Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வடக்கில் வகை தொகையின்றி ஆட்கள் காணாமல் போனதாக பாதுகாப்பு பிரிவினரைக் குற்றஞ்சாட்டுவோர் அப்படி காணாமல் போனதாக கூறப்படும் நபர்களின் பெயர் விபரங்களை பட்டியலிட்டு முன் வைத்தால் அது குறித்து பரீசிலிக்க முடியுமென பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையிடம் தெரிவித்துள்ளார். சில சர்வதேச அமைப்புகள் தெரிவிப்பது போல் 40000 பேர் காணாமல் போயுள்ளனர் என்பதை நாம் நிராகரிக்கிறோம். அரசாங்கம் யுனிசெப் அமைப்புஇ செஞ்சிலுவை சங்கம் போன்ற அமைப்புக்கள் மேற்கொண்ட ஆய்வுகளில் இது போன்ற தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். நவநீதம்பிள்ளையை நாம் கடந்த வெள்ளிக்கிழமை சந்தித்த போது நாட்டின் சுதந்திரத்தை அரசாங்கம் உறுதிப்ப…

  2. சிறிலங்கா எதேச்சாதிகாரப் பாதையில் செல்கிறது என்று ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை கருத்து வெளியிட்டதில் இருந்து, காற்று எந்தப் பக்கம் வீசுகிறது என்று புரிந்து கொள்ள முடிவதாக, ஆதங்கப்பட்டுள்ளார் சிறிலங்கா அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல. கொழும்பில் நேற்று செய்தியாளர் சந்திப்பில் நவநீதம்பிள்ளை வெளியிட்ட கருத்துகள் தொடர்பாக, அவர் கருத்து வெளியிடுகையில், “ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையர் நவநீதம்பிள்ளை வெளிப்படுத்தியுள்ள இந்தக் கருத்து ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது தான். அவர் கூறியது போன்று சிறிலங்காவி எதேச்சாதிகாரம் நடைமுறையில் இல்லை. எதேச்சாதிகார பாதையில் சிறிலங்கா செல்வதாக நவநீதம்பிள்ளை கருத்துக் கூறியிருக்கிறார். இதைவிட வேறுவகையான அவரது நிலைப்பாட்டை நாம் எதிர்பார்க்கவில்…

  3. மேர்வின் சில்வாவின் கருத்திற்கு நவனீதம்பிள்ளை கடும் அதிருப்தி - நிமால் மன்னிப்பு கோரியுள்ளார். 31 ஆகஸ்ட் 2013 மேர்வின் சில்வாவின் கருத்திற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை அதிருப்தி வெளியிட்டுள்ளார். நவனீதம்பிள்ளையை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக அண்மையில் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்திருந்தார். இந்த கருத்து அடங்கிய வீடியோ காட்சி அண்மையில், நவனீதம்பிள்ளைக்கு காண்பிக்கப்பட்டுள்ளது. இதனைப் பார்வையிட்ட நவனீதம்பிள்ளை கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார். இந்த கருத்து தொடர்பில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, நவனீதம்பிள்ளையிடம் மன்னிப்பு கோரியுள்ளார். ஹில்டன் ஹோட்டலில் வைத்து நிமால் சிறிபால டி சில்வா இவ்வாறு மன்ன…

  4. இங்கிலாந்தில் வெளியிடப்பட்ட கையடக்க கணினியில் தமிழ் மொழிக்கும் தமிழ் ஈழத்திற்கும் அங்கீகாரம் கிடைத்தது ! இந்த கையடக்க கணினியை கிடைக்கப் பெற்ற இங்கிலாந்து வாழ் தமிழர் மயூரதன் தன்னுடைய மொழிக்கும் தேசத்திற்கும் சர்வதேச ஆளவில் வெளியாகும் இந்த மின்னணு சாதனத்தில் இடம் கொடுத்திருப்பது தனக்கு பெருமகிழ்ச்சியும் பெருமையும் அளிப்பதாக உள்ளது எனக் கூறியுள்ளார். இது குறித்து மயூரதன் ஜீவன் கீழ் கண்டவாறு குறிப்பிடுகிறார். சந்தோசமான விடயம்... நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். நான் ஹீத்ரோவ் ( HEATHROW ) என்னும் ஐக்கிய ராஜ்ஜியத்தின் (UK) முதல் பிரதான விமான நிலையத்தில் பயணிகள் சேவையாளனாக பணி செய்கிறேன், எங்களுடைய பணியை இலகுவாக்கும் விதமாக எங்கள் அனைவருக்கும் tablet என சொல்லப…

