ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143501 topics in this forum
-
வடமாகாண சபைத் தேர்தல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள விஞ்ஞாபனம், நாட்டைப் பிளவுபடுத்தும் நோக்கத்தைக் கொண்டது என்று இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீண்டும் வலியுறுத்திக் கூறியுள்ளார். ஹிந்துஸ்தான் ரைம்ஸ் நாளிதழுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் எனக்கு ஏமாற்றமளிக்கிறது, ஆனால் இது புதிதல்ல. அப்பாவி மக்களின் உணர்வுகளைத் தூண்டி, வாக்குகளைப் பெறுவதற்கு கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்தல்களிலும் இதே உத்தியை அவர்கள் கையாண்டுள்ளனர். இப்போதும் அதே உத்தியைத் தான் கையாள்கின்றனர். ஒரே வித்தியாசம் என்னவென்றால், இப்போது அங்கு புலிகள் இல்லை. இந்த தேர்தல் விஞ்ஞாபனம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு …
-
- 7 replies
- 1.5k views
-
-
தமிழீழ விடுதலைக்காய் தம்முயிரை ஆகுதியாக்கிய விஜயராஜ் நினைவுநாள் இன்று . தமிழீழ வரலாற்றில் அவரது தியாகத்திற்காக விஜயராஜ் என்றென்றும் நன்றியுடன் நினைவுகொள்ளப்படுவார்.
-
- 3 replies
- 406 views
-
-
சிங்கள அரச பயங்கரவாதம்.. தமிழினத் துரோகிகளின் ஒத்துழைப்போடு.. தமிழர் நிலத்தில்.. தமிழின அழிப்பை தொடர்ந்து கொண்டிருப்பதற்கு சாட்சியாக மீண்டும் ஒரு படுகொலைச் சம்பவம் முல்லையில் நிகழ்ந்துள்ளது. 35 வயதுடைய ராசையா கவிதன் (சுரேஷ்) என்ற கூட்டமைப்பின் செயற்பாட்டாளர் நேற்று திங்கட்கிழமை மாலை 6 மணியளவில் முல்லைத்தீவில் வைத்து சிங்கள அரச பயங்கரவாதிகளால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இச்சம்பவம் குறித்த மேலதிக தகவல்கள் தமிழ்நெட் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. TNA activist killed in Mullaiththeevu [TamilNet, Monday, 16 September 2013, 19:25 GMT] A 35-year-old Tamil National Alliance (TNA) activist, Mr Rasiah Kavithan, also known as Sure…
-
- 7 replies
- 807 views
-
-
ஹெரோயின் கென்டேனரை விடுவிக்க பிரதமர் கடிதம் வழங்கியுள்ளார்! கிறீஸ் டின்னுக்குள் மறைத்து பாகிஸ்தானில் இருந்து நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட 261 கிலோ எடையுடைய ஹெரோயின் கென்டேனரை எவ்வித சோதனையும் இன்றி விடுவிக்குமாறு பிரதமர் டி.எம். ஜயரத்ன ஊடாக போதைப் பொருள் கடத்தல்காரர்கள் பாரிய முயற்சியொன்றை மேற்கொண்டுள்ளதாக 'ஸ்ரீலங்கா மிரர்"க்கு தெரியவந்துள்ளது. போதைப்பொருள் கடத்தல்காரர்கள் பிரதமரின் மகனின் ஊடாக கென்டேனரை கொழும்பு துறைமுகத்தில் வைத்து விடுவிக்க இழிகிதர்கள் மூலம் எழுத்து மூலமாகவே சுங்கப் பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதில் ஒரு உத்தரவானது கிறீஸ் கென்டேனரில் நூற்றுக்கு 15 வீத வெட் வரியை குறைப்பதற்கான உத்தரவாகும் என தெரிவிக்கப்படுகிறது. இரண்டாவது உத…
-
- 1 reply
- 432 views
-
-
