ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143515 topics in this forum
-
இலங்கைக்கு விஜயம் செய்திருந்த போது சிறிலங்கா படையினரால் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டிருந்த ஈழத்துக் கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் இன்று செவ்வாய்க்கிழமை இரவு நாடு கடத்தப்படவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களை மேற்கோள் காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இவர் இலங்கையில் இருந்து நாடு கடத்தப்பட்டு, துருக்கி ஊடாக நோர்வே சென்றடையவுள்ளதாக சிறிலங்காவின் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன. மாங்குளத்தில் உள்ள அவரது தாயின் கல்லறைக்கு கடந்த வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தச் சென்ற போதே, இவர் சிறிலங்கா படையினரால் கைது செய்யப்பட்டு, மேலதிக விசாரணைக்களுக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தார். சிறிலங்காவின் நுழைவு அனுமதி விதிமுறைகளை மீறியத…
-
- 5 replies
- 841 views
-
-
வடக்கில் கார்த்திகை பூக்களும் அழியும் நிலையில்! Posted by tamil24 on November 26th, 2013 10:43 AM தமிழ் மக்களுக்கு – குறிப்பாக இந்துக்களுக்குச் சிறப்பான மாதம் கார்த்திகை மாதம். இந்த மாதத்தில் மட்டுமே கார்த்திகைப் பூவும் மலர்ந்து விரிந்து பலரையும் வியக்க வைக்கும், மனதைக் கொள்ளை கொள்ளும். தற்போது வன்னியிலும் குடாநாட்டிலும் ஆங்காங்கே கார்த்திகைப் பூக்கள் மலர்ந்து அனைவரையும் கவர்ந்துள்ளன, ஈர்த்துள்ளன. கார்த்திகைப் பிறையைக் கண்டவர்கள் போன்று கார்த்திகைப் பூவைக் கண்ணுற்றவர்களும் தம் வாழ்வில் வசந்தம் வீசப்போகிறது என்ற நம்பிக்கையுடன் மகிழ்ச்சியில் திளைத்து நிற்கின்றனர். ஆனால் விடுதலைப்புலிகள் கார்த்திகை பூக்களை தேசிய மலர்களாக அறிவித்ததால் மாவீரர் நாளில் அம்மலரையும் த…
-
- 0 replies
- 555 views
-
-
ஆக்கிரமிப்புகளுக்கு அடிபணிந்து வாழ்வதற்கு இலங்கை மக்கள் என்றுமே தயாராக இல்லை என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்தார். கொழும்பில் இன்று முற்பகல் நடைபெற்ற வியட்நாம் தேசிய தலைவரின் சிலை திறப்பு வைபவத்தில் உரையாற்றும் பொழுதே ஜனாதிபதி இதனை கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை சுதந்திரத்தையும் சுயாதீனத்தையும் மேன்மையாக மதிக்கும் நாடு. இலங்கை மக்களின் சுயாதீனமாக போராட்டங்களின் சாரம்சத்தை பிழிந்தே மகிந்த சிந்தனை வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டது. பாரிய ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட வியட்நாம் தேசிய தலைவர் வோ சீ மிங்கின் சிலையை இலங்கை நிர்மாணித்ததை காலத்திற்கு உகந்த நடவடிக்கை என்றார். http://www.seithy.com/breifNews.php?newsID=97639&category=TamilNews&…
-
- 9 replies
- 820 views
-
-
இளையோரமைப்பினது காணொளியொன்றை இணைத்துள்ளேன். An: Dr. Angela Merkel STOP THE SILENT GENOCIDE! http://www.change.org/de/Petitionen/stop-the-silent-genocide
-
- 1 reply
- 572 views
-
-