  5. இவ்வாரம் தமிழீழத் தாயகப் பகுதிகளுக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அம்மையார் மேற்கொண்டுள்ள பயணம், தமக்கு விரைவில் நீதி கிட்டும் என்ற நம்பிக்கையை உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களிடையே தோற்றுவித்துள்ளது. தென்னாபிரிக்காவை தனது தாயகமாக நவநீதம்பிள்ளை அம்மையார் கொண்டிருந்தாலும் தாய்த் தமிழகத்தை தனது பூர்வீகமாகக் கொண்ட தமிழர் அவர். ஒரு சட்டத்தரணியாக தனது வாழ்க்கையைத் தொடங்கிய நவநீதம்பிள்ளை அம்மையார் தென்னாபிரிக்காவில் முதன் முதலாக சட்ட நிறுவனத்தை ஆரம்பித்த ‘கறுப்புத் தோல்’ பெண்மணி என்ற பெருமைக்குரியர். நெல்சன் மண்டேலா அவர்களின் பரிந்துரைக்கு அமைய 1995ஆம் ஆண்டு தென்னாபிரிக்க உயர் நீதிமன்றத்தின் நீதியாளராகக் கடமையாற்றியவர். அதே ஆண்டு ருவாண்டாவிற்க…

  6. வர்த்தகர்கள் என்ற பெயரில் வடக்கில் வர்த்தகத்தில் ஈடுபடுபதற்காக இந்தியாவிலிருந்து வருகை தரும் இந்திய புலனாய்வு அதிகாரிகள், வடக்கின் நிலவரங்களை புலனாய்வு செய்து வருவதாக சந்தேகம் எழுந்துள்ளது' என்று வன்னி கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா தெரிவித்தார். 'வெளிநாட்டு கடவுச் சீட்டுக்களைக் கொண்டுள்ள வெளிநாட்டுப் பிரஜைகள் பலர் அன்நாடம் ஓமந்தை சோதனைச் சாவடியைக் கடந்து வடக்கு நோக்கிப் பயணிக்கின்றனர். இவ்வாறு நாட்டுக்குள் உட்பிரவேசிக்கும் வெளிநாட்டுக் குழுவினர் மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள், இலங்கை அரசாங்கத்துக்கும் இலங்கைக்கும் எதிராக சில நடவடிக்கைகளை முன்னெடுக்க நேரம் கணித்துக்கொண்டிருக்கின்றனர்' என்றும் கட்டளைத் தளபதி குறிப்பிட்டார். 'இவ்வாறு வடக்குக்கு…

  7. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை ஏழு இரகசிய அறிக்கைகளை எடுத்துச் செல்வதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் ஏனைய தரப்பினரால் இந்த இரகசிய அறிக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. 2014ம் ஆண்டு மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அமர்வுகளில் நவனீதம்பிள்ளையின் அறிக்கையில் இந்த அறிக்கைகள் இணைத்துக் கொள்ளப்பட உள்ளது. இறுதிக் கட்ட போர் தொடர்பில் புலிகளின் திருகோணமலை மாவட்ட முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலனின் மனைவி அரச சார்பற்ற நிறுவனமொன்றின் மூலம் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=91669&amp…