மனிதப் படுகொலைகளுக்கு காரணமானவர்கள் எவரும் சர்வதேச விசாரணையில் இருந்து தப்பியதில்லை. இதன் படி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் என்றோ ஒருநாள் சர்வதேச போர்க்குற்ற விசாரணையின் முன் நிற்க வேண்டிவரும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார் நேற்று முன்தினம் ஏழாலை வடக்கில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றும் போது அவர் மேலும் தெரிவித்ததாவது; வட மாகாணத்தில் இராணுவத்தினரின் அட்டகாசமும் கெடுபிடிகளும் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. இன்று (நேற்று முன்தினம்) கொல்லங்கலட்டி பிள்ளையார் கோயில் திடலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கூட்டத்தில் கலந்து கொள்ள…
-
- 1 reply
- 464 views
-
-
-சுமித்தி தங்கராசா இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் காசிம் குரொஷி முதற் தடவையாக யாழ்ப்பாணத்திற்கு இன்று செவ்வாய்க்கிழமை விஜயம் மேற்கொண்டுள்ளார்.வட மாகாண சபை தேர்தல் நடவடிக்கைகளை அவதானிப்பதற்காகவே அவர் அங்கு விஜயம் செய்துள்ளார். இதன்போது யாழ். வணிகர் கழக தலைவரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளருமான ஆர் ஜெய்சேகரத்தை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். யாழ். வணிகர் கழகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது, தேர்தல், அரசியல் மற்றும் முதலீடுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து யாழ்பாணத்தின் பல்வேறு பகுதிகளுக்கு உயர் ஸ்தானிகர் விஜயம் மேற்கொண்டார். கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தின் ஊடக பொறுப்பாளர் தாவூத் இஹ்திசாமும் உ…
-
- 2 replies
- 288 views
-
-
அரசாங்கத்தின் சில அமைச்சர்கள் இந்திய உயர்ஸ்தானிகரகத்தின் நூலாட்டு பொம்மைகளாக செயற்படுவதாக அமைச்சர் விமல் வீரவன்ச குற்றம் சுமத்தியுள்ளார். கொழும்பில் நேற்ற இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பு காணி, காவற்துறை உள்ளிட்ட அதிகாரங்களை பெறும்பட்சத்தில், அவற்றை பயன்படுத்தி கண்டிப்பாக தனி ஈழத்தை அமைத்துக் கொள்ளும். இதனை தடுப்பதற்காகவே 13ம் திருத்தச் சட்டத்தில் மாற்றங்களை செய்ய முயற்சிக்கப்பட்டது. எனினும் இந்திய உயர்ஸ்தானிகரகத்தின் தூண்டுகோலுடன், சில அமைச்சரவை அமைச்சர்கள் இந்ததிட்டத்துக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார். http://www.sankathi24.com/news/33274/64//d,fullart.aspx
-
- 2 replies
- 477 views
-
-
தமிழர் தாயகத்தில் ஒட்டுக் குழுக்களையும் கொலைகாரர்களையும் அகற்றுவதற்கு வடமாகாண சபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை வெற்றியடையச் செய்வது காலத்தின் கட்டாயம் என இன அழிப்பு கண்காட்சியை நடாத்திவரும் மருதையா லோகநாதன் (கஜன்) ஜெனிவாவின் ஐ.நா முன்றலில் அறைகூவல்.. thankx FB
-
- 0 replies
- 440 views
-
-
யாழ். தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தின் வருடாந்தத் தேர்த் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு நடைபெற்ற வசந்த மண்டப பூஜையைத் தொடர்ந்து அம்பாள் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். (படங்கள்: எஸ்.கே.பிரசாத், நா.நவரத்தினராசா) http://tamil.dailymirror.lk/--main/82537-2013-09-15-07-35-08.html
-
- 11 replies
- 1.1k views
-
-
