எனச் சுட்டிக்காட்டிய தாயார் ஒருவர் தனது மகனை மீட்டுத் தாருங்கள் என ஆணைக்குழுவினரிடம் நேற்று கண்ணீர் மல்க கோரினார். ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள காணாமல் போனோரைக் கண்டறிவதற்கான ஆணைக்குழுவின் விசாரணைகள் நேற்று சாவகச்சேரி பிரதேச செயலகத்தில் நடைபெற்றபோதே அவர் இவ…
-
- 3 replies
- 589 views
-
-
யாழில் 37 பேருக்கு பிணை, 10 பேருக்கு விளக்கமறியல் யாழ்ப்பாணம் - துன்னாலை பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர்அமைதியின்மையை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டிருந்த இளைஞர்களில் 37 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் சந்தேக நபர்களான 37 பேரும் முன்னிலைப்படத்தப்பட்ட போது அவர்களை பிணையில் செல்வதற்கு பதில் நீதவான் பெருமாள் சிவகுமார் அனுமதி வழங்கியுள்ளார். யாழ்ப்பாணம் - வடமராட்சி துன்னாலையில் கடந்த ஜுலை மாதம் 9 ஆம் திகதி சட்டவிரோதமாக மணல் ஏற்றிச்சென்ற குற்றச்சாட்டில் 24 வயதுடைய தினேஷ்குமார் என்ற இளைஞர் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்தார். இதனை…
-
- 0 replies
- 388 views
-
-
புத்தாண்டின் உண்மையான உரிமை... நமது குழந்தைகளுக்கே, உண்டு – புத்தாண்டு வாழ்த்து செய்தியில் ஜனாதிபதி! புத்தாண்டின் உண்மையான உரிமை நமது குழந்தைகளுக்கே உண்டு என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சிங்கள – தமிழ் புத்தாண்டினை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “தற்போது நிலவுகின்ற பொருளாதார மற்றும் உலகளாவிய நெருக்கடியான நிலையில், வரலாற்றில் மிகப் பெரிய சவாலை இலங்கையர்களாகிய நாம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. ஒற்றுமையுடனும், சரியான புரிந்துணர்வுடனும் நாம் அதனை வெற்றிகொள்ள வேண்டும். சவால்களுக்கு முகங்கொடுப்பதில் நீங்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் ஏராளம்…
-
- 0 replies
- 104 views
-
-
யாழிற்கான புகையிரத சேவை நாவற்குழி வரை மட்டுப்படுத்தல் கொழும்பு - காங்கேசன்துறை வரையான புகையிரத சேவை நாவற்குழி புகையிரத நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது. எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை கொழும்பு - காங்கேசன்துறை வரையான புகையிரத சேவை நாவற்குழி புகையிரத நிலையம் வரை மட்டுப்படுத்தப்படவுள்ளது. நாவற்குழியில் உள்ள புகையிரத பாலத்தில் உள்ள திருத்த வேலை காரணமாக இந்த சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த தினங்களில் புகையிரதத்திற்கு முற்பதிவு செய்த பயணிகள் விசேட பேரூந்து மூலம் நாவற்குழி புகையிரத நிலையத்திற்கு அழைத்து செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண புகையி…
-
- 0 replies
- 251 views
-
-
பிரச்சினைகளுக்கு... தீர்வு வழங்கப்படாவிட்டால், நாடு கலவரங்களை... சந்திக்க நேரிடும் – ரணில் எச்சரிக்கை ரம்புக்கனை அமைதியின்மையை அரசியலாக்க வேண்டாம் என அரசாங்கத்திடம் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார். பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படாவிட்டால் நாடு கலவரங்களை சந்திக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். ரம்புக்கனை பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பாக தற்போது இடம்பெறும் நாடாளுமன்ற அமரிவிலேயே அவர் இதனை தெரிவித்தார். நாட்டில் ஆபத்தான சூழ்நிலை ஏனைய பகுதிகளுக்கும் பரவாமல் தடுப்பதற்கு கட்சித் தலைவர்கள் இணைந்து கலந்துரையாட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். h…
-
- 0 replies
- 121 views
-
-
அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற வட்டுக்கோட்டை தீர்மானத்தை மீளுறுதிப்படுத்தும் தேர்தலின்போது 99.4 விழுக்காடு மக்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர். பன்னிரண்டாயிரத்திற்கும் அதிகமாக பதிவு செய்யப்பட்ட வாக்குகளில், அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் விபரம் வருமாறு: வாக்களித்தோர் எண்ணிக்கை 8274, தீர்மானத்திற்கு ஆதரவாக அளிக்கப்பட்ட வாக்குகள் 8156, தீர்மானத்திற்கு எதிராக அளிக்கப்பட்ட வாக்குகள் 51, நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 67. இம்முடிவுகள் இன்று நியுசவுத்வேல்ஸ் பாராளுமன்ற பத்திரிகையாளர் கூடத்தில் பிற்பகல் 2 மணியளவில் உள்ளுர் மற்றும் தமிழ் ஊடகவியலாளர்கள் முன்னிலையில், இத்தேர்தலினை நடாத்திய அவுஸ்திரேலிய சிபிஐ நிறுவன அதிகாரிகளினாலும் அவுஸ்திரேலியா தமிழர் பேரவை, அவுஸ்திரேலியா தமிழர் வாக்குக்கணிப்…