  8. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாதிகள் என்று கருத முடியாது என்று, வடமாகாணத்துக்கான தமிழ் தேசிய கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள வானொலி ஒன்றுக்கு வழங்கிய தொலைபேசி உரையாடலின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், சட்ட ரீதியாக தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் என்று கூறமுடியாது. தமிழ் மக்களுக்கு எதிரான அடக்கு முறைகளுக்கு எதிராக ஆயுதமேந்தி போராட்டம் நடத்திய விடுதலைப் போராளிகளாகவே அவர்களை தாம் பார்ப்பதாக சீ.வீ.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார் இதற்கிடையில் தமிழர்களின் பிரச்சினையை அறிந்த ஒரே கட்சி தமிழ் தேசியக் கூட்டமைப்பு எனவும், இதன் காரணமாகவே தமிழர்களுக்காக செயற்பட தமிழ் த…

  9. இலங்கையில் எதேச்சாதிகாரப் போக்கு அதிகரித்து வருவதாக ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை எச்சரித்துள்ளார். இலங்கையில் உண்மை கண்டறியும் பயணத்தை மேற்கொண்ட நவநீதம்பிள்ளை தனது பயணத்தின் முடிவில் இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். “பாதுகாப்பு அமைப்புகளால், மனிதஉரிமை ஆர்வலர்கள் துன்புறுத்தப்படுவது அதிகரித்துள்ளதாகவும் இந்த உண்மை கண்டறியும் பயணத்தின் போது, தன்னுடன் கலந்துரையாடிய மனிதஉரிமை ஆர்வலர்கள் இலங்கை காவல்துறை, இராணுவத்தினரால் துன்புறுத்தலை எதிர்கொண்டது எந்தவிதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாதது என்றும் அவர் கூறியுள்ளார் இதுபோன்று நடந்து கொள்வதற்கு, தம்மைப் போன்றவர்களை அழைக்கக் கூடாது என்றும் குறிப்பிட்ட அவர், இதுபோன்ற கண்காணிப்பும், த…

  10. விடுதலைப் புலிகளுடனான 30 ஆண்டுகாலப் போரில் காவல்துறையினர் உள்ளிட்ட 4673 சிறிலங்காப் படையினர் காணாமற்போயுள்ளதாக, சிறிலங்கா பாதுகாப்புப் புலனாய்வு அமைப்புக்கள் தெரிவித்துள்ளதாக, அரசசார்பு ஆங்கில நாளேடான டெய்லி நியூஸ் தகவல் வெளியிட்டுள்ளது. 1981ம் ஆண்டு தொடக்கம், 2008ம் அண்டு வரையான காலப்பகுதியிலேயே இவர்கள் காணாமற்போயுள்ளனர். காணாமற்போனவர்களில் 3484 சிறிலங்காப் படையினரும், 1189 சிறிலங்கா காவல்துறையினரும் அடங்கியுள்ளனர். இவர்கள் விடுதலைப் புலிகளால் கடத்தப்பட்டு, கொல்லப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து எவரும் கேள்வி எழுப்புவதில்லை என்றும் சிறிலங்காவின் மூத்த இராணுவ அதிகாரி ஒருவர் விசனம் வெளியிட்டுள்ளார். அதேவேளை, 1981ம் ஆண்டு தொடக்கம், 2009ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் …

    • 17 replies
    • 919 views
  11. சிறிலங்கா சுதந்திர கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் அங்கஜனின் தந்தையான இராமநாதனை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்க சாவகச்சேரி நீதிவான் எஸ்.லெனின்குமார் உத்தரவிட்டுள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சக வேட்பாளரான சர்வானந்தா மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பாகவே இவர், கைது செய்யப்பட்டு நேற்று நீதிதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். விசாரணைகளை அடுத்து இராமநாதனை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். அத்துடன் அங்கஜனின் மெய்பாதுகாவலர் மீது மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படும் துப்பாக்கி பிரயோகம் தொடர்பாகவும் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு நீதிவான் உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த வழக்கில் பிணைக…