'யுத்தம் இடம்பெற்றால் குற்றச் செயல்கள் இடம்பெறுவதனை தவிர்க்க முடியாது' யுத்தம் இடம்பெற்ற காலத்தில் இரண்டு தரப்பினருமே சர்வதேச சட்டங்களை மீறிச் செயற்பட்டதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார். யுத்தம் நிறைவடைந்துள்ளது அதனால் அது பற்றி பேசுவது பயனில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சர்வதேச யுத்தக் குற்றச் செயல் விசாரணைகள் நடத்தப்பட்டால் புலிகளக்கு எதிராகவும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். எனினும், தமிழ்;த் தேசியக் கூட்டமைப்பும், புலம்பெயர் தமிழர்களும் அரசாங்த்திற்கு எதிராக மட்டுமே விசாரணை நடத்துமாறு கோரி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். யுத்தக் குற்றச் செயல் விசாரணைகளினால் யுத்தத்தி…
-
- 2 replies
- 2.1k views
-
-
அநுராதபுரம் புதிய பஸ் தரிப்பிடத்தில் முச்சக்கரவண்டி சாரதியை துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்த குற்றத்தை ஒப்புக்கொண்ட பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு அநுராதபுரம் மேல் நீதிமன்ற நீதவான் சுனந்த குமார ரத்னாயக்க மரண தண்டனை விதித்து இன்று செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தார். அநுராதபுரம் விலச்சியைச்சேர்ந்த நிர்மல பியதிஸ்ஸ (வயது 49) என்ற கான்டபிளுக்கே இவ்வாறு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2005 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 16 ஆம் திகதிஇந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டதாக அவர் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-09-21-10-47-44/82805-2013-09-17-11-02-49.html
-
- 0 replies
- 389 views
-
-
தொண்டமானாறு பாலம் இன்று திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைகள் மற்றும் துறைமுகங்கள் அபிவிருத்தி அமைச்சினால் சுமார் 200 மில்லயின் ரூபா செலவில் தொண்டமானாறு பாலம் நிர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த திறப்பு விழாவில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் துறைமுகங்கள் அபிவிருத்தி திட்ட அமைச்சர் நிர்மல கொத்தலாவல மற்றும் வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறி ஆகியோர் கலந்துகொண்டனர். 1990ஆம் ஆண்டு இடம்பெற்ற யுத்தத்தின்போது இந்த பாலம் முற்றாக அழிக்கப்பட்டிருந்தது. பின்னர் தற்காலிகமாக இரும்பு பாலம் அமைக்கப்பட்டு மக்களின் போக்குவரத்து இடம்பெற்று வந்தது. இந்த நில…
-
- 0 replies
- 379 views
-
-
வடக்கில் தேர்தல் வன்முறைகள் மோசமாக மீறப்படுகின்றமை குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இலங்கை வந்துள்ள இந்திய முன்னாள் தேர்தல் ஆணையாளரிடம் முறைப்பாடு செய்துள்ளது. இந்தியாவின் முன்னாள் தேர்தல் ஆணையாளர் கோபாலசு வாமிக்கும் தமிழ்த் தேசிய கூட் டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பொன்று நேற்று இடம் பெற்றுள்ளது. இதன் போதே கூட்டமைப்பு இந்த விடயத்தைச் சுட்டிக்காட்டியுள்ளது. மாகாண சபைத் தேர்தல்களின் கண்காணிப்பு நடவடிக்கைகளில் இந்தியாவின் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையாளர் கோபாலசுவாமி தலைமையில் தெற்காசிய தேர்தல்கள் கண்காணிப்பு மையத்தின் சார்பாக 21 கண்காணிப்பாளர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இந்தக் குழுவினர் மாகாணசபைத் தேர்தல்களில் போட்டியிடும் கட்சிகளின் முக்கியஸ்தர்களை…
-
- 0 replies
- 455 views
-
-
