ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143496 topics in this forum
-
இந்தியாவால் இலங்கையில் மேற்கொள்ளப்படும் அழிவுதரும் "நெருப்போடு விளையாடும்" நடவடிக்கை The Indian game that doesn't enjoy any popular support from any quarter concerned, can only be autocratic and will prove to be devastative to the entire island. The present Indian Establishment is incapable of doing anything constructively new, other than destroying Tamil safeguards. India is not only heading for maintaining perpetual trouble in Sri Lanka, but also is inviting turmoil to a part of its own country. The Co-chair countries need to immediately neutralize the disastrous Indian adventure that is totally bereft of public support, by stopping the war, by not insisting on a …
-
- 2 replies
- 1k views
-
-
இராணுவத்தினர் பொறுப்புணர்ச்சியுடன் செயற்பட்டிருக்க வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோசி சேனாநாயக்க தெரிவித்துள்ளார். யார் உத்தரவிட்டிருந்தாலும் பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கக் கூடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். யாரை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்கின்றோம் என்பதனை இராணுவம் புரிந்துகொண்டு செயற்பட வேண்டுமென தெரிவித்துள்ளார். தீவிரவாதிகளோ அல்லது குற்றவாளிகள் மீதோ தாக்குதல் நடத்தப்படவில்லை எனவும் அப்பாவி பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் தரப்பினர் இவ்வாறு நடந்துகொள்வது பாரிய பிரச்சினையாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வெலிவேரியவில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில…
-
- 2 replies
- 633 views
-
-
லண்டனில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடு செய்திருந்த ஈழ ஆதரவு நிகழ்வொன்றில் இலங்கை பல்லைக்கழகங்களை சேர்ந்த நான்கு விரிவுரையாளர்கள் கலந்து கொண்டதாக புலனாய்வு பிரிவினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளது என படைகளின் தலைமை அதிகாரி ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்தார். அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் ஆசிரியர்கள் மற்றும் தலைமை அதிகாரிகளுடன் இன்று நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இதனை கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், லண்டனில் நடைபெற்ற ஈழ ஆதரவு நிகழ்வில் இலங்கை சேர்ந்த பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் கலந்துகொண்டமை தொடர்பில் கொழும்பில் நடைபெற்ற பாதுகாப்புச் சபை கூட்டத்தில் தெரியவந்தது. பேராதனை பல்கலைக்கழகத்தை சேர்ந்த 04 விரிவுரையாளர்களே இந்த மாதம் லண்டன் சென்றுள்ளனர்.…
-
- 1 reply
- 294 views
-
-
இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றிய செயலாளர் அ.நிக்ஸன் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டு அரசியலமைப்பில் இருக்கின்ற அதிகாரங்களும் பிடிங்கி எடுக்கப்பட்டு வரும் நிலையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை உருவாக்குவது தொடர்பாக சிந்திக்கும் நிலையில் தமிழர்கள் இல்லை என இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளர் அ.நிக்ஸன் தெரிவித்தார். சட்ட ஆட்சி, ஜனநாயகம் இல்லாத ஒரு சூழலில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றி பேசுவது எந்தளவிற்கு சாத்தியமாகும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். அமெரிக்க மூத்த ஊடகவியலாளரும் தகவல் அறியும் சட்டத்தை உருவாக்கும் நிபுணரும் சட்டத்தரணியுமான கேவின் குலோட்பேக் மற்றும் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரக இராஜதந்திரிகளுடன் இன்று இடம்பெற்ற கருத்தரங்கு ஒன்றில்…