-
- 15 replies
- 1.2k views
-
-
‘காணிகளை விடுவிக்க 2 வருடங்கள் தேவை’ சின்னசாமி சிவநிரோஷினி வடக்கில், இராணுவம் கையகப்படுத்தியுள்ள பொதுமக்களின் காணிகளை இன்னும் இரண்டு வருடங்களில் முழுமையாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று(11) இடம்பெற்றது. இதில், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். “பாதுகாப்பு காரணங்களை ஆராய்ந்ததன் பின்னர் அவை பொது மக்களுக்கு வழங்கப்படும்” எனவும் அவர் மேலும் தெரிவித்தார். …
-
- 0 replies
- 191 views
-
-
இலங்கையில்... அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம், 1989இல் ஜேர்மன் ஒன்றிணைந்ததை நினைவு படுத்துகிறது – ஜேர்மன் தூதுவர் இலங்கையில் அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படும் அமைதியான போராட்டங்களால் தான் ஈர்க்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் ஹோல்கர் சீபர்ட் தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து அவர் தனது உத்தியோகபூர்வ ருவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். குறித்த பதிவில் ‘இலங்கையின் மதிப்புமிக்க மக்கள் தங்கள் கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமையை எவ்வளவு அமைதியான முறையில் பயன்படுத்துகிறார்கள் என்பதில் நான் ஈர்க்கப்பட்டேன். 1989இல் ஜேர்மன் ஒன்றிணைந்ததை அது நினைவுபடுத்துகிறது. சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினர…
-
- 0 replies
- 167 views
-
-
பளை பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட 20 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். இன்று காலை 7.30 க்கு யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி அரச ஊழியர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து வேகக் கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. வேகக் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கடைக்குள் உட்பிரவேசித்ததால் இரண்டு கடைகள் முற்றாகச் சேதமடைந்துள்ளன. மேலும் வீதியால் சென்று கொண்டிருந்த பாடசாலை மாணவர்கள் இருவர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் பளை மற்றும் யாழ்.போதனா வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர். (இரண்டாம் இணைப்பு) யாழிலிருந்து வவுனியா நோக்கி சென்றுகொண்டிருந்த பேரு…
-
- 1 reply
- 444 views
-
-
மருந்து பொருட்களின் விலை அதிகரிப்பு – வர்த்தமானியை, இரத்து செய்யுமாறு கோரிக்கை! அரசாங்கத்தினால் 60 வகையான மருந்து பொருட்களின் விலையை 40 சதவீதத்தினால் அதிகரிக்கும் வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்யுமாறு அரச மருந்தாளர் சங்கம் தெரிவித்துள்ளது. அநுராதபுரத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அதன் தலைவர் அஜித் திலகரத்ன இந்த விடயம் குறித்து குறிப்பிட்டுள்ளார். ஒளடத கட்டுப்பாட்டு அதிகார சபை மற்றும் மருந்தக நிறுவனங்களின் ஊடாக தற்போது மருந்து பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமையினால் மக்கள் வெகுவாக பாதிப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1279321
-
- 0 replies
- 124 views
-
-
தென்காசி: ஈழத்திலிருந்து ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு புகலிடம் கோரி செல்லும் தமிழர்களிடம் பெருமளவில் பணம் புழங்குவது குறித்து விசாரிக்க இன்டர்போல் உதவியை நாடவுள்ளதாம் ஐபியும், ராவும். கொல்லம் ரயில் நிலையம் அருகேயுள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த 37 ஈழத் தமிழர்கள் களை நேற்று முன்தினம் நள்ளிரவு போலீசார் கைது செய்து கொல்லம் காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிடிபட்ட 37 பேரில் முல்லைதீவை சேர்ந்த புரோக்கர் டென்னீசன் என்பவரை கேரள காவல்துறையினர் தனி இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் அவர் முல்லைதீவு மற்றும் இலங்கையின் பல்வேறு பகுதியைச் சேர்ந்தவர்களை இவரும் (டென்னீசன்) மற்றும் சிவா என்பவரும் படகுகள் மூலம் அழ…
-
- 1 reply
- 1.1k views
-