-எஸ்.கே.பிரசாத் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் லூயிஸ் பியட் யாழ்.ஆயர் தோமஸ்சௌந்தர நாயகம் ஆண்டகையைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இன்று திங்கட்கிழமை மாலையே தூதுவர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தார். இச் சந்திப்பு தொடர்பில் யாழ்.ஆயர் கருத்து தெரிவிக்கையில், இங்குள்ள நிலவரங்கள் குறித்து ஆராய்யும் நோக்குடன் தூதுவரும் அவரது பாரியாரும் யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களிற்கு விஜயம் செய்துள்ளனர். இந்தச் சந்திப்பின்போது நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதியுதவியுடன் யாழ் கோட்டைப் புனரமைப்பு மேற்கொள்ளப்பட்டு வருவது தொடர்பில் அவருக்கு நன்றி தெரிவித்தேன். யாழ் நகரில் 30 ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ள ஒல்லாந்தர் கோட்டை இன்று புனரமைக…
-
- 1 reply
- 214 views
-
-
இலங்கையின் தெற்கை பீடித்துள்ள TNA காச்சல் - தூக்கமின்மையால் அவதியுற்று புலம்பும் கடும் போக்காளர்கள். 17 செப்டம்பர் 2013 Bookmark and Share "பிரபாகரனின் மக்களை உடனடியாக மாற்ற முடியாது" ஒரே பார்வையில் - குளோபல் தமிழ்ச் செய்திகள்- இலங்கையின் தெற்கை பீடித்துள்ள TNA காச்சல் - தூக்கமின்மையால் அவதியுற்று புலம்பும் கடும் போக்காளர்கள். TNAயின் தேர்தல் கொள்கை விளக்க அறிக்கையை விமர்சிக்க போவதில்லை தோற்கடிப்பதே அதற்கான தீர்வு - டளஸ் அழகப்பெரும தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் கொள்கை விளக்க அறிக்கையை விமர்சிக்க போவதில்லை எனவும் அந்த கொள்கை விளக்கத்திற்கு வழங்க வேண்டிய சிறந்த தீர்வு அதனை முன்வைத்த வடக்கில் அந்த கூட்டமைப்பை தோற்கடிப்பதாகும் என அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரி…
-
- 0 replies
- 743 views
-
-
2013 ஆம் ஆண்டு நவம்பருக்கு முன்னர் சீனாவுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடலாமென அரசாங்கம் இன்று செவ்வாய்க்கிழமை நம்பிக்கை வெளியிட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் நவம்பரில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டுக்கு முன்னதாக கைச்சாத்திடப்படுமென அரசாங்கம் எதிர்பார்க்கின்றது என முதலீட்டு சபையின் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/82757-2013-09-17-06-50-17.html
-
- 0 replies
- 238 views
-
-
இலங்கையர்கள் தொடர்பில் கனடா புதிய சட்டங்களை அமுல் செய்ய உள்ளது 17 செப்டம்பர் 2013 இலங்கையர்கள் தொடர்பில் கனடா புதிய சட்டங்களை அமுல் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை உள்ளிட்ட சில நாடுகளின் பிரஜைகள் தொடாபில் பயோமெற்றிக் தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதன்படி, கனடா வீசா கோரும் குறித்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் கைவிரல் அடையாளங்களையும் புகைப்படத்துடன் சமர்ப்பிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர் வீசா அல்லது ஏனைய வீசாக்களுக்கும் இது பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் டிசம்பர் மாதம் 11ம் திகதி முதல் இலங்கையர்கள் உள்ளிட்ட சில நாடுகளைச் சேர்ந்த பிரஜைகள் வீசா விண்ணப்பிக்கும் போது கைவிரல் அடையாளங்களையும் விண்ணப்பித்தில் உள்ளடக்க வே…
-
- 1 reply
- 512 views
-
-
