Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. -எஸ்.கே.பிரசாத் தமிழர்களின் உரிமைப் போராட்ட வரலாற்றில் ஆயுதப் போராட்டம் தவிர்க்க முடியாததொன்று அதனை எவரும் கொச்சைப்படுத்த முடியாது என விடுதலைப்புலிகளின் முன்னாள் ஊடகப்பேச்சாளர் தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் ரில்கோ விடுதியில் நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளைச் சேர்ந்த ஈ.பி.ஆர்.எல்.எப் செயலாளர் நாயகம் சுரேஸ் பிரேமச்சந்திரன், ரெலோ அமைப்பின் எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் கலந்துகொண்ட ஊடகவியலாளர் மாநாடு நடைபெற்றது. இந்த ஊடகவியலாளர் மாநாட்டின் கலந்து கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சியினர், ஆயுதக்குழுக்களை தமிழரசுக்கட்சி கொச்சைப்படுத்தி வருகின்றது என…

    • 6 replies
    • 941 views
  2. இந்தியாவினுடைய முன்னேற்றகரமான சூழலும், அமெரிக்காவின் ஐ.நா அறிக்கையின் வெளிப்பாட்டினாலும் இலங்கை அரசாங்கம் இந்த மாகாண சபைத் தேர்தலை நடத்தியிருக்கின்றது. ஆனால் இவற்றுக்குப் பின்னால் சமுதாய போராளிகளுடைய கனவு இருக்கின்றது என்பதை யாவரும் அறிய வேண்டும். ஒட்டுமொத்தமாக தமிழீழம் என்ற சொல்லை முதன் முதலில் உச்சரித்த எங்கள் மண்ணின் தந்தை செல்வாவின் சமாதி முன்னே நாங்கள் இன்று பூ போடுவது போன்று, உயிரினும் மேலான அன்புச் செல்வங்களின் மாவீரர் கல்லறைகளில் பூப்போடும் காலம் அண்மித்து விட்டது. எங்களது வடக்கும் கிழக்கும் இணைந்த தாயக மண்ணில் எங்களுடைய சுய நிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்டு, எங்களுடைய தாயகம், எங்களுடைய தேசியம் ஏற்றுக் கொள்ளப்பட்டு எங்களுக்கான ஒரு தீர்வு வழங்கப்படும் வரை நாங்கள் போர…

  3. இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என வலியுறுத்தி தமிழகத்தின் கும்பகோணத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் ஆரம்பித்துள்ள போராட்டத்தை ஆரம்பத்திலேயே ஒடுக்குவதற்கு பல முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக கும்பகோணம் செய்தியாளர் தெரிவிக்கின்றார். இதற்கு முன்னதாக, ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவில் இலங்கைக்கு எதிரான தீர்மானங்களை இந்தியா எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாணவர்கள் ஆரம்பித்த ஆர்ப்பாட்டம் தமிழகம் முழுவதும் பரவி பெரும் ஆட்சியாளர்களுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில், தற்போது கும்பகோணத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் ஆரம்பித்துள்ள சாகும் வரையிலான உண்ணாப் போராட்டத்தை ஆரம்பித்திலேயே முடக்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட…

    • 0 replies
    • 627 views
  4. அமைச்சுப் பதவிகளுக்காக பிளவுபடாமல் ஒன்றுமையாக செயல்பட்டு முன்நோக்கிச் செல்ல வேண்டும் என மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழர்களின் வெற்றியைக் குழப்புவதற்கும், சிதறடிப்பதற்கும் சில தரப்பினர் முயற்சித்துக்கொண்டிருப்பதாகவும் இதற்கு இடமளிக்கப்படக்கூடாது எனவும் மன்னார் ஆயர் தெரிவித்துள்ளார். அத்துடன், என்ன இலட்சியத்திற்காக மக்களால் தெரிவுசெய்யப்பட்டோ அதனை வெற்றிகரமாக செய்துமுடிக்க வேண்டும் எனவும் மன்னார் ஆயர் கோரியுள்ளார். இதுகுறித்து மன்னார் ஆயர் எமது செய்திப் பிரிவிற்கு வழங்கிய செவ்வியில், http://tamilworldtoday.com/home

  5. மக்கள் ஆணையை நிறைவேற்றுங்கள் - சர்வ மதத் தலைவர்கள் சுயநிர்ணய உரிமை, தேசியம் என்பவற்றை அடிப்படையாக வைத்தே மக்கள் உங்களுக்கு ஆணையை வழங்கியிருக்கின்றார்கள். அதனை நீங்கள் நிறைவேற்ற வேண்டும் என்று சர்வமதத் தலைவர்கள் மாகாண சபை உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுத்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் வடக்கு மாகாணசபை உறுப்பினர்களின் பதவியேற்பு வைபவம் நேற்று வெள்ளிக்கிழமை காலை வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு ஆசியுரை வழங்கும் போதே சர்வ மதத் தலைவர்கள் இவ்வாறு கோரினர். நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர ஞானசம்பந்த தேசிக பரமாச்சார்சிய சுவாமிகள் தனது உரையில், மக்கள் உங்களுக்கு வழங்கிய ஆணையைச் சரியான முறையில் பயன்படுத்தி, தமிழர்களுடைய வரலாறு மீண்டும் இந்த …

  6. -எஸ்.தில்லைநாதன் வடமராட்சி கிழக்கு கடற்கரை தொடக்கம் முல்லைத்தீவு செம்மலை வரையான பிரதேசங்களின் கடற்பகுதி கொந்தளித்தமையினால் 150 ற்கும் மேற்பட்ட மீனவ வள்ளங்கள் கடலில் இழுத்துச் செல்லப்பட்டு மூழ்கியுள்ளன. வடமராட்சி கிழக்கு, மணற்காடு, கட்டைக்காடு, வண்ணார்குளம், செம்மலை, முல்லைத்தீவு ஆகிய பிரதேசங்களின் கடற்பகுதி இன்று சனிக்கிழமை அதிகாலை 12 மணி முதல் 12.05 வரையில் கடும் கொந்தளிப்புடன் காணப்பட்டது. இந்தக் கடற்கொந்தளிப்பினால் வடமராட்சி கரையோரங்களினை அண்டிய மீனவர்களின் 100 இற்கும் மேற்பட்ட வள்ளங்கள் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு மூழ்கியுள்ளதுடன், பல வள்ளங்கள் சேதமடைந்து, மீன்பிடி வலைகளும் கடலுடன் காணமற் போயுள்ளதாகவும் வடமராட்சி கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கச் சமாஜம் தெரிவ…

  7. முதலமைச்சரை சந்தித்த முஸ்லீம் பிரதிநிதிகள் வடமாகாண முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள சி.வி விக்கினேஸ்வரன் யாழில் மீள்குடியேறியுள்ள முஸ்லீம் மக்களின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இன்று மாலை 4.00 மணிக்கு நாவாந்துறைப் பள்ளிவாசலில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்மந்தன், மாவை சேனாதிராசா, சரவணபவன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். இந்தச் சந்திப்பில் தமிழ் மக்களும் முஸ்லீம் மக்களும் இணைந்து செயற்படவேண்டியதன் தேவை குறித்து எதிர்காலத்தில் இரண்டு சமூகங்களும் முன்னெடுக்க வேண்டிய அரசியல் நடவடிக்கை குறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இதனை ஏற்றுக்கொண்ட முஸ்லீம் பிரதிநிதிகள் வடமாகாண சபையில் தெரிவு செய்ய்படப்டுள்ள முஸ்லீம் பிரதிநிதி…

    • 0 replies
    • 518 views
  8. இந்­திய ரூபாயின் மதிப்பு குறைந்­துள்­ள­தோடு எதிர்­கா­லத்தில் இந்­தியா துண்டு துண்­டாக பிரியும் காலம் வெகு­தூ­ரத்தில் இல்லை. ஆனால் இலங்கை எழுச்சி கண்டு வரு­கி­றது என ஆளும் கட்சி எம்.பி.ஜே.ஆர்.சூரி­யப்­பெ­ரும நேற்று சபையில் தெரி­வித்தார். யார் முட்­டுக்­கட்டை போட்­டாலும் இன்னும் 5 வரு­டங்களில் இலங்கை பாரிய தொழில்­நுட்ப வளர்ச்­சியை காண்­பது நிச்­ச­ய­மாகும் என்றும் அவர் தெரி­வித்தார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வெள்­ளிக்­கி­ழமை இடம் பெற்ற கோப் அறிக்கை தொடர்­பான சபை ஒத்­தி­வைப்பு பிரே­ரணை விவா­தத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே சூரி­யப்­பெ­ரும எம்.பி இதனைத் தெரி­வித்தார். இங்­கி­லாந்து ‘‘தும்­மினால்’’ இலங்­கைக்கு சளி பிடிக்கும் நிலை அன்று காணப்­பட்­டது. இன்று…

  9. இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய அமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகளின் அரச தலைவர்களுக்கான மாநாட்டினை இந்தியா புறக்கணிக்குமாறு கோரி கும்பகோணத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் 7 பேர் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் நேற்று நள்ளிரவு முதல் கும்பகோணம் காந்தி பூங்காவிற்கு அருகில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. யுத்தக் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய இலங்கையில் பொதுநலவாய மாநாடு நடைபெறக்கூடாது, பொதுநலவாய அமைப்பிலிருந்து இலங்கையை நீக்க வேண்டும், அந்த மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும். ஆகிய கோரிக்கைகளை முன்வைத்தே இவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதேவேளை, இலங்கைக்கு எதிராக உண்ணாவிரத ப…

    • 0 replies
    • 449 views
  10. இலங்கை தொடர்பான அறிக்கையை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ளது. இன்னர் சிட்டி பிரஸ் இணையத்தளம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. இலங்கையில் இறுதிப் போரின் போது ஐ.நா.வின் செயல்பாடுகள் தோல்வியடைந்தமை தொடர்பான உள்ளக அறிக்கை ஒன்று ஏற்கனவே வெளியாகி இருந்தது. இந்த அறிக்கையை ஐக்கிய நாடுகளின் நிபுணர் ஜோன் பெற்றிக் தயாரித்திருந்தார். இந்த அறிக்கையின் தொடர்ச்சியாக தற்போது புதிய அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் இலங்கை விடயத்தில் தோல்வி கண்ட ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பு, எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட கூடிய விடயங்கள் தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இன்னர் சிற்றி பிரசின் செய்தி : http://tamilworldtoday.com/home As ICP Publishes UN Sri Lanka Report, Spox Admits "No Fire Zo…

  11. இராணுவத்தின் வீட்டுத்திட்டங்கள் - கிளிநொச்சியில் நடந்த மோசடி - 12 அக்டோபர் 2013 குளோபல் தமிழ்ச் செய்திகளின் விசேட செய்தியாளர் கடந்த இரண்டு தினங்களின் முன்பாக இராணுவத்தினர் கிராமத்தில் உள்ள ஐந்து குடும்பத் தலைவர்களை கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் ஊடாக அழைத்திருந்தனர். கிராமத்தில் உள்ள கணவர்களை இழந்த, வறுமைக்கோட்டுக்கு உட்பட்டவர்கள் என கிராமம் தோறும் ஐந்து குடும்பத்தவர்களை அழைத்து வருமாறு கிராம சங்கத் தலைவர்களிடம் தெரிவித்தனர். உங்களுக்கு வீட்டுத் திட்டத்தில் முன்னுரிமை கொடுக்கும் விதமாக வீடுகளை அமைத்துத் தரவே அழைக்கப்படுவதாகவும் இது ஒரு வெளிநாட்டு உதவி எனவும் கிராம சங்கத் தலைவர்கள் மக்களிடம் சொல்லும்படி நிர்பந்திக்கப்பட்டதாக தெரிவிக்கின்றார்கள். கிராமத்திற்…

  12. அரசியல் ரீதியான முரண்பாடுகளே பதவிப்பிரமாண நிகழ்வில் பங்கேற்காமைக்கு காரணம் - 12 அக்டோபர் 2013 'எனது மனைவி விபத்தில் சிக்கியயதால் கலந்துகொள்ளவில்லை என வெளியான செய்திகளில் எவ்விதமான உண்மைகளும் இல்லை' வைத்திய கலாநிதி குணசீலன் - TELO பதவிப்பிரமாண நிகழ்வில் தான் பங்கேற்காமைக்கு அரசியல் ரீதியாக பல காரணங்கள் உள்ளன என்று தமிழீழ விடுதலை இயக்கம் TELO சார்பாக மன்னார் மாவட்டத்தில் போட்டியிட்டு வடமாகாண சபைக்கு தெரிவாகியுள்ள வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிடுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'யாழ்ப்பாணத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம் பெற்ற தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை அமைச்சர்களின்…

  13. பொதுமக்கள் பாதுகாப்பு குறித்த ஐ.நாவின் யோசனையை அரசாங்கம் முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை – பர்ஹான் ஹக் 12 அக்டோபர் 2013 பொதுமக்கள் பாதுகாப்பு குறித்த ஐக்கிய நாடுகள் அமைப்பின் யோசனையை அரசாங்கம் முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை என ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார். இன்னர் சிற்றி பிரஸ் ஊடகத்திற்கு அளித்த செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இறுதிக் கட்ட யுத்தம் இடம்பெற்ற காலத்தில் பொதுமக்க்ள பாதுகாப்பு வலயங்களை அறிமுகம் செய்வது குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பு தொடர்ந்தும் வலியுறுத்தி வந்ததாகத் தெரிவித்துள்ளார். எனினும், அரசாங்கம் இந்த யோசனையை முழுமையாக அமுல்படுத்தவில்லை என அவா சுட்டிக்காட்டியுள்ளார். பொதுமக்களி…

  14. சிவாஜிலிங்கம் உள்ளிட்ட TELO PLOT, EPRLF உறுப்பினர்கள் முள்ளிவாய்க்காலில் சத்தியப்பிரமானம்.. 12 அக்டோபர் 2013 அண்மையில் வட மாகாணசபைத் தேர்தலில் வெற்றியீட்டிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் உள்ளிட்ட ரெலோ புளொட், ஈபீஆர்எல்எவ் உறுப்பினர்கள் முள்ளிவாய்க்காலில் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அமைச்சுப் பதவி தெரிவு குறித்து ரெலோ புளொட், ஈபீஆர்எல்எவ் கட்சிகள் அதிருப்தி வெளியிட்டுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ பதவிப் பிரமாண நிகழ்வுகளில் ரெலோ புளொட், ஈபீஆர்எல்எவ் உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது லட்சக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக…

  15. சிறுவர் உரிமைகளை உறுதிப்படுத்துவதில் இலங்கையில் முன்னேற்றம் - யுனிசெப் 12 அக்டோபர் 2013 சிறுவர் உரிமைகளை உறுதிப்படுத்துவதில் இலங்கையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் இணை நிறுவனமான யுனிசெப் தெரிவித்துள்ளது. சிறுவர் நலன்களை மேம்படுத்த உதவிகள் தொடர்ச்சியாக வழங்கப்படும் என யுனிசெப் நிறுவனத்தின் இலங்கைப் பிரதிநிதி உனா மெக்காலீ தெரிவித்துள்ளார். குறிப்பாக மிகவும் பின்தள்ளப்பட்ட உதவிகள் தேவைப்படுகின்ற சிறுவர் சிறுமியரின் நலன்களை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த சில தசாப்தங்களாக இலங்கையில் அவசர மனிதாபிமான உதவிகளை வழங்குவதிலேயே யுனிசெப் கூடுதல் கவனம் செலுத்தி வந்ததாகத் தெரிவித்துள்ளார். யுத்தத்தின் பின்னரான அபிவிரு…

  16. 2009 மே மாதம், போரின் இறுதிக்கட்டத்தில், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகனான, 12 வயதான பாலச்சந்திரனை, இலங்கை இராணுவத்தினரே படுகொலை செய்ததாக தி எக்கனோமிஸ்ட் இதழின், தென்னாசியப் பிரிவுக்குப் பொறுப்பான, அடம் றொபேட்ஸ் குற்றம்சாட்டியுள்ளார். புதுடில்லியில், நடந்த சர்வதேச ஊடகவியலாளர்களுக்கான கருத்தரங்கில் பாலச்சந்திரன் படுகொலை உள்ளிட்ட இலங்கை இராணுவத்தின் போர்க்குற்றங்கள் குறித்தும் கருத்துகள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்போதே தி எக்கனோமிஸ்ட் இதழின், தென்னாசியப் பிரிவுக்குப் பொறுப்பான, அடம் றொபேட்ஸ் மேற்கண்டவாறான குற்றச்சாட்டை தெரிவித்தார். இதில் கருத்து வெளியிட்ட, உலகளவில் பிரபலமான, தி எக்கனோமிஸ்ட் இதழின், தென்னாசியப் பிரிவுக்குப் பொறுப்பான, அடம் றொபேட்ஸ் உரையாற்றும் …

  17. தமிழ் தேசியக் கூட்டமைப்பு வசமுள்ள வடக்கு மாகாணசபையை வலுவிழக்கச் செய்யும் வகையில் மாவட்ட ரீதியாக அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்க அமைச்சர்களை நியமிக்க மஹிந்த அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது. அந்தவகையில் தற்போது அரசு பக்கம் தாவியிருக்கும் ஐ.தே.கவின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனுக்கு யாழ்.மாவட்டத்திற்கான அமைச்சு பதவி வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றது. ஏற்கனவே விஜயகலா மகேஸ்வரன் அரசு பக்கம் தாவியுள்ளமை தொடர்பாக ஐ.தே.கவின் நாடாளுமன்ற அங்கத்தவர் டி.எம்.சுவாமிநாதன் அண்மையில் அறிவித்திருந்தார். இதேவேளை வவுனியாவுக்கு ரெலோ சிறீ அமைப்பின் தலைவரான உதயகுமார் மாவட்ட அமைச்சராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறான…

  18. இலங்கையின் இறுதிப் போரின் போது ஐக்கிய நாடுகள் சபையின் செயல்பாடுகள் குறித்த அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட ஐ.நா.பொதுச் செயலாளர் பான் கீ மூனின் பேச்சாளர் இதனைத் தெரிவித்துள்ளார். இதனை ஐக்கிய நாடுகளின் நிபுணர் மைக்கல் ஹிட்டிங் இந்த அறிக்கைத் தயாரித்து வருகிறார். இந்த அறிக்கை விரைவில் வெளியாகும் என்ற போதிலும் அதுகுறித்த திகதியை தான் அறிந்திருக்கவில்லையென பேச்சாளர் மேலும் தெரிவித்தார். இறுதிப்போர் காலத்தில் ஐ.நா. தனது பணிகளை உரிய முறையில் செய்யத் தவறியதை ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் ஏற்றுக்கொண்டிருந்தார். இதற்காக அவர் மன்னிப்பும் கோரியிருந்தார். இந்த நிலையில…

    • 2 replies
    • 659 views
  19. புதுடெல்லியில், நடந்த ஊடகவியலாளர்களுக்கான கருத்தரங்கில் பாலச்சந்திரன் படுகொலை உள்ளிட்ட சிறிலங்கா இராணுவத்தின் போர்க்குற்றங்கள் குறித்தும் கருத்துகள் வெளியிடப்பட்டுள்ளன. புதுடெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில், அனைத்துலக செஞ்சிலுவைக் குழு, ஏஜேகே தொடர்பாடல் ஆய்வு நிலையம், அமைதிக்கும், முரண்பாட்டுத் தீர்வுக்குமான நெல்சன் மண்டேலா நிலையம் என்பன இணைந்து ஊடகவியலாளர்களுக்கான இரண்டுநாள் கருத்தரங்கை ஒழுங்கு செய்திருந்தன. இந்தியா, பாகிஸ்தான், அவுஸ்ரேலியா, ஈரான், மலேசியா, பங்களாதேஸ், சிங்கப்பூர், ஆப்கானிஸ்தான், சிறிலங்கா, பூட்டான், மாலைதீவு, நேபாளம் ஆகிய 12 நாடுகளின் ஊடகவியலாளர்கள், இந்தக் கருத்தரங்கில் பங்கேற்றனர். இதில் கருத்து வெளியிட்ட, உலகளவில் பிரபலமான, தி …

    • 2 replies
    • 749 views
  20. திடீரென அகற்றப்பட்ட வடமாகாணக் கொடி வடக்கு மாகாண சபை முதலமைச்சருக்கும், இந்திய வெளிவிவகார அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பின்போது வைக்கப்பட்டிருந்த வடக்கு மாகாண சபைக் கொடியை இலங்கை வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் திடீரென அங்கிருந்து அகற்றினர். யாழ். மாவட்டத்துக்கு நேற்று வருகை தந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனை யாழ். ரில்கோ விடுதியில் நேற்று மாலை சந்தித்தார். இதன் போது இவர்களின் சந்திப்பு இடம்பெறவிருந்த அறையில் வடக்கு மாகாண சபையின் கொடியும் இந்தியத் தேசியக் கொடியும் வைக்கப்பட்டிருந்தன. இலங்கை வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் இலங்கைத் தேசியக் கொடிதான் வைக்கப்பட வேண்டும் என்றும் இல்லை எனின் வடக்கு மாகாண சபை க…

    • 12 replies
    • 1.7k views
  21. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒற்றுமையாக செயல்பட வேண்டுமாயின் அந்தக் கட்சிக்குள் ஜனநாயகம் இருப்பது அவசியமானது என ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். வட மாகாண அமைச்சரவைப் பங்கீட்டில் குழப்பங்கள் வருவதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியே மூல காரணம் எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். தாங்கள் குழப்பவாதிகள் அல்ல எனவும் மாகாண சபை உருவாக்கப்பட்டு அதன் ஊடான நோக்கத்தை அடைவதற்கு நாங்கள் என்றும் உறுதுணையாக இருப்போம் என்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண அமைச்சர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வைப் புறக்கணித்த மூன்று கட்சிகள் இன்று காலை யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தியிருந்தன. இதன்போதே சுரேஷ் பிரேச்…

    • 0 replies
    • 416 views
  22. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை அமைச்சர்கள் பதவியேற்பு வைபவத்தை, அதன் பங்காளி கட்சிகளான புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப், ஆகிய கட்சிகளிலிருந்து தெரிவானவர்களம் ரெலோவின் சிவாஜிலிங்கமும் புறக்கணித்துள்ளனர். ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதனும் ரெலோவிலிருந்து மாகாணசபைக்கு தெரிவான இரு மாகாணசபை உறுப்பினர்களும் இதில் கலந்து கொண்டனர். தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்டு இம்முறை மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்டவர்களில் 22பேர் இன்று யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் முதலமைச்சர் விக்னே;வரன் முன்னிலையில் பதவி பிரமாணம் செய்து கொண்டனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சி தலைவர்களில் சுரேஷ் பிரேமச்சந்திரன், சித்தார்த்தன் ஆகியோரும் இதில் கலந்து கொள்ளவில்லை. சிவாஜிலிங்கம்…

  23. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சத்தியப்பிரமாண நிகழ்வில் கலந்துகொண்டு சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளாத ஒன்பது உறுப்பினர்களும் முள்ளிவாய்க்காலில் வைத்து சத்தியபிரமாணத்தை செய்துக்கொள்வதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் 14 ஆம் திகதி திங்கட்கிழமையே இவர்கள் சத்தியிப்பிரமாணம் மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் பதவிப்பிரமாண நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற போது, கூட்டமைப்பின் 9 மாகாண சபை உறுப்பினர் சத்தியப்பிரமாண நிகழ்வை புறக்கணித்தனர். இதனைத் தொடர்ந்து, ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை யாழில் நடைபெற்ற விசேட கூட்டத்…

  24. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். அதை மீறிச் செயற்பட்டால் அவர்களுக்கு எதிராக மக்கள் வீதியில் இறங்கி ஜனநாயக வழியில் போராட்டங்களை முன்னெடுக்க நேரிடும் என்றும் யாழ்.குடாநாட்டு மக்கள் எச்சரித்துள்ளனர். அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள சிலர் பிரதேச வாதத்தை வளர்க்க முற்படுகின்றனர் என்றும் அதற்கு மக்கள் ஒருபோதும் எடுபடக்கூடாது என்றும் குடாநாட்டு மக்கள் தெரிவித்துள்ளனர். தனது தம்பிக்கு அமைச்சுப் பதவி வழங்கப்படாமையைக் காரணம் காட்டி பதவியேற்பு வைபவத்தைப் புறக்கணித்த ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சித் தலைவர் சுரேஸ் பிறேமச்சந்திரன், முல்லைத்தீவுக்கு அமைச்சுப் பதவி வழங்கவில்லை என்ற காரணத்தாலேயே தாங்கள் நிகழ்வைப் புறக்கணித்தாக தெரிவித்…

  25. இலங்கையின் இறுதிப்போரின் ஐக்கிய நாடுகள் சபை தமது நடவடிக்கைகளில் தோல்விகண்டமை காரணமாக பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் இலங்கைப் படையினரால் கொல்லப்பட்டனர். இந்தக்குற்றச்சாட்டு தொடர்பில் ஆராய ஐக்கிய நாடுகளின் செயலாளர் பான் கீ மூன் ஐக்கிய நாடுகளின் அதிகாரி ஜோன் பெற்றியின் தலைமையில் தனி ஆள் விசாரணைக் குழுவை அமைத்தார். பேற்றி தமது ஆராய்வின் முடிவில் இலங்கையின் இறுதிப்போரின் போது ஐக்கிய நாடுகள் சபை தமது கடமையில் இருந்து தவறிவிட்டதாக ஒப்புக்கொண்ட அறிக்கையை பான் கீ மூனிடம் சமர்ப்பித்தார். இதனை பான் கீ ஆராய்ந்த பின்னர். இறுதிப்படுத்தப்பட்ட அறிக்கை ஒன்றை வெளியிட உத்தரவிட்டார். இதன்படி ஐக்கிய நாடுகளின் அதிகாரி ஹீட்டிங் இறுதி அறிக்கையை தயாரித்து முடித்துள்ளார். அறிக்கை உத்தியோகபூர்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.