Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கையின் இறுதி மோதல்களின் போது இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியற்றது என்று இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரும், தற்போதைய தபால் சேவைகள் பிரதி அமைச்சருமான சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார். பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் இலங்கை உள்ளாக விசாரணைகளை முறையாக முன்னெடுக்காத பட்சத்தில் சர்வதேச விசாரணையொன்றுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டி வரும் என்று எச்சரித்திருப்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. அது சரியான முறையல்ல என்று அவர் கூறியுள்ளார். இலங்கை இறைமையும், சட்ட திட்டங்களும் உள்ள நாடு என்கிற வகையில் சர்வதேச விசாரணைகள் ஏதும் அவசியமற்றது என்று கேளராவின் திருவனந்தபுரத்தில் ஊடகவியலாளர்களிடம் பேச…

    • 10 replies
    • 617 views
  2. வலி வடக்கில் அதி உயர் பாதுகாப்பு வலயமென படைத்தரப்பால் பிரகடனப் படுத்தப்பட்ட பகுதியில் காங்கேசன்துறை நடேஸடவராக் கல்லூரியும் மூன்று இந்துக் கோவில்களும் கடந்த இரு நாட்களில் படையினரால் முற்றாக இடித்து அழிக்கப்பட்டுள்ளன. காங்கேசன்துறையில் இதுவரை மக்கள் மீள்குடியேற அனுமதிக்கப்படாத நிலையில் நேற்று புதன்கிழமை நடேஸ்வராக் கல்லூரி கட்டிடங்கள் முற்றாக இடித்து தரைமட்டமாக்கப் பட்டுள்ளதாக வலி வடக்கு மீள்குடியேற்றக் குழுவின் தலைவர் எஸ்.சஜீவன் தெரிவித்தார். வலி வடக்கில் அதி உயர் பாதுகாப்பு வலய பகதியை மக்களின் மீள் குடியேற்றத்திகாக விடுவிக்கக் கோரி உயர் நீதிமன்றில் 2000 க்கும் மேற்பட்டோர் அடிப்படை உரிமை மீறல் மனுத்தாக்கல் செய்து விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில் உயர் நீதி மன்ற நடைமுற…

    • 63 replies
    • 4.4k views
  3. தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளின் அழுத்தங்களால், சிறிலங்காவுடனான இராஜதந்திர உறவுகளில் இந்தியா இறுக்கமான நிலையை எதிர்கொண்டாலும், இருநாடுகளுக்கும் இடையிலான வழக்கமான பாதுகாப்பு உறவுகள் தொடர்ந்தும் சுமுகமாகத் தொடர்வதாக, நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்கள், “தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளின் அழுத்தங்களுக்கேற்ப, சிறிலங்காவுடனான அரசியல் இராஜதந்திரம் ஆட்டம் காணலாம். ஆனால், இத்தகைய காரணிகளால் இருநாட்டு இராணுவ உறவுகளைக் கட்டிப் போட முடியாது”என்று தெரிவித்துள்ளன. “அரசியல் விவகாரங்கள், இராணுவ உறவுகளில் பாதிப்பை ஏற்படுத்தாது. கொழும்புடனான பாதுகாப்பு உறவுகள் இந்தியாவின் பாதுகாப்புடன் தொடர்புடையது. …

  4. இந்திய நாடாளுமன்றத் தேர்தலும், ஈழத் தமிழினம் மீதான காங்கிரசின் காதலும்! இந்திய நாடாளுமன்றத் தேர்தல் காலம் நெருங்கிவரும் நிலையில், இந்திய ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும் தமிழீழக் காய்ச்சல் தொற்றிக்கொண்டுள்ளது. இதுவரை காலமும் தமிழீழ மக்கள் மீதான சிங்களத்தின் இன அழிப்பு நடவடிக்கைகளுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கிய காங்கிரஸ் கட்சி, சிறிலங்கா மீதான போர்க் குற்றச்சாட்டை நிராகரித்தே வந்துள்ளது. ஐ.நா.வின் மனித உரிமைகள் மன்றத்தில் அமெரிக்கா முதன்முறையாகக் கொண்டுவந்த இலங்கை மீதான குற்றப் பிரேரணையை தோற்கடிப்பதற்கான அத்தனை முயற்சிகளையும் மேற்கொண்டது. அது இயலாத நிலையில், அதை நீர்த்துப் போகச் செய்து அதனை ஆதரித்தது. இந்த வருட மே மாதத்தில் அமெரிக்கா முன்மொழிந்த சிறிலங்கா மீதான குற்ற…