இலங்கை தொடர்பான பயண எச்சரிக்கையில் மாற்றமில்லை – பிரித்தானியா 17 செப்டம்பர் 2013 பிரித்தானியாவின் இலங்கை தொடர்பான பயண எச்சரிக்கையில் எவ்வித மாற்றங்களும் செய்யப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கைக்கு பயணங்களை மேற்கொள்ளும் பிரித்தானிய சுற்றுலாப் பயணிகளுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் திட்டமிட்ட மற்றும் ஆயுதக் குழுக்கள் கடத்தல்களில் ஈடுபட்டு வருவதாக பயண வழிகாட்டல் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த 12ம் திகதி இந்த அறிக்கை புதுப்பிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வு நடைபெறவுள்ள நிலையில் இந்த பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகள் நடைபெறவுள்ள கார…
-
- 1 reply
- 437 views
-
-
கட்டாயம் வாக்களியுங்கள்; தமிழ்த் தேசியத்துக்காக வாக்களியுங்கள் – பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் [ செவ்வாய்க்கிழமை, 17 செப்ரெம்பர் 2013, 04:26 GMT ] [ யாழ்ப்பாணச் செய்தியாளர் ] தமிழ் பேசும் மக்களின் தனித்துவமான இறைமையை நிலைநாட்டக்கூடிய - தமிழ்த் தேசியத்திற்காய் போராடுவோருக்கே வடக்கு மாகாணசபைத் தேர்தலில் வாக்குகளை அளிக்குமாறு யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது. வடக்கு மாகாணசபைத் தேர்தல் தொடர்பாக யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில், இலங்கை ஆங்கிலேயரின் பிடியிலிருந்து விடுபட்ட காலத்திலிருந்தே சிறுபான்மையினங்கள் மீதான ஆக்கிரமிப்புக்களும் அடக்கு முறைகளும் இந்த நாட்டில் முளைவிடத் தொடங்கியதும் அதற்கு எத…
-
- 0 replies
- 407 views
-
-
வடக்கு மாகாண சபைத் தேர்தலை இடைநிறுத்துமாறு கோரி இலங்கையின் பேரினவாத அமைப்பான தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் உயர் நீதிமன்றில் அடிப்படை மனித உரிமை மீறல் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளது. குறித்த இயக்கத்தின் தலைவர் குணதாஸ அமரசேகர இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார். வடக்கு மாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் அரசியல் அமைப்பின் 157 'ஏ' பிரிவை மீறியுள்ளதாக இந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே, இந்த மனு மீதான தீர்ப்பு வழங்கப்படும் வரை வட மாகாண சபைத் தேர்தலை இடைநிறுத்துமாறு கோரப்பட்டுள்ளது. http://tamilworldtoday.com/home
-
- 0 replies
- 439 views
-
-
மஹிந்த சிந்தனையின் கீழ் நாடு முழுவதும் அமைக்கப்படவுள்ள 25 பல்கலைக்கழக கல்லூரிகளின், 6வது கல்லூரியாக யாழ்ப்பாண பல்கலைக்கழகக் கல்லூரிக்கான அடிக்கல் இன்று திங்கட்கிழமை நாட்டிவைக்கப்பட்டுள்ளது. 115 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள யாழ். பல்கலைக்கழகக் கல்லூரியில் 50 பாடநெறிகள் மேற்கொள்ளப்படவுள்ளதுடன், ஏனைய கல்லூரிகளில் இல்லாத 26 பாடநெறிகள் யாழ். பல்கலைக்கழக கல்லூரியில் முன்னெடுக்கப்படவுள்ளது. யாழ். தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெற்ற இந்த நிகழ்வில், இளைஞர் அலுவல்கள் மற்றும் திறன் விருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும, பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திகுமார், வடமாகாண ஆள…
-
- 0 replies
- 1.1k views
-
-