2009 ஈழத்தில் நடந்த இறுதிப் போரின் போது கொல்லப்பட்ட தமிழ் மக்களின் நினைவாகவும் இனப்படுகொலையை நினைவு கூறும் வகையிலும் தஞ்சை விளார் சாலையில் இரண்டரை ஏக்கர் நிலத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைக்கப்பட்டு 8 -ம் தேதி திறக்கப்பட்டது. கற்சிற்பங்கள், ஓவியங்கள் என காண்போர் மனதை நெருடும் வகையில் அமைக்கப்பட்டிருந்த இந்த முற்றத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா விரும்பவில்லை என்று தெரிகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை 500 -ம் அதிகமான போலீசாரின் மேற்பார்வையில் முற்றம் இடிக்கப்பட்டு வருகிறது. இதனால் தஞ்சையில் பதட்டம் எழுந்துள்ளது. "முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் முன் பகுதியில் உரிய அனுமதி பெற்று சட்டப்பூர்வமாக அமைக்கப்பட்டிருந்த இந்தப் பூங்கா இன்று அதிகாலை 5.30 மணியளவில் அத்தும…
-
-
- 284 replies
- 31.4k views
-
-
தமிழினத்தின் வரலாற்றில் எத்தனையோ அரசர்களும் பேரரசர்களும் தோன்றி மறைந்துள்ளார்கள். இராசராச சோழனும் அவன் மகன் இராசேந்திர சோழனும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சோழப் பேரரசை நிறுவிய மன்னர்கள் ஆவர். இலங்கை மீது படையெடுத்து அதனைப் பிடித்து (கிபி 993 - கிபி 1077) ஆட்சி செய்தவர்கள். சோழர்களது ஆட்சி 84 ஆண்டுகள் நீடித்தது. வங்கப் பெருங்கடலில் வலம் வந்த பேரரசர்கள் முதலாவது இராசராச சோழன், முதலாவது இராசேந்திர சோழன் ஆகியோரது கடற்படைக் கப்பல்களில் புலிக்கொடிகள் வானளாவப் பறந்தன. அந்தப் பொற்காலத்தின் பின்னர் தேசியத் தலைவர் பிரபாகரனின் கடற்படைதான் புலிக் கொடிகளோடு வங்கக் கடலில் வலம் வந்தன. உலக வரலாற்றில் கிரேக்கத்தின் மகா அலெக்சான்டர், பிரான்சின் சக்கரவர்த்தி நெப்போலியன் …
-
- 0 replies
- 657 views
-
-
-
தமிழீழ தேசியத்தலைவரின் சிந்தனைக்கு அமைய தமிழ்மக்களிடையே மீண்டும் மிளிர்ந்துள்ள ஒற்றுமையான செயல்பாடுகளை வரவேற்ப்பதுடன் தொடரும் ஓற்றுமைக்கான முயற்சிகளை பலப்படுத்தப்படவேண்டும் எனவும் வேண்டி தமிழீழ எல்லாளன் படையினர் இன்று அறிக்கை ஒன்றை ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ளனர். தமிழீழ எல்லாளன் படையின் முழுமையான அறிக்கை >> தமிழீழம் 26.11.2013 ஓற்றுமைக்கான அனைத்து முயற்சிகளையும் வரவேற்கின்றோம். அன்பார்ந்த எம் தமிழீழ உறவுகளே! “நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிதென்று வாழுங்கள். நாடு நமக்குப் பெரிதானால் நாம் எல்லோரும் அதற்குச் சிறியவர்களே, எமது நிலையற்ற வாழ்விலும் பார்க்க நாட்டின் வாழ்வே பெரிது…” என்ற தமிழீழ தேசியத்தலைவரின் சிந்தனைக்கு அமைய தமிழ்மக்களிடை…
-
- 5 replies
- 1.4k views
-
-
சிறிலங்காவின் முன்னாள் போர்வலயத்தில் இவ்வாரம் செய்திகளைச் சேகரிக்கச் சென்ற Agence France-Presse – AFP ஊடகத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் சிறிலங்கா இராணுவத்தினரால் தடுத்து நிறுத்தப்பட்டது ஏன் என்பது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளவுள்ளதாக வெள்ளியன்று சிறிலங்கா இராணுவம் உறுதியளித்துள்ளது. முன்னாள் போர் வலயத்திற்குள் நுழையும் ஊடகவியலாளர்கள் தடுக்கப்பட வேண்டும் என தமக்குக் கட்டளை வழங்கப்பட்டதாக இராணுவத்தினர் தெரிவித்தனர். AFP ஊடகத்தைச் சேர்ந்த காணொலிப் பதிவு ஊடகவியலாளரும், ஒளிப்பட ஊடகவியலாளரும் வடக்கு மாகாணத்தில் செய்திகளைச் சேகரிப்பதற்கு சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் திங்களன்று தடைவிதித்தனர். தமது கட்டளைத் தளபதிகளிடமிருந்து கிடைக்கப் பெற்ற கட்டளையின் அடிப்படையிலேயே தாம் இதனைச் செய…
-
- 0 replies
- 330 views
-
-