  5. இலங்கையில் போர்க்கால இழப்புக்கள் குறித்த பதிவுகளைப் பொதுமக்களிடம் இருந்து திரட்டுவதற்காக அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் நம்பகமாக இல்லையென்று வட இலங்கை மக்கள் சிலர் தெரிவித்துள்ளனர். போர்க்காலத்தில், அதுவும் 1982 ஆம் ஆண்டு தொடக்கம் 2009 ஆம் ஆண்டு வரையிலான 27 வருட காலத்தில் இடம்பெற்ற உயிரிழப்புக்கள், உடல் ரீதியாக ஏற்பட்டுள்ள காயங்கள், அவயவங்களின் இழப்புக்கள், சொத்துக்களுக்கு எற்பட்டுள்ள அழிவுகள், விவசாயம் உள்ளிட்ட தொழில்துறை மற்றும் வாழ்வாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள இழப்புக்கள் குறித்து, மார் இரண்டு வார காலப்பகுதிக்குள் தகவல்களைத் திரட்டுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு வார காலத்தில் இப்படியான பணியை பூர்த்திசெய்…

  6. வடமாகாண சபை செயலாளர்கள் தமது எதேச்சதிகாராமான போக்குகளை கைவிட்டு மக்கள் பிரதிநிதிகளுடன் இணைந்து பணியாற்ற முன்வரவேண்டும், இல்லையெனில் தமது பதவிகளை இராஜினாமா செய்து விட்டு புதியவர்களை நியமிக்க வழிவிட வேண்டும் என எச்சரிக்கையுடன் கோரிக்கை விடுத்துள்ளார் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன்.மன்னாரில் நேற்று அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். வடமாகாண சபையை மக்கள் பிரதிநிதிகளான நாம் பொறுப்பேற்க முன்னர் வடமாகாண சபையின் அதிகாரிகள் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஆளுனருடைய விருப்பு வெறுப்புகளையும், மத்திய அரசின் அமைச்சர்களின் விருப்பு வெறுப்புகளையும், வேலைத்திட்டங்களையும் நிறைவேற்றி வந்த செயலாளர்கள் மற்றும் பணிப்பாளர்கள்…

  7. வலிகாமம் கிழக்கு பிரதேச சபையினுடைய பட்ஜெட் தோற்கடிக்கப்பட்டதும் சபையின் தவிசாளர் அன்னலிங்கம் உதயகுமாருக்கு (ரமேஸ்) எதிராக உறுதிப்படுத்தப்பட்ட 24 குற்றச்சாட்டுகள் அடங்கிய மகஜரை ஆளும்கட்சி (கூட்டமைப்பு) மற்றும் எதிர்க்கட்சி (ஈ.பி.டி.பி) உறுப்பினர்கள் கூட்டாக இணைந்து வட மாகாண முதலமைச்சருக்கு அனுப்பியிருந்ததும் நீங்கள் யாவரும் அறிந்ததே. கடந்த 21.11.2013 ஆம் திகதி கூடிய இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் உப தவிசாளர் கந்தையா தர்மலிங்கம் நிச்சயம் கலந்து கொள்வேன் என சபையின் ஏனைய உறுப்பினர்களுக்கு உறுதியளித்து விட்டு இறுதி நேரத்தில் காலை வாரியதும் தெரிந்ததே. இப்போது என்ன நடக்கிறது? தொடர்ச்சியாக இரு தடவைகள் பட்ஜெட் தோற்கடிக்கப்பட்டால் தவிசாளரின் பதவிக்காலம் உடனட…

  8. 'இணைந்த வடக்கு கிழக்கில் தமிழர்களுக்கு தீர்வு' பெற்றுக் கொடுக்கும் இந்திய அமைச்சர் சிதம்பரத்தின் கருத்துக்கு இலங்கை அரசு காட்டமான கண்டனத்தை வெளியிட்டுள்ளது. இலங்கையின் உள்நாட்டு விவகாரம் பற்றி பேசுவதற்கு வெளியாட்களுக்கு உரிமை கிடையாது என ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் பொதுச் செயலரும் அமைச்சருமான சுசில் பிரேம்ஜயந்த் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். தமது நாடு தனி இறையாண்மை உள்ள ஒரு நாடு என்றும், இலங்கையில் அரசியலமைப்பு மற்றும் சட்ட நடைமுறைகள் பற்றியோ வெளியாட்கள் பேச வேண்டிய தேவையில்லை என்றும் அவர் தெரிவித்தார். இந்திய அமைச்சர் சிதம்பரம் தெரிவித்த கருத்துக்களை தாங்கள் பெரிய அளவில் கணக்கில் எடுக்க வேண்டியதில்லை எனவும் அவர் கூறுகிறார். இந்தியாவில் தேர்தல் நட…