-
- 1 reply
- 348 views
-
-
யாழ்.மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளை பலப்படுத்தும் முகமாக படைமுகாங்களை அமைக்கும் முயட்சியில் சிறிலங்கா படையினர் ஈடுபட்டுள்ளனர். இதனால் யாழ்.கரையோரப் பகுதியில் இருந்த சிறு சிறு பாதுகாப்பு அரண்கள் தற்போது நிரந்தர படைமுகாமாக மாற்றப்பட்டு வருகின்றன. வடக்கில் அதிகளவான இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளதாக புள்ளிவிபரங்களுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்து வருகின்றது. இக்கருத்தினை மறுத்துள்ள யாழ்.மாவட்டக் கட்டளைத்தளபதி ஹத்துறுசிங்க யாழில் உள்ள பெரும்பாலன படைமுகாங்கள் அகற்றப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் யாழ்ப்பாணத்தின் கரையோரங்களில் உள்ள பாதுகாப்பு அரனாக இருந்த இடங்களில் நிரந்தரமான படைமுகாங்கள் அமைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. குறிப்பாக தீவகப் பக…
-
- 3 replies
- 625 views
-
-
கூட்டமைப்பின் சார்பில் வடமாகாணசபை தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்குமான ஒருநாள் கருத்தரங்கு கிளிநொச்சியில் கடந்த 11.08.2013 அன்று நடைபெற்றது. இங்கு கருத்துரை வழங்கையிலேயே தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பொதுச்செயலாளரும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமாகிய மாவை.சேனாதிராசா மேற்கொண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், கூட்டமைப்பின் சார்பில் வடமாகாணசபை தேர்தலில் களமிறக்கப்பட்டுள்ள 51 வேட்பாளர்களில் 48 ஆண்களும், 3 பெண்களும் உள்ளடங்குகின்றனர். மிகக்குறைந்தளவிலேயே பெண்களுக்கான ஆசன ஒதுக்கீடுகள் அமைந்திருப்பது துரதிஸ்டமானது. அரசியலில் பெண்களின் பங்களிப்பை உறுதிப்படுத்தி பெண்கள் தமது ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க வடக்கிலுள்ள பெண்கள் அனைவரும் கூட்டமைப்பின் சா…
-
- 2 replies
- 268 views
-
-
ஈழத் தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, போப் ஆண்டவர் போர்க்குற்றவாளியான ராஜபக்சவின் அழைப்பை ஏற்று இலங்கைக்கு செல்லக் கூடாது என கத்தோலிக்க திருச்சபைகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. போப் ஆண்டவர் பிரான்சிஸ் தங்கள் நாட்டுக்கு வர வேண்டும் என இலங்கை அதிபர் ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார். அந்த அழைப்பை ஏற்று இலங்கைக்குச் செல்வதற்குப் பரிசீலித்து வருவதாக போப் கூறியிருப்பது இலங்கை, தமிழகம் மற்றும் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதனடிப்படையில் போர்க்குற்றவாளியான ராஜபக்சவின் அழைப்பை போப் ஏற்கக் கூடாது என்கிற கோரிக்கையினை தமிழக கத்தோலிக்க திருச்சபைகளும் விடுத்துள்ளனர். இதுகுறித்து பாளையங்கோட்டை மகாராஜ நகர் ததாதேயு ஆலயத்தின் பங்குத் தந்தையா…
-
- 2 replies
- 258 views
-
-
நீதிமன்றத் தடையுத்தரவையும் மீறி கொழும்பில் இன்று எதிர்க்கட்சிகள் ஆா்ப்பாட்ட பேரணி ஒன்றை நடத்தினா். வெலிவோயாவில் மக்கள் நடத்திய ஆா்ப்பாட்டத்தின் மீது இராணுவம் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டை கண்டித்து ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கோட்டை ரயில் நிலையம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சுமார் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனா். கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து பேரணியாக லேக்ஹவுஸ் சுற்றுவட்டம் வரை சென்று அங்கிருந்து ஜனாதிபதி செயலகம் நோக்கி நகர முற்பட்டனா். ஆனால் பொலிஸார் தடுத்து நிறுத்தினா். இதனால் ஆா்ப்பாட்டக்காரா்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே முறுகல் ஏற்பட்டது. எனினும் ஜனாதிபதி செயலகத்துக்கு செல்வதற்கு இருவருக்கு பொலிஸார் அனுமதி வழங்கினா். ஐக்கியதேசிய கட்சியின் பொதுச் செயலாளா்…