இலங்கைக்குப் பயணம் செய்திருந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் இலங்கை தொடர்பான அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 24ஆவது கூட்டத்தொடரில் எதிர்வரும் 25ஆம் திகதி நவநீதன்பிள்ளை இந்த அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளார். நவநீதன்பிள்ளை அம்மையாளர் கடந்த ஓகஸ்ட் 26ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருந்து களநிலவரங்களை ஆய்வு செய்திருந்தார். இதற்கமையவே இலங்கை தொடர்பான அறிக்கையை அவர் தயாரித்து ஜெனீவா மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கவுள்ளார் என்பது சுட்டிக்காட்டத்தக்கது. http://tamilworldtoday.com/home
-
- 0 replies
- 647 views
-
-
இங்கிலாந்தின் மெட்ரோ பொலிட்டன் பொலிஸாரும் உள்ளூர் லிவிசாம் பரோ கவுன்சிலும் தமது இணைய சேவையில் தமிழ் மொழிக்கு புலிகளின் கொடி ஒதுக்கப்பட்டிருந்ததை தற்போது தடைசெய்துள்ளது. மெட்ரோ பொலிட்டன் பொலிஸார் மக்களுக்கு செய்யும் பணிகளை விளக்கிக் கூறுவதற்கு இந்த இணையத்தளங்கள் உதவுகின்றன. பொலிஸார் மக்களுக்கு செய்யும் சேவையை தெளிவாக விளக்கும் முகமாகவே இந்த இணையத்தளங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் தமிழ் மொழியை தெரிவுசெய்யும்போது அதற்கான தேசியக் கொடியாக புலிகளின் கொடி அமைக்கப்பட்டிருந்தது. இந்த விவகாரம் லண்டனில் உள்ள இலங்கையின் உயர் ஸ்தானிகராலயத்திற்கு அறியக்கிடைத்ததை அடுத்து இதற்கு ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து லண்டனின் மெட்ரோ பொலிட்டன் பொலிஸாரும் லிவிசாம் பரோ கவுன்சிலு…
-
- 30 replies
- 2.9k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் சித்தாந்தம் இன்னமும் உயிர்ப்புடன் இருக்கிறது என யாழ் மாவட்ட யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியொன்றிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். அத்துடன், வடக்கில் இராணுவ முகாம்களை மூடுவதை விடுத்து இன்னும் அதிக இராணுவத்தினரை கடமையில் ஈடுபடுத்த வேண்டும் என்று பாதுகாப்புச் செயலரிடம் கோரவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வடக்கில் இன்னும் அதிக படையினரை கடமையில் ஈடுபடுத்த வேண்டும் என்றே தோன்றுகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் விக்னேஸ்வரன் தேர்தல் பரப்புரை மேடைகளில் பிரபாகரன் ஒரு பெரும் வீரன் அவரால் தான் தமிழினத்துக்கே பெருமை கிடைத்தது என்…
-
- 0 replies
- 441 views
-
-
ரவிராஜ், ஜோசப் பரராஜசிங்கம் கொலைகளில் கருணாவிற்கும் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் தொடர்பு –விக்கிலீக்ஸ் 15 செப்டம்பர் 2013 "EPDPயின் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர், கலாநிதி கே. விக்னேஸ்வரன் தெரிவித்தார்" விசேட தமிழாக்கம் - குளோபல் தமிழ்ச் செய்திகள்- முதற் பதிவேற்றம் 14-09-2013 - 18:11 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ், ஜோசப் பரராஜசிங்கம் ஆகியோரின் படுகொலைகளுடன் , பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் எனப்படும் கருணா அம்மானுக்கு தொடர்பு இருப்பதாக அமெரிக்காவை மேற்கோள்காட்டி விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. கருணாவுக்கும், ஈ.பி.டி.பி. பொதுச் செயலாளர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் தொடர்பு இருப்பதாக குறிப்பிட்டுள்ளது. முன்னாள் EPDPய…
-
- 9 replies
- 1.5k views
-