  12. -நவரத்தினம் கபில்நாத் ஓமந்தை இராணுவ சோதனையில் சகல சோதனைகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக வன்னி கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா தெரிவித்தார். இந்த சோதனை சாவடியில் இன்று சனிக்கிழமையிலிருந்தே சகல சோதனை நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். விடுதலைப்புலிகளுக்கும் இராணுவத்திற்கும் இடையில் இடம்பெற்ற யுத்தத்தின் போதும் அதற்கு பின்னரும் இந்த சோதனை சாவடி பிரதானமாக செயற்பட்டது. வடக்கில் இருந்த தெற்கிற்கும் தெற்கிலிருந்து வடக்கிற்கும் செல்வோர் இந்த சோதனை சாவடியில் இறக்கப்பட்டு அடையாள அட்டைகள் பதிவு செய்யப்பட்டதன் பின்னரே அந்தந்த பகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். வவுனியா, ஓமந்தை இராணுவ முகாமில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவிய…

    • 1 reply
    • 568 views
  13. -எஸ்.சொரூபன்,எஸ்.கே.பிரசாத் எனது தந்தையின் கைத்துப்பாக்கி கொழும்பிலேயே இருக்கின்ற நிலையில் அவரால் எவ்வாறு துப்பாக்கிப்பிரயோகத்தை மேற்கொண்டிருக்க முடியும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வடமாகாண சபையின் வேட்பாளர் அங்கஜன் இராமநாதன் கேள்வியெழுப்பினார். யாழ்ப்பாணத்திலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திபிலேயே அவர் மேற்கண்டவாறு கேள்வியெழுப்பினார். அங்கு, அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், எனது தந்தையாராகிய ராமநாதனிடம் அனுமதிபத்திரம் பெற்ற கைதுப்பாக்கி இருக்கின்றது. அந்த துப்பாக்கியினை அவர் கடந்த 22 ஆம் திகதி வியாழக் கிழமை கொழும்பில் பொலிஸாரிடம் கையளித்துள்ளார். இந்நிலையில் சாவகச்சேரி இடம்பெற்ற ச…

  14. ஐநா மனித உரிமை ஆணையாளர் நவநீதன் பிள்ளை புலிகளின் பயங்கரவாதத்தை கண்டித்துள்ளார். அது மட்டும் அல்ல, புலம் பெயர்ந்த தமிழர்கள் புலிகளை தொடர்ந்தும் போற்றி வாழ முனைய கூடாது எனவும் அவர் இலங்கை மண்ணில் இருந்து கூறியுள்ளார். ஐநா மனித உரிமை ஆணையாளரின் இந்த கருத்துகளை கேட்டு, இலங்கை அரசும், அரசை சுற்றியிருக்கும் பேரினவாத அமைப்புகளும் சந்தோசப்படுகின்றன. ஆனால் இந்த மகிழ்ச்சி ஒற்றைக்கண் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. சர்வதேச அங்கீகாரம் இல்லாத ஒரு கெரில்லா இயக்கமான புலிகளை விட, உலக ஏற்புடைய ஐநாவில் உறுப்புரிமை கொண்ட ஒரு நாடான இலங்கையின் அரசாங்கத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள, அரச பயங்கரவாத குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஐநா மனித உரிமை ஆணையாளர் விசாரிக்க முனையும்போதும், பாதிக்கப்பட்ட…

  15. கொழும்பு: போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பெண்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர் என்றும், காணாமல் போனவர்கள் குறித்த இலங்கை அரசின் விசாரணைக் குழு ஏமாற்றம் தருகிறது என்றும் ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை கூறியுள்ளார். இலங்கையில் ஒரு வார சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்ட நவநீதம் பிள்ளை, கொழும்பில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ராணுவ வீரர்கள் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்றார். போரின் போது பிடிபட்டவர்களின் மறுவாழ்வுக்கு அரசு விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நவநீதம் பிள்ளை வலியுறுத்தினார். இலங்கையில் பத்திரிகையாளர்கள் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு ஆளாக்கப்படுகின்றனர் என்று தெரிவித்…

  16. இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை, இறுதிக்கட்ட போர் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் மலர் வலயம் வைத்து அஞ்சலி செலுத்த மேற்கொண்ட முயற்சியானது, அரசாங்கத்தின் கடும் எதிர்ப்பு காரணமாக கைவிடப்பட்டதாக தெரியவருகிறது. இலங்கை அரச படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இறுதிக்கட்ட போர் நடைபெற்ற பிரதேசத்தில் உயிரிழந்த விடுதலைப் புலிகளின் தலைவர்கள் உட்பட இறந்தவர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்த ஆணையாளர் தீர்மானித்திருந்தாக கூறப்படுகிறது. மனித உரிமை ஆணையாளரின் விஜயம் தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சும் மற்றும் கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பின் அலுவலகம் என்பன இணைந்து தயார் செய்திருந்த நிகழ்…