  9. விரைவில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் விரைவில் இலங்கையில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து யாழ் முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனை சந்திப்பார் என நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழர் வாழ்வுரிமையும், இந்திய அரசின் நிலையும் என கருத்தரங்கம் சென்னையில், நியூ உட்லண்ட்ஸ் ஓட்டலில் நேற்று மாலை நடந்தது. இதில் ப.சிதம்பரம் பேசிய போது : பிரதமர் மன்மோகன் சிங்கை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளுமாறு, யாழ் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் விடுத்த அழைப்பு இன்னமும் உயிர்ப்புடனேயே இருக்கிறது. விரைவில் பிரதமர் யாழ் செல்வார். இலங்கை இறையாண்மை கொண்ட நாடு என்பதால், இலங்கையை பிரித்து தனிநாடு உருவாக்க முடியாது. அதனல தான் இலங்கைத் தமிழர்களுக்கு சம உரிமையை பெற்றுத் தரவேண…

  10. வடமாகாண மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலமைச்சர் தமது மாகாணத்தில் ஒருசில இடங்களுக்குச் சுதந்திரமாகச் செல்ல முடியாமல் தடுக்கப்பட்டுள்ளார். இது வடக்கில் இடம்பெறும் இராணுவ ஆட்சிக்குச் சிறந்த உதாரணமாகும். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நேற்று சபையில் தெரிவித்தார். வலி. வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தில் உள்ள கோயில்கள், பாடசாலைகள் இராணுவத்தினரால் இடித்தழிக்கப்படுவதைப் பார்வையிடுவதற்காக நேற்று முன்தினம் மாலை அங்கு சென்ற வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை படையினர் அங்கு செல்லவிடாமல் திருப்பி அனுப்பியுள்ளனர். இந்நிலையில், நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற வரவு - செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான ஏழாம் நாள் விவாதத்தில் உரையாற்றிய…

  11. நாட்டில் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு இல்லாத நிலை நீடித்து வருவதாலேயே வடக்கு, கிழக்கிலிருந்து மக்கள் அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக படகுகளில் செல்கின்றனர் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். எமது மக்களின் தொழிலை இராணுவமும், கடற்படையும் அத்துமீறல்கள் மூலம் செய்கின்றது. மக்களின் காணிகளை இராணுவம் கையகப்படுத்தி தாங்களே பயிரிடுகின்றனர். ஏ 9 வீதிகளிலும் கூட பொதுமக்களைவிட இராணுவத்தினரே தேநீர் கடைகளை நடத்துகின்றனர். அப்படியிருக்க மக்களுக்கு எப்படி தொழில் கிடைக்கும். அதுவே, அவுஸ்திரேலியா நோக்கி செல்ல மக்களைத் தூண்டுகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். கிளிநொச்சி விசுவமடுவில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற நிகழ்வொன்…

  12. பம்பலப்பிட்டி சொகுசு தொடர்மாடி ஒன்றிலிருந்து வெளிநாட்டு இராஜதந்திரி ஒருவர் சடலமாக இன்று மாலை மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித்ரோகண தெரிவித்தார். ஐக்கிய அரபு இராச்சிய தூதரகத்தில் பணியாற்றி வந்த 43 வயதுடைய இராஜதந்திரி ஒருவரே இன்று பம்பலபிட்டி சொகுசு தொடர்மாடியின் நீச்சல் தடாகத்திலிருந்து மீட்கப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார். இதுதொடர்பில் பொலிஸ் ஊடகப்பிரிவு வழங்கிய மேலதிக தகவலில், குறித்த இராஜதந்திரி மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்பதாகவும் சம்பவம் தொடர்பில் பம்பலப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/?q=node/359576