-
- 1 reply
- 317 views
-
-
யாழ்ப்பாணம் வடமராட்சியில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட பல்லப்பை என்ற பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து 17 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த நிலையில். இந்த பகுதிகளில் உள்ள கிணறுகளை சுத்தம் செய்ய வேண்டாம் என்று இராணுவம் காணி உரிமையாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. நேற்று காலை இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக பிரதேச வாசிகள் தெரிவித்துள்ளனர். சுமார் 15 வருடங்களுக்கு பின்னர் இந்த காணிகளும், வீடுகளும் அவற்றின் உரிமையாளர்களுக்கு மீள வழங்கப்பட்டிருந்தன. எனினும் நேற்றுக் காலை அதன் கிணறு ஒன்றை சுத்தம் செய்யும் போது, அதில் இருந்து 17 சடலங்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. தொடர்ந்து இராணுவம் ஏனைய கிணறுகளையும் சோதனை இட்டுள்ளனர். இந்த பகுதிகளில் உள்…
-
- 1 reply
- 625 views
-
-
வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வவுனியா மாவட்டத்தில் போட்டியிடும் எம்.எம்.ரதனின் சுவரொட்டிகள் மீது நேற்று இரவு கழிவொயில் வீசியதோடு அவரது சுவரொட்டிகளையும் கிழித்தும் சேதப்படுத்தியும் உள்ளனர். வவுனியா நகரில் விளம்பரப் பலகைகளில் பல வேட்பாளர்களது சுவரொட்டிகள் காணப்படுகின்றபோதிலும் எம்.எம்.ரதனின் சுவரொட்டிகள் மட்டுமே இவ்வாறு சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.தமிழ் தேசியத்தின் உண்மைக் குரலாய் போட்டியிடும் இவ் வேட்பாளருக்கு எதிராக ஏற்கனவே புலனாய்வாளர்களும் பல துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. http://www.sankathi24.com/news/32268/64//d,fullart.aspx
-
- 2 replies
- 587 views
-
-
வெளிநாட்டுச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோர் நாடு திரும்பும் நிலையில் அவர்களைக் கைது செய்ய புலனாய்வுப் பிரிவினர் சதித் திட்டம் தீட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து வாசிக்க..http://tamilworldtoday.com/?p=27884
-
- 3 replies
- 748 views
-
-
ஈழத்தமிழர்கள் தமது உரிமைகளை போராடியே பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும், சிறிலங்கா ஜனாதிபதி பௌத்த சிங்கள தீவிரவாதி அவரை திருத்தவே முடியாது என்று எரிக்சொல்ஹெய்ம் மற்றும் லீகுவான்யூ போன்றவர்கள் தெரிவித்துள்ள கருத்துக்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக் கொண்டு வரவேற்றுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் அக் கட்சியில் பேச்சாளருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களுடைய இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாகவும், சிறிலங்கா அரசாங்கத்தின் போக்குத் தொடர்பாகவும் அண்மையில் எரிக்சொல்ஹெய்ம் மற்றும் லீகுவான்யூ ஆகியோர் தமது கருத்துக்களை வெளியிட்டிருந்தனர். அவர்கள் வெளியிட்டுள்ள கருத்துத் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவ…
-
- 2 replies
- 537 views
-
-
ஊடகவியலாளர்கள் துணையுடன் போலிப்பிரச்சாரம் மேற்கொள்ள எடுக்கப்படும் முயற்சியை கீழுள்ள இணைப்பிலுள்ள காணொளியில் காணலாம். (இதை இங்கு இணைக்க முடியவில்லை). இதற்காக பணம் செலவு செய்து இந்திய ஊடகவியலாளர்களையும் சிங்கள அரசு இறக்குமதி செய்துள்ளது. வெளிநாடுகளுக்கு செல்லும் பல்கலைக்கழக பேராசிரியர்களையும் பார்த்து சிங்கள அரசு நடுங்குகிறது. அதற்கு இந்த காணொளியில் சிங்கள ராணுவப் பேச்சாளர் சிங்களத்தில் கூறும் விடயங்களைக் கவனித்தால் விளங்கும். மிரண்டவனுக்கு அருண்டதெல்லாம் பேய்! http://www.dailymirror.lk/news/33828-four-professors-in-london-allegedly-to-support-tigers.html
-
- 2 replies
- 440 views
-
-
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள வினாசியோடை எனும் கிராமத்தில் வசிக்கும் பெண் ஒருவர் இலங்கை இராணுவம் என்று சந்தேகிக்கபடுபவர்களால் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு ஆபத்தான நிலையில் சாவகச்சேரி வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். மூன்று பிள்ளைகளின் 38 வயதுடைய தாய் வாய்களை பச்சைத் துணிகளால் கட்டிய பச்சை உடை தரித்த இருவரால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டுள்ளார். தனது குடும்ப வருமானத்திற்காக பனை ஓலையில் பொருட்கள் செய்து விற்கும் இப் பெண் நேற்று மாலை 4.30க்கும் 5.00 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் வழமை போன்று பனை ஓலை எடுப்பதற்கு சென்ற வேளை இராணுவ உடையில், பச்சைத் துணிகலால் வாய்களை கட்டிய இருவர் அப் பெண்னை பலாத்காரம் செய்த விட்டு தப்பிச் சென்றுள்ளனர். கடும் இரத்தப் போக்க…
-
- 3 replies
- 791 views
-
-
நீதி அமைச்சர் என்ற ரீதியில் நவனீதம்பிள்ளைக்கு விளக்கமளிக்கத் தயார்: ரவூப் ஹக்கீம் [Tuesday, 2013-08-13 09:32:46] எதிர்வரும் நாட்களில் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளைக்கு, நாட்டின் நீதி அமைச்சர் என்ற ரீதியில் விளக்கமளிக்கத் தயார் என நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். நாட்டுக்காக நியாயமான முறையில் விளக்கமளிப்பேன். இம்முறை மாகாணசபைத் தேர்தலில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடுகின்றது. எனினும், நாட்டின் நீதியமைச்சர் என்ற ரீதியில் கடமைகளிலிருந்து விலகிச் செயற்பட மாட்டேன். என்னிடம் சில பொறுப்புக்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. நீதிமன்றின் சுயாதீனத்தன்மை, வழக்கு விசாரணைகள் கால தாமதமாக…
-
- 5 replies
- 512 views
-
-
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் இன்று புதன்கிழமை காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீடிரென சுகயீமுற்றதை அடுத்து கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் அஸ்வர் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜானக்க பண்டார தென்னக்கோனும் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியாசலைக்கு விசேட ஹெலிகெப்டர் மூலம் கொண்டுவரப்பட்டுள்ளார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/78831-2013-08-14-12-50-18.html
-
- 1 reply
- 325 views
-
-
யாழ்ப்பாணம் கே.கே.எஸ் வீதி கோண்டாவில் பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று மாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவது. சுன்னாகத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி மிக வேகமாக வந்துகொண்டிருந்த ஆட்டோவும், யாழ்ப்பாணத்தில் இருந்து சுன்னாகம் நோக்கி மிக வேகமாக வந்துகொண்டிருந்த சிறியரக வடி வாகனமும் வேகக் கட்டுப்பாட்டினை இழந்து மோத்திக் கொண்டுள்ளன. இச் சம்பவத்தில் ஆட்டோவில் பயணித்தவரும், ஆட்டோ சாரதியும் படு காயங்களுக்கு உள்ளாக்கப்பட்டள்ளனர். அங்கு நின்ற பொது மக்களால் மீட்கப்பட்ட இருவரும் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலைக்கு அனுப்பிவைக்கப்பட்ட…
-
- 1 reply
- 443 views
-
-
யாழ். கல்வியங்காட்டிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் ஏற்பட்ட கசிவு காரணமாக அப்பிரதேசத்திலுள்ள பல கிணறுகளின் நீருடன் டிசல் கலந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். நிலத்தில் புதைத்திருந்த டீசல் தாங்கி மூலம் 2 ஆயிரம் லீற்றர் டீசல் கசிவடைந்து வீணாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை எரிபொருள் கசிவினை அடுத்த இது தொடர்பாக அப்பகுதியிலுள்ள கிணறுகளில் ஆய்வுகள் நடாத்தப்பட்டு நீரில் டீசல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அண்மையில் மோட்டார் சைக்கிள் ஒன்று தீடிரென்று தீப்பற்றி எரிந்து அதிலிருந்த ஒருவரும் படுகாயமடைந்து பின்னர் மரணமாகியிருந்தார். அத்தோடு குறித்த நிலையத்தின் முகாமையாளரிடம் 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபா பணமும் கொள்ளையடிக்…
-
- 0 replies
- 417 views
-
-
-சுமித்தி தங்கராசா மத்திய மற்றும் மாகாண அதிகாரங்கள் தமிழ் மக்களுக்கு கையளிக்கப்பட வேண்டும் என ஜரோப்ப நாடாளுமன்ற உறுப்பினர் பில் பென்னியன் யாழ். மாவட்ட மேலதிக செயலாளர் ரூபினி வரதலிங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழ். மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஜரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் பில் பென்னியன் யாழ். மாவட்ட மேலதிக செயலாளருடன் இன்று புதன்கிழமை சந்தித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பின் போது, மத்திய மற்றும் மாகாண அதிகாரங்களின் ஊடாக தமிழ் மக்களுக்கான அனைத்து வசதி வாய்ப்புக்களையும் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, யாழ். மாவட்டத்தின் தற்போதைய நிலவரங்கள் தொடர்பாக பில் பென்னியன் மாவட்ட செயலாளரிடம் வினவியுள்ளார். அதன்போது, தற்போதை…
-
- 0 replies
- 464 views
-
-
சிறிலங்காவின பொதுநலவாய உச்சிமாநாட்டில் பங்கெடுத்துக் கொள்ளப் போவதாக பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமறூன் அவர்கள் சமீபத்தில் தெரிவித்திருந்த கருத்து, பிரித்தானிய வாழ் தமிழர்களை கவலை கொள்ள வைத்திருந்த நிலையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் கையெழுத்து வேட்டையில் லண்டன் தமிழர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். பொதுநலவாய உச்சிமாநாட்டு விவகாரம் மட்டுமல்ல அதற்கும் அப்பால், சிறிலங்கா தொடர்பில் பிரித்தானிய அரசின் கொள்கை நிலைப்பாட்டில் ஓர் இறுக்கமான மாற்றம் அவசியம் என்பதனை வலியுறுத்தும் பொருட்டு இக்கையெழுத்து வேட்டை இடம்பெற்று வருகின்றது. பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடாக பிரித்தானியாவின் வெளிவிகார தேர்வுக் குழுவின் கவனத்திற்கு சிறிலங்க…
-
- 0 replies
- 326 views
-
-
பழ.நெடுமாறன் தலைமையில் சீமான் திருமணம்: மாஜி அமைச்சர் காளிமுத்து மகள் கயல்விழி மணமகள்! நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், முன்னாள் அமைச்சர் காளிமுத்துவின் மகள் கயல்விழியை அவர் மணக்கிறார். திருமணம் சென்னையில் செப்டம்பர் 8-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. மணமகள் எம்.ஏ. பட்டம் பெற்றவர். இவர்களது திருமணம் சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. அரங்கத்தில் செப்டம்பர் 8-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. சீமான் - கயல்விழி திருமணத்தை உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் தலைமை தாங்கி நடத்திவைக்கிறார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு முன்னிலை வகிக்கிறார். திருமணத்திற்கான ஏற்பாடுகளை இருவீட்டாரும் செய்து வருகின…
-
- 6 replies
- 1.3k views
-
-
ஈழத் தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, போப் ஆண்டவர் போர்க்குற்றவாளியான ராஜபக்சவின் அழைப்பை ஏற்று இலங்கைக்கு செல்லக் கூடாது என கத்தோலிக்க திருச்சபைகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. போப் ஆண்டவர் பிரான்சிஸ் தங்கள் நாட்டுக்கு வர வேண்டும் என இலங்கை அதிபர் ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார். அந்த அழைப்பை ஏற்று இலங்கைக்குச் செல்வதற்குப் பரிசீலித்து வருவதாக போப் கூறியிருப்பது இலங்கை, தமிழகம் மற்றும் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதனடிப்படையில் போர்க்குற்றவாளியான ராஜபக்சவின் அழைப்பை போப் ஏற்கக் கூடாது என்கிற கோரிக்கையினை தமிழக கத்தோலிக்க திருச்சபைகளும் விடுத்துள்ளனர். இதுகுறித்து பாளையங்கோட்டை மகாராஜ நகர் ததாதேயு ஆலயத்தின் பங்குத் தந்தையான ப…
-
- 1 reply
- 421 views
-
-
திருகோணமலை மாணவர் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 12 விசேட அதிரடிப்படை உத்தியோகத்தர்களின் விளக்க மறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. 2006ம் ஆண்டு ஜனவரி மாதம் ஐந்து மாணவர்கள் திருகோணமலை கடற்பரப்பில் வைத்து துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தனர். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் பன்னிரெண்டு விசேட அதிரடிப்படை உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைத்து விசாரணை நடாத்துமாறு திருகோணமலை நீதவான் ஏ.எல். அஷ்ரா உத்தரவிட்டுள்ளார். சந்தேக நபர்களை எதிர்வரும் 26ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளார். சம்பவத்தில் உயிரிழந்த ஒரு மாணவர் மொரட்டுவ பல்கலைக்கழகத்…
-
- 4 replies
- 804 views
-
-
நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டுமென வலியுறுத்திய போதிலும் அவ்வாறான உத்தரவுளை இலங்கையின் மீது நிர்ப்பந்திக்கவில்லை என ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது. இலங்கை அரசாங்கம் நல்லிணக்க முனைப்புக்களை முன்னெடுக்க வேண்டும் என்பதே தமது அமைப்பின் விருப்பம் என ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி சுபினேய் நென்டி தெரிவித்துள்ளார். கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நல்லிணக்க முனைப்புக்கள் வெளியிலிருந்து திணிக்கப்படவோ இறக்குமதி செய்யப்படவோ கூடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நல்லிணக்கம் குறித்த காத்திரமான திட்டங்கள் இலங்கையிடம் காணப்படுவதாகத் தெரிவி;த்துள்ளார்.…
-
- 1 reply
- 388 views
-
-
இளைஞர்கள் இருவரை நிர்வாணமாக ஒளிப்பதிவு செய்து அதனூடாக ஆபாச இறுவட்டு தயாரித்த பிக்குவிற்கான விளக்கமறியல் எதிர்வரும் 27 வரை நீடிக்கப்பட்டுள்ளது. பெந்தோட்டை ரத்தாகொட விஹாரையின் விஹாராதிபதி என்றழைக்கப்படும் பாணந்துறை சந்திம (வயது 34) என்பவருக்கான விளக்கமறியலே நீடிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு பலப்பிட்டிய நீதவான் அசங்க பொத்தரகம முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார். பிக்குவின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி சசங்க ஜயசேகர, தனது தரப்பைச்சேர்ந்த சந்திம தேரர் சமய மற்றும் ஒழுக்க தவறுகளை இழைத்துள்ளாரே தவிர சட்டரீதியான தவறை இழைக்கவில்லை என்று சுட்டிக்காட்டினார். இந்நிலையில், தேரரின் கணனியில் இருக்கின்ற விடயங்கள் தொடர்பில் விசேட …
-
- 3 replies
- 320 views
-