    • 3 replies
    • 770 views
  17. இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் இறுதிக்கட்டத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பில் அரசாங்கமானது நம்பகமான விசாரணைகளை முன்னெடுக்காவிடின் சர்வதேச மட்டத்திலான விசாரணைகளை நடத்துவதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றது. இது தொடர்பில் முன்னெடுக்கப்படும் உள்நாட்டு விசாரணைக்கு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகம் ஒத்துழைப்பு வழங்கும் என ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ இலங்கை விஜயத்தின் இறுதி அங்கமாக கொழும்பில் இன்று நடத்திய விசேட பத்திரிகையாளர் மாநாட்டின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளர். மேலும் தனது இந்திய தமிழ் பாரம்பரியைத்தை வைத்து தன்னை தமிழீழ விடுதலைப் புலிகளின் கருவியென இலங்கையிலுள்ள அமைச்சர்கள், ஊடக…

    • 2 replies
    • 445 views
  18. காணொளி : இந்தியா ருடே தொலைக்காட்சி ஒளிபரப்பிய இலங்கை தொடர்பான பெட்டகம் http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=8922:2013-08-31-10-45-40&catid=1:latest-news&Itemid=18

  19. வெலிவேரியவில் சுத்தமான குடிநீருக்காக போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது சிறிலங்கா இராணுவத்தினர் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக, பிரிகேடியர் தேசப்பிரிய குணவர்த்தனவும், மேலும் மூன்று லெப்.கேணல் தர அதிகாரிகளும் சிறிலங்கா இராணுவத்தில் வகித்து வந்த பதவிகளில் இருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளனர். ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையை, சிறிலங்கா பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச மற்றும், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச ஆகியோர் சந்திப்பதற்கு முன்னதாக, சிறிலங்கா இராணுவத் தளபதி இந்த உத்தரவைப் பிறப்பித்திருந்தார். வேலிவேரிய துப்பாக்கிச் சூட்டுக்குப் பொறுப்பானவர்கள் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ள, அந்தப் பிரதேசத்துக்குப் பொறுப்பான இராணுவ அதிகாரியான பிரிகேடியர் தேசப்பிரிய குணவர…

  20. தமிழீழ விடுதலைப்புலிகளுடன் தொடர்புடைய வலையமைப்புகள் பிரதான மேற்குலக நாடுகளின் அரசியல்வாதிகளுக்கு இலஞ்சம் கொடுத்து இலங்கைக்கு எதிரான செயற்பாடுகளில் அவர்களை ஈடுபடவைக்கின்றன என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார். மனித உரிமைகள் பிரச்சினைகளை கிளப்பியே இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக அவர்களை எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவைக்கின்றனர் என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார். 2009 ஆம் ஆண்டில் யுத்தத்தில் தீர்க்கமாக தோற்கடிக்கப்பட்ட தமிழீழ புலிப்பயங்கரவாதிகளுக்கு சார்பான சர்வதேச வலையமைக்குள் அவுஸ்திரேலியாவுக்கு ஆட்களை களவாக அனுப்பும் தொழிலில் முக்கிய பாத்திரத்தை வகிக்கின்றன என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 'த ஒஸ்றேலியன்' பத்திகைக்கு அளித்த வி…

  21. தேசிய பாதுகாப்புக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை விடுத்த கோரிக்கைகளை அரசாங்கம் நிராகரித்துள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று தகவல் வெளியிட்டுள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்தல், வடக்கில் இராணுவத்தை அகற்றுதல், பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 800 புலி உறுப்பினர்களை விடுதலை செய்தல் மற்றும் பொலிஸ் திணைக்களத்தை நீதி அமைச்சிடம் ஒப்படைத்தல் போன்ற கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. நவனீதம்பிள்ளையின் இந்த அனைத்து கோரிக்கைகளும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக் கூடியதென அரசாங்கம் அறிவித்துள்ளது. எனவே இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. அரச சார்பற்ற நிறுவனங்கள் சிலவற்றின் …

  22. இலங்கைக்கு எதிரான எந்தவொரு விடயத்தையும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையுடன் பேசவில்லை. ஜனநாயகம், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முன்னெடுத்தல் மற்றும் மனித உரிமைகளை பாதுகாக்கும் பொறிமுறை என்பவை தொடர்பிலேயே நவநீதம்பிள்ளையுடன் கருத்துக்களை பரிமாறிக்கொண்டோம் என்று தெரிவித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய 17 ஆவது திருத்தச் சட்டத்தின் அவசியத்தை வலியுறுத்தியதுடன் நல்லாட்சிக்கான வரைபினையும் கையளித்துள்ளோம் என்றும் தெரிவித்தார். ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையை ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட குழுவினர் நேற்று வெள்ளிக்கிழமை மாலை எதிர்க்கட்சி தலைவரின் உத்தியோகபூர்வ இல்ல…

  23. கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகளின் அலுவலக பிரதேசத்தில் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இலங்கைக்கு வருகை தந்துள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தமது விஜயத்தின் நிறைவாக இன்று செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடததுகிறார். இதற்கிடையில் நவநீதம்பிள்ளையிடம் மனு ஒன்றை கையளிக்க வேண்டும் என்று பௌத்த பிக்குகள் கூறியுள்ளனர். அவ்வாறு அவரை சந்திக்க முடியாதுபோனால் அவருடைய வாகனத்தை சுற்றிவளைக்கப் போவதாகவும் பௌத்த பிக்குகள் எச்சரித்துள்ளனர். இதனை முன்னிட்டே பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. http://www.seithy.com/breifNews.php?newsID=91580&category=TamilNews&language=tamil

  24. யுத்த காலத்திலும், யுத்தத்தின் பின்னரும் இலங்கையில் காணாமல் போனவர்கள் தொடர்பில் சிறீலங்கா அரசாங்கம் விசாரணைகளை நடத்தவேண்டும் என்று சர்வதேச மன்னிப்பு சபை கோரிக்கை விடுத்துள்ளது. சர்வதேச காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஈராக்கிற்கு அடுத்தபடியாக, இலங்கையில், 1980 ஆம் ஆண்டில் இருந்து இதுவரை 12ஆயிரம் பேர் வரை காணாமல் போயுள்ளனர். எனினும், காணாமல் போனோரின் எண்ணிக்கை 30 ஆயிரமாக இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் உரிய விசாரணைகள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை இது குறித்து, பொய்யான வாக்குறுதிகளே அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ளதாக சர்வதேச மன்னிப்பு சபையின் சிறீலங்காவுக்கான நிபுணர் யொலன்டா பொ…

    • 1 reply
    • 409 views
  25. இரகசிய முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் போராளிகள் சித்தரவதை செய்யப்பட்டமை தொடர்பாக நவநீதம் பிள்ளை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் கேள்வி எழுப்பியதாக கொழும்பு தகவல்கள் கூறுகின்றன. கொழும்பு பொரள்ளையில் உள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்துக்கு நேற்று நவநீதம் பிள்ளை சென்றிருந்தார். அங்கு இரண்டு மணித்தியாளங்கள் வரை கலந்துரையாடிய அவர் தமிழ் அரசியல் கைதிகளின் விடயங்கள் தொடர்பாகவும் பேசியதாக தெரிவிக்கப்படுகின்றது. மனித உரிமைகளை பாதுகாப்பதற்கு இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும் உரையாடிய நவநீதம் பிள்ளை மனித உரிமை மீறல்கள் தொடர்பாக கிடைக்கப் பெற்ற தகவல்களையும் வழங்கியதாக கொழும்பு தகவல்கள் கூறுகின்றன. http://globaltamilnews.net/GTMNEditoria…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.