  13. இலங்கையில் அடுத்து நடத்தப்படும் தேர்தல்களை எதிர்கொள்வதற்கு ரணில் விக்ரமசிங்க, சரத் பொன்சேக்கா, ஆர்.சம்பந்தன், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் ஒன்றிணைந்து செயல்படுவது குறித்து தற்போது திரைமறைவிலான பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த அரசியல் கூட்டணியில் இணையும் அரசியல் கட்சிகள், அதன் தலைவர்கள் பற்றிய விபரங்களை வெளியிடாது புதிய கூட்டணியை ஏற்படுத்துவது தொடர்பிலான சில சுற்று பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. இந்தப் புதிய கூட்டணியைச் சேர்ந்த ஒருவரை அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக நிறுவதற்கும் திட்டமிடப்பட்டு வருகிறது. இந்தப் புதிய கூட்டணியில் இணையவதா? இல்லையா? என்பது பற்றி ஜே.வி…

  14. ஐக்கிய நாடுகளின் உள்நாட்டில் இடம்பெயர்ந்தோருக்கான விவகாரங்களுக்கான விசேட பிரதிநிதி கலாநிதி சலோகா பெயானி இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டு நாளை திங்கட்கிழமை வருகிறார். அவர், நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை வடக்கு மாகாணத்திற்கும் விஜயம் செய்து நிலைமைகளை நேரில் ஆராயவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. வடக்கிற்கான விஜயத்தை நாளை மறுதினம் மேற்கொள்ளும் ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதி கலாநிதி சலோகா பெயானி, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், யாழ் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களையும், வலிகாமம் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து கோணப்புலம் நலன்புரி நிலையத்தில் தங்கியுள்ள மக்களையும் சந்தித்து பேசவுள்ளார். எதிர்வரும் புதன்கிழமை முல்லைத்தீவு மாவட்டத்துக்குச் செ…

  15. -எஸ்.றொசேரியன் லெம்பேட் வடமகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகைக்கும் இடையில் இன்று ஞாயிற்றுக்கிழமை விசேட சந்திப்பு நடைபெற்றுள்ளது. மன்னார் ஆயர் இல்லத்தில் நடைபெற்றுள்ள இந்தச் சந்திப்பின்போது மன்னார் மாவட்டத்தில் தற்போது அதிகரித்துள்ள காணிப் பிரச்சினைகள், இராணுவத்தினரின் தலையீடுகள், அதிகரித்துள்ள இராணுவப் பிரசன்னம், அமைச்சர் ஒருவரின் தன்னிச்சையான செயற்பாடுகள், மீனவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள், மீள்குடியேற்ற கிராமங்களிலுள்ள மக்களின் பிரச்சினைகள் உட்பட மன்னார் மாவட்ட மக்கள் எதிர்நோக்குகின்ற பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில்; முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இந்தச் சந்தி…

  16. வடக்கு மாகாண முதலமைச்சரும் இந்துக்குருமார்களும் இன்று வலி. வடக்கிற்குச் சென்றவேளை இராணுவத்தினரால் தடுக்கப்பட்டு திருப்பியனுப்பப்பட்டுள்ளனர். வலி. வடக்கு உயர்பாதுகாப்பு வலையத்திற்குள் வீடழிப்புகளுடன் அங்குள்ள இந்து ஆலயங்களும் இடித்துடைக்கப்படுவதாக முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டிருந்தது. இந்தநிலையில் இன்று முதலமைச்சர் தலைமையில் இந்துகுருமார்கள் பார்வையிடுவதற்காக சென்ற வேளை மாவிட்டபுரம் பகுதியில் உள்ள காவலரணில் இருந்த இராணுவத்தினர் அவர்களை மேலும் செல்லவிடாது தடுத்து நிறுத்தியதுடன் திருப்பியனுப்பியும் உள்ளனர். இது தொடர்பாக இந்துக்குருமார்கள் தெரிவிக்கையில், இராணுவத்தினரின் இவ்வாறான செயற்பாடுகள் அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகும். இதனால் இனங்களுக்கிடையிலான …

  17. இலங்கையில் இன மற்றும் மத சுதந்திரம் இருக்கின்றதா என்பது தொடர்பில் ஆராய்வ தற்காக அமெரிக்க காங்கிரஸ் சபை விசேட குழுவொன்றை நியமித்துள்ளது. இந்தக்குழுவில் ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சிகளின் உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர். இலங்கையில் சிறுபான்மை இனத்தவர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளன என்றும், அவர்களின் வணக்கஸ்தலங்கள் திட்டமிட்ட அடிப்படையில் தாக்கப்படுகின்றன என்றும் அனைத்துலக ரீதியில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த நிலையிலேயே, அது தொடர்பில் ஆராய்வதற்காக அமெரிக்க காங்கிரஸ் சபை மேற்படி குழுவை நியமித்துள்ளது. குறித்த குழு தனது பணிகளையும் முன்னெடுத்து வருகின்றது. இந்தக்குழுவின் முன்னிலையில், இலங்கைக்கான அமெரிக்காவின் தூதுவராக முன்னர் செயற்பட்ட ஏஸ்லி வில்ஸு…

  18. பெரும் சொத்தழிவுகளையும், தொழில் இழப்புக்களையும் சந்தித்த எம்மைச் சொந்த மண்ணில் மீளக் குடியமர்த்தாமல் போர் அழிவுகள் குறித்து எப்படிக் கணக்கெடுக்கப் போகிறார்கள் என்று கேள்வியெழுப்பியுள்ளார். வலி.வடக்கு மீள் குடியேற்ற மற்றும் புனர்வாழ்வுச் சங்கத்தின் தலைவர் அ.குணபாலசிங்கம். வலி.வடக்கு மக்களைச் சொந்த நிலத்தில் குடியமர்த்திய பின்னரே இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார். போர்கால இழப்பீடுகள் தொடர்பான கணக்கெடுப்பு நடவடிக்கைகளை அரசு நாடளாவிய ரீதியில் ஆரம்பித்துள்ளது. இந்த நடவடிக்கையின் போது உயிரிழப்பு, காயம், காணாமற்போனமை, சொத்தழிவு தொடர்பில் கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. வலி.வடக்கில் 24 கிராம சேவையாளர் பிரிவுகள் இன்னமும் மக்கள் குடியமர்வதற்கு வி…

  19. இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்டப் போரில் 65 ஆயிரம்பேர் கொல்லப்பட்டுள்ளதாக இந்தியா முதன் முறையாக தெரிவித்துள்ளது. பொது மக்கள், விடுதலைப் புலிகள், இராணுவத்தினர் என அனைவரும் இந்த எண்ணிக்கைக்குள் அடங்கி இருப்பதாகவும் இந்திய மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார். உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்பில் வெவ்வேறான தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் இந்தியா இந்தப் புதிய எண்ணிக்கையை வெளியிட்டுள்ளது. இதற்கு முன்னர் ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் பான் கீ மூனுக்கு ஆலோசனை வழங்கவென நியமிக்கப்பட்ட தருஸ்மன் குழு இறுதிக்கட்டப் போரில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொது மக்கள் உயிரிழந்தனர் என அறிவித்திருந்தது. போருக்கு முன்னர் வன்னியில் இருந்தவர்களின் எண்ணிக்கை தொடர்பான புள்ளிவிவர…

  20. Annonces Google இலங்கை தீவில் வாழும் மொத்த சனத்தொகையில் 31 லட்சம் பேர் தமிழர்கள் என சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. மிக நீண்ட இடைவெளிக்கு பின்னர் இலங்கைத்தீவு முழுவதிலும் நடத்தப்பட்ட சனத்தொகை மதிப்பீட்டின் அடிப்படையில் இந்தத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை தீவில் வாழும் மொத்த சனத்தொகை 20 கோடியே இரண்டு லட்சத்து 63 ஆயிரத்து 723 எனத் கணிப்பிடப்பட்டுள்ளது. இதில் ஒரு கோடி 53 லட்சத்து 73 ஆயிரத்து 820 பேர் சிங்களவர்களாகும். 31 லட்சத்து 13 ஆயிரத்து 247 பேர் தமிழர்களாவர். 18 லட்சத்து 69 ஆயிரத்து 820 பேர் முஸ்லிம்களாவர். இலங்கை மொத்த சனத்தொகையின் பௌத்தர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 42 லட்சத்து 22 ஆயிரத்து 804 ஆகும்.…

    • 3 replies
    • 637 views
  21. சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த நான்கு பிரிகேடியர்களுக்கு, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு வழங்கியுள்ளார். மேஜர் ஜெனரலாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளவர்களில் மலாய் சமூகத்தைச் சேர்ந்தவரான, பிரிகேடியர் எம்.இசட்.ஆர்.சாலியும் ஒருவர். மலாய் சமூகத்தைச் சேரந்த ஒருவர் சிறலங்கா இராணுவத்தில் மேஜர் ஜெனரலாக நியமிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். 1980இல்,சிறிலங்கா இராணுவத்தில் இணைந்த மேஜர் ஜெனரல் சாலி,போரின் இறுதிக்காலகட்டத்தில் முக்கிய பங்கு வகித்தவராவார். சிறிலங்கா இராணுவத்தின் பொறியியல் படைப்பிரிவை சேர்ந்தவரான பிரிகேடியர் எச்.எல்.டேவிட்டும் மேஜர் ஜெனரலாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார். இவர், ஊர்காவற்றுறையை பிறப்பிடமாக கொண்டவர் என்பதுடன், யாழ்ப்பாணம் சென்…

  22. -மாணிக்கப்போடி சசிகுமார் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினரும் மண்முனை மேற்குப் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினருமான விளாவெட்டுவானைச் சேர்ந்த இரண்டு பிள்ளையின் தந்தையான சங்கிலி என்று அழைக்கப்படும் இரத்தினசிங்கம் பரமேஸ்வரன்(37 வயது) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். விளாவெட்டுவானில் உள்ள சவற்சாலைப் பகுதியில் உள்ள மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையிலேயே அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. வவுணதீவுப் பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-14-24/91578-2013-12-01-11-04-24.html

  23. இலங்கை கடற்படையினருக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கப்படும் என்று இந்திய கடற்படை தளபதி டி.கே.ஜோஷி தெரிவித்துள்ளமைக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, முதல்வர் ஜெயலலிதா கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். இலங்கையில் தமிழர்களின் மறுவாழ்வு கேள்விக் குறியாக உள்ளதாகவும், தமிழக மீனவர்களும் இலங்கை படையால் தொடர்ந்து தாக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார் இந்நிலையில் இலங்கை வீரர்களுக்கு பயிற்சி தர இந்திய கடற்படை முடிவு செய்துள்ளமை கடும் கண்டனத்திற்குரியது என்றும் அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளதார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/91562-2013-12-01-09-01-…

  24. யாழ்ப்பாணத்தில் அண்மையில் நடாத்தப்பட்ட காணாமல் போனவர்களது போராட்டத்தில் தாங்கள் யாரையும் தாக்கவில்லை என்று யாழ்.மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜிப்ரி தெரிவித்தார். நேற்று யாழ் தலைமைப் பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில், கடந்த 15ஆம் திகதி யாழ்ப்பாணம் பொதுநூலகத்திற்கு அருகில் இடம்பெற்ற காணாமல் போனோரது போராட்டத்தில் கிறீஸ்தவ பாதிரியார் ஒருவர் பொலிஸாரினால் தாக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது குறித்து ஊடகவியலாளர் ஒருவரினால் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், டேவிட் கமரூன் வருகை தந்திருந்த போது நாங்கள் அவருக்கு பாதுகாப்புக் கொடுப்பதற்காகவே அங்கு சென்றோமே தவிர யார…

  25. யாழ்.பொது நூலகத்தின் பிரதம நூலகராக தனது ஆதரவாளரான முன்னாள் இராணுவப்புலனாய்வு அதிகாரியொருவரை நியமிக்க அமைச்சர் றிசாத் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். தற்போது பொதுநூலகத்தின் பிரதம நூலகராக உள்ள இமெல்டா ஓய்வுபெறவுள்ள நிலையில் எந்த அடிப்படை தகுதியுமற்றவரான நிசாத் என்பவரை அந்தப் பதவிக்கு நியமிக்க அமைச்சர் றிசாத் அழுத்தங்னை கொடுத்து வருகிறார். கடந்த ஆண்டு சுற்றுலா பயணிகளாக சென்ற சிங்களவர்கள் சிலர் நூலகத்தில் அடாவடிகளில் ஈடுபட்டமைக்கு கடும் எதிர்ப்பு உள்ளுரில் கிளம்பியிருந்த நிலையில், நூலகத்தில் தமது பிடியினை இறுக்கிக்கொள்ள ஆளுநர் சந்திரசிறி அமைச்சர் றிசாத்தின் ஆலோசனையின் பேரில் அவசர அவசரமாக புத்தளத்திலிருந்து முன்னாள் இராணுவப்புலனாய்வு அதிகாரியொருவரை, கூடிய அதிகாரங்க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.