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன், இலங்கையின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமருக்கு இணையாக நாட்டை நேசிக்கும் குடிமகன் என அமைச்சர் விமல் வீரவன்ஸ் புகழ்ந்துள்ளார். கொழும்பு மாளிவத்தை பிரதேசத்தில் திஸாநாயக்க தோட்டத்தில் நடைபெற்ற வீடுகள் கையளிப்பு வைபவத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், சனல் 4 தொலைக்காட்சியின் முன்னால் நாட்டின் உண்மையான நிலைமையை உலகத்திற்கு எடுத்துக் கூறிய கிரிக்கெட்வீரர் முத்தையா முரளிதனுக்கு தேசத்தின் மரியாதை வழங்கப்பட வேண்டும்.சனல் 4 தொலைக்காட்சியும் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனும் இலங்கை தொடர்பில் இருளான தோற்றத்தை உலகத்தில் எடுத்துச் செல்ல முயற்சித்தன…
-
- 4 replies
- 1k views
-
-
மகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய தந்தை ஒருவருக்கு 100 வருட சிறைத்தண்டனையும் 90 ஆயிரம் ரூபா அபராதமும் கம்பஹா நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ளது. பாணந்துறை பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய கமராலலாகே சந்திரசிறி என்ற நபருக்கே மேற்படி தண்டனை வழங்கப்பட்டுள்ளதோடு பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு இலட்சம் ரூபா நட்டஈடு வழங்குமாறும் அவ்வாறு இந்த அபராதத்தை செலுத்தத் தவறினால் மேலும் ஒன்பது ஆண்டுகள் தண்டனை அனுபவிக்க நேரிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் தனது 10 வயது மகளின் நிர்வாண புகைப்படத்தை எடுத்து வைத்திருந்ததுடன் பல முறை பாலியல் துஷ்பிரயோகத்துக்கும் உட்படுத்தியுள்ளார். பாதுகாவலனாக இருக்க வேண்டிய தந்தை செய்துள்ள காரியங்களுக்கு சிங்கள அகராதியில் ஒரு சொல் கிடையாத…
-
- 1 reply
- 629 views
-
-
மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க தமிழ் மக்களுக்கு முழு உரிமை உண்டு. அதேபோன்று சிங்கள மக்களும் மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கு முன்வர வேண்டும். இந்த நாட்டின் அரசமைப்பின்படி அனைவரும் தமக்குப் பிடித்தவற்றை செய்வதற்கு உரிமையுண்டு. மாவீரர் தினத்துக்கு பயங்கரவாதிகள்தினம் என முத்திரைக் குத்தியது இனவாத அரசியல்தான். இது பிழையான செயல். இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் தமிழர்களின் இந்த உரிமையை அரசியல் சுயநலம் கொண்டு தடை செய்யக் கூடாது இவ்வாறு ஜே.வி.பி யின் நாடாளுமன்ற உறுப்பினரும், சகோதரத்துவத்துக்கான மக்கள் அரணின் உறுப்பினருமான சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்து;ளார். இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், 'போர் முடிவடைந்து தமிழர்களும், சிங்களவர்களும் ஒற்றுமையாகவும், அமைதியாகவு…
-
- 1 reply
- 543 views
-
-
22.11.2013 அண்மையில் இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டிருந்த பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன், தெரிவித்த கருத்துக்களுக்கு எதிராக, மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று, கொழும்பில் இன்று இடம்பெற்றது. கொழும்பு தெவட்டகஹ ஜும்ஆப் பள்ளிவாசலுக்கு அருகில், இன்று வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகையின் பின்பு, இந்த ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்றது. இலங்கையின் ஐக்கியத்திற்கும் ஒருமைப்பாட்டிற்கும் ஆதரவளிக்கும் தமிழ் முஸ்லிம் சிங்கள சமூகங்களின் பிரதி நிதிகளைக் கொண்ட தேசபிமாணக் கூட்டமைப்பு இந்த ஆர்ப்பாட்டப் பேரணியை ஒழுங்கு செய்திருந்தது. “முஸ்லிம்களை கமரூன் மறந்தது ஏன்…?, வடக்கில் உள்ள முஸ்லிம் பிரதேசங்களுக்கு கெமரூன் செல்லாதது ஏன்…? , அயர்லாந்துக்கு ஒரு நீதி- இலங்கை;கு ஒரு நீ…
-
- 2 replies
- 852 views
-
-
எதிர்வரும் மேல் மாகாண சபைத் தேர்தலில் ஆளும் கட்சியின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட வைக்கும் நோக்கத்தில் ஜனாதிபதி தேடிய பிரபலமான நட்சத்திர அந்தஸ்து கொண்ட ஒருவர் கிடைத்துள்ளதாக தெரியவருகிறது. இந்த நட்சத்திரம் வேறு யாருமல்ல. இலங்கைக்கு அண்மையில் விஜயம் செய்த பிரித்தானிய பிரதமருக்கு துஷ்ரா பந்தை வீசி வீழ்த்த முயற்சித்து தனது பந்தில் தன்னையே வீழ்த்திக் கொண்ட முத்தையா முரளிதரனே அந்த நட்சத்திரமாகும். கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வுபெற்றதோடு அரசியல் மைதானத்திற்குள் காலடி எடுத்து வைத்த அர்ஜூன ரணதுங்க, சனத் ஜயசூரிய வரிசையில் முத்தையா முரளிதரனும் அரசியல் மைதானத்திற்கு வருவதாக ஜனாதிபதிக்கு விருப்பம் தெரிவித்திருப்பதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் தகவல்க…
-
- 3 replies
- 708 views
-
-
ஜெயபாலனின் கருத்துச் சுதந்திரத்தையும். தாயாருக்கு அஞ்சலி செலுத்துவதற்குமுள்ள உரிமையையும் மனிதாபிமான அடிப்படையிலேயே நோக்கப்பட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தெரிவித்துள்ளது. கவிஞரும் எழுத்தாளரும் நடிகருமான ஜெயபாலன் கைது செய்யப்பட்டமை தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் சி.தவராசா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; கவிஞர் ஜெயபாலன் கைதுசெய்யப்பட்டிருப்பது தொடர்பாக பல்வேறு தளங்களில், பலவாறான கோணங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. நீண்டகாலமாக நோர்வேயிலும், இந்தியாவிலும் தங்கியிருந்த ஜெயபாலன் தனது தாயாரின் கல்லறைக்கு அஞ்சலி செலுத்துவதற்காக மாங்குளத்துக்குச் சென்றபோது கைது செய்யப்பட்டிருப்பதாக அவரது மனைவியினால் கூறப்பட்டிருந்தும், அவர் சுற்…
-
- 1 reply
- 357 views
-
-
கடல்சார் பாதுகாப்பு, கண்காணிப்பு மற்றும் நீலக்கடலில் ரோந்துப் பணிகளை மேற்கொள்ள இன்னும் பல கடற்படைப் படகுகள் இலங்கை கடற்படைக்குத் தேவைப்படுவதாக, இலங்கை பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். காலியில் இன்று காலை ஆரம்பமாகிய, கடல்சார் பாதுகாப்புக் கருத்தரங்கில் முக்கிய உரை நிகழ்த்திய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். “கரையில் இருந்து இன்னும் தொலைவில் செயற்படவும், கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், நீலக்கடலில் ரோந்துப் பணிகளை மேற்கொள்ளவும் இன்னும் பல கடற்படைக் கப்பல்களை இலங்கை பெறவேண்டியுள்ளது. ஏற்கனவே பல செல்வந்த நாடுகளிடம் இருந்து இத்தகைய கப்பல்களை தருமாறு கேட்டிருக்கிறோம். இந்தநிலையில், அடுத்த ஆண்டில் இரண்டு பே வகை ரோந்துப் படகுகளை அன்ப…
-
- 2 replies
- 548 views
-
-
வடக்கிலுள்ள குடும்பங்கள் மாவீரர் தினத்தில் உயிரிழந்த தமது உறவுகளை நினைவுக் கூறுவதை, தடுக்க எடுக்கும் நடவடிக்கைகளை கடுமையாக எதிர்ப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. பெரிய நிகழ்வுகளை ஏற்பாடு செய்யும் திட்டம் கூட்டமைப்புக்கு இல்லை என தெரிவித்துள்ள அதன் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், கட்சியின் அலுவலகங்களில் சிறிய நிகழ்வுகள் நடத்தப்படும் என்றார். விடுதலைப்புலிகளை ஊக்குவிக்க நேரடியாகவோ மறைமுகமாகவே எடுக்கப்படும் முயற்சிகள் தண்டனைக்குரிய குற்றம் என அரசாங்கம் இன்று அறிவித்தது. அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசாங்கம் கூறியது. யாழ்ப்பாணத்தில் விடுதலைப்புலிகளின் மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளதாக வெளியான தகவல்களை அட…
-
- 0 replies
- 362 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளும், மக்களும் வருடாவருடம் அனுஸ்டிக்கும் மாவீரர் தினம், எதிர் வரும் 27 ஆம் திகதியும் வடக்கு கிழக்கு பகுதிகளில் அனுஸ்டிக்கும் முனைப்புக்கள் பல தரப்பினராலும் மேற்கொள்ளப்படுகின்றது இந்த நிலையில் மன்னார் பனங்கட்டிக்கொட்டு – எமிழ் நகர் கிராமத்தில் உள்ள டவர் (கோபுரம்) ஒன்றில் இன்று திங்கட்கிழமை அதிகாலை தமிழீழ விடுதலைப்புலிகளின் தேசியக்கொடியான 'புலிக்கொடி' ஏற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில் தகவலறிந்த படைத்தரப்பினர் இன்று திங்கட்கிழமை காலை சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளனர். இராணுவம், பொலிஸ் மற்றும் புலனாய்வுத் துரையினர் சம்பவ இடத்திற்குச் சென்று கொடியினை அகற்றியுள்ளனர். தற்போது மேலதிக விசாரனைகளை படைத்தரப்பினர் மேற்கொண்டு வருகின்றனர். எனினும்; இராணு …
-
- 6 replies
- 986 views
-
-
காலியில் நாளை ஆரம்பமாகவுள்ள, கடல்சார் பாதுகாப்புக் கருத்தரங்கில், இந்தியக் கடற்படைத் தளபதி அட்மிரல் தேவேந்திரகுமார் ஜோஷி பங்கேற்கவுள்ளார். காலி கலந்துரையாடல் என்ற கடல்சார் பாதுகாப்புக் கருத்தரங்கை சிறலங்கா கடற்படை தொடர்ந்து நான்காவது ஆண்டாகவும் நடத்தவுள்ளது. நாளை தொடக்கம் இரண்டு நாட்கள், காலியில் உள்ள வெளிச்சவீட்டு விடுதியில், நடக்கவுள்ள இந்தக் கருத்தரங்கில், சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச முக்கிய உரை நிகழ்த்தவுள்ளார். இந்தநிலையில், இந்தியக் கடற்படைத் தளபதி அட்மிரல் தேவேந்திர குமார் ஜோஷியும் இதில் பங்கேற்கவுள்ளதாக, சிறிலங்கா கடற்படை தெரிவித்துள்ளது. இந்தக் கருத்தரங்கில், இந்தியக் கடற்படைத் தளபதி, ‘ஆசிய பசுபிக்கில் வளர்ந்து வரும் கடல்சார் ஆர்வங்கள்:…
-
- 2 replies
- 839 views
-
-
புலம்பெயர்ந்த புலிகளால் எமது நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு தொடர்ந்தும் அச்சுறுத்தல் நிலவுகின்றது. வெளிநாடுகளில் புலிகளின் நிதிசேகரிப்புத் தொடர்கின்றது. இதுபற்றி வெளிநாடுகளுக்கு நாம் தெரியப்படுத்தியுள்ளோம். அதேநேரத்தில் புலம்பெயர் புலிகளைப் பலவீனப்படுத்தும் முயற்சிகளில் எதிர்பார்த்ததைவிட வெற்றியை நாம் கண்டுள்ளோம். இன்று வெளிநாடுகளில் நான்கு அணிகளாகப் புலிகள் இயங்குகின்றார்கள். இதில் எமக்கு எதிரான பிரச்சாரத்தை உருத்திரகுமாரனைத் தலைவராகக் கொண்ட நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், கத்தோலிக்க குரு இம்மானுவேலைத் தலைவராகக் கொண்ட உலகத் தமிழர் பேரவை ஆகியவை மேற்கொள்கின்றன. மறுபுறத்தில் இங்கு ஆயுதப் போராட்டத்தை இறக்குமதி செய்யும் முயற்சியில் நெடியவன் குழுவும், விநாயகம் அணியும் ஈ…
-
- 2 replies
- 524 views
-
-
வடக்கு மக்கள் அரசாங்கத்திற்கு ஆதரவளி;க்க வேண்டுமென மீள் குடியேற்ற பிரதி அமைச்சர் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்துள்ளார். வட பகுதி மக்கள் அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதன் மூலம் கிராம பகுதிகளை அபிவிருத்தி செய்ய முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். திருகோணமலையின் மூதூர் கிழக்கில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்க அரசாங்கம் முனைப்புடன் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதன் மூலம் மக்கள் மேலும் நன்மைகளை பெற்றுக் கொள்ள முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleVi…
-
- 1 reply
- 492 views
-
-
ஊர்காவற்றுறையில் அமைந்துள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றின் மீது நேற்று காலை கல்வீசி தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறைப் பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது. ஊர்காவற்றுறை கரம்பன் கிழக்கில் அமைந்துள்ள தேவ வார்த்தை மிஷனரி சபை என்ற கிறிஸ்தவ சபையிலேயே காலை ஆராதனை நடை பெற்றுக் கொண்டிருந்த வேளை இந்த கல்வீச்சுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. நேற்று காலை 9.40 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தின் போது சபையில் 50 இற்கும் மேற்பட்டவர்கள் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்துள்ளனர். சம்பவத்தின்போது 15 வயதுடைய ஆனந்தராசா பியூலா பாடசாலை மாணவியின் வலது கண்ணில் கல்லொன்றுபட்டதில் அவர் பலத்த காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை இச்சம்பவம் தொடர்ப…
-
- 1 reply
- 324 views
-
-
தாயக விடுதலைக்காக வித்தாகிப் போன மாவீரர்களை நினைவு கூரக் கோரி யாழ், மத்திய பஸ் நிலையத்தில் துண்டு பிரசுரங்கள் விநியோக்கிக்கப்பட்டுள்ளன. இத் துண்டு பிரசுரங்கள் நேற்றும் நேற்று முந்தினமும் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது அத்துண்டுப் பிரசுரங்களில் விடுதலையினை நோக்கமாக கொண்டு களமாடி உயிர் நீத்த எம் மாவீரர்கள் என்றென்றும் நினைவு கூரப்பட வேண்டியவர்கள். எம் முச்சுக் காற்று உள்ளவரை எம் மாவீரர்களை மறவோம். என எழுதப்பட்டுள்ளதோடு மாவீரர்களின் கல்லறைகள், கார்த்தீகைப் பூ ஆகியவற்றின் புகைப்படங்களும் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=799762467125270799#sthash.MCWzTLSW.dpuf
-
- 0 replies
- 428 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் இராணுவத்தினரின் ரோந்து நடவடிக்கைகளும், கெடுபிடிகளும் கடந்த சில தினங்களாக அதிகரித்துள்ளன. முல்லைத்தீவு நகருக்குள் பிரவேசிக்கும் வாகனங்கள் அனைத்தும் இராணுவப் பதிவின் பின்னரே அனுமதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மாவீரர் வார நிகழ்வுகள் நவம்பர் 21 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை நினைவு கூரப்படுவதுண்டு. இதன் காரணமாக தமிழீழ விடுதலைப்புலிகளின் கோட்டையாக இருந்த முல்லைத்தீவில் மாவீரர்கள் நினைவு கூரப்படலாம் என்ற அச்சத்திலேயே இராணுவக் கெடுபிடிகள் அதிகரித்துள்ளதாகப் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் முல்லைத்தீவு நகருக்கு பிரவேசிக்கும் வாகனங்கள், குறிப்பாக பரந்தன் புதுக்குடியிருப்பு வீதியூடாக பிரவேசிக்கும் வாகனங்களை தேராவில் மாவீரர் துயிலும் …
-
- 0 replies
- 370 views
-
-
வலி வடக்கு பாதுகாப்பு வலயத்தில் நின்று போயிருந்த வீடுகள் இடித்தழிப்பு நடவடிக்கைகள் மீண்டும் நேற்று ஆரம்பமாகி உள்ளது. கடந்த சில நாட்களாக கமரூனின் விஜயம் மற்றும் இடம்பெயர்ந்த மக்களது போராட்டங்களை அடுத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடித்தழிப்பு நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு உள்ளதாக வலி.வடக்கு பிரதேச சபை தவிசாளர் எஸ. சுகிர்தன் தெரிவித்தார். முன்னதாக இடித்தழிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த நிலையில் அதற்கு எதிராக இடம்பெயர்ந்த மக்கள் போராட்டங்களிற்கு தயாராகியிருந்தனர். எனினும் அதனை குழப்பும் வகையில் ஜனாதிபதி இடித்தழிப்பிற்கு தடை விதித்ததாக தகவல்கள் வெளியாகின. எனினும் அதையும் மீறி வலி வடக்கு மக்கள் செய்த உண்ணாவிரதப் போராட்டம் அரசின் பாராமுகத்தால் பயனற்று…
-
- 0 replies
- 